உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
சிரியாவில் குழந்தைகள் மருத்துவமனை மீது விமானத் தாக்குதல்.- 50 பேர் பரிதாப மரணம். சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் அமெரிக்கா, ரஷியா, உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு வந்தது. அங்கு தற்போது சண்டை நிறுத்தம் அமுலில் இருந்து வந்தாலும், அதையும் மீறி சில தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகரை மீட்கும் முயற்சியில் அரசுப்படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக அரசுப்படைகள் நடத்தும் தாக்குதல்களில் அப்பாவி மக்களும்கொல்லப்படுகின்றன…
-
- 0 replies
- 356 views
-
-
'கட்டாய நாடு கடத்தலுக்கு' ஆளான என்னிடம் இந்தியா திரும்பும் திட்டம் இல்லை: மல்லையா விஜய் மல்லையா. | கோப்புப் படம்: பிடிஐ. 'கட்டாய நாடு கடுத்தல்' நிலைக்கு தான் ஆளானதாகவும், இப்போதைக்கு இந்தியா திரும்பும் எண்ணம் இல்லை என்றும் தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'ஃபினான்ஸியல் டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நான் இந்தியா திரும்புவதற்கே நிச்சயமாக விரும்புகிறேன். ஆனால், இப்போது நிலைமை கைமீறிவிட்டது. என் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. அரசு அடுத்து என்ன செய்யும் என்று தெரியவில்லை. இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதே முக்கியம். மக்களை மட்டுமின்றி அரசிடமும் தேவையின…
-
- 0 replies
- 400 views
-
-
தன்னை தீமூட்டிக் கொண்ட நவ்ரு அகதி மரணம் நவ்ரு தடுப்பு நிலையத்தில் தன்னை தீ மூட்டிக் கொண்ட ஈரானிய அகதியொருவர், பிறிஸ்பேர்ண் வைத்தியசாலையில் மரணமடைந்ததாக குடியேற்ற அமைச்சர் பீற்றர் டுற்றன் உறுதிப்படுத்தியுள்ளார். தனது உடம்பின் பெரும்பாலான பகுதிகள் எரிவடைந்த நிலையில், 23 வயதான ஈரானியரான ஒமிட், பிறிஸ்பேர்ண் வைத்தியசாலைக்கு நேற்று எடுத்து வரப்பட்டிருந்தார். இந்நிலையில், மரணமடைந்தவரின் மனைவிக்கும் நண்பர்களுக்கும் தகுந்த ஆதரவு வழங்கப்படும் என அறிக்கையொன்றில் டுற்றன் தெரிவித்துள்ளார். கன்பெராவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவரகத்தின் பணியாளர்கள் (யு.என்.எச்.சி.ஆர்) விஜயம் செய்த நிலையிலேயே, நவ்ரு தடுப்பு நிலையத்துக்கு வெள…
-
- 0 replies
- 387 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகள் உளவு பார்த்த குற்றச்சாட்டில் தம்மால் பிடிக்கப்பட்ட இருவருக்கு சிலுவையில் அறைந்த பின்னர் தலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன. சிரிய ரக்கா நகரில் படமாக்கப்பட்டு' உளவாளிகளை அறுவடை செய்தல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வில்லாயத் அர் ரக்கா (ரக்கா மாகாணம்) என்ற பெயரிலான ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஐ.எஸ். தீவிரவாதியொருவர், செம…
-
- 0 replies
- 472 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - அமைச்சரவை மாற்றத்துக்கான ஒரு வாக்கெடுப்பை இராக்கிய நாடாளுமன்றம் பின்போட்டுள்ளது. அரசியல் நெருக்கடி அங்கு தெருப் போராட்டங்களாக வெடித்துள்ளது குறித்து பிபிசியின் தகவல். - பாகிஸ்தானில் பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்ட ஒரு பெண் செய்தியாளரை பாதுகாப்புப் படையினரே கடத்தியதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். - இரண்டாம் உலகப்போரின்போது பாலியல் விடுதியாக ஜப்பானிய அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட வீட்டை இடிக்கக் கூடாது என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.
-
- 0 replies
- 362 views
-
-
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு பிரிட்டிஷ் அரசுக்கு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மல்லையா தற்போது பிரிட்டனில் உள்ளார். மும்பையில் உள்ள நீதிமன்றம் ஒன்று அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்ததை அடுத்து கடந்த வாரம் அவரது ராஜாங்கக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. மல்லையா கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் பீர் ஆகிய நிறுவங்களின் முன்னாள் உரிமையாளர். மல்லையாக கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் செலுத்த வேண்டியுள்ளதாக இந்தியாவின் நிதி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அவரது ஏர்லைன்ஸ…
-
- 0 replies
- 293 views
-
-
அகதிகளுக்காக கண்கலங்க முடியாது: அவுஸ்திரேலியா படகில் வரும் அகதிகளுக்காக அவுஸ்திரேலியா கண்கலங்க முடியாது என அவுஸ்திரேலியாவின் பிரதமர் மல்கொம் டேர்ண்புல் இன்று வியாழக்கிழமை (28) தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு வெளியேயுள்ள செயற்பாட்டு முகாமை மூடவும் என பப்புவா நியூ கினி உத்தரவிட்டமையை அடுத்து, டேர்ண்புல்லின் குடியேற்றக் கொள்கை சிக்கலுக்குள்ளாகிய மறுதினமே மேற் படி கருத்து வெளியாகியுள்ளது. எதிர்வரும் வாரங்களில் தேர்தலை எதிர்கொள்ள எதிர்பார்த்துள்ள மல்கொம் டேர்ண்புல், படகின் மூலமாக வந்தடைந்த உண்மையாக அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியேற்றுவதாலும், மேலும் பலர் ஆபத்தான பயணத்தைத் தொடர ஊக்குவிப்பதாக அமையும் எனத் தெரிவித்துள்ளார். ஆட்…
-
- 0 replies
- 518 views
-
-
கட்டார் அரச குடும்பத்தின் முக்கிய நிதி ஆவணங்கள் இணையத்தில் அம்பலம். கட்டார் மன்னர் தமிம் பின் ஹமாட் அல் அதானியின் குடும்பத்தின், வங்கி கடவுச் சொற்கள் மற்றும் முக்கிய தரவுகளை இணைய ஊடுருவிகள் வெளியிட்டுள்ளதாக அல் ஜெசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. தகவல் இணையத்தில் வெளியிடப்பட்டமையை அல் ஜெசீரா உறுதிப்படுத்தியுள்ளதுடன் வெளியிடப்பட்ட இந்த தரவுகள் அதிர்ச்சியூட்டும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. கட்டாரின் தேசிய வங்கியின் பாதுகாப்பு பிரிவிடம் இருந்து இணையம் மூலமாக இந்த தரவுகள் திருடப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட தரவுப் பட்டியலில் குறித்த வங்கியின் ஆயிரக்கணக்கான வாடிக்கையா…
-
- 0 replies
- 332 views
-
-
ராகஸ்: கடும் மின்சாரப் பற்றாக்குறை நிலவி வருவதால் வெனிசுலாவில் வாரத்தில் 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு, 2 நாட்கள் மட்டுமே பணி நடைபெறும். தென் அமெரிக்காவிலுள்ள, வெனிசுலா நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து அங்கு மின்சார தட்டுப்பாடு நிலவுகிது. மின்சாரம் இல்லாத காரணத்தால், அந்நாட்டு அரசு அலுவலகங்கள் வாரத்தில் திங்கள், செவ்வாய் கிழமை மட்டுமே செயல்பட உள்ளது. மிக அத்தியாவசியமான பணிகளைத் தவிர, பிற பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளுக்கு புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாட்கள் என்பதால், திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்கள் மட்டுமே இனி அரசு அலுவலகங்கள் திறந்திருக்கும்.http://tamil.oneindia.com/news/…
-
- 1 reply
- 557 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - ஐந்து அமெரிக்க மாநிலங்களில் பெருவெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப், இதன் மூலம் குடியரசுக் கட்சி வேட்பாளராக தான் தேர்வாகிவிட்டதாகக் கூறுகிறார். - ஆசியாவில் கடும் வறட்சி. தாய்லாந்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றுவந்த பிபிசி குழு தரும் தகவல்கள். - தான்சானியாவில் அவமானமாக பார்க்கப்படும் ஆட்டிசம் நோயாளிகள். பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் பராமரிப்பு வழங்க போதுமான வசதிகள் கிடையாது.
-
- 0 replies
- 515 views
-
-
”பிக்பென்” கடிகாரப் பழுதுக்கு 29 மில்லியன் பவுண்ட் செலவிடுகிறது பிரித்தானிய அரசு inShare உலகின் மிகப் பிரபலமான கடிகாரமான “பிக்பென்’ ஐப் பழுது பார்க்கும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும் என பிரித்தானிய பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தப் பணிகளுக்கு 29 மில்லியன் பவுண்ட் செலவாகும் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. பிக் பென் கடிகாரமும் அது அமைக்கப்பட்டுள்ள எலிஸபெத் கோபுரமும் முற்றிலும் பழுது பார்க்கப்படவுள்ளது. இதற்கு 3 ஆண்டு காலமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடிகாரம் ஓட…
-
- 0 replies
- 481 views
-
-
இஸ்ரேலிய சிறையிலிருந்த பலஸ்தீன சிறுமி விடுதலை இஸ்ரேலிய சிறையிலிருந்த பலஸ்தீன சிறுமி (12) ஒருவர் இரண்டுமாத சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பலஸ்தீனக் கைதிகளில் மிகக்குறைந்த வயதை உடையவராவார் இந்த சிறுமி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு கரையில் அவரது குடும்பத்துடன் இணைந்தார். விடுதலையான இந்த சிறுமியை அந்த நகரின் ஆளுநர் உட்பட பலரும் வரவேற்றுள்ளனர். குறித்த சிறுமி கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி பாடசாலை சீருடையில் கத்தியுடன் யூத…
-
- 0 replies
- 334 views
-
-
அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் 5-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா முடிவு: கொரிய தீபகற்பத்தில் பதற்றம் கிம் ஜோங் உன். | கோப்புப் படம். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் 5-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா ராணுவ பயிற்சி யில் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை யில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் நான்காவது முறை யாக வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனை உலகம் முழுவ தும் பெரும் அதிர்ச்சியை ஏ…
-
- 0 replies
- 303 views
-
-
மகிழ்ச்சி என்பது கையடக்கத்தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யும் மென்பொருள் அல்ல மகிழ்ச்சி என்பது உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்யும் மென்பொருள் ஒன்றல்ல என பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்தார். ரோமில் சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் சுமார் 70,000 இளைஞர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய இளைஞர்கள் கையடக்கத்தொலைபேசிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருவதைக் கவனத்திற் கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ஐபோன் கையடக்கத்தொலைபேசியொன்றை கையில் பற்றிப் பிடித்த பாப்பரசர், இயேசுக் கிறிஸ்து இல்லாத வாழ்க்கை சமிக்ஞை எதுவுமற்ற கைய…
-
- 0 replies
- 360 views
-
-
மனுஸ் தீவு தடுப்புமுகாம் அரசியல் யாப்பை மீறுகிறது'- உச்ச நீதிமன்றம் அகதிகளையும் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களையும் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ளது அரசியலமைப்பிற்கு முரணானது என்று பாப்புவா நியூ கினியின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. `ஆஸி. தடுப்பு முகாம் சட்டவிரோதமானது' சட்டவிரோத குடியேறிகள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் குற்றத்துடன் தொடர்புடையவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தவிர அனைவரினதும் தனிப்பட்ட சுதந்திரத்தை பப்புவா நியூ கினியின் அரசியலமைப்பு உறுதிப்படுத்துகின்றது. கடல்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியாவிற்கு வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது நாட்டிற்கு வெளியே வைத்து விசாரிக்கும் ஆஸ்திரேலியாவின் கொள்கையின் கீழ் அகதித் தஞ்சக்…
-
- 0 replies
- 272 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - உலகின் மிகவும் மோசமான அணு விபத்து செர்நோபிலில் நடந்து இன்றுடன் முப்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. அங்கு பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலம். - வங்கதேசத்தில் தொடர்ந்து கொல்லப்படும் சுதந்திர எழுத்தாளர்கள். ஒருபாலுறவு ஆதரவு செயற்பாட்டாளர் இருவரை கொன்றதாக உரிமை கோரும் இஸ்லாமியவாத ஆயுதக்குழு. - அன்னங்களோடு பறக்கும் அணங்கு. அன்னப்பறவைகள் ஆண்டுதோறும் செல்லும் பயணத்தில் சேர்ந்து பறக்கும் பெண்.
-
- 0 replies
- 285 views
-
-
செர்னோபில் அணு விபத்து: 30 ஆண்டுகள் நிறைவு செர்னோபில் விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் தேவாலயங்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றி இன்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர் செர்னோபிலில் நடந்த உலகின் மிக மோசமான அணு விபத்தின் 30-வது ஆண்டு நிறைவை குறிக்கும் நிகழ்வுகளை யுக்ரெய்ன் நடத்துகின்றது. 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த அணு ஆலையின் உலை உருகி வெடித்தபோது, ஆலையின் கூரை பிடுங்கி எறியப்பட்டு மண்டலமாகக் கிளம்பிய கதிரியக்க பொருட்கள், யுக்ரெய்னின் எல்லையை கடந்து அண்டையில் உள்ள பெலாரஸிலும், வடக்கு ஐரோப்பா எங்கிலும் பரவியது. அந்த விபத்து நடந்த உடனேயே பணியாளர்களும் தீயணைப்பு வீரர்களுமாக 31 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால், அடுத்த பல மாதங்களில் அங்கிருந்து வெ…
-
- 0 replies
- 261 views
-
-
பாரீஸ் குண்டுவெடிப்பு - வெளியானது பகீர் வீடியோ பாரீஸ் குண்டுவெடிப்பில் வெடிப்பு தொடர்பான அதிர்ச்சி வீடியோ ஒன்றை பிரான்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர். இந்த குண்டுவெடிப்பில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளி சலா அப்தே சிலாம். வயது 26 வயதுடைய சிலாம், பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது, காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான விசாரணை அவரிடம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாரீஸ் தாக்குதலில் தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் வெடித்து சிதறும் அதிர்ச்சியூட்டும் வீடியோவை பிரான்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது. பாரீஸி…
-
- 0 replies
- 408 views
-
-
டெல்லியில் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பெரும் தீ விபத்து தீ விபத்து நடந்த கட்டிடம் | படம்: ஆர்.வி.மூர்த்தி. டெல்லியில் உள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் சேதம் உண்டானது. டெல்லி மாண்டி ஹவுஸ் பகுதியில் அமைந்திருக்கிறது தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகம். இங்கு இன்று அதிகாலை 1.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புப் படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீயணைப்புப் பணியின்போது இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். "தீயி…
-
- 0 replies
- 475 views
-
-
உடைக்கப்பட்ட நவக்கிரக சிலைகள். மலேசியாவில் ஈப்போ, கிரீன்டவுன் அருகே அமைந்துள்ள இந்து கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டன. இதனால் அந்த நாட்டில் பதற்றம் எழுந்துள்ளது. மலேசிய மக்கள் தொகையில் இந்திய வம்சாவழியினர் 8 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அங்கு தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பத்துமலை முருகன் கோயில் உட்பட ஏராளமான இந்து கோயில்கள் உள்ளன. இந்நிலையில் பேராக் மாநில தலைநகர் ஈப்போவில் கிரீன்டவுன் அருகே அமைந்துள்ள முனீஸ்வரர் அம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்கிருந்த நவக்கிரக சிலைகளை உடைத்துள்ளார். இது மலேசிய தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. இதுதொடர…
-
- 0 replies
- 285 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - துருக்கியில் மிகவும் தீவிரமாக தேடப்படும் குர்து பிரிவினைவாத பிகேகே அமைப்பு தலைவரை பிபிசி சந்தித்தது. துருக்கிக்கு எதிரான சண்டையை தீவிரப்படுத்தப் போவதாக அவர் கூறுகிறார். - நேபாளத்தில் ஒன்பதாயிரம் பேர் பலியான பூகம்பத்தின் ஒரு வருடத்தின் பின்னரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக்கட்டமைக்க அந்த நாடு தடுமாறுகிறது. - ஷேக்ஸ்பியரின் படைப்புகள் அவர் மறைந்து நானூறு ஆண்டுகளின் பின்னர், மேடையில் இருந்து மெய்நிகர் உலகுக்கு.
-
- 0 replies
- 385 views
-
-
பிகேகே தலைவரின் மறைவிடம் சென்ற பிபிசி: ======================================= துருக்கியால் தீவிரமாக தேடப்படும் பிகேகே அமைப்பின் தலைவர் இராக்கில் மறைந்து வாழும் இடத்துக்கு பிபிசி சென்றது. போர் நிறுத்தம் இல்லாவிட்டால், துருக்கியுடனான போரை தீவிரப்படுத்தப் போவதாக பிகேகே தலைவர் எம்மிடம் கூறியுள்ளார். வடக்கு இராக்கில் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில் ஒரு ரகசிய இடத்தில் ஜமீல் பாயிகை பிபிசி சந்தித்தது. அந்த அமைப்பினரை சரணடையச் செய்ய அல்லது அழிக்கப்போவதாக துருக்கிய அதிபர் சூளுரைத்துள்ளார்.
-
- 0 replies
- 489 views
-
-
பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் நீரில் மூழ்கும் அபாயம்..! உலகில் தற்போது நிகழும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகுவதனால் உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் கலிப்போர்னியா சிலிகன் வெலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்புக்கு அமைவாக கடல்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. இதனால் சிலிகன் வெலியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமை காரியாலயங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சென் பிரான்சிஸ்கோ கடல் பகுதியை அன்மித்த சொத்துக்களும் நீரில் மூழ்கும் …
-
- 0 replies
- 482 views
-
-
மலேசிய எம்.எச்.17 விமானம் உக்ரேனிய போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது : புதிய சான்றுகள் தெரிவிப்பு மலேசிய எம்.எச். 17 விமானமானது உக்ரேனிய போர் விமானமொன்றால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய சான்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்படி போயிங் 777 விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பக் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த விமானம் 2014 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி கிழக்கு உக்ரேனுக்கு மேலாக வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் பிரித்தானிய பிபிசி ஊடகத்தில் வெளியான புதிய ஆவணப்படத்திற்கு மேற்படி விமானம் உக்ரேனிய வான் பரப்பில்…
-
- 0 replies
- 336 views
-
-
எவ்-16 யுத்த விமானத்தின் உதவியுடன் நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய நோர்வே மருத்துவர்கள் 2016-04-25 11:29:03 எவ்- –16 யுத்த விமானங்கள் தாக்குதல்களுக்குத்தான் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், நோர்வேயைச் சேர்ந்த மருத்துவர்கள் எவ்.-16 ரக யுத்த விமானத்தின் உதவியுடன் நோயாளி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். நோர்வேயின் மத்திய பிராந்திய நகரான போடோவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளி ஒருவருக்கு Extracorporeal membrane oxygenation (எக்ஸ்ட்ராகேர்பரெல் மெம்பரன்ஸ்ஒக்ஸிஜினேஷன்) எனும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருந்தது. இதயம், நுரையீரல் செயலிழந்த வர்களை உயிர்பிழைக்க வைப்பதற்காக அவர்கள…
-
- 0 replies
- 315 views
-