Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரோம்: கூட்டணிக்கு அளித்த ஆதரவு வாபஸ் பெற்றதால் இத்தாலி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இத்தாலியில் ஆளும் இடதுமுன்னணி பைவ் ஸ்டார் இயக்கம் கட்சி , வலது லீக் கட்சி உடன் இணைந்து கடந்த 14 மாதங்களுக்கு முன் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பிரதமராக இடது முன்னணி பைவ் ஸ்டார் இயக்க கட்சியின் கியூசெப் கான்ட்டே உள்ளார். துணை பிரதமராக வலது லீக் கட்சியின் மேட்டியோ சால்வினி உள்ளார். சமீப காலமாக கூட்டணி கட்சிகளிடையே கருத்துவேறுபாடு நிலவியதையடுத்து, ஆதரவை திரும்ப பெற்று கூட்டணியில் இருந்து விலகுவதாக மேட்டியோ சால்வினி அறிவித்தார்.இதையடுத்து பிரதமர் கியூசெப்பி கான்ட்டே பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் கான்டாவுக்கு பெரும்பான்மை இல்லாததால் தனது பதவியை …

    • 0 replies
    • 590 views
  2. ஓடர் செய்த உணவு வர தாமதமானதால் விடுதி ஊழியர் சுட்டுக்கொலை August 19, 2019 விடுதியில் ஓடர் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் ஒருவர் விடுதி ஊழியரை சுட்டுக்கொன்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் உள்ள மிஸ்ட்ரல் என்ற விடுதியிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உணவு வரத் தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் ஊழியரை அழைத்து, வாய் தகராறில் தர்க்கத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தின் எல்லைக்கு சென்ற அந்த வாடிக்கையாளர் துப்பாக்கியால் சுட்டதால் தோள்பட்டையில் காயமான 28 வயதான விடுதி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துளார். இதனையடுத்து வாடிக்கையாளர் அங்கிருந்து த…

  3. ருமேனியா மருத்துவமனையொன்றில், நோயாளர்கள் ஐவர் அடித்துக்கொலை! ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளர் ஒருவர் சக நோயாளிகளை தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தமை அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ருமேனியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சபோகா நகரில் தனியாருக்கு சொந்தமான (Sapoca psychiatric hospital) மனநல மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 15-ஆம் திகதி 38 வயதான ஒருவர் போதைப்பொருள் பாவனையில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சுயமாகவே மருத்துவமனைக்கு வந்தார். மன நலம் பாதிக்கப்பட்டிருந்த முதியவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த அ…

  4. சூடானில் பஷீரை பதவி கவிழ்த்த ஆளும் இராணுவத்திற்கும் ஜனநாயக ஆதரவு சிவில் அமைப்புக்கு இடையே ஆட்சி மாற்றத்திற்கான உடன்படிக்கை கைச்சாத்தான நிலையிலேயே இந்த வழக்கு விசாரணை ஆரம்பமாகியுள்ளது. 30 ஆண்டுகள் சூடானில் ஆட்சியில் இருந்த 75 வயதான பஷீர், மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடித்ததை அடுத்து கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி பதவி கவிழ்க்கப்பட்டார். சிறைப்பிடிக்கப்பட்ட பஷீர் வெளிநாட்டு நாணயத்தை வைத்திருப்பது, ஊழல் மற்றும் சட்டவிரோதமான முறையில் அன்பளிப்புகளை பெற்றது குறித்து கடந்த ஜுன் 16 ஆம் திகதி அரச வழங்கறிஞர் முன் தோன்யிருந்தார். இந்நிலையில் நீதி மற்றும் சட்ட விஞ்ஞான நிறுவகத்திற்கு நேற்று பாரிய இராணுவ பாதுகாப்புடன் பஷீர் தோன்றியதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்…

    • 0 replies
    • 577 views
  5. பிராந்திய விவகாரம் பற்றியும், இரு தரப்பு விவகாரம் பற்றியும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் அரைமணி நேரம் தொலைபேசியில் உரையாடியதாகத் தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. டிவிட்டரில் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ கணக்கில் இதுபற்றிப் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி, உரையாடல் இதமாகவும், இணக்கமாகவும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். பிராந்திய விவகாரம் பற்றிப் பேசும்போது, அதீத உணர்வெழுச்சியான பேச்சு, இந்திய எதிர்ப்பு வன்முறைகளைத் தூண்டுதல் ஆகியவற்றில் இந்தப் பிராந்தியத்தில் சில தலைவர்கள் ஈடுபடுவது அமைதிக்கு உகந்தது அல்ல என்று பிரதமர் தெரிவித்ததாக பிரதமரின் மற்றொரு டிவிட்டர் பதிவு தெரிவிக்கிறது. பிராந்திய விவகாரம் குறித்த…

    • 0 replies
    • 288 views
  6. சதாம் ஹூசேனின் சித்திரவதை முகாமில் பணியாற்றிய மருத்துவருக்கு பிரித்தானியாவில் அடைக்கலம் ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேன் காலத்தில் சித்திரவதை முகாமில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கு பிரித்தானியா அடைக்கலம் அளித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சதாம் ஹூசைனின் சித்திரவதை முகாம் ஒன்றில், மருத்துவராக செயல்பட்ட 54 வயதான MAB என அறியப்படும் ஒருவருக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் மீது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு துணை போனார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டு லிபியாவிற்கு குடிபெயர்ந்து அங்கிருந்து கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியேறினார். தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு பிரித்தானியா அரசாங்கத்திடம்…

    • 1 reply
    • 480 views
  7. காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து லண்டனில் பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டத்தில், அவமதிக்கப்பட்ட தேசிய கொடியை கூட்டத்துக்குள் புகுந்து பறிமுதல்செய்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி லண்டனில் இந்தியாவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானியர்கள் பலரும் கலந்துகொண்டனர். லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷன் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். போராட்டத்தில் முட்டை, வாட்டர் பாட்டில்கள் வீசப்பட்டன. அதேபோல, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் கொடிகளை கையிலெந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்…

    • 0 replies
    • 1.1k views
  8. 6 ஆண்டுகளாக சிறை அருகே தடுப்பு முகாமில் வாடும் ஆவுஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகள் ஆவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பப்பு நியூ கினியாவுக்கு உட்பட்ட மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் அத்தீவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள சிறையின் அருகே இத்தடுப்பு முகாம் அமைந்துள்ள நிலையில், இம்முகாம் ஆவுஸ்திரேலியாவின் பணத்தில் கட்டப்பட்டது என்கிறார் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல். இதற்காக ஆவுஸ்திரேலியா 20 மில்லியன் டொலர்கள் கொடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ள…

    • 1 reply
    • 577 views
  9. மெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய 65 பேர் கைது..! மெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை மற்றும் பங்களாதேஷை சேர்ந்த 65 பேரை அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி, கத்தாரிலிருந்து பயணத்தை ஆரம்பித்த இவர்கள் முதலில் துருக்கிக்கும், பின்னர் தென் அமெரிக்காவுக்கும் அதன் பின் கொலம்பியாவிற்கும் சென்றுள்ளனர். அங்கிருந்து ஈக்வடார், பனாமா மற்றும் குவாத்மாலா மாநிலங்கள் வழியாகவே குறித்த நபர்கள் மெக்ஸிகோவுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/62840

  10. திருமண விருந்தில் குண்டுத்தாக்குதல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற திருமண விருந்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதுடன், 182 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது. ஆரம்பத்தில் குறித்த தாக்குதல் குண்டுத்தாக்குதல் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் என்பது கண்டறிப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பேற்க தலிபான் பயங்கரவாதிகள் மறுப்பு தெரிவித…

  11. இஸ்ரேல் அனுமதியை நிராகரித்த அமெரிக்க பெண் எம்.பி. அமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.யாக இருப்பவர், ரஷிடா ட்லைப். இவரும் மற்றொரு எம்.பி.யான இல்ஹான் ஒமரும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். இவர்கள் அடுத்த வாரம் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள இருந்தனர். ஆனால் அவர்களுக்கு விசா அளிக்க இஸ்ரேல் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக மேற்கு கரை பகுதியில் வசித்து வருகிற தனது பாட்டியை பார்க்க விரும்பிய ரஷிடா ட்லைப்புக்கு விசா மறுக்கப்பட்டது சர்வதேச அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டு, ரஷிடா ட்லைப் மேற்கு கரை பகுதி…

    • 0 replies
    • 510 views
  12. ஹொங்கொங் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது… August 13, 2019 ஹொங் கொங் விமான நிலையம் இன்று (13.08.19) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவாயிலை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நேற்றைய தினம், விமான நிலையம் மூடப்பட்டது. இதனையடுத்து, சுமார் 200 விமானங்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. இந்தநிலையில், இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு இணையானது என தெரிவித்துள்ள சீனா, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. உலகின் மிகவும் பரப்பரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹொங்கொங் விமான நிலையம் திடிரென மூடப்பட்டதால், பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. …

    • 2 replies
    • 924 views
  13. இந்தியாவுக்கு நேரம் பார்த்து ஆப்பு வைத்த அமெரிக்கா... அதிபர் டிரம்ப் அதிரடி..! இந்தியா, சீனா இனி வளரும் நாடுகள் இல்லை, உலக வர்த்தக அமைப்பின் சலுகைகள் இனி அவற்றுக்கு கிடைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கை கோட்பாடுகளில் அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதியாக உள்ளார். அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டி வந்தார். இதனால், இந்தியாவை `வரிகளின் அரசன்’ என்று கூட விமர்சித்தார். அதே போன்று, சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது அதிகளவு வரி விதிப்பதாக அவர் கூறினார். அதனால், சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை அதிகரித்தார். இதற்கு பதிலடியாக சீ…

  14. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஐ.நா.சபையில் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளது. காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவின் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஐ.நாவின் உதவியை பாகிஸ்தான் நாடி இருந்தது.ஐ.நாவின் உதவியை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்டும்படி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி கடிதம் எழுதி இருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று நாளை இந்த கூட்டம் கூட உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியா காஷ்மீரில் நிலவும் மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளும் விவாதிக்கப்பட உள்ளன. இது அரசு நடவடிக்கைகளில் பாகிஸ்தான…

    • 1 reply
    • 429 views
  15. ஹொங்கொங் எல்லையில் படையினரை குவிக்கும் சீனா- வெளியாகின செய்மதி படங்கள் ஹொங்கொங்குடனான தனது எல்லையில் சீனா தனது படையினரை குவிப்பதை காண்பிக்கும் செய்மதி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஹொங்கொங் எல்லையில் உள்ள சென்ஜென் என்ற நகரில் உள்ள விளையாட்டரங்கில் சீனாவின் இராணுவ வாகனங்கள் பெருமளவில் காணப்படுவதை செய்மதிப்படங்கள் காண்பித்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களிற்கு மேல் கடும் ஆர்ப்பாட்டங்களை சந்தித்து வரும் ஹொங்கொங்கிற்கு வடக்கே உள்ள இந்த நகரின் உதைபாந்தாட்ட அரங்கில் 100ற்கும் மேற்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் காணப்படுகின்றன. மக்சார் டெக்னோலஜிஸ் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் இந்த செய்மதி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை சிஎன்என்னும் உறுதி செ…

  16. தென் கொரியாவுடனான உறவு முறிந்தது – வட கொரியா! தென் கொரியாவுடனான உறவு முறிந்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் நேற்று(வியாழக்கிழமை) ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் முற்றிலும் தவறான நடவடிக்கைகளே இருநாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முறிவுக்கு காரணம் எனவும் வட கொரியா கூறியுள்ளது. இதற்கிடையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வட கொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆறாவது பரிசோதனையாக இது கருதப்படுகிறது. வட கொரியா சுமார் ஆ…

  17. லண்டன்: ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி, அரபு நாட்டு கப்பலான எம்.டி. ரியாவை இம்மாத தொடக்கத்தில் ஈரான் அதிகாரிகள் சிறைப்பிடித்தனர். இந்த கப்பலில் மொத்தம் 12 இந்தியர்கள் பணியாற்றி வந்த நிலையில், அவர்களும் கப்பலோடு சிறைபிடிக்கப்பட்டனர். இதனால், சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என ஈரானிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து 9 இந்தியர்களை ஈரான் அரசு விடுவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஈரான் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பலை கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து சிறைப்பிடித்தது. இதற்கு பதிலடியாக, பாரசீக வளைகுடாவில் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் கடந்த 19ம் தேதி சென்று கொண்டிருந்த ப…

    • 0 replies
    • 312 views
  18. லண்டனில், விம்பிள்டன் ரயில் நிலையத்தில் குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் நிதானம் இல்லாமல் ரயில் நிலையத்திற்குள் வந்த இளைஞர், 8 மற்றும் 9 நடைமேடைகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் சாவகாசமாக படுத்து உறங்கியுள்ளார். இதைக்கண்ட நடைமேடை பாதுகாவலர்கள், இளைஞரை எழுப்பி கண்டித்துள்ளனர். போதையில் எழுந்து நிற்க முடியாமல் திணறிய இளைஞர் நகர முடியாமல், மீண்டும் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. பின்னர், இளைஞனின் உடல் கருகி புகை வந்துள்ளது. தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் போக்குவரத்து பொலிசார் விரைந்துள்…

    • 0 replies
    • 614 views
  19. பாரீஸ்: பிரான்சின் விலைமதிக்க முடியாத புராதனச் சின்னமான 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவலாயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம். உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் பாரீசில் அமைந்திருந்தாலும், நோட்ரே டேம் தேவாலயமே நினைவுச் சின்னமாக போற்றப்பட்டது. 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும், ஐரோப்பிய கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகள் கொண்ட இந்த தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக, 12வது நூற்றாண்டில் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட…

    • 0 replies
    • 323 views
  20. சதீஷ் பார்த்திபன் கோலாலம்பூர், பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை ஜா…

  21. கன­டா­வா­னது மாகாண ரீதியில் புக­லி­டக் ­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சட்ட உத­வி­களை வழங்­கு­வ­தற்­காக 26.8 மில்­லியன் கனே­டிய டொலரை ஒதுக்­கீடு செய்­ய­வுள்­ள­தாக அந்நாட்டுப் பிர­தமர் ஜஸ்டின் ரூடோ நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை அறி­வித்­துள்ளார். புக­லி­டக்கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் சட்ட உதவி சேவை யில் மாகாண ரீதி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட துண்­டிப்பால் ஏற்­பட்­டுள்ள பாதிப்பை ஈடு­ செய்யும் முக­மாக மேற்­படி தொகை ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. கன­டாவின் அதிக தொகையைக் கொண்ட மாகா­ண­மான ஒன்­ராறியோவின் முத­ல­மைச்சர் டக் போர்ட் புக­லி­டக் ­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான மேற்­படி நிதி­யி­ட­லுக்கு மத்­திய அர­சாங்­கமே பொறு­ப்பு எனத் தெரி­வித்து…

    • 1 reply
    • 414 views
  22. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு ஊழல் வழக்கு விசாரணையில் கனடா சட்டத்தை மீறி உள்ளார் என்று நெறிமுறைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று கண்டுபிடித்துள்ளது. எஸ்.என்.சி லவாலின் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது செல்வாக்கு செலுத்த ஜஸ்டின் முயன்றதாக அந்த அமைப்பின் ஆணையர் கூறி உள்ளார். ஆணையரின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அதே சமயம் அவரது அறிக்கையின் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் அக்டோபரில் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் இந்த விசாரணை முடிவானது ஒரு பிரச்சனையாக ஜஸ்டினுக்கு உருவெடுக்கலாம். அது என்ன எஸ்.என்.சி லவாலின் விவகாரம்? எஸ்.என்.சி லவாலின் என்பது கனடா நாட்டைச் சேர்ந்த உலகின் மி…

    • 0 replies
    • 393 views
  23. ஜேர்மனியில் குட்டிகளை ஈன்ற மூன்றே நாள்களில் அவற்றைக் கொன்று தின்ற தாய்ச் சிங்கம்! ஜேர்மனியிலுள்ள லெய்ப்ஸிக் (Leipzig) விலங்கியல் பூங்காவில், தான் ஈன்ற இரண்டு குட்டிகளை பிறந்து இரண்டே நாட்களில் தாய் சிங்கம் கொன்று தின்றுள்ளது. கிகலி (Kigali) என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பெண் சிங்கம், முதன்முறையாகக் குட்டிகளை ஈன்றது. அந்த விலங்கியல் பூங்காவில், கடந்த 15 ஆண்டுகளில், சிங்கக் குட்டிகள் பிறந்தது இதுவே முதன்முறையாகும். அந்தக் குட்டிகள் இவ்வாறு உயிரிழந்தமை விலங்கியல் பூங்கா ஊழியர்களிடையே கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, கிகலி குட்டிகளை ஈன்றது. ஆரம்பத்தில் பெண் சிங்கம் குட்டிகளை நன்றாகவே பராமரித்துப் பாலூட்டியது. ஆனால், திடீரென…

  24. நிரந்தர குடியுரிமைக்கான ‘கிரீன்கார்ட்’ பெற அதிக வருமானம் தேவை – ட்ரம்பின் புதிய விதிமுறை அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்காக வழங்கப்படும் ‘கிரீன்கார்ட்டை’ பெறுவதற்கு அதிகபட்ச வருமானம் தேவை என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கு மட்டுமே’ என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வருகிறார். இதனால் அவரது நிர்வாகம் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே, சட்டப்பூர்வமான குடியேற்றத்தை கட்டுப்படுத்தவும் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி பணியில் ஈடு…

  25. தங்களது வீசாக்களை நீடிப்பதையோ அல்லது நிரந்தர வதிவிட உரிமையையோ வறுமையான சட்டரீதியான அகதிகள் பெறுவதை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகமானது கடினமாக்கவுள்ளது. உணவுதவி அல்லது அரச வீட்டுத் திட்டம் போன்ற அரச சலுகைகளில் ஓராண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருக்கும் அகதிகளே இலக்கு வைக்கப்படவுள்ளனர். எதிர்காலத்தில் குறித்த அகதிகள் அரச உதவியில் தங்கியிருப்பார்கள் என அரசாங்கம் தீர்மானித்தால் அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படவுள்ளது. இந்நிலையில், குறித்த மாற்றமானது தன்னிறைவுக் கூறுகளை மீண்டும் அமுல்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், மத்திர அரசாங்கப் பதிவேட்டில் நேற்று முன்தினம் பிரசுரிக்கப்பட்டுள்ள குறித்த மாற்றமானது, இவ்வாண்ட…

    • 0 replies
    • 423 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.