Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மதராசிப் பட்டணத்தில் சைவமாக இருங்கோ மக்கா. நட்சத்திர கோட்டல்களுக்கு வினயோகிக்க கொண்டுவரப்பட்ட கெட்டுப்போன, நாத்தமடித்த ஆட்டிறைச்சி மாநகர சுகாதார அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மாமூல் வாங்குபவர்கள் கூட மனச்சாட்சிக்கு விரோதமாக நடக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறது இறைச்சி நிலைமை. நட்சத்திர கோட்டல் இந்த நிலை என்றால், நடைபாதை சாப்பாட்டுக் கடைகள் நிலை? மூலம்: http://www.vikatan.com/now/16548?type=vik_now_self சென்ட்ரலில் 1000 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் சென்னை சென்ட்ரலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கெட்டுப்போன ஆயிரம் கிலோ ஆட்டிறைச்சியை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். இந்த இறைச…

  2. பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தற்கொலை தாக்குதல்: 11 பேர் பலி பாகிஸ்தானின் வட பகுதியில் இருக்கும் நீதிமன்றம் ஒன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். மார்தான் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் டஜன்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெஷாவரில் நடத்தப்பட்ட இன்னொரு சம்பவத்தில், கிறிஸ்தவ சுற்றுப்புறப் பகுதி ஆயுததாரிகளால் தாக்குதலுக்கு உள்ளானதாக ராணுவம் தெரிவிக்கிறது. இந்த தாக்குதல் மிக விரைவாக முடியடிக்கப்பட்டது என்றும், நான்கு ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என்றும் ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்தத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் தாலிபன் இயக்கத்த…

  3. இந்தியாவில் 10 லட்சம் தொழிலாளர் வேலைநிறுத்தம் ஊதிய உயர்வு கோரியும், அரசின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் இந்தியா முழுவதும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை, ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் பலமாக உள்ள கேரளம், மேற்குவங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வேலைநிறுத்தத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொருளாதாரத்தை மீட்டெடுக்க சீர்திருத்தங்கள் அவசியம் என அரசு கூறுகிறது. ஆனால், வங்கி, தொலைத் தொடர்புத்துறை மற்றும் பிற தொழில்…

  4. பீகாரின் Jehanabad பகுதியில் 10 வயது சிறுவன் தன் உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிய நான்கு பள்ளி மாணவிகளை காப்பாற்றியுள்ளான். கோபால்பூர் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஆற்றைக் கடந்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளனர். ஆற்றில் நீரின் ஓட்டம் வேகமாக இருந்ததால், அவர்கள் உயிருக்கு போராடியுள்ளனர். அசம்பாவிதத்தை கண்ட அங்கிருந்த 10 வயது சிறுவன் தன் உயிரை பற்றி கவலைப்படாமல் ஆற்றில் குதித்து ஒவ்வொரு மாணவியாக மீட்டு கரை சேர்த்துள்ளார். இதில் இரண்டு மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர், துணிச்சலுடன் செயல்பட்ட சிறுவன் நான்கு மாணவிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். உயிரை காப்பாற்றிய சிறுவனை பலர…

  5. அடைக்கல கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அனைவரையும் நாடு கடத்த தயாராகும் ஜேர்மனி அடைக்கல கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் நாட்டில் தொடர்ந்தும் வாழ்ந்து வரும் அனைத்து வெளிநாட்டவர்களையும் உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜேர்மன் ஆட்சித்தலைவர் ஏஞ்சலா மேர்க்கல் உத்தரவிட்டுள்ளார். அடைக்கல கோரிக்கையாளர்கள் விடயத்தில் மென் போக்கை கடைப்பிடிப்பதாக எதிர்கட்சிகளாலும் அவரது கட்சியினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட மேர்க்கல் இறுதியாக கடத்தும் முடிவை மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக றொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு கடத்தலை மேற்கொள்ளுவதே அடுத்த சில மாதங்களில் அரச இயந்திரம் எதிர்கொள்ளும் பிரத…

  6. பாரிய பூமியதிர்ச்சி ; சுனாமி எச்சரிக்கை நியூசிலாந்தில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறித்த பூமியதிர்ச்சி 7.2 ரிச்டராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்கரை பகுதியான ஜிஸ்போர்ன் என்ற பகுதியில் கடலுக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்திலே குறித்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த பூமியதிர்ச்சியினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. http://www.virakesari.lk/article/10876

  7. வடகொரியா: 'உயர்மட்ட கூட்டத்தில் தூங்கிய அதிகாரிக்கு மரண தண்டனை விதித்த கிம்' கிம் யோங் ஜின் வடகொரியாவில் அரசு உயர்மட்ட கூட்டம் ஒன்றில் அதிபர் கிம் ஜோங்கை அவமரியாதை செய்யும் வகையில் தூங்கிய அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக தென் கொரிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “வட கொரிய அதிபர் கிம் ஜோங் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகிறார். உடல் நலக்கோளாறு காரணமாக மயங்கிய அதிகாரி கிம் யோங் ஜின்னை தூங்கிவிட்டார் என குற்றம் சுமத்தி அதிபர் கிம் ஜோங் மரண தண்டனைக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சியையே கிம் ஜோங் நடத்தி வருகிறார்" என்றார். …

  8. பிரெஞ்சு நாட்டு பள்ளி குழந்தைகளுக்கு அரசின் புதிய பாதுகாப்பு நடவடிக்கை சமீபத்தில் நடந்த ஜிகாதி தாக்குதலுக்குப் பிறகு புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், 12 மில்லியன் பிரெஞ்சு நாட்டு குழந்தைகள் பள்ளிகளுக்கு திரும்பியுள்ளனர். தாக்குதல் நடந்ததால் அவர்கள் எவ்வாறு ஒளிந்து கொள்ள வேண்டும், தப்பிக்க வேண்டும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று பள்ளிக்கூட மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும். ஓர் ஆண்டில் மூன்று முறை பாதுகாப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். அதில் தாக்குதல் நடப்பது போன்ற ஒத்திகை நிகழ்வுகளும் நடத்தப்படும். பள்ளிகளில் தொடர்ச்சியாக ரோந்து நடத்தப்படும் மற்றும் பள்ளிகளின் நுழை வாயில்களும் பாதுகாப்பானதாக இருக்கும். கடந்த ஆண்டில் பாரிசில்…

  9. ஜெர்மனியின் பவாரியா மாகாணத்தில் அகதிகளை குடியமர்த்த புதிய சட்டம் கோப்புப்படம் ஜெர்மனியின் பவாரியா மாகாணத்தில் புதிய சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புதிய அகதிகள் எங்கு தங்க வேண்டும் என்பதை தெரிவிக்க அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் சலுகைகளை பெற அனைத்து அகதிகளும் மாகாணத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், நகரங்களிலோ அல்லது கிராமங்களிலோ அவர்களுக்கான வீடு ஒதுக்கித் தரப்படும். அங்கு அவர்கள் மூன்றாண்டுகள் வசிக்க வேண்டும். ஜெர்மானிய சமூகத்தில் அகதிகளை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட பல சட்டத்திட்டங்களில் இதுவும் ஒன்று. ஒரே நாடுகளிலிருந்து வந்த பல அகதிகளை ஒன்றிணைப்பதற்கு பதிலாக இந்த நடைமுறை கையாளப்படுகிறது. …

  10. மலேசிய முருகன் கோவிலை தாக்க முயன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவில் அதிக பகதர்கள் வந்து செல்லும் வழிபாட்டுத்தலமாகத் திகழ்கிறது. இந்நிலையில் இந்த கோவில், பொழுதுபோக்கு மையம் மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 3 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை மலேசிய தீவிரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று மலேசியா நாட்டின் சுதந்திர தினம் என்பதால் நேற்று மாலை இந்தத் தாக்குதலை நடத்திட தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது. முதல் தீவிரவாதியை செலங்கோர் மாநிலத்தில் வைத்து கையெறி குண்டுகள், துப்பாக்கியுடன் கடந்த 27-ம் திகதியும், மற்ற இரண்டு தீவிரவாதிகளை 29-ம் திகதியும் பொலிஸ…

  11. ஒரே விமானத்தில் பணியாற்றி பாகிஸ்தான் பைலட் சகோதரிகள் சாதனை பாகிஸ்தான் பைலட் சகோதரிகள் மர்யம் மசூத், எரூம் மசூத். பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் (பிஐஏ) பைலட்களாக பணியாற்றும் சகோ தரிகள் இருவர், போயிங் 777 ரக விமானத்தில் சேர்ந்து பணியாற் றினர். இதன் மூலம் ஒரே விமானத் தில் பணியாற்றிய முதல் பைலட் சகோதரிகள் என்ற சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து பிஐஏ செய்தித் தொடர்பாளர் தன்யல் கிலானி கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் மர்யம் மசூத், எரூம் மசூத் என்கிற 2 சகோ தரிகள் பைலட்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இரு வரும் வெவ்வேறு விமானத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலை யில் சமீபத்தில் இருவரும் ஒரே விமானத்தில் பணியாற்ற நேரிட்டது. இதன…

  12. 2050-ம் ஆண்டு உலக மக்கள் தொகை 1000 கோடியை எட்டும் - இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் உலக மக்கள் தொகை எதிர்வரும் 2050-ம் ஆண்டில் 1000 கோடியை எட்டிவிடும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு உலக மக்கள் தொகை மிக வேகமாக உயர்ந்து வருவதாகவும் கடந்த சில நூற்றாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த நூற்றாண்டில் மக்கள் தொகை அதிகரிப்பு மிக அதிகமாக உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளதார சமூக விவகாரங்களுக்கான திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 1000 கோடி எட்டும் போது ஆசிய நாடுகளின் மக்கள் தொகை 5.30 கோடியாக அதிகரிக்கும் என்றும் ஆப்பிரிக்கா நாடுகளின் மக்கள் தொகை 250 கோட…

    • 2 replies
    • 443 views
  13. இன்றைய நிகழ்ச்சியில் * ஐ எஸ் அமைப்பின் முக்கிய போராளி சிரியாவில் கொல்லப்பட்டார்; அவரை தாங்கள் குறிவைத்ததாக அமெரிக்காவும் ரஷ்யாவும் அறிவிப்பு. * சிங்கப்பூரில் ஸிகாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நூறாக அதிகரிப்பு; அதன் பரவலைத்தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது அரசாங்கம். * பறவையின் பறக்கும் திறனை புரிதுகொள்வதில் விஞ்ஞானிகள் வெற்றி; பறக்கும் ரோபோக்களை உருவாக்க இது உதவும் என்று நம்பிக்கை.

  14. மத்திய தரைக்கடலில் பச்சிளம் குழந்தைகளுடன் 3,000 குடியேறிகளை மீட்கும் பணி மத்திய தரைக் கடலில் தவிக்கும் மேலும் 3,000 குடியேறிகளை மீட்கும் பணிகளை ஒருங்கிணைத்து வருவதாக இத்தாலிய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள், லிபியா கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் எரித்ரியா மற்றும் சோமாலிய கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் . மீட்கப்பட்டவர்களில் மிகவும் இளையவர்கள் பிறந்து ஒரு வாரமே ஆன இரட்டையர்கள் ஆவர். கடலில் சீற்றம் குறைவாகவும், அமைதியாகவும் இருந்ததால், கடலில் ஐரோப்பாவிற்கு படகில் செல்லும் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமானதற்க…

  15. டெல்லி வெள்ளம்: படகு கேட்ட ஜான் கெர்ரி! #DelhiFloods⁠⁠⁠⁠ ‘‘நாம் வெளியே செல்ல வேண்டும் என்றால், நிச்சயம் படகு தேவைப்படும்’’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கிண்டலாகக் கூறும் அளவுக்கு டெல்லியில் மழை கொட்டோ கொட்டு எனக் கொட்டுகிறது. டெல்லியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியதை அடுத்து ட்ராஃபிக்கில் வாகனங்கள் சிக்கிக்கொண்டன. டெல்லி மக்கள் நேற்றே பெரும் அவஸ்தையை அனுபவித்த நிலையில், இன்று காலை முதல் மீண்டும் பலத்த மழை பெய்துவருகிறது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல வழிந்து ஓடுவதால், முக்கியச் சாலைகள் அனைத்தும் ஸ்தம்பித்து உள்ளன. வாகனங்கள் நத்தைபோல ஊர்ந்துசென்றதால், அலுவலகம் செல்பவர்கள் பெரிதும் ப…

  16. அரச அலுவலகங்களுக்கு ஐ.அ.எமிரேட்ஸ் பிரதமரின் திடீர் விஜயம் ; கடமைக்கு சமுகமளிக்காத 9 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு! 2016-08-31 11:46:41 துபாயின் அமீ­ரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட் அல் மக்தூம் துபா­யி­லுள்ள அரச அலு­வ­ல­கங்­க­ளுக்கு மேற்­கொண்ட திடீர் விஜ­யத்­தின்­போது, உயர் அதி­கா­ரிகள் பலர் அலு­வ­லங்­களில் இல்­லா­தி­ருப்­பதைக் கண்­ட­றிந்­துள்ளார். இதை­ய­டுத்து 9 சிரேஷ்ட அதி­கா­ரிகள் உட்­பட அதி­கா­ரிகள் பலரை பணி­ய­லி­ருந்து ஓய்வு பெறு­மாறு அவர் உத்­த­ர­விட்­டுள்ளார். 65 வய­தான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட், ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் உப ஜனா­தி­ப­தி­யா­கவும் பிர­த­ம­ரா­கவும் பதவி வகிப்­ப­துடன்,…

  17. வந்துவிட்டது பேராபத்து .! பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘லயன்ராக்’ புயல் ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள டோஹோக்கு மாகாணத்தில் மணிக்கு 120 முதல் 176 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று கரையை கடக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலினால் அடுத்த 24 மணிநேரத்தில் 35 சென்டிமீட்டர் அளவிலான பலத்த மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 110 உள்நாட்டு விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அந்நாட்டின் பிரபலமான டோயோட்டா கார் நிறுவனம் தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. ஷின்கான்சென் நகரின் வழியாக செல்லும் புல்லட் ரெயில்…

  18. உலகின் மிக வயதான மனிதர்: 145-வது வயதிலும் ஆரோக்கியமாக வாழ்கிறார் இம்பா கோத்தா இந்தோனேசியாவைச் சேர்ந்த இம்பா கோத்தா உலகின் மிக வயதான மனிதர் என்று அழைக்கப் படுகிறார். அவருக்கு வயது 145. இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பகுதி ராகன் நகரைச் சேர்ந்த வர் இம்பா கோத்தா. இவர் 1870 டிசம்பர் 31-ம் தேதி பிறந்தார். இதற் கான ஆவணங்கள் கிடைத்திருப்ப தாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உலகளா விய அளவில் ஏற்கப்படும்போது உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை இம்பா பெறுவார். இவர் நான்கு முறை திருமணம் செய்துள்ளார். 10 பிள்ளைகள் பிறந் துள்ளனர். ஆனால் மனைவிகளோ, பிள்ளைகளோ யாரும் இப்போது உயிருடன் இல்லை. பேரப்பிள்ளை களும் க…

  19. இன்றைய நிகழ்ச்சியில் * கடலில் காப்பாற்றப்பட்ட குடியேறிகள்; திங்களன்று மட்டும் 6500 பேர் மத்திய தரைக்கடலில் இருந்து மீட்கப்பட்டனர். * அதிகம் அறியப்படாத சுகாதார நெருக்கடியில் தென் ஆப்ரிக்கா; கர்ப்பகாலத்தில் பெண்களின் மது அருந்தும் பழக்கம் கருவின் சிசுவை மோசமாக பாதிப்பதாக எச்சரிக்கை. * நகரங்களை நோக்கி நகரும் சீனாவின் கிராமத்துப் பெண்கள்; காதலுக்கு ஏங்கும் ஆண்கள் நிறைந்த சீன கிராமம் ஒன்றுக்கு சென்ற பிபிசி, அங்குள்ள ஆண்கள் நிலவரம் குறித்து சேகரித்த செய்தித்தொகுப்பு.

  20. விமானத்தில் இருந்து கீழே விழுந்த எண்ணெய் தாங்கி : மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் எண்ணெய் தாங்கி கீழே விழுந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாகப்பட்டிணத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான சூப்பர் சோனிக் மிக் 29 கே விமானத்தில் உள்ள 2 எண்ணெய் தாங்கிகளை சரி பார்ப்பதற்காக விமானத்தை ஓட்டிச் சென்றனர். அப்போது அதில் ஒரு எண்ணெய் தாங்கி விமானத்தை விட அதிகமாக எடை இருந்ததால் அதை கடலில் விழ வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் திடீரென்று அந்த எண்ணெய் தாங்கி குடியிருப்பு பகுதியில் விழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப…

  21. இடி மின்னல் தாக்கி 323 மான்கள் பலி நோர்வே நாட்டில் உள்ள மலைப்பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் 323 மான்கள் உயிரிழந்தது நோர்வே நாட்டின் தெற்கு திசையில் உள்ள ஹர்டாங்கர் மலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில் மின்னல் தாக்கி அங்குள்ள காட்டு மான்கள் உயிரிழந்தன. இச்செய்தி நேற்று காலை நோர்வே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. காட்டு மான்கள் ஒன்றின் மேல் ஒன்றாக, கொம்புகள் சிக்கிக்கொண்ட நிலையில் இறந்து கிடந்துள்ளன. பலத்த மழை பெய்ததில் புயலும் வீசியுள்ளது. அதோடு மின்னல் தாக்கியதில் மான்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் இயற்கை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/artic…

  22. பிரான்ஸ் குடியேறிகள் பிரிட்டனில் தஞ்சம் கோரலாமா? பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்பர் ராட் பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்பர் ராட், பிரெஞ்சு உள்துறை அமைச்சரான பெர்னார் காஸ்நோவை இன்று சந்திக்கும் போது, குடியேறிகள் பிரான்ஸில் இருக்கும்போது ஜக்கிய ராஜ்யத்தில் தஞ்சம் கோரி விண்ணப்பம் செய்கின்ற கருத்தை நிராகரிப்பார் என்று மூத்த பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதிக்க இவ்விரு அமைச்சர்களும் பாரிஸில் சந்திக்கின்றனர். பிரெஞ்சு உள்துறை அமைச்சரான பெர்னார் காஸ்நோவ் நகரத்திற்கு வெளியே இருக்கும் முகாம் ஒன்றில் வாழ்ந்து வரும் குடியேறிகள், பிரான்ஸ் மண்ணில் இருந்து கொண்டே பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை வ…

  23. 'இன்னும் எத்தனை உயிர்ப்பலி வேண்டும் என் தேசமே?' சிதையும் சிரியா சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸ் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடைபெற்றது. அப்போது குடியிருப்புப் பகுதிகள் மீது தீமூட்டும் ஆயுதங்கள் (incendiary weapons) வீசப்பட்டன. அதில், காயமடைந்த ஒரு சிறுவனுக்கு முதலுதவி அளிக்க போதிய மருத்துவ வசதிகளும் மருந்துகளும் இல்லாததால், அந்தச் சிறுவனின் உடம்பிலுள்ள தீக்காயங்கள் மீது சேற்றைப் பூசி சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஹோம்ஸ் மாகாணத்தை, அதிபர் பஷார் அல் ஆஸாதின் படையினர் சுற்றிவளைத்து உள்ளனர். மேலும், அவர்கள் அத்தியாவசியப் பொருட்களான உணவு, மருத்துவப் பொருட்களை உள்ளே அனுமதிக்காததால் பொதுமக்கள் பெரும் சி…

  24. மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து ஏராளமான குடியேறிகள் மீட்பு கடந்த திங்கள்கிழமையன்று மத்தியதரைக் கடல் பகுதியிலிருந்து 6500 குடியேறிகளை மீட்கும் முயற்சியில் தாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக இத்தாலி கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. கோப்புப் படம் கடந்த சில வருடங்களில் குடியேறிகளை காப்பாற்றும் முயற்சிகளில், தனித்தனியான 40 பல தேச மீட்பு பணிகளை உள்ளடக்கிய மீட்பு நடவடிக்கை நடைபெற்ற கடந்த திங்கள்கிழமை மிகவும் பரபரப்பான நாட்களில் ஒன்றாக அமைந்தது என்று தாங்கள் அனுப்பிய செய்தியில் இத்தாலி கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. தங்களை மீட்க வந்த மீட்பு கப்பலை அடையும் முயற்சியில், எரித்திரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த குடியேறிகள் பலரும் கட…

  25. இன்றைய நிகழ்ச்சியில் * லிபியாவின் சியர்த் நகரை மீட்க அரச படைகள் கடும் போராட்டம்; இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் அமைப்புடனான மோதல் முன்னரங்கிலிருந்து பிபிசி செய்தியாளர் தரும் பிரத்யேகத் தகவல்கள். * நைஜீரியாவின் வடநகரான பாமாவின் இன்றைய நிலவரம் குறித்த பிபிசியின் நேரடித்தகவல்; போகோ ஹராம் பிடியில் இருந்து தப்பிய நகரம் இன்று கொடும் பஞ்சத்தின் பிடியில். * செவ்வாய் கிரக வாழ்க்கை எப்படி இருக்கும்? செவ்வாய் கிரகத்தின் நிலைமையை பிரதிபலிக்கும் ஹவாய் எரிமலைக்கருகே ஓராண்டு வாழ்ந்து பரிசோதித்த விஞ்ஞானிகளின் அனுபவப் பகிர்வு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.