Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இஸ்தான்புல் தற்கொலைப்படை தாக்குதலின் பின் அமெரிக்கா அறிவிப்பு இஸ்தான்புல் தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து துருக்கிக்கு அனைத்து வகையிலும் உதவ தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. உலகையே பதற வைத்துள்ள இந்த கொடூர தாக்குதல்களில் 41 பேர் பலியாகியதோடு, 230 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துருக்கி பிரதமர் தயிப் எர்டோகனை அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா தொடர்புக்கொண்டு பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் துரு…

  2. இன்றைய நிகழ்ச்சியில் * இஸ்தான்புல்லை உலுக்கிய பயங்கரவாதம்; பிரதான விமானநிலையத்தில் நடந்த மோசமான தாக்குதலில் 41 பேர் பலி; 239 பேர் காயம். * மெக்சிகோ நாட்டவர் விசா இல்லாமல் கேனடா வர அனுமதி; வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்த கூட்டத்துக்கு முன்பாக கேனடா பிரதமர் அறிவிப்பு. * யானைத் தந்த வர்த்தகத்தை முற்றாக தடுக்கப்போவதாக ஹாங்காங் அறிவிப்பு; சட்டவிரோத யானைத் தந்த வர்த்தகத்தை தடுக்கப்போவதாக உறுதி.

  3. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் பிரிட்டனின் முடிவை மதிக்க வேண்டும் - ஏங்கலா மெர்கல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் பிரிட்டனின் முடிவு மதிக்கப்பட வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் வெளியேறும் முடிவை மதிக்க வேண்டும். ஆனால், சுதந்திரமான சந்தையை அது விரும்பினால் மக்கள் சுதந்திரமாக சென்று வர அனுமதிக்க வேண்டும் - ஏங்கெலா மெர்கல் ஆனால், எதிர்காலத்தில் சுதந்திரமான சந்தையை அணுக பிரிட்டன் விரும்பினால், மக்கள் சுதந்திரமாக போய் வருவதற்கும் அது அனுமதிக்க வேண்டும் என்று ஜெர்மானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிபோது அவர் பேசியுள்ளார். கடந்தகால நெருக்கடிகளில் இருந்து ஐரோப்பா மீண்டு வந்துள்ளது எ…

  4. பிரபல கிட்டார் வாசிப்பாளர் ஸ்காட்டி மூர் மரணம் எல்விஸ் பிரெஸ்லியின் ஆரம்ப இசைக்குழுவின் உறுப்பினரும், ராக் கிட்டார் வாசிப்பில் முன்னோடியுமான ஸ்காட்டி மூர் காலமானார். அவருக்கு வயது 84. ஸ்காட்டி மூர் பல மாதங்களாக மோசமான உடல்நிலையால் பாதிக்கப்பட்டிருந்த மூர், நாஷ்வில் நகரில் இறந்து விட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். ப்ளுஸ், காஸ்பல் மற்றும் நாட்டுப்புற இசை ஆகியவற்றின் புதிய இசைக்கலவையை எல்விஸ் வடிவமைக்க உதவியவராக மூர் கூறப்படுகிறார். இந்த இசை 'ராக் அண்ட் ரோல்' என்று பின்னர் அறியப்பட்டது. எல்விஸ் பிரெஸ்லி இசையுலகின் 'அரசனாக' மாற உதவிய இசையமைப்பாளர் ஸ்காட்டி மூர், என்று சிலர் மூரை வர்ணிப்பதுண்டு. எல்விஸின் முதல் வெற்றி பாடலான ''த…

  5. பழைய கோபத்தை மறந்து துருக்கியிடம் தனது அனுதாபத்தை தெரிவித்த புடின் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் மீது நடந்த தாக்குதலுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பாதிக்கப்பட்ட துருக்கியிடம் தங்களின் அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். விளாடிமிர் புடின் மற்றும் எர்துவான் ரஷ்ய அதிபர் புடின், துருக்கி அதிபரை தொலைபேசியில் அழைத்து தனது அனுதாபங்களை தெரிவித்ததாக கிரம்ளின் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த நவம்பரில், சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய ஜெட் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தி இரண்டு விமானிகள் உயிரிழப்புக்கு காரணமான சம்பவத்துக்கு பிறகு, தற்போது தான் இரு நாட்டு தலைவர்களும் முதல்முறையாக உரையாடியுள்ளனர். மேற்க…

  6. கனடா வரும் மெக்சிகோ நாட்டவருக்கு இனி விசா தேவையில்லை அமெரிக்கா கேனடா மற்றும் மெக்சிகோ நாட்டுத்தலைவர்கள் Ottawaவில் விரைவில் சந்திக்கவிருக்கிறார்கள். வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இவர்கள் சந்திக்கவிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளராக நிற்கக்கூடியவராக பார்க்கப்படும் டொனால்ட் ட்ரம்ப் தான் ஆட்சிக்கு வந்தால் இந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் உலக அளவில் நிலவும் ஸ்திரமற்ற சூழலில் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது மிகவும் அவசியம் என்கிறார் கேனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. தமது இந்த நிலைப்பாட்டை செயற்படுத்தும்விதமாக கேனடா வரும்…

  7. இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்! பிரிட்டன் அரசி எலிசபெத் நகைச்சுவை வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் ஹில்ஸ்பரோ அரண்மனையில் சந்தித்த பிரிட்டிஷ் அரசி எலிசபெத், வடக்கு அயர்லாந்து துணைப் பிரதமர் மார்ட்டின் மெக்கின்னஸ். பிரிட்டன் அரசி எலிசபெத்தின் உடல் நலம் பற்றிய விசாரிப்புக்கு, "இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்' என்று அவர் நகைச்சுவையாக பதில் கூறினார். ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருப்பது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், அந்த அமைப்பிலிருந்து விலக வேண்டும் என்ற அத…

    • 2 replies
    • 498 views
  8. எட்டுத் திக்கும் | 'கள்ளநோட்டு' கவர்மென்ட்! சேதி கேட்டோ பலமுனைப் போரில் பரிதவித்துக்கொண்டிருக்கும் சிரியாவில் செய்தி சேகரிக்க ஆளில்லை. இதுவரை 110 செய்தியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதால், செய்தியாளர்களை அனுப்ப பெரிய ஊடகங்கள் மறுக்கின்றன. உள்ளூர் செய்தியாளர்கள்தான் உயிரைப் பணயம் வைத்து செய்திகளைச் சேகரிக்கின்றனர். முறையான சம்பளமும் இல்லை; கடத்தப்பட்டால் அவர்களுக்காகப் பேச யாரும் இல்லை. உலகத்தின் பார்வையிலிருந்து மெல்ல மறைந்துகொண்டிருக்கிறது சிரியா! * கடந்தகாலக் கலை பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பாரிகோட்டில் இந்தோ-கிரேக்க நகரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்…

  9. பிரிட்டன் இல்லாத ஐரோப்பிய ஒன்றிய கூட்டம்: வாக்கெடுப்பின் எதிரொலி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று பிரிட்டன் வாக்களித்ததைத் தொடர்ந்து, இன்று நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்திலிருந்து பிரிட்டன் விலக்கப்பட உள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, முதல்முறையாக இவ்வாறு நடக்கவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலக வேண்டும் என்று வாக்களித்தன் தாக்கத்தை பற்றி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பின நாடுகளின் தலைவர்கள் விவரிக்கும் கூட்டத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் கலந்து கொள்ளமாட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நடைமுறைகளுக்கான திட்டத்தை உடனடியாக பிரிட்டன் வகுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.…

  10. பிரெக்ஸிட்டும் பிரிட்டனும்... By எஸ்.குருமூர்த்தி ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதற்கான "பிரெக்ஸிட்' பொது வாக்கெடுப்பில், பிரிட்டன் அதில் தொடரக் கூடாது என்று அந்நாட்டு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இந்த முடிவால் உலக அளவில் பலத்த மாற்றங்களுக்கு வித்திடப்பட்டுள்ளது. உலகப் போர்களுக்குப் பிறகு ஐரோப்பிய கண்டத்திலுள்ள நாடுகளிடையே அரசியல், பொருளாதார ஒத்துழைப்பின் தேவை உணரப்பட்டபோது ஐரோப்பியக் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சி தொடங்கியது. ஐரோப்பாவிலுள்ள ரஷ்யா உள்ளிட்ட 51 நாடுகளில் 28 நாடுகள் ஒரே கூட்டமைப்பாகச் செயல்பட சம்மதித்தன; 1992-இல் ஐரோப்பிய…

  11. மனித ஆற்றல் தரவரிசை வெளியீடு: பின்லாந்து முதல் இடம், இலங்கைக்கு 50 ஆவது இடம் மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளதோடு இலங்கை முன்னேறி 50 ஆவது இடம் கிடைத்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரத்தில் உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பொருளாதார வளர்ச்சிக்காக மனிதர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளுதல், ஒட்டுமொத்த வளர்ச்சி அடைய நாடுகளின் திறமை,சூழல், அபிவிருத்தி, வினைத்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இம் மனித ஆற்றல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 130 நாடுகளிடையே எடுக்கப்பட்ட குறித்த…

  12. துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல் : 28 பேர் பலி துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள அதாதுர்க் விமான நிலையத்தில் செவ்வாய் இரவு பாரிய குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதனால் குறைந்தபட்சம் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர் என இஸ்தான்புல் ஆளுநர் தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுத்தாரிகள் இருவர் இத்தாக்குலில் சம்பந்தப்பட்டதாக துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=17643#sthash.5LvyXf46.dpuf

  13. 'ஐரோப்­பிய ஒன்­றி­யத்திலிருந்து வில­கு­வ­தற்கு போரா­டிய நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் ?' : நிகெல் பராஜ்ஜையிடம் ஜங்கர் (காணொளி இணைப்பு) “பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்திலி ருந்து வில­கு­வ­தற்கு ஆத­ர­வாக நீங்கள் போரா­டி­னீர்கள். பிரித்­தா­னிய மக்­களும் வில­கு­வ­தற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளனர். அதன் பின் நீங்கள் எதற்­காக இங்கு (ஐரோப்­பிய ஒன்­றிய தலை­மை­ய­கத்­ துக்­கு) வந்­தி­ருக்­கி­றீர்கள்?" என ஐரோப்­பிய ஆணை­ யகத் தலைவர் ஜீன் கிளோட் ஜங்கர், நிகெல், ஐக்­கிய இராச்­சிய சுதந்­திர கட்­சியின் தலைவர் நிகெல் பராஜ்ஜை நோக்கி வினவினார். பெல்­ஜி­யத்தின் பிர­ஸல்ஸ் நக­ரி­லுள்­ள ஐரோப்­பிய ஒன்­றிய தலை­­மை­ய­கத்­தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை உரையாற்­று­கை­யி­லேயே இ…

  14. பிரிட்டன் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்து கொள்ள கூடாது - ஏங்கலா மெர்கல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தும்போது, பிரிட்டன் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்து கொள்ள கூடாது என்று ஜெர்மானிய சான்சிலர் ஏங்கலா மெர்கல் எச்சரித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவோர் சலுகைகளை பெற்றுவிட்டு, கடமைகளை கைவிட எதிர்பார்க்கக் கூடாது - ஏங்கலா மெர்கல் ஜெர்மானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், ஐரோப்பிய ஒன்றிய குடும்பத்தை விட்டு விலக விரும்புவோர், சலுகைகளை வைத்து கொண்டு, எல்லா கடமைகளையும் கைவிட்டுவிட எதிர்பார்க்கக் கூடாது என்று அவர் கூறினர். விலகல் பேச்சுவார்த்தையை இன்றே தொடங்கவும் ஐரோப…

    • 2 replies
    • 388 views
  15. பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை புறந்தள்ளிவிடக்கூடாது: டேவிட் கேமரன் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிட்டன் மக்கள் முழுமையாகப் புறந்தள்ளிவிடக்கூடாது என பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்துள்ளர். பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று வாக்களித்த பிறகு, முதன்முறையாக ஐரோப்பிய தலைவர்களைச் சந்திப்பதற்கான கூட்டத்திற்காக, பிரஸ்ஸல்ஸ் வந்தடைந்த கேமரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை, முடிந்தவரையில் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு உடனடியாக விலகும் நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் தீர்மானத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது…

    • 2 replies
    • 405 views
  16. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்காட்லாந்து தக்கவைக்கப்படும்: நிக்கோலா ஸ்டர்ஜன் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தனது நாட்டின் இடத்தை தக்க வைப்பதில் உறுதியாக உள்ளதாக ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் மார்டின் ஸ்கல்ஸை சந்திப்பதற்கு நாளை பிரஸ்ஸல்ஸ் செல்லவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஸ்டர்ஜன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என ஸ்காட்லாந்து மக்கள் வாக்களித்திருப்பதாகவும், அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/06/160628_scotland_brexit

  17. இன்றைய நிகழ்ச்சியில் * உற்சாகம், கேலிச்சிரிப்பு, கண்ணீர் கசிந்த கண்கள்--பிரிட்டன் விலகும் முடிவுக்குப்பின் கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் உணர்ச்சிமயம். * அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தின் கருக்கலைப்புத்தடைச் சட்ட்த்தை நிராகரித்தது உச்சநீதிமன்றம்; அமெரிக்காவின் மற்ற மாநிலங்களில் நிலைமை மாறுமா? * வித்தியாசமான ஆடைஅணிவகுப்பு; அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை பாதுகாக்கும் குண்டுதுளைக்காத கண்கவர் ஆடைகள் தயார்.

  18. விலகுவது பற்றி பிரி்ட்டன் வெகுவிரைவில் தெளிவுபடுத்த வேண்டும் - யுன்கர் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவது பற்றிய நிலைமையை பிரிட்டன் வெகுவிரைவில் தெளிவுப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஷான் கிளாடு யுன்கர் தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் விலகுவதற்கான வழிமுறையை வெகுவிரைவில் பிரயோகிக்க யுன்கர் வலியுறுத்தியுள்ளார் பிரஸ்ஸல்ஸிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பான அவசர விவாதத்தின்போது அவர் பேசியுள்ளார். விலகுவதற்கான வழிமுறையை பிரிட்டன் முறையாக பிரயோகிக்காத வரை ஐரோப்பிய ஒன்றிய ஆணையர்கள் பிரிட்டன் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தடை செய்யப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார். பிரிட்டன் விலகுவதை…

  19. பிரிட்டனில் பொருளாதாரச் சரிவு ஏற்படும்: நிதியமைச்சர் எச்சரிக்கை கடந்த வாரம் நடந்த ஐரோப்பிய ஒன்றிய கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவைத் தொடர்ந்து, பிரிட்டன் ஏழ்மைநிலைக்கு தள்ளப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதால் பொருளாதாரச் சரிவு ஏற்படும் என பிரிட்டன் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் தெரிவித்துள்ளார். புதிதாக வரும் கன்செர்வேடிவ் அரசாங்கம், சில மாதங்களுக்குள், வரிகளை உயர்த்த வேண்டும் மற்றும் செலவினக் குறைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். டேவிட் கேமரன் பதவி விலகுவது என முடிவெடுத்ததைத் தொடர்ந்து நாட்டில் அச்சமயம் புதிய பிரதமர் பதவியேற்றிருப்பார். பிரதமர் பதவிக்கு தான் தான் போட்டியிடப் போவதில்லை என ஆஸ்போர்ன் த…

  20. பிரான்ஸ் குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு அந்நாட்டு அரசு யூலை 1-ம் திகதி முதல் புரட்சிகரமான மாற்றங்களை அமுல்படுத்த உள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு நிரந்தர தடை பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் அனைத்தும் யூலை 1-ம் திகதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படும். இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள், மருந்துக்கடைகள், பேக்கரிகள், பெட்ரோல் நிலையங்கள், மார்க்கெட் உள்ளிட்ட அனைத்தும் தனது வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகள் அளிப்பது தடை செய்யப்படும். இதற்கு பதிலாக, காகித பைகள் அல்லது வலுப்படுத்தப்பட்ட பைகளை வாடிக்கையாளர்களு…

  21. எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு உயிர்க் காற்றை அளிப்பதுபோல இருந்துள்ளது ஆதரவுப் பிரச்சாரம் ‘பிரெக்ஸிட்’ வாக்கெடுப்புக்கு முன்னால் லண்டன் போனவர்களுக்கு ‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனாவது, விலகுவதாவது’ என்று தோன்றியிருக்கும். ‘சேர்ந்தே இருப்போம்’ என்ற வண்ண சுவரொட்டிகளும் பதாகைகளும் பெரும்பாலான வீட்டு ஜன்னல்களில் காட்சி தந்தன. பிரச்சாரம் தொடங்கியபோது தடுமாறிய பங்குச் சந்தைகள்கூட பின்னர் சுதாரித்தன. ‘சேர்ந்தே இருப்பது’ என்ற முடிவுதான் வெற்றி பெறும் எனப் பந்தயங்கள் கட்டப்பட்டன. சுதந்திரக் கட்சி (யு.கே.ஐ.பி.) தலைவர்கூடத் தோற்றுவிடுவோம் என்றுதான் நம்பியுள்ளார். சண்டர்லேண்ட் முதல் முடிவைத் தந்தது. அதுதான் தேசிய அளவிலான முடிவுக்கு ‘மாதிரி’யாக இருக்கும். ‘வெளியே…

  22. தங்களுடைய இருதரப்பு உறவுகளை இயல்பாக்கி கொண்ட விபரங்களை துருக்கியும் இஸ்ரேலும் வெளியிட்டுள்ளன.ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் காசாவுக்கு சென்று கொண்டிருந்த துருக்கிய உதவி கப்பலில் இருந்த 10 செயல்பாட்டாளர்களை இஸ்ரேலிய அதிரடி படையினர் கொன்றபோது இந்த இருதரப்புக்கும் இடையே உறவு முறிந்தது.தற்போதைய இணைக்க உடன்பாட்டின்படி, இஸ்ரேயல் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்கும். காசாவில் மனிதநேய நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கிலான துருக்கியின் முக்கிய பணித்திட்டங்களும் தொடர்ந்து நடைபெறும். இஸ்ரேல் எல்லையில் மேற்கொண்டிருக்கும் முற்றுகை முடிவுக்கு வர வேண்டும் என்று முதலில் துருக்கி கோரியது. ஆனால் முற்றுகை அப்படியே இருக்கும்.உறவை இயல்பாக்கியிருக்கும் இந்த உட…

  23. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வாக்களித்ததை தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் நிதானத்தை இழக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.லண்டனுக்கு செல்வதற்குமுன் பிரஸ்ஸல்ஸ் சென்ற கெர்ரி, இந்த சமயத்தில் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் அல்லது மாற்றத்திற்கான நேரத்தின் போது கவலை அடைந்து சூழ்நிலையை சீர்குலைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இடையே பெர்லினில் கூட்டம் நடைபெற உள்ள நிலையிலும், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுகள் குறித்து உலக தலைவர்கள் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் பேச உள்ள நிலையிலும் கெர்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார். h…

  24. வலதுசாரிகள் எப்படிச் சிரிக்கிறார்கள்? சோவியத் ஒன்றியம் ஒருநாள் உடைந்து சிதறியது. ரஷ்யாவின் வீதிகளில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க வந்த, பீரங்கிகளின் வாயில் பூங்கொத்துகளைச் செருகினார்கள் மக்கள். ராணுவத்தினர் சிரித்தவாறே கையசைத்துக் கடந்தார்கள். திடீரெனத் தகர்ந்து நொறுங்கியது பெர்லின் சுவர். ஆளுக்கு ஒரு கோடரியுடன் வந்து ஒரு கல்லையாவது பெயர்த்தெடுத்துச் செல்ல முயன்றார்கள். காரணங்கள் நீண்ட காலமாகக் கனல்கின்றன. வரலாறு நம்ப முடியாத தருணத்தில் நிகழ்ந்துவிடுகிறது. கூடவே, ஒருபோதும் எதிர்பாராத தொடர் விளைவுகளையும் காலத்தின் கையில் திணித்துச் செல்கிறது. உலகின் ஐந்து பெரும் வல்லரசுகளில் ஒன்றும் முதலாளித்துவத்தின் இதயமுமான பிரிட்டன், ஐரோப்…

    • 1 reply
    • 362 views
  25. ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அதிபர் எர்துவான் மன்னிப்பு கோரினார்: ரஷியா கடந்த ஆண்டு, சிரியா எல்லையில் பறந்த ரஷிய ராணுவ விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதற்காக துருக்கி அதிபர் எர்துவான் மன்னிப்புக் கோரி உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. ரஷியா - துருக்கி இடையேயான உறவுகள் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், நடந்த சம்பவம் குறித்து எர்துவான் தன்னுடைய ஆழ்ந்த வருத்தங்களை ரஷிய அதிபர் புடினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாக ரஷியா தெரிவித்துள்ளது. துருக்கி அதிபர் எர்துவான் ரஷியாவின் இந்த அறிக்கை குறித்து துருக்கி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் ஒரு பெரிய நெருக்கடியை தூண்டியத…

    • 2 replies
    • 589 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.