Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை : டிரம்ப் ஆலோசகர் திட்டவட்டம் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சிரியாவில் இருந்து தனது நாட்டு படைகள் வெளியேறும் என்று அறிவித்தார். இது சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகளுடன் இணைந்து சண்டையிட்டு வரும் குர்து போராளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் நேற்று முன்தினம் துருக்கி அரசுடன் ஒரு புதிய ஒப்பந்தம் செய்து கொண்டது. அதில் ‘சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினரை தோற்கடிக்கும் வரை அமெரிக்க படை…

  2. ஈரானில் கடுமையான நிலநடுக்கம் – 75 பேர் காயம் January 8, 2019 ஈரானின் ஜர்மான்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன் நில நடுக்கத்க்கு பின்னர் தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைகள் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தியதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதனால் மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கம் காரணமாக அதிகளவான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந…

  3. உலக வங்கியின் தலைவர் பதவிவிலகுவதாக அறிவிப்பு January 8, 2019 அமெரிக்காவின் வோஷிங்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் (Jim Yong Kim) பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார். பன்முக நிதி நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கிற உலகின் மிகப்பெரிய வங்கியான உலக வங்கியின் தலைவராக எப்போதுமே அமெரிக்கக் குடியுரிமை பெற்ற நபரை மட்டுமே அமெரிக்கா பரிந்துரைத்து வருகிறது. அந்தவகையில் 58 வயதான ஜிம் யாங் கிம். இ அமெரிக்கக் குடியுரிமை பெற்ற தென்கொரிய நாட்டைச் சேர்ந்தவராவார். கடந்த ஆறு வருடங்களாக உலக வங்கியின் தலைவராகச் செயல்பட்டு வரும் இவரின் பதவி காலம் 2022ஆம் ஆண்டு வரையில் உள்ள நிலையில் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகத…

  4. கிம் ஜாங் உன், ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனா சென்றுள்ளார்.. January 8, 2019 வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது நேற்று திங்கட்கிழமை அவர் சீனாவுக்கு புறப்பட்டதாகவும் சீனாவில் ஜனவரி 10 ம்திகதி வரை தங்கியருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதிக்கிடையே இரண்டாவது உச்சி மாநாடு நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த பயணச் செய்தி வந்துள்ளது. பாதுகாப்பு வசதிகளுடனும் வேறு சில சிரேஸ்ட வட கொரிய அதிகாரிகளுடனும் அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வர…

  5. சீனாவிலுள்ள இஸ்லாமியர்களுக்கு அமுலாகும் புதிய சட்டம்! சீனாவில் வசித்துவரும் முஸ்லிம்களை சீன கலாச்சாரத்திற்கு மாற்றும் வகையிலான புதிய சட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அதிகாரப்பூர்வ ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழ் இதுதொடர்பிலான தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவின் மேற்கு பிராந்தியத்திலுள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் அண்மைக்காலமாக சில முக்கிய உரிமைகளை வழங்குமாறு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்திருந்தது. எனினும் இதை சீன அரசாங்கம் இதனை மறுத்திருந்தது. இ…

  6. 2019 ஆம் ஆண்டில் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியல்! சர்வதேச மீட்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டில் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள முதல் பத்து நாடுகளின் பட்டியலில் யெமன், கொங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. போர்கள், பஞ்சம் மற்றும் பிற பேரழிவுகள் பல நாடுகளிலும் அதிகரித்து வரும் நிலையில் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு மற்றுமொரு கடினமான ஆண்டாக 2019 அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பட்டியலிலுள்ள மற்றைய ஏழு நாடுகளாக ஆப்கானிஸ்தான், வெனிசுவேலா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சிரியா, நைஜீரியா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் சர்வதேச மீட்புக் குழுவால் பெயரிடப்பட்டுள்…

  7. உள்நாட்டு வியாபாரிகள் வீணா போகணுமா?

    • 2 replies
    • 785 views
  8. சீன முஸ்லீம்களை சீனக் கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிப்பு… January 7, 2019 சீனாவில் வாழும் முஸ்லிம் மக்களை சீனக் கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கின்ற நிலையில் அவர்கள் சில உரிமைகள் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிகள் தடுப்பு காவல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அண்மையில் தெரிவித்திருந்த போதும் இதனை சீனா மறுத்திருந்தது மேலும் சீனாவில் சில பகுதிகளில் நோன்பிருப்பது, தொழுகை நடத்துவது, நீளமாக தாடி வளர்ப்பது, முகத்தை மறைத்து ஹிஜாப அணிவது…

  9. மஞ்சள் அங்கி போராட்டம் பற்றி

    • 0 replies
    • 702 views
  10. 18 வருடங்களிற்கு முன்னர் கடற்படை கப்பல் மீது தாக்குதல் - பழி தீர்த்தது அமெரிக்கா அமெரிக்க கடற்படைகப்பல் மீது 18 வருடங்களிற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யேமனில் இடம்பெற்ற விமானதாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. யுஎஸ்எஸ்கோல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான அல்ஹைடா அமைப்பை சேர்ந்த ஜமல் அல் படாவி என்பவரே கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. 2000 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ம் திகதி யேமனை சேர்ந்த இரு தற்கொலை குண்டுதாரிகள் அமெரிக்க கடற்படையின் கப்பல் மீது சிறிய படகை பயன்படுத்தி தற்கொலை தாக்குதலை மேற்கொண்டதில் 17 கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் காயமடைந்தனர் யேமனின் ஏ…

  11. இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்! இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா கடலுக்கடியில் சுமார் 108 மைல் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர் என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இதற்கு முன்னர் நிலநடுக்கத்தின் அளவு 7.0 அளவு ரிச்ட்டரில் பதிவாகியதாகவும் புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என பசிபிக் சுனாமி …

  12. படத்தின் காப்புரிமை Getty Images தங்களின் விவாகரத்து தகவல்களை பெண்கள் அறியமுடியாமல் போவதை தடுக்க, சௌதி அரேபியா புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இன்று (ஞாயிறு) முதல், விவாகரத்து வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது குறித்த தகவலை குறுஞ்செய்தியாக பெண்களுக்கு நீதிமன்றங்கள் அனுப்பி வைக்கும். இத்தகைய நடவடிக்கைகள், மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின், `ரகசிய விவாகரத்துகளை` தடுக்கும் என்று உள்ளூர் பெண் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர் …

  13. Image caption விபத்து நடந்த ஆற்றுப்படுகை ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்துள்ளதில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குழந்தைகளும் அடக்கம். ஆஃப்கனின் வடகிழக்கில் உள்ள பாதக்ஷான் மாகாணத்தின் கோகிஸ்தான் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அந்த மாவட்டத் தலைமை நிர்வாக அதிகாரி மொகமது ரஸ்தம் ராஹி கூறியுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது. தகவல் தெரிந்த உடனேயே அருகில் இருந்த கிராமவாசிகள், உடனடியாக மீட்புப் பணிகளைத் தொ…

  14. பிலிப்பைன்ஸ் வெள்ளப்பெருக்கு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு! பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இதில் அங்குள்ள 300 இற்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. அத்துடன், ஒரு இலட்சத்து 52 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்…

  15. பென்டகனின் மூன்றாவது முக்கிய அதிகாரி இராஜிநாமா! அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் அலுவலக தலைமை நிர்வாகி ரியர் அட்மிரல் கெவின் ஸ்வீனே இராஜிநாமா செய்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் இராஜிநாமா செய்து ஒருமாத காலத்தில் கெவின் தமது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். தமது இராஜிநாமா தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கெவின், அரச துறையிலிருந்து விலகி தனியார் துறைக்குச் செல்வதற்கான சரியான தருணம் வந்துவிட்டதென கூறியுள்ளார். சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்களை மீளப் பெறவேண்டி ஏற்படுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த பின்னர், பென்டகனிலிருந்து விலகிச் செல்லும் மூன்றாவது சிரேஷ்ட அதிகாரி இவரென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ஆம் ஆண்டு பென்…

  16. உலகின் மிக்பெரிய பனித்திருவிழா வாணவேடிக்கையுடன் ஆரம்பம்! உலகின் மிகப்பெரிய பனித் திருவிழா சீனாவின் ஹர்பின் நகரில் வாணவேடிக்கைகளுடன் ஆரம்பமாகியுள்ளது. ஹர்பின் நகரில் நேற்று(சனிக்கிழமை) இரவு வாண வேடிக்கைகளுடன் ஆரம்பமாகியுள்ள உலகின் மிகப்பெரிய பனித் திருவிழாவினை பார்வையிடுவதற்காக அதிகளவான சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். பனி உறைந்து போயிருக்கும் Soungha ஆற்றில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பனி சிற்பங்கள் வரிசையாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் நடத்தப்படும் பனித்திருவிழா சுமார் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள். பல்வேறு பனிச் சிற்பங்கள் பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், உயிரை உருக வைக்கு…

  17. படத்தின் காப்புரிமை SAUL LOEB Image caption டொனால்டு டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே எல்லைச்சுவர் கட்டுவதற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது கனவுத் திட்டமான எல்லைச்சுவர் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் ஜனநாயக கட்சியினருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து டிரம்ப் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். தனது எல்லைச்சு…

  18. படத்தின் காப்புரிமை Getty Images சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 பேர் மீது வழக்கு விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பிரதிவாதிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்குரைஞர் வாதாடியுள்ளார். பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். கடந்த வருடம் அக்டோபர் 2-ம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் நுழைந்தபின்னர் உயிருடன் வெளியே வரவில்லை. …

  19. சித்தரிக்கப்பட்ட படம் Published : 04 Jan 2019 15:15 IST Updated : 04 Jan 2019 15:16 IST அமெரிக்கா உருவாக்கிய ’அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ குண்டுக்கு போட்டியாக சீனா அணு ஆயுதம் இல்லாத ராட்சத குண்டு ஒன்றை தயாரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெலியிட்டுள்ளன. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”சீனா உலகிலேயே மிகப் பெரிய வெடிகுண்டை உருவாக்கியுள்ளது. சீனாவின் பாதுகாப்புத் துறை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தவறவிடாதீர் சீனா உருவாகி இருக்க…

  20. படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிகள் சபையில் பகுதியளவு அரசுத்துறை முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் வாக்களித்துள்ளனர். எனினும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை நிராகரிப்பார் என்று கருதப்படுகிறது. முன்னதாக, தனது அமெரிக்க - மெக்ஸிகோ எல்லைச்சுவர் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்காத எந்த தீர்மானத்தையும் ரத்து செய்வேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் புதிய சபாநாயகரான நான்ச…

  21. அமெரிக்க காங்கிரசில் வரலாறு காணாத அளவு பெண் செனட்டர்கள்….. January 3, 2019 அமெரிக்க காங்கிரசின் 116வது பதவியேற்பில், வரலாறு காணாத அளவு பெண் செனட்டர்கள் பதவியேற்கவுள்ளனர். இதனையொட்டி இன்றையதினமான ஜனவரி 3ஆம் திகதி அமெரிக்கா வரலாறு படைக்கவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 2016ஆம் ஆண்டு, ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் லட்சக்கணக்கான மகளிர் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இடைக்கால தேர்தலில் ஜனநாயகக்கட்சி வேட்பாளராக களமிறங்கப் பல பெண்கள் முன்வந்திருந்தனர். இது அதற்கு முந்தைய ஆண்டு, அந்தக்கட்சியில் பெண்களின் நிலைப்பாட்டுக்கு எதிர்மாறாக அமைந்திருந்தது. அமெரிக்காவில் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பெண் செனட்டர்களின…

  22. இத்தாலிக்கான வட கொரிய தூதுவரை காணவில்லை – தென்கொரிய புலனாய்வு முகவரகம்! இத்தாலிக்கான வட கொரிய தூதுவர் ஜோ சோங் கில் ரோமில் வைத்து காணாமல் போயுள்ளதாக தென் கொரிய புலனாய்வு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து பியோங்யாங்கின் உயர் இராஜதந்திரி ஒருவர் இனந்தெரியாத மேற்கு நாட்டிற்கு தஞ்சம் கோரி வருவதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வடகொரியாவின் ரோமிற்கான பதில் தூதுவரான ஜோ சோங் கில், வட கொரியாவின் உயர் மட்ட அதிகாரிகளின் மகன் மற்றும் மருமகன் என்று அறியப்படுகிறார். இந்த நிலையில், இறுதியாக லண்டனுக்கான பதில் தூதுவராக இருந்த தாயி யொங்-ஹோ கடந்த 2016 ஆம் ஆண்டு பதவியை துறந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தென்கொரியாவுக்கு தப்பிச் சென்றா…

  23. நான்கு மாதத்துக்குள் சிரியாவலிருந்து வெளியேறுகிறது அமெரிக்க படைகள் எதிர்வரும் நான்கு மாத காலத்தில் சிரியாவில் உள்ள அனைத்து அமெரிக்கப் படைகளும் சிரியாவை விட்டு வெளியேறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி ட்ரம்ப் சிரியாவிலுள்ள அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவது என்ற முடிவை மேற்கொண்ட ட்ரம்ப், யாராலும் முடியாவிட்டால் ட்ரம்பால் முடியும். ஐ.எஸ்.ஐ.எஸ். சிரியாவிலிருந்து வெளியேறிவிட்டார்கள். அதனால் அமெரிக்க படைகளை மெதுவாக திரும்ப பெறுகிறோம். அவர்கள் அவர்களது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந் நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்னும் நான்கு மாத காலத்த…

  24. விமான விபத்துக்களினால் 2018-இல் உயிரிழப்பு அதிகரிப்பு உலகளாவிய ரீதியில் விமான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு வெறும் 44 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு 556 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விமான விபத்துகள், விமான கடத்தல்கள் போன்ற தரவுகளை பேணிவரும் விமான பாதுகாப்பு வலையமைப்பின் அறிக்கையொன்றிலேயே இவ்விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் இந்தோனோசியாவில் விபத்திற்குள்ளான லயன் எயர் விமான விபத்தே மிக மோசமான பயணிகள் விமான விபத்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். அந்தவகையில், மிகவும் பாதுகாப்பா…

  25. பதவியேற்ற சில மணிநேரங்களில், மேயர் சுட்டுக்கொலை! மெக்ஸிகோவின் தென் மாநிலமான ஒக்ஸாகாவில், பதவியேற்று சில மணிநேரங்களில் அதன் மேயர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றதாக மெக்ஸிகோ உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. லக்ஸியாகோ நகரில் பதவியேற்றுவிட்டு பிறிதொரு சந்திப்பிற்காக நகர மண்டபத்திற்கு சென்றுகொண்டிருந்த மேயர் அலேஜான்ரோ அபாரிகோ இனந்தெரியாத நபர் ஒருவரினால் சுடப்பட்டார். இந்த சம்பவத்தில் பிறிதொரு நபரும் பலத்த காயமடைந்த நிலையில் பின்னர் மருத்துவமனையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் மேயர் அபாரிகோவின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.