உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
சிரியா மீது ஐக்கிய இராச்சியம் வீசிய ஏவுகணையில் எழுதப்பட்டிருந்த வசனம்...! சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது எறிவதற்காக ரோயல் எயார் ஃபோர்சஸ் எடுத்துச் சென்ற ஒரு ஏவுகணையில், பழிக்குப் பழி என்பதைக் குறிப்பிடும் வகையில் ‘மென்ச்செஸ்டரில் இருந்து அன்புடன்...’ என்ற எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மென்ச்செஸ்டரில், பிரபல பொப் பாடகி அரியானா கிராண்டேயின் இசை நிகழ்ச்சியின்போது ஐ.எஸ். தற்கொலைப் படை இளைஞன் ஒருவன் நடத்திய தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் - குறிப்பாக இளைஞர், யுவதிகள் மற்றும் சிறுவர், சிறுமியர் - 22 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சிரியாவில் நிலைகொண்டிருக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் முகாம்கள் மீது ஐக்கிய இராச்சியத்தின் ரோயல்…
-
- 2 replies
- 467 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை அதிரவைத்த ட்ரம்ப்பின் பேச்சு! ட்ரம்ப் அதிபரான பிறகு ஜெர்மனியுடன், தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார். குறிப்பாக கடந்த மார்ச் மாதம் ட்ரம்ப், ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கலன் இருவரும் சந்தித்தனர். அப்போது, ஏஞ்சலா, ட்ரம்புடன் கைக்குலுக்க வர, ட்ரம்ப் அதை கண்டுகொள்ளவில்லை. ஏஞ்சலாவின் முகத்தைக் கூட ட்ரம்ப் பார்க்கவில்லை. இதனால், பயங்கர நோஸ் கட்டுடன் ஏஞ்சலா திரும்பினார். இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் ட்ரம்ப் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, ட்ரம்பின் பேச்சால் ஜெர்மனி மேலும் சூடாகியுள்ளது. முக்கியமாக, "ஜெர்மனியர்கள் கெட்டவர்கள். மிகவும் கெட்டவர்கள். அமெரிக்காவில் அவர்கள், மில்லியன் கணக்கில்…
-
- 5 replies
- 734 views
-
-
பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி படத்தின் காப்புரிமைREUTERS அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன? அந்த இருட்டான இரவு நேரத்தில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன்முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால். ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி இணைந்து எழுதிய, "த எக்ஸைல்: த ப்ளைட் ஆஃப் ஒசாமா பின் லேடன் அபவுட் த லாஸ்ட் ஃப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
வாடிகனில் பாப்பரசரை சந்தித்தார் டிரம்ப்..! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக பாப்பரசர் பிரான்சிசை இன்று வாடிகனில் சந்தித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபின் முதன் முறையாக சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதன்படி சவுதி அரேபியா, இஸ்ரேல், சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இத்தாலி வருகை தந்திருந்த அவர், அங்கு வாடிகன் சென்று பாப்பரசரை இன்று சந்தித்தார். தேர்தல் பிரசாரத்தின் போது மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்படும் என டிரம்ப் தெரிவித்து இருந்தார். அதற்கு பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. http://www.vi…
-
- 6 replies
- 531 views
-
-
'என்னை மன்னித்துவிடுங்கள்' மான்செஸ்டர் தாக்குதல் தீவிரவாதியின் இறுதி தொலைபேசி உரையாடல் மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் காட்சி (இடது), தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய சல்மான் அமேதி மான்செஸ்டர் நகரில் இசை நிகழ்ச்சியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி குண்டு வெடிப்பை நடத்தும் முன் 'என்னை மன்னித்துவிடுங்கள்' என்று தொலைபேசியில் கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிறு (21-ம் தேதி) இரவன்று லண்டன் மான்செஸ்டர் நகரில் அரியானா கிராண்டே அரங்கில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 59 பேர் காயமடைந்தனர். இதனைத் தொ…
-
- 0 replies
- 347 views
-
-
பாதிக்கப்பட்டவர்கள் சென்ற கார் உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை வழிமறித்து அதிலிருந்த 4 பெண்களை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. மேலும் இதைத் தடுக்க முயன்ற அக்குடும்பத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரை அக்கும்பல் படுகொலை செய்தது. பின்னர் அவர்களிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களைத் திருடிவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் 4 பேர் நொய்டா மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உள்ளூர் எம்.எல்.ஏ.வும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்…
-
- 1 reply
- 403 views
-
-
மான்செஸ்டர் தாக்குதல்: அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திய பிரிட்டன் படத்தின் காப்புரிமைNEW YORK TIMES Image captionஇந்த ஆதாரங்கள் சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டதாக நியு ஆர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது மான்செஸ்டர் அரங்க தாக்குதல் குறித்து பிரிட்டன் காவல்துறை பகிர்ந்து கொண்ட புலன் விசாரணை தகவல்களை ஊடகங்களில் கசியவிட்ட அமெரிக்காவிடம் இனிமேல் தகவல்களை பகிர்வதை பிரிட்டன் காவல்துறை நிறுத்திவிட்டதாக பிபிசிக்கு தெரியவருகிறது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் குண்டுவெடிப்பு இடிபாடுகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியானதால் பிரிட்டன் அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர். குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட…
-
- 1 reply
- 526 views
-
-
பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு!19 பேர் வரை உயிரிழப்பு!50 பேர் வரையில் காயம்!தீவிரவாதத் தாக்குதலென காவற்துறை தெரிவிப்பு! Manchester Arena blast: 19 dead and about 50 hurt. BBC.
-
- 9 replies
- 1.1k views
-
-
இன்றைய (25/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், *மேன்செஸ்டர் தாக்குதல் புலனாய்வுத்தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்வதை நிறுத்தியது பிரிட்டன்! தகவல் கசிவை அடுத்து தடாலடி முடிவு. *அல் ஷபாப் தீவிரவாதிகளால் கடத்தி அடிமையாக்கப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள்! தாம் சந்தித்த கொடுமைகளை முதல் தடவையாக பிபிசியிடம் மனம் திறந்தனர்! *நூற்று இருபது மைல் தூரத்தில் இருந்து ஓடுபாதையை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்! லண்டன் சிட்டி விமானநிலையத்தில் அறிமுகமாகின்றது!
-
- 0 replies
- 325 views
-
-
ஆசியாவில் முதல்முறையாக ஓரினசேர்கைக்கு அனுமதி..! ஆசியப்பிராந்திய நாடுகளிலேயே முதன்முறையாக ஓரினசேர்கைக்கு அனுமதியளிக்கும் தீர்ப்பொன்றை தாய்வான் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் ஓரின சேர்க்கைக்கு தடைவிதிக்குமாரசின் உத்தரவை எதிர்த்து தாய்வானில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஓரின திருமணத்தை அங்கீகரிக்கும் உத்தரவை கோரி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வலக்கை விசாரித்துள்ள அந்நாட்டு உச்ச நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையை தடுப்பது, பொதுமக்களின் அடிப்படை உரிமையை தடுப்பதற்கு ஈடாகுமெனவும், அதனால் ஓரினசேர்கைக்கு அனுமதி அளிக்கும்படி அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. …
-
- 0 replies
- 314 views
-
-
அல் ஜஸீரா உட்பட 21 இணைய தளங்களை முடக்கியது எகிப்து பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதான குற்றச்சாட்டின் பேரில், அல் ஜஸீரா உட்பட 21 இணைய தளங்களை எகிப்து அரசாங்கம் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் ஆதரவான செய்திகளும், பொய்யான தகவல்களும் இடம்பெறுவதாகக் கூறியே இந்த இணைய தளங்களை எகிப்து அரசு முடக்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இச்செய்தியை உறுதிசெய்யவோ, மறுக்கவோ முன்வராத எகிப்து அரசு ஊடகம் ஒன்று, ‘அச்செய்தி உண்மையாகவே இருந்தாற்றான் என்ன? இதனால் எவ்வித பிரச்சினையும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், மேற்படி இணைய தளங்கள் மீது எகிப்து அரசு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் தெரியவ…
-
- 0 replies
- 263 views
-
-
மான்செஸ்டர் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய மூவர் கைது பிரித்தானியா, மான்செஸ்டர் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய மூன்று பேரை இங்கிலாந்து பொலிஸார் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியா, மான்செஸ்டர் பகுதியில் சக்தி வாய்ந்த தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இசை நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐ.எஸ் தீவிரவாதிகளால் இந்த வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது 22 வயதான சல்மான் அபேதி என்பவர் என்றும், இவர் லிபியாவில் இருந்து சிறுவயதில் அகதியாக இங்கிலாந்து வந்தவர் என்றும் இங…
-
- 0 replies
- 291 views
-
-
விபத்துக்குள்ளானது அகதிகள் கப்பல்; பத்து குழந்தைகள் உட்பட 34 பேர் பலி! அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 34 பேர் பலியாகினர். லிபியாவுக்கு 20 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த இந்தப் படகில் சுமார் ஐந்நூறு பேர் இருந்ததாகவும், அலை ஒன்று மோதியதில் படகில் பயணித்துக்கொண்டிருந்த சுமார் 200 பேர் கடலில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் இத்தாலி கரையோரப் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களுக்கு உயிர்காப்பு அங்கிகளை வழங்கியதுடன் அவர்களை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். எவ்வாறெனினும், 34 பேரின் இறந்த …
-
- 0 replies
- 318 views
-
-
இருபது ரூபாய் கேட்ட மனைவியை விவாகரத்து செய்த கணவர்! உத்திரபிரதேசத்தில் 20 ரூபாய் கேட்ட மனைவியை கணவர் விவாகரத்து செய்துள்ளார்.இஸ்லாமிய முறைப்படி மூன்று முறை தலாக் சொல்லி விட்டால், கணவன் மனைவி உறவு முடிந்துவிட்டது என்று அர்த்தம். இந்த தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், Shazia என்ற பெண்மணி தனது கணவனிடம் 20 ரூபாய் கேட்ட குற்றத்திற்காக தலாக் சொல்லி விவாகரத்து வழங்கியுள்ளார். Shazia - க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், இவரது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனை அறிந்த Shazia- தனது கணவருடன் பலமுறை சண்டையிட்டுள்ளார்.இதற்கிடையில், சம்பவம் நடைபெற்ற அன்று தனது…
-
- 10 replies
- 861 views
-
-
அண்டார்டிகாவில் இருந்து குடிநீர் எடுக்க ஐக்கிய அமீரகம் திட்டம்! அண்டார்டிகாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2019-ம் ஆண்டிற்குள் தொடங்க, அமீரக நாடுகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வர்த்தக தலைநகராக விளங்கும் ஐக்கிய அரசு நாடுகள் எண்ணெய் வளத்தில் செழித்து காணப்படுகின்றன. இருப்பினும், அங்கு போதிய மழையின்றி மக்களிடையே குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. மழை என்பதே அரிதான ஒன்றாகும். எனவே அங்கு கடல்நீரை குடிநீராக்கி தண்ணீர்ப் பிரச்சனையை சமாளித்து வருகின்றனர். தற்போது குடிநீர் பிரச்சனையை தீர்க்க பனிப்பாறகைளை வெட்டி எடுத்து அதனை தண்ணீராக்க, அரபு நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக புஜைரா துறைமுகத்தில் சிறப்பு …
-
- 3 replies
- 578 views
-
-
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு..! இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று அடுத்தடுத்த நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகியுள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்னர், இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள பேருந்து நிலையம் அருகே இன்று அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பில் போலீஸ் அதிகாரி உட்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர். ஐந்து பேர் படுக…
-
- 0 replies
- 422 views
-
-
லண்டனில் முக்கிய இடங்களின் பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பு மான்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து, லண்டன் மாநகரின் வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைAFP Image captionமத்திய லண்டனில் குவிக்கப்படும் இராணுவத்தினர். நாட்டின் பாதுகாப்பு அதியுயர் உஷார் நிலைக்கு உயர்த்தப்படுவதாக பிரதமர் அறிவித்ததை அடுத்து, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மத்திய லண்டனின் சாலைகளில் இராணுவத்தினர் ரோந்துவர ஆரம்பித்துள்ளது, மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்பது தெளிவாகத் தெரிகிறது என்று எமது செயதியாளர் கூறகிறார் நாடாளுமன்ற …
-
- 0 replies
- 385 views
-
-
சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் நளினி திடீர் மனு! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார். "25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு தமிழகம் வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இதையடுத்து கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனிடையே இவர்களது தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். …
-
- 0 replies
- 422 views
-
-
"பைத்தியம் பிடித்தவரிடம் அணு ஆயுதங்கள்" : கிம் ஜோங்கை விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி..! "பைத்தியம் பிடித்தவரிடம் அணுஆயுதங்கள்" என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டெர்ட்டேவுடனான தொலைபேசி உரையாடலின்போது கிம் ஜோங் உன்னை பைத்தியம் பிடித்தவர் என தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைக்களுக்கெதிராக உலக நாடுகள் மற்றும் ஐக்கியநாடுகள் சபை என்பன விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்த நிலையில், அமெரிக்கா தனது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக அந்நாட்டு …
-
- 0 replies
- 820 views
-
-
இன்றைய (24/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அதிகபட்ச ஆபத்தை பிரிட்டன் எதிர்கொள்வதாக அறிவிப்பு; மேன்செஸ்டர் குண்டுதாரி குறித்து கூடுதல் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு. * பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைக்கப்போராடும் ஆண்கள்; பெண்களை பாதுகாக்க ஆப்ரிக்காவில் வித்தியாசமான முன்னெடுப்பு. * அமெரிக்க அதிபரின் கொள்கைகள் மெக்ஸிகோ கார் உற்பத்தியை பாதிக்குமா? உலகின் நான்காவது பெரிய கார் உற்பத்தி நாட்டிலிருந்து நேரடி தகவல்கள்.
-
- 0 replies
- 193 views
-
-
பிரிட்டனில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உச்சபட்சமாக அதிகரிப்பு படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கான அளவு உச்சபட்சமாக நெருக்கடி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும், மேலும் உடனடி தாக்குதல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் தெரீஸா மே கூறியுள்ளார். மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் சந்தேக நபரான சல்மான் அபெடி தாக்குதல் சம்பவத்தில் தனியோருவராக இயங்கினாரா என்று விசாரணையாளர்கள் முடிவுக்கு வராதததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரீஸா மே குறிப்பிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES முக்கிய பகுதிகளை பாதுகாக்க ராணுவப் படையினர் தற்போது …
-
- 0 replies
- 207 views
-
-
சீனாவுடன் ஒப்பிட்டு அமெரிக்க சூழலை புகழ்ந்த சீன மாணவி: வலைத்தளங்களில் சீற்றம் அமெரிக்க பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரையில், அமெரிக்க ஜனநாயகத்தில் புதிய காற்று வீசுவதாக பாராட்டி பேசிய சீன மாணவி, சமூகவலைத்தளங்களில் வெளியான சீற்றம் மிகுந்த எதிர்வினைகளுக்கு பிறகு மன்னிப்பு கோரியுள்ளார். படத்தின் காப்புரிமைYOUTUBE Image captionசீன மாணவி யாங் சூபிங் மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய சீன மாணவியான யாங் சூபிங், சீனாவில் நிலவும் காற்று மாசுபாடு மற்றும் அந்நாட்டில் சுதந்திர பேச்சுரிமைக்கு எதிராக நிலவும் கட்டுப்பாடுகளை அமெரிக்காவில் நிலவும் சூழலுடன் ஒப்பிட்டு பேசினார். இதனால் சினமடைந்த சீன சமூகவலைத்தள…
-
- 0 replies
- 371 views
-
-
வெளியானது மான்செஸ்டர் தற்கொலை தாக்குதல்தாரியின் பெயர்..! மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரின் பெயரை பிரித்தானிய உளவுப்பிரிவினர் வெளியிட்டுள்ளனர். பிரிட்டனின் மான்செஸ்டர் நகரத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த தற்கொலைபடை குண்டுவெடிப்பில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு தாம் பொறுப்பேற்பதாக, ஐஎஸ் தீவிரவாத அமைப்பு டெலிகிராம் மூலமான செய்தி ஒன்றை அனுப்பி இருந்தது. ஆனால் குறித்த செய்தி குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடாமல் இருந்த பிரித்தானிய பாதுகாப்பு பிரிவானது, லிபியாவிலிருந்து சிறு வய…
-
- 0 replies
- 228 views
-
-
மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர் அடையாளம் காணப்பட்டார்! பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் 22 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை காவல்துறை அடையாளம் கண்டுள்ளனர். பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரத்தில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுமார் 10.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தது. இதனால் அங்கு குழுமியிருந்த 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 58-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்புகளும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எ…
-
- 1 reply
- 443 views
-
-
இன்றைய (23/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மேன்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் பலி; 59 பேர் காயம்; இசை கேட்கச்சென்று உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் இளம்பிராயத்தினரும் அடக்கம். * இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு மேன்செஸ்டர் தாக்குலதலுக்கு பொறுப்பேற்பு; 23 வயதுடைய நபர் இது தொடர்பில் கைது. * பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்; இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் சமாதானம் உருவாக்க தன்னால் முடிந்ததையெல்லாம் செய்வேன் என்று அறிவிப்பு.
-
- 0 replies
- 364 views
-