Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சீனாவின் உகான் நகர மருத்துவமனை இயக்குநர் கொரோனா வைரஸ் தாக்கி பலியாகியுள்ளார். உகானிலுள்ள உசாங் மருத்துவமனை இயக்குநரும், நியூரோ சர்ஜனுமான லியு ஜிமிங் வைரஸ் தாக்கி இன்று காலை உயிரிழந்தார். இதை சீன அரசு ஊடகமும் உறுதி செய்துள்ளது. உகானில் வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க அரசால் அறிவிக்கப்பட்ட 7 மருத்துவமனைகளில் உசாங் மருத்துவமனையும் ஒன்று. அந்த மருத்துவமனையின் இயக்குநரே கொரானா வைரஸுக்கு உயிரிழந்திருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. https://www.polimernews.com/dnews/100943/உகான்-மருத்துவமனைஇயக்குநர்-கொரோனாவைரஸுக்கு-பலி

  2. கனடாவில் இயற்கை எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மக்களுடன் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார். ஏற்றுமதி வசதிக்காக பிரிட்டிஷ் கொலம்பியாவின் கடற்கரையோரம் 670 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் எரிவாயு குழாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார பூர்வக்குடி மக்கள் 2 வாரங்களாக ரயில் முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பல இடங்களில் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பூர்வக்குடி மக்களை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு வலிறுத்தினார். https://www.polimernews.com/dnews/100929/இயற்கை-எரிவாயு-குழாய்அ…

  3. ஜப்பானில் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சோதனை அடிப்படையில் ஹெச்ஐவி நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விவரித்த ஜப்பான் அரசின் மூத்த செய்தி தொடர்பாளர் யோஷிகிடே சுகா, ஹெச்ஐவி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதற்கான சோதனைகளை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள 454 பேர் உட்பட ஜப்பானில் இதுவரை 520 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தாய்லாந்து மருத்துவர்கள் ஹெச்ஐவிக்கான மருந்துகளை கலந்து கொரானா பாதிப்புக்கு சிகிச்சை அளித்ததில் வெற்றி கண்டதாக தெரிவித…

    • 0 replies
    • 284 views
  4. ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்டது அமெரிக்கா! ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டுக்கு மக்களை மீட்டு, சொந்த நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளது அமெரிக்கா. இதற்கமைய குறிப்பிட்ட சுமார் 300 அமெரிக்கர்களை, சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அழைத்துச் சென்றுள்ளது. கப்பலில் இருக்கும் அமெரிக்கர்கள் சுமார் 400 பேரை மீட்க அமெரிக்கா 2 விமானங்களை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தது. எனினும் கப்பலில் இருக்கும் அமெரிக்கர்கள் சிலர், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலம் முழுமையாக முடிவடைந்த பின்னரே கப்பலில் இருந்து இறங்குவோம் என கூறி விட்டனர். அதேபோல், கொரோனா பாதிப்பு இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட அமெரிக…

  5. கொரோனாவின் கோரத் தாண்டவம் – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரிப்பு சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு, இதுவரை, 72 ஆயிரத்து, 436 பேருக்கு இதன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில், கடந்தாண்டு டிசம்பர் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் காரணமாக நாட்டின், 34 மாகாணங்களில் 31 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 18 முக்கிய நகரங்கள் உள்ள ஹூபய் மாகாணத்தில் மிக அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு முதலில் தென்பட்ட வூஹான் நகரிலேயே உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவுள்ளது. நேற்று ஒரே நாளில், 98 பேர் உயிரிழந்தனர். அத…

  6. ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 70பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு! ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 70பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சர் கட்சுனோபு கடோ தெரிவித்துள்ளார். இதன்படி கப்பலில் உள்ள மொத்தம் 355 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கப்பலில் முதலில் ஒருவருக்கு மட்டுமே இருந்த இந்த வைரஸ் தொற்று, தற்போது நூற்றுக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில், இந்த செயற்பாட்டுக்கு உலக நாடுகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இந்த கப்பலை ஜப்பானின் 8 துறைமுகங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. எங்கள் எல்லைக்குள் இந்த கப்பலை…

  7. சிரியாவின் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் அதிரடி இட்லிப் பகுதியில் சிரிய அரசு செய்யும் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமைர்க்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனிடம் ஜனாதிபதி ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார் என்றும் இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த சில நாட்களாக ரஷ்யாவின் உதவியுடன் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் போர் விமானங்களைக் கொண்டு கடுமையான தாக்குதல் நேற்று நடத்தப்பட்டதுடன், கிள…

  8. ஜேர்மனியில் மசூதிகள் புகலிடக்கோரிக்கையாளர்கள் அரசியல்வாதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த வலதுசாரி குழுவொன்றை சேர்ந்தவர்களை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆபத்தான நோக்கங்களை கொண்ட12 பேரை கைதுசெய்துள்ளதாகவும்,இக்குழுவை சேர்ந்த ஒருவர் தலைமறைவாகியுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிர வலதுசாரி அமைப்பொன்றை உருவாக்கிய சந்தேகத்தின் பேரில் நால்வரும் அவர்களிற்கு நிதிஉதவிகள் உட்பட ஏனைய உதவிகளை வழங்கிய சந்தேகத்தின் பேரில் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட்ஸ்அப் மூலமாக தகவல்களை பரிமாறி இவர்கள் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர். இவர்கள் பின்லாந்தில் உள்ள அமைப்பொன்றுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளன…

    • 0 replies
    • 390 views
  9. ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 9பேர் சுட்டுக் கொலை! ஆப்கானிஸ்தான் தலைநகரில் வீடற்ற போதைப்பொருள் பாவனையாளர்கள் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காபூலில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் நேற்று சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதாக்க இன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இருப்பினும் இதற்கான காரணங்கள் தெரியவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். “குரோஃப் மலையின் ஓரத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக” என்று காபூல் பொலிசாரின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் 2.5 மில்லியன் போதைப்பொருள் பாவனையாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, குறிப்பாக ஆப்கானிஸ்தானில் வளர்க்கப்படும் ஓபி…

  10. ஜெய்ஷ்-இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரைக் காணவில்லை- பாகிஸ்தான் அறிவிப்பு ஜெய்ஷ்-இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரையும் அவரது குடும்பத்தினரையும் காணவில்லை என சர்வதேச தீவிரவாத நிதித் தடுப்பு கண்காணிப்பு அமைப்பிடம் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச தீவிரவாத நிதித் தடுப்பு அமைப்பின் சார்பில் கடந்த ஒக்டோபரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர், புல்வாமாவில் கடந்த வருடம் மத்திய துணை இராணுவப் படை (Central Reserve Police Force) வீரர்கள் மீது புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40இற்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.…

  11. கொரோனா வைரஸ் தொற்று – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரிப்பு உலகை அச்சுறுத்தி வரும் கொவைட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 105 போ் உயிரிழந்தனா். இதனையடுத்து, கொவைட்-19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,765ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸ் கூடுதலாக 2,048 பேரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 70,548க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. எனினும் சீனாவில் ‘கொவைட…

  12. 'டயமண்ட் பிரின்சஸ்' கப்பலில் பாதிக்கப்பட்டோர் தொகை 356 உயர்வு, தமது பிரஜைகளை அழைத்துவர அமெரிக்கா, கனடா தீர்மானம்! யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 'டயமண்ட் பிரின்சஸ்' கப்பலில் மேலும் 70 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகையானது 356 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இதனால் ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 408 ஆக பதிவாகியுள்ளது. கப்பலில் உள்ளவர்களிடம் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் 21 ஆம் திகதி வரை பரிசோதனை முடிவுகள் வெளியானதும், கப்பலில் …

  13. ஜெர்மனியில் கலைநிகழ்வில் நடந்த துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்! ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பேர்லின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைத் தேட பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பேர்லின் பொலிஸார் டுவிற்றர் பக்கத்தில் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளனர். ஜேர்மனிய தலைநகரின் க்ரூஸ்பேர்க் (Kreuzberg) மாவட்டத்தில் உள்ள ரெம்பொட்ரோம் மண்டபத்தில் (Tempodrom hall) துருக்கிய கலை நிகழ்ச்சியின்போது மக்கள் அதிகளவாக கூடியிருந்த சமயத்தில் நேற்று இரவு இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. …

  14. பிரித்தானியா செல்லும் தொழிலாளர்கள் மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்வது அத்தியாவசியம்! பிரெக்ஸிற் பிந்தைய விதிகள் நடைமுறைக்கு வருவதனால் தொழிலாளர்கள், வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவதற்கு மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பது அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசியம் ஆக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா உத்தியோகப்பூர்வமாக வெளியேறினாலும் சிறிய மாற்றங்கள் கொண்டுவருவதற்கான காலம் டிசம்பர் 31 வரை நடைமுறையில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மக்கள் உறுப்பு நாடுகளுக்கு இடையில் சுதந்திரமாக செல்ல முடிகின்றமையினால் நாட்டிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் பெருமளவான பிரித்தான…

  15. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 1600-ஐ எட்டியது! உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எணிக்கை 1600 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் உருவாகியது என கூறப்படும் சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை மட்டும் 139 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஹூபேயில் கோவிட் -19 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தாக்கத்தினால் புதிதாக 1,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 11 ஆயிரம் பேர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதிக…

  16. ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட் தாக்குதல் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தளபதி காசீம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கிலுள்ள 2 அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் கடந்த மாதம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்ததாக ஈரான் அறிவித்தபோதிலும் அமெரிக்கா அதை மறுத்துவிட்டது. இந்நிலையில், பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏராளமான ரொக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை யார் நடத்தினர் என்பது குறித்தோ, அத்தா…

  17. கொரோனா வைரஸின் தாக்கம் : ஆசியாவிற்கு வெளியே முதல் மரணம் பதிவு! கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 80 வயதுடைய சீன சுற்றுலாப் பயணி ஒருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஆசியாவிற்கு வெளியே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைககள் பலனின்றி ஏற்ட்ட முதலாவது மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை சீனாவில் தற்போத வரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 66,492 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 1,524 ஆகவும் உய உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/75703

  18. அமெரிக்க விமானப்படை அணியும் உடையில் தங்களது மத நம்பிக்கைக்கு ஏற்ப டர்பன், ஹிஜாப் போன்றவை அணியலாம் என அமெரிக்கா விமானப்படை அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் ஒரு அங்கமான விமானப்படை அந்நாட்டு ராணுவத்தில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது, பல்வேறு தாக்குதல்களில் அமெரிக்க விமானப்படை முக்கிய பங்காற்றியுள்ளது. இதுவரை விமானப்படை வீரர்கள் அணியும் உடையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்து இருந்தது இந்நிலையில், அமெரிக்க விமானப்படையில் பணியாற்றும் மற்ற மதத்தினர் தங்களது மத நம்பிக்கைக்கு ஏற்ப உடையணியலாம் என அறிவித்து உள்ளது. இதன் படி அந்நாட்டு விமானப்படையில் பணியாற்றும் சீக்கியர்கள் டர்பன் அணியவும், தாடி வளர்த்து கொள்ளவும், தங்கள் முடியை வெட்டாமல் கொண்டை அணிந்து…

    • 0 replies
    • 554 views
  19. காதலர் தினம் என பெப்ரவரி 14 கொண்டாடப்படும் வெலண்டைன்ஸ் டே கொண்டாட்டங்களுக்கு இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. “பண்டா ஆச்” பிராந்தியத்தியத்தில் இந்த தடை அமுல் படுத்தப்படும் என அந்த பிராந்திய மேயர் அமீனுல்லாஹ் உஸ்மான் அறிவித்துள்ளார். பண்டா ஆச் பிராந்தியம் இந்தோனேசியாவில் அதிகமாக முஸ்லிம்கள் வாழும் பிராந்தியமாகும் அங்கு இஸ்லாமிய சரியா சட்டம் அமுல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. https://www.madawalaenews.com/2020/02/blog-post_645.html காதலர் தின கொண்டாட்டத்தை நடத்தக்கூடாதென நீதிமன்றம் தடை விதித்தது உலகில் நாளையதினம் காதலர்கள் தமக்கிடையே அன்பை பரிமாற தயாராகிவரும்வேளை பாகிஸ்தான் தலைநகரில் காதலர் தின கொண்டாட்டத்தை ந…

    • 0 replies
    • 859 views
  20. நிலக்கீழ் ரெயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு : மருத்துவர்கள் எச்சரிக்கை லண்டன் நிலக்கீழ் ரெயில் நிலையங்கள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஒரு மையமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தலைநகரில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி குறித்த தகவல் வெளிவந்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், லண்டன் நிலக்கீழ் ரெயில் நிலையங்கள் கொரோனா வைரஸ் பரவக்கூடிய இடமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனினும் நிலக்கீழ் ரெயில் பயணிகளுக்கு அதில் பயணிக்கவேண்டாம் என இதுவரையில் எந்தவிதமான அறிவுறுத்தல்களும் அரசாங்கத்தால் விடுக்கப்படவில்லை. கொரோனா வைரஸால் ஏற்படும் COVID-19 நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். …

  21. சிங்கப்பூருக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சில நாடுகள் எச்சரிக்கை! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிங்கப்பூருக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு தென்கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளினால் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் சிங்கப்பூரில் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் சிங்கப்பூரிலுள்ள தமது நாட்டுப் பிரஜைகளை அமைதியாக செயற்படுமாறு சிங்கப்பூரிலுள்ள இந்தோனேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் சிங்கப்பூருக்கான பயணத் தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை எனவும் சிங்கப்பூரில் உள்ள இந்தோனேசியப் பிரஜைகள் மீண்டும் இந்தோனேசியாவுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுமெனவு…

  22. கொரோனா – நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள் : இதுவரையில் 1, 483 பேர் உயிரிழப்பு! சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் சிலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் மூலம் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வின் ஊடாக கண்டறிப்பட்டது. கொரோனா வகையைச் சேர்ந்த குறறித்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிர்களை காவு கொண்ட ‘சார்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளமையினை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த வைரஸ் மன…

  23. துருக்கியில் 17 ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! துருக்கியின் வடக்கு சினாய் மாகாணத்தின் அல் அரிஷ் நகர் அல் அபேய்டெட் பகுதியில், 17 பயங்கரவாதிகள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று (புதன்கிழமை) படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையின் போதே இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தேடுதலின் போது, இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்ததாகவும் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து வெடிகுண்டுகள், நவீன ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி இராணுவ சோதனைச் சாவடி மீது தாக்குதல்…

  24. சிரியாவில் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படும்: துருக்கி மிரட்டல்! துருக்கி இராணுவ வீரர்கள் மீது மீண்டும் ஒருமுறை தாக்குகுதல் நடத்தினால் சிரியாவில் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படும் என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் மிரட்டல் விடுத்துள்ளார். சிரிய வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப்பில், அந்நாட்டு அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 5 துருக்கி இராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த துருக்கி உடனடியாக பதிலடி அளித்தது. இந்த நிலையில் துருக்கி இராணுவ வீரர்கள் மீது சிரியா நடத்திய தாக்குதலுக்கு துருக்கி நாடாளுமன்றத்தில் எர்டோகன் கடும் கண்டனம் வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எங்கள் இராணுவ வீரர் மீது மீண்டும் சிரியா தாக்குதல் …

  25. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான நியூ ஹாம்சயர் மாநிலத்தின் உட்கட்சித் தேர்தலில் பெர்னி சான்டர்ஸ் வெற்றியீட்டியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். இடதுசாரி செனட்டரான சான்டர்ஸ், மையவாத முன்னாள் மேயரான பீட் பட்டிகீக்கை தோற்கடித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடுவதற்கே ஜனநாயகக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தேர்வுசெய்யும் நடைமுறையை முன்னெடுத்துள்ளது. டிரம்பின் முடிவுக்கான ஆரம்பம் இது என்று சான்டர்ஸ் தனது வெற்றி குறித்து குறிப்பிட்டுள்ளார். …

    • 0 replies
    • 275 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.