உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26870 topics in this forum
-
சதாம் ஹூசேனின் சித்திரவதை முகாமில் பணியாற்றிய மருத்துவருக்கு பிரித்தானியாவில் அடைக்கலம் ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேன் காலத்தில் சித்திரவதை முகாமில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கு பிரித்தானியா அடைக்கலம் அளித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சதாம் ஹூசைனின் சித்திரவதை முகாம் ஒன்றில், மருத்துவராக செயல்பட்ட 54 வயதான MAB என அறியப்படும் ஒருவருக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் மீது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு துணை போனார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டு லிபியாவிற்கு குடிபெயர்ந்து அங்கிருந்து கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியேறினார். தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு பிரித்தானியா அரசாங்கத்திடம்…
-
- 1 reply
- 478 views
-
-
காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து லண்டனில் பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டத்தில், அவமதிக்கப்பட்ட தேசிய கொடியை கூட்டத்துக்குள் புகுந்து பறிமுதல்செய்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி லண்டனில் இந்தியாவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானியர்கள் பலரும் கலந்துகொண்டனர். லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷன் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். போராட்டத்தில் முட்டை, வாட்டர் பாட்டில்கள் வீசப்பட்டன. அதேபோல, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் கொடிகளை கையிலெந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
6 ஆண்டுகளாக சிறை அருகே தடுப்பு முகாமில் வாடும் ஆவுஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகள் ஆவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பப்பு நியூ கினியாவுக்கு உட்பட்ட மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் அத்தீவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள சிறையின் அருகே இத்தடுப்பு முகாம் அமைந்துள்ள நிலையில், இம்முகாம் ஆவுஸ்திரேலியாவின் பணத்தில் கட்டப்பட்டது என்கிறார் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல். இதற்காக ஆவுஸ்திரேலியா 20 மில்லியன் டொலர்கள் கொடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ள…
-
- 1 reply
- 575 views
-
-
மெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய 65 பேர் கைது..! மெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை மற்றும் பங்களாதேஷை சேர்ந்த 65 பேரை அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி, கத்தாரிலிருந்து பயணத்தை ஆரம்பித்த இவர்கள் முதலில் துருக்கிக்கும், பின்னர் தென் அமெரிக்காவுக்கும் அதன் பின் கொலம்பியாவிற்கும் சென்றுள்ளனர். அங்கிருந்து ஈக்வடார், பனாமா மற்றும் குவாத்மாலா மாநிலங்கள் வழியாகவே குறித்த நபர்கள் மெக்ஸிகோவுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/62840
-
- 0 replies
- 369 views
-
-
திருமண விருந்தில் குண்டுத்தாக்குதல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற திருமண விருந்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதுடன், 182 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது. ஆரம்பத்தில் குறித்த தாக்குதல் குண்டுத்தாக்குதல் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் என்பது கண்டறிப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பேற்க தலிபான் பயங்கரவாதிகள் மறுப்பு தெரிவித…
-
- 0 replies
- 353 views
-
-
இஸ்ரேல் அனுமதியை நிராகரித்த அமெரிக்க பெண் எம்.பி. அமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.யாக இருப்பவர், ரஷிடா ட்லைப். இவரும் மற்றொரு எம்.பி.யான இல்ஹான் ஒமரும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். இவர்கள் அடுத்த வாரம் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள இருந்தனர். ஆனால் அவர்களுக்கு விசா அளிக்க இஸ்ரேல் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக மேற்கு கரை பகுதியில் வசித்து வருகிற தனது பாட்டியை பார்க்க விரும்பிய ரஷிடா ட்லைப்புக்கு விசா மறுக்கப்பட்டது சர்வதேச அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டு, ரஷிடா ட்லைப் மேற்கு கரை பகுதி…
-
- 0 replies
- 509 views
-
-
ஹொங்கொங் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது… August 13, 2019 ஹொங் கொங் விமான நிலையம் இன்று (13.08.19) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவாயிலை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நேற்றைய தினம், விமான நிலையம் மூடப்பட்டது. இதனையடுத்து, சுமார் 200 விமானங்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. இந்தநிலையில், இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு இணையானது என தெரிவித்துள்ள சீனா, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. உலகின் மிகவும் பரப்பரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹொங்கொங் விமான நிலையம் திடிரென மூடப்பட்டதால், பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. …
-
- 2 replies
- 922 views
-
-
இந்தியாவுக்கு நேரம் பார்த்து ஆப்பு வைத்த அமெரிக்கா... அதிபர் டிரம்ப் அதிரடி..! இந்தியா, சீனா இனி வளரும் நாடுகள் இல்லை, உலக வர்த்தக அமைப்பின் சலுகைகள் இனி அவற்றுக்கு கிடைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கை கோட்பாடுகளில் அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதியாக உள்ளார். அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டி வந்தார். இதனால், இந்தியாவை `வரிகளின் அரசன்’ என்று கூட விமர்சித்தார். அதே போன்று, சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது அதிகளவு வரி விதிப்பதாக அவர் கூறினார். அதனால், சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை அதிகரித்தார். இதற்கு பதிலடியாக சீ…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஐ.நா.சபையில் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளது. காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவின் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஐ.நாவின் உதவியை பாகிஸ்தான் நாடி இருந்தது.ஐ.நாவின் உதவியை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்டும்படி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி கடிதம் எழுதி இருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று நாளை இந்த கூட்டம் கூட உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியா காஷ்மீரில் நிலவும் மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளும் விவாதிக்கப்பட உள்ளன. இது அரசு நடவடிக்கைகளில் பாகிஸ்தான…
-
- 1 reply
- 428 views
-
-
ஹொங்கொங் எல்லையில் படையினரை குவிக்கும் சீனா- வெளியாகின செய்மதி படங்கள் ஹொங்கொங்குடனான தனது எல்லையில் சீனா தனது படையினரை குவிப்பதை காண்பிக்கும் செய்மதி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஹொங்கொங் எல்லையில் உள்ள சென்ஜென் என்ற நகரில் உள்ள விளையாட்டரங்கில் சீனாவின் இராணுவ வாகனங்கள் பெருமளவில் காணப்படுவதை செய்மதிப்படங்கள் காண்பித்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களிற்கு மேல் கடும் ஆர்ப்பாட்டங்களை சந்தித்து வரும் ஹொங்கொங்கிற்கு வடக்கே உள்ள இந்த நகரின் உதைபாந்தாட்ட அரங்கில் 100ற்கும் மேற்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் காணப்படுகின்றன. மக்சார் டெக்னோலஜிஸ் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் இந்த செய்மதி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை சிஎன்என்னும் உறுதி செ…
-
- 0 replies
- 529 views
-
-
தென் கொரியாவுடனான உறவு முறிந்தது – வட கொரியா! தென் கொரியாவுடனான உறவு முறிந்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் நேற்று(வியாழக்கிழமை) ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் முற்றிலும் தவறான நடவடிக்கைகளே இருநாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முறிவுக்கு காரணம் எனவும் வட கொரியா கூறியுள்ளது. இதற்கிடையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வட கொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆறாவது பரிசோதனையாக இது கருதப்படுகிறது. வட கொரியா சுமார் ஆ…
-
- 0 replies
- 385 views
-
-
லண்டன்: ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி, அரபு நாட்டு கப்பலான எம்.டி. ரியாவை இம்மாத தொடக்கத்தில் ஈரான் அதிகாரிகள் சிறைப்பிடித்தனர். இந்த கப்பலில் மொத்தம் 12 இந்தியர்கள் பணியாற்றி வந்த நிலையில், அவர்களும் கப்பலோடு சிறைபிடிக்கப்பட்டனர். இதனால், சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என ஈரானிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து 9 இந்தியர்களை ஈரான் அரசு விடுவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஈரான் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பலை கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து சிறைப்பிடித்தது. இதற்கு பதிலடியாக, பாரசீக வளைகுடாவில் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் கடந்த 19ம் தேதி சென்று கொண்டிருந்த ப…
-
- 0 replies
- 312 views
-
-
லண்டனில், விம்பிள்டன் ரயில் நிலையத்தில் குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் நிதானம் இல்லாமல் ரயில் நிலையத்திற்குள் வந்த இளைஞர், 8 மற்றும் 9 நடைமேடைகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் சாவகாசமாக படுத்து உறங்கியுள்ளார். இதைக்கண்ட நடைமேடை பாதுகாவலர்கள், இளைஞரை எழுப்பி கண்டித்துள்ளனர். போதையில் எழுந்து நிற்க முடியாமல் திணறிய இளைஞர் நகர முடியாமல், மீண்டும் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. பின்னர், இளைஞனின் உடல் கருகி புகை வந்துள்ளது. தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் போக்குவரத்து பொலிசார் விரைந்துள்…
-
- 0 replies
- 613 views
-
-
பாரீஸ்: பிரான்சின் விலைமதிக்க முடியாத புராதனச் சின்னமான 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவலாயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம். உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் பாரீசில் அமைந்திருந்தாலும், நோட்ரே டேம் தேவாலயமே நினைவுச் சின்னமாக போற்றப்பட்டது. 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும், ஐரோப்பிய கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகள் கொண்ட இந்த தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக, 12வது நூற்றாண்டில் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட…
-
- 0 replies
- 323 views
-
-
சதீஷ் பார்த்திபன் கோலாலம்பூர், பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை ஜா…
-
- 0 replies
- 422 views
-
-
கனடாவானது மாகாண ரீதியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்காக 26.8 மில்லியன் கனேடிய டொலரை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ நேற்று முன்தினம் திங்கட்கிழமை அறிவித்துள்ளார். புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சட்ட உதவி சேவை யில் மாகாண ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துண்டிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடு செய்யும் முகமாக மேற்படி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கனடாவின் அதிக தொகையைக் கொண்ட மாகாணமான ஒன்ராறியோவின் முதலமைச்சர் டக் போர்ட் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான மேற்படி நிதியிடலுக்கு மத்திய அரசாங்கமே பொறுப்பு எனத் தெரிவித்து…
-
- 1 reply
- 414 views
-
-
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு ஊழல் வழக்கு விசாரணையில் கனடா சட்டத்தை மீறி உள்ளார் என்று நெறிமுறைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று கண்டுபிடித்துள்ளது. எஸ்.என்.சி லவாலின் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது செல்வாக்கு செலுத்த ஜஸ்டின் முயன்றதாக அந்த அமைப்பின் ஆணையர் கூறி உள்ளார். ஆணையரின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அதே சமயம் அவரது அறிக்கையின் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் அக்டோபரில் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் இந்த விசாரணை முடிவானது ஒரு பிரச்சனையாக ஜஸ்டினுக்கு உருவெடுக்கலாம். அது என்ன எஸ்.என்.சி லவாலின் விவகாரம்? எஸ்.என்.சி லவாலின் என்பது கனடா நாட்டைச் சேர்ந்த உலகின் மி…
-
- 0 replies
- 393 views
-
-
ஜேர்மனியில் குட்டிகளை ஈன்ற மூன்றே நாள்களில் அவற்றைக் கொன்று தின்ற தாய்ச் சிங்கம்! ஜேர்மனியிலுள்ள லெய்ப்ஸிக் (Leipzig) விலங்கியல் பூங்காவில், தான் ஈன்ற இரண்டு குட்டிகளை பிறந்து இரண்டே நாட்களில் தாய் சிங்கம் கொன்று தின்றுள்ளது. கிகலி (Kigali) என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பெண் சிங்கம், முதன்முறையாகக் குட்டிகளை ஈன்றது. அந்த விலங்கியல் பூங்காவில், கடந்த 15 ஆண்டுகளில், சிங்கக் குட்டிகள் பிறந்தது இதுவே முதன்முறையாகும். அந்தக் குட்டிகள் இவ்வாறு உயிரிழந்தமை விலங்கியல் பூங்கா ஊழியர்களிடையே கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, கிகலி குட்டிகளை ஈன்றது. ஆரம்பத்தில் பெண் சிங்கம் குட்டிகளை நன்றாகவே பராமரித்துப் பாலூட்டியது. ஆனால், திடீரென…
-
- 0 replies
- 548 views
-
-
நிரந்தர குடியுரிமைக்கான ‘கிரீன்கார்ட்’ பெற அதிக வருமானம் தேவை – ட்ரம்பின் புதிய விதிமுறை அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்காக வழங்கப்படும் ‘கிரீன்கார்ட்டை’ பெறுவதற்கு அதிகபட்ச வருமானம் தேவை என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கு மட்டுமே’ என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வருகிறார். இதனால் அவரது நிர்வாகம் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே, சட்டப்பூர்வமான குடியேற்றத்தை கட்டுப்படுத்தவும் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி பணியில் ஈடு…
-
- 0 replies
- 462 views
-
-
தங்களது வீசாக்களை நீடிப்பதையோ அல்லது நிரந்தர வதிவிட உரிமையையோ வறுமையான சட்டரீதியான அகதிகள் பெறுவதை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகமானது கடினமாக்கவுள்ளது. உணவுதவி அல்லது அரச வீட்டுத் திட்டம் போன்ற அரச சலுகைகளில் ஓராண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருக்கும் அகதிகளே இலக்கு வைக்கப்படவுள்ளனர். எதிர்காலத்தில் குறித்த அகதிகள் அரச உதவியில் தங்கியிருப்பார்கள் என அரசாங்கம் தீர்மானித்தால் அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படவுள்ளது. இந்நிலையில், குறித்த மாற்றமானது தன்னிறைவுக் கூறுகளை மீண்டும் அமுல்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், மத்திர அரசாங்கப் பதிவேட்டில் நேற்று முன்தினம் பிரசுரிக்கப்பட்டுள்ள குறித்த மாற்றமானது, இவ்வாண்ட…
-
- 0 replies
- 422 views
-
-
இணையத்தள வதந்திகளை நம்பி ஆற்று நீரை அருந்த வேண்டாம் – சுவிஸ் அரசு எச்சரிக்கை சுவிட்ஸர்லாந்தின் தலைநகர் பேர்ன்னுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலாப்பயணிகள், ஆரே நதியில் நீந்தும்போது அதன் நீரை அருந்த வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது. அண்மையில் சுவிட்ஸர்லாந்தின் சுற்றுலா இணையதளங்களில், பேர்னிலுள்ள ஆரே (Aare) நதியின் தண்ணீரை அப்படியே அருந்தலாம் என்றும், அது மிகவும் பாதுகாப்பானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், இணைய தகவல்களை நம்பி ஆற்று நீரை அருந்த வேண்டாம், அப்படி அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆரே (Aare) நதியில் தண்ணீர் மிக தூய்மையானதுதான், ஆனால் குடிக்கும் அளவிற்கு அது உகந்ததல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 470 views
-
-
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கத்திக்குத்தில் ஈடுபட்ட நபர் அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டுள்ளார். உடலின் பல பாகங்களில் இரத்தத்துடன் காணப்படும் அந்த நபர் அல்லாஹூ அக்பர் என கோசமிடுவதையும் என்னை சுடுங்கள் என ஆவேசமாக கூச்சலிடுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை இந்த சம்பவம் குறித்து தகவல்வெளியிட்டுள்ள காவல்துறையினர் கிங்ஸ்வீதியில் உள்ள மரயொங்கிலிருந்து தங்களிற்கு 21 வயது பெண்மணியொருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நபர் ஒருவர் பாரிய கத்தியுடன் காணப்படுகின்றார் என தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் அந்த பகுதியில் பாரிய குழப்பநிலை உருவானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் அந்த நபர் 41 வயது பெண்மணியை கத்தியால் குத்தியுள்…
-
- 0 replies
- 388 views
-
-
கடந்த இரண்டு வாரங்களிற்கு மேல் தாங்கள் தேடிவந்த இளைஞர்களின் உடல்களை மீட்டுள்ளதாக கனடாவின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய காவல்துறை அதிகாரியின் மகனையும் மகனின் அமெரிக்க நண்பியையும் கொலை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இளைஞர்களின் உடல்களையே மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நெல்சன் ஆற்றின் கரையில் உடல்களை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 19 வயது கம் மக்லியோட் பிரையர் ஸ்மெல்ஸ்கி ஆகியோரின் உடல்களையே காவல்துறையினர் மீட்டுள்ளனர். இவர்கள் கடந்த வாரம் வாகனமொன்றை திருடிய பகுதிக்கு அருகில் சடலங்களை காவல்துறையினர் மீட்டு;ள்ளனர். எனினும் இவர்கள் எப்படி உயிரிழந்தனர் என்பது குறித்த விபரங்களை அதிகார…
-
- 1 reply
- 932 views
-
-
பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி முதலீட்டு நிர்வாகிகளில் ஒருவரான ஜெப்ரே எப்ஸ்டெய்னின் உடல், சனிக்கிழைமை சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தமது சிறை அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருத்துப்படுகிறது. 2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஹொங்கொங்கில் ஜனநாயககோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காராகள் ஹொங்கொங்கின் சர்வதேச விமானநிலையத்திற்குள் மூன்று நாள் முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மதியம் முதல் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சர்வதேச விமானநிலையத்தின் உட்பகுதிக்குள் நுழைந்து வருகின்றனர். மேலும் விமானநிலையத்தில் காணப்படும் சுற்றுலாப்பயணிகளிற்கு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுபிரசுரங்களையும் வழங்கி வருகின்றனர். உலகின் மும்முரமான விமானநிலையங்களில்ஹொங்கொங் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த விமானநிலையத்தை பயன்படுத்துகின்றனர்.இதுதவிர 200 நகரங்கள…
-
- 2 replies
- 856 views
-