உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முக்கிய ஐ.எஸ். தீவிரவாதி இராக்கில் கொலை இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவைச் சேர்ந்த தமது நாட்டின் முக்கிய பயங்கர தீவிரவாதி ஒருவர் இராக்கில் கொல்லப்பட்டுள்ளார் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. அபு காலித் அல்-கம்போடி என்று அறியப்பட்ட, நீல் பிரகாஷ் இராக்கின் மோசூல் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க விமானப்படையினர் நடத்திய தாக்குதலின் பிரதான இலக்காக இருந்துள்ளார். இவர் ஐ.எஸ்.குழுவுக்கு ஆட்களை சேர்ப்பதில் முக்கியஸ்தராக இருந்துள்ளார் எனவும், ஆஸ்திரேலியாவில் ஐ.எஸ் செயற்பாடுகளுடன் தொடர்புப்பட்டிருந்தார் என்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராக் மற்றும் சிரியாவில் ஐ எஸ் அமைப்பினர்…
-
- 2 replies
- 715 views
-
-
`சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் ஆசியா முன்னேற்றம்' உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஆசிய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டின் முதல் 100 இடங்களில் 17 இடங்களை ஆசிய பல்கலைக்கழங்கள் பிடித்துள்ளன டைம்ஸின் உயர் கல்வி உலக தரவரிசைப்படுத்தலில் இந்த ஆண்டின் முதல் 100 இடங்களில் 17 இடங்களை ஆசியப் பல்கலைக்கழங்கள் பிடித்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சீனப் பல்கலைக்கழகம் ஒன்று முதல் தடவையாக முதல் 20 பல்கலைக்கழங்களுள் இடம்பிடித்துள்ளது. பீஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகம் பட்டியலில் 18 ஆவது இடத்தில் உள்ளது. பிரித்தானியப் பல்கலைக்கழங்களான கேம்பிரிட்ஜ் மற்…
-
- 0 replies
- 609 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - பெற்றோர் இன்றி தனியாக ஐரோப்பா வந்த அகதி சிறார்களை பிரிட்டன் ஏற்கும் என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர். அப்படியான சிறார்கள் பலர் வாழும் கலே முகாமில் இருந்து பிபிசியின் சிறப்பு தகவல். - வங்கதேசத்தில் வலைப்பதிவர்கள், கல்விமான்கள் மற்றும் ஒருபாலுறவு செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து சர்வதேச கவலைகள் அதிகரிக்கின்றன. - நீர் நாய்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனை. மீன் தின்னும் இந்த இனத்தால் இங்கிலாந்தில் தீரா தலைவலி.
-
- 0 replies
- 238 views
-
-
எரிந்து கொண்டிருக்கும் நான்காவது மாடியில் இருந்து ஒவ்வொரு பிள்ளையாக யன்னலால் தூக்கி போட்டு தானும் குதித்த தாய். நால்வரையும் காப்பாற்றிய அமெரிக்க படையினர். (CNN)The scenario, captured in mobile phone footage, is a mother's nightmare. On the fourth story of a burning building in Pyeongtaek, South Korea, a woman dangles her baby out the window as smoke billows from two floors below. http://www.cnn.com/2016/05/03/asia/south-korea-fire-rescue/index.html
-
- 1 reply
- 332 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - துருக்கிய மக்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் விசா இல்லாமல் அனுமதிக்கும்படி ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை. ஆனால், ஐரோப்பிய நாடுகளிடம் ஒருமித்த ஒப்புதல் இல்லை. - வடகொரிய பல்கலைக்கழகத்துக்குள் சென்ற பிபிசி செய்திக்குழு, அந்த ரகசிய நாட்டின் கல்வி முறையால் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தது. - பிரஞ்சு நவநாகரிக அடையாளமான ''சனல்'' நிறுவனம் கம்யூனிஸ கியூபாவில் தமது நவநாகரிக ஆடை அணிகல நிகழ்வை மேடையேற்றியது.
-
- 0 replies
- 530 views
-
-
கனடா: காட்டுத் தீ பரவியுள்ள நகரிலிருந்து ஒட்டுமொத்த மக்களும் வெளியேற்றம் கனடாவின் அல்பேர்டா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பெரிய காட்டுத்தீயை அடுத்து, அங்கிருக்கும் நகர் ஒன்றிலிருக்கும் ஒட்டுமொத்த மக்களையும் வெளியேறுமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஃபோர்ட் மெக்மர்ரி என்ற அந்த நகரில் வசிக்கும் குறைந்தது 80 ஆயிரத்துக்கும் அதிகமானோரை வெளியேற்றும் பணிகள் நடந்துவருகின்றன. அந்நகரின் பிரதான சாலையை தீ சூழ்ந்துகொண்டதை அடுத்து, அங்குள்ள மக்களை பதற்றமடைய வேண்டாம் என்று அதிகாரிகள் கோரியிருந்தனர். ஃபோர்ட் மெக்மர்ரி நகரை சூழவுள்ள பகுதிகள் அனைத்தும் தீயில் நாசமாகிவிட்டதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார். யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக…
-
- 0 replies
- 689 views
-
-
ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: சிங்கப்பூரில் 8 பேர் கைது தங்கள் சொந்த நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக, ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான வங்கதேச அடிப்படைவாதிகள் 8 பேரை சிங்கப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சிங்கப்பூர் உள் துறை அமைச்சகம் நேற்று வெளி யிட்ட அறிக்கை: உள்நாட்டு பாதுகாப்பு சட்டத் தின் கீழ் வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேரை கைது செய்துள்ளோம். கட்டுமானப் பணியில் ஈடுபட்டி ருந்த இவர்கள், கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட வங்கதேச ஐஎஸ் (ஐஎஸ்பி) அமைப்பின் உறுப்பினர்கள் என விசாரணை யில் தெரியவந்துள்ளது. இவர்கள் ஐஎஸ் அமைப் பில் வெளிநாட்டு போராளிகளாக சேர விரும்பி உள்ளனர். ஆனால் இதற்காக சிரியாவுக்கு செல்வது…
-
- 0 replies
- 371 views
-
-
Ted Cruz bowed out of the Republican presidential race Tuesday following a crushing loss to Donald Trump in Indiana, clearing the path for the real estate mogul to clinch the GOP nomination. It was a remarkable turn of events in a presidential primary race that seemed destined -- just weeks ago -- to end in a contested convention this summer. Even in the final hours of the race in the Hoosier State, Cruz insisted he was staying in the race until June 7 -- going so far as to attack his rival during a news conference as a "pathological liar" unfit for the White House. http://www.cnn.com/2016/05/03/politics/ted-cruz-drops-out/index.html
-
- 0 replies
- 497 views
-
-
மிரட்டல் எதிரொலி: மெஸ்ஸியை கவர்ந்த ஆப்கன் சிறுவனின் குடும்பம் பாகிஸ்தானில் தஞ்சம் சிறுவன் முர்டஸா அகமதி | படம்: ராய்ட்டர்ஸ் தீவிரவாதிகள் மிரட்டல் காரணமாக மெஸ்ஸியை கவர்ந்த ஆப்கன் சிறுவன் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர். இது குறித்து ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கு சிறுவனின் தந்தை தொலைபேசியில் பேசியபோது, "இணையதளங்களில் முர்டஸா அகமதி பிரபலமானதால் அவர் கடத்தப்படக் கூடும் என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது. எங்களுக்கு தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டல் வந்தது. இதனால், பாதுகாப்பு கருதி ஆப்கனில் இருந்து வெளியேறி பாகிஸ்தானின் குவெட்டா நகரில் தஞ்சமடைந்துள்ளோம். எங்கள் வாழ்க்கை துயரமானதாக மாறிவிட்டத…
-
- 0 replies
- 255 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - முறியும் நிலையிலுள்ள சிரியாவின் போர் நிறுத்தத்தை காப்பாற்ற ஐநா தூதர் ரஷ்யா விரைந்தார். அதேவேளை, ஐஎஸ் அமைப்புக்கு எதிராக மின்னணு ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது. - புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு புதிய சாதனை. நோய்க்கான சிகிச்சைக்கும், அதனை தடுக்கவும் சாத்தியமான புதிய வழியை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். - யானைத்தந்தங்களின் கையிருப்பு அதிகரித்து வரும் உலகின் ஒரே நாடான ஜப்பானில் சட்டவிரோத தந்த விற்பனை குறித்த பிபிசியின் ஆய்வு.
-
- 0 replies
- 276 views
-
-
சிரியா உள்நாட்டுப் போர்: ரஷ்யாவிடம் உதவி கோருகிறது அமெரிக்கா சிரியாவின் அலெப்போ நகரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந் திருப்பதால் ரஷ்யாவிடம் அமெரிக்கா உதவி கோரியுள்ளது. சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டின் பெரும்பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் மிதவாத எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் சில பகுதிகள் உள்ளன. இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யாவின் முயற்சியால் அதிபர் ஆசாத்துக்கும் மிதவாத எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அண்மையில் சண்டைநிறுத்தம் அமலுக்கு வந்தது. அதன்படி தலைநகர் டமாஸ்கஸ், லத்திகா உள்ளிட்ட பகுதிகளில் போர் ஓய்ந்துள்ளது. எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள்…
-
- 0 replies
- 406 views
-
-
'ஒபாமா அவுட்' என்று கூறியபடியே வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய ஒபாமா! (வீடியோ) வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடான பத்திரிகையாளர்கள் இறுதி சந்திப்பு நடந்தது. இதில் மிகவும் நகைச்சுவையாக தகவல்களை ஒபாமா பகிர்ந்து கொண்டுள்ளார். வழக்கம் போல் டொனால்டு ட்ரம்பை பற்றி பேசிய ஒபாமா, "அவருக்கு வெளிவிவகாரக் கொள்கைகள் பற்றி தெரியாது என்கிறார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மிஸ்.ஸ்வீடன், மிஸ். அர்ஜென்டினா என வெளிநாட்டவர்களுடன்தான் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். அண்மையில் லண்டன் சென்றிருந்தபோது, இளவரசர் ஜார்ஜ் அரசு விதிமுறைகளை மீறி குளியலறை ஆடையுடன்தான் என்னைச் சந்தித்தார். அது என் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. லண்டன் சென்றிருந்த போது மகாராணி…
-
- 1 reply
- 589 views
-
-
இமயமலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் 16 ஆண்டுகளின் பின் கண்டுபிடிப்பு இமயமலையில் பனிச்சரிவு ஒன்றில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேறிகள் இரண்டு பேரின் உடல்கள் 16 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அலெக்ஸ் லோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் டேவிட் பிரிட்ஜெட்ஸ் புகழ்பெற்ற மலையேறிகளான அலெக்ஸ் லோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் டேவிட் பிரிட்ஜெட்ஸ் ஆகியோர் திபெத்தில் உள்ள ஷிஷாபங்மா மலையுச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது பலியாகியிருந்தனர். அதே மலை உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்த மற்ற இருவர் இவர்களின் உடல்களைக் கண்டுபிடித்துள்ளனர். உருகும் பனிப்பாறை ஒன்றிலிருந்து அவர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் ம…
-
- 0 replies
- 434 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் • ஸீக்கா வைரஸ் முன்பு நினைத்திருந்ததைவிட அதிக ஆபத்தானதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை; • வடகொரியாவில் கொண்டாட்டங்கள் - நான்கு தசாப்தங்களில் நடக்கும் முதலாவது ஆளும் கட்சியின் தேசிய மாநாடு - மிகவும் ரகசியமான தேசத்திலிருந்து பிபிசியின் நேரடிக் குறிப்பு; • யானைகளைக் காப்பாற்றும் முயற்சி - வேட்டையே தீர்வாக முடியும் என்னும் நமிபியாவின் வித்தியாசமான முயற்சியை நேரில் சென்று ஆராயும் பிபிசியின் பிரத்யேகச் செய்திக் குறிப்பு ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 230 views
-
-
ஈக்குவடோர் பூமியதிர்ச்சி இடிபாடுகளின் கீழிருந்து 13 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட வயோதிபர் ஈக்குவடோரை 7.8 ரிச்டர் பூமியதிர்ச்சி தாக்கி 13 நாட்களின் பின் கட்டட இடிபாடுகளின் கீழிருந்து 72 வயது வயோதிபர் ஒருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த மீட்பு சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. மானுவேல் வஸ்குயஸ் என்ற அந்த நபர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெனிசுலாவைச் சேர்ந்த மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி ஈக்குவடோரை தாக்கிய பாரிய பூமியதிர…
-
- 0 replies
- 205 views
-
-
முகத்திரையை தடை செய்ய, வலதுசாரி ஜெர்மனியக் கட்சி கோரிக்கை ஜெர்மனிக்கான மாற்று எனும் வலதுசாரி கட்சி, இஸ்லாம் ஜெர்மனிக்கு உரியது அல்ல எனக் கூறும் தமது தேர்தல் அறிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளது. ஜெர்மனிக்கான மாற்று எனும் கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது ஸ்டுட்கார்ட் நகரில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், இஸ்லாமிய கோபுரங்கள், தொழுகைக்கான அழைப்பு மற்றும் முகத்தை மறைக்கும் முகத்திரை ஆகிவை தடை செய்யப்பட வேண்டும் எனும் தீர்மானத்தையும் அக்கட்சி நிறைவேற்றியுள்ளது. கடந்த ஒராண்டில் நாடு முழுவதும் அக்கட்சிக்கான ஆதரவு பெருகி வந்துள்ளது என அங்குள்ள பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகின்றனர். பெடிகா எனும் அ…
-
- 0 replies
- 318 views
-
-
சிரிப்புடன் விடைபெற்றார் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதிகள், ஆண்டுதோறும் உரையாற்றும் வெள்ளை மாளிகைச் செய்தியாளர்கள் விருந்தில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இறுதியாகக் கலந்துகொண்டார். அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்நிகழ்வில், அமெரிக்காவின் அரசியல்வாதிகள், செய்தியாளர்கள், பிரபலங்களெனப் பலர் கலந்துகொண்டனர். வழக்கத்தைப் போலவே, அமெரிக்க ஜனாதிபதி, நகைச்சுவைமிகுந்த தனது உரையை ஆற்றினார். 8ஆவது முறையாக உரையாற்றின ஜனாதிபதி ஒபாமா, கடந்த காலங்களில் தான் உரையாற்றின புகைப்படங்களைக் காண்பித்து, தனக்கு வயதாகிவிட்டது என்பதை வெளிப்படுத்தியதோடு, முன்னெரெப்போதுமில்லாததைப் போன்று, அவருக்கான ஆதரவு, அமெரிக்காவில் அதிகரித்துள்ளதையும் …
-
- 0 replies
- 782 views
-
-
இராக்கில் இரட்டைக் கார்குண்டுத் தாக்குதல் பலர் பலி இராக்கில் நடைபெற்ற இரட்டைக் கார்குண்டுத் தாக்குல்களில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இராக்கில் தொடரும் குண்டுத் தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்படுகின்றனர் இத்தாக்குதல்கள் நாட்டின் தென் பகுதியிலுள்ள சமாவா நகரில் இடம்பெற்றுள்ளது. இதில் 35 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு குண்டுத் தாக்குஹல் மாகாண அரசின் கட்டடம் ஒன்றையும், மற்றொன்று பேருந்து நிலையம் ஒன்றையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இத்தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. இதனிடையே இராக்கிய நாடாளுமன்றத்த…
-
- 0 replies
- 274 views
-
-
ஐரோப்பா செல்ல முயன்ற குடியேறிகள் 84 பேர் லிபியக் கடலில் 'மூழ்கினர்' லிபியாவை அண்டிய கடலில், படகு ஒன்று மூழ்கியதில் குடியேறிகள் 84 பேர் காணாமல்போயுள்ளதாக ஐஓஎம் என்ற குடியேறிகள் தொடர்பான சர்வதேச அமைப்பு கூறுகின்றது. லிபியாவின் சப்ராட்டா என்ற இடத்திலிருந்து 4-மைல் தூரத்தில் அவர்களின் காற்றடைக்கப்பட்ட டிங்கி படகு மூழ்கிய நிலையில், 26 பேரை மீட்கப்பட்டுள்ளதாக ரோம் நகரில் உள்ள கடலோரக் காவல்படையை மேற்கோள்காட்டி இத்தாலிய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டில், இதுவரை சுமார் 27 ஆயிரம் குடியேறிகள் படகுமூலம் இத்தாலியை வந்தடைந்துள்ளனர். பால்கன் நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், படகு மூலம் கடப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் எதிர்…
-
- 0 replies
- 442 views
-
-
சுட்டெரிக்கும் எல் நீனோவைத் தொடர்ந்து மூழ்கடிக்க வருகிறது லா நீனா! inShare ஆசிய நாடுகளை வாட்டியெடுத்து வரும் வெப்ப சலனத்தின் (எல் நீனோ) தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் “லா நீனா’ சலனம் காரணமாக பலத்த மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கிய வெப்ப சலனம் காரணமாக பிலிப்பின்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவியது. உலகில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான வியட்நாமில், கடந்த 100 ஆண்டுகளி…
-
- 1 reply
- 700 views
-
-
சிரியாவில் 2 ஆண்டுகளில் 4,000 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஐஎஸ் கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 4,000 பேரை ஐ.எஸ். தீவிரவாத அமைப்ப மரண தண்டனை மூலம் கொன்று குவித்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. அதாவது ஜூன் 2014-ல் ஐஎஸ்ஐஎஸ். அறிவிப்பு தினம் முதல் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. வேண்டாதவர்களை, இயக்கத்தை எதிர்ப்பவர்களை, அயல்நாட்டினரை என்று பல்வேறு தரப்பினரையும், சுட்டுக் கொல்லுதல், தலையை துண்டித்தல், கல்லெறிந்து கொல்லுதல் மற்றும் கட்டிடங்களிலிருந்து தூக்கி வீசுதல் என்று பல்வேறு கொடூரமான விதங்களில் மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகிறது ஐ.எஸ். ஓர்பாலினச் சேர்க…
-
- 0 replies
- 436 views
-
-
நோர்வேயில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – 11 பேர் பலி -இருவரைக் காணவில்லை 29 ஏப்ரல் 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நோர்வேயில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில், அதில் சென்ற 11 பேர் உயிரிழந்துள்ளனர். இருவரைக் காணவில்லை. இன்றைய தினம் நோர்வேயின் கல்பாக்ஸ் எண்ணெய் வயலில் இருந்து பெர்ஜன் நகருக்கு 11 ஊழியர்கள் உள்பட 13 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் டியூராய் தீவுக்கு அருகே பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொருங்கியுள்ளது. விழுந்தபோது ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், அதில் இருந்து கரும்புகை எழுந்ததாகவும் அங்கிருந்து தகவல் வெளியானது. தகவல் அறிந்த மீட்புக் குழுவ…
-
- 11 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தானுக்கு போர் விமானம்: அமெரிக்காவின் முடிவில் மாற்றம் பாகிஸ்தானுக்கு ரூ. 4,650 கோடி மதிப்புள்ள 8 எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்க அதிபர் ஒபாமா அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு பெரும்பாலான அமெரிக்க எம்.பி.க்கள். எதிர்ப்பு தெரிவித்தனர். தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்குப் பதிலாக எஃப்-16 ரக போர் விமானங் களை இந்தியாவுக்கு எதிராகவே பாகிஸ்தான் பயன்படுத்தும் என அமெரிக்க எம்.பி.க்கள் பலர் கவலை தெரிவித்தனர். இந்த போர் விமானங்களின் மதிப்பு 70 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.4,650 கோடி). இத்தொகையில் 43 கோடி அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.2853 கோடி) அமெரிக்க அரசு மானியமாக வழங்கும். பாகிஸ்தான் 27 கோடி அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 179…
-
- 0 replies
- 333 views
-
-
அமெரிக்க அதிபர் வேட்பாளர்களாக டிரம்ப், கிளின்டனுக்கு வாய்ப்பு பிரகாசம்: 5 மாகாண உட்கட்சி தேர்தலில் அமோக வெற்றி டிரம்ப்-ஹிலாரி. | படம்: ராய்ட்டர்ஸ் அமெரிக்காவில் 5 மாகாணங்களில் நடந்த உட்கட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால், இரு முக்கிய கட்சிகளைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளின்டனுக்கு அதிபர் வேட்பாளராவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறு கிறது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சியான குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மாகாண வாரியாக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மேரிலேண்ட், கனெக்டிகட், தெலவார், பென…
-
- 1 reply
- 606 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * சிரியாவின் அலெப்போ நகரில் மேலும் உயிர்ப்பலிகள்- வன்முறைகளை நிறுத்துமாறு ஐநா தலைமைச் செயலர் கோரிக்கை; * அழிந்துபோகாமல் காப்பாற்ற முடியுமா? சட்டவிரோத யானை வேட்டைகளை தடுப்பது பற்றி ஆப்பிரிக்கத் தலைவர்கள் ஆராய்கின்றனர்; * ஜப்பானில் ஒல்லி உடம்புக்கு ஆசைப்பட்டு- உணவுப் பழக்கம் குறித்த மன அழுத்தங்களில் சிக்கியுள்ள ஆயிரக் கணக்கான பெண்கள் குறித்த செய்திகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 317 views
-