உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
ஜெர்மனியில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 125 பேர் காபூல் திரும்பினர் ஜெர்மனில் தஞ்சம் கோரியவர்களில் இரண்டாவது பெரும்பான்மையானவர்கள் ஆப்கானியர்கள் ஜெர்மனியில் அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 125 ஆப்கான் குடியேறிகள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர். தமது சொந்த விருப்பின் பேரிலேயே இவர்கள் நாடு திரும்பி வந்துள்ளதாக ஆஃப்கான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குடியேறிகள் நாடு திரும்புவது, ஆப்கானிஸ்தானின் மீள்கட்டுமானத்திற்கு அவசியமானது என்று ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் தோமஸ் டு மேர்ஸியா முன்னர் தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள…
-
- 1 reply
- 466 views
-
-
குடியேறிகள் நெருக்கடி : ஆஸ்திரியாவில் பால்கன் நாடுகளின் அரசாங்க அமைச்சர்களின் கூட்டம் ஆஸ்திரிய எல்லையை கடக்க குறிப்பிட்ட அளவிலான குடியேறிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற விதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. குடியேறிகள் நெருக்கடியை சமாளிப்பது தொடர்பில் பால்கன் நாடுகளின் அமைச்சர்களின் சந்திப்பு ஒன்றை ஆஸ்திரியா நடத்துகின்றது. பெரும்பாலான குடியேறிகள் முதலில் வந்திறங்கும் நாடான கிரேக்கத்துக்கு இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அந்த நாடு ஒரு முறையான புகாரை தாக்கல் செய்துள்ளது. ஆஸ்திரிய எல்லையை கடக்க குறிப்பிட்ட அளவிலான குடியேறிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற விதி கடந்த வாரம் அமல்படுத்தப்பட்ட பிறகு பால்கன் பி…
-
- 0 replies
- 412 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஐரோப்பாவுக்கு கடல் கடந்து வரும் குடியேறிகளை தடுக்க தான் தவறிவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கிரேக்கம் கோபத்துடன் நிராகரித்துள்ளது. - பிரேஸிலின் ஸீகா பரவலை உலகுக்கு காட்டிய ஒரு புகைப்படத்தால் பிரபலமான தாய் மற்றும் அவரது பாதிக்கப்பட்ட குழந்தை ஆகியோரின் சோகக்கதை. - ஆஸ்திரேலியா தனது தளர்ந்துவரும் பொருளாதாரத்தை காப்பாற்ற ஆசியாவுக்கு விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய முனைகிறது. அது சாத்தியமா என்று ஆராயும் காணொளி.
-
- 0 replies
- 212 views
-
-
அமெரிக்க வேலைவாய்ப்புகளை இந்தியா வேட்டையாடுகிறது: டோனால்டு டிரம்ப் அதிரடி லாஸ் வேகாஸில் பேசும் டோனால்டு டிரம்ப் (நடு), இருபுறங்களிலும் டிரம்ப்பின் வாரிசுகள். | படம்: ஏ.எஃப்.பி. அமெரிக்கர்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை ‘வேட்டையாடி’ கொண்டு செல்கின்றனர் இந்தியர்கள், தான் அதிபரானால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று டோனால்டு டிரம்ப் அதிரடியாகக் கூறியுள்ளார். சர்ச்சை புகழ் டோனால்டு டிரம்ப் தொடர்ந்து முஸ்லிம்கள், அகதிகள், குடியேற்றங்கள் குறித்து எதிர்மறையாகப் பேசி வருவது குறித்து ஒபாமா கடும் விமர்சனம் செய்தாலும் அவரது இவ்வகை பேச்சுகளுக்கு பரவலாக அமெரிக்கர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதாகவே அங்குள்ள நிலவரங்கள் தெரிவிக்கின…
-
- 0 replies
- 383 views
-
-
நேபாளத்தில் 21 பேருடன் சென்ற சிறிய விமானம் மாயம் நேபாளத்தில் பயணிகள் உட்பட 21 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் மாயமானது. மாயமான அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து பொக்காரா விமான நிலைய அதிகாரி யோகேந்திர குவார் கூறும்போது, "பொக்காரா விமான நிலையத்தில் இருந்து பயணிகள் உட்பட 21 பேருடன் தாரா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இன்று (புதன்கிழமை) காலை புறப்பட்டது. அங்கிருந்து 18 நிமிட தொலைவில் உள்ள ஜோம்சோம் விமான நிலையத்தை நோக்கி விமானம் பயணித்தது. ஆனால், விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. மாயமான அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது…
-
- 1 reply
- 429 views
-
-
எதிர்வரும் வெள்ளி நள்ளிரவு முதல் சிரியாவில் போர் நிறுத்தம்! [Tuesday 2016-02-23 22:00] சிரியாவில் பாதியளவு போர் நிறுத்தத்தை கொண்டுவரக்கூடிய ஒரு உடன்பாட்டை அமெரிக்காவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளதை சிரியாவுக்கான ஐ.நா. தூதுவர் வரவேற்றிருக்கிறார். ஆனால், அந்த ஒப்பந்தத்தை களத்தில் அமல்படுத்துவது ஒரு பெரும் சவாலாக இருக்கும் என்றும் தூதுவர் ஸ்டாஃபன் டெ மிஸ்துரா கூறியுள்ளார். இதற்கு சாதகமான பதிலை சிரியாவின் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி குழுக்களிடம் இருந்து பெறுவதே அடுத்த முக்கிய விசயம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மோதல் நிறுத்தத்தை அந்த இரு தரப்பும் அதற்கு முன்னதாக ஏற்றாக வேண்டும். ஆனால், இந்த …
-
- 0 replies
- 311 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - பிரான்ஸின் அதிகாரபூர்வமற்ற குடியேறிகளுக்கான ஜங்கிள் என்னும் முகாமை அழிக்க புல்டோசர்கள் தயாராகிவிட்டன. ஜங்கிள் என்னும் அந்த முகாமின்வாசிகள் அங்கிருந்து வெளியேறி ஆகவேண்டும். - எகிப்தில் கொலை செய்ததாக ஆயுட் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு வயதுச் சிறுவனின் விவகாரம் தவறாக நடந்த ஒன்று என்று அதிகாரிகள் கூறுகின்றனர். - பிரிட்டனின் பிரிஸ்டல் நகரில் உள்ள மிருகக்காட்சிசாலையில் ஒரு கொரில்லாவுக்கு அவசரமாக மகப்பேற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
-
- 0 replies
- 254 views
-
-
காலே (Calais) குடியேறி முகாம் அகற்றம்; ஆயிரக்கணக்கானவர் அவதி ====================================================== சர்வதேச குடியேறிகளுக்கான அமைப்பின் தகவலின்படி இந்த ஆண்டில் (2016) இதுவரை, கிரேக்கம் மற்றும் இத்தாலியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அகதிகளும் குடியேறிகளும் வந்து சேர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கை சேர்ந்தவர்கள். இவர்களில் நானூறு பேர் வழிப்பயணத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். பெரும்பாலானோர் துருக்கிக்கும் கிரேக்கத்துக்கும் இடையிலான கடலைக் கடக்க முற்படுகையில் பலியாகியுள்ளனர். இவர்களில், இப்போது வடக்கு ஐரோப்பாவுக்கும், பிரான்ஸுக்கும் பயணிக்கும் பலருக்கு கலேயில் இருக்கும் "the Jungle" என்னும் முகாம் தான், தற…
-
- 0 replies
- 381 views
-
-
தாய்லாந்து இளவரசிக்கு 40,000 டாலர் செலவில் கழிப்பறை தாய்லாந்து நாட்டு இளவரசி, அண்டைநாடான கம்போடியாவுக்குச் செல்லும்போது அங்கு பயன்படுத்த, அவருக்கென்று பிரத்யேகமாக கட்டப்பட்டகழிப்பறைக்கான செலவு என்ன தெரியுமா ? 40,000 டாலர்களாம்! தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி ஸ்ரிண்ட் ஹார்ன் கம்போடியாவுக்கு, தாய்லாந்து இளவரசி, மஹா சக்ரி சிரிண்ட்ஹார்ன் , மூன்று நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார். அப்போது அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக, ஏரியொன்றின் அருகே இதற்காகவே கட்டப்பட்ட குளிர்சாதனவசதி செய்யப்பட்ட கட்டிடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தைக் கட்ட யார் பணம் தந்தார்கள் என்பது தெளிவாகவில்லை. ஆனால் இந்த இளவரசி தனது சுற்றுப்பயணத…
-
- 2 replies
- 444 views
-
-
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞரது உருக்கமான விருப்பத்தை நிறைவேற்றிய கனடிய பிரதமர்: [Friday 2016-02-19 20:00] கனடா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த வாலிபர் ஒருவரின் உருக்கமான விருப்பத்தை அந்நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தயக்கமின்றி முழு மனதுடன் நிறைவேற்றியுள்ளார். ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்டோன் நகரில் லக்கான்பால்(19) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 16 வயதாக இருந்தபோது புற்றுநோய் தாக்கியதை தொடர்ந்து கடுமையான சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். எனினும், புற்றுநோயிற்கு பலியாவதற்கு முன்னதாக தன்னுடைய இறுதி விருப்பத்தை அந்த வயதிலேயே பதிவு செய்துள்ளார். அப்போது, ‘விலைகொடுத்து வாங்க முடியாத ஒரு இறுதி விருப்பம் எனக்குள் இரு…
-
- 1 reply
- 548 views
-
-
ஒன்றரை வயதில் கொலை செய்ததாகக் கூறி 4 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை - எகிப்திய இராணுவ நீதிமன்ற தீர்ப்பினால் சர்ச்சை எகிப்தைச் சேர்ந்த நான்கு வயதான சிறுவனொருவனுக்கு கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் அந் நாட்டு நீதிமன்றமொன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அதுவும் இச் சிறுவன் 1 வயதானவனாக இருந்தபோது இக் குற்றங்களைப் புரிந்ததாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான வழக்கில் மேலும் பலருடன் அஹ்மட் மன்சூர் கார்னி எனும் இச் சிறுவனின் பெயரும் சேர்க்கப்பட்டது. 4 கொலைகள், 8 கொலை முயற்சிகள், அரச சொத்து…
-
- 0 replies
- 257 views
-
-
பிரித்தானிய அரச குடும்பத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தும் சர்ச்சைக்குறிய ஆவணப்படம் இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி அலைவரிசையான ‘சேனல் 5’ மகாராணி இரண்டாம் எலிசபெத், அவரது கணவர் இளவரசர் பிலிப், இளவரசர் சார்லஸ், இளவரசி டயானா ஆகியவர்களின் அரச வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தில் பல சர்ச்சைக்குரிய விவகாரங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகாராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்த பிறகு, இளவரசர் பிலிப்பிற்கு அதிக பெண்களுடன் இரகசிய தொடர்பு இருந்ததாக இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. இளவரசர் பிலிப் பெண்களின் பின்னால் சுற்றுபவராகவும், மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், அடிக்கடி பிரபலமான நபர…
-
- 0 replies
- 422 views
-
-
ஆப்கானில் தாலிபான்கள் தற்கொலைத் தாக்குதல்:14 பேர் பலி ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆறு கால்துறையினர், எட்டு பொதுமக்கள் உட்பட குறைந்தது 14பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் நாட்டின் வடக்கே பர்வான் மாகாணத்தில் இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அங்காடி மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இத்தாக்குதலுக்கு தாங்களே காரணம் என தாலிபான்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளனர். அவர்களை எப்படி மீண்டும் பேச்சுவார்த்…
-
- 0 replies
- 334 views
-
-
-
- 0 replies
- 283 views
-
-
சிரியாவில் ஐ.எஸ். கொலைவெறித் தாக்குதல்: 130 பேர் பலி சிரியாவில் நேற்று ஐ.எஸ். குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்திய பகுதி. | படம்: ராய்ட்டர்ஸ். சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் ஹாம்ஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் நேற்று 130 பேர்களுக்கும் மேல் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உலக நாடுகள் போர் நிறுத்தம் இதோ வருகிறது, அதோ வருகிறது என்று கூறிவரும் நிலையில் நேற்று ஐ.எஸ். அமைப்பு கொலைவெறி குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஈடுபட்டது. டமாஸ்கஸின் சயீதா ஸெய்னாப் புறநகர்ப்பகுதியில் தொடர் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டதில் 83 பேர் பலியாகினர். சுமார் 170 பேர் படுகாயமடைந்துள்ளனர். மதிய …
-
- 0 replies
- 453 views
-
-
மாலைத்தீவு ஜனாதிபதி கொலை முயற்சி: இலங்கையர் உட்பட மூவர் விடுதலை மாலைத்தீவு ஜனாதிபதியைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் உட்பட மூவரை அந்நாட்டு பொலிஸார், நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று (21) விடுதலை செய்துள்ளனர் என்று மாலைத்தீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிவைத்துச் சுடுவதற்காக இலங்கையர் ஒருவரை மாலைத்தீவுக்கு அழைத்துச்சென்ற சிலரே, அவர் மூலமாக மாலைத்தீவு ஜனாதிபதியைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 17ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட மேற்படி மூவரும், போதிய சாட்சியங்கள் இல்லாததால் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 274 views
-
-
சிரியாவில் 46 பேர் உயிரிழப்பு! 2016-02-21 21:55:46 சிரியாவின் வர்த்தக நகரமான ஹோம்ஸ் நகரில் இன்று நடந்த தொடர்ச்சியான இரு கார் குண்டு தாக்குதலில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தாக்குதலில் 28 பொதுமக்கள் உள்ளடங்கலாக 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த அலெப்போ நகரை அண்மையில் இராணுவப் படையினர் மீட்டனர். இராணுவத்தினரின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் மும்முரமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை …
-
- 0 replies
- 347 views
-
-
மருத்துவமனையிலுள்ள குழந்தையை நாட்டில் தங்க அனுமதித்தது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் கோரிய குடும்பத்திற்கு பிறந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தையை நாட்டில் தங்க அனுமதிக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா அகதிகள் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறது ஒரு வயதேயான ஆஷா என்ற இந்த குழந்தை பிரிஸ்பேன் மருத்துவமனையில் தீயக்காயங்களுக்காக சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அந்த குழந்தை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டால், நவ்ரூ தீவிலுள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பப்படலாம் என்ற காரணத்தினால் மருத்துவர்கள் குழந்தையை விடுவிக்க மறுத்துவிட்டனர். ஆஷாவும் அவரது தயாரும் ஆஸ்திரேலியாவிலுள்ள சமூகக் காவ…
-
- 0 replies
- 410 views
-
-
அமெரிக்காவில் மர்ம மனிதன் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை இரவு கலமாஸூ என்ற இடத்தில் உள்ள கிராக்கர் பேரல் உணவு விடுதி மற்றும் கார் டீலர்ஷிப் இடங்களில் மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து கலமாஸூ காவல்துறை உயரதிகாரி பால் மத்தியாஸ் கூறும்போது, இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம மனிதன் நீல நிற சொகுசுக்காரில் பயணிப்பதாகவும், 50 வயதையும் தாண்டிய வெள்ளையர் என்றும் தாறுமாறாக சுட்டுத் தள்ளுபவர் என்றும் எச்சரித்துள்ளார். கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் …
-
- 0 replies
- 334 views
-
-
ஒபாமா, ட்ரம்ப் வார்த்தைப் போர்: களைகட்டும் அதிபர் தேர்தல்! இந்த ஆண்டு உலகின் மொத்த கவனமும் இரண்டு நகரங்கள் மீதே இருக்கப் போகிறது. ஒன்று ஒலிம்பிக் போட்டிகளை நடத்தப்போகும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ. மற்றொன்று வாஷிங்டன். உலக அரசியலை ஆட்டுவிக்கப்போகும் வெள்ளை மாளிகையில் குடியேறப்போகும் அடுத்த அதிபர் யார்? ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. குடியரசுக் கட்சியில் தான் சற்று போட்டி நிலவுகிறது. ஆனால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தொழிலதிபரும், முன்னாள் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான டொனால்டு ட்ரம்பிற்கே அதிகம் உள்ளதாகக் கனிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கவின் நாசா…
-
- 1 reply
- 471 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: ஜூன் 23-ம் திகதி வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து வந்து குடியேறுவோருக்கு பிரிட்டனின் சமூக நலத்திட்டங்களை மட்டுப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்குமா இல்லையா என்பதை தீர்மானிக்கூடிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஜூன் 23-ம் திகதி நடக்கும் என்று பிரதமர் டேவிட் கெமரன் அறிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நடந்த மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடன் காணப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் பற்றி ஆராயும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று அமைச்சரவை உடன்பட்டுள்ளதாக கெமரன் கூறியுள்ளார். ஆனால்,…
-
- 0 replies
- 336 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - மெக்ஸிகோவில் இருந்து வரும் குடியேறிகளை தடுக்க மதில் எழுப்ப வேண்டும் என்ற டொனால்ட் ட்ரம்பின் கருத்து கிறிஸ்தவத்துக்கு பொருந்தாதது என்று போப்பாண்டவர் கடுமையான கண்டனம். - இணையத்தின் மூலம் விமானங்களை கடத்தலாமா என்று ஆராயப்பட்ட சிங்கப்பூர் விமானக் கண்காட்சி. - வெனிசுவேலா நாட்டு அரசாங்கம் பெட்ரோல் விலையை ஆறு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், நாட்டு மக்கள் அதனை எதிர்க்கவில்லை.
-
- 0 replies
- 320 views
-
-
ஆஸ்திரேலிய கடற்பரப்பு “பிளாஸ்டிக் சூப்” ஆக மாறியுள்ளது: ஆய்வாளர்கள் கடலினுள் காணப்படும் பிளாஸ்டிக் ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் மாசுப்படுவது அந்நாட்டு பெருங்கடலை மாற்றியமைத்துள்ளதாக கூறியுள்ள ஆய்வாளர்கள் , அதனை “பிளாஸ்டிக் சூப்” என்றும் அழைத்துள்ளனர். சுற்றுச்சூழல் தொடர்பில் ஆராய்வதற்காக, ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வாளர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய பெருங்கடலினுள், சுமார் 35 பில்லியன் பிளாஸ்டிக் கழிவுத் துண்டுகள் காணப்படுவதாக அவர்கள் மதிப்பிட்டுள்ளனர். அழகு சாதனங்கள் மற்றும் பற்பசைக்கு பயன்படுத்தப்படும் “மைக்ரோ பீட்ஸ்” என்ற பொருளை மீன்கள் உட்கொள்வதாகவும், அதன் பின்னர் அது கடல் உணவாக வாடிக்கையாளர்களாகல்…
-
- 0 replies
- 471 views
-
-
துப்பாக்கிதாரியின் கைபேசியை திறக்கச் செய்ய ஆப்பிள் மறுத்துவிட்டது துப்பாக்கிதாரியின் கைபேசியை திறக்கச் செய்ய ஆப்பிள் மறுத்துவிட்டது அமெரிக்காவின் சான் பேர்னாடினோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களில், ஒருவரின் கைத்தொலைபேசியில் உள்ள தகவல்களை ஊடுருவிப் பார்ப்பதற்கு உதவுமாறு, கலிஃபோர்னியா நீதிமன்றம், ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு விடுத்துள்ள உத்தரவை, ஆப்பிள் சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டிம் குக், அமெரிக்க புலனாய்வு துறையினரின் இந்த கோரிக்கை, தமது நிறுவனத்தின் தொழில்நுட்ப தயாரிப்புகளினுள் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான, எஃப்.பி.ஐ முறையற்ற வகையில் உள் நுழைய வழிவகுப்ப…
-
- 1 reply
- 570 views
-
-
அமெரிக்கா, மெக்ஸிகோ மீது போப் விமர்சனம் மெக்ஸிகோவின் சியூடேட் ஜுராஸ் பகுதியில் மக்களுக்கு ஆசி வழங்கிய போப்பாண்டவர் பிரான்சிஸ். படம்: ஏஎப்பி அகதிகள் விவகாரத்தில் இனி மேலும் உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது, இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் மெக்ஸிகோவும் பல்வேறு விளக்கங்களை கூறுவதை ஏற்க முடியாது என்று போப் பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மெக்ஸோவில் 6 நாட்கள் பயணம் மேற்கொண்ட போப்பாண்டவர் நேற்று தனது பயணத்தை நிறைவு செய்து வாடிகன் திரும்பினார். கடைசி நாளான நேற்று மெக்ஸிகோ எல்லைப் பகுதியான சியூடேட் ஜுராஸ் பகுதியில் மக்களுக்கு அவர் ஆசி வழங்கினார். இப்பகுதி அமெரிக்காவின் எல்லையில் அமைந்துள்ளது. மெக்ஸிகோவில் இருந்து ஏராள …
-
- 0 replies
- 619 views
-