உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26889 topics in this forum
-
புலியை... நேருக்கு நேர் சந்தித்து, போட்டோ எடுத்த பிரதமர் மோடி! ராய்ப்பூர்: ராய்ப்பூர் விலங்கியல் பூங்காவில் புலியை பிரதமர் மோடி எடுப்பது போன்ற புகைப்படம் டுவிட்டரில் வேகமாக பரவி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் ஆண்டு விழா "ராஜ்யோத்சவம்' என்ற பெயரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே அம்மாநிலத்தில் உள்ள நந்தன் வனவிலங்குகள் பூங்காவைப் பார்வையிட்டார். பூங்காவில் இருந்த விலங்குகளைப் பார்வையிட்ட அவர், வேலி அருகே நிற்கும் புலியைத் தனது கேமரா மூலம் புகைப்படம் எடுத்தார். பிரதமர் கேமராவில் படம் பிடிப்பது போன்ற…
-
- 2 replies
- 798 views
-
-
இரண்டாம் உலகப் போரின் 'ஹீரோ' மரணம்..?! கடந்த 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகக் போர் தொடங்கியது. சுமார் 6 ஆண்டுகள் நடைபெற்றது. ஜெர்மனியின் ஹிட்லருடன் சேர்ந்து கொண்டு சில நாடுகளும் பிரிட்டன் தலைமையில் நேச நாடுகளும் இரு தரப்பாக போரிட்டன. கிட்டத்தட்ட 10 கோடி வீரர்கள் போரில் பங்கேற்றனர். இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் நிகழ்வுகளை சந்தித்த போர் இது. கடந்த 1939-ம் ஆண்டு நாஜி ஜெர்மனி போலந்து மீது தாக்குதல் நடத்தியதே இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டது. போர் தொடங்கிய 2 ஆண்டுகளில் ஜெர்மனி தன்னை சுற்றியிருந்த பல நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டது. ஹிட்லரோ தன் வீரர்கள் மீது அக்கறை காட்டுவதை விட, யூதர்களை தேடி தேடி கொல்வதையும் கொடுமைப்படுத்துவதையும்தான் மு…
-
- 0 replies
- 486 views
-
-
வீதியோர கடைகளில் விற்கப்படும் பூனை கறி பிரியாணி: - அதிர வைக்கும் சம்பவம்! [Monday 2016-10-31 17:00] சென்னை ரோட்டோர கடைகளில் விற்கப்படும் உணவுகளில் பூனை கறி பயன்படுத்தி வருவது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.விலங்கு உரிமை ஆர்வலர்கள் பல்லாவரம் பகுதி இளைஞர்களின் உதவியோடு பூனைகள் இறைச்சிக்காக பயன்படுத்துவதை வீடியோவாக பதிவு செய்து ஆதாரத்துடன் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.குறித்த வீடியோவில் பூனைகளை உயிருடன் கொதிக்கும் தண்ணீரில் முக்கி கொன்று தோலை உரித்து இறைச்சிக்காக பயன்படுத்துவது பதிவாகியுள்ளது. விலங்கு உரிமை ஆர்வலர்கள் கொடுத்த புகாரை தொடர்ந்து பல்லாவரம் பகுதியல் உள்ள ரோட்டோர கடைகளில் பொலிசார்…
-
- 4 replies
- 874 views
-
-
என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார்: ஹிலாரி ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியுடன், மிச்செல் ஒபாமா. படம்: ஏபி. அமெரிக்க அதிபராக நான் தேர்தெடுக்கப்பட்டால் என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார் என ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹிலாரி பேசும்போது, "உலகம் முழுவதிலுள்ள பெண் குழந்தைகளின் கல்விக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்" என்றார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவாக தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மிச்செல் ஒபாமா குறித்த …
-
- 0 replies
- 354 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இராக்கிய அரச படைகள் மொசூல் நகரின் ஒரு பகுதிக்குள் நுழைந்துவிட்டதாக அறிவிப்பு; "சரணடை அல்லது செத்துமடி" - ஐ எஸ் போராளிகளுக்கு இராக்கிய பிரதமரின் இறுதி எச்சரிக்கை. * இணையத்தில் தொடர்ந்து அவமதிக்கப்படும் வங்கதேசப் பெண்ணின் கதை; பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி பதினைந்து ஆண்டுகளின் பின்னும் தொடரும் கொடுமை. * உலகின் முழுமையான முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை பிபிசி ஆரம்பித்து எண்பது ஆண்டுகள் ஆகின்றன; அந்த முதல் ஒளிபரப்பு எப்படி நடந்தது?
-
- 0 replies
- 452 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * FBI சட்டத்தை மீறி செயற்பட்டதா? ஹிலரி தொடர்பான மின்னஞ்சல் புகாரை மீண்டும் விசாரிப்பதாக FBI அறிவித்திருப்பது சட்டமீறல் என ஜனநாயக கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு. * இத்தாலியை தாக்கிய கடுமையான பூகம்பத்தை அடுத்து ஆபத்தான பின்னதிர்வுகள் தொடர்கின்றன; பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு மக்களுக்கு கோரிக்கை. * தென்கொரிய அதிபர் சம்பந்தப்பட்ட அரசியல் ஊழலின் மையத்தில் இருக்கும் ஒரு பெண், தனது செய்கைக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
-
- 0 replies
- 463 views
-
-
அகதிகளின் மரணங்களைத் தவிர்ப்பது எப்படி? ஆபத்தான பயணங்களைத் தடுக்க, அகதிகளுக்கான போக்குவரத்து உதவிகள் வழங்குவதை முதலில் நிறுத்த வேண்டும் பரந்துவிரிந்த கடல். அருகில் அடிவானம். கடலில் இருக்கும்போது உங்களால் எந்தத் தொலைவையும் அறிய முடியாது. ஒவ்வொரு அடி உயரும்போதும் அடிவானம் விலகுகிறது. கடல் எல்லைக்கு மேல் ஐந்து அடிக்கு மேல், ஒரு மிதவையில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் - கரையிலிருந்து மூன்று மைல்களுக்கு அப்பால். மூழ்கிக்கொண்டிருக்கும் உங்கள் படகிலிருந்து, லிபியாவை உங்களால் பார்க்க முடியும்; மீட்புக் குழுவினரின் வருகையையும். அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில், உதவிக் குழுக்களும் இத்தாலியக் கடல் காவல் படையினரும் லிபியா…
-
- 0 replies
- 331 views
-
-
ஹிலரியின் உதவியாளர் மின்னஞ்சல்களை சோதனையிடவுள்ள எஃப் பி ஐ ஹிலரி கிளிண்டனின் மூத்த உதவியாளர் ஒருவரின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை சோதனையிடுவதற்கான நீதிமன்ற உத்தரவை அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். ஹிலரி கிளிண்டன் வெளியுறவுச் செயலராக இருந்த போது தனியார் மின்னஞ்சல் சர்வர்களை பயன்படுத்தியது குறித்த விசாரணையை மீண்டும் தொடங்கவுள்ளதாக, வெள்ளியன்று மத்திய புலானாய்வுத் துறையின் தலைவர் ஜேம்ஸ் கோமி அறிவித்தார். அமெரிக்க செனட்டின் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஹேரி ரெய்ட், கோமியின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே உள்ள நெருங்கிய உறவு குறித்த ஆச்சரியத்திற்குரிய தக…
-
- 4 replies
- 495 views
-
-
சர்வதேச கால்பந்து போட்டியில் நடத்தப்படவிருந்த வெடிகுண்டு தாக்குதல் திட்டத்தை முறியடித்த செளதி அரேபியா செளதி அரேபியாவில் உள்ள ஜெடாவில் சர்வதேச கால்பந்து போட்டியில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடந்த திட்டமிடப்பட்ட சதியை முறியடித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கோப்புப்படம் செளதி அரேபியாவின் தேசிய அணி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில் கார் குண்டு ஒன்றை வைக்க சதி செய்யப்பட்டதாக செளதியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், போலிஸ் அதிகாரிகளை கொல்ல திட்டமிடப்பட்ட இரண்டாவது சதியையும் முறியடித்துள்ளதாகவும், இந்த திட்டத்தை சிரியாவில் உள்ள ஐ.எஸ் குழுவின் தலைவர் ஒருவர் வழிநடத்தியதாகவும் செளதி அமைச்சகம…
-
- 0 replies
- 240 views
-
-
நியூயார்க் இசை-நாடக அரங்கில் தூவப்பட்ட மர்ம தூள் மனித சாம்பலா? அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிரசித்தி பெற்ற மெட்ரோபொலிட்டன் ஓபரா ஹவுஸ் என்ற இசைநாடக அரங்கில் சனிக்கிழமையன்று (நேற்று) பார்வையாளர்களில் ஒருவர் தகன சாம்பல் என்று சந்தேகிக்கப்படும் தூளை அவ்வரங்கில் இருந்த இசை குழுவின் மீது தெளித்த பிறகு, அவ்வரங்கத்தில் நடைபெற வேண்டிய பிற்பகல் காட்சி நிறுத்தப்பட்டது. ஓபரா ஹவுஸ் கியோம் டெல் என்ற இசைக்குழுவின் நிகழ்ச்சி இடைவேளையின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், இது குறித்து சோதனை நடத்த தீவிரவாத எதிர்ப்பு பிரிவுகள் இந்த அரங்கு அமைந்துள்ள லிங்கன் மையத்துக்கு வந்தன. இந்த சம்பவம் நடைபெற்ற போது , அரங்கில் இருந்த ஒரு நபர் தனத…
-
- 0 replies
- 382 views
-
-
துருக்கி ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நீக்கம் துருக்கியில் கடந்த ஜூலை மாதம் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு காரணமாக இருந்ததாகப் பழிபோடப்பட்ட ஒரு மதகுருவுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை துருக்கி ஆட்சியாளர்கள் பணி நீக்கம் செய்துள்ளனர். துருக்கி அதிபர் எர்துவான் நேற்று (சனிக்கிழமை) மாலைக்கு பின் அவசரகால ஆணை ஒன்றில் துருக்கி அரசு இந்த பணி நீக்கப்பட்டியலை வெளியிட்டது. அதில், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரும் அடங்குவார்கள். இதுவரை துருக்கியில் 15 செய்தி ஊடகங்களை மூடக…
-
- 0 replies
- 394 views
-
-
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஐரோப்பா விரையும் கனடா பிரதமர் ஐரோப்பிய ஒன்றியத்தோடு பேரம் பேசி தீர்வு காண ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரஸல்ஸ் செல்கிறார். இந்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகளை இதுவரை போராட்டங்கள் தடுத்து வந்துள்ளன பெல்ஜியத்தின் வல்லோனியா பிராந்தியம் எழுப்பிய எதிர்ப்புக்களால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் தொடர்ந்து வந்தது. ஆனால் வியாழக்கிழமை இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இறுதியில் பெல்ஜியம் சனிக்கிழமை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பொருட்களுக்கான சுங்க வரிகளில் 99 சதவீத வரிகளை இந்த …
-
- 0 replies
- 255 views
-
-
தஞ்சம் கோருபவர்கள் ஆஸ்திரேலியாவை அடைவதை தடுக்கும் விதமாக புதிய சட்டம் அமல்? தஞ்சம் கோருபவர்கள் படகு மூலம் பயணம் செய்து ஆஸ்திரேலியாவை அடைவதை தடுக்கும் விதமாக அந்நாட்டு அரசு ஒரு கடுமையான புதிய சட்டத்தினை முன்மொழிந்துள்ளது. நருவில் உள்ள தடுப்பு மையம் ( கோப்புப் படம்) இதன் மூலம் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் வருகை புரியவோ அல்லது குடியேறுவதற்கு அனுமதிப்பதை தடுக்கவோ வழிவகையுள்ளது. ஆஸ்திரேலியாவில் நுழையும் முயற்சிகள் இறுதியில் வீணாகி விடும் என்று ஆள் கடத்தல் செய்யப்படுவார்களால் அனுப்பப்படுபவர்கள் தெரிந்து கொண்டதால், ஆள் கடத்தல் செய்யும் குற்றவியல் வர்த்தகத்தை இந்த புதிய சட்டம் தடுத்து நிறுத்தும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் …
-
- 0 replies
- 249 views
-
-
இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தெற்கு மற்றும் மத்திய இத்தாலியை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவுகோலில் இது 6.6 என்று பதிவாகியுள்ளது. ஞாயிறு காலை 7.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி தெருவுக்கு வந்தனர். நோர்சியாவில் கன்னியாஸ்த்ரீகள் சர்ச்சிலிருந்து வெளியே வந்தனர். மணிக்கூண்டு ஒன்று ஆடியபடி கீழே விழுந்து விடும் அபாயத்தை ஏற்படுத்தியதாக நேரில் பார்த்தவர்கள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். ரோம் நகருக்கு 132 கிமீ வடகிழக்கேயும் பெருகியாவுக்கு 67 கிமீ கிழக்கிலும் இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்குக் கீழ் 10கிமீ ஆழத்…
-
- 1 reply
- 276 views
-
-
எல்லையில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய ராணுவத்தினர்... பாகிஸ்தானுக்கு நோ ஸ்வீட்ஸ்ரீநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விளக்கேற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நாட்டை பாதுகாக்க வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இந்த தீபாவளி பண்டிகையை அர்பணிப்பதாக அவர்கள் உருக்கமுடன் தெரிவித்தனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு பாகிஸ்தானுடன் இனிப்புப் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று எல்லைப் பாதுகாப்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஜோரியில் கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை ஒருவித அச்சத்துடனேயே கொண்டாடினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான்…
-
- 0 replies
- 261 views
-
-
ஆண்களைவிட அதிக நேரம் உழைக்கும் இந்தியப் பெண்கள் உலக அளவில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ஆண்களைவிட பெண்கள் 39 நாட்கள் கூடுதலாக உழைப்பதாக உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த போக்கு கூடுதலாக இருக்கிறது. இந்திய ஆண்களைவிட இந்திய பெண்கள் ஆண்டுக்கு ஐம்பது நாட்களுக்கும் மேல் கூடுதலாக உழைப்பதாக இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 50 நிமிடங்கள் அதிகம் உழைப்பதாக உலக பொருளாதார அமைப்பின் பாலின சமத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய பெண்கள் அதைவிட இரண்டுமடங்கு நேரத்துக்கும் அதிகமாக உழைப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சராசரியாக இந்திய பெண்கள் ஒரு நாளைக்கு 120 நிமிடங்கள் ஆண்…
-
- 0 replies
- 215 views
-
-
இந்திய இராணுவ ரகசியங்களை அளிக்கும் உளவாளிகளை ஐஎஸ்ஐ எப்படி அணுகுகிறது? பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு இந்திய இராணுவத் தகவல்களை அளித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களுக்கு ஐஎஸ்ஐ என்ன சன்மானம் அளிக்கிறது என்ற தகவல்கள் விசாரணையில் வெளியாகியுள்ளன. மாதத்துக்கு ரூ.30,000-ல் இருந்து ரூ.50,000 வரை தகவல்களின் பயனைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. நிறைய ஆவணங்கள் கைமாறுகின்றன. அதில் சில பயனுள்ளவையாக இருக்கும். பல பயனற்றவையாக இருக்கும் என்று காவல்துறை உயரதிகாரி இணை ஆணையர் ரவீந்திர ஜாதவ் கூறியுள்ளார். பாகிஸ்தான் தூதரக ஊழியர் மஹ்மூத் அக்தர், ஐஎஸ்ஐ உளவாளியாக செயற்பட்டவர். இவர் ராஜஸ்தானிலும், குஜாரத்தி…
-
- 0 replies
- 324 views
-
-
ரஷ்யா இரண்டு வாக்குகளால் தோல்வி ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவத்திற்காக நடைபெற்ற தேர்தலில் ரஷ்யா இரண்டு வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. 47உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு 2017ஆம் ஆண்டுக்காக 14உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தெரிவு செய்யப்பட்டார்கள். இந்நிலையில் ஐ.நா பொதுச்சபையில் நேற்று வெள்ளிக்கிழமை மனித உரிமை பேரவைக்கு எஞ்சிய அங்கத்துவ உறுப்பு நாடுகளை தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஐ.நா.சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளும் பங்கேற்று இரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களித்தன. உலகின் அனைத்து மனித உரிமை அமைப்புகளும் சிரியாவில் இடம்பெறும் விடயங்களுக்கு மூலகாரணமாக ரஷ்யாவே காணப்படுகின்றத…
-
- 7 replies
- 888 views
-
-
பல ஆண்டுகால சர்வதேச சமரச பேச்சுக்களை அடுத்து, உலகின் மிகப்பெரிய கடல் வாழ் உயிரினங்களுக்கான சரணாலயம் அண்டார்டிகாவின் தூய்மையான நீர்ப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்று புள்ளி ஐந்து ஏழு மில்லியன் சதுர மைல்கள் பரப்புக்கொண்ட அதற்கான பகுதி நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவால் நிர்வகிக்கப்படும். http://www.bbc.com/tamil/science-37803415
-
- 0 replies
- 318 views
-
-
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்களிலும் அதிரடி பாதுகாப்பு சோதனை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட பொழுதுபோக்கு பூங்கா கடந்த வாரத்தில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மிகப் பிரபலமான கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் அமைந்துள்ள ட்ரீம்வேர்ல்ட் என்றழைக்கப்படும் பொழுதுபோக்கு பூங்காவில், நீர் சவாரி செய்யும் பிரிவில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான ஆய்வு விரைவில் தொடங்குவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்ட ட்ரீம்வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்கா மேலும், இம் மாத துவக்கத்தில் குயின்ஸ்லாந்தில் ஒரு கட்டட மனையில் சுவரொன்று இடிந்து விழுந்ததில் இருவர் பலியானா…
-
- 0 replies
- 456 views
-
-
மின்னஞ்சல் விவகாரம்: ஹிலரி கிளிண்டன் மீது எஃப்.பி.ஐ வழக்குப் பதிவு செய்யுமா? அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன், அந்நாட்டின் வெளியுறவு செயலராகப் பணியாற்றிய போது சில ரகசிய தகவல்களை அவர் கையாண்ட விதம் குறித்து விசாரித்து வரும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ, தங்களின் விசாரணைக்கு மிகவும் ஏற்புடையவை என்று தெரிவித்துள்ள சில புதிய மின்னஞ்சல்கள் குறித்த முழுத் தகவல்களையும் வெளியிடுமாறு, ஹிலரி கிளிண்டன், அந்த அமைப்பை கேட்டுக் கொண்டுள்ளார். ஹிலரி கிளிண்டன் (கோப்புப் படம்) இது தொடர்பாக கடந்த ஜுலை மாதத்தில் எஃப்.பி.ஐ. எடுத்திருந்த முடிவு, இந்த புதிய மின்னஞ்சல்களால் மாறாது என்று தான் திடமாக நம்பு…
-
- 0 replies
- 270 views
-
-
பிரிஸ்பனில் இந்திய வம்சாவளி பேருந்து ஓட்டுநர் எரித்துக் கொல்லப்பட்டதால் பரபரப்பு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 29 வயது மன்மீத் அலிஷர் என்ற பேருந்து ஓட்டுநர் அடையாளம் தெரியாத நபரால் எரித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபி சமூகத்தினரிடையே நல்ல பாடகராக திகழ்ந்த மன்மீது அலிஷர் பிரிஸ்பன் சிட்டி கவுன்சில் பேருந்தை ஓட்டி வந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் ஓட்டுநர் மீது எரியும் பொருள் ஒன்றை விட்டெறிய தீப்பிடித்து சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறிய படியே பேருந்தின் பின்கதவு வழியாக தப்பினர். இது தொடர்பாக 48 வயது நபர் ஒருவரை பிரிஸ்பன் போலீஸ் கைது செய்…
-
- 2 replies
- 302 views
-
-
அமெரிக்க விமானத்தில் தீ ; 8 பேர் காயம் (காணொளி இணைப்பு) அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகாகோவின் ஓ´ஹேர் விமான நிலையத்தில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/12879
-
- 0 replies
- 222 views
-
-
மதுராவில் உலகின் மிக உயரமான இந்துக்கோயில் புதுடில்லி : உலகமே வியக்கும் வண்ணம் மதுராவில் கிருஷ்ணனுக்கு 700 அடி உயரமுள்ள (213 மீட்டர்) ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் சதுரடியில் 70 மாடிகள் கொண்ட, பிரமாண்டமான, உலகின் மிகப்பெரிய கோவில் கட்டப்பட்டு வருகிறது. ( இதன் உயரத்தை ஒப்பிடும்போது தஞ்சை பெரிய கோவில் மற்றும் டில்லி குதுப்பினார் போல மூன்று மடங்கு உயரமாக கட்டப்பட்டு வருகிறது.(தஞ்சை பெரியகோவில் உயரம் 66 மீட்டர்) மிகப் பெரிய கோயில் : இஸ்கான் (The International Society for Krishna Consciousness) என்ற அமைப்பு, கிருஷ்ணன் அவதரித்த மதுராவில், உலகிலேயே பெரிய கோவிலாக பிரமாண்டமான கோவிலைக் கட்ட முடிவு செய்து பணிகள் துவங்கியுள்ளன. 62 ஏக்…
-
- 0 replies
- 431 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இயற்கை பாதுகாப்புக்கு ஒரு வெற்றி; அன்டார்ட்டிக்காவில், உலகின் மிகப்பெரிய கடல்சார் உயிரின சரணாலயத்துக்கு உடன்பாடு. * சீனாவின் ஒரு குழந்தைக் கொள்கை முடிவுக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது; ஆனால், இரண்டுக்கு மேற்பட்ட குழந்தையை பெற நினைப்பவர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் அபராதம் நீடிக்கிறது. * உலகின் மிகப் பிரபலமான பிக் பென் மணிக்கூண்டை பழுதுபார்க்கும் நேரம் வந்துவிட்டது; லண்டனின் இந்த அடையாளம் மராமத்து பணிகளுக்காக ஒலிக்காது ஓயும்.
-
- 0 replies
- 388 views
-