உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
சைப்ரஸில் அரசியல் தஞ்சம் வேண்டும்... எகிப்து விமானத்தைக் கடத்திய சமஹா கோரிக்கைஎகிப்து பயணிகள் விமானத்தை கடத்திய இப்ராஹிம் சமஹா தனக்கு சைப்ரஸில் அரசியல் தஞ்சம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்எஸ்181 இன்று கெய்ரோவுக்கு கிளம்பியது. விமானத்தில் 81 பயணிகள், 7 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தை தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிய எகிப்தை சேர்ந்த இப்ராஹிம் சமஹா(27) என்பவர் கடத்தியது தெரிய வந்துள்ளது. எகிப்து அதிகாரிகள் சமஹாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தையின் பலனாக விம…
-
- 6 replies
- 1k views
-
-
முடிவுக்கு வந்தது ஈஜிப்ட் ஏர் விமானக் கடத்தல் விவகாரம் - கடத்தியவர் சரண் ஈஜிப்ட் ஏர் விமானக் கடத்தலில் சிக்கிய அனைத்து பயணிகளும் பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டது. கடத்தப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானம் லார்னகா விமானநிலையத்தில் ஒரு பதற்றமான நெருக்கடி நிலைக்குப் பின்னர் , விமானத்தைக் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். தனது கைகளைத் தூக்கியபடி விமானத்திலிருந்து வெளியே வந்த அவர், பின்னர் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளிடம் சரணடைந்தார். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக , பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விமானத்தின் படிகளில் ஒடி இறங்கி தப்பிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிப் படங்கள் காட்டின. …
-
- 0 replies
- 399 views
-
-
இஸ்லாமியவாதியின் ஐபோன் தரவுகளை ஆராய்கிறது அமெரிக்க நீதித்துறை அமெரிக்காவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிர இஸ்லாமியவாத நபருக்கு சொந்தமான ஐபோனின் தரவுகளுக்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது. இந்த இஸ்லாமியவாத நபரால், அமெரிக்காவின் சான் பெர்னாடினோவில் வைத்து கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக எடுக்கவிருந்த சட்ட நடவடிக்கை கைவிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐபோனுக்குள் இருக்கின்ற உள்ளடக்க தகவல்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், மூன்றாம் தரப்பு நபர் ஒருவரின் உதவிய…
-
- 1 reply
- 462 views
-
-
கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தில் இருந்த 7 பேரைத் தவிர அனைவரும் விடுவிப்பு கடத்தப்பட்டு சைப்ரஸுக்கு திருப்பிவிடப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானத்தில் இருந்தவர்களில் ஏழு பேரைத் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட விமானம் லார்னாகா விமான நிலையத்தில் உள்ளது அலெக்ஸாண்ட்ராவிலிருந்து கெய்ரோ சென்றுகொண்டிருந்த அந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குண்டுகள் நிரம்பிய இடுப்புப்பட்டி ஒன்றைத் தான் அணிந்திருந்ததாகக் கூறி விமானத்தை கடத்தினார். இதையடுத்து அந்த விமானம் சைப்ரஸிலுள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தற்போது சைப்ரஸில் தஞ்சம்கோரியுள்ள அந்த நபர், அந்நட்டைச் சேர்ந்த தனது முன்னாள் மனைவியைக் காணவேண்டும் எனக் கோரியுள்ளார். …
-
- 1 reply
- 323 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்பிரச்சாரத்தில் தற்போது காணப்படும் நிலைக்கு ஊடகவியலாளர்களே காரணம் ஒபாமா குற்றச்சாட்டு: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்பிரச்சாரத்தில் தற்போது காணப்படும் நிலைக்கு ஊடகவியலாளர்கள் வேட்பாளர்களிடம் கடுமையான கேள்விகளை கேட்காததே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிற்கு விருது வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் 2016 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் காணப்படும் ஆபாச உரைகள், தேர்தல் கூட்டங்களில் வன்முறைகள் இடம்பெறுவது மற்றும் யதார்த்தத்திற்கு மாறான வாக்குறுதிகள் போன்றவற்றிற்கு பத்திரிகைகள் அதிக முக்கியத்துவம் வழங்குவது குறித்து ஏமாற்றத்தையும் வெளியிட்டுள்ள…
-
- 0 replies
- 337 views
-
-
மூர்க்கமான வன்முறைமிக்க தீவிரவாதத்தை அன்பெனும் ஆயுதத்தின் துணையுடன் எதிர்த்துப் போராடுவோம் பாப்பரசர் பிரான்சிஸ் குடியேற்றவாசிகளுக்கு உதவத் தவறுபவர்கள் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி ஆற்றிய தனது பாரம்பரிய உரையிலேயே அவர் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார். குடியேற்றவாசிகள் அவர்களுக்கு வரவேற்பும் உதவியும் அளிக்கப்பட வேண்டியவர்களால் எப்போதும் நிராகரிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். அத்துடன் தீவிரவாதத்தை குருட்டுத்தனமான மூர்க்கமான வன்முறையொன்றாகக் குறிப்பிட்ட பாப்பரசர், அதற்கு எதிராக அன்பு எனும் ஆயுதத்தின் துணையு…
-
- 0 replies
- 252 views
-
-
பெல்ஜியம்: பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிப்பு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கடந்த வாரம் நடந்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதக் குற்றம்சாட்டப்பட்ட ஃபைசல் சி என்ற சந்தேக நபர் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டிருக்கிறார். கைதுசெய்யப்பட்ட ஒரு நபரும் விடுவிக்கப்பட்டிருப்பது விசாரணைக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஃபைசல் சிக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லையென அரசுத் தரப்புத் தெரிவித்திருக்கிறது. ஜாவெண்டம் விமான நிலையத்தில், இரு தற்கொலைப்படை தாரிகளுடன் வந்த மூன்றாவது நபர் இவர் எனக் கருதப்பட்டது. தற்போது மேலும் நீண்ட சிசிடிவி காட்சிகளை வெளியிட்டிருக்கும் பெல்ஜியம் காவல்த…
-
- 0 replies
- 267 views
-
-
பிரஸ்ஸல்ஸில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த பிறகு மாயமான இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷ் உயிரிழந்துவிட்டதாக பெல்ஜியம் நாட்டு இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் கடந்த 22 ஆம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தின் போது பிரஸ்ஸல்ஸில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த சென்னையைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேசன் என்பவர் மாயமானார். மேலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு மும்பையில் வசிக்கும் தனது தாய் அன்னபூரணியிடம் ஸ்கைப் மூலம் அவர் பேசியுள்ளார். இதையடுத்து அவரை தேடும் பணி தொடர்ந்து வந்தது. இந்நிலைய…
-
- 0 replies
- 558 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… லாஹூரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 71 பேரின் குடும்பங்கள் இறுதிச் சடங்குகள் செய்து கொண்டிருக்க, பஞ்சாப் மாகணாத்தில் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது பாகிஸ்தான். இஸ்லாமிய அரசு என்னும் அமைப்பிடமிருந்து சிரிய நாட்டு இராணுவம் மீட்டிருக்கும் பழம்பெரும் நகரான பல்மைராவின் இன்றைய நிலவரம் என்ன? சீனாவின் லட்சக்கணக்கான கிறித்தவர்கள் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடினாலும் எந்த தேவாலயத்துக்கு செல்வது என்பதில் சர்ச்சை நீடிக்கிறது. அரசின் தலையீட்டுக்கு எதிராக அதிகரிக்கும் விமர்சனம்
-
- 0 replies
- 327 views
-
-
ஆஃப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்றக் கட்டடம் மீது தாலிபான் தாக்குதல் ஆஃப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்ற கட்டடத் தொகுதி மீது தாலிபான்கள் ராக்கட்டுக்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆஃப்கான் புதிய நாடாளுமன்ற கட்டடம் மீது தாலிபான் தாக்குதல் குறித்த தாக்குதலில் கட்டடம் ஒன்றின் ஜன்னல்கள் சிதறடிக்கப்பட்டுளன. ஆனால் எவரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலைகுலைந்து போயுள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து ஆஃப்கன் உளவுத்துறை தலைமை அதிகாரி மக்கள் அவையில் பேச ஆயத்தமாகும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்தியாவினால் 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டடத் தொகுதி டிசம்ப…
-
- 0 replies
- 229 views
-
-
கேட்டி சூறாவளியின் காரணமாக இங்கிலாந்திலும் வேல்ஸிலும் 105 மைல் வேகத்தில் காற்று வீசியதால் பல விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் முக்கியமான பாலங்கள் மூடப்பட்டன. லண்டன் கட்விக் விமான நிலையத்திற்கு வர வேண்டிய 20 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதுடன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கான 60 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் 5,000 இல்லங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் 23 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று மிகப் பெரிய பாலங்கள் மூடப்பட்டுள்ளன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130508/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 296 views
-
-
இலங்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதே – டோனி அப்போட் இலங்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதே என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். தாம் பிரதமராக கடமையாற்றிய காலத்தில் இலங்கை குறித்து எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சரியானதே என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது இரண்டு ஆண்டு கால ஆட்சி தொடர்பில் அபோட் கட்டுரையொன்று அப்போட் வெளியிட்டிருந்தார். இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டமை குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டுக்கு மத்தியில் தாம் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்தவே முயற்சித்ததாகத் தெரி…
-
- 0 replies
- 368 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது போராட்டத்தில், எங்களுக்கு ஆதரவாக ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதில் முஸ்லிம்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார். அமெரிக்க முஸ்லிம்கள் குறித்து, அமெரிக்க அதிபர் ஒபாமா தனது வாராந்திர வானொலி உரையில், ''ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதே அமெரிக்க ராணுவத்தின் முதல்பணி. நாங்கள் அதில் வெல்வோம். தீவிரவாதிகள் தோல்வியை தழுவுவார்கள். எங்களது பாரம்பரியத்தையும், வாழ்க்கை முறையையும் கைவிட வேண்டும் என தீவிரவாதிகள் நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் கைவிட மாட்டோம். தீவிரவாதத்தை வேரறுக்கும் வரையில் அமெரிக்கா ஓயாது. மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது போராட்டத்தில் எங்களுக்கு ஆத…
-
- 0 replies
- 389 views
-
-
லாகூர் தற்கொலைத் தாக்குதலில் சிறார்கள் அடங்கலாக 50 பேர் பலி பாகிஸ்தானில், லாகூர் நகரிலுள்ள பூங்கா ஒன்றில் நடந்துள்ள வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சிறார்கள் பலரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது சிறார்கள் விளையாடிக்கொண்டிருந்த இந்த பூங்காவிற்கு அருகில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ஒரு பதற்றமான சூழல் காணப்படுவதாகவும், மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடிய நிலையில், சிறார்கள் தமது பெற்றோரை காண முடியாமல் பிரிந்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த சிறார்கள், பெரியோர்கள் என ப…
-
- 1 reply
- 628 views
-
-
பத்தான்கோட் தாக்குதல் பற்றி ஆராய பாக். விசாரணைக் குழு தில்லி வந்தது nகடந்த ஜனவரியில் நடந்த இந்தத் தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர் இந்தியாவின் வடக்கு மாநிலமான பஞ்சாப்-இல் பத்தான்கோட் விமானப் படைத்தளம் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக பாகிஸ்தான்விசாரணைக் குழுவொன்று தில்லி சென்றுள்ளது. கடந்த ஜனவரியில் நடந்த இந்தத் தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானிலிருந்து இயங்கும் ஜாய்ஷ்-இ- மொஹம்மட் என்ற இஸ்லாமியவாத ஆயுதக்குழுவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியிருந்தது. இவ்வாறான விசாரணை ஒன்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து இயங்குவது என்பது மிகவும் அரிதாகவே நடக்கக…
-
- 0 replies
- 416 views
-
-
உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால், உலகநாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியா எல்லையில் அமெரிக்கக்கூட்டு படையினர் மற்றும் தென்கொரிய வீரர்கள் கடந்த ஏழாம் தேதியில் இருந்து தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளையும் சோதித்துப் பார்த்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா அமெரிக்க…
-
- 0 replies
- 584 views
-
-
அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தில் 500 பணி இழப்புகள் 1996-ம் ஆண்டில், கத்தார் அரசாங்கத்தின் நிதியுதவில் நிறுவப்பட்ட அல்-ஜசீரா செய்தி ஊடகத்துக்கு உலகெங்கிலும் 70க்கும் அதிகமான அலுவலகங்கள் உள்ளன சர்வதேச ஊடக நிறுவனமான அல்-ஜசீரா கிட்டத்தட்ட 500 பணியிடங்களை நீக்கவுள்ளது. அல் ஜசீராவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கத்தாரிலேயே அனேகமான பணியிழப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன. உலகின் மற்ற இடங்களிலும் பல பணியிழப்புகள் ஏற்படவுள்ளன. 'ஊழியர்களின் வினைத் திறனை மேலும் அதிகரிப்பதை நோக்காகக் கொண்டே' இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அல் ஜசீரா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியாக எண்ணெயின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, கத்தார் அரசாங்கம் அல்…
-
- 0 replies
- 407 views
-
-
பாரிஸ்- பிரஸ்ஸல்ஸ் தாக்குதலாளிகளுக்காக 'போலி ஆவணம் தயாரித்துவர் கைது' பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் சந்தேகநபர்கள் பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு போலி அடையாள ஆவணங்களை தயாரித்து கொடுத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் அல்ஜீரிய பிரஜை ஒருவர் இத்தாலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் தெற்கில் உள்ள சலேர்னோவுக்கு அருகே ன ஜமால் எடின் அவ்வாலி என்ற இந்த 40 வயது நபர் கைது செய்யப்பட்டார். ஐரோப்பிய நாடுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவின் கீழ் இவரது கைது நடந்துள்ளது. கடந்த அக்டோபரில், பிரஸ்ஸல்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று திடீர் சோதனையிடப்பட்ட போது, பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்களில் ஈடுப…
-
- 0 replies
- 576 views
-
-
ஜப்பானில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் கடந்த ஆண்டு மேன்முறையீடு செய்துள்ளதாக கியாடோ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஜப்பானில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் அதிகாரிகளின் தீர்மானத்திற்கு எதிராக கடந்த ஆண்டு மேன்முறையீடு செய்துள்ளதாக கியாடோ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஜப்பானில் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பத்திருந்த 7500க்கும் அதிகமான விண்ணப்பங்களில் 27 பேருக்கு மாத்திரம் அகதித் தஞ்சம் வழங்கப்பட்டதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சு கூறியிருப்பதாக கியோடோ தெரிவித்துள்ளது. மேலும் 13,000 பேர் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பத்துவிட்டு முடிவிற்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதித…
-
- 0 replies
- 390 views
-
-
பிரஸல்ஸ் டிராம் ரயில் நிலையத்தில் மர்ம நபர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் வைத்திருந்த பையை வெடிகுண்டு நிபுணர் சோதனை செய்கிறார், படம்: ராய்ட்டர்ஸ் பிரஸல்ஸ் விமான நிலைய தாக்குதலின்போது அங்கிருந்து தப்பிய 3-வது தற்கொலைப் படை தீவிரவாதி கைது செய்யப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெல்ஜியம் தலைநகர் பிரஸல் ஸில் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐ.எஸ். தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 31 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். பிரஸல்ஸ் விமான நிலையத் தில் 3 தீவிரவாதிகளும் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு தீவிர வாதியும் ஊடுருவினர். இதில் விமான நிலையத்தில் புகுந்த 3-வது தீவிரவாதி தாக்குதல் நடத்தாமல் தப்பியோடிவிட்டான். அந்த த…
-
- 0 replies
- 335 views
-
-
சிரியாவின் பல்மைரா நகர் மீண்டும் அரச படைகள் வசம் சிரியாவின் பழம்பெரும் நகரான பல்மைராவை இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பிடமிருந்து அரச படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அரச ஊடகமும் செயல்பாட்டாளார்களும் கூறுகின்றனர். பல்மைரா நகரை ஐ எஸ் அமைப்பின் சீரழித்துள்ளதாக சர்வதேசம் குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக ரஷ்ய வான்படைத் தாக்குதல்கள் மற்றும் ஷியா ஆயுததாரிகளின் உதவியுடன் சிரிய இராணுவம் அங்கு நிலப்பகுதிகளை சிறிது சிறிதாக கைப்பற்றி வந்தது. அந்த நகரைக் கைப்பற்றுவதற்காக சனிக்கிழமை இரவு முழுவதும் சண்டைகள் நடைபெற்றுள்ளன. நகர் இப்போது அரச படைகள் வசம் நகரின் கிழக்குப் பகுதியில் இன்னும் துப்பாக்க…
-
- 0 replies
- 311 views
-
-
ஈபிள் கோபுரம் தகர்க்கப்படுவது போன்ற வீடியோ வௌியீடு ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. சமீபத்தில் இணையத்தில் ‘வீடியோ கேம்’ ஒன்றை வெளியிட்டனர். அதில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் ‘ஈபிள் கோபுரம்’ குண்டு வைத்து தகர்க்கப்பட்டு தரையில் சாய்வது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. பின்னர் இரத்த ஆறு ஓடி அது அமெரிக்காவின் டொலர் நோட்டுகள், துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் வைக்கப்பட்டுள்ள மர மேஜையின் மீது துளிதுளியாக விழுவது போன்று அனிமேசன் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவுக்கு ‘அவநம்பிக்கை மேற்கத்திய நாடுகள்’ என தலைப்பிட்டுள்ளனர். இவை சமூக வ…
-
- 0 replies
- 360 views
-
-
ஒரு டிவி நிகழ்ச்சி... ஒரே இரவில் 'ஜோக்கர்' ஆன 'டொனால்ட் ட்ரம்ப்’! அரசியல் - உலகின் பழமையான தொழில்; ஆனால் அதன் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் நவீனப்படுத்தப்பட்டுக்கொண்டே வருகிறது என்றால் அது மிகையல்ல. பண்பாடுகளும், பழக்க வழக்கங்களும் உலகெங்கிலும் வேறுபட்டுத் தெரிந்தாலும், மனிதனின் அடைப்படை மனோபாவம் மாறுவதில்லை. வெகுஜனங்களைப் பொறுத்த வரையில் அது இரண்டு பிரிவுகளின் கீழ் வகுக்கப்படுகிறது. அவை முறையே, நாம் ஆளப்படவேண்டியவர்கள் என்பதும், நாம் ஆள வேண்டியவர்கள் என்பதுதான். ஓர் அரசியல் இயக்கத்தின் உண்மையானத் தொண்டனுக்கு ஆட்சியிலோ, பதவி நாற்காலியிலோ பொதுவாக ஆசை இருப்பதில்லை; அந்தத் தொண்டன் மனதை ஆக்ரமித்திருக்கின்ற பொதுநலம், கொள்கைப் பிடிப்பு என்பதையெல்லாம் தாண்டி, இந்தக் குறிப்ப…
-
- 1 reply
- 915 views
-
-
ஏமெனில் ஒரு வருடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட அரசை நிலைநிறுத்த சவூதி அரேபியா தலைமையில் நடத்தப்பட்டுவரும் தாக்குதலைக் கண்டித்து தலைநகர் சனாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்.சனா நகர் தற்போது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது.சலேவின் கட்சியே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. சபீன் சதுக்கத்தில் நடந்த கூட்டத்திலும் சலே கலந்துகொண்டார்.ஏமென் முழுவதும் தற்போது நடந்துவரும் யுத்தத்தில் கடந்த ஆண்டில் 6,300 பேர் வரை இறந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்திருக்கிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=154235&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 328 views
-
-
பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தொடர்பாக ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு பிரஸ்ஸல்ஸில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் தீவிரவாத கொலை குற்றத்தித்தின் கீழ் சந்தேக நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பிரஸ்ஸல்ஸில் செவ்வாய்க்கிழமையன்று நடந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். கடந்த வியாழக்கிழமையன்று கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபரது பெயர் ஃபைசல் சீ என மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நபரது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டாலும் ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதற்கிடையில், பிரஸ்ஸல்ஸ் நகரில் இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமையன்று பேரணி ஒன்றுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால…
-
- 0 replies
- 307 views
-