உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
பிரபல கால்பந்து வீரர்கள் படுகொலை ஐ.எஸ் அமைப்பினர் சமீபத்தில் படுகொலை செய்த 5 நபர்களில் 4 பேர் சிரியாவில் பிரபல கால்பந்து அணிக்காக விளையாடும் வீரர்கள் என தெரிய வந்துள்ளது. பொது வீதியில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அந்த நால்வரும் பிரபல கால்பந்து அணியான அல்ஷபாபில் இணைந்து விளையாடி வந்தனர். குர்து இனத்தவருக்காக வேவு பார்ப்பதாக கூறி ஐ.எஸ் அமைப்பினர் இவர்களை கடத்தி சென்றுள்ளனர். இதனிடையே கடத்தப்பட்ட கால்பந்து வீரர்களுடன் 5 பேரை படுகொலை செய்துள்ளதாக ஐ.எஸ் அமைப்பினரின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் படங்களை வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஆசியா கிண்ண கால்பந்து போட்டிகளை பார்த்துக்கொண்டிருந்த 13 இளைஞர்களை ஐ.எஸ் …
-
- 0 replies
- 217 views
-
-
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் ஒரு பெண் பிரித்தானியாவானது 26 வருடங்களுக்குப் பின்னர் பெண் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வுள்ளது. அந்நாட்டு பழைமைவாத கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட பிந்திய வாக்கெடுப்பில் இறுதி இரு வேட்பாளர்களாக பெண் வேட்பாளர்களான உள்துறைச் செயலாளர் தெரேஸா மேயும் சக்தி வள அமைச்சர் அன்ட்றியா லீட்ஸம்மும் தெரிவாகியுள்ளார். மூன்றாவது போட்டி வேட்பாளரான நீதி செயலாளர் மைக்கேல் கோவ் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் தெரேஸா மே 199 வாக்குகளைப் பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதேசமயம் அன்ட்றியா லீட்ஸம் 84 வாக்குகளையும் மைக்கேல் க…
-
- 0 replies
- 414 views
-
-
பாலியல் வல்லுறவு மறுவரையறை சட்டத்திற்கு ஜெர்மன் கீழவை நாடாளுமன்றம் அனுமதி ஒருவரது அனுமதியின்றி பாலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் வல்லுறவுதான் என்று பாலியல் வல்லுறவிற்கு மறுவரையறை கொடுக்கப்பட்ட முக்கிய சட்டத்திற்கு ஜெர்மனியின் கீழவை நாடாளுமன்றம் பண்டிஸ்டாக் அனுமதியளித்துள்ளது. ''முடியாது'' என்றால் ''முடியாது'' என்று பரவலாக அழைக்கப்படும் இந்த சட்ட விதியின் மூலம், பாலியல் வல்லுறவால் பாதிக்கப்படுவோர், வல்லுறவின் போது எதிர்ப்பு காட்டவில்லை என்றாலும், சுலபமாக குற்றவியல் புகார்களை பதிய முடியும். இந்த சட்டமானது பாலியல் சீண்டல்களை பாலியல் குற்றங்கள் என வரையறைத்துள்ளது. மேலும், பாலியல் குற்றவாளிகளை நாடு கடத்துவதில் சில தளர்வுகளை மேற்கொண்டு, குழுக்க…
-
- 1 reply
- 276 views
-
-
துப்பாக்கியுடன் பெண் நுழைந்ததாக பீதி : அமெரிக்க பாராளுமன்றம் மூடப்பட்டது அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தின் அடித்தள பகுதியில் துப்பாக்கியுடன் பெண் ஒருவர் நேற்று நுழைந்தமையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கட்டிடத்தை சுற்றி வளைத்ததையடுத்து, பாராளுமன்ற கட்டிடமும், அதையொட்டி அமைந்துள்ள பாராளுமன்ற பார்வையாளர் மையமும் மூடப்பட்டன. வெளியில் இருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எனினும் தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னரும் குறித்த பெண் சிக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கு பிறகு, பொலிஸாரின் அனுமதியுடன் பாராளுமன்ற கட்டிடம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே சபை சிறிது நேரம் நடைபெ…
-
- 0 replies
- 323 views
-
-
பிரிட்டனின் முடிவு – யாருக்கு வெற்றி? ஒரு வழியாக யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து இருந்து வெளியேறும் முடிவை பிரிட்டன் எடுத்துவிட்டது. உலகப் பொருளாதார அரங்கில் பெரும் அதிர்ச்சியை இது ஏற்படுத்தினாலும், ஓரளவுக்கு இது எதிர்பார்க்கப்பட்டது என்றே சொல்லவேண்டும். இந்த ஓட்டெடுப்புக்கு முன்னால் நடந்த கருத்துக் கணிப்புகள், முடிவு இழுபறியாக இருக்கும் என்று தெரிவித்த போதிலும், ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவுக்கான கை ஓங்கியிருந்தது என்பதையும் குறிப்பிட்டன. இருந்தாலும், ஒன்றியத்திலேயே தொடர்வது என்ற அணியை ஆதரித்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமெரனும் அவரது சகாக்களும், வெளியேறுவது நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், மக்கள் அதற்கு எதிராக ஓட்டளிப்பார்கள் என்று எதிர்பார்த்த…
-
- 0 replies
- 544 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * அமெரிக்காவின் டல்லஸ் நகரில் கறுப்பு இன இளைஞர்களின் கொலையை கண்டித்த அமைதி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு. ஆயுதபாணிகளால் ஐந்து போலிஸ்காரர்கள் சுட்டுக்கொலை. * பிரசன்னத்தை பலப்படுத்துகின்றது நேட்டோ. ரஷ்யாவை கட்டுக்குள் வைக்க ஆயிரக்கணக்கான படைகளை கிழக்கு ஐரோப்பாவுக்கு அனுப்புகிறது அது. * கினியில் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சட்ட விரோத மீன்பிடி தொழில்.
-
- 0 replies
- 437 views
-
-
இராக் போர்: " நாட்டின் நலன்களை மனதில் கொண்டே முடிவு எடுத்தேன், முழுப் பொறுப்பை ஏற்கிறேன்" - பிளேர் பிரிட்டன் இராக் போரில் ஈடுபட்டது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட சில்காட் குழு அறிக்கை குறித்து தனது கருத்தை வெளியிட்ட முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், எந்தவொரு விதிவிலக்கு அல்லது சாக்குப்போக்கோ இல்லாமல், தான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறார். "முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன்" - டோனி பிளேர் மேலும் அவர் கூறுகையில், சதாம் ஹுசைனை விலக்குவது தான் சிறந்தது என்று நம்பியதாகத் தெரிவித்தார். "தற்போது மத்திய கிழக்கு அல்லது உலகின் பிற பகுதிகளில் நடக்கும் தீவிரவாததிற்கு இந்த விவகாரம் காரணம் என்று நான் நம்பவில்லை,'' என்றார் பிளேர். …
-
- 4 replies
- 456 views
-
-
அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் அவர்கள், சதாம் ஹூசைனை ஒரு நல்ல மனிதர் அவர்கள் பயங்கரவாதிகளிற்கு எதிராகப் போரிட்டார் என்று தெரிவித்துள்ளார். சதாம் ஹூசைனும், லிபிய அதிபர் கடாபியும் இன்று உயிருடன் இருந்தால் உலகம் நன்றாக இருந்திருக்கும் என்று குறிப்பிடும் டொனால்ட் ட்ரம்ப் இப்போதும் முஸ்லிம்களை எதிர்க்கின்றார். இஸ்லாமோபோபியா எனப்படும் முஸ்லிம்களிற்கெதிரான போக்கு அமெரிக்கா, ஐரோப்பா கடந்து கனடாவிலும் தோற்றம் பெற்றுள்ளது போன்ற விடயங்களை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா குறிப்பிட்டார். Go to Videos Nijaththin Thedal - Saddam Hussein is good! Muslims are terro…
-
- 1 reply
- 544 views
-
-
அமெரிக்கா வன்முறை ; துப்பாக்கிச்சூட்டில் போலிசார் காயம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லஸ் நகரில் போலிஸ் வன்முறைக்க்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் குறைந்தது மூன்று போலிசார் சுடப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. பல டஜன் துப்பாக்கி வேட்டு சத்தங்களைக் கேட்கக்கூடியதாக இருந்தது. போலிசார் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேக நபர்களைத் தேடி வருகின்றனர். மின்னெசோட்டா மற்றும் லூயிசியானா மாநிலங்களில் சமீப நாட்களில் போலிஸ் அலுவலர்களால் இரண்டு கறுப்பின இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிராக நாடெங்கிலும் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த மரணத்தை விளைவித்த துப்பாக்கிச்சூடு சம்பவங…
-
- 3 replies
- 593 views
-
-
இராக்கியத் தலைநகர் பாக்தாதுக்கு வடக்கே உள்ள ஒரு ஷியா பிரிவினருக்கான புனித தலத்தை தற்கொலை குண்டுதாரிகளும் துப்பாக்கிதாரிகளும் தாக்கியுள்ளனர்.பலாட் என்ற நகரில் அமைந்திருக்கும், சயித் மொஹமத் பின் அலி அல்-ஹாதி என்ற நினைவிடத்தின் வாயிலுக்கருகே குண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டுத் தாக்குதலுக்குப் பின், பல துப்பாக்கிதாரிகள் அந்த இடத்தில் அதிரடியாக நுழைந்து ஈத் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த பலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.இந்தத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இராக்கிய அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பாக்தாதின் ஜன நெரிசல் மிக்க ஷியா வணிகப் பகுதி ஒன்றில் நடந்த மிக மோசமான குண்டுத்தாக்குதலில்…
-
- 0 replies
- 303 views
-
-
பாகிஸ்தான் சமூக ஊடகத்தின் முதல் பெண் பிரபலம் அவர். பெண்கள் வீட்டோடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் நாட்டில், பெண்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள முடியாத தேசத்தில் கந்தீல் பலூச் தனது பாலுணர்வூட்டப்பட்ட பெண் வடிவத்தை பொதுவெளியில் பகிர்கிறார்.அவரது காணொளிகள் பரபரப்பாக பார்க்கப்படுகின்றன. பகிரப்படுகின்றன. அவர் இணையத்தில் தொடர்ந்து பல லட்சக்கணக்கானவர்களால் பின் தொடரப்படுகிறார். மோசமான வசைகளுக்குள்ளாகிறார். பாகிஸ்தான் சமூகத்தின் இரட்டை நிலையை அவர் வெளிக்கொண்டுவருகிறாரா? http://www.seithy.com/breifNews.php?newsID=161089&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 333 views
-
-
உலக நாடுகளுக்கு பயங்கரவாதம்தான் தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது என்று பிரதமர் மோடி வியாழக்கிழமை வேதனை தெரிவித்தார்.இராக், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகள் அண்மையில் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியான நிலையில், பிரதமர் மோடி தெரிவித்துள்ள இந்தக் கருத்து சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சுற்றுப்பயணம்: ஆப்பிரிக்க நாடுகளுக்கான 5 நாள் அரசு முறைப் பயணத்தை தொடங்கிய மோடி, முதலாவதாக மொசாம்பிக் நாட்டுக்கு வியாழக்கிழமை சென்றார். அந்நாட்டின் தலைநகர் மபுடோவில் அமைந்துள்ள விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து மொசாம்பிக் அதிபர் பிலிப் நியூசியை மோடி சந்தித்துப் பேச…
-
- 0 replies
- 549 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக, பிரித்தானிய மக்களிடையே நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 51.9% பிரித்தானியர்கள் பிரிந்து செல்வதென முடிவெடுத்துள்ளார்கள். இந்த முடிவானது, பிரித்தானியாவில் மட்டும் தாக்கத்தை செலுத்தப்போவதில்லை. மாறாக, சமகால உலக ஒழுங்கை மாற்றியமைக்கப்போகிறது. இதில் குறிப்பாக அரசியல், பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் பெரும்பங்கினை வகிக்கப் போகின்றன. பொது வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்து அடுத்த சில மணித்தியாலங்களுக்குள், உலகளாவிய ரீதியில் சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளின் பங்குச்சந்தை ஆட்டம் காணத்தொடங்கியது. சீனாவின் சந்தை கூட ஜூன் 24ஆம் திகதி 1% வீழ்ந்தது. ஆயினும், ஜூன் 27ஆம் திகதி மீண…
-
- 0 replies
- 211 views
-
-
பெண்கள், சிறுவர்கள் உட்பட 40 பேர் கழுத்தறுத்து படுகொலை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள உம் அல்–ஹவுஸ் நகரில் இருந்து தப்பிப்பதற்காக பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் சிரிய படையினர் வசம் உள்ள பகுதிகளை நோக்கி சென்றவேளை ஐ.எஸ். தீவிரவாதிகள் அனைவரையும் கொடூரமாக கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, அங்கு கடந்த பெப்ரவரி மாதம் முதல் யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்த நிலையி…
-
- 0 replies
- 193 views
-
-
மதீனா தற்கொலை தாக்குதல் ; 12 பாகிஸ்தானியர் உட்பட 19 பேர் கைது மதீனா நகரில் கடந்த திங்கட்கிழமையன்று முகமது நபி மசூதி அருகே இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து, 12 பாகிஸ்தானியர் உட்பட 19 சந்தேக நபர்களை சவுதி அரேபியப் பொலிசார் கைது செய்துள்ளனர். இதேவேளை, தற்கொலை குண்டுதாரி 26 வயதான ஒரு சவுதி பிரஜை என்றும் அவர் போதைமருந்தை அதிகம் பயன்படுத்தும் பழக்கத்தையுடையவரெனவும் அவரை குறித்த சம்பவத்துடன் ஏற்கனவே கைதுசெய்துள்ளதாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதீனாவிலுள்ள முகமது நபி மசூதிக்கு அருகே இருந்த கார் நிறுத்துமிடத்தைக் கடந்து வந்து தான் கட்டியிருந்த தற்கொலை குண்டை வெடிக்கச் செய்ததில் தான் சவுதிப் படையினர் உயிரிழந்துள்ளனர். …
-
- 0 replies
- 182 views
-
-
சுவிஸ் வங்கி கணக்கு எப்படி செயல்படுகிறது? இந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. 'சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வந்தால் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 லட்சம் கிடைக்கும்' என பிரதமர் மோடி, தனது தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டிருந்தார். அவ்வப்போது கறுப்புப் பணம் குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அதுமட்டுமின்றி, கறுப்புப் பணத்தை வரும் செப்டம்பர் மாதம் 30 ம் தேதிக்குள் கணக்கு காண்பித்து, அதற்கான வரியை நவம்பர் மாதத்தில் செலுத்திவிடுமாறு கடந்த வாரம் பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்தியாவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், பெரும்பாலும் அந்த பணத்தை தங்களது சுவிஸ் வங்கி கணக்கி…
-
- 2 replies
- 620 views
-
-
200 மில்லியன் டொலர் மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்யத்தைக் கைக்குள் வைத்துள்ள கம்போடியப் பிரதமர் inShare கம்போடிய நாட்டுப் பிரதமரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் குறைந்தது 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்யத்தைக் குவித்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறியுள்ளது. ஊடகம், விவசாயம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது பிரதமர் ஹன் சென் குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக கம்போடிய அரசின் சொந்தத் தகவல்களை வைத்தே குளோபல் விட்னஸ் என்ற அமைப்பு கண்டறிந்துள்ளது. 30 ஆண…
-
- 0 replies
- 196 views
-
-
அடுத்த பிரிட்டிஷ் பிரதமர் பதவிக்கு இறுதிப் போட்டி இரு பெண்களிடையே பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஒரு பெண்ணாகத்தான் இருப்பார் என்பது நிச்சயமாகிவிட்டது. அடுத்த பிரிட்டிஷ் பிரதமர் - இறுதிப் போட்டி இரு பெண்களிடையே ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைப்பதவிக்கு இரண்டு பெண் வேட்பாளர்களைத் தேர்வு செய்து, நாடெங்கிலும் உள்ள கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த அனுப்பிவிட்டனர். உள்துறை அமைச்சர் தெரெசா மே, தற்போதைய பிரதமர் மற்றும் கட்சித் தலைவராக உள்ள டேவிட் கேமரனுக்கு அடுத்து வரவிருக்கும் வேட்பாளர்களில் முன்னணியில் இருக்கிறார். எரிசக்தித் துறை அமைச்சர் ஆண்ட்ரியா லீட்சம் இந்தத் தேர்தலில் இரண்டாவ…
-
- 1 reply
- 264 views
-
-
பிரித்தானியா நாட்டில் உள்ள தொழிற்சாலையில் சுவர் ஒன்று எதிர்பாராமல் சரிந்து விழுந்த விபத்தில் 5 தொழிலாளிகள் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிர்மிங்காம் நகருக்கு அருகில் உள்ள Nechells என்ற பகுதியில் இரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுப்பட்டு வந்தபோது விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக சற்று முன்னர் தகவல் வெளியானது.தகவல் பெற்று பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது, தொழிற்சாலைக்குள் உயரமான சுவர் ஒன்று சரிந்து விழுந்துள்ளது தெரியவந்தது. இடர்பாடுகளை விலக்கி பார்த்தபோது உள்ளே 6 தொழிலாளிகளின் உடல்கள் படுகாயத்துடன் இருந்துள்ளன. மீட்புக்குழுவினர் முதலுதவி சி…
-
- 0 replies
- 180 views
-
-
முகமது நபிகளை அவமதித்தார் என்பதை தான் நம்பியதால் ஸ்காட்லாந்து நகரமான கிளாஸ்கோவில் கடைக்காரர் ஒருவரை கொலை செய்ததாக இஸ்லாம் மதத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.அகமதியா என்ற சிறுபான்மை இஸ்லாமிய பிரிவை சேர்ந்தவரும், சமூகத்தில் பிரபலமான நபருமான அசாத் ஷா, தான் நடத்தி வந்த செய்தித்தாள் விற்பனை கடையில் குத்திக் கொல்லப்பட்டார்.வட இங்கிலாந்தின் சுன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த தன்வீர் அகமது இந்த தாக்குதலை நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.அசாத் ஷா தன்னை ஒரு தூதுவர் என கூறி, முஸ்லிம் நம்பிக்கையை அவமதித்தார் என தன்வீர் அகமது கூறியுள்ளார். 1998ல் பாகிஸ்தானிலிருந்து கிளாஸ்கோவுக்கு இடம் பெயர்ந்தார் அசாத் ஷா.ஆகஸ்ட் மாதம் தன்வீர் அகமதுக்கு தண்டனை வழங…
-
- 0 replies
- 246 views
-
-
கன்சர்வேடிவ் கட்சித் தேர்தல்: முதல் சுற்றில் வென்றார் தெரெசா மே பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு நடக்கும் தேர்தலின் முதல் சுற்றில், உள்துறை அமைச்சர் தெரெசா மே, தெளிவான பெரும்பான்மையுடன் வென்றுள்ளார். முதல் சுற்றில் வென்றார் தெரெசா மே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் அமைந்ததை அடுத்து, பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகவுள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சிப்பிரிவின் தலைவர் தேர்தல் நடக்கிறது. ஒட்டுமொத்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவையும் பெறுபவராக தான் மட்டுமே இருப்பதை இந்தத் தேர்தல் முடிவு காட்டுவதாக தெரெ…
-
- 5 replies
- 423 views
-
-
நாசாவின் டுவிட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கெப்ளர் மற்றும் கே2 என்ற டுவிட்டர் சமூக வளைதளங்களைக் கடந்த 6-ஆம் திகதி 'r4die2oz' என்று பெயர் செய்யப்பட்டு அதில், உள்ள அடையாள படத்தையும் ஒரு பெண் புகைப்படத்திற்கு மாற்றியுள்ளனர். ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டதோடு, டுவிட்டர் கணக்கை வேறு ஒரு ஆபாச இணையதளத்துடன் இணைத்துள்ளனர். நாசாவின் டுவிட்டர் பக்கத்தை பின்பற்றுவர்களுக்கு திடீரென ஆபாச புகைப்படம் வெளியானது அதிர்ச்சியை அளித்தது. இதையடுத்து யாரோ ஹேக் செய்து இந்த செயலை செய்தது தெரியவந்துள்ளது. உலகின் முதல் தர விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நசாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்…
-
- 0 replies
- 261 views
-
-
கடந்த 2003-ஆம் ஆண்டில் நடந்த இராக் போரில் பிரிட்டன் ஈடுபட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த சர் ஜான் சில்காட், தனது கண்டுபிடிப்புக்களை கோடிட்டுக் காட்டியுள்ளார். 2001 முதல் 2009 வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் பிரிட்டன் அரசு எடுத்த கொள்கை முடிவுகள் குறித்து இந்த அறிக்கை விவரிக்கிறது. இராக் போருக்கு பிரிட்டன் செல்ல முடிவெடுத்ததன் பின்னணி, போருக்கு செல்வதற்கு படைத்துருப்புக்கள் முறையாக தயார் படுத்தப்பட்டார்களா, மோதல் எவ்வாறு நடைபெற்றது, தீவிரவாத வன்முறை நிலவிய அக்காலகட்டத்தில் இதன் பின்னர் என்ன திட்டம் நடைமுறையில் இருந்தது ஆகியவை இவ்வறிக்கையில் உள்ளடங்கியுள்ளன. சில்காட் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:- ராணுவ நடவடிக்கை: அமைதி வழிக்கான அனைத்…
-
- 0 replies
- 216 views
-
-
2003 ஆம் ஆண்டின் இராக் ஆக்கிரமிப்பு "இஸ்லாமிய அரசை" உருவாக்கியதா? இராக் போரில் பிரிட்டனை இறக்கியதற்கான தனது முடிவு சரியென்று முன்னாள் பிரதமர் டொனி பிளயர் மீண்டும் வாதாடியுள்ளார். முன்னதாக நேற்று புதன்கிழமை, இதற்கான திட்டமிடல், போர் நடத்தப்பட்ட விதம் மற்றும் போருக்கு பின்னரான நிலை குறித்து சில்காட் அறிக்கை கடுமையாக விமர்சித்திருந்தது. அதேவேளை, இந்த முடிவுகள் எடுக்கப்பட்ட பிரிட்டனில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், இராக்கில் 2003 ஆம் ஆண்டில் வெடித்த போர் இன்னமும் அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பாக்தாதிலும் இராக்கின் இதர பகுதிகளிலும் இன்னமும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இலக்கற்ற திடீர் …
-
- 0 replies
- 359 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகும் அமெரிக்க போலிஸ். இரண்டு நாட்களுக்குள் இரண்டு கறுப்பு இன ஆண்கள் சுட்டுக்கொலை. * போர் தொடுப்பது என்ற பிரிட்டனின் கண்டிக்கப்பட்ட முடிவால் ஏற்பட்ட அழிவுகள் இராக்கில் இன்னமும் தொடர்கின்றன. இராக் அவலங்கள் குறித்த பிபிசியின் மற்றுமொரு சிறப்புத் காணொளி. * ‘’பெண்கள் மோசமாக நடக்கிறார்களா?’’ - பழமைவாத பாகிஸ்தானில், வளரும் ஒரு பெண் பிரபலம் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளார்.
-
- 0 replies
- 417 views
-