உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26851 topics in this forum
-
ஜப்பானை தாக்கியது சுனாமி 2025 ஜூலை 30 , மு.ப. 08:37 ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வின் காரணமாக, ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியை சுனாமி தாக்கியுள்ளது. அந்நாட்டு நேரப்படி, முற்பகல் 10.30 மணிக்கு சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 04 மீற்றர் உயரத்துக்கு அலைகள் மேலெழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் டோகைடோ, ஜோபன் உள்ளிட்ட தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஜப்பானை-தாக்கியது-சுனாமி/50-362017
-
- 0 replies
- 239 views
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ரெபேக்கா தோர்ன் மற்றும் ஏஞ்சலா ஹென்ஷால் பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில், மூன்றில் ஒருவர் பல நாட்கள் உணவு இல்லாமல் இருக்கிறார் என ஐ.நாவின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு காஸாவில் மக்கள் பட்டினியால் வாடவில்லை எனக் கூறியிருந்தார். ஆனால், "காஸாவில் உண்மையான பட்டினி நிலவுகிறது" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். காஸா நகரத்தில் உள்ள ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது என்று ஐ.நா.பாலத்தீனிய அகதிகள் நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது. உணவுப் பற்றாக்குறையால், மருத்துவமனைகளில் கடுமையான சோர்வுடன் மக்…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
ஒஸ்கார் விருதுபெற்ற பாலஸ்தீனியர்கள் பற்றிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூதகுடியேற்றவாசியால் சுட்டுக்கொலை - இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக - நண்பர் கருத்து Published By: RAJEEBAN 29 JUL, 2025 | 10:41 AM ஒஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீனியர்களை பற்றிய குறுந்திரைப்படத்தை உருவாக்குவதில் இணைந்து பணியாற்றிய பாலஸ்தீனர் ஒருவர் மேற்கு கரையில் யூதகுடியேற்றவாசிகளால் கொல்லப்பட்டுள்ளார். பாலஸ்தீன செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ஒடே முகமத் ஹடாலின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள கிராமமொன்றில் இஸ்ரேலிய குடியேற்றவாசியொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் ஹடாலின் தனது செயற்பாடுகளால் மிகவும் பிரசித்தமானவர். மசெவெர் யட்டாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீ…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
நியூயோர்க் நகரில் துப்பாக்கி சூட்டுக்கு ஐவர் பலி. ஒரு பொலிசாரும் இறந்துள்ளார். Five killed, including NYPD officer, in shooting at Park Ave. skyscraper housing Blackstone, NFL. police officer and three other people were killed after a gunman opened fire Monday evening at a Midtown Manhattan office building that houses The Blackstone Group and NFL headquarters, police said. The “lone shooter” was later “neutralized,” NYPD Commissioner Jessica Tisch said. Police sources said the man shot and killed himself. Police sources identified the suspect as Shane Tamura, 27, of Las Vegas. Tamura was issued a concealed firearms permit by Las Vegas police in 2022. The motive remained…
-
- 2 replies
- 188 views
- 1 follower
-
-
27 JUL, 2025 | 11:50 AM மனிதாபிமான நோக்கங்களிற்காக காசாவின் சில பகுதிகளில் மூலோபாய அடிப்படையிலான இராணுவ நடவடிக்கை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் நடவடிக்கையில் ஈடுபடாத அல்மவாசி, டெய்ர் அல் பலா, காசா நகரம் ஆகியபகுதிகளில் மறுஅறிவித்தல்வரும் வரை இராணுவ நடவடிக்கை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. காசா பள்ளத்தாக்கில் மனிதாபிமான பொருட்களையும் மருந்துகளையும் விநியோகிக்கும் ஐநாவினதும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளினதும் வாகனத்தொடரணி பயணிப்பதற்கான பாதுகாப்பான வழிகள் குறித்து அறிவிக்…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில் Published By: RAJEEBAN 28 JUL, 2025 | 10:38 AM காசாவை சேர்ந்த 28 மருத்துவர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பாலஸ்தீனத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பு அவர்களில் எட்டு பேர் அறுவை சிகிச்சை எலும்பியல் சிகிச்சை தீவிரசிகிச்சை குழந்தைநோயியல் மருத்துவம் இருதயவியல் போன்றவற்றில் நீண்டகால அனுபவம்மிக்க மருத்துவ ஆலோசகர்களாக பணியாற்றியவர்கள் என தெரிவித்துள்ளது. இவர்களில் 21 பேர் 400நாட்களிற்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பு ஜூலைமாதத்தி…
-
- 1 reply
- 110 views
-
-
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு! அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பை ஞாயிற்றுக்கிழமை (27) எட்டியுள்ளன. இது, உலகின் மிகப்பெரிய பொருளாதார பங்காளிகளில் இருவருக்கு இடையே பல மாதங்களாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து. மேலும், உலகளாவிய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட இரு நட்பு நாடுகளுக்கும் இடையே ஒரு பெரிய வர்த்தகப் போரை தவிர்த்தது. ஸ்கொட்லாந்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இடையேயான சமரச பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அனைத்து ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கும் 15% அமெரிக்க வரியை விதிக்க கூட்டாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இது ஆகஸ…
-
- 0 replies
- 102 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜெர்மி போவன் சர்வதேச ஆசிரியர் 27 ஜூலை 2025, 04:07 GMT புதுப்பிக்கப்பட்டது 27 ஜூலை 2025, 05:31 GMT இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கும் திட்டத்திற்கான இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தது. இஸ்ரேலில், அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாலத்தீன பிரச்னை சமாளிக்கக் கூடிய ஒன்று தான் என்று நம்பினார். உண்மையான அச்சுறுத்தல் இரான் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார். காஸாவிற்கு நிதி வழங்க கத்தாரை நெதன்யாகு அனுமதித்திருந்தாலும், ஹமாஸுக்கு எதிரான அவரது தீவிரம் கொஞ்சமும் குறையவில்லை. வெளியுறவுக் கொள்கையில் அவரது உண்மையான சிக்கல்களுக்கு முன்னுரிமை கொடுக்க இது அவருக்கு உதவியது. அதாவது, இரானை எதிர்கொள்வது மற்றும் சௌதி அரேபியாவுடனான உ…
-
- 1 reply
- 230 views
- 1 follower
-
-
27 JUL, 2025 | 10:52 AM அவசரமருத்துவ உதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கும் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமெர் காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை பிரிட்டன் வான்வழியாக போடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி ஜேர்மன் சான்சிலர் ஆகியொருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது இதனை தெரிவித்துள்ள அவர் அவசரகிசிச்சை தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து அகற்றுவது மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் போடுவது போன்றவற்றை ஜோர்தானுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இஸ்ரேல் காசாவில் ஏற்படுத்தியுள்ள பட்டினி நிலை பயங்கரமானதாக காணப்படுக…
-
-
- 2 replies
- 209 views
- 1 follower
-
-
காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காஸாவை பஞ்சம் வாட்டி வதைப்பதாக எச்சரிக்கைகள் வந்துள்ளதால் சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது. கட்டுரை தகவல் மையா டேவிஸ் பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது. உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், "ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம், காஸாவில் பஞ்சம் குறித்து தீவிரமான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வ…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
AI மூலம் வங்கிப் பாதுகாப்பு முறியடிக்கப்படும் அபாயம்! தகவல் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சியை AI தொழில் நுட்பம் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், கல்வி, மென்பொருள் என பலதரப்பட்ட துறைகளில் AI ஆதிக்கம் செலுத்தி வருகிறது . இந்நிலையில்” இனி வரும் காலங்களில் (AI) தொழில்நுட்பம் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தலாம்” என Chat GPT யின் தாய் நிறுவனமான ஓபன் AI நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி சாம் ஆல்ட்மன்( Sam Altman) ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வரும் காலங்களில், வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களை AI முறியடிக்கலாம். அதன் மூலம் பணம் திருடப்படலாம். அத்துடன் அடையாள திருட்டு, இணைய மோசடி, போலி செய்திகள் போன்றனவும் அதிகரிக்கும் அபாய…
-
- 0 replies
- 144 views
-
-
25 JUL, 2025 | 06:44 PM ஆர்.சேதுராமன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக விளங்கிய, உலகின் முதல்நிலை கோடீஸ்வரர் இலோன் மஸ்க், 'அமெரிக்கா கட்சி' எனும் புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்நாட்டு அரசியலில் மஸ்க்கின் கட்சி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளன. 'டெஸ்லா' மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனம், 'ஸ்பேஸ் எக்ஸ்' எனும் ரொக்கெட் தயாரிப்பு மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் 'எக்ஸ்' சமூக வலைதள நிறுவனங்களின் அதிபரான இலோன் மஸ்க், உலகின் முதல்நிலை கோடீஸ்வரராக விளங்குகிறார். அவரின் செல்வ மதிப்பு 400 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் கட்டுரை தகவல் பிரவீன் பிபிசி செய்தியாளர் 29 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரும் ஆறு பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஜூலை 24ஆம் தேதி கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டிஷ் கார்கள் மற்றும் விஸ்கி இந்தியாவில் மலிவாகக் கிடைக்கும். இந்திய உடைகளும் ஆபரணங்களும் பிரிட்டனில் மலிவாகக் கிடைக்கும். இந்தியாவும் பிரிட்டனும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் பயனடையும் என நம்புகின்றன. ஆனால் இந்த ஒப்பந்தத்தால் யார் அதிக லாபம் அடைவார்கள் என்பதுதான் தற்போது எழுகின்ற கேள்வி. பிரிட்டன் உடனான வர்த்தக…
-
- 1 reply
- 172 views
- 1 follower
-
-
25 JUL, 2025 | 10:18 AM பாலஸ்தீன தேசத்தை பிரான்ஸ் அங்கீகரிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் நியுயோர்க்கில் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220895
-
-
- 10 replies
- 431 views
- 1 follower
-
-
ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்து! 49 பேர் உயிரிழப்பு! ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கி சென்ற பயணிகள் விமானத்தில் 5 குழந்தைகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான நிலையத்தை அண்மித்த போது , அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதுடன் திடீரென ரேடாரிலிருந்து அந்த விமானம் காணாமல்போனதாக விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழப…
-
- 1 reply
- 140 views
-
-
துருக்கியில் காட்டுத் தீ! 10 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு. துருக்கியின் மத்திய பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் மாகாணத்தின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 வீரர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யுமக்லி இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் “தீ அணைக்கும் பணியின் போது திடீரென காற்றின் திசை மாற்றமடைந்தது. இதனால் மொத்தம் 24 வீரர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். அதில் 10 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்தார். தற்போது மத்திய மற்றும் மேற்…
-
- 0 replies
- 147 views
-
-
காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம் - உதவிக்காக காத்திருந்த 31 பலஸ்தீனர்கள் பலி sachinthaJuly 24, 2025 காசாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் நிலையில், அங்கு குண்டு வீச்சுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கு அப்பால் பட்டினியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. காசாவுக்காக உதவி விநியோகங்களை இஸ்ரேல் முற்றாக கட்டுப்படுத்தி வருவதோடு கடந்த மார்…
-
- 0 replies
- 139 views
-
-
மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காசா - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Published By: Rajeeban 24 Jul, 2025 | 10:54 AM மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி நிலையால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். பெரும்பட்டினி நிலை என இதனை அழைப்பதை தவிர வேறு எப்படி இதனை அழைப்பீர்கள் என எனக்கு தெரியாது,ஆனால் இது மனிதனால் உருவாக்கப்பட்டது அது மிகத்தெளிவான விடயம் என அவர் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான உணவுவிநியோகம் மக்கள் உயிர்வாழ…
-
- 1 reply
- 161 views
- 1 follower
-
-
அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.. மோதலுக்கு காரணமான கோவில் - பின்னணி. பாங்காக்: தாய்லாந்து - கம்போடியா இடையே இன்று திடீரென்று மோதல் ஏற்பட்டது. இருநாட்டு வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக்கொண்டனர். பீரங்கி குண்டுகளால் தாக்கி கொண்ட நிலையில் போர் வெடிக்கிறதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு கோவில் ஒன்று தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தாய்லாந்தும், கம்போடியாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் தாய்லநாந்தின் வடகிழக்குபகுதியில் உள்ள சுரீன் மாகாணத்தில் பிரசாத் தா மவுன் தாம் எனும் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந…
-
-
- 20 replies
- 1k views
- 1 follower
-
-
23 ஜூலை 2025 விண்வெளியின் விளிம்பில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகசம் செய்து உலக சாதனை படைத்த இத்தாலியைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்பவர் உயிரிழந்தார். 56 வயதான இவர், கிழக்கு மார்ச்சே பகுதியில் உள்ள போர்டோ சாண்ட் எல்பிடியா என்ற கிராமத்தின் அருகே பாரா-கிளைடிங் செய்து கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டு, உணவகம் ஒன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து, போர்டோ சாண்ட் எல்பிடியா கிராமத்தின் மேயர் மிஸிமில்லியானோ சியார்பெல்லா, வானில் பறக்கும் போது இவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றார். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2012ம் ஆண்டு 1,28,000 அடி உயரத்தி…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
"ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரே கேள்வி மீண்டும் மீண்டும் காசாவில் எதிரொலிக்கின்றது; இன்று எனக்கு உணவு கிடைக்குமா ?; உணவுக்காக சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் குழந்தைகள்" - பரவும் பட்டினிநிலை குறித்து மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 12:54 PM காசாவின் பல பகுதிகளிற்கு பட்டினிநிலை பரவ ஆரம்பித்துள்ளது என நூற்றிற்கும் மேற்பட்ட மனிதாபிமான அமைப்புகள் கூட்டாக எச்சரித்துள்ளன. சேவ் த சில்ரன் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. பாலஸ்தீனியர்கள் நம்பிக்கை மற்றும் மனவேதனையின் பிடியில் சிக்குண்டுள்ளனர். அவர்கள் யுத்தநிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள்…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
"என்னிடம் இனிமேலும் ஊடக பணியில் ஈடுபடுவதற்கான வலு இல்லை, எனது உடல் மெலிந்து விட்டது ; காசாவிலிருந்து ஒரு ஊடகவியலாளர் " - உடனடி தலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள் ஏஎவ்பி Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 11:17 AM காசாவில் எஞ்சியுள்ள ஊடகவியலாளர்கள் மரணிக்கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என ஏஎவ்பி ஊடகவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடனடிதலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள் என அவர்கள் எச்சரித்துள்ளனர். யுத்தத்தின் கோரபிடியில் சிக்குண்டுள்ள காசாவிற்கு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி மறுத்து வரும் நிலையில் ரொய்ட்டர்ஸ் ஏஎவ்பி போன்ற நிறுவனங்கள் காசாவில் உள்ள உள்ளுர…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
22 JUL, 2025 | 01:26 PM இஸ்ரேலிய படையினர் தனது பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேல் தனது பண்டகசாலை மீது விமானதாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தனது பணியாளர்களின் வீடுகளையும் இலக்குவைத்தது, இதனால் பெரும் சேதமேற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. பெண்களும் குழந்தைகளும் மோதல் இடம்பெறும் பகுதியை நோக்கி கால்நடையாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். டெய்ர் அல்பலாவில் இஸ்ரேல் மேற்கொண்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆண்பணியாளர்கள் அவர்களது குடும்பத்தவர்களை கைதுசெய்து அவர்களிற்கு கைவிலங்கிட்ட இஸ்ரேலிய படையினர் அந்த இடத்தில…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் ! காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காசாவின் முக்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள், இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. நிலைமை சீராகாவிட்டால் ‘தக்க நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்த நாடுகள் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் அமெரிக்கா, இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடாக …
-
- 0 replies
- 192 views
-
-
காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் - உலக நாடுகள் கடும் கண்டனம் - யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் 22 Jul, 2025 | 11:25 AM காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள் யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட 25 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். காசா மக்களின் துயரங்கள் முன்னர் இல்லாத அழவிற்கு தீவிரமடைந்துள்ளன என தெரிவித்துள்ள அவர்கள்அடிப்படை தேவைகளான உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதையும்,மிகச்சிறிய அளவில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்ப…
-
- 0 replies
- 69 views
-