உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
பிரான்சிலுள்ள ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த இரண்டு பெரிய தீவிரவாத தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ள பிரான்சில், ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் மற்றொரு தீவிரவாத நடவடிக்கையாக இருக்குமோ என அந்நாட்டு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.தெற்கு பிரான்சில் உள்ள பொலினி பகுதியில் மெர்சில்லி என்ற நகர்ப்பகுதி உள்ளது.இங்கு செயல்பட்டு வரும் பார்முலா-1 என்ற ஓட்டலில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவன் நுழைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனை தொடர்ந்து அந்த ஒட்டலை சுற்றி நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஒட்டலுக்குள் சென்ற மனிதன், அங்கு…
-
- 0 replies
- 249 views
-
-
துருக்கியின் எதிர்காலம் யார் கையில்? துருக்கியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் நடத்திய ராணுவப் புரட்சியைப் பொதுமக்களே முறியடித்திருப்பது வரலாற்று நிகழ்வாகியிருக்கிறது. ராணுவப் புரட்சி நடப்பதற்கு எல்லா சாத்தியங்களும் கொண்ட, அரசியலமைப்பைக் கொண்ட நாடு அது. சுயாட்சி கொண்ட துருக்கி ராணுவம், இதற்கு முன்னர் ஜனநாயக அரசுகளை நான்கு முறை கவிழ்த்திருக்கிறது. துருக்கியின் ஆட்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையில் எப்போதுமே பதற்றநிலை இருந்துவந்திருக்கிறது. எனினும், 2002-ல் தயீப் எர்டோகன் தலைமையிலான ‘நீதி மற்றும் வளர்ச்சி’ கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், ராணுவப் புரட்சிகளெல்லாம் பழங்கதை என்ற நிலை உருவானது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த ராணுவப் புரட்சி அந்த …
-
- 1 reply
- 474 views
-
-
சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை வான்தாக்குதல் ; பொது மக்கள் 56 பேர் பலி சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் பிடியில் உள்ள கிராமத்தில் அமெரிக்க கூட்டுப்படை வான் தாக்குதலை நடத்தியது. அப்போது போர் விமானங்கள் ஐ.எஸ். இயக்கத்தினரின் நிலைகள் மீது குண்டுகளை வீசியவேளையில் தவறுதலாக மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் குண்டுகளை வீசி விட்டன. இந்த தாக்குதலில் சிறுவர்கள் 11 பேர் உள்பட பொது மக்கள் 56 பேர் பலியாகினர். மக்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேற முற்பட்டபோது குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்து விட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது. http://www.virakesari.lk/article/9184
-
- 0 replies
- 496 views
-
-
உலகிலேயே மிக வயதான சிறைக்கைதி வங்கதேசத்தில் விடுவிப்பு வங்க தேசத்தில் உலகின் மிக வயதான சிறைக்கைதியாக கருதப்பட்ட பெண்மணி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். நூறு வயதைத் தாண்டியவராகக் கருதப்படும் ஒஹிதுன்னிசா என்ற அவர், இருபது வருடங்களுக்கு முன்னர், குடும்பத் தகராறில் கொலை செய்ததாக குற்றச் சாட்டில் தவறாக தண்டிக்கப்பட்டார். நாட்டின் தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹாவின் தலையீட்டால், மேல் முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுவித்தது. ஒஹிதுன்னிசா தனது பார்வையை இழந்துவிட்டார் என்றும் பிறர் துணையால் மட்டுமே தற்போது அவரால் நகர முடிகிறது என்றும் கூறப்படுகிறது. ஆயுள் தண்டனையில் 20 ஆண்டுகள் சிறைவாசத்தை அவர் அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 1k views
-
-
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பிரபல நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை பொறியாளராக பணியாற்றி வருபவர் கன்னாராம் ஸ்ரீநிவாஸ். இவர் தனது மனைவி சுப்ரஜா, ஐந்துவயது மகள் மற்றும் நான்குமாத ஆண் குழந்தையுடன் இங்குள்ள விக்டோரியா பகுதியில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை தனது வீட்டு பால்கனியில் இருந்து கைக்குழந்தை ஸ்ரீஹனுடன் கீழே குதித்த சுப்ரஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தியாவில் உள்ள அவரது பெற்றோர் சுப்ரஜாவின…
-
- 0 replies
- 480 views
-
-
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்த ஒருபெண், அதே கல்லூரியில் படிக்கும் சகநண்பருடன், திருமணம் செய்யாமல் (லிவ்இன் டுகெதர் ரிலேஷன்ஷிப்) சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் வீட்டிற்கு வராததையடுத்து திடுக்கிட்ட பெற்றோர் காவல் நிலையத்தில் தங்களது பிள்ளைகளை காணவில்லை என்று புகார் அளித்தனர்.இதுபற்றி கல்லூரி நிர்வாகத்துக்கும் தகவர் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போனதாக கூறப்படும் மாணவனும் மாணவியும் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தது சக மாணவர்கள் மூலம் தெரியவந்தது. இதையடுதது, கடந்த ஜனவரி மாதம் அந்த மாணவனையும் மாணவியையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. கல்லூரிய…
-
- 0 replies
- 322 views
-
-
ஜெர்மனியில் ஓடும் புகையிரதத்தில் பயணிகள் மீது கோடரியால் தாக்குதல் ஜேர்மனி நாட்டின் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையிலான மின்சார புகையிரத்தில் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு 9.15 மணியளவில் பயணிகளில் ஒருவன் திடீரென கோடரி மற்றும் கத்தியால் சகப்பயணிகளை சரமாரியாக வெட்டியுள்ளார். குறித்த புகையிரதம் ஓச்ஸென்பர்ட் புகையிரத நிலையத்தை நெருங்கியபோது உள்ளே இருந்த பயணிகளில் ஒருவன் திடீரென கோடரி மற்றும் கத்தியால் சகப்பயணிகளை சரமாரியாக தாக்கியதில் 19 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். இதில் மூவரின் நிலமை கவலைக்கிடமாகவுள்ளது. ஓச்ஸென்பர்ட் புகையிரத நிலையத்தில் புகையிரதம் நின்றதும் தப்பி செல்ல முயன்றவ…
-
- 11 replies
- 726 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஜெர்மனிய ரயில் ஒன்றில் ஆப்கான் அகதி ஒருவர் தாக்குதலை நடத்தியுள்ளார். பதின்ம வயது தாக்குதலாளியின் அறையில் கையால் வரையப்பட்ட இஸ்லாமிய அரசின் கொடி கண்டுபிடிக்கப்பட்டது. * கடந்த பதினாறு வருடங்களில் எயிட்ஸ் குறித்த மிகப்பெரிய மாநாடு தென்னாப்பிரிக்காவில் தொடருகின்றது. அதேவேளை, தனது குடும்பத்தில் பெரும்பாலானோரை எயிட்ஸ்க்கு பலிகொடுத்து, தானும் எயிட்ஸ் நோயோடு வாழும் ஒரு இளைஞனை சந்தித்தோம். * மனிதனின் எதிர்கால உளவுக் கண்கள். மின்னணு மயமான வண்டுகள் மனிதனின் உயிரைக் காக்க தூர இருந்தே இயக்கப்படுகின்றன.
-
- 0 replies
- 270 views
-
-
சுவாதிக்கும், பெங்களூரில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் பதிவு திருமணம் நடந்துள்ளது என்று ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ், பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சுவாதி கொலை தொடர்பாக, ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசாரின் விசாரணையில், சுவாதியை கொலை செய்ததை ராம்குமார் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இது ஒரு பக்கம் என்றாலும், ராம்குமார் அந்த கொலை செய்யவில்லை. அவர் அதில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் ராமராஜ் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், ராம்குமார்தான் குற்றவாளி என்று கமிஷனரே கூறிய பிறகு, எதற்காக போலீசார் விசாரணை மற்றும் சிறையில் அணிவகுப்பு நடத்துகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பி…
-
- 2 replies
- 442 views
-
-
அரை நிர்வாண கோலத்தில் தண்டனை அனுபவிக்கும் துருக்கி இராணுவ வீரர்கள் ; அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர்.இந்த இராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1,500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இராணுவ புரட்சியில் ஈடுபட்ட 6,000 போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், பொலிஸாருக்கும், இராணுவீரர்களுக்கும் நடைபெற்ற சண்டையில் தோற்கடிக்கப்பட்ட இராணுவீரர்களை, துருக்கி குடிமகன்கள் அடித்து உதைக்கும் புகைப்படங்கள் மற்றும் இராணுவவீரர்களின் ஆடைகள் களையப்பட்டு, அவர்களின் …
-
- 2 replies
- 921 views
-
-
கார் மாநிலத்தில் உள்ள துமரி நலா வனப் பகுதிக்குள் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலால் 10 கமாண்டோ வீரர்கள் பலி, 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம். சந்தீப் ஜி தலைமையிலான மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கயா - அவுரங்காபாத் எல்லையில் உள்ள துமரி நலா வனப் பகுதிக்குள் ஊடுருவி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய துணை நிலை ராணுவ வீரர்கள் அந்த வனப் பகுதியை முற்றுகையிட்டு கடந்த இரு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அவர்களைப் பிடிக்க மத்திய பாதுகாப்பு படையான சி.ஆர்.பி.எப்-பின் 205வது கோப்ரா கமாண்டோ வீரர் கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் காட்டுக்குள் புகுந்து மாவோயிஸ்டு தீவிர வாதிகளை சுற்றி வளைத்தனர். இதனை அறிந்த மாவோயி…
-
- 0 replies
- 289 views
-
-
ஆசியாவின் கணித கற்பித்தல் முறைமை மாணவர்கள் கணிதத்தேர்வுகளில் வெற்றிபெற உதவுவதாக கருதப்படுவதால், தற்போது அந்த பயிற்றுவிப்புமுறை பிரிட்டனிலும் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது.ஆசிய கணித பயிற்றுவிப்பு முறையை பிரிட்டனிலுள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஊக்குவிப்பதற்காக, அரசு மேலதிக நிதியை ஒதுக்கியுள்ளது. சீனாவின் கணித கற்பித்தல் முறையை ஊக்குவிக்கும் பிரிட்டிஷ் அரசின் முயற்சி உரிய பலன் தருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். http://www.seithy.com/breifNews.php?newsID=161818&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 440 views
-
-
டெல்லியில் காஷ்மீருக்கு சுதந்திரம் தான் ஒரே வழி என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளருமான அருந்ததி ராய் உரையாற்றினார். FILE அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக காஷ்மீரிகளின் மூத்த தலைவரான சையத் அலிஷா கிலானி மீது வெறியர்கள் சிலர் காலணி வீசி ரகளை செய்தனர். அதனை முன்னதாக குறிப்பிட்ட அருந்ததி ராய், என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுதே எறிந்து கொள்ளுங்கள் எனக் கூறியவாறு தனது உரையைத் தொடங்கினார். காஷ்மீரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இடத்தை இந்திய காலனி ஆதிக்கம் பிடித்துக் கொண்டது. காஷ்மீர், இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி அல…
-
- 2 replies
- 354 views
-
-
துருக்கியில் இராணுவ புரட்சி என்ற போர்வையில் இஸ்லாத்தின் எழுச்சிக்கு எதிரான சதித்திட்டமொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த நாட்டிலோ அல்லது ஏதாவது ஒரு மூலையிலோ இஸ்லாம் எழுச்சி பெற்றால் அதனை அடக்கி ஒடுக்க அதற்கு எதிராக அந்த நாட்டு இராணுவத்தினர்களை அல்லது எதிர் கட்சிகளை தூண்டி விடுவதும் அவைகள் தோல்வி அடையும் பட்சத்தில் புதிதாக ஆயுத இயக்கங்களை அந்நாட்டு அரசுக்கு எதிராக உருவாக்குவதும் அதற்காக பாரியளவில் பணத்தினை செலவழிப்பதும் வரலாற்று ரீதியாக உலகில் நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளாகும். சிதைவடைந்த இஸ்லாமிய கிலாபத்தின் இறுதி தலைநகரான துருக்கியை பொறுத்தவரையில் இராணுவ புரட்சி என்பது புதியவிடயமல்ல. அந்த நாடு பல தடவைகள் இராணுவ புரட்சிக்கு முகம் கொடுத்த…
-
- 0 replies
- 378 views
-
-
பெய்ஜிங், ஹிஜ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பின் தளபதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரில் வன்முறை வெடித்து அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த வன்முறைக்கு பாகிஸ்தான் தூண்டுதலாக இருந்ததாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லூ காங் காஷ்மீர் வன்முறை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காஷ்மீர் வன்முறையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் சீனா எப்போதும் உறுதியான நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. இவ்விவகாரத்தில் அமைதியான முறையில் நிலையான தீர்வை காண இந்தியா முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக, சீனா பாகிஸ்த…
-
- 0 replies
- 181 views
-
-
ராணுவ புரட்சிக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கியில் 2,750 நீதிபதிகள் கைது துருக்கி ராணுவ புரட்சியின்போது உயிரிழந்த பொதுமக்களின் இறுதிச் சடங்கு இஸ்தான்புல்லில் நேற்று நடந்தது. இதில் அதிபர் எர்டோகன் (இடது ஓரம்) பங்கேற்றார். | படம்: ராய்ட்டர்ஸ் துருக்கியில் ராணுவ புரட்சிக்கு ஆதரவு அளித்த 2,750 நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். கடந்த 15-ம் தேதி இரவு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவ புரட்சியில் ஈடுபட்டனர். அதனை ஆளும் ஏ.கே. கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக முறியடித்தனர். புரட்சியில் ஈடுபட்டதாக …
-
- 3 replies
- 574 views
-
-
Nice official: Probably 30 people killed when truck runs through crowd By Steve Almasy, CNN Updated 6:21 PM ET, Thu July 14, 2016 …
-
- 17 replies
- 2.1k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * தோல்வியில் முடிந்த துருக்கி ஆட்சிக்கு எதிரான இராணுவப்புரட்சியின் எதிர்வினைகள் தொடர்கின்றன; எட்டாயிரம் காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம், நூற்றுக்கணக்கானாவர்கள் கைது. * பிரான்ஸின் நீஸ் நகரில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடெங்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி; அஞ்சலி செலுத்த வந்த பிரதமருக்கு எதிராக வெளிப்பட்டது அரசு மீதான அதிருப்தி * பிரிட்டிஷ் பள்ளிகளில் பரவலாகும் சீனக்கணித கற்பித்தல் நடைமுறை; எதிர்பாக்கும் பலன் தருமா? ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 281 views
-
-
"துருக்கி மரண தண்டனையை அறிமுகம் செய்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது" துருக்கி மரண தண்டனையை திரும்பவும் அறிமுகம் செய்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைத் தலைவர் ஃபெடரிக்கா மொகரினே எச்சரித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள், அமெரிக்க செயலர் ஜான் கெர்ரியை பிரசல்ஸில் சந்தித்த பிறகு, மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்பாட்டில் துருக்கி கட்டுப்பட்டுள்ளது என மொகரினே நினைவுறுத்தினார். வார இறுதியில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய ரிசப் தயிப் எர்துவான், ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட தலைவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை அவருக்கு கேட்டதாக தெரிவித்துள்…
-
- 0 replies
- 355 views
-
-
தமிழக மீனவனின் வாழ்வாதாரத்திற்காக, கட்சத்தீவினை மீட்க இங்கே போராட்டங்கள்நடத்தப்படுகின்றன. ஆனால் வணிகப் பேராசையால் இரு தீவுக் கூட்டங்களை ஆக்கிரமிக்க 6 ஆசிய நாடுகள் மல்லுக்கட்டி வருகின்றன. தெற்கு சீனக் கடலிலுள்ள பாரசெல்ஸ் மற்றும் ஸ்ப்ராட்லிஸ் தீவுகளை சீனா, தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய 6 நாடுகளும் தங்களுடையது, என்று சொந்தம் கொண்டாடுகின்றன. நடுவர் தீர்ப்பு நீதிமன்றம் சீனாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் சீனாவும் அமெரிக்காவும் அப்பகுதியில் போர் விமானங்களையும் கப்பல்களையும் நிலை நிறுத்தியுள்ளதால், தெற்கு சீனக் கடல் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. தெற்கு சீனக்கடலில் அமைந்திருக்கும் மனிதர்கள் வாழாத இரு தீவுக் கூட்டங்கள் தான் பாராசெல் …
-
- 0 replies
- 853 views
-
-
அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு எதிராக பெண்கள் நிர்வாணமாக போராட்டம் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8ஆம் தேதி நடக்க இருக்கிறது. அங்கு ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் பெரும் கோடீசுவரர் டொனால்டு டிரம்ப்பும் மோதுவது உறுதியாகி விட்டது. டொனால்டு டிரம்ப் அதிபர் ஆவதற்கு அந்த நாட்டில் பெண்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிளீவ்லேண்டில் உள்ள குடியரசுக் கட்சியின் தேசிய அலுவலகம் முன்பு திடீரென 100க்கும் அதிகமான பெண்கள் டொனால்டு அதிபர்…
-
- 0 replies
- 422 views
-
-
நான் யுஎஸ் அதிபரானால் ஐஎஸ் எதிராக போர் தொடுப்பேன்: டிரம்ப் சூளுரை டிரம்ப். | படம்: ராய்ட்டர்ஸ். நான் அமெரிக்க அதிபரானால் ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக போர் தொடுக்கப்படும் என சூளுரைத்துள்ளார் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்றுள்ளார். டிரம்ப் தனது பிரச்சாரத்தை தொடங்கியதிலிருந்தே பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பேசி வருகிறார். முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்படும் என அவர் கூறிய கருத்து சர்வதேச அளவில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. 'வீரர்களை விட வியகம…
-
- 0 replies
- 249 views
-
-
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 3 போலீசார் பலி அமெரிக்காவில் லூயிசியனா மாகாணத்தில் போலிசாரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்திருப்பதால், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. முகத்தை மறைத்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆயுததாரியை பிடிக்கும் முயற்சியில் போலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த நபர் கறுப்பு ஆடை அணிந்து, முகத்தை துணியால் மூடியபடி வந்ததாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடந்த அந்த பகுதி தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இருவாரங்கள…
-
- 2 replies
- 416 views
-
-
போக்கிமான் கேம் விளையாடிய ஆயிரக்கணக்கான மக்கள் நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில் ஒரே நேரத்தில் திரண்டதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் போக்கிமேன் மொபைல் கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேமை கோடிக்கணக்கான பேர் டவுண்லோட் செய்து விளையாடி வருகின்றனர். ஜி.பி.எஸ் வசதியுடன் விளையாடக் கூடிய கேம் இது. நிஜ உலகத்தோடு கனவுலகத்தை இணைத்து இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது. கனவுலகத்தையும், நிஜ உலகத்தையும் நமது மொபைல் போனில் நாம் இருக்கக் கூடிய இடம் தோன்றும் அதேபோல் போக்கிமொன் கேரக்டர்கள் நிஜ உலகில் தோன்றும். மக்கள் தாங்கள் பார்க்கும் நிஜ உலகில் பல இடங்களுக்கு சென்று விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுதான் இந்த …
-
- 1 reply
- 649 views
-
-
தாய்லாந்தின் முக்கிய இடங்களில் உள்ள பாலியல் விடுதிகள் மற்றும் மசாஜ் நிலையங்களில் நடைபெற்ற தொடர் சோதனையின் மூலம் நாட்டின் பாலியல் தொழிலை அதிகாரிகள் குறிவைத்துள்ளனர்.தரமான சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், தாய்லாந்தில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளை மூட தான் விரும்புவதாக தாய்லாந்தின் சுற்றுலா அமைச்சர் கோப்கர்ன் வட்டனவ்ரங்குல் பிரபல செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது. ஆனால், இது பரவலாக அங்கு நடைமுறையில் உள்ளது. மேலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்ப ஆற்றுவதாக அது பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில், பாங்காக்கில் உள்ள பெரிய மசாஜ் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையி…
-
- 1 reply
- 658 views
-