உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26606 topics in this forum
-
09 AUG, 2025 | 11:33 AM ஜேர்மனி இஸ்ரேலிற்கான அனைத்து ஆயத ஏற்றுமதியையும் நிறுத்தியுள்ளது. காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியதை தொடர்ந்தே ஜேர்மனி இது குறித்து அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலைகளின் கீழ் காசா பள்ளத்தாக்கில் எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய எந்த இராணுவ ஏற்றுமதிக்கும் ஜேர்மனி அனுமதியளிக்காது என ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிச் மேர்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கு தன்னைபாதுகாப்பதற்கான உரிமையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள அவர் ஹமாஸ் தனது பிடியில் உள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரிப்பதை இதற்கு மேலும் ஜேர்மனியால் சகித்துக்கொள்ள முடியாது என தெரிவித்த…
-
-
- 5 replies
- 383 views
- 1 follower
-
-
ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி 09 August 2025 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி அலஸ்காவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சாத்தியமான போர்நிறுத்தம் மற்றும் சமாதான உடன்படிக்கை குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 2019 க்குப் பின்னர், இந்த இரண்டு தலைவர்களும், அமெரிக்க மண்ணில் தமது முதல் நேரடி சந்திப்பை நடத்தவுள்ளனர். யுக்ரைன் போர் நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா, ரஷ்யாவுக்கு விடுத்திருந்த காலக்கெடு நேற்ற…
-
-
- 16 replies
- 589 views
- 1 follower
-
-
ஆகஸ்ட் 7, 2025 போர் முயற்சிகளுக்கான உக்ரைனின் ஆதரவு சரிந்தது பொதுமக்கள் வாஷிங்டன் மீது வெறுப்பு, விரைவான நேட்டோ அணுகலுக்கான நம்பிக்கையை இழக்கின்றனர் பெனடிக்ட் விகர்ஸ் எழுதியது லண்டன் - மோதலின் ஆரம்ப நாட்களிலிருந்து வெற்றி பெறும் வரை போராடுவதற்கான ஆதரவு கடுமையாகக் குறைந்துவிட்டதால், பெரும்பாலான உக்ரேனியர்கள் இப்போது ரஷ்யாவுடனான போரை பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள். நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான அவர்களின் நம்பிக்கைகள் மங்கிவிட்டன, அமெரிக்கத் தலைமையின் ஒப்புதல் சரிந்துவிட்டது என்றாலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை உக்ரேனியர்கள் இன்னும் முக்கியமாகக் கருதுகின்றனர். இருப்…
-
-
- 15 replies
- 820 views
- 1 follower
-
-
யுக்ரைன் போர் நிறுத்தம் - ட்ரம்ப்பும் புடினும் சந்திப்பதில் சந்தேகம் General08 August 2025 யுக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை விரைவில் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், இன்னும் அதற்கான இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை. வாசிங்டனும் மொஸ்கோவும் ஒரு சாத்தியமான உச்சி மாநாட்டை எவ்வாறு நடத்தப்போகின்றன என்பது குறித்து இதுவரை அறிவிப்புக்கள் வெளியிடவில்லை. இந்த சந்திப்பு அடுத்த வாரம் இடம்பெறும் என்று கிரெம்ளினும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த சந்திப்பு நடைபெற்றால் 2021 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் புடின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தமைக்கு பின்னர், இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே நடைபெற…
-
- 1 reply
- 179 views
- 1 follower
-
-
காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் 08 August 2025 காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஹமாஸைத் தோற்கடிக்கவோ அல்லது கடத்தப்பட்டவர்களைத் திரும்பப் பெறவோ முடியாது என்று அமைச்சரவை அமைச்சர்களில் பெரும்பாலானோர் நம்பியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அலுவலகம் கூறியுள்ளது. எனினும் இந்த நடவடிக்கை பேரழிவு விளைவுகளை" ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது. அத்துடன் பணயக்கைதிகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வெளியிட்டுள்ளது. காசாவில் போரை முடிவுக்குக் கொண்…
-
-
- 5 replies
- 315 views
- 1 follower
-
-
கானாவில் ஹெலிகொப்டர் விபத்து: பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு! கானாவில் (Ghana) நேற்று இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா (Edward Omane Boamah) மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முகமது (Ibrahim Murtala Muhammed )உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கானா விமானப்படைக்கு சொந்தமான Z-9 வகை ஹெலிகொப்டர், அசாந்தி( Ashanti) மாகாணத்தின் ஆதான்சி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகொப்டர் அக்ராவிலிருந்து( Accra) ஒபுவாசி (Obuasi) நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உயிர…
-
- 0 replies
- 114 views
-
-
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு! ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசி 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஜப்பானில் புதன்கிழமை (06) காலை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா, உலகம் முழுவதிலுமிருந்து வந்த அதிகாரிகளுடன் கலந்து கொண்டார். மேற்கு ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா 1945 ஆகஸ்ட் 6, அன்று தரைமட்டமாக்கப்பட்டது. அப்போது அமெரிக்கா “லிட்டில் பாய்” என்ற செல்லப்பெயர் கொண்ட யுரேனியம் குண்டை வீசியது. இந்த குண்டுவெடிப்புகளில் 200,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் – சிலர் உடனடியாகவும், ஏனையவர்கள் கதிர்வீச்சு நோய் மற்றும் தீக்காயங்களாலும் மரணித்தனர். இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா சில இராணுவப…
-
- 2 replies
- 154 views
- 1 follower
-
-
Published By: Rajeeban 05 Aug, 2025 | 11:15 AM காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தனது படையினருக்கு உத்தரவிடவுள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது. இது குறித்து சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது- இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இராணுவநடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து தீவிர ஆர்வத்துடன் உள்ளதாலும்,பேச்சுவார்த்தைகளிற்கு முன்னர் மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வை காணவேண்டும் என ஹமாஸ் வேண்டுகோள் விடுத்துவருவதாலும்,காசாவில் யுத்த நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முட்டுகட்டைநிலைக்குள் சிக்குண்டுள்ளன. இன்று செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ள பாதுகாப்பு அமைச்சரவையின் கூட்டத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு காசாவை முழுமையாக கைப்பற்…
-
-
- 8 replies
- 513 views
- 2 followers
-
-
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற ரஷ்யா முடிவு! அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையில் கடந்த 1987 இல் கையெழுத்தான இடைநிலை அணுசக்தி (INF) ஒப்பந்தத்திற்கு இனி கட்டுப்படப் போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. மேற்கு நாடுகளின் செயல்கள் தங்கள் பாதுகாப்புக்கு “நேரடி அச்சுறுத்தலை” உருவாக்கியதாக கூறியுள்ள ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவு அணு ஆயுத வல்லமை கொண்ட இருநாடுகளுக்கும் இடையே ஆயுத போட்டியை அதிகரிக்க கூடும் என்ற கவலையை சர்வதேச அளவில் எழுப்பியுள்ளது. இணக்கத்திற்கு வராமல் ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடர்ந்து நீடித்து வருவதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளிலும் நடக்கும் மோதலை நானே நிறுத…
-
- 7 replies
- 426 views
-
-
ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை! சவுதி அரேபியாவில் நேற்றைய தினம் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வளைகுடா நாடுகளில் மரண தண்டனை அளிக்கப்படுவது வழக்கம். கடந்த 2019 ஆம் ஆண்டு போதை பொருள் குற்றங்களுக்கான மரண தண்டனையை சவூதி அரசு நிறுத்தி வைத்திருந்தது. பின்னர், மீண்டும் 2022ம் ஆண்டு இறுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனையை அமுல்படுத்தியது 2022ம் ஆண்டு 19 பேரும், 2023ம் ஆண்டு 2 பேரும், 2024ம் ஆண்டு 117 பேரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர். அதே போன்று கடந்த 2024ம் ஆண்டு 338 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. 2025ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து சவுதி அரேபியாவில் இதுவரை 230 பேருக்கு மரணதண்டனை ந…
-
- 0 replies
- 123 views
-
-
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதியை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு! பிரேசிலின் முன்னாள் வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை (Jair Bolsonaro) வீட்டுக் காவலில் வைக்க அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் விசாரணையில் உள்ளார். எனினும், அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். போல்சனாரோவை விசாரிக்கும் பொறுப்பான நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ், கடந்த மாதம் தனக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவுகளை போல்சனாரோ பின்பற்றாததால் இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறினார். இந்த உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக, போல்சனாரோவின் சட்டக் குழு எந்தவொரு தடை உத்தரவையும் மீறவில்லை என்றும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்…
-
- 0 replies
- 121 views
-
-
05 Aug, 2025 | 10:31 AM காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்களஞ்சியத்தை சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரில் தேசிய நூலக சபை கட்டிடத்தில் உள்ள டிராமா சென்டரில் சனிக்கிழமை (02) நடைபெற்ற விழாவில், 'சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டுள்ளார். 200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என சிங்கப்பூர் தமிழ் மக்களின் வாழ்வியல் களம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் தமிழர்க் கலைக் களஞ்சியம் எடுத்துரைக்கும் பல தகவல்களில் தமிழ்ச் சமூகம் கண்டுவந்த சமூகச் சீர்திருத்தங்கள…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
05 Aug, 2025 | 10:47 AM காசாவிற்குள் வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக தெரிவித்துள்ள கனடா இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுகின்றது என குற்றம்சாட்டியுள்ளது. சிசி - 130 ஜே ஹேர்குலிஸ் விமானத்தை பயன்படுத்தி கனடாவின் ஆயுதப்படையினர் காசாவுக்குள் மனிதாபிமான உதவி பொருட்களை போட்டனர் என தெரிவித்துள்ள கனடா அரசாங்கம் 21600 பவுண்ட் மனிதாபிமான உதவிகளை போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கனடாவின் ஆயுதப்படையினர் தங்கள் விமானங்களை பயன்படுத்தி முதல்தடவையாக காசாவுக்குள் மனிதாபிமான பொருட்களை போட்டுள்ளனர் என கனடா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை கனடா எகிப்து உட்பட ஆறுநாடுகள் 120 உணவுப்பொதிகளை காசாவிற்குள் வீசியுள்ளன என எகிப்து தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலின் கட்டுப்ப…
-
- 1 reply
- 158 views
- 2 followers
-
-
சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு பேராட்டம் - பாலத்தின் ஊடாக பேரணியாக சென்ற ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் - அவுஸ்திரேலியா ஏன் இதுவரை இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவில்லை என கேள்வி? Published By: Rajeeban 04 Aug, 2025 | 12:04 PM அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரக்கணக்கானவர்கள் சிட்னி துறைமுகத்தின் பாலத்தின் ஊடாக பேரணியாக சென்றனர். அவுஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. .இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வர்ணித்துள்ளனர். காசா யுத்தத்தை நிறுத்துமாறு அரசியல்வாதிகளை கோரும் செய்திகளுடன் ஆயிரக்கணக்கானவர்…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
பணயக்கைதிகளை பாதுகாக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிய இஸ்ரேல். ”காசாவில் சிறைபிடிக்கப்பட்ட தங்கள் நாட்டு பணயக் கைதிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross) முன்வர வேண்டும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். கடந்த இரண்டரைக்கு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் பலரை சுட்டுக் கொன்றதுடன், 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட பயணக் கைதிகளில் பலர் இறந்து விட்ட நிலையில், சிலர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் படையினரின் பிடியில் சி…
-
- 1 reply
- 187 views
-
-
04 Aug, 2025 | 11:20 AM இஸ்ரேல் விமானதாக்குதல்களை நிறுத்தி காசாவிற்கான மனிதாபிமான விநியோக பாதையொன்றை நிரந்தரமாக திறந்துவிடுவதற்கு இணங்கினால் தன்னிடமுள்ள பணயக்கைதிகளிற்கு உணவு வழங்கும் விடயத்தில் ஒத்துழைக்க தயார் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஹமாசிடம் சிக்குண்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் பட்டினியால் வாடுவதை காண்பிக்கும் வீடியோ வெளியானதை தொடர்ந்து சர்வதேச கண்டனங்கள் எழுந்துள்ள நிலையிலேயே ஹமாஸ் இதனை தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டு முதல் ஹமாசிடம் பணயக்கைதியாக உள்ள எவ்யட்டார் டேவிட்டின் வீடியோவே வெளியாகியுள்ளது. 24வயது டேவிட் எலும்பும்தோலுமாக காணப்படுகின்றார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார தலைவர் இந்த…
-
-
- 1 reply
- 137 views
- 1 follower
-
-
ஏமன் கடற்பகுதியில் படகு விபத்து; 68 பேர் மரணம், 74 பேர் மாயம்! ஏமன் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (03) 154 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 74 பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஏமனுக்கு அருகில் நடந்த தொடர்ச்சியான கப்பல் விபத்துக்களில் அண்மைய நிகழ்வாகும். ஏமனில் உள்ள சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் தலைவரான அப்துசாட்டர் எசோவ் கூறுகையில், 54 எத்தியோப்பிய குடியேறிகளுடன் சென்ற கப்பல், தெற்கு யேமன் மாகாணமான அப்யானில் இருந்து ஏடன் வளைகுடாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூழ்கியது. கான்ஃபார் மாவட்டத்தில் கரை ஒதுங்கிய 54 புலம்பெயர்ந்தோரின் உடல…
-
- 0 replies
- 137 views
-
-
Published By: Rajeeban 03 Aug, 2025 | 05:22 PM காசாவில் உள்ள பாலஸ்தீன செம்பிறை சமூகத்தின் தலைமையகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் தனது பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் பலர் காயமடைந்துள்ளனர் என செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலால் கட்டிடத்தில் தீ மூண்டுள்ளது என தெரிவித்துள்ள செம்பிறை சமூகம் கான் யூனிசில் உள்ள தனது கட்டிடத்தை இஸ்ரேல் வேண்டுமென்றே தாக்கியதாக தெரிவித்துள்ளது. எங்கள் தலைமையகம் என்பது இஸ்ரேலிற்கு நன்கு தெரியும் என பாலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது. கட்டிடம் தீப்பிடித்து எரிவதையும் புகைமண்டலம் காணப்படுவதையும் வெளியிட்டுள்ள செம்பிறை சங்கம்கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதையும் இரத்;தக்கறை காணப்படுவதையும் காண்பிக்கும் படங்கள…
-
- 1 reply
- 139 views
- 1 follower
-
-
03 Aug, 2025 | 10:31 AM சுதந்திர பாலஸ்தீன தேசமொன்று உருவாகும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது. 2007 முதல்; காசாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவேண்டும் என வேண்டுகோள்கள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளித்துள்ள ஹமாஸ் ஜெரூசலேமை தலைநகராக கொண்ட சுதந்திரமான முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படாவிட்டால் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளது. இதேவேளை ஹமாஸ் தன்னிடமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதியை காண்பிக்கும் வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளது. எவியதார் டேவிட் என்ற பணயக்கைதியின் வீடியோவையே ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது, மிகவும் மெலிந்த நிலையில் காணப்படும் அவர் ஒரு குழியை வெட்டுகின்றார், இந்த குழ…
-
-
- 1 reply
- 166 views
- 1 follower
-
-
ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்த உத்தரவு! ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமித்ரி மெட்வெடேவின்(Dmitry Medvedev) கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையிலான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகின்ற நிலையில், டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த, ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு வழங்கிய 50 நாள் காலக்கெடுவை 12 நாட்களாக குறைத்துள்ளதாக அண்மையில் அறிவி…
-
- 0 replies
- 133 views
-
-
யாரோஸ்லாவ் லுகிவ் பிபிசி செய்திகள் 49 நிமிடங்களுக்கு முன்னர் முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடெவ் தெரிவித்த "மிகவும் ஆத்திரமூட்டும்" கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை "பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த" உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். "முட்டாள்தனமான மற்றும் எரிச்சலூட்டும் அறிக்கைகள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே நான் இதைச் செய்தேன். வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை, அவை பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும். இது அந்த மாதிரியான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்காது என்று நம்புகிறேன்" என்று டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க ராணுவ நெறிமுறைகளின்படி, நீர்மூழ்கிக் கப்பல்கள் எங்கு நிலை நிறுத…
-
- 2 replies
- 225 views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! பிரித்தானியாவின் பிரதமராக கியர் ஸ்டார்மர் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டின் குடியேற்றச் சட்டங்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்தவகையில் தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை பெற தேவையான கால அவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளமை பிரிட்டனில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பிரித்தானியாவில் குடியேற ஆங்கில மொழித் தகமை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமான குறித்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நாட்டி…
-
- 0 replies
- 179 views
-
-
உலகின் மனச்சாட்சியை நோக்கி கேள்வி எழுப்பும் - காசாவில் கடும் பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள சிறுவனின் புகைப்படம் சொல்லும் கதை என்ன? பிபிசி 29 JUL, 2025 | 05:00 PM அவனிடம் எலும்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன அவனது முதுகெலும்பு மற்றும் விலா எலும்புகள் வெளியே தெரிந்தன. இது ஒன்றரை வயது சிறுவன் முகமது ஜகாரியா அய்யூப் அல்-மதூக். அவனது புகைப்படம் காசாவிற்கான மனிதாபிமான விநியோகங்கள் தற்போது செயலிழந்துள்ளதால் காசாவில் ஏற்பட்டுள்ள பட்டினி நிலையின் மிகவும் இதயத்தைவருத்தும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஜூலை 21 (7) 2025 அன்று காசாவில் அமைக்கப்பட்ட ஒரு கூடாரத்தில் தனது தாயாருடன் அடிப்படைத் தேவைகள் இல்லாததால் காசா மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில், புகைப்படக் கலைஞர் அகமது அல்-அரின…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நேரத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன. 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வலையமைப்பை குறிவைத்து, ஆறு இந்திய நிறுவனங்கள் உட்பட மொத்தம் 20 நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது. "இரானிய அரசு, மத்திய கிழக்கில் போரைத் தூண்டுகிறது மற்றும் அதிலிருந்து கிடைக்கும் பணத்தை அமைதியைக் குலைக்கும் செயல்களுக்கு பயன்படுத்துகிறது. இதனால், இரானின் எண்ணெய், எண்ணெய் பொருட்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகத்துடன் தொடர்புடைய 20 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கிறது" என்று அமெர…
-
- 2 replies
- 230 views
- 1 follower
-
-
01 AUG, 2025 | 01:37 PM பாலஸ்தீன அதிகாரிகளிற்கு விசா வழங்கப்போவதில்லை தெரிவித்துள்ள அமெரிக்கா அவர்களிற்கு எதிராக தடைகளை விதிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. ஒஸ்லோ சமாதான உடன்படிக்கை மூலம் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன அதிகார சபை மற்றும் இந்த பேச்சுவார்த்தைகளின் போது பாலஸ்தீன மக்களின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த அமைப்புகள் தொடர்ந்தும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதால் அவற்றிற்கு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான வீசாவை வழங்கப்போவதில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பல நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-