உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பி அடிக்கக்கூடாது: ஷி ஜின்பிங் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பியடிக்கக்கூடாது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டார் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங். படத்தின் காப்புரிமைREUTERS Image captionசீன கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகிறார் அதிபர்…
-
- 0 replies
- 352 views
-
-
இந்தியாவில் ராணுவ ஆட்சி தேவை.. பெரும்பான்மை மக்கள் கருத்து இதுதான்.. ஷாக்கிங் சர்வே!இந்தியாவிலுள்ள 5ல் நான்கு பேர், அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இருப்பினும் ராணுவ ஆட்சி வந்தால் நல்லது என அதில் பெரும்பான்மையோர் நினைப்பதாகவும் சர்வே ஒன்று தெரிவிக்கிறது. "பியூ ரிசர்ச் அமைப்பு, நடத்திய சர்வேயில்தான் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 2012ம் ஆண்டு முதல் 6.9 சதவீதத்திற்கும் குறையாமல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. 85 சதவீத மக்கள் மோடி அரசை முழுமையாக நம்புகிறார்கள்" என்று முத்தாய்ப்பு கொடுக்கிறது இந்த ஆய்வு. பல்வேறு நாடுகளிலும் அந்த நாட்டு அரசுகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தியுள்ளது பியூ அமைப்பு.இந்தியாவில் நடத்தப்பட்…
-
- 0 replies
- 380 views
-
-
மோசமாகும் இராக்கிய குர்திஸ்தான் மோதல்! கிர்குக்கை கைப்பற்றிய இராக் இராணுவம்! சிஞ்சரைக் கைப்பற்றிய அவர்கள் ஆதரவு ஆயுதக்குழு ; அண்டவெளி நட்சத்திர மோதலின் அதிசய அதிர்வலைகள்! நூற்றிமுப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய அலைகளைக் கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை!! மற்றும் தொலைதூர பனிப்பிரதேசத்தில் பணிபுரியும் பள்ளி ஆசிரியை! கனேடிய ஆர்க்டிக் பகுதியின் அதிசய பெண்மணி பற்றிய பிபிசி படப்பிடிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 326 views
-
-
வட கொரியா பற்றி நாடகம் தயாரித்த பிரிட்டன் தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரியா பற்றிய நாடகம் ஒன்றை உருவாக்கிய பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனத்தை குறிவைத்து வட கொரிய ஹேக்கர்கள் இணையத் தாக்குதல் நடத்தியுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைக்கதை ஆசிரியர் ஒருவர் எழுதவிருந்த இந்…
-
- 0 replies
- 477 views
-
-
திடீரெனக் கறுத்த வானத்தால் இலண்டன் வாசிகள் அதிர்ச்சி! (படங்கள்) இலண்டனின் சில பகுதிகளில் நேற்று வழக்கத்துக்கு மாறாக சிவப்பு நிறச் சூரியனையும், மழை மேகங்கள் எதுவும் இன்றித் திடீரென கறுத்த வானத்தையும் கண்ட மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதையடுத்து பரபரப்புத் தொற்றிக்கொள்ளவே, அந்தச் சூழலைப் பலரும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரிமாறத் தொடங்கினர். எவ்வாறெனினும், இலண்டன் வானிலை அவதான நிலையம் உடனடியாக இந்த விசித்திர சூழல் குறித்து ஆராய்ந்து கருத்து வெளியிட்டது. அதில், தெற்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய ஒபீலியா புயலில் கிளம்பிய தூசுப் படலம் மற்றும் சிதைவுத் துணுக்குகள் என்பனவே இந்தத் திடீர் …
-
- 0 replies
- 1.7k views
-
-
பாரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையே தாஜ்மஹால் பாரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையில் எழுப்பப்பட்ட தாஜ்மஹால் பாதுகாக்கப்படும் என இந்தியா உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சங்கீத் சோம் தாஜ்மஹால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதையடுத்து எழுந்த சர்ச்சைகளினால் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பாரதமாதாவின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையால் எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை பாதுகாப்போம் என்று உறுதி அளித்துள்ளார். யோகி ஆதித்யநாத் அக்டோபர் 26 ஆம் திகதி ஆக்ராவுக்குச் சென்று சுற்றுலாத்திட்டங்களை மேற்பார்வையிடப் போவதாகவும், தாஜ்மஹாலை யார் கட்டினார்கள் என்பது முக்கியம…
-
- 0 replies
- 358 views
-
-
கார் குண்டுத் தாக்குதலில் பெண் ஊடகவிலாளர் படுகொலை! உலகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரையும் குலைநடுங்கச் செய்த ‘பனாமா பேப்பர்’ விவகாரத்தில் முன்னின்று உழைத்த புலனாய்வு ஊடகவியலாளரான டெப்னி கொரோனா காலிஸியா நேற்று (16) படுகொலை செய்யப்பட்டார். மால்ட்டாவின் கிராமங்களில் ஒன்றான மால்பினிஜா என்ற இடத்தில், இவர் தனது காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென கார் வெடித்துச் சிதறியதில் இவர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஆராய்ந்த பொலிஸார், இது கார் குண்டுத் தாக்குதல் என்பதை உறுதிசெய்துள்ளனர். டெப்னியின் படுகொலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மால்ட்டா பிரதமர் ஜோசப் மஸ்கட், இது ஊடக சுதந்திரத்தின் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல…
-
- 0 replies
- 291 views
-
-
19 வயது மாணவன் பிரித்தானியாவின் இளம் கோடீஸ்வரரானார்.. ரியல் எஸ்டேட் வியாபாரம் மூலம் அதிக லாபம் ஈட்டியதால் 19 வயது இளைஞர், இங்கிலாந்தின் இளம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். லண்டனை சேர்ந்தவர் 19 வயதான இந்திய வம்சாவளியான அக்ஷய் ரூபரேலியா பாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற நிலையில் தற்போது இவர் இங்கிலாந்தில் உள்ள இளம் வயது கோடீசுவரர்களில் ஒருவர் ஆகியுள்ளார். பாடசாலையில் கல்வி கற்றுக் கோண்டே இணையம் மூலம் இவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகின்றார். இதன்மூலம் அவர் ஒரு வருடத்தில் 100 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான வியாபாரம் செய்து 1.3 மில்லியன் பவுண்ட்ஸ் லாபம் ஈட்டியுள்ளார். கடந்த 16 மாதங்களுக்கு முன்பு உறவினர்களிடம் 7 ஆ…
-
- 2 replies
- 816 views
-
-
எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதப் போர் மூளலாம்: ஐ.நா-வில் கறுவிய வடகொரியா ஐக்கிய நாடுகள் சபைக்கான வடகொரியாவின் துணைத் தூதர் கிம் இன் யாங், 'எந்தக் கணத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம்' என்று எச்சரிக்கும் தொனியில் தெரிவித்துள்ளார். மேலும், '1970-களுக்குப் பிறகு அமெரிக்காவால் மிகத் தீவிரமான அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நாடு, வடகொரியா மட்டும்தான். ஆகையால், தற்காப்புக்காக அணு ஆயுதங்களை உருவாக்கிக்கொள்ள வடகொரியாவுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. கொரிய தீபகற்பத்தில் பிரச்னை மிகவும் தீவிரமாக இருக்கிறது. எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் அணு ஆயுதப் போர் மூள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது' என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் த…
-
- 0 replies
- 395 views
-
-
சோமாலியாவில் லொறி குண்டுத் தாக்குதல்; முப்பது பேர் பலி! சோமாலியா தலைநகர் மொகாதிஷுவில் சற்று முன் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் சுமார் முப்பது பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் ஒன்றின் முற்புறம், முழுவதும் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட லொறியொன்று வெடிக்கச் செய்யப்பட்டே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டது முதல் சிறிது நேரத்துக்கு அப்பகுதியில் இருந்த வாகனங்கள், கட்டடங்கள் என்பனவற்றில் தீ பரவியதாகவும், கடும் முயற்சியின் பின் அவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, மதீனாவில் நடத்தப்பட்ட மற்றொரு குண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். இத்…
-
- 2 replies
- 971 views
-
-
கேடலோனியர்கள்; குர்திஷ்களின் விடுதலைப் போராட்டம்! சமீபத்தில் இராக்கில் உள்ள குர்திஷ் பிராந்திய அரசாங்கத்துக்குட்பட்ட பகுதியிலும் ஸ்பெயினில் உள்ள கேடலோனியா சுயாட்சி சமூகத்துக்குட்பட்ட பகுதியிலும் நடந்த கருத்துக்கேட்பு வாக்கெடுப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குர்திஸ்தான் தனி நாடு உருவாக வேண்டும் என்று குர்திஷ் மக்களும்; கேடலோனியா தனி நாடு உருவாக வேண்டும் என்று கேடலோனியா பிரதேச மக்களும் பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். எதிர்பார்த்தது போலவே, இந்த வாக்கெடுப்புகளை ஏற்க இராக்கும் ஸ்பெயினும் மறுத்துவிட்டன. …
-
- 0 replies
- 372 views
-
-
ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லில் காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் எல்லையை அண்மித்துள்ள காட்டுப்பகுதிகளில் நேற்றிலிருந்து சுமார் 520 இடங்களில் காடுகள் தீப்பற்றி எரிந்து வருவதாகவும் இந்த தீயை அணைக்கும் பணியில் சுமார் 4500 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று போர்த்துக்கல்லின் எல்லையை அண்மித்துள்ள ஸ்பெயின் நாட்டின் கலிசியா பகுதியிலும் சுமார் 17 காடுகள் தீப்பற்றி எரிந்து வ…
-
- 0 replies
- 268 views
-
-
தெரேசா மே ஜீன் குளோட் ஜங்கருடன் முக்கிய பேச்சுவார்த்தை : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரசல்ஸிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இன்றும் சில மணிநேரத்தில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜீன் குளோட் ஜங்கருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவருடனான பேச்சுவார்த்தைகளின்போது பிரித்தானிய பிரதமர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்தில் எந்த வித விட்டுக்கொடுப்புகளையும் மேற்கொள்ள மாட்டார் என பிரதமரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இத்தாலியில் சில வாரங்களிற்கு முன்னர் தான் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட விடயங்களையே பிரதமர் மீண்டும் வலியுறுத்துவார் என அவரின் …
-
- 0 replies
- 343 views
-
-
ஐ.நா-வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா! ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. 'யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்குக் காரணம்' என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவிலும், ஐ.நா அமைப்புக்கு உள்ளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு குறித்து யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் இரினா போகோவா, 'யுனெஸ்கோவிலிருந்து வெளியேறுகிறோம் என்று எனக்கு அமெரிக்காவிடமிருந்து அதிகாரபூர்வமாக கடிதம் வந்துவிட்டது. இது எனக்கு மிகவும் மன வருத்தத்தை கொடுக்கிறது. இந்த முடிவு யுனெஸ்கோவுக்கு இழப்பு, அமெரிக்காவுக்கும் இழ…
-
- 1 reply
- 342 views
-
-
ஆசிய கண்டத்தில் அதிக பட்டினியாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா.. இந்தியா பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100வது இடத்துக்கு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா மேலும் 3 இடங்கள் பின் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் உள்ள 119 நாடுகளில் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட ஆய்வுகளின் இது தெரிய வந்துள்ளது. இந்தநாடுகளில் பெரும்பாலானவற்றில் உணவு தானியங்கள் உற்பத்தி குறைவு காரணமாக பட்டினி நிலை தோன்றியுள்ளது. நேற்றையதினம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுகளின் முடிவுகளின்படி இந்தியாவில் பட்டினியாக கிடப்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
இராக்கில் பகையான நட்பு; குர்து - இராக்கிய படைகளுக்கு இடையில் அதிகரிக்கும் மோதல்; முப்பத்தி ஓரு வயதே ஆன உலகின் இளம் தலைவரை தேர்ந்தெடுத்த ஆஸ்டிரிய மக்கள்! ஆனால் ஆட்சியமைப்பதற்காக ஜெபாஸ்டியன் கூர்ட்ஸ், தீவிர வலதுசாரிகளோடு கைகோர்ப்பாரா? மற்றும் ஆப்ரிக்க கலைகளுக்கு அதிகரிக்கும் அங்கீகாரம்! வெனிஸில் நடக்கும் கலைக்கண்காட்சியிலிருந்து பிபிசி தரும் பிரத்யேக செய்திக்குறிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 394 views
-
-
பிரச்சனைக்குரிய கிர்குக் நகருக்குள் நுழைந்தது இராக்கிய படை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP இராக்கில் பிரச்சனைக்குரிய நகரமான கிர்குக்கிலுள்ள மத்திய பகுதிக்கு இராக்கிய அரசு படைகள் நுழைந்துள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். கிர்குக் நகரத்தின் வெளியே உள்ள முக்கிய மையங்களை குர்து படையினரிடம் இருந்து இராக் படைகள் கைப்பற்றியுள்ளது. கே 1 ராணு…
-
- 0 replies
- 433 views
-
-
லக்ஷ்மி நாராயனண் கோவிலில் புகைப்படம் எடுக்க முயன்ற இங்கிலாந்து சுற்றுலாப் பயணி தவறி விழுந்து பலி:- பிரித்தானியாவில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுப் பயணத்திற்கு சென்ற ரோஜர் என்ற சுற்றுலாப் பயணி மத்திய பிரதேசத்தில் கோவில் ஒன்றைப் படம் பிடிக்கும் போது கீழே தவறி விழுந்து மரணமடைந்துள்ளார். பிரித்தானியாவின் 56 வயதுடைய ரோஜர் ஸ்டோஸ்பரி மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சர்வதேச சுற்றுலாவை ஆரம்பித்தனர். இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் சில ஆசிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள சுற்றுலா தளங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களது வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளனர். பயண…
-
- 0 replies
- 467 views
-
-
31 வயதிலேயே ஆஸ்திரிய நாட்டின் தலைவராகும் செபாஸ்டின் குர்ஸ் யார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆஸ்திரிய நாட்டின் வேந்தராகவுள்ள செபாஸ்டின் குர்ஸ் ஆஸ்திரியாவின் கன்சர்வேட்டிவ் மக்கள் கட்சி சமீபத்தில் நடந்து முடிந்த நாட்டின் பொதுத் தேர்தலில் அதிக சதவீத வாக்குகளையும், இடங்களையும் வென்றுள்ளது. இதையடுத்து அந்தக் கட்சியின் தல…
-
- 0 replies
- 476 views
-
-
கனடாவில் கருணைக்கொலை கனடாவில் கடந்த ஓராண்டில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கனேடியர்கள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது. கருணைக்கொலை செய்யப்பட்ட அனைவரும் வைத்தியர்களின் உதவியுடன் சட்டபூர்வமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அவ் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது. குறித்த விடயம் தொடர்பாக கனேடிய சுகாதார நிறுவனம் தெரிவிக்கையில், பெரும்பாலும் புற்றுநோயால் அவதிப்பட்டு வருபவர்களே இவ்வாறு உயிரிழப்பதாகவும், வைத்தியர்களின் உதவியுடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நடவடிக்கை கடந்த 2016ஆம் ஆண்டு கனடாவில் சட்டபூர்வமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25847
-
- 0 replies
- 546 views
-
-
`முதல் குண்டு விழும்வரை` ராஜதந்திரம் தொடரும் : டில்லர்சன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவுடனான மோதலை, ராஜதந்திர முறைப்படியே தீர்க்க விரும்புவதாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். விளம்பரம் `வடகொரியா முதல் கு…
-
- 0 replies
- 387 views
-
-
பெங்களூரில் 115 ஆண்டுகளுக்குப் பின் கனமழை – 6 பேர் பலி இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூர் நகரில் கடந்த 115 ஆண்டுகளுக்குப் பின்னர் கனமழை பெய்துள்ளதாக அந்த மாநிலத்தின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிகரகாரம்1,615.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேவேளை வடகிழக்கு பருவமழையின் போது மேலும் மழைப் பொழிவு அதிகமாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான மழை காரணமாக பெங்களூர் நகர் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. நகரின் வீதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக இடிபாடுகளுக்குள் சிக்கி…
-
- 1 reply
- 431 views
-
-
கலிஃபோர்னியாவில் ஆறு நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயில் சிக்கி 40 பேர் பலி பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionகலிஃபோர்னியாவில் ஆறு நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ கலிஃபோர்னியாவில் ஆறு நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயில் சிக்கி 40 பேர் இறந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர். இந்த காட்டுத் தீ, கிராமப்புற பகுதிகளை தீக்கிரையாக்கியதில், ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளன. விளம்பரம் இதுகுறித்து கருத்து தெரிவித்த கலிஃபோர்னியா மாகாண ஆளுநர், இந்த மாகாணம் இதுவரை சந்தித்திராத மோசமான பேரழிவு என்று வர்ணித்தார். இன்னும் 16 இடங்கள…
-
- 0 replies
- 398 views
-
-
ஜிஹாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட விமானம் கடலில் விழுந்து விபத்து பிரான்ஸ் இராணுவத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த சரக்கு விமானம் ஒன்று சற்றுமுன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்தனர். ஏனைய ஆறு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உக்ரேனியத் தயாரிப்பான இந்த ‘அண்டனோவ்’ ரக விமானம், ஐவரி கோஸ்ட் நகரின் கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கடும் மழை மற்றும் இடி-மின்னல் நிறைந்த சூழலில் தரையிறங்க முயற்சித்தபோதே விமானம் விபத்துக்குள்ளானதாக ஐவரி கோஸ்ட் இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான சில மணி நேரங்களில் விமானத்தின் சிதைவுகள் கரையொதுங்கிய…
-
- 0 replies
- 351 views
-
-
உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த டோக்கியோ - புதுடெல்லிக்கு 43-வது இடம் புதுடில்லி: உலகம் முழுதும் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில், டில்லி 43வது இடத்திலும், மும்பை 45வது இடத்திலும் உள்ளது. ஆய்வு பொருளாதார உளவுப்பிரிவு என்ற அமைப்பு உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. டிஜிட்டல், சுகாதாரம், உள்கட்டமைப்பு தனிநபர் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள், லண்டன், பாரீஸ் மற்றும் பார்சிலோனா நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட்டது. ஆய்வு வெளியிட்ட கிறிஸ் க்ளாக் என்பவர் கூறுகையில், உலகில் பெரும்பாலான நகரங்கள் பொருளாதார ரீதியான நடவடிக்கையை அதிகரிக்கும் நிலையில்…
-
- 0 replies
- 923 views
-