உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
ரியோ டி ஜெனீரோவில் பதற்றம் ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தினால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி சென்ற பத்திரிகையாளர்கள் பஸ் மீது சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். குறித்த தாக்குதலில் பஸ்ஸின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளது.இந்த தாக்குதலில் 12 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ டி ஜெனீரோ நகரில் பாதுகாப்பு படைகளை சேர்ந்த சுமார் 85 ஆயிரம் பேர் காவல் பண…
-
- 0 replies
- 304 views
-
-
இலங்கையிலிருந்து வந்த இஸ்ரேல் பெண்ணிடம் இருக்கும் குழந்தை யாருடையது? கோப்புப்படம் இலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால், அவர் டெல் அவிவ் விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளார். 49 வயதான கெலிட் நாகாஷ் வைத்திருக்கும் குழந்தை அவருடைய பௌதீக ரீதியான குழந்தை தானா என்பதை அறிய டிஎன்எ சோதனை நடத்தப்படும். சோதனை எதிராக அமையுமானால், அந்த குழந்தை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் என்று ஆட்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். இலங்கையை விட்டு வருவதற்கு இன்னொரு குழந்தையின் கடவுச்சீட்டை பயன்படுத்தி இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்தபோது நாக…
-
- 5 replies
- 746 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * துருக்கிய விமானப்படையால் ரஷ்ய ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு இரு நாட்டு தலைவர்களும் முதல் தடவையாக சந்திக்கிறார்கள். இராஜதந்திர உறவுகள் மேம்படுமா? * உங்கள் கலாச்சாரம் மற்றும் குடும்ப மானத்துக்கு எதிரான போராட்டம். ஆண்களின் குற்றக்குழுவால் வழி தவறிய பிரிட்டனில் உள்ள ஆசிய முஸ்லிம் பெண் ஏனையவர்களுக்கு உதவ முயல்கிறார். * தன்சானியாவில் சர்க்கரைக்கான தட்டுப்பாடும், விலை மற்றும் வரி அதிகரிப்பும் வணிகங்களின் இலாபத்தை பாதிக்கின்றதாம்.
-
- 0 replies
- 408 views
-
-
நேபாலில் லட்சக்கணக்கில் எருமைகள் மற்றும் விலங்குகள் கோயில் திருவிழாவில் கொல்லப்படுவது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழத்துகிறது. உலகின் மிகப்பெரிய அளவிலான விலங்குகள் உயிர்த்தியாக திருவிழா நேபாலத்தில் உள்ள காதிமை (Gadhimai) கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. 2009 ல் நடந்த திருவிழாவில் மட்டும், பக்தர்கள் கொண்டுவந்த நீர் எருமை, ஆடு, பன்றி, கோழி, புறா, மற்றும் எலிகள் என 5 லட்சம் உயிர்கள் இரண்டு நாட்களில் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டன. இந்து மத தெய்வமான காதிமைக்கு விலங்குகளை பலி கொடுத்தால் தங்களுக்கு பாதுகாப்பும் செழுமையும் ஏற்படும் என்ற நம்பிக்கையில்தான் பக்தர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் விலங்குகளை கொண்டுவந்து கொடுக்கின்றனர். அவைகள் மொத்தமாக திருவிழா நாளில் படுக…
-
- 0 replies
- 399 views
-
-
போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது. பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி தனது புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில், போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட 143 பதிவுகளை செய்துள்ளார். அதில் சில வசனங்கள் ஆங்கில மொழியிலும், மேலும் மொழிபெயர்க்கப்பட்ட பல மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. 1.2 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது மூன்றாவது ஆண்டு நிறைவை ஒட்டி இன்ஸ்டாகிராமில் இணைந்தார் என்பது…
-
- 0 replies
- 244 views
-
-
உத்தரப் பிரதேசத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கீதம் பாட தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், தனியார் பள்ளி அதிகாரிகளால் சீல் வைத்து மூடப்பட்டது. தனியார் பள்ளி நிர்வாகியும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பஹாராவில் உள்ள எம்.ஏ. கான்வென்ட் என்ற தனியார் பள்ளியில் சுதந்திர தினத்தன்று தேசியக் கீதம் பாட தடை விதித்து அதன் மேலாளர் ஜியா உல் ஹக் என்பவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பள்ளியில் முதல்வராக பணியாற்றியவர் உள்பட 8 ஆசிரியர்கள் தங்களது வேலையை ராஜிநாமா செய்தனர். இதையடுத்து, அவர்கள் அளித்த பேட்டியில், கடந்த 12 ஆண்டுகளாகவே தேசியக் கீதத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் தகவலை வெளியிட்டனர். அந்தப் பள்ளி போதிய அனுமதியின்றி 20…
-
- 0 replies
- 297 views
-
-
மணிக்கு 1200 கி.மீ., வேக போக்குவரத்து: தயாராகிறது துபாய் துபாய்: மணிக்கு 1200 கி.மீ., வேகத்தில் பயணம் செய்யக் கூடிய போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் துபாய் மும்முரமாய் ஈடுபட்டுள்ளது. ஒரு டியூப் வடிவ அமைப்பை ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்திற்கும் இடையே ஏற்படுத்தி அதன் வழியே, 'கேப்ஸ்யூல்' போன்ற சாதனத்தில் அமர்ந்து பயணிகள் செல்லக் கூடிய வகையில் இப்போக்குவரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு இன்னமும் டிசைன் செய்யப்படவில்லை. எனவே, அடுத்த மாதம் உலகம் முழுவதும் உள்ள சிறந்த 100 பொறியாளர்களை அழைத்து, அவர்களுக்கிடையே 48 மணி நேரத்திற்கு ஒரு போட்டியை நடத்தி…
-
- 9 replies
- 665 views
-
-
எங்கே விழுந்தது மலேசிய விமானம்? - புதிய தகவல்கள் காணாமல் போன விமானத்தில் பயணித்த உறவினர்களின் துயரம் (கோப்புப்படம்) இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, 239 பயணிகளுடன் இந்தியப் பெருங்கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போன மலேசிய பயணிகள் விமானம் எம்.எச் 370, நிமிடத்துக்கு 20 ஆயிரம் அடி (6 ஆயிரம் மீட்டர்) வேகத்தில், மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்திருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எம்.எச். 370 விமானத்தின் தானியங்கி சிக்னல்களை ஆய்வு செய்ததில் இந்தத் தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கிடைத்த இந்தப் புதிய தகவல்களும், போயிங் விமான உற்பத்தி நிறுவனத்தின் பதிவிறக்கங்களும் …
-
- 0 replies
- 294 views
-
-
ஸ்ரீநகர், காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு அதிகாரி உள்பட 3 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். தேடுதல் வேட்டை காஷ்மீரில் அடிக்கடி ஊடுருவும் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக ராணுவமும், மாநில போலீசாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள குப்வாரா மாவட்டத்தின் மாச்சில் செக்டாரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல்…
-
- 0 replies
- 177 views
-
-
புதுடெல்லி, இந்தியா–பாகிஸ்தான் இடையே அணுகுண்டு வெடிக்கும் என்ற ஹிஸ்புல் முஜாகிதின் மிரட்டல் எங்களிடம் பலிக்காது என்று வெங்கையா நாயுடு கூறினார். அணுகுண்டு யுத்தம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதின் இயக்க பயங்கரவாதி சையது சலாகுதின், நேற்று கராச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘காஷ்மீரில் நடந்து வரும் சுதந்திர போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய தார்மீக கடமை, பாகிஸ்தானுக்கு இருக்கிறது. அப்படி பாகிஸ்தான் ஆதரவு அளித்தால், இந்தியா–பாகிஸ்தான் இடையே அணுகுண்டு யுத்தம் வெடிக்க வாய்ப்புள்ளது. காஷ்மீரில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களை சர்வதேச நாடுகள் கண்டுகொள்ளாமல் இருந்தால், இரு நாட்டு காஷ்மீரிகளும் தாங்களே விவகாரத்தை கையி…
-
- 0 replies
- 183 views
-
-
ரஷ்யாவில் உள்ள உலகின் ஆழமான ஏரிகளில் ஒன்றான சைபீரியாவின் பைக்கால் ஏரியில் 51 வயது மதிக்க தக்க நபரும் அவரது மனைவியும் மது குடித்து விட்டு ஏரியில் நீந்தி கொண்டிருந்தனர். கொண்டிருந்துள்ளனர். அப்போது அவரது மனைவி ஆழமான பகுதிக்குச் என்று காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அருகிலிருந்த இளைஞர் குழு ஒன்று அவரது கணவருக்கு உதவி செய்து பெண்ணை காப்பாற்றியுள்ளனர். பின்னர், மயக்க நிலையில் இருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் செயற்கை மூச்சு கொடுத்து காப்பாற்றியுள்ளார். இதனை கண்ட போதை கணவர் அவர்களை தள்ளிவிட்டு சத்தம் போட்டுள்ளார். பின்னர், கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார், இளைஞர்கள் அவரிடமிருந்து கத்தியை வாங்க முற்பட்டபோது, அவர் இரண்டு இளைஞர்களை சரமாரியாக குத்தியுள்ளார். …
-
- 3 replies
- 392 views
-
-
இரோம் ஷர்மிளா: முடிவுக்கு வந்துள்ள உலகிலேயே நீண்ட உண்ணாவிரதம் இந்தியச் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகளாக நடத்தி வந்த உண்ணாவிரதத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அவருடைய உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடைபெறயிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக பரப்புரை மேற்கொண்டு அரசியிலில் களமிறங்கப் போவதாகவும் கடந்த மாதம் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார். ஆயுதப்படைப் பிரிவுகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக அவர் இந்த நீண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். பிடியாணை இல்லாமல் கைது செய்வது, குறி…
-
- 1 reply
- 331 views
-
-
நேபாளத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை இலங்கையில் சட்டவிரோதமாக கடத்தல்காரர்கள் மறைத்து வைத்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக நேபாளத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக 79 புலம்பெயர் தொழிலாளர்களை நேபாள அதிகாரிகள் மீட்டுள்ளதாக நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து 19 நேபாள பிரஜைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பங்களாதேஷிலிருந்து 60 புலம்பெயர் தொழிலாளர்களை மீட்டுள்ளதாகவும் நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் Bharat Raj Paudyalகூறியுள்ளார். இலங்கையிலிருந்து மீட்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் பெண்களே என பொலிஸ் சிரேஸ்ட கண்காணிப்பாளர் Sarbendra Khanal தெரிவித்துள்ளார். கொழும்பில் 22 பெ…
-
- 0 replies
- 356 views
-
-
கூகுள் நிறுவனத்தின் பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் ; தீயிட்டு கொலை கூகுள் நிறுவனத்தின் நிதித்துறை முகாமையாளராக பணிபுரிந்துவந்த இளம்பெண் அமெரிக்காவின் காட்டுப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் நிதித்துறை முகாமையாளராக பணியாற்றி வந்த வனேசா மார்கோட்டி(27) மாசாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிரின்ஸ்டன் புறநகர் பகுதியில் வசித்து வந்த தனது தாயாரை சந்திக்க சென்றிந்த வேளையில், அங்குள்ள காட்டுப்பகுதியில் நடைபயிற்சி செய்யச் சென்றுள்ளார். மாலை வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.மகளின் கையடக்கத்தொலைபேசிற்கு தொடர்பு கொண்…
-
- 0 replies
- 584 views
-
-
புதிய அதிபர் என்ன செய்வார் உலகுக்கு? ஹிலாரி கிளின்டன் , டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் வேட்பாளர் தேர்வுக் கூட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலைப் புதிய நோக்குடன் அணுகவிருக்கிறது அமெரிக்கா. பலரும் நினைத்திருப்பதற்கு மாறாக, இந்தத் தேர்தலில் போட்டி கடுமையாகத்தான் இருக்கிறது. 1952 தேர்தலிலிருந்து நடந்த 16 தேர்தல்களைப் பார்க்கும்போது, 15 தேர்தல்களின்போது வேட்பாளர் தேர்வுக் கூட்டங்கள் முடிந்த இரண்டு வாரங்களில் கருத்துக் கணிப்புகளில் யார் முன்னிலையில் இருக்கிறாரோ, அவர்தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நடத…
-
- 0 replies
- 451 views
-
-
மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லும் உலகின் மிக அதிவேக ரயிலை சீனா அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பாக சீன அரசு நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லி வெளியிட்ட செய்தியில், அதிகபட்சமாக மணிக்கு 380 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயில் செங்ஜூ - ஷூஜூ இடையே இயக்கப்படும். அந்த இரு இடங்களுக்கு இடையேயான பயணத்தை மேற்கொள்ள தற்போது இயங்கும் வேக ரயில்கள் 2 மணி நேரம் 33 நிமிடம் எடுத்துக் கொள்கின்றன. புதிய அதிவேக ரயில் வெறும் 80 நிமிடம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். சோதனை ஓட்டத்தின்போது, அதிகபட்சமாக மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் புதிய ரயில் இயக்கப்பட்டது. புதிய அதிவேக ரயில் ஓடத் தொடங்கும்போது, உலகின் மிக வேகமாக இயக்கப்படும் ரயில் அதுவாக இருக்கும். சீனாவின் முக்கி…
-
- 2 replies
- 526 views
-
-
பசு மாடுகளை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் அப்பாவி தலித்துக்களை தாக்குதவதை நிறுத்திவிட்டு என்னை சுடுங்கள் என பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.தெலுங்கானா மாநிலத்திற்கு இன்று முதன் முறையாக விஜயம் செய்துள்ள மோடி இந்த செய்தியினை வெளியிட்டுள்ளார்.அப்போது, ‘தலித்துக்களை பயன்படுத்தி அரசியல் செய்வதை நிறுத்துங்கள்’ என மோடி பேசியுள்ளார்.‘’உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால், யாரையாவது தாக்க வேண்டும் என்றால், என்னை தாக்குங்கள். என்னுடைய தலித் சகோதரர்களை அல்ல. உங்களுக்கு யாரையாவது சுட வேண்டும் என்றால், என்னை சுடுங்கள். என்னுடைய தலித் சகோதரர்களை அல்ல’ என உருக்கமாக பேசியுள்ளார்.’’நம்முடைய தலித் சகோதரர்களை தாக்குவதற்கு என்ன காரணம்? அவர்களை தாக்குவதற்கு…
-
- 0 replies
- 661 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * பாகிஸ்தானின் குவெட்டா நகரில் மருத்துவமனை ஒன்று தாக்கப்பட்டதில் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டனர். * இபோலாவில் இருந்து சியரா லியோன் கற்றுக்கொண்ட பாடங்கள். அந்த தொற்று நோய்க்கான உதவிகள் அங்கு சுகாதாரத்துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த தகவல்கள். * கிழக்கு திமோரில் முதலைகள் ஆட்களை கொல்வதால் அவற்றை ஒரு பண்ணையில் அடைத்துள்ளனர். ஆனால், அவை புனிதமானவை என்பதால் அவற்றை அடைத்து வைப்பது தவறு என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
-
- 0 replies
- 424 views
-
-
பிரபல விமான தயாரிப்பு நிறுவனத்தின் மீது பிரிட்டன் குற்றவியல் விசாரணை மோசடி, லஞ்சம் மற்றும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐரோப்பிய விமான தயாரிப்பாளரான ஏர் பஸ் நிறுவனம் மீது பிரிட்டனின் தீவிர மோசடிகளை விசாரிக்கும் அலுவலகமானது குற்றவியல் விசாரணையை தொடங்கியுள்ளது. மூன்றாம் தரப்பு இடைத்தரகர்களை பயன்படுத்துவது தொடர்பாக எழுந்த முரண்பாடுகள் குறித்து இந்த விசாரணை கவனம் செலுத்தும் என ஏர் பஸ் நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. முக்கிய வணிக ஒப்பந்தங்களில் ஈடுபடுத்தப்படும் இடைத்தரகர்களை எதிர்ப்பதை உலகெங்கிலும் லஞ்ச எதிர்ப்பு சட்டங்கள் இலக்கு வைக்கின்றன. ஏர் பஸ் நிறுவனம் பிரான்சில் அதன் தலைமையகத்தை கொண்டுள்ளது. மேலும், ஐ…
-
- 0 replies
- 297 views
-
-
டெல்டா ஏர் நிறுவன கணினி அமைப்புகள் பழுது; ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு கணினி அமைப்புகள் பெரிய அளவில் பழுதான காரணத்தால், தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்ட டெல்டா ஏர் விமான நிறுவனத்தின் உலகளாவிய சேவைகளில், தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்கள் இயங்க தொடங்கியுள்ளன. ஆனால் இந்த அமெரிக்க விமானச் சேவை நிறுவனம், அதன் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம் எனவும் தாமதம் ஆகலாம் எனவும் எச்சரித்துள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள், விமான நிலையத்தில் பயணச் சீட்டைக் காட்டி நுழையும் இடங்களில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே பறந்து கொண்டிருக்கும் விமானங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அட்லாண்டாவில் உள்ள அதன் தலைமையகத்தில் ஏற்பட்ட மின் தடை காரண…
-
- 0 replies
- 361 views
-
-
நீதிமன்றம் மற்றும் காவல் துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள முதல் 10 ஐரோப்பிய நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சமீபகாலமாக எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை ஒப்பிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐரோப்பிய நாடுகளில் சட்டம் மற்றும் காவல் துறை மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதில் பின்லாந்து நாடு முதல் இடத்தில் உள்ளது. முதல் 10 நாடுகளின் பட்டியலின் விவரம் பின்லாந்து (94%) டென்மார்க் (91) நோர்வே (87) சுவிட்சர்லாந்து (87) சுவீடன் (84) லக்ஸம்பேர்க் (81) பிரான்ஸ் (81) ஆஸ்திரியா (81) எஸ்டோனியா (80) பிரித்தானியா (79) …
-
- 0 replies
- 268 views
-
-
பலுச்சிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி பாகிஸ்தானின் தென் கிழக்கு பகுதியில் இருந்த மருத்துவமனை ஒன்றில் குண்டு வெடித்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலுச்சிஸ்தான் மாகாணத்தின் தலைநகரமான குவெட்டாவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பான்மையானவர்கள் வழக்கறிஞர்கள் என்றும், அவர்கள் ஏற்கனவே முன்னர் கொல்லப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஒருவரது உடலை மருத்துவமனைக்கு உள்ளே எடுத்து செல்ல வந்தவர்கள் என்றும் மாகாணத்தின் உள்துறை அமைச்சர் அக்பர் ஹரிஃபல் தெரிவித்துள்ளார். வெடி குண்டு தாக்குதலை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. பாகிஸ்த…
-
- 1 reply
- 388 views
-
-
எதிர்ப்பு படைகளின் பிடியில் இருக்கும் அலெப்போ நகருக்கு உதவிகள் சிரியாவின் அலெப்போ நகரில், அரசுப் படைகளின் முற்றுகையை தகர்த்தபின், எதிர்ப்பு படைகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் பகுதிக்கு, சில உதவிகள் கிடைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. போராளிகளின் பிடியில் உள்ள அலெப்போவின் கிழக்குப்பகுதிக்கு, டிரக் ஒன்றில் காய்கறிகள் வந்தடைந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த பாதைகள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் ஆபத்து நிறைந்து உள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமையன்று நடந்த கடும் சண்டையில் போராளிகள் தங்கள் முற்றுகையை தகர்த்ததாக கூறுவதை அரசுப் படைகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். கிழக்கு அலெப்போவில் தங்கள் முற்று…
-
- 0 replies
- 308 views
-
-
நாட்டின் பிரபல அணு விஞ்ஞானிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய இரான் அமெரிக்காவுக்கு முக்கிய தகவல்களை கொடுத்ததாக குற்றஞ்சட்டப்பட்ட அணு விஞ்ஞானிக்கு தான் மரண தண்டனையை நிறைவேற்றி இருப்பதாக இரான் உறுதிப்படுத்தி உள்ளது. ஏழு ஆண்டுகளுக்குமுன், மெக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஷாஹ்ராம் அமிரி திடிரென காணாமல் போனார். மீண்டும் அமெரிக்காவில் அவர் தலைகாட்டிய போது, சி.ஐ.ஏ அதிகாரிகளால் தான் கடத்தப்பட்டதாக கூறினார். ஆனால், அங்கிருந்து தப்பி வந்ததாக அவர் கூறினார். பின், இரானுக்கு திரும்பிய போது, நாயகனைப் போன்ற வரவேற்பை பெற்றிருந்தார். பின்னாளில், விசாரணைகளுக்கு அமிரி உட்படுத்தப்பட்டார். தன் சொந்த விருப்பத்தின் பேரிலே அமிரி அமெரிக்க சென்றதாகவும…
-
- 0 replies
- 456 views
-
-
பெல்ஜியம் தாக்குதலில் ஈடுபட்டவர் அடையாளம் வெளியீடு பெல்ஜியத்தில் கடந்த சனிக்கிழமையன்று, இரண்டு பெண் போலிசார் மீது வெட்டுக்கத்தி தாக்குதல் நடத்தியவர், ஒரு அல்ஜீரியா பிரஜை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை கே.பி என வழக்கறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 2012ல் இருந்து அவர் பெல்ஜியத்தில் வாழ்ந்ததாகவும், அவர் மீது குற்றவியல் பதிவுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். போலிஸாரால் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னதாக, சார்லர்வாவில் உள்ள முக்கிய காவல் நிலையத்திற்கு வெளியே தாக்குதலின் போது அந்த தாக்குதல்தாரி 'அல்லாஹூ அக்பர்' ( கடவுள் பெரியவர்) என சத்தமிட்டார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமை…
-
- 0 replies
- 454 views
-