Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 03 Feb, 2025 | 02:58 PM அமெரிக்காவின் தேசிய கீதமிசைக்கப்பட்டவேளை உரத்து கூச்சலிட்டுள்ள கனடாவின் ஹொக்கி இரசிகர்கள் தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை கொள்வனவு செய்யப்போவதாக உறுதிமொழியெடுத்துள்ளனர். ஒட்டாவாவில் அமெரிக்க கனடா ஹொக்கி அணிகளிற்கு இடையிலான போட்டியின் போது அமெரிக்க தேசியகீதம் இசைக்கப்பட்டவேளை கனடா ரசிகர்கள் உரத்த குரலில் கூச்சலிட்டுள்ளனர். கனடாவிற்கு எதிராக டிரம்ப் வரிகளை அறிவித்து ஒரு சில மணித்தியாலங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரு நாடுகளினதும் அணிகளிற்கும்இடையில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியின் போதும் கனடா ரசிகர்கள் அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை …

  2. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த கனடா! அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். பதவியேற்றது முதல் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். குறிப்பாக உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். மேலும், பல்வேறு நாடுகள் மீதும் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கனடா, மெ…

  3. இத்தாலி தனது 2025 வேலை விசா திட்டத்தின் கீழ் 1,65,000 வேலை விசாக்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. கூடுதலாக 10,000 விசாக்கள் பராமரிப்பு பணியாளர்களுக்காக (caregivers) ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் Decreto Flussi திட்டத்தின் கீழ், வேலை விசாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. மேலும், இந்த விசா முறைமையை எளிதாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாலியில் தொழிலாளர் பற்றாக்குறை, முதியோர் அதிகரிப்பு, குறைந்த பிறப்பு விகிதம் போன்ற காரணங்களால் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, பல துறைகளுக்கு வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை ஈர்ப்பதே இத்தாலி அரசின் நோக்கமாகும். தொழிலாளர் தேவை அதிகரித்துள்ள முக்கிய துறைகள்: மருத்துவம்: செவிலியர்கள், மருத்துவ உதவியாளர…

  4. Published By: DIGITAL DESK 3 03 FEB, 2025 | 12:48 PM கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து திங்கட்கிழமை ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. கனடா மற்றும் மெக்சிகோ நாட்டிலிருந்த இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரியும் விதிப்பதாக ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்க பதிலடி கொடுக்கப்போவதாக கனடாவும் மெக்சிகோவும் அறிவித்துள்ளதோடு, சீனாவும் எதிராக செயற்படபோவதாகவும், உலக வர்த்தக அமைப்பில் சவால் விடுவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவ…

  5. பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் - மீண்டும் டிரம்ப் Published By: Rajeeban 03 Feb, 2025 | 11:54 AM பனாமாகால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி மிகப்பெரியதாக ஏதாவது நிகழும் எனவும் தெரிவித்துள்ளார். பனாமா கால்வாயில் சீனாவின் பிரசன்னத்தினால் அமெரிக்காவிற்கும் பனாமாவிற்கும் இடையில் பதற்றநிலை அதிகரித்துவருகின்ற சூழ்நிலையிலேயே டொனால்ட் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். சீனாவிடம் கையளிக்கப்படாத பனாமா கால்வாயை சீனா நிர்வகிக்கின்றது என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் பனாமா கால்வாய் முட்டாள்தனமாக பனாமாவிடம் கையளிக்கப்பட்டது எ…

  6. அமெரிக்க சந்தையை ஆட்டம் காண வைத்துள்ள டீப்சீக் ஏஐ செயலி பற்றி ஆஸ்திரேலியா சந்தேகத்தை கிளப்புகிறது. அமெரிக்கா கடற்படை தனது வீரர்கள் இந்த செயலியை பயன்படுத்த தடை விதித்திருப்பதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. உண்மையில் என்ன நடக்கிறது. இந்த ஏஐ செயலி பாதுகாப்பானதா? டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய ஏ.ஐ செயலியான டீப் சீக் குறித்து ஆஸ்திரேலிய அறிவியல் துறை அமைச்சர் எட் ஹுசிக், தனியுரிமை பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சீன செயலி குறித்து முதல் மேற்கத்திய அரசாங்க உறுப்பினராக பாதுகாப்பு கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார் எட் ஹுசிக். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "டீப்சீக் அமெரிக்கா விழித்தெழுவதற்கான ஒரு அழைப்பு" என்று கூறினார். ஆனால், தேசிய பாதுகாப்புக்கு…

  7. 'சுதந்திரம் இல்லாமல் எனது வாழ்க்கை அர்த்தமற்றது - எங்களின் சுதந்திரத்தை பறித்த உலகம் அதனை மீள பெற்றுத்தரவேண்டும் - இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுதலையான பாலஸ்தீனியர் Published By: RAJEEBAN 02 FEB, 2025 | 11:48 AM உலகம் பாலஸ்தீனியர்களை புறக்கணித்துள்ளது அலட்சியம் செய்துள்ளது என தெரிவித்துள்ள இஸ்ரேலால் விடுதலை செய்யப்பட்டுள்ள பாலஸ்தீனியர் ஒருவர் தனது சுதந்திரம் பறிபோனதற்கு பிரிட்டனும் காரணம் என தெரிவித்துள்ளார். 2019 முதல் இஸ்ரேலின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜகைரியா ஜூபைதி என்பவரே இதனை தெரிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என தெரிவித்து இஸ்ரேலிய நீதிமன்றம் இவருக்கு தண்டனை விதித்திருந்த…

  8. உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டம்! உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான திட்டத்தில் தான் பணியாற்றி வருவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, உக்ரைன்-ரஷ்யா போரை ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார். அத்தோடு உக்ரைனில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட உக்ரைன் தயாராக இருந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப…

  9. ஜனநாயக குடியரசு காங்கோவில் மீண்டும் பயங்கர சண்டை: வன்முறையால் பல ஆயிரம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் 0 காங்கோ: ஜனநாயக குடியரசு காங்கோவில் கிளர்ச்சியாளர்களுக்கும், ஆயுதம் ஏந்திய இன குழுக்களுக்கும் இடையே மீண்டும் உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சி படைகளில் ஒன்றான M23 தற்போது காங்கோ நாட்டு ராணுவத்தையும், ஐநா-வின் சமாதான தூதுவர்களையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கோமா என்ற நகருக்குள் புகுந்துள்ள கிளர்ச்சியாளர்கள் தங்கள் கண்ணில் படும் இன குழுக்களையும், ராணுவத்தையும் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். அதற்கு ராணுவமும், இன குழுக்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். …

  10. அமெரிக்கவில் மாற்றுமொரு விமான விபத்து அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலடெல்பியா நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 30 நொடிகளில் இந்த விபத்து எற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமான வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏர் எம்புலன்ஸ் நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் எம்புலன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு பணியாளர்கள், ஒரு குழந்தை மருத்துவ நோயாளி மற்றும் நோயாளியின் உறவினர் உடன் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப…

  11. அமெரிக்காவுக்கு தீங்கு விளைவித்தால் வரி விதிக்கப்படும்! – ட்ரம்ப் எச்சரிக்கை. ‘அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்ற முதல் நாளிலேயே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். குறிப்பாக ‘உலகின் உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்காவை மாற்றுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி, கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு 25 சதவீத வரி என வரிசையாக வரிகளை விதித்த ட்ரம்ப், நட்பு நாடான இந்தியாவுக்கு 100 சதவீத வரி விதிப்பதாகவும் எச்சர…

  12. Published By: RAJEEBAN 31 JAN, 2025 | 02:30 PM உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள காசாவை சேர்ந்த 2500 சிறுவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க மருத்துவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். 15 மாதகாலமாக நீடித்த இஸ்ரேல் காசா யுத்தத்தின்போது காசாவில் மருத்துவ சேவையை வழங்கிய நான்கு மருத்துவர்களை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் சந்தித்துள்ளார். காசாவில் 2500 சிறுவர்களிற்கு உடனடி மருத்துவசிகி…

  13. 30 JAN, 2025 | 03:48 PM சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டு சுவீடனில் குரானை எரித்ததன் மூலம் வன்முறை ஆர்ப்பாட்டங்களிற்கு வித்திட்ட சல்வான் மொமிகா என்ற 38 வயது நபர் ஸ்டொக்ஹோமில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுவீடனில் வசித்த ஈராக்கியரான மொமிகாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகயிருந்த நிலையிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மொமிகா இஸ்லாமிய மதத்திற்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிட…

  14. ஜெர்மனியின் பொருளாதாரம் மந்த நிலையில்! ஜேர்மன் பொருளாதாரம் 2024 இன் இறுதிக் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிகமாக சுருங்கியதுடன் மீண்டும் பொருளாதார மந்தநிலை அச்சத்தை தூண்டியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கூட்டாட்சி தேர்தல்களுக்கு முன்னதாக நிச்சயமற்ற தன்மையுடன் போராடுகிறது. ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய மூன்று மாத காலத்துடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 0.2% குறைந்துள்ளது என்று அந் நாட்டு புள்ளியியல் அலுவலகத்தின் ஆரம்ப தரவு வியாழக்கிழமை (30) வெளிக்காட்டியது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி எதிர்மறையாக இருந்தால், பொருளாதாரம் மீண்டும் மந்தநிலையில் விழும் – பொதுவாக இரண்டு தொடர்ச்சியான காலாண்டு சுருக்க…

      • Like
      • Haha
    • 5 replies
    • 514 views
  15. DeepSeek க்குப் போட்டியாக Qwen2.5 Max ஐ களமிறக்கிய அலிபாபா! DeepSeek, ChatGPT, Llama ஆகிய மனிதர்களைப் போன்று பதிலளிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்குப் போட்டியாக சீனாவின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா தனது செயலியான Qwen2.5 Max ஐ அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து அலிபாபா கிளவுட் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “Qwen 2.5-Max செயற்கை நுண்ணறிவு செயலியானது DeepSeek, ChatGPT, Llama ஆகியவற்றை விட சிறப்பாக செயற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச AI தளத்தில் டீப்சீக் நிறுவனத்தின் ஏ.ஐ. மொடல் மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிவேக வளர்ச்சியை பதிவுசெய்து பிரபலமடைந்து வரும் நிலையில், அதற்கு நேரடி போட்டியை ஏற்பட…

  16. இந்திய மாணவர்களைக் குறிவைக்கும் ட்ரம்ப்! அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விபரங்களைத் திரட்ட அந்நாட்டு அரசு அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் இந்திய மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றார். இதன் முதற்கட்டமாக கொலம்பியாவைச் சேர்ந்த பலரை இராணுவ விமானங்கள் மூலம் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் செயற்பாட்டில் அமெரிக்கா ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் வெளிநாட்டு மாணவர்களின் பக்கம் …

  17. கனடா பெண் பிரதமர் வேட்பாளர் ரூபி தல்லா காணொளிக்கு விமர்சனம் கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியான ரூபி தல்லா, “நான் கனடா பிரதமரானால் நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் 5 லட்சம் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவேன்” என்று வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் பலரும், ‘இவரென்ன கனடாவின் பெண் ட்ரம்ப்பா?’ என்று தங்களது கேள்விகளை எழுப்பி உள்ளனர். கனடா நாட்டின் பிரதமர் பதவிக்கான போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி. ரூபி தல்லா களமிறங்கி உள்ளார். லிபரெல் கட்சியை சேர்ந்த இவர் பிரதமராக தேர்வாகும் பட்சத்தில், கனடா நாட்டின் பிரதமராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை பெறுவார். இந்நிலையில்தான் இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் சட்டவி…

  18. Published By: VISHNU 30 JAN, 2025 | 03:36 AM (நா.தனுஜா) அடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்வதற்கு அவசியமான தலைமைத்துவத்தை வழங்கத் தயாராகவிருப்பதாக கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடாவின் டொரன்டோ நகரில் 'ஹார்வெஸ்ட் ஒஃப் ஹோப்' எனும் மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பியெர் பொய்லிவ் மேற்கொண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொல…

  19. பாங்க் ஆஃப் கனடா வர்த்தகப் போருக்குத் தயாராகிறது இன்று எதிர்பார்த்தபடி BoC விகிதங்களை 25bp குறைத்தது. பொருளாதாரக் கண்ணோட்டத்தில் சில முன்னேற்றங்கள் கொடுக்கப்பட்டால் விகிதங்கள் அடிமட்டத்தில் அல்லது அதற்கு அருகில் இருக்கும், ஆனால் அமெரிக்க-கனடா வர்த்தகப் போரின் மிகப்பெரிய கேள்விக்குறி இன்னும் வெட்டுக்களுக்கான கதவைத் திறந்து வைக்கிறது. இறுதியில், கட்டணங்களின் ஒப்பீட்டு வளர்ச்சி-பணவீக்கம் தாக்கம் BoC இன் எதிர்வினையைத் தீர்மானிக்கும். அதிக USD/CAD உயர்வை எதிர்பார்க்கிறோம் படம் இந்த கட்டுரையில் BoC வெட்டி QTயை முடிக்கிறதுவர்த்தகத்தில் அதிகரித்த நிச்சயமற்ற தன்மைUSD/CAD டிப்ஸில் கவர்ச்சிகரமானதாக உள்ளது …

    • 1 reply
    • 250 views
  20. 29 JAN, 2025 | 01:02 PM அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூதஇலக்கொன்றை தாக்குவதற்கான சதிதிட்டத்தை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பொலிஸார் பெருமளவுவெடிபொருட்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜனவரி 19ம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கரவன் ரக வாகனமொன்றை வீடொன்றில் மீட்டனர் என தெரிவித்துள்ள நியுசவுத்வேல்ஸ் மாநிலத்தின் பிரதிபொலிஸ் ஆணையாளர் டேவிட் ஹட்சன் அந்த கரவனில் வெடிபொருட்கள் பெருமளவில் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வெடிபொருட்களை யூதஇலக்கினை தாக்குவதற்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர் இந்த அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளத…

  21. Published By: DIGITAL DESK 3 29 JAN, 2025 | 03:02 PM ஆசியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள சீனர்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பிரார்த்தனைகள் மற்றும் ஏராளமான உணவுகளுடன் சீனப் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர் வைக்கப்படும் நிலையில், இவர்கள் டிராகன் ஆண்டுக்கு விடைகொடுத்து பாம்பு ஆண்டை வரவேற்றுள்ளனர். "வசந்த விழா" என்றும் அழைக்கப்படும் லூனார் புத்தாண்டு அல்லது சந்திரப்புத்தாண்டு இன்று 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி வரை 15 நாள் நாட்கள் சீன மக்களால் கொண்டாடப்படுகிறது. சீனாவிலும் பிற இடங்களிலும் உள்ள சீன மக்கள் இந்த ஆண்டின் மிக முக்கியமான பண்டிகையாகக…

  22. மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு ட்ரம்பின் விசேட இராஜினாமா திட்டம்! கூட்டாட்சி பணியாளர்களின் அளவை கணிசமாகக் குறைக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம், அலுவலகத்தில் பணிக்குத் திரும்ப விரும்பாத அனைத்து ஊழியர்களுக்குமான விசேட இராஜினாமா திட்டத்தை வெளியிட்டது. அமெரிக்க பணியாளர் மேலாண்மை அலுவலகம் செவ்வாய்க்கிழமை (28) இது குறித்து மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் இந்த சலுகையை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, கூட்டாட்சித் தொழிலாளர்கள் பெப்ரவரி 6 ஆம் திகதிக்குள் இராஜினாமா செய்தால், அவர்கள் செப்டம்பர் வரை எட்டு மாத ஊதியம் மற்றும் பலன்களைப் பெறுவார்கள். அதேநேரம், இதில் பங்கேற்பதா என்பதை முடிவு செய்ய மத்திய அ…

  23. காசா மக்களை ஜோர்தான் எகிப்தில் மீள்குடியேற்றும் டிரம்பின் யோசனை - இரு நாடுகளும் நிராகரிப்பு Published By: Rajeeban 29 Jan, 2025 | 11:18 AM காசாவின் மக்களை எகிப்து ஜோர்தானில் மீள்குடியேற்றவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை எகிப்தும் ஜோர்தானும் நிராகரித்துள்ளன. எகிப்திய அரசாங்கம் பாலஸ்தீன மக்கள் தங்கள் நிலங்களில் வசிக்கவேண்டும்,அவர்களின் நியாயபூர்வமான உரிமைகளை பாதுகாக்கவேண்டும்,சர்வதேச சட்டங்களை மதிக்கவேண்டும் என்பதை ஆதரிக்கின்றது என அறிக்கையொன்றில் எகிப்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பாலஸ்தீனியர்களை எகிப்தில் மீள்குடியே…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பால் ஆடம்ஸ் பதவி,பிபிசி ராஜ்ஜீய செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடை பயணமோ அல்லது கார் பயணமோ, தங்கள் வீடுகளை நோக்கிய பயணத்தை பாலத்தீனர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 15 மாதங்களாக புலம்பெயர்ந்து வாழ்ந்த காஸா மக்களுக்கு இது அதிக தூரம் இல்லை, ஏனெனில் காஸா ஒரு சிறிய பகுதிதான். போரால் கடுமையாக சேதமடைந்துள்ள இந்த பகுதியை நோக்கிய இவர்களது பயணம் என்பது ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தின் தொடக்கம் மட்டுமே. இந்தப் பகுதியில் நிலவக்கூடிய மனிதாபிமான நெருக்கடியின் அளவைப் புரிந்துகொள்வது கடினம். "இங்கு எந்த வசதிகளும் இல்லை, பொதுச் சேவைகள் இல்லை, மி…

  25. அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 20-ம் திகதி பொறுப்பேற்ற டிரம்ப், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் தீவிரம் காட்டுகிறார். இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அதன்படி சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 538 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் நுற்றுக்கும் மேற்பட்டோர் ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவிக்கயைில், சட்டவிரோதமாக குடியேறிய 538…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.