உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த யுவதி சடலமாக மீட்பு By SETHU 14 DEC, 2022 | 11:23 AM அவுஸ்திரேலிய கடற்பரப்பில் உல்லாசக் கப்பலொன்றிலிருந்து வீழ்ந்த யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பசுபிக் எக்ஸ்புளோரர் (Pacific Explorer) எனும் உல்லாசக் கப்பலில் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது நேற்றிரவு பெண்ணொருவர் கடலில் வீழ்ந்தார். அவரைக் கண்டுபிடிப்பதற்கு பாரிய தேடுதல்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இன்று காலை ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் அப்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 23 வயதான யுவதியொருரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இப்பெண்ணை கண்டுபிடிப்பதற்கு விமான…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவில் பொலிஸாரை குறிவைத்து தாக்குதல்; 6 பேர் பலி By Digital Desk 2 13 Dec, 2022 | 09:53 AM அவுஸ்திரேலியாவில் காணாமல் போன நபரை தேடி சென்ற பொலிஸாரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல்போன நபர் ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்த பண்ணை வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை (டிச.12) மாலை 5 மணியளவில் பொலிஸார் சென்றுள்னர். அப்போது, அந்த வீட்டிற்குள் இருந்த 3 பேர் கொண்ட கும்பல் பொலிஸார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்…
-
- 2 replies
- 310 views
-
-
இரானிய பெண் இயக்குநர் தனது முடியை வெட்டி கேரள சர்வதேச பட விழாவுக்கு அனுப்பியது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,இம்ரான் குரேஷி பதவி,பிபிசி இந்தி 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானிய இயக்குநர் மஹ்னாஸ் மஹாமதி கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு தனது முடியை அனுப்பி வைத்த இரானிய இயக்குநர் ஒருவரின் பெயர் அண்மையில் தலைப்புச் செய்திகளில் அடிபட்டது. அதற்கு என்ன காரணம்? கேரள சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) வழங்கப்பட்ட சினிமாவின் ஆன்மா விருதைப் பெற மஹ்னாஸ் மஹாமதியால் கடந்த வாரம் இந்…
-
- 0 replies
- 664 views
- 1 follower
-
-
தகவல் தொழில்நுட்பத்தில் சீனாவை விட இந்தியா மிகவும் முன்னிலையில் உள்ளது - சீன தொழில்நுட்ப நிபுணர் By VISHNU 13 DEC, 2022 | 01:38 PM 'தி ரைஸ் ஆஃப் இந்தியன் ஐடி' என்ற புத்தகத்தின் ஆசிரியர் மைக் லியு, உலகச் சந்தைகளில், குறிப்பாக தொழில்நுட்ப துறையில் இன்னும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய நிறுவனங்களைப் போலல்லாமல், சீனாவின் சாப்ட்வேர் வருவாயானது பெரும்பாலும் உள்ளகத்திலிருந்து வருகிறது என்றார். சீனாவின் தகவல் தொழில்நுட்ப வருவாயில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்நாட்டு சீன சந்தையில் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் தொழில்நுட்ப துறை, அதன் பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். உலகளாவிய சந்தைகளில் …
-
- 0 replies
- 796 views
- 1 follower
-
-
சீன விமானங்களை... எச்சரிக்க, ஜெட் விமானங்களை அனுப்பியது தாய்வான். நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த 29 சீன விமானங்களை எச்சரிக்க தாம் நடவடிக்கை எடுத்ததாக தாய்வான் அறிவித்துள்ளது. செவ்வாயன்று சீனப் போர் விமானங்களின் ஊடுருவல் தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தின் பிற்பகுதியிலிருந்து சீனாவின் மிகப்பெரிய வான் பாதுகாப்பு மண்டல மீறலை இந்த ஊடுருவல் குறிக்கிறது. அதன்படி நேற்று சீனாவின் 17 போர் விமானங்கள், ஆறு H-6 குண்டுவீச்சு விமானங்களும் நீர்மூழ்கி எதிர்ப்பு, வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களும் ஊடுருவியதாக தாய்வான் அறிவித்துள்ளது. சீன விமானங்களை எச்சரிக்க தமது போர் விமானங்களை …
-
- 12 replies
- 565 views
- 1 follower
-
-
'கடவுளுக்கு எதிரான குற்றம்' - இரானில் 23 வயது இளைஞருக்கு பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை பட மூலாதாரம்,IHRIGHTS 3 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்திய அரசு எதிர்ப்புப் போராட்டங்களுடன் தொடர்புடைய இரண்டாவது மரண தண்டனையை நிறைவேற்றியதாகவும் அதில், 23 வயது இளைஞரை பொது வெளியில் பகிரங்கமாகத் தூக்கிலிட்டதாகவும் இரான் கூறுகிறது. மாஜித்ரேசா ரஹ்னாவார்ட், 23 வயதான இளைஞர். அவர் மாஷாத் நகரில் திங்கள் கிழமையன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது. துணை ராணுவப் படைகளில் ஒன்றான பாசிஜ் எதிர்ப்புப் படையை (Basij Resistance Force ) சேர்ந்த இருவரை குத்திக் கொன்றதைக் கண்டறிந்த நீதிமன்றம் …
-
- 0 replies
- 701 views
- 1 follower
-
-
இந்தியாவை ரஷ்யா திடீரென அதிகம் புகழ என்ன காரணம்? கட்டுரை தகவல் எழுதியவர்,தீபக் மண்டல் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா இயல்பிலேயே பன்முனை உலகில் முக்கியமான தூண் ஆக இருக்க விரும்புவது மட்டுமின்றி, அது பன்முனை உலக அமைப்பை உருவாக்குவதற்கான மையமாகவும் இருக்கிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் சமீபத்தில் கூறினார். இது குறித்து பேசி லாவ்ரோவ், யுக்ரேனுக்கு எதிரான போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு நடுநிலையானது என்று கூறி அதன் வெளியுறவுக் கொள்கையையும் பாராட்டினார். ப்ரிமகோவ் ரீடி…
-
- 0 replies
- 549 views
- 1 follower
-
-
ஆப்கானில் சீன ஹோட்டல் மீது தாக்குதல் By RAJEEBAN 12 DEC, 2022 | 05:31 PM ஆப்கான் தலைநகரில் சீனா ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சீனா மற்றும் வெளிநாட்டவர்கள் பயன்படுத்தும் சீனா ஹோட்டலிற்குள் ஆயுதமேந்திய நபர்கள் நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன. https://www.virakesari.lk/article/142932 செய்தியில் உள்ளடக்கம் இல்லை! புகை படம் போட்டிருக்கு.
-
- 1 reply
- 334 views
- 1 follower
-
-
லஞ்சக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்ற உப தலைவர் உட்பட ஐவர் பெல்ஜியத்தில் கைது ! 23 கோடி ரூபா பணம் மீட்பு By SETHU 11 DEC, 2022 | 11:06 AM வளைகுடா நாடொன்றுடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உப தலைவர்களில் ஒருவரான ஈவா கெய்லி, முன்னாள் உறுப்பினர் ஒருவர் உட்பட ஐவரை பெல்ஜிய பொலிஸார் நேற்றுமுன்தினம் (09) கைது செய்துள்ளனர். உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் கத்தார் மீது மறைமுகமாக குற்றம் சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகள் தொடர்பில் இவரகள் கைது செய்யப்பட்டுள்ளாக செய்தி வெளியாகியுள்ளது. 44 வயதான ஈவா கெய்லி, முன்னாள் தொலைக்காட்சி ஊடகவியலாளரா…
-
- 9 replies
- 503 views
- 1 follower
-
-
விமர்சனத்துக்குள்ளாகும் ஹாரி - மேகன் ஆவணத் தொடர் By DIGITAL DESK 2 12 DEC, 2022 | 11:28 AM நெட்பளிக்ஸில் வெளியாகியுள்ள பிரித்தானிய இளவரசர் ஹாரி - இளவரசி மேகன் மார்கல் தொடர்பான ஆவணத் தொடர் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு எதிர்வினைகள் இந்த ஆவணத் தொடருக்கு வந்து கொண்டிருக்கிறது. பிரித்தானிய இளவரசர் ஹாரியை திருமணம் செய்ததன் மூலம் இங்கிலாந்தின் இளவரசியான முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மேகன் பெற்றிருந்தார். எனினும், அரச குடும்பத்தினரும், பிரித்தானிய ஊடகங்களும் கனிவான முகத்தை மேகனுக்கு காட்டவில்லை. பிரித்தானிய ஊடகங்களால் நிறம் சார்ந்து அவர் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தார். ஊடகங்களால் டயானாவுக்கு என்ன நடந்த…
-
- 0 replies
- 868 views
- 1 follower
-
-
இத்தாலி பிரதமரின் நெருங்கிய தோழி உட்பட 3 பெண்கள் சுட்டுக்கொலை: நான்கு பேர் காயம்! இத்தாலியின் புதிய பிரதமரின் நண்பர் உட்பட 3 பெண்கள் ரோம் நகரில் உள்ள ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் தொகுதியின் குடியிருப்போர் குழுவின் ஒரு பகுதியாக குழுவின் துணைத் தலைவரான லூசியானா சியோர்பா உள்ளிட்ட குழுவினர், ஃபிடன் மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில் சந்தித்துக்கொண்ட போதே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக, இத்தாலியின் லா ரிபப்ளிகா செய்தித்தாள் தெரிவிக்கிறது. காயமடைந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என நம்பப்படுகிறது, ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த த…
-
- 0 replies
- 597 views
-
-
உக்ரைன் போர், ரஷியா-நேட்டோ போராக உருவெடுக்கும் அபாயம் – நேட்டோ பொதுச்செயலாளர் அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ. உலகின் மிகவும் வலிமையான ராணுவ கூட்டமைப்பாக அறியப்படும் இந்த அமைப்பில் இணைவதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. நேட்டோவும் இதற்கு சம்மதம் தெரிவித்தது. இந்த சூழலில் உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அதன் அண்டை நாடான ரஷியா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இன்னும் சில தினங்களில் இந்த போர் 11-வது மாதத்தை எட்டவுள்ளது. ரஷியா குற்றச்சாட்டு இந்த போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும் உக்ரைனுக்கு தேவையான ராணுவ மற்று…
-
- 1 reply
- 807 views
- 1 follower
-
-
வருடம்தோறும் டைம் சஞ்சிகை ஆண்டின் சிறந்த மனிதர் என ஒருவரை தெரிவு செய்யும். இந்த ஆண்டு உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் செலன்ஸ்கியையும் உக்ரேனிய ஓர்மத்தையும் ஆண்டின் சிறந்த மனிதராக தெரிவுசெய்துள்ளது டைம். ஒப்பிட முடியாத பெரும் எதிரிக்கு எதிராக, பெரும் உலக ஆதிக்க சக்திகளின் தன்னலனை, உக்ரேனிற்கு ஆதரவாக திசைதிருப்பி, இராஜதந்திரத்திலும், பேச்சு திறமை மூலம் மக்களை போரில் ஆர்வமாக ஈடுபடசெய்து, உத்வேகத்தை கட்டி எழுப்பி தலைமைதுவத்திலும், இன்னும் பிற அரிய தலைமைத்துவ பண்புகளை வெளிகொணர்ந்தும் போரின் போக்கை, நாட்டின் தலைவிதியை, உலக வராற்றின் ஒரு கணப்பொழுதை தீர்மானிப்பதில் கணிசமான பங்கை செலன்ஸ்கி வகித்தார் என்கிறது டைம் (நேரடி மொழி மாற்றம் அல்ல). இந்த கெளரவத்திற்கு பரிசீலிக்கப…
-
- 45 replies
- 3.1k views
-
-
புடின் நிரந்தர தூக்கத்துக்கு அனுப்பப்படுவார்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை உக்ரைன் – ரஷ்ய போர் சுமார் கடந்த 10 மாதங்களாக நிலவி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புடின் நிரந்தர தூக்கத்துக்கு அனுப்பப்படுவார், மீண்டும் அவர் எழுந்திருக்கவேமாட்டார் என முன்னாள் ரஷ்ய தூதர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நாவுக்கான முன்னாள் ரஷ்ய தூதரான Boris Bondarev என்பவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புடின் பதவி விலக கட்டாயப்படுத்தப்படலாம். புடினுடைய ஆட்சி பயங்கரமான முறையில் கவிழ்க்கப்படலாம் அல்லது அவர் கொல்லப்படலாம். உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோல்வியை சந்திக்குமானால், ரஷ்ய செல்வந்தர்களாலேயே நிரந்தர தூக்குத்துக்கு புடின் கொண்டு …
-
- 0 replies
- 642 views
-
-
பாக்முட் நகரத்தை ரஷ்யா நாசம்செய்துவிட்டதாக உக்ரைன் குற்றச்சாட்டு ரஷ்யாவின் தாக்குதல்கள் கிழக்கு உக்ரைனின் பாக்முட் நகரத்தை எரிந்த இடிபாடுகள் கொண்ட நகரமாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் ஏவுகணை, ரொக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைனின் இராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முக்கிய நகரங்களில் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். தெற்கு உக்ரேனிய நகரமான ஒடேசாவில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதல்களினால் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் …
-
- 0 replies
- 466 views
-
-
ரஷ்யா தனது எண்ணெய் ஏற்றுமதியில் விலை வரம்பை விதிக்கும்: புடின் பதிலடி! ரஷ்யா தனது எண்ணெய் ஏற்றுமதியில் விலை வரம்பை விதிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற பிராந்திய உச்சிமாநாட்டிற்குப் பிறகு நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கும் எந்த நாட்டிற்கும் எண்ணெயை விற்காது என்று ஜனாதிபதி புடின் இதன்போது தெரிவித்தார். உலகளாவிய எரிசக்தி சந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விலை வரம்பை ஒரு முட்டாள்தனமான முடிவு என்று அவர் விபரித்தார். ஜி-7, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள், உக்ரைனில் அதன் போருக்கு நிதியளிக்…
-
- 5 replies
- 824 views
-
-
அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக புடின் தெரிவிப்பு! அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வருடாந்திர மனித உரிமைகள் கூட்டத்தில் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். உக்ரைனில் நடக்கும் போர் ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கலாம் என்றும் கூறினார். ரஷ்யா எந்த சூழ்நிலையிலும் ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாது என்றும், அதன் அணு ஆயுதங்களால் யாரையும் அச்சுறுத்தாது என்றும் அவர் உறுதியளித்தார். ரஷ்யாவிடம் உலகின் அதிநவீன மற்றும் மேம்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதன் அணுசக்தி மூலோபாயத்தை அமெரிக்காவுடன் ஒப்பிடுவதாகவும் புடி…
-
- 12 replies
- 1.3k views
-
-
கத்தாரில் வீட்டு வேலைக்காக செல்லும் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? கட்டுரை தகவல் எழுதியவர்,மேகா மோகன் பதவி,பிபிசி நியூஸ் 10 டிசம்பர் 2022, 05:42 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பை நடைபெற்றுவரும் நிலையில், கத்தாரின் மனித உரிமை நிகழ்வுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மைதானங்கள் மற்றும் தங்கும் விடுதிகளைக் கட்டிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து நிறைய எழுதப்பட்டுள்ளது. ஆனால் கத்தாரின் ஆளும் வர்க்கங்களிடம் வேலை செய்யும் வெளிநாட்டு பணிப்பெண்களின் நிலை எ…
-
- 1 reply
- 803 views
- 1 follower
-
-
உக்ரைன் போர் சூழல்; ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வாரா புதின்…? ஜி-20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடந்தது. 2-வது நாள் நடந்த பாலி மாநாட்டு நிறைவு விழாவில் ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜி-20 தலைமையை இந்தியா ஏற்று நடத்துவது என்பது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விசயம். இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நாங்கள் நடத்துவோம். நாம் அனைவரும் இணைந்து ஜி-20 அமைப்பை உலகளாவிய மாற்றத்திற்கான ஒரு வினையூக்கியாக உருவாக்குவோம் என கூறினார். இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய, குறிக்கோள் ந…
-
- 0 replies
- 231 views
-
-
ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர் விமான பயிற்சியை ரஷ்யா அளித்து வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு! ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர் விமான பயிற்சியை ரஷ்யா அளித்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. வொஷிங்டனில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த, அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஈரானுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், வான் பாதுகாப்பு அமைப்புகள், இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் உட்பட ஈரானுக்கு மேம்பட்ட இராணுவ உதவியை வழங்க ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க உளவுத்துறை தகவல்களின்படி ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர…
-
- 0 replies
- 160 views
-
-
சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் விநியோகம் By SETHU 09 DEC, 2022 | 04:53 PM சீனாவில் தயாரிக்கப்பட்ட புதிய பயணிகள் விமானத்தின் முதல் விமானம், சைனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு இன்று விநியோகிக்கப்பட்டது. சி919 (C919) எனும் இவ்விமானம், 164 பயணிகளுக்கான ஆசனங்களைக் கொண்டுள்ளது. அடுத்த வருட முற்பகுயில் தனது முதலாவது வணிக ரீதியான பறப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாங்காய் நகரிலுள்ள விமான நிலையத்தில் வைத்து, சைனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் இவ்விமானம் கையளிக்கப்பட்டது. இவ்விமானத்தின் பெரும்பாலான பாகங்கள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டவை. எனினும், போயிங் 737 ம…
-
- 1 reply
- 822 views
- 1 follower
-
-
பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் இணைந்து நவீன போர் விமானம் தயாரிக்கத் திட்டம் By SETHU 09 DEC, 2022 | 03:40 PM பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் ஆகியன இணைந்து புதிய போர் விமானத்தை தயாரிக்கவுள்ளதாக இந்நாடுகள் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன. மனித விமானிகளுக்கு உதவக்கூடிய செயற்கை மதிநுட்பம் மற்றும் நவீன சென்சர்களும் இவ்விமானத்தில் பயன்படுத்தப்படும் தேவையானபோது, விமானி இல்லாமலும் இவ்விமானம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தல்களும் ஆக்ரோஷங்களும் அதிகரித்துவரும் வரும் நிலையில், எமது முன்னேற்றகரமான இராணுவ ஆற்றல்களையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் இம்முயற்சி வேகமடையச் செய்யும் என இம்மூன்று நாடுகளும் வ…
-
- 0 replies
- 779 views
- 1 follower
-
-
ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன் - 24 மணி நேரத்தில் கொன்றொழிக்கப்பட்ட படைகள்! உக்ரைன் இராணுவம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 340 ரஷ்ய வீரர்களைக் கொன்றதாக முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு டாங்கிகள், இரண்டு கவச வாகனங்கள் மற்றும் இரண்டு பீரங்கி அமைப்புகளும் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பை தாக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு ட்ரோன்களும் வீழ்த்தப்பட்டுள்ளன என உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு எச்சரிக்கை இவ்வாறான நிலையில், உக்ரைனுடனான இந்த போரில் அணு ஆயுதங்களை ரஷ்யா முதலில் பயன்படுத்தாது என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருந்தாலும், ரஷ்யா அச்சுறுத்தப்பட்டால் நிச்சயம் அண…
-
- 2 replies
- 779 views
-
-
அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்னியும் ரஷ்ய ஆயுத கடத்தல்காரர் விக்டர் பௌட்டும் கைதிப் பரிமாற்றத்தின் மூலம் விடுவிப்பு By SETHU 09 DEC, 2022 | 10:53 AM போதைப்பொருள் குற்றச்சாட்டில் ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்டனி கிறைனர் கைதி பரிமாற்றத்தன் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார். பிரிட்டனி கிறைனரை விடுவிப்பதற்காக, 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஆயுதத் தரகர் விக்டர் பௌட்டை அமெரிக்கா விடுவித்தது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியிலுள்ள விமான நிலையத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை வைத்து இக்கைதிகள்; பரிமாற்றம் நடந்தது, …
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
ஐரோப்பிய ஒன்றிய எல்லையற்ற மண்டலத்தில் ருமேனியா- பல்கேரியாவை ஏற்க மறுப்பு! ஐரோப்பிய ஒன்றிய எல்லையற்ற மண்டலத்தில் ருமேனியா- பல்கேரியா ஆகிய நாடுகள் இணைய விடுக்கப்பட்ட அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள், குரோஷியாவை 26-நாடுகள், எல்லையற்ற ஷெங்கன் மண்டலத்தில் ஏற்றுக்கொள்வதற்கு வாக்களித்துள்ளனர். ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர், இது ஐரோப்பாவிற்கு ஒரு மோசமான நாள் என்று கூறினார். 420 மில்லியன் மக்களை உள்ளடக்கிய மண்டலத்தில் இணைவதற்கு தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்வதாக ஐரோப்பிய ஆணையம் மூன்று நாடுகளையும் ஆதரித்தது. ‘நானும் ஏமாற்றமடைந்துள்ளேன்’ என்று ஐரோப்பிய ஒன்றிய உள்துறை ஆணையர் யில்வா ஜோஹன்சன…
-
- 0 replies
- 286 views
-