Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க வரலாற்றில், அநியாயமான அரசியல் அவதூறு பிரசாரங்களால் பாதிக்கப்பட்ட நபர் நான்: டொனால்ட் டிரம்ப் பல பெண்கள் தன் மீது பாலியல் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டியதற்குப் பின், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வரலாற்றில், மோசமான அரசியல் அவதூறு பிரசாரங்களால் பாதிக்கப்பட்ட நபர் தான் எனப் புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக உள்ள டிரம்ப், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நூறு சதவீதம் பொய்யானவை என்று கூறியுள்ளார். தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் இந்தத் தேர்தல் தில்லு முல்லு நிறைந்தது என்றார். ஒரு தசாப்தத்திற்கு முன்பு, பெவர்லி ஹில்ஸ் ஹோட…

  2. போலி கால் சென்டரில் பேசி அமெரிக்கர்களை ஏமாற்றிய 750க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள தானே நகரத்தில் ஒரு போலி கால் சென்டரில் இருந்து அமெரிக்கர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தது அவர்களை ஏமாற்றியதாக எழுந்துள்ள சந்தேகத்தின் பேரில் 750க்கும் மேற்பட்டவர்களை போலிசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள், அமெரிக்காவில் வரி செலுத்த தவறியவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல்களைப் பெற்று அவர்களை தொடர்பு கொண்டனர் என்று போலிசார் தெரிவித்துள்ளனர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தி அவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பெற்று, பின்னர் பணத்தை எடுத்துக்கொண்டனர். …

  3. ஜெர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட அகதியை தேடிவரும் போலிஸார் போலிஸார் சந்தேக நபரின் வீட்டில் சோதனையிட்ட போது ஜெர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்திற்குள்ளான சிரியாவைச் சேர்ந்த நபரை போலிஸார் தேடி வருகின்றனர். ஜெர்மனியின் கிழக்கில் உள்ள கெம்னிட்ஸ் நகரில், அவரின் வீட்டை சோதனையிட்டதில் பெருமளவு வெடிபொருட்களை கண்டறிந்ததையடுத்து போலிஸாரால் அவர் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேடப்பட்டுவரும் நபரான 22 வயதாகும் ஜபெர் அல்பக்கர் சோதனையிட்ட போது வீட்டில் இல்லை; சந்தேகத்திற்குரிய நபருடன் தொடர்புடையதாக கருதப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் சமீபத்தில் வந்த அகதிகள் கூட்டத்தில் தேடப்பட்டு வரு…

  4. பெர்லின் தாக்குதல் திட்டம்: இஸ்லாமியவாத மதகுரு மீது சிரிய அகதியின் சகோதரர் குற்றச்சாட்டு பெர்லின் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்ட சிரியா அகதி, ஜெர்மன் தலைநகரத்தில் உள்ள இஸ்லாமியவாத போதகரால் தீவிர உணர்வுமிக்கவராக மாற்றப்பட்டதாக அவருடைய சகோதரர் தெரிவித்துள்ளார். லெயிப்ஸிக் சிறைச்சாலை டேர் ஷ்பீகல் என்ற நாளிதழுக்கு அவருடைய சகோதரர் அளித்துள்ள பேட்டியில், ஜபர் அல் பக்ர் 2014 ஆம் ஆண்டு சிரியாவிலிருந்து தப்பி வந்து ஜெர்மனியில் வசித்த போது இஸ்லாமிய மதகுரு ஒருவரால் மூளைச்சலவை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சிரியாவிற்கு மீண்டும் திரும்ப ஜபர் மதகுருவால் ஊக்கப்படுத்தப்பட்டதாகவ…

  5. இன்றைய நிகழ்ச்சியில், * தன் மீதான புதிய பாலியல் புகார்களை மறுக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்; குடியரசுக்கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் மீது மிஷெல் ஒபாமா கடும் தாக்குதல். * வங்கதேச எதிர்கட்சிகள் ஒடுக்கப்படுவதாக அதிகரிக்கும் புகார்கள்கா; காணாமல் போகும் எதிர்கட்சிக்காரர்கள் என்ன ஆகிறார்கள்? புலனாய்கிறது பிபிசி. * சிம்பன்ஸிகளுக்கு சிம்பன்சிகளாக இருப்பதற்கான பயிற்சி; இங்கிலாந்து மிருககாட்சி சாலையில் வித்தியாசமானதொரு முயற்சி; பிபிசியின் பிரத்யேக காட்சிகள்.

  6. ட்ரம்புக்கு எதிராக குவியும் பாலியல் புகார்கள் படம்.| ஏ.பி. அமெரிக்க குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக ஏராளமான பெண்கள் பாலியல் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டில், பெண்கள் குறித்து ட்ரம்ப் ஆபாசமாக பேசிய வீடியோ அண்மையில் வெளியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ஏராளமான பெண்கள் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள இரண்டு பெண்கள், ட்ரம்ப் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். பீப்பிள் மேகஸின் பெண் நிருபர் ஒருவர் கூறியபோது, ட்ரம்ப் தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாக கூறியுள்ளார். விமானப் பயணத்த…

  7. லிபியா கடற்கரைக்கு அருகே குடியேறிகள் சென்ற படகு விபத்து; 17 பேர் பலி லிபியா கடற்கரைக்கு அப்பால், குடியேறிகள் சென்ற ரப்பர் படகு பிரச்சினைக்கு உள்ளானதால் குறைந்தது 17 குடியேறிகள் கடலில் மூழ்கிப் போயுள்ளதாக நம்பப்படுகிறது. ரப்பர் படகு மூழ்கிக் கொண்டிருந்த போது விபத்து நடந்த பகுதிக்கு ஐரோப்பிய தொண்டு நிறுவன குழுக்கள் சார்பில் இயக்கப்படும் ஒரு மீட்பு கப்பல் விரைந்து வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால், கடல் சீற்றமிகுந்து காணப்பட்டதால் பலர் காணாமல் போனார்கள். காணாமல் போனவர்களில் மூன்று வயது குழந்தை ஒன்றும் அடங்கும். http://www.bbc.com/tamil/global-37650622

  8. ஜப்பானியருக்கு மருத்துவத்துக்கான நோபல்! #NobelPrize #Medicine உலகின் உயர்ந்த பரிசாக கருதப்படும் நோபல் பரிசுகள் இந்த வாரம் முழுக்க அறிவிக்கப்படும். இன்று ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில், மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வருடத்துக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, ஜப்பான் நாட்டை சேர்ந்த யோஷினோரி ஓஷுமிக்கு வழங்கப்பட உள்ளதாக நோபல் கமிட்டி அறிவித்தது. BREAKING NEWS The 2016 #NobelPrize #Medicine awarded to Yoshinori Ohsumi @tokyotech_en ”for his discoveries of mechanisms for autophagy” ஆட்டோபேஜி(Autophagy) எனப்படும் செல் தொடர்பான நிகழ்வின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்க…

  9. இன்றைய நிகழ்ச்சியில், * உலகின் மிக நீண்டகால முடியாட்சியின் அரசராக பதவி வகித்த தாய்லாந்து மன்னர் எண்பத்தியெட்டாம் வயதில் காலமானார். * இஸ்லாமிய அரசு என்னும் அமைப்பில் இருந்து விலகியவர்கள் எங்கே போவார்கள்? அப்படிப்பட்டவர்கள் வடக்கு சிரியாவிலுள்ள ரகசிய முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது குறித்த பிபிசியின் பிரத்யேகத் தகவல்கள். * பிரிட்டிஷ் நிறுவனம் உருவாக்கும் ஓட்டுனரில்லா ட்ராக்டர்கள்; விவசாயத்தின் எதிர்காலம் இதுதானா? ஆராய்கிறது பிபிசி.

  10. இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்: ஸ்காட்லாந்து முதல்வர் ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஸ்காட்லாந்து விடுதலைக்கான இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர், நிக்கோலா ஸ்டர்ஜன் உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் கிளாஸ்கோவில் நடைபெற்ற அவரது கட்சியான, ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி மாநாட்டின் போது, ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான மசோதா அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவத…

  11. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியவுடன், ஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் அணுகும் வாய்ப்பை அதிகபட்ச அளவில் பெற்றுத் தர தான் உறுதியுடன் இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் தெரீசா மே அவர் அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு உரிமையில் எந்தெந்த பகுதிகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தன்னை தானே கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அதற்கு மாறாக, பிரிட்டனின் குடிமக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்கான சரியான உறவைவத் தான் அது வேண்டுகிறது என்றார். பிரதமர் மே, ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தையில் பிரிட்டன் தொடர்ந்து உறுப்புரிமை வைத்திருக்க வேண்டும் என்பதற்க…

  12. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் புதிய பொதுச்செயலராக போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த ஆன்டோனியோ கட்டரஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. மன்றம் எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக தென்கொரிய நாட்டை சேர்ந்த பான்-கி-மூன் உள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் அவர் இந்தாண்டு இறுதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, புதிய பொதுச்செயலரை தெரிவு செய்யும் பணி நடைபெற்றது. இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் போர்த்துகல் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் அதிக வாக்குகள் பெற்று தெரிவானார். இவருக்கு ஐ.நா., பாதுகாப்பு சபையில் உள்ள 15 நாடுகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர் தற்போது ஐ.நா., சபையின் அகதிகள்…

  13. மேற்கு ஆசியாவில் ஒபாமா செய்ததென்ன? ஏழரை ஆண்டுகளுக்கு முன்னர், கெய்ரோ பல்கலைக்கழகத்தில் மூவாயிரம் பார்வையாளர்களின் முன்பாக உரை நிகழ்த்திய பராக் ஒபாமா, இஸ்லாமிய உலகத்துக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தரவிருப்பதாகச் சொன்னார். அவநம்பிக்கை மிகுந்த ஆண்டுகளைக் கடக்க முயற்சி செய்த அவர், இஸ்ரேல் - பாலஸ்தீன அமைதி முயற்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். அது தொடர்பாக நிலையான கொள்கை எதையும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும், அமெரிக்காவின் புதிய அதிபர், முந்தைய அதிபர்களின் தவறுகளைச் சரிசெய்வதுடன், மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவுடனான அமெரிக்காவின் உறவில் புதிய அத்தியாயத்தைத் திறந்துவைப்பார் என்று பெரிதும் நம்பப்பட்டது. வெள்ளை மாளிகையைவிட்ட…

  14. "தி டவர்" துபாயில் புதிதாய் அமைந்துவரும் 'கிரீக் ஹார்பர்' பகுதியில் உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் "தி டவர் (The Tower)" எனும் பெயரில் அமைக்க துபாய் அரசரால் கடந்த 10 திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கட்டிடத்தின் இறுதியான உயரம் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் உயரம், சவுதி அரபியாவில் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வரும் 1000 மீ உயரமான கிங்டம் டவரை விட அதிக உயரமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. துபாயில் வரும் 2020 வருடம் நடைபெறவுள்ள "எக்ஸ்போ 2020" விழாவிற்கு முன்பாக இக்கட்டிடம் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.. புர்ஜ் கலீஃபா கட்டிடத்தை கட்டிய எம்மார் நிறுவனமே இதற்கும் பொறுப்பேற்…

  15. இன்றைய நிகழ்ச்சியில், * நவீன அடிமை வர்த்தகம் எப்படி இயங்குகிறது? ஆட்கடத்தல் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நாடுகளில் ஒன்றான ரொமேனியாவிலிருந்து பிபிசி தரும் பிரத்யேக செய்தித் தொகுப்பு. * ஹைதியில் காலரா தொற்றுக்குள்ளாகும் குழந்தைகளின் அவலம்; மேத்யூ சூறாவளியால் காலரா மேலும் பரவலாமென அதிகரிக்கும் அச்சம். * இரண்டாம் உலகப்போரின் துவக்கத்தை அறிவித்த செய்தியாளருக்கு நூற்றி ஐந்தாவது பிறந்ததினம்; ஆச்சர்யமான ஒரு பிறந்ததின செய்தி ஒன்று அவருக்கு காத்திருந்தது.

  16. 5300 வயது பனிமனிதன் பேசுவது தமிழா?! ஆஸ்திரியா-இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? அந்த உடல் 90% சதவிகிதம் அப்படியே இருந்ததுதான். அதுமட்டுமல்ல அந்த மனிதன் பயன் படுத்திய பொருட்களும் அப்படியே பனியில் உறைந்து போயிருந்தது. மனித அறிவியல் வரலாற்றில் இப்படி முழுமையாக சிதிலமின்றி கிடைத்த மம்மி இதுதான். கடல்மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்…

  17. பிரான்ஸ் பயணத்தை ரத்து செய்தார் புதின், உறவுகளில் சிக்கலா? அடுத்த வாரம் பிரான்ஸூக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரத்து செய்திருக்கிறார். இந்த மாதத்தின் பிற்பாதியில் புதின் பிரான்சிஸில் பயணம் முற்கொள்ள இருந்தார் ஒரு ரஷ்ய பழமைவாத தேவாலயம் திறப்பு விழாவில், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்துடன் கலந்துகொள்ள இருந்த திட்டம் புதினுக்காக கைவிடப்பட்ட பிறகு, புதின் இந்த முடிவை எடுத்திருப்பதாக கிரம்ளின் கூறியுள்ளது. எந்தவொரு சந்திப்பும், சிரியா பற்றிய பேச்சுவார்த்தையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென ஒலாந்த் வலியுறுத்தியதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். அமைதியை முன்னெடுக்கும்போது எந்த நேரத்தில்…

  18. இன்றைய நிகழ்ச்சியில், * தனது அதிநவீன ஸ்மார்ட்போனின் தயாரிப்பை முற்றாக நிறுத்தியது சாம்சங் நிறுவனம்; Samsung Galaxy Note 7 வெடித்து எரிந்த செய்திகளைத் தொடர்ந்து வந்தது இந்த தடாலடி முடிவு. * முந்நூற்றி ஐம்பது கோடி டாலர் செலவில் கட்டப்படும் மிகப்பெரிய பாலம்; உக்ரைனில் இருந்து இணைத்துக்கொண்ட கிரைமியாவுக்கான 19 கிலோமீட்டர் நீள பாலம் கட்டும் ரஷ்யா. * தலை மற்றும் கழுத்துப்பகுதி புற்றுநோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கை; இம்யூனோதெரபி என்னும் புதிய மருத்துவ சிகிச்சையின் பலன்கள் பலமடங்கு அதிகம் என்கின்றன ஆய்வின் முடிவுகள்.

  19. ரத்த வெள்ளத்துடன் தந்தையைத் தேடிய சிறுமி! உலக பெண் குழந்தைகள் தினத்தில் வைரலாகும் வீடியோ பெண் குழந்தைகள் இந்த உலகத்தின் தேவதைகள்; அவர்கள், ஒவ்வொரு வீட்டின் அடையாளங்கள்; பெண் குழந்தைகள் பாதுக்காப்பட வேண்டிய பொக்கிஷங்கள். ஆம், அவர்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 11-ம் தேதி உலக பெண் குழந்தைகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில்தான் போரில் காயமடைந்து தன் தந்தையைத் தேடும் ஒரு சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாவதுடன், நம் அனைவரின் மனதையும் பதறவைக்கிறது. பொதுவாக பெண்கள் மீது நாம் எவ்வளவுதான் கோபம் கொண்டாலும், அவர்கள் அழும்போது நம்மால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியாது. அப்படியிருக்க, சின்னஞ்சிறு பெண் குழந்தை ஒன்று யுத்தத்தால் கடுமையாக பாதி…

  20. தொலைக்காட்சி விவாதத்தில் ஹிலரி, டிரம்ப் பரஸ்பர குற்றச்சாட்டு அமெரிக்காவின் அடுத்த அதிபராக போட்டியிடும் வேட்பாளர்களான டொனால்ட் டிரம்பும், ஹிலரி கிளிண்டனும் இரண்டாவது தொலைக்காட்சி விவாதத்தில் கசப்பான பரஸ்பர குற்றச்சாட்டுக்களை பரிமாறியுள்ளனர். ஒருவரையொருவர் மதிக்கின்ற அம்சம்: டிரம்பின் குழந்தைகளை போற்றுவதாக ஹிலரியும், ஹிலரி விட்டு கொடுக்காமல் இருப்பதை மதிப்பதாக டிரம்பும் தெரிவித்துள்ளனர் பாலியல் ரீதியாகப் பெண்களைத் தொடுவது குறித்து டிரம்பின் கருத்துக்கள், அவர் அதிபராக தகுதியற்றவர் என்பதை காட்டுகின்றன என ஹிலரி கூறியிருக்கிறார். அமெரிக்க வெளியுறவு அமைச்சாராக இருந்தபோது, தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தியதால் ஹிலரி சிறை…

  21. இன்றைய நிகழ்ச்சியில், *ஏட்டிக்கு போட்டியான கசப்பு வார்த்தைகள்; ஆனால் யாருக்கும் இறுதி வெற்றியில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான இரண்டாவது தொலைக்காட்சி விவாதத்தில் பிரதான பேசுபொருளானது பாலியல் தவறுகள். * ஏமெனில் துக்கவீட்டின் மீது சவுதி அரேபியாவின் விமான தாக்குதலில் நூற்றி நாற்பது பேர் பலியானதற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள். ஏமெனிய மக்கள் ஆர்பாட்டம்; அமெரிக்காவின் வன்மையான கண்டனம். * ஐவரி கோஸ்டில் கோகோ விவசாயத்தால் அதிகரிக்கும் பொருளாதார வளர்ச்சி; ஆனால் மழைக்காடுகளை அழித்து கோகோ பயிரிடுவது சரியானதா? ஆராய்கிறது பிபிசி

  22. கொலம்பிய ஜனாதிபதி நோபள் பரிசு பணத்தை நன்கொடையாக வழங்கினார் கொலம்பிய ஜனாதிபதி Juan Manuel தமக்கு கிடைக்கப் பெற்ற நோபல் சமாதான விருது பரிசுப் பணத்தை கடந்த 52 ஆண்டுகளாக அந்நாட்டில் இடம்பெற்று வந்த சிவில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டோர் நலன் திட்டத்திற்காக வழங்கியுள்ளார். கடந்த மாதம் பார்க் தீவிரவாதிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டமைக்காக, கொலம்பிய ஜனாதிபதிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்த சமாதான உடன்படிக்கை தொடர்பில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் சமாதான உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்திருந்தனர். இந்த சிவில் யுத்தத்தில் 2லட்சத்து 60,000 பேர் கொல்லப்பட்டிருந்த…

  23. ஐந்து ஆண்டுகளில் மூன்றரை லட்சம் பேர் படுகொலை! - சிரியாவில் நடப்பது என்ன? சிரியாவில் பஷர் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால், இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். எப்படி ஆரம்பித்தது சிரியா உள்நாட்டு யுத்தம்? சுமார் 30 வருடங்களாகச் சிரியாவை ஆட்சி செய்தவர் ஹஃபெஸ் அல் ஆசாத். இவர், 1990-ல் ‘எதிர்க் கட்சிகளுக்கான சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது’ என வெளிப்படையாக அறிவித்தார். இதனால், எதிர்க் கட்சிக்காரர்களின் பகையை அதிக அளவில் சம்பாதித்து வைத்திருந்தார். அப்போது, சில உள்நாட்டுப் பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்தன. 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்த…

  24. பில் கிளிண்டனின் பாலியல் வரலாற்றை டிரம்ப் கிளறுவாரா? ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் தொலைக்காட்சி விவாதத்தில், பெருங்கோடீஸ்வர வர்த்தகரான டொனால்ட் டிரம்ப் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் பாலியல் வரலாற்றை பயன்படுத்தக்கூடும் என்று டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார். டிரம்ப் கோபுரத்திற்கு வெளியே வந்து ஆதரவாளர்களை வாழ்த்தும்.டொனால்ட் டிரம்ப் டிரம்ப் மற்றும் ஹிலரி இருவரின் அந்தரங்க வாழ்க்கையிலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகள் உள்ளன என்று ரூடி ஜூலியானி தெரிவித்திருக்கிறார். பெண்கள் பற்றிய டிரம்பின் கீழ்த்தரமான கருத்துக்களால் எழுந்த கண்டனங்களுக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு த…

  25. வெடித்து சிதறிய “அஸோ” எரிமலை ; வானில் 11 ஆயிரம் மீற்றர் வரை சாம்பல் ; மக்களுக்கு கடும் எச்சரிக்கை (வீடியோ இணைப்பு) ஜப்பானின் குமாமோட்டோ பகுதியிலுள்ள “அஸோ” எரிமலை 36 ஆண்டுகளாக மவுனம்காத்து வந்த நிலையில் இன்று திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. குறித்த எரிமலை பயங்கரமான தீப்பிழம்புகளை மலையில் அடிவாரத்தை நோக்கி கொண்டுவருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த எரிமலை கக்கிவரும் சாம்பல் வானில் சுமார் 11 ஆயிரம் மீட்டர் உயரத்தை நோக்கி பாய்ந்து செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் எரிமலையில் இருந்து பாறைகள் வெடித்து சிதறும் என்பதால் பொதுமக்கள் யாரும் மலையை நெருங்கிச் சென்று…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.