Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்ஸின் முன்னாள் பிரதமருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை! பிரான்ஸின் முன்னாள் பிரதமர் பிரான்சுவா பில்லனுக்கு (François Fillon) ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் பிரான்சுவா பில்லனுக்கு 375,000 யூரோக்கள் அபராதம் மற்றும் தேர்தலில் போட்டியிட பத்து வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மனைவி பெனிலோப் மற்றும் அவரது முன்னாள் உதவியாளர் மார்க் ஜூலாட் ஆகியோருக்கும் பரிஸ் தீர்ப்பாயம் கடுமையான தண்டனைகளை விதித்தது. பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது, உடந்தையாக இருந்தமை மற்றும் மறைத்து வைத்தமை ஆகியவைக்காக அவர்கள் மீது இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடைய 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட…

    • 2 replies
    • 838 views
  2. கொரோனா பாதிப்பு: நான் சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன்- டொனால்டு டிரம்ப் தொற்றுநோய் அதன் அசிங்கமான முகத்தை உலகம் முழுவதும் பரப்புவதை நான் பார்க்கும்போது நான் சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன் என டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். பதிவு: ஜூலை 01, 2020 07:37 AM வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 26 லட்சத்தை தாண்டி உள்ளது. அமெரிக்க தொற்று நோய் நிபுணர் அந்தோனி பாசி கொரோனா பாதிப்பு நடவ்டிக்கையில் நாம் தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். இப்போது நாம் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை" என்றும் கூறினார். இதை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் கூறி இரு…

  3. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வரை உயரக்கூடும்- உயர் சுகாதார நிபுணர் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு மடங்கு வரை உயரக்கூடும் என உயர் சுகாதார நிபுணர் எச்சரித்து உள்ளார். பதிவு: ஜூலை 01, 2020 06:46 AM வாஷிங்டன்: தொற்றுநோயை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளும்,பொதுமக்களும் எடுக்கத் தவறினால், புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு மடங்கு வரை அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் உயர் சுகாதார நிபுணர் எச்சரித்து உள்ளார். உலகிலேயே 26 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளை கொண்ட மிகபாதிப்படைந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்க தொற்று …

  4. இலங்கை குறித்து ஜெனீவாவில் ஐ.நா செயலாளர் கவலை! ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வில் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தனது தொடக்க உரையில் இலங்கை குறித்து கவலை வெளியிட்டுள்ளார். ஐ.நா.மனித உரிமை பேரவையின் 44வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், மனித உரிமைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கதிற்கு மத்தியில் இலங்கையில் முஸ்லீம் சமூகத்தினர் இலக்கு வைக்கப்படுவது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மிச்சேல் பச்லெட் மேலும் தெரிவிக்கையில், “பல உலகநாடுகளில் சிறுபான்மையினத்தவர்களும், குடியேற்றவாசிகளும் அதிகளவு களங்கத்திற்கு ஆளாகின்றமை குறித்த தகவல்களால் கவலையடைந்துள்ளேன். குறிப்பாக இலங்கையிலும் இந்தியாவிலும்…

  5. சீனாவில் புதிய வைரஸ் காய்ச்சல் – மனிதர்களுக்கும் தொற்ற வாய்ப்பு! சீனாவில் ப்ளு (Flu) என அறியப்படும் வைரஸ் தொற்று நோயாக மாறக்கூடிய புதிய வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. பன்றியிலிருந்து பரவும் இந்த வைரஸ் காரணமாக ஒரு வகை காய்ச்சல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. https://newuthayan.com/சீனாவில்-புதிய-வைரஸ்-க/

  6. 24 மணி நேரத்தில் மட்டும் 42,000 பேருக்கு கொரோனா அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,000 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்…

    • 0 replies
    • 480 views
  7. காஸ்ஸெம் சோலேமானீ தாக்குதல் விவகாரம்: ட்ரம்புக்கு பிடியாணை- இன்டர்போலின் உதவியை நாடும் ஈரான்! ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, கைதுசெய்ய ஈரான் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், காஸ்ஸெம் சுலேமானீ மீதான ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 30இற்கும் மேற்பட்டோரையும் தடுத்து வைக்க இன்டர்போலிடம் ஈரான் உதவி கோரியுள்ளது. இதற்காக, பிரான்ஸின் லியோனைத் தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியையும் நாடியுள்ளது. எனினும், ஈரான் உதவி கோரியதற்கு இன்டர்போல் உடனடியாக பதிலளிக்கவில்லை. ட்ரம்ப் கைது…

  8. ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் லடாக் மோதலில் ராணுவத்தில் தற்காப்பு கலை படைப்பிரிவை சேர்த்த சீனா எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் கல்வான் மோதலுக்கு முன் தற்காப்பு கலை படைப்பிரிவை ராணுவத்தில் சீனா சேர்த்து உள்ளது. பதிவு: ஜூன் 29, 2020 10:22 AM புதுடெல்லி கடந்த 15-ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் 2 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக சீன அரசு கூறி வருகிறது. இந்தியா-சீனா கல்வான் மோதலுக்கு பின் இரண்டு நாட்ட…

  9. மோதல் போராக மாறும்: இந்தியாவை குறைவாக எடை போட கூடாது - சீனா பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை இந்தியா-சீனாவிற்கிடையேயான மோதல் போராக மாற அதிக வாய்ப்புள்ளதாக கூறி, சீனாவின் அரசுக்கு அந்நாட்டு மூத்த ராணுவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பதிவு: ஜூன் 29, 2020 07:25 AM பீஜிங் இந்தியா-சீனா கல்வான் மோதலுக்கு பின் இரண்டு நாட்டு எல்லையிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம் அதிகரித்து வருகிறது. லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அங்கு இந்தியாவின் ராணுவமும், விமான படையும் தீவிரமாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில் சீனாவின் முன்னாள் விமானப்படை மேஜர்…

  10. ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர் விமானங்கள்- ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை! தங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 அமெரிக்க விமானங்களை வெளியேற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த அமெரிக்க விமானங்கள் ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் நுழைந்த நிலையில் அவற்றை ரஷ்யாவின் ஜெட் விமானங்கள் வழிமறித்து, எல்லையை விட்டு வெளியேற்றியதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான Poseidon ரக போர் விமானமும், RC-135 உளவு விமானமும் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானமும் ரஷ்ய எல்லைக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை ரஷ்யாவின் SU-30 ரக ஜெற் விமானங்கள் வழிமறித்ததுடன், ரஷ்ய எல்லையை விட்டு வெளியேறும் வரை அமெ…

  11. கொரோனா வைரஸ் இன்னும் இங்கிலாந்தில் அழியவில்லை - பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் இன்னும் இங்கிலாந்தில் அழியவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பதிவு: ஜூன் 29, 2020 06:43 AM லண்டன் உலகை தொடர் அச்சத்தில் வைத்திருக்கும் கொரோனாவால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இங்கிலாந்திலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கடற்கரைகளிலும், தெருவோர கேளிக்கைகளிலும் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. தெற்கு இங்கிலாந்தில் உள்ள போர்ன்மவுத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் நேற்று குவிந்த ஆயிரக்கணக்கான மக்களே இதற்கு சான்றாக அமைந்துள்ளது.இந்நிலையில் வரும் 4-ஆம் த…

  12. பெருந்தொற்றுக்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும்? நம் உலகத்தில் புதிய தாராளவாதச் சூழலில் அதீதமாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வை இந்த கரோனா பெருந்தொற்று கூர்மையாக அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில். அமெரிக்க நாட்டின் இனவாதக் குணத்தையும் வெளிக்கொணர்ந்துள்ளது. புதிய தாராளவாதக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு 40 வருடங்களுக்குப் பிறகான ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால், நாட்டின் ஒட்டுமொத்த வளத்தில் 20% வளத்தை 0.1 பங்கு ஜனத்தொகையினர் சேர்த்துள்ளனர். ஜனத்தொகையில் பாதிப் பேர், மைனஸ் மதிப்பில் உள்ளனர். 70% மக்கள், அரசின் நிதி உதவியை நம்பி வாழும் நிலை உள்ளது. பெரும்பாலான மக்கள், அன்றன்று வேலைக்கு எஜமானர் அழைப்பதை எதிர்பார்த்து வாழும் அபாயகரமான சூழலில் உள்ளனர…

  13. என் அரசைக் கவிழ்க்க இந்தியாவில் சதி நடக்கிறது: நேபாள் பிரதமர் குற்றச்சாட்டு நேபாளத்தில் நடைபெற்று வரும் என் ஆட்சியைக் கவிழக்க இந்தியாவில் சந்திப்புகள், கூட்டங்கள் என்று சதி நடைபெற்று வருகிறது என்று அந்நாட்டு பிரதமர் கே.பி.ஒலி சாடியுள்ளார். மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் மதன் பண்டாரி நினைவாக தன் இல்லத்தில் நடத்தியக் கூட்டத்தில் நேபாள் பிரதமர் கே.பி.ஒலி கூறும்போது, “டெல்லியிலிருந்து இது தொடர்பாக செய்திகள் வருகின்றன. நேபாளின் வரைபடத்தை நாங்கள் மாற்றி வெளியிட்டதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எனக்கு பெரும்பான்மை உள்ளது அதனால் என்னை ஒன்றும் அசைக்க முடியாது. நேபாளின் தேசியவாதம் பலவீனமானதல்ல. பிரதமரை 15 நாட்களில் மாற்றிவிடலாம் …

  14. இந்திய-சீன நெருக்கடி: தெற்காசியா குறித்த வினாக்கள் தெற்காசியா, பத‌ற்றத்தின் விளிம்பில் உள்ளது போன்றதொரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நெருக்கடி தேவையற்றது என்பதை, அனைவரும் அறிவர். ஆனால், இதை வெளிப்படையாகச் சொல்வதற்கு யாரும் தயாராக இல்லை. இந்த நெருக்கடியால் பயனடைவோர் பலர். எனவே, இந்த நெருக்கடியைத் தக்கவைப்பதும் தகவமைப்பதும் பலரின் தேவையாக உள்ளது. அதன் காட்சிகளே, இப்போது அரங்கேறுகின்றன. இந்தக் கட்டுரையை எழுதுகின்ற போது, நான்கு முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றின் அடிப்படையில், இந்த நெருக்கடியை நோக்குவது தகும். முதலாவது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சியொன்றை ரஷ்யா, இந்த வாரம் முன்னெடுத்து, அதி…

  15. இந்தியாவில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பு; அமேசான் நிறுவனம் அறிவிப்பு அமேசான் இந்தியா நிறுவனம், உள்நாட்டு அளவிலும், வெளிநாட்டு அளவிலும் ஷாப்பிங் அனுபவத்தை சிறப்பானதாக வாடிக்கையாளர்களுக்கு மாற்றும் விதத்தில், தன்னுடைய வாடிக்கையாளர் சேவை மையத்துக்காக தற்காலிகமாக 20 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த 20 ஆயிரம் ஊழியர்களும் தற்காலிகமாக அல்லது ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்த 6 மாதங்களில் வாடிக்கையாளர்கள் அதிகமான அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களை சமாளிக்கும் வகையில் இந்த 20 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளன. ஹைதராபாத், கோவை, புனே, நொய்டா, கொல்கத்தா, …

    • 1 reply
    • 467 views
  16. மலாவி ஜனாதிபதியாகசக்வேரா வரலாற்று வெற்றி! மலாவியின் எதிர்க்கட்சித் தலைவரான மலாவி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லாசரஸ் சக்வேரா ஜனாதிபதி தேர்தலுக்கான மறு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வாக்கெடுப்பில் சக்வேரா 59.34% வாக்குகளைப் பெற்று ஜனநாயக முற்போக்கு கட்சியை சேர்ந்த பீட்டர் முத்தாரிகாவை தோற்கடித்தார் எனதேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக நேற்று (27) அறிவித்துள்ளது. மலாவியின் நீதிமன்றம், 2019 மே மாதம் இடம்பெற்ற தேர்தலில் வாக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முத்தரிக்காவின் வெற்றியை இரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து மறு வாக்கெடுப்பு நடைபெற்று, சனிக்கிழமையன்று வெளியான உத்தியோகபூர்வ முடிவைத் தொடர்ந்து, தனது வெற்றி ஜனந…

  17. ஏழு ஆண்டுகள் சிறை ; “நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்களே.!” ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரின் ஹோட்டலில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலைக்காக காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக ஹோட்டலுக்கு வெளியே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற சுமார் 120 அகதிகள் பிரிஸ்பேன் நகரில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் கங்காரு பாய்ண்ட் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஹோட்டல் சிறையைப் போல இருப்பதாக கூறும் அகதியான அபேத் அல்சலாஹி, ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன் அலுவலகத்திற்கு தொலைப்பேசியில் சில முறைகள் அழைத்து விடுவிக்கக் கோரியிருக்கிறார். அமைச்சர் அலுவலகத்திற்கு அழைப்பத…

  18. ஆப்கானில் உள்ள அமெரிக்க பிரிட்டிஸ் படையினரை கொலை செய்வதற்கு சன்மானம் வழங்குகின்றது ரஸ்யா- புலனாய்வு அதிகாரிபரபரப்பு குற்றச்சாட்டு June 28, 2020 ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க பிரிட்டிஸ் படையினரை கொலை செய்வதற்கு ரஸ்ய புலனாய்வு பிரிவு தலிபான் அமைப்பினை சேர்ந்தவர்களிற்கு சன்மானம் வழங்குகின்றது என ஐரோப்பிய நாடொன்றின் புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. ரஸ்யாவின் நோக்கம் என்னவென்பது தெளிவாக தெரியாதபோதிலும் அந்த நாடு வழங்கிய சன்மானம் காரணமாக ஆப்கானில் உள்ள சர்வதேச படையினர் மத்தியில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். ரஸ்ய புலனாய்வு பிரிவினரின் இந்த அணுகுமுறை திடுக்கிடவைக்கின்றது கண்டித்தக்கது என …

  19. 501,472’ பேரை காவு கொண்டது கொரோனா! – கோடியைத் தாண்டியது தொற்று! சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, பிரேஷில், ரஷ்யா, ஸ்பைன், பிரித்தானியா மற்றும் இத்தாலி எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அழித்து வருகின்றது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இன்று (28) மதியம் 1 மணி வரை 213 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 10,090,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களில் 501,472 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,466,895 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இப்போது வரை 4,122,080 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் (Active Case) சி…

  20. சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு: நாசா வீரர்கள் விண்வெளியில் நடைபயணம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பதிவு: ஜூன் 28, 2020 07:30 AM வாஷிங்டன், விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவை சேர்ந்த கிறிஸ் கஸ்சிடி, ரோபர்ட் பென்கென் உள்ளிட்டோர் அங்கு ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நிக்கல்ஹைட்…

  21. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்தது - ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 25 லட்சத்தை கடந்து, அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பதிவு: ஜூன் 28, 2020 06:37 AM வாஷிங்டன், வல்லரசு நாடான அமெரிக்கா, கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் திணறிக்கொண்டிருக்கிறது. சீனாவில் தொடங்கி இன்றைக்கு உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அலை கடுமையாக வீசிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. …

  22. ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டம்:சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் அமெரிக்கா வர தடை ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பதிவு: ஜூன் 27, 2020 10:19 AM வாஷிங்டன் ஹாங்காங்கிற்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய சீனாவின் ஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்கா வர விசா வழங்கப்படாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய மைக் பாம்பியோ ஹாங்காங்கின் சுதந்திரத்தை பறித்த சீன கம்யூனிஸ்ட் கட்சியை தண்டிக்கப் போவதாக ஜனாதிபதி டிரம்ப் உறுதியளித்திருந்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்ப…

  23. ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 6,20,794 ஆக அதிகரிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,800 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய சுகாதார அதிகாரிகள் தரப்பில், “ ரஷ்யாவில் நேற்று மட்டும் 6,800 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 813 பேர் கரோனா தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர் ரஷ்யாவில் இதுவரை 6,20,794 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,781 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாகவே ஒவ்வொரு நாளும் 7 ஆயிரத்துக்கும் அதிக…

  24. இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட இராணுவ கவச வாகனங்கள்..! ஐ.நா அமைதிகாக்கும் படைக்கு அனுப்பபடுகிறது.. இலங்கை இராணுவ பொறியியல் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 9 கவச வாகனங்களை இராணுவ தளபதி லெப்டினன்ட் சவேந்திர சில்வா இன்று பத்தரமுல்ல இராணுவ தலமையகத்தில் பார்வையிட்டிருக்கின்றார். ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் பணியாற்றும் இலங்கை படையினரின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டவை மாலிக்கு இலங்கை இராணுவத்தினாரால் கையளிக்கப்பட்டது.ஒன்பது கனரக கவச வாகனங்களையும் கண்காணித்து பரிசோதனைக்கு உட்படுத்தும் நிகழ்வு பத்தரமுல்லை இராணுவத்தலைமையகத்தில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இடம் பெற்றது. இதன்போது ஒன்பது கனரக கவச வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.