உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை: ஃபிரான்ஸ் அதிபர் ஒல்லாந்த் திடீர் அறிவிப்பு ஒரு முறை போதும்! ஃபிரான்ஸ் அதிபர் பதவிக்கு இரண்டாவது முறையாகப் போட்டியிடப் போவதில்லை என அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் திடீரென அறிவித்துள்ளார். அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஒல்லாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது, நாட்டு மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நான்கரை ஆண்டுகாலம் இந்த நாட்டை உண்மையாகவும், நேர்மையாகவும் வழிநடத்திய தான், இந்த நாட்டின் வளர்ச்சி தொடர்பான தொலைநோக்குப் பார்வையிலிருந்து ஒருபோதும் விலகியதில்லை என்று தெரிவித்துள்ளார். பிரபல தர வரிசையில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள ஒல்லாந்த…
-
- 2 replies
- 371 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * உலக எயிட்ஸ் தினம் இன்று அனுட்டிக்கப்படும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய எச் ஐ வி தடுப்பு மருந்துச் சோதனை ஆரம்பமாகியுள்ளது. * மாபெரும் மயானமாக அலெப்போ நகர் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா கூறுகின்றது.அரசாங்க படைகளின் தாக்குதல் மேலும் தீவிரமடைகிறது. * உலகின் மிகப்பெரிய இயற்கை அதிசயங்களில் ஒன்றான பவழப்பாறைத் தொடர் அழிவை எதிர்கொள்கிறது. கடல் வெப்பமடைதலே காரணம் என்கிறது ஒரு ஆய்வு அறிக்கை.
-
- 0 replies
- 315 views
-
-
யுத்தத்தினால் குடிநீரின்றி உயிரிருந்தும் உயிரற்றவர்களாக மாறிய குழந்தைகள் ; உலகை உலுக்கிய அதிர்ச்சி குடிக்க தண்ணீர் மற்றும் பசியால் வாடி எலும்புக்கூடான குழந்தைகளின் நெஞ்சை உருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுபாட்டிலிருக்கும் மோசூல் நகர மக்களே இவ்வாறு அவதிப்பட்டு வருகின்றனர். ஹசன்ஷாம் அகதி முகாமிலே குறித்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களில் இருக்கும் இரு குழந்தைகளில் ஒருவருக்கு 2 வயதும் மற்றொருவருக்கு 9 வயதாவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய், இது என…
-
- 0 replies
- 389 views
-
-
பிக் மேக் பர்கரை கண்டுபிடித்த ஜிம் டெலிகட்டி 98வது வயதில் காலமானார் மெக் டொனால்ட்ஸின் பிக் மேக் பர்கரை உருவாக்கிய மைக்கேல் ஜிம் டெலிகட்டி தன் 98 வது வயதில் காலமானார். ஜிம் டெலிகட்டி 1967ல், மைக்கெல் ஜிம் டெலிகட்டி, பன்றி இறைச்சி, லெட்டூஸ் கீரை, ஊறுகாய், வெங்காயம் மற்றும் ஒரு தனித்துவமான சாஸ் இவை அனைத்தையும் ஒரே பர்கரில் இருக்கும்படியான ஒரு சூத்திரத்தை கண்டுபிடித்தார். அமெரிக்காவில் ஜிம், மெக் டொனால்ட்ஸ் நிறுவனத்தின் முதல் வர்த்தக உரிமையை பெற்று 1950களில் பல மெக்டோனால்ட் உணவகங்களை நடத்தினார். ஜிம் டெலிகட்டியை ''மாபெரும்'' மனிதர் என்றும், தங்கள் பிராண்ட் மீது அவர் ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம்…
-
- 0 replies
- 639 views
-
-
வைரலாகும் நவாஸ் ஷெரிஃப் - டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்,.அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிடம் போனில் பேசியுள்ளார். நவாஸ் பற்றி ட்ரம்ப் பேசியதை அப்படியே அறிக்கையாக வெளியிட்டுள்ளது பாகிஸ்தான். President Trump said Prime Minister Nawaz Sharif you have a very good reputation. You are a terrific guy. You are doing amazing work which is visible in every way. I am looking forward to see you soon. As I am talking to you Prime Minister, I feel I am talking to a person I have known for long. Your country is amazing with tremendous opportunities. Pakistanis are one of the most intelligent people. …
-
- 0 replies
- 592 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிச்செல் ஒருபோதும் போட்டியிட மாட்டார்: ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிச்செல் ஒருபோதும் போட்டியிட மாட்டார் என ஒபாமா திட்டவட்டமாக கூறியுள்ளார் வாஷிங்டன்: நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்காக பிரசாரம் செய்தவர், ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா. “நான் ஜனாதிபதி பதவிக்கு வந்தால் மிச்செல்லுக்கு மந்திரி பதவி அளிப்பேன்” என ஹிலாரி கூறி இருந்தார். ஆனால் தேர்தலில் அவர் தோல்வியை தழுவ நேரிட்டது. ஒரு பெண், முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஆகி…
-
- 0 replies
- 216 views
-
-
தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்! தாய்லாந்து நாட்டில் எழுபது ஆண்டுகாலம் மன்னராக வீற்றிருந்த பூமிபால் அதுல்யதேஜ் கடந்த மாதம் இயற்கை எய்தினார். புதிதாக இளவரசர் மஹா வஜ்ர அலங்காரன் மன்னராக முடிசூடவுள்ளார். இந்த நிகழ்வுக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மன்னராட்சி நடக்கும் தாய்லாந்து நாட்டில் அரசர்கள் இறைவனின் அவதாரமாகக் கருதப்படுகின்றனர். சிவன் மற்றும் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதி அரசனுக்கு முடிசூட்டும் வழக்கம் அங்கு உள்ளது. இந்த பாரம்பரியம் தமிழ்நாட்டின் பல்லவர்கள் மரபில் இருந்து உருவானதாகும். சோழ மன்னர்கள் இதனை பின்பற்றினர். இப்போதும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக…
-
- 3 replies
- 5k views
-
-
அதிபர் பதவிக்காக சொந்த வர்த்தகத்தை கைவிடப்போவதாக டிரம்ப் அறிவிப்பு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது சொந்த வர்த்தக வேலைகளை விட்டுவிடப்போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக செயல்படும் தனது பொறுப்பில் கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான முடிவை எடுப்பதற்கு தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தனது தொழிலுக்கும் தனது பதவிக்கும் இடையில் முரண்பாடு வராமல் இருக்க இப்படி ஒரு முடிவை எடுத்ததாக அடுத்தடுத்த டிவிட்டர் செய்திகளில் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த மேலும் விவரங்களை, டிசம்பர் மாதத்தின் இடைத் தேதிகளில், தனது குழந்தைகளுடன் சேர்ந்து செய்தியாளர…
-
- 3 replies
- 407 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * விமான விபத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்களுக்கான, ரசிகர்கள் அஞ்சலி. விபத்து குறித்த புலன்விசாரனைகளும் ஆரம்பித்துள்ளன. * மொசூல் நகரைக் கைப்பற்றும் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு இன்னும் சிக்கியுள்ளவர்கள் மற்றும் வெளியேறியவர்களின் நிலையை ஆராய்கிறது பிபிசி. * பெண்களை பணிக்கமர்த்தி ஊழலை களைய முயல்கிறது மெக்ஸிகோ. அந்த நாட்டின் பெண் காவல் அதிகாரி ஒருவரை நூறு பெண்கள் தொடருக்காக சந்தித்தது பிபிசி.
-
- 0 replies
- 372 views
-
-
பைலட்கள் வேலைநிறுத்தம்: லுப்தான்ஸா நிறுவனத்தின் 876 விமானச் சேவைகள் இன்று ரத்து ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ‘லுப்தான்ஸா ஏர்வேஸ்’ நிர்வாகத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான விமானிகள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 876 விமானங்களின் இயக்கம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிராங்ப்ரட்: ஐரோப்பா மற்றும் ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ‘லுப்தான்ஸா ஏர்வேஸ்’ நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஜெர்ம…
-
- 0 replies
- 271 views
-
-
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட்டால் பேரழிவு ஏற்படும்: டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் எச்சரிக்கை அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சி.ஐ.ஏ. இயக்குநர் ஜான் பிரன்னன் கூறியதாவது:- அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கைவிடப் போவதாக டொனால்டு டிரம்ப் அச்சு…
-
- 0 replies
- 288 views
-
-
76 பேரின் உயிரை காவுகொண்ட விமான விபத்து ; கணவரை காப்பற்றியமைக்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்த பிரேசில் வீரரின் மனைவி பிரேசில் நாட்டின் செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக அணி சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில் 76 கொல்லப்பட்டதுடன், 6 உயிருடன் மீட்கப்பட்டனர். உயிருடன் மீட்கப்பட்ட கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் தற்போது கால்பந்தாட்ட அணி வீரர் எலன் ரொச்சல் காப்பாற்றப்பட்டு ஸ்பெயினில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்நிலையில் இவர் காப்பாற்றப்பட்டமைக்கு அவரது மனைவி “ கணவரை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி”, “நாங்கள் அவர் குணமாவதற்காக தொடர்ந்தும் கடவுளை பிராத்திக்கின்றோம்”…
-
- 0 replies
- 331 views
-
-
மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு மரியாதை: ஹவானாவில் மிகப் பெரிய பேரணி கடந்த வெள்ளிக்கிழமை தனது 90-வது வயதில் காலமான கியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு மரியாதை செய்யும் வகையில் ஒரு மிகப் பெரிய பேரணி தற்போது கியூபாவின் தலைநகர் ஹவானாவில் நடந்து கொண்டிருக்கிறது. ஹவானா புரட்சி சதுக்கத்தில் பேரணி ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் மற்ற புரட்சிகர தலைவர்களின் போராட்டங்களை விளக்கும் பழைய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டும், கியூபாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டும் இந்த பேரணி நிகழ்வு தொடங்கியது. வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் பொலிவியா அதிபர் ஈவோ மொராலெஸ் ஆகியோர் உள்ளிட்ட உலக மற்றும் பிராந்திய தலைவர்கள், இந்த…
-
- 0 replies
- 316 views
-
-
எலியனின் நண்பர் ஃபிடல் இறந்து விட்டார் எலியன் கொன்ஸாலீஸ் தனது நண்பரை இழந்துவிட்டான். "கியூபா ஒரு நரகம். யாரால் இங்கே இருக்க முடியும்? நாம் அமெரிக்காவுக்குப் போய்விடுவோம்" என்று ஆண் நண்பரோடும் ஆறு வயது மகன் எலியனோடும் கள்ளத் தோணியில் ஏறினார் விவாகரத்தான எலிசபெத். அந்த அலுமினியப் படகின் ஓட்டை இன்ஜினால் 10 பேரைத் தாங்க முடியவில்லை. நடுக் கடலில் கவிழ்ந்த அதன் மேல் உட்கார்ந்துகொண்டு எலியன் தப்பினான். கடற்படையினர் மீட்டு அமெரிக்காவில் வசித்த தாத்தா - பாட்டியிடம் அவனைச் சேர்த்தனர். 16 வருடங்களுக்கு முன் நடந்தது இது. அமெரிக்க - கியூப உறவுகளின் கவுரவப் பிரச்சினையாகவும் மாறியது இது. ஒற்றைச் சிறுவனுக்காக ஒட்டுமொ…
-
- 0 replies
- 613 views
-
-
'அமெரிக்க கொடியை எரித்தால் குடியுரிமை ரத்து'- ட்ரம்ப் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அதிபராக பதவியேற்கும் முன்பே அதிரடி காட்டி வருகிறார் ட்ரம்ப். இதற்கிடையே அவரது லேட்டஸ்ட் ட்வீட்டில், 'அமெரிக்க கொடியை எரிப்பதை அனுமதிக்க முடியாது. அப்படி எரித்தால் அதற்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக அவர்களது குடியுரிமை ரத்து செய்யப்படும் அல்லது ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என்று கூறியுள்ளார். Donald J. Trump ✔ @realDonaldTrump Nobody should be allowed to burn the American flag - if they do, there must be consequences - p…
-
- 1 reply
- 631 views
-
-
விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து வெளியில் குதித்த பெண்: பயணிகள் அதிர்ச்சி அமெரிக்காவின் ஹூஸ்டன் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த பெண் ஒருவர் திடீரென வெளியே குதித்தால் மற்ற பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமா விமானம் ஒன்று நியூ ஓர்லியான்ஸில் இருந்து அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தது. விமானம் தரையிறங்கியதும். பயணிகளை இறக்கவிடக் கூடிய இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கீழே இறங்குவதற்காக தங்களை தயார் படு…
-
- 0 replies
- 418 views
-
-
பிடல் காஸ்ட்ரோவின் மரணம்: அஞ்சலியால் சர்ச்சையில் கனேடியப் பிரதமர் கியூபாவின் முன்னாள் பிரதமர் பிடல் காஸ்ட்ரோவின் மரணத்துக்கு, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த அஞ்சலி மூலமாக, சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ட்ரூடோவுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமரின் அறிக்கையில், "கியூபாவில் நீண்டகாலம் ஜனாதிபதியாக இருந்தவரின் மரணம் குறித்து அறிந்து, ஆழ்ந்த கவலையடைந்தேன். பிடல் காஸ்ட்ரோ, தனது மக்களுக்காக அரை நூற்றாண்டு காலமாகச் சேவையாற்றிய, அற்புதமான தலைவர் ஆவார். அற்புதமான புரட்சியாளரும் பேச்சாளருமான பிடல் காஸ்ட்ரோ, அவரது நாட்டின் கல்வியிலும் சுகாதாரத் துறையிலும் கணிசமான முன்னேற்றங்களை வழங்கினார். "எனது தந்தை, அவரை…
-
- 1 reply
- 514 views
-
-
பிரேசில் கால்பந்தாட்ட அணியை ஏற்றிச்சென்ற விமானம் விபத்து பிரேசில் நாட்டின் செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக அணியை ஏற்றிச்சென்ற விமானமொன்று கொலம்பியாவின் மெடலின் விமான நிலையத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இடம்பெறும் போது விமானத்தில் வீரர்கள் உட்பட 72 பயணிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க கால்பந்தாட்ட கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு குறித்த வீரர்கள் அழைத்துச்செல்லப்படும் போதே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. http://www.virakesari.lk/article/13980 கொலம்பியாவில் விமான விபத்து : பிரேசில் கால்பந்துக் குழுவினர் உட்பட 72 பேர் கதி என்ன ? பொலிவியாவிலி்ருந்து கொலம்பிய…
-
- 7 replies
- 1k views
-
-
ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுதந்திர கட்சிக்கு ஓராண்டில் மூன்றாவது தலைவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பிரசாரம் மேற்கொண்ட ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுதந்திர கட்சி, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக, அதனுடைய புதிய தலைவராக பால் நட்டாலை தெரிவு செய்திருக்கிறது. வெளியேறும் தலைவர் நிகெல் ஃபராஜ்-உடன் பால் நட்டால் (இடது) பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வாக்களித்திருந்தாலும், அந்த ஒன்றியத்திடம் இருந்து உண்மையிலேயே விலகுவதை உத்தரவாதம் செய்ய வேண்டிய வலுவான கடமை இந்த கட்சிக்கு இருப்பதாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பால் நட்டால் தெரிவித்திருக்கிறார். ஜூன் மாதம் நடைபெற்…
-
- 0 replies
- 384 views
-
-
ஜெர்மனி: ஒரு மில்லியன் இணைய தொடர்புகள் ஹேக்கர்களால் துண்டிப்பு இணைய வலையமைப்பில் புகுந்து சேவைகளை முடக்குவோர் ஏறக்குறைய ஒரு மில்லியன் பயன்பாட்டாளர்களின் இணைய தொடர்புகளை துண்டித்திருக்கலாம் என்று ஜெர்மனியின் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமான டோயிட்ச்சே டெலகாம் தெரிவித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய சேவையில் ஏற்பட்டிருக்கும் இந்த தடங்கல், வீடுகளுக்கு இணைய தொடர்புகளை வழங்கும் கருவிகளான ரவுட்டர்களை பாதித்துள்ளது. "வெளிபுறத்தார்" என்று அது கூறியிருப்போரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று இந்த நிறுவனம் கூறியிருக்கிறது. இதனால் அரசு பாதிக்கப்படவில்லை என்று ஜெர்மனி தெரிவித்திருக்கிறது. இத்தகைய முக்கிய இணைய உள…
-
- 0 replies
- 337 views
-
-
ஒஹியோ மாநில பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் காயம் அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் கொலம்பஸில் அமைந்துள்ள ஒஹியோ மாநில பல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றதில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் தலைநகர் கொலம்பஸ். அமெரிக்காவின் 15-வது மிகப்பெரிய நகராமான இங்கு ஒஹியோ மாநில பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழத்தில் இன்று காலை (அமெரிக்க நேரப்படி) துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் அபாய கட்டத்தில் இருந்து மீண்டு விட்டனர். மற்றவர…
-
- 1 reply
- 335 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * சிரியாவில் அலெப்போ நகரின் முக்கிய மாவட்டத்தை பிடித்துவிட்டதாக அரச ஆதரவு படைகள் கூறுகின்றன! இதனால், அங்குள்ள கிளர்ச்சிப்படைகளின் பகுதிகள் இரு பிரிவாக பிரிந்துவிடும்! * துருக்கியில் ஆட்சி கவிழ்பு சதி முறியடிக்கப்பட்ட பிறகு துன்புறுத்தல்கள் இடம்பெற்ற குற்றச்சாட்டை ஐ நா விசாரிக்கவுள்ளது!இது குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல்! * காசா பகுதியில் சைக்கிளில் வேலைக்கு போவதற்கு இருக்கும் தடையை மீறியப் பெண்ணொருவர் தனது அனுபவம் குறித்து பிபிசியிடம் பேசினார்!
-
- 0 replies
- 249 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு டொனால்ட் டிரம்ப் மூலம் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் வெற்றி பெற்றால் ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் விவகாரம் தொடர்பாக அவரை சிறையில் அடைப்பேன் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். எனினும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஹிலாரி கிளிண்டன் மீது வழக்கு பதிவு செய்யும் எண்ணம் இல்லை என டொனால்ட் டிரம்ப் கூறியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிகைகள் ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளன.அதில், ‘ஹிலாரி கிளிண்டனின் அறக்கட்டளை மூலமாக பெறப்பட்ட நிதியுதவிகள் மீது விசாரணை நடத்த டொனால்ட் டிரம்ப் த…
-
- 0 replies
- 481 views
-
-
இந்தியாவில் அமையவிருக்கும் உலகின் மிகப்பெரிய வழிபாட்டிடம் - விருந்தாவன் சந்திரோதயா கோயில் டெல்லியிலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தூரத்தில் இருக்கும் வி்ருந்தாவனில், உலகின் மிக உயரமான மத வழிபாட்டிடம் ஒன்றை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. விருந்தாவனில் அமையவுள்ள சந்திரோதயக் கோயிலின் வடிவமைப்பை சித்தரிக்கும் கணினிப் படம் இந்த கோயில் 5.5 ஏக்கர் பரப்பளவில் 700 அடி (213 மீ) உயரத்தில் அமையவுள்ளது; "விருந்தாவன் சந்திரோதயக் கோயில்" என்று கருதப்படும் இந்த கோயில் உலகின் மிக உயர்ந்த இந்துக் கோவிலாக இருக்கும் என கருதப்படுகிறது. வத்திக்கானில் இருக்கும் செயிண்ட் பீட்டர்ஸ் பெசிலிக்கா மற்றும் எகிப்தில் இருக்கும் பிரமிடை காட்டிலும் இது பெரியதாக அமையவுள்ளதாக தெ…
-
- 0 replies
- 405 views
-
-
ஆப்ரிக்காவில் காணாமல் போன குழந்தை, ஐரோப்பா சென்று, மீண்டும் தாயோடு இணைந்த (நிஜக்)கதை வட ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலிக்கு தனியாக பணயம் செய்த, குடும்பத்திலிருந்து தவறிவிட்ட 4 வயது குழந்தை ஒன்று, தற்செயலான நிகழ்வு ஒன்றால் அதனுடைய தாயோடு சேர்க்கப்படவிருக்கிறது. ஔமோக்கை கவனித்துக் கொள்ளும் காவல்துறை கண்காணிப்பாளர் மரியா வால்பே, (சிறுமியின் முகம் மறைக்கப்பட்டுள்ளது) ஔமோக்கின் பெண் பிறப்புறுப்பை அழித்துவிடாமல் அவளை காப்பாற்றுகின்ற நோக்கத்தோடு, இக்குழந்தையின் தாய் அவளை ஐவரி கோஸ்டில் இருக்கும் தந்தையின் குடும்பத்தில் இருந்து அழைத்து சென்றுவிட்டார். ஆனால், வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து வர சென்ற தாய் துனிசியாவிலுள்ள துனிஸ் நகரில் அவருடைய தோழியின் வீட்ட…
-
- 1 reply
- 514 views
-