உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
டென்மார்க்கில் புகையிரத விபத்தில் அறுவர் பலி January 2, 2019 டென்மார்க்கில் இன்று சரக்கு புகையிரதத்துடன் பயணிகள் புகையிரதம் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . டென்மார்க்கின் ஜிலாந்து மற்றும் புனேன் தீவுகளை இணைக்கும் வழியில் இன்று காலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விபத்தில் காயமடைந்த 16 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால் விபத்துக்குள்ளான புகையிரதங்களை அங்கிருந்து அகற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் விபத்துக்கான காரணம் தொடர…
-
- 0 replies
- 551 views
-
-
அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஸ்யா தயார்… January 1, 2019 அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஸ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடிதம் எழுதி உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றினால் இருநாடுகளுக்குமிடையயே அண்மைக்காலமாக மோதல் போக்கு நீடித்து வருகின்ற நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிரம்புக்கு புட்டின் எழுதியுள்ள கடித்திலேயே இவ்வாறு பேச்சு நடத்த தயாராக இருப்பதா எழுதியுள்ளார். ரஸ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான நல்லுறவு சர்வதேச பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிபடுத்துவதற்கான முக்கிய காரணி எனவும் புட்டின் அக்கடிதத்தில் வலியுறுத்தி உள…
-
- 0 replies
- 428 views
-
-
ஊடகவியலாளர் கஷோக்கியின் சடலத்தை கொண்டுசெல்லும் காணொளி வெளியானது! துருக்கியிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடற்பாகங்களுடன் சிலர் செல்லும் காணொளி வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஊடகவியலாளரை கொலைசெய்த பின்னர் சவுதி அரேபியாவை சேர்ந்த சிலர் கஷோக்கியின் உடல் பாகங்களை கொண்டு செல்வதை காண்பிக்கும் காணொளியினை துருக்கி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. துருக்கியின் புலனாய்வு பிரிவினருக்கு நெருக்கமான ஊடகமொன்றே இந்த காணொளியினை வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர் கொல்லப்பட்ட தினத்தன்று கொலையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த துருக்கிக்கான சவுதி அரேபிய தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்வதையே காணொளி காண்பித்துள்ளது. …
-
- 0 replies
- 596 views
-
-
கிரேக்கத்தில் கடும் குளிர்: வீடற்றவர்களுக்கு தற்காலிக முகாம் வசதி கிரேக்கத்தில் நிலவும் பனி மற்றும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நகரின் வீடற்றவர்களை பாதுகாக்கும் வகையில் பொது முகாம்களை திறப்பதற்கு எதென்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். திடீர் காலநிலை மாற்றம் காரணமாக எதென்ஸ் மலைகளின் வீதிகள் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல பனியால் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான காலநிலையின்போது இரவுபொழுதை கழிப்பதானது வீடற்றவர்களுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அதற்கமைய, இந்த திடீர் காலநிலை மாற்றத்திலிருந்து வீடற்றவர்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான தற்காலிக முகாம் வசிதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதென்ஸ் நகராட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதென்ஸ் நகராட்சி அரச…
-
- 0 replies
- 878 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 446 views
-
-
எல்லையில் தடுப்பு சுவர் கட்டி முடிப்போம், அல்லது எல்லைகளை மூடுவோம் – ட்ரம்ப் எச்சரிக்கை அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டி முடிப்போம் அல்லது நாம் எல்லைகளை மூடுகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு நம் நாட்டின் பல நிறுவனங்கள் மற்றும் வேலைகளை மெக்ஸிக்கோவிற்கு மிகவும் முட்டாள்தனமாக வழங்குவதற்கு முன்னர், முந்தைய NAFTA க்குச் செல்லுங்கள் என அவர் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றம் அவசரமாக கூடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அங்கு அரசின் நிர்வாக முடக்கம் ஏழாவது நாளாக தொடர்கிறது. மெக்சிகோவின் எல்லையில் அகதிகள் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும் வகையில், சுவர் அமைக்கப்படும்…
-
- 4 replies
- 1.1k views
-
-
14 தொன் வெடிகளை, வானில் ஏவுவதற்கு காத்திருக்கும் அவுஸ்ரேலியர்கள்! புத்தாண்டு தினத்தன்று அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் 14 தொன் வெடிகளை வானில் ஏவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மெல்பேர்ன் நகரிலுள்ள 22 கட்டடங்களிலிருந்து சுமார் 14 தொன் எடையுள்ள பட்டாசுகளையும் வாண வேடிக்கைகளையும் வானில் ஏவி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தப்போவதாகவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மெல்பேர்ன் நகரின் மையத்திலிருந்து ஏழு கிலோமீற்றர் சுற்றளவிலுள்ள ஒட்டுமொத்த வான்பரப்பும் அன்றிரவு ஒளிவெள்ளத்தில் மிதக்கும் என்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். 2019 ஆம் ஆண்டினை வரவேற்கும் முகமாக நள்ளிரவு 12 மணிமுதல் 10 நிமிடங்களுக்கு வானில் ஜாலம் நிகழ்த்தவு…
-
- 1 reply
- 554 views
-
-
படத்தின் காப்புரிமை Sergei Bobylev / Getty குடிக்க தண்ணீர் கொடுக்காமல், கடும் வெயிலில் சங்கிலியால் கட்டி வைத்து ஐந்து வயது பெண் குழந்தையை உயிரிழக்க செய்த விவகாரத்தில் ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த பெண் உறுப்பினர் ஜெர்மனியில் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த 27 வயதான ஜெனிஃபரும் அவரது கணவரும், கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் கட்டுப்பாட்டிலிருந்த இராக்கின் மொசூல் நகரத்திலிருந்து அந்த சிறுமியை தங்களது வீட்டின் "கொத்தடிமையாக" கொண்டு வந்தனர். ஒரு கட்டத்தில் உடல்நிலை பாதிப்படைந்த சிறுமியை, ஜெனிஃபரின் கணவர் வீட்டிற்கு வெளியே சங…
-
- 0 replies
- 875 views
-
-
பிலிப்பைன்சில் கடுமையான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை December 29, 2018 பிலிப்பைன்சின் மிண்டானோ தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதனையடுத்து சுனாமி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்று காலை ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.2 அலகாக பதிவாகியிருந்ததாக முதலில் தெரிவித்துள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் 6.9 ரிக்டர் என தெரிவித்துள்ளது. ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 59 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் எத…
-
- 1 reply
- 640 views
-
-
படத்தின் காப்புரிமை SHEIKHA LATIFA காணாமல் போனதாகக் கூறப்பட்ட துபாய் இளவரசி குறித்து முன்னாள் ஐ.நா மனித உரிமை தலைவர் கூறிய கருத்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. என்ன சொன்னார்? முன்னாள் ஐ.நா மனித உரிமை செயலாளர் மேரி ராபின்சன் துபாய் இளவரசி விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசின் கருத்தை அப்படியே வழிமொழிந்திருக்கிறார். அமீரக ஆட்சியாளர் அரசர் ஷேக் மொஹமத் பின் ராஷித் அல் மக்டூமின் மகள் ஷேய்கா லத்தீஃபா சுதந்திரமான வாழ்க்கை ஒன்றை வாழ்வதற்காக துபாயிலிருந்து தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 606 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption மன்பிஜ் சிரியா அரசின் ஆதரவுப் படைகள், நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மன்பிஜ் நகரில் நுழைந்துவிட்டன. ஆறு ஆண்டுகளுக்கு முன் சிரியா அரசு தரப்பு முதன்முறையாக இந்த நகருக்குள் நுழைந்திருப்பதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அந்தப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குர்து இனப் படைகள், அங்கு துருக்கிப் படைகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்திருப்பதால், அரசிடம் உதவி கோரியிருந்தது. குர்துக்களின் YPG படைகள் தீவிரவாதக் குழுக்களில் ஒன்று என துருக்கி …
-
- 0 replies
- 549 views
-
-
ஆர்வக்கோளாறால் விசேட படைப்பிரிவின் இரகசியங்களை அம்பலப்படுத்தினார் டிரம்ப் Share அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈராக்கிற்கான தனது விஜயத்தின் போது அங்கு இரகசியமாக செயற்படும் அமெரிக்க நேவிசீல் படைப்பிரிவினர் குறித்த தகவல்களை தற்செயலாக அம்பலப்படுத்தியுள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன ஈராக்கிற்கான விஜயத்தின் பின்னர் நேவி சீலை சேர்ந்த ஒருவருடன் தான் காணப்படும் புகைப்படத்தை டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டர் செய்தியில் டிரம்;ப் நேவீ சில் வீரரின் பெயர் அமெரிக்காவில் அவர் எங்கு வாழ்கின்றார் அவரது முகாம் எங்குள்ளது போன்ற விபரங்களை தெரிவித்துள்ளார் இதன் மூலம் வழமையாக இரகசியமாக பாதுகாக்கப்படும் விடயங…
-
- 0 replies
- 641 views
-
-
ஹைப்பர் சொனிக் ஏவுகணை இறுதிக்கட்ட சோதனை வெற்றி – ரஷ்யா ஹைப்பர் சொனிக் ஏவுகணை இறுதிக்கட்ட சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு அதிக வேகத்தில் பாய்ந்து செல்லும் ஹைப்பர் சொனிக் ஏவுகணை, நவீன ஏவுகணை பாதுகாப்பு முறையை உடைக்கும் திறன்கொண்டது. காம்சட்கா பகுதியில் இடம்பெற்ற இந்த ஏவுகணை இறுதிக்கட்ட சோதனையின் போது ரஷ்ய ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இதனை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து கிரெம்ளினில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “தென் கிழக்கு ரஷ்யாவில் உள்ள ஒரு இடத்திலிருந்து ஏவப்பட்ட கு…
-
- 0 replies
- 708 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption 12 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளர் தாய்லாந்து குகையில் சிக்கிய பின்னர் மீட்கப்பட்டனர் தாய்லாந்தின் குகையொன்றில் ஒரு சிறுவர் கால்பந்து அணியும் அதன் பயிற்சியாளரும் சிக்கிக்கொண்டதும் அவர்கள் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்ட்டதும் இந்த ஆண்டின் அதிமுக்கிய நிகழ்வுகளில் ஒன்று . பிபிசியின் தென்கிழக்கு ஆசிய செய்தியாளர் ஜோனாதன் ஹெட், கடந்த ஜூலை மாதம் வைல்ட் போர் கால்பந்தாட்ட அணி வீரர்கள் சிக்கிக்கொண்ட வடக்கு தாய்லாந்தின் மா சய் மாவட்டத்துக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார். ஜோனாதன் தற்போது அங்குள்ள அங்குள்ள நிலைமை கு…
-
- 0 replies
- 655 views
-
-
வணிகரீதியில் திமிங்கில வேட்டை! வணிக ரீதியில் திமிங்கிலங்களை வேட்டையாடுவதை ஜூலை மாதம் முதல் தொடங்க இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. முன்னதாக வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிப்பதை தடை செய்துள்ள சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையத்தில் இருந்து ஜப்பான் வெளியேறியது. திமிங்கிலங்களைப் பாதுகாப்பதே சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையத்தின் நோக்கம். சில திமிங்கில இனங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழியும் நிலைக்கு வந்தவுடன், வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிப்பதை 1986-ம் ஆண்டு தடை செய்தது இந்த ஆணையம். 1951-ம் ஆண்டில் இருந்து ஜப்பான் இந்த ஆணையத்தின் உறுப்பினராக இருந்துவந்தது. இந்நிலையில், இந்த ஆணையத்தின் உறுப்பினரான ஜப்பான் அதிகாரி ஒரு…
-
- 0 replies
- 574 views
-
-
செத்து மடிந்த குழந்தைகள்! | அமெரிக்க எல்லையை நோக்கி படையெடுத்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகளில் அந்நாட்டு அரசின் தடுப்புக் காவலில் இருந்த குவாட்டமாலாவை சேர்ந்த எட்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். அந்தச் சிறுவனின் பெயர் ஃபெலிப் அலோன்சோ-கோமேஸ் என்று டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். மெக்சிகோ வழியாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்ததாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட குடியேறிகளின் குழந்தை உயிரிழப்பது இந்த மாதத்தில் இது இரண்டாவது சம்பவமாகும். இதற்கு முன்பு அதே குவாட்டமாலாவை சேர்ந்த ஏழு வயது சிறுமியொருவர் அமெரிக்க அரசின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே …
-
- 0 replies
- 544 views
-
-
அமெரிக்கா தீ விபத்தில் சிக்கி 3 இந்திய மாணவர்கள் பலி தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த சீனிவாஸ் நாயக். பாதிரியாரான இவர் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்துக்காக ஐதராபாத் நகரில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றியவாறு கிறிஸ்தவ பிரசார காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். இவரது குழந்தைகள் சுவாதிகா நாயக், சுஷான் நாயக், ஜெயா சுஜித் ஆகியோர் அமெரிக்காவின் டென்னெசீ மாநிலத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பிரென்ச் கேம்ப் பகுதியில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கி படித்து வந்தனர். குளிர்கால விடுமுறைக்காக பள்ளிகளுக்கு அங்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த காரி கோட்ரியெட் என்ற பெண்ணுக்கு சொந…
-
- 0 replies
- 767 views
-
-
தீக்குழம்பை வெளியிட்டுவரும் எட்னா எரிமலை! ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா எரிமலையில் தொடர்ந்து வெடிப்புகள் ஏற்பட்டு தற்போது அதிலிருந்து தீக்குழம்பு வெளியாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் இரவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு பள்ளத்தாக்கில் சிவப்பு நிறத்தில் எரிமலை குழம்பு வெளியாகி வருவதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. எரிமலை வெடிப்பு காரணமாக எட்னாவின் தென்கிழக்கு பள்ளத்தாக்கில் ஒரு வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இதன் எதிரொலியாக திங்கட்கிழமை சுமார் 130 நில அதிர்வுகள் பதிவாகியதாகவும், அதில் மிகவும் சக்திவாய்ந்ததாக 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாகவும் இத்தாலியின் வானிலை மற்றும் எரிமலை ஆய்வு மையம் தெரிவித்தது. எரிமல…
-
- 0 replies
- 757 views
-
-
அமெரிக்கா ஏமாளி அல்ல: ஈராக்கில் ட்ரம்ப் தெரிவிப்பு தொடர்ந்தும் இந்த உலகின் ஏமாளியாக திகழ அமெரிக்கா தயாராக இல்லை என, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈராக்கிற்கு நேற்று (புதன்கிழமை) திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ட்ரம்ப், அங்கு போரிட்டுவரும் அமெரிக்க துருப்புக்களை நேரில் சந்தித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தொடர்ந்து உரையாற்றிய அவர், ”நாம் பிற தேசங்களை கட்டியெழுப்புபவர்கள் அல்ல. சிரியாவை அரசியல் தீர்வின் மூலமே மறுசீரமைக்க வேண்டும். அண்டைய செல்வந்த நாடுகளின் நிதியுதவிகளை கொண்டு சிரிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அமெரிக்காவினால் அல்ல. இந்த உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்காகவும் அமெரிக்கா சண்டையிடப் போவதில்லை. ப…
-
- 0 replies
- 410 views
-
-
ரஷ்யா புதிய அணுசக்தி ஏவுகணைகளை தயாரிக்க தயாராக உள்ளது – புட்டின் ரஷ்யா தனது முதல் படைப்பிரிவை அடுத்த ஆண்டு அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளுடன் பல்வேறு இடங்களுக்கு அனுப்பும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற பாதுகாப்பு அதிகாரிகளுடனான கூட்டு சந்திப்பில் கருத்து வௌியிட்ட அவர், இந்த நகர்வானது தனது நாடு ஒரு புதிய வகையான மூலோபாய ஆயுதத்தை கொண்டது என்று பொருள் என குறிப்பிட்டார். இந்த புதிய முன்நிலை ஏவுகணை சோதனைக்கு அவன்காட் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கிரெம்ளி ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. புதிய ஏவுகணை முறைமையானது, மார்ச் மாதத்தில் ஜனாதிபதி புட்டினால் அறிவிக்கப்பட்ட பல புதிய ஆயுத கட்டமைப்புகளை சார்ந்ததாகும். …
-
- 0 replies
- 524 views
-
-
பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு! பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடந்த ஆறு மாதங்களில் 450 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த கார்டியன் நாளிதழ் மேற்கொண்ட ஆய்வொன்றின் அடிப்படையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியான அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வாறான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் வேறோடு அழிக்கப்பட வேண்டும் என தொழில்முறை நெறிமுறைகளை வகுக்கும் தேசிய பொலிஸ் கவுன்சில் தலைவர் ஜுலியன் வில்லியம்சன் குறிப்பிட்டார். இந்த குற்றச்சாட்டின் கீழ் 24 கான்ஸ்டபள், குற்ற விசாரணை அதிகாரிகள், குற்றத்தடுப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 24 பொலிஸ் அதிகா…
-
- 0 replies
- 462 views
-
-
சிரியா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் areசிரியாவின் டமாஸ்காஸ் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இத் தாக்குதல் காரணமாக டமாஸ்காஸ் பகுதியிலுள்ள இராணுவக் கிடங்கொன்று தாக்குதலுக்கிலக்கானதில் மூன்று இராணுவத்தினர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன் இஸ்ரேலின் பெரும்பாலான ஏவுகணைகள் தடுத்து அழிக்கப்பட்டுள்ளதாக சிரிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் இத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மேலும் விமானங்களை வானில் தாக்கி அழிக்கும் ஏவுகணை சிரியாவில் இருந்து ஏவப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் ப…
-
- 0 replies
- 512 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption பின்லாந்து யாரும் யாரிடமும் கேட்க கூடாத கேள்விகள் என்று சில உள்ளன. அந்த வகையில் உலகம் முழுவதும், குறிப்பாக மேற்குலக நாடுகளில் கிறித்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சிறுவன் ஒருவனிடம் கேட்ட கேள்வி ஒன்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அந்நாட்டு சிறுவர்களுடனான தொலைபேசி கலந்துரையாடலில் டிரம்பும் அவரது மனைவி மெலானியாவும் பங்கேற்றனர். உலகம் முழுவதும் கி…
-
- 0 replies
- 524 views
-
-
ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் ; 45 பேர் பலி ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் திங்கட்கிழமை தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அரச அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்கள் உட்பட்ட தாக்குதல்களிலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அரசாங்கத்தின் வன இலாகா திணைக்களத்தின் மீது கார்க்குண்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னரே தீவிரவாதிகள் இந்த தாக்குதலை ஆரம்பித்துள்ளனர் இதன் பின்னர் உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் அலுவலக ஊழியர்களை பணயக்கைதிகளாக பிடித்துள்ளனா இதன் போது கடும் துப்பாக்கி சமரும் இடம்பெற்றுள்ளது. http://www.virakesari.lk/article/46927
-
- 0 replies
- 381 views
-
-
இத்தாலியில் நிலநடுக்கத்தை தொடர்ந்து எட்னா எரிமலை வெடிப்பு December 25, 2018 இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. சிசிலித் தீவில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதனையடுத்தே எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. இதனையடுத்து அங்கு புகைமண்டலம் சூழ்ந்துள்ளதனால் சிசிலி தீவில் அமைந்துள்ள கட்டானியா விமான நிலையம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த முதற்கட்ட தகவல் ஏதுவும் வெளியாகவில்லை. எட்னா எரிமலை வெடிப்பு அடிக்கடி ஏற்படுவதாகவும், கடந்த சில மாதங்களாக எரிமலை வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக …
-
- 0 replies
- 516 views
-