உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26895 topics in this forum
-
சீனாவில் உள்ள மொங்கோலியா புறகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த பெண் ஒருவர், மருத்துவக் கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லையெனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த மருத்துவமனை பெண் மருத்துவர், அறுவை சிகிச்சை அறையிலேயே அந்தப் பெண்மணியை கொடுரமாக தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு மருத்துவர் கண்டும் காணாதது போல இருந்துள்ளார். அறுவை சிகிச்சை அறையிலேயே நோயாளிடம் அதிக பணம் கேட்டு தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். http://tamil.srilankamirror.com/news/item/7201-c…
-
- 0 replies
- 447 views
-
-
மும்பையில் மீண்டும் நடன விடுதிகள் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடன விடுதிகளுக்கு உரிமம் வழங்கும் பணிகள் விரைவில் துவங்கவிருக்கின்றன. தடைக்கு முன்பாக மும்பை நடன விடுதிகளில் சுமார் 70,000 பெண்கள் பணியாற்றிவந்தனர். இதன் மூலம் கிட்டத்தட்ட 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு, மீண்டும் நடன விடுதிகள் நடைபெறுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது. 2005ஆம் அண்டு மராட்டிய மாநில அரசு, மும்பை போலீஸ் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து அங்கு செயல்பட்டுவந்த ஆயிரக்கணக்கான நடன விடுதிகளை தடை செய்தது. நடன விடுதிகள் என்கிற பெயரில் அங்கு பாலியல் தொழில், நடப்பதாக அப்போது அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதை எதிர்த்துத் தொடரப்ப…
-
- 11 replies
- 1.3k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - பிரஸல்ஸில் செவ்வாயன்று தேடுதலின் போது கொல்லப்பட்டவர் அல்ஜீரியாவை சேர்ந்தவராவார். இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் அமைப்பின் கொடியும் அங்கு காணப்பட்டது! - மத்திய ஆப்பிரிக்காவில் சட்ட விரோத வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டு, அருகிவரும் யானைகள். - பாலியல் தொழிலாளர்கள், மாலுமிகளின் மற்றும் கைதிகளின் அடையாளமாக மாத்திரம் இருந்த பச்சை குத்தும் வழக்கம் கியூபாவில் இப்போது பிரபலமாகிவருகின்றது.
-
- 0 replies
- 377 views
-
-
ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் குடியேறிகள் கிரேக்கத்தில் இருந்து ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்வதற்காக மசிடோனியாவின் வழியாகச் செல்ல வேண்டாம் என்று கிரேக்க அதிபர் அலெக்சிஸ் திப்ரஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.''பால்கன் வழி'' என்று அழைக்கப்படும் அது, மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மசிடோனிய எல்லைக்கடவை மூடப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கு கிரேக்கத்தில் உள்ள இடைத்தரிப்பு முகாம்களில் அகப்பட்டுள்ளனர்.பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைக் கடந்து மசிடோனியாவுக்குச் சென்ற அவர்களில் பலர் கிரேக்கத்துக்கு திரும்பி வந்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?…
-
- 0 replies
- 330 views
-
-
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட் நியமனம் - அதிபர் ஒபாமா அறிவிப்பு ! வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்புக்கு தமிழர் ஸ்ரீநிவாசன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெரிக் கார்லண்ட் என்பவரை அதிபர் ஒபாமா பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அந்தோணின் ஸ்காலியா கடந்த பிப்ரவரி 13ம் தேதி மரணமடைந்தார். அவரது பணியிடத்தை நிரப்ப, நீதிபதிகள் தேர்வு குழு ஆயத்தங்கள் செய்து வந்தன. கீழ்மை நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள், சீனிவாசன், மெரிக் கார்லண்ட் மற்றும் பவுல் வாட்ஃபோர்ட் ஆகிய மூவர் நடுவே இப்பதவிக்கான போட்டி நிலவி வந்தன. அதிபர் பராக் ஒபாமாவின் சாய்ஸ் 49 வயதாகும் சீனிவாசன் அல்லது 63…
-
- 0 replies
- 242 views
-
-
பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் சுடப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார் பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்சில் செவ்வாய்க் கிழமையன்று காவல்துறை நடவடிக்கையில் சுட்டுக கொல்லப்பட்ட நபர் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது. பல்கெய்த் முஹம்மது என்ற அவர் பெல்ஜியத்திற்கு சட்டவிரோதமாக சென்றவர் எனத் தெரியவந்துள்ளது. ஐஎஸ் குழுவினரின் கொடி, தீவிரவாத சித்தாந்தங்கள் அடங்கிய புத்தகம், ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி ஆகியவை அவரது உடலுக்கு அருகில் கிடந்ததாக பொலிசார் கூறுகின்றனர். அந்த வீட்டிலிருந்து தப்பிச்சென்ற மேலும் இரண்டு பேரைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.மேலும் இரண்டு பேரைக் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். ஆனால், அவர்கள் இந்த துப்பாக்கிச…
-
- 0 replies
- 320 views
-
-
நைஜீரியாவில் பள்ளிவாசலில் தற்கொலை தாக்குதல்: 22 பேர் பலி நைஜீரியாவின் வட-கிழக்கு பகுதியில் உள்ள மைதுகுரியில் இருக்கும் மசூதியில் இன்று அதிகாலை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களே தற்கொலைப்படைதாரிகளாக செயல்பட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். முதலாவது பெண் மசூதிக்குள் புகுந்து வெடித்தவுடன், பலரும் தப்பி வெளியில் ஓடிவரும்போது இரண்டாவது குண்டுதாரி வெடித்ததாக இந்தச் சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 17க்கும் மேற்பட்டோர் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். அதிகாலையில் தொழுகை துவங்கியவுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உமராரி மசூதியின் தலைமை இமாம் பிபிசியிடம் தெரிவித…
-
- 0 replies
- 299 views
-
-
டொனால்ட் ட்ரம்பிற்கு மேலும் வாய்ப்புகள் பிரகாசம் வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டியிடும் வாய்ப்பை மார்கோ ரூபியோ இழந்திருப்பதையடுத்து, டொனால்ட் ட்ரம்பிற்கான வாய்ப்புகள் மேலும் பிரகாசமாகியுள்ளன. ஃப்ளோரிடாவில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றிருப்பதால், அவரது வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. மார்கோ ரூபியோ, அவருடைய சொந்த மாகாணமான ஃப்ளோரிடாவில் டொனால்ட் ட்ரம்பிடம் தோல்வியடைந்ததையடுத்து, போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருக்கிறார். ஃப்ளோரிடா தவிர, இலினாய்ஸ், வடக்கு கரோலினா மாகாணங்களிலும் ட்ரம்ப்பே வெற்றிபெற்றிருக்கிறார். ஆனால், மிக முக்கிய மாகாணமான ஒஹையோவில் அவர் தோல்வியடைந்துள்ளார். அங்கு மாகாண ஆளுனர் ஜ…
-
- 4 replies
- 412 views
-
-
இங்கிலாந்தின் Tier 2 (General) visa புதிய சட்டத்தால் வெளியேறும் மக்கள்! சமீபத்தில் இங்கிலாந்து அரசு ஒரு புதிய சட்டம் கொண்டு வந்தது. அதன் படி 'Tier 2 (General) visa' விசாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் ஆண்டுக்கு 35 ஆயிரம் பவுண்டுகள் வருமானம் ஈட்டுபவர்கள் மட்டுமே தொடர்ந்து அங்கு தங்க முடியும். இல்லாவிடில் குடியேறிய 5 ஆண்டுகளுக்கு பிறகு அங்கிருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் 6–ந் திகதி முதல் குடியேறியவர்களுக்கு இப்புதிய சட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 55,589 வெளிநாட்டினர் இங்கிலாந்தில் இருந்து வெளியேற வேண்டும். அவர்களில் 31,058 பேர் இந்தியர்கள். இது அங்கிருந…
-
- 4 replies
- 374 views
-
-
ஐரோப்பிய நாடுகளுக்கான பால்கன் வழி மூடல்: ஆற்றில் மூழ்கும் அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் குடியேறிகள் கிரேக்கத்தில் இருந்து ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்வதற்காக மசிடோனியாவின் வழியாகச் செல்ல வேண்டாம் என்று கிரேக்க அதிபர் அலெக்சிஸ் திப்ரஸ் கேட்டுக்கொண்டுள்ளார். ''பால்கன் வழி'' என்று அழைக்கப்படும் அது, மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மசிடோனிய எல்லைக்கடவை மூடப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கு கிரேக்கத்தில் உள்ள இடைத்தரிப்பு முகாம்களில் அகப்பட்டுள்ளனர். பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைக் கடந்து மசிடோனியாவுக்குச் சென்ற அவர்களில் பலர் கிரேக்கத்துக்கு திரும்பி வந்ததை அடுத்து அவர் இவ…
-
- 7 replies
- 958 views
-
-
ஜார்ஜியாவில் பெண் அரசியல்வாதியின் ஆபாசப் படம்: 2 பேர் கைது ஜார்ஜியாவில் முறைகேடாக எடுக்கப்பட்ட ஆபாசப் படம் ஒன்றை வெளியிட்டதாக இரண்டு பேரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். ஜார்ஜியாவில் தேர்தலுக்கு முன்பாக இம்மாதிரி படங்கள் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. அந்நாட்டுத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்ட படம் ஒன்று இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் எதிர்க்கட்சியான ஃப்ரீ டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரல்லாத ஒருவருடன் உறவு கொள்வது போன்ற படம் யூ டியூபில் வெளியானது. தற்போதைய ஆளும் கூட்டணியில் இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட இது போன்ற மேல…
-
- 0 replies
- 606 views
-
-
நார்வே நீதிமன்றத்தில் நாஜி வணக்கம் செலுத்திய கொலைக் குற்றவாளி நார்வேவில் பல கொலைகள் செய்த குற்றவாளியான அனொர்ஷ் பெஹ்ரிங் ப்ரேவிக், தன்னை அரசாங்கம் மோசமாக நடத்துவதாக தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் வந்தபோது நாஜி வணக்கம் செலுத்தியுள்ளார். I நார்வேவில் எழுபத்து ஏழு பேரை கொன்ற குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் கொலைக் குற்றவாளி நீதிமன்றத்தில் நுழையும்போது நாஜி வணக்கம் செலுத்தியுள்ளார். அரசு தன்னை மனிதத்தன்மையற்ற நிலைமையில் வைத்துள்ளதாக வலதுசாரி தீவிரவாதியான இவர் கூறிவருகிறார். அவர் செய்த கொடூரமான குற்றங்களையும் மீறி, அவரை மனிதாபிமானத்துடன் நடத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டாயிரத்து பதினோறாம் ஆண்டில் மத்திய ஆஸ்லோவ…
-
- 0 replies
- 423 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் இருந்து ரஷ்ய போர் விமானங்கள் வெளியேறுகின்றன. தமது தலையீட்டின் முக்கிய நோக்கங்கள் எட்டப்பட்டுவிட்டதாக அதிபர் பூட்டின் கூறுகிறார். - ஐரோப்பாவை அடைய உயிரைப் பணயம் வைக்க வேண்டாமென குடியேறிகளுக்கு வேண்டுகோள். மாசிடோனியாவுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கானவர்கள் மீண்டும் கிரேக்கத்துக்கு அனுப்பப்பட்டனர். - ஆப்பிரிக்க நாடான மலாவியில் ஒரு சோதனை முயற்சியாக எச் ஐ வி சோதனை முடிவுகளை துரிதப்படுத்த ஆளில்லா சிறிய விமான்ங்களை பயன்படுத்துகிறார்கள்.
-
- 0 replies
- 231 views
-
-
வங்கதேச மத்திய வங்கிக் கணக்கிலிருந்து பணம் மாயம்; தலைவர் ராஜினாமா வங்கதேசத்தின் வெளிநாட்டுச் செலாவணிக் கணக்கிலிருந்து 80 மில்லியன் டாலர்களுக்கும் மேற்பட்ட தொகை காணாமல் போன விவகாரம் தொடர்பாக வங்கதேச மத்திய வங்கியின் தலைவர் அடியுர் ரெஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். வங்கதேச மத்திய வங்கியின் தலைவர் அடியுர் ரெஹ்மான். இவ்வளவு பெரிய தொகை நாட்டின் மத்திய வங்கியிருந்து திருடப்பட்டிருப்பது அந்நாட்டுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தனக்கு ஊடகங்களின் மூலமாகவே முதன்முதலில் தெரியவந்ததாக அந்நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். மத்திய வங்கியின் கணிணியில் புகுந்த ஹேக்கர்கள், நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் ரி…
-
- 0 replies
- 254 views
-
-
ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து, விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரை உற்பத்தி, மற்றும் விற்பனையை புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் தற்போது நிறுத்தியுள்ளது. பக்க விளைவுகளை ஏற்படுத்தும் இருமல் , வலி நிவாரணி ,ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உள்ளிட்ட 344 மருந்துகளுக்கு மத்திய அரசு கடந்த வாரம் தடை விதித்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது தொடர்பாக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் கால அவகாசம் முடிந்தும் பதில் வராததால், இந்த உத்தரவு பிறபித்தது மத்திய அரசு. இதையடுத்து பிராக்டர் அன்ட் கேம்பலின் விக்ஸ் ஆக்சன் - 500 எக்ஸ்ட்ரா மருந்து தயாரி…
-
- 0 replies
- 626 views
-
-
ஏமன் நாட்டில் அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதியின் ராணுவத்துக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாக தீவிர சண்டை நடந்து வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்த அதிபர் மன்சூர் ஹாதியும், அரபு நாடுகளும் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சண்டை விமானங்களும் இணைந்து கொண்டு உள்ளன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஏமனில், கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த சென்ற அமீரகத்தின் போர் விமானம் ஒன்று திடீரென மாயமானது. இந்த தகவலை ஐக்கிய அரபு அமீரக அரசு செய்தி நிறுவனமான ‘வாம்’ ஒப்புக்கொண்டு உள்ளது. இதற்கிடையே இ…
-
- 0 replies
- 475 views
-
-
மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வட கொரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் புலன்விசாரணை அதிகாரி கூறியுள்ளார். இது குறித்து ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் பேசிய புலன் விசாரணை அதிகாரி மார்ஜூகி தருஸ்மன், தன்னுடைய நாட்டு மக்கள் அதிக அளவு உணவு பற்றாக்குறையிலும், அடிமை வாழ்விலும் இருக்கையில் வடகொரியா பேரழிவை உண்டுபண்ணும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். அதிபர் கிம் ஜான் உன் உள்ளிட்ட கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் முக்கிய தலைவர்களின் பொறுப்புகளை உறுதி செய்ய சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுற…
-
- 0 replies
- 284 views
-
-
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைச் சோதனை திங்கள்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (ஹெச்.ஏ.எல்.) மூலம் தயாரிக்கப்பட்ட சுமார் 5.5 டன் எடையுடைய இந்த ஹெலிகாப்டரானது அணு ஆயுதங்கள், ஏவுகணைகள், சிறிய ரக குண்டுகள் ஆகியவற்றை தாங்கிச் சென்று தாக்கும் திறனுடையது.இந்நிலையில், இந்த ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் சோதனையானது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில் உள்ள பாலைவனப்பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, ஹெலிகாப்டர் மூலம் ஏவப்பட்ட ஏவுகணைகள், குறிப்பிட்ட வான் இலக்குகளை துல்லியமாகத் தாக்கின. போர் ஹெலிகாப்டர் சோதனையில் இது ஒரு மைல் கல் ஆகும். http://www.seithy.com/bre…
-
- 0 replies
- 281 views
-
-
அன்னை தெரசாவுக்கு செப்டம்பர் 4ல் புனிதர் பட்டம் சமூக சேவகர் அன்னை தெரசா செப்டம்பர் 4ஆம் தேதியன்று புனிதராக அறிவிக்கப்படுவார் என போப் ஃப்ரான்சிஸ் அறிவித்திருக்கிறார். அன்னை தெரசாவின் இரண்டு அற்புதங்கள் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. கொல்கத்தாவின் ஏழை மக்களுக்காகப் பணியாற்றிய அன்னை தெரசா, ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதர் வரிசையில் இனி இடம்பெறுவார். அன்னை தெரசா தனது சக்தியின் மூலம் ஒருவரை குணப்படுத்தியதாகச் சொல்லப்படும் இரண்டாவது சம்பவத்தை வத்திகானின் மூத்த மதகுருக்கள் அங்கீகரித்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருக்கும் அன்னை தெரசா, அல்…
-
- 0 replies
- 218 views
-
-
பெர்லின் நகரில் காரில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி பெர்லினில் காரில் இருந்த வெடிபொருள் வெடித்ததில், ஒட்டுனர் பலியானார் என ஜெர்மன் காவல்துறை தெரிவித்திருக்கிறது. வெடிப்பு ஏற்பட்டபோது கார் தூக்கியெறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு மாவட்டமான சர்லட்டன்பர்கில் நகர மையத்தை நோக்கி இந்தக் கார் சென்றுகொண்டிருந்தபோது, இந்த வெடிப்பு ஏற்பட்டது. கார் தூக்கியெறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். I விசாரணை முதற்கட்டத்தில் இருப்பதால், காரணம் இன்னும் தெரியவில்லையென காவல்துறை தெரிவித்திருக்கிறது. அந்தக் காரில் வேறு ஏதும் வெடிபொருட்கள் இருக்கிறதா என அதிகாரிகள் சோதித்துவருகின்றனர். விசாரணைகள் முதற்கட்டத்தில் இருப்பதால், இதற்…
-
- 9 replies
- 713 views
-
-
Image copyrightRIA Novosti சிரியாவிலிருந்து வெளியேறும் ரஷ்ய போர் விமானங்களின் முதல் தொடரணி ரஷ்யாவை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ரஷ்ய தலையீட்டின் முக்கிய நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா தமது படைகளை வெளியேற்றத்தொடங்கியுள்ளது என்றும் அதிபர் புட்டின் நேற்று திடீரென அறிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இன்று விடியற்காலை இராணுவ உபகரணங்கள் சரக்கு விமானங்களில் ஏற்றப்படுவதை ரஷ்ய அரச ஊடகம் ஒளிப்பரப்பியுள்ளது. அதிபர் அஸ்ஸத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் மோதலின் அலையை திசை திருப்பியுள்ளன என்று தெரிவித்த அதிபர் புட்ட்டின், தற்போது அமைதி பேச்சுக்கள் ஆரம்பிக்க ஏ…
-
- 0 replies
- 374 views
-
-
படம் நன்றி : AFP கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் சரித்திர முக்கியத்துவம் மிக்க தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணியின் தலைவியான ஆன் சான் சூச்சியின் நெருங்கிய சகாவாக இவர் பார்க்கப்படுகிறார். தனது நியமனம் ஆன் சான் சூச்சிக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று அவர் கூறியுள்ளார். அரசியலமைப்பின்படி அதிபர் பதவிக்கு வருவதில் இருந்து சூச்சி தடுக்கப்பட்டுள்ளார், ஆனால் தானே நாட்டை வழி நடத்துவேன் என்று அவர் கூறியுள்ளார். அதிபர் தேர்வின் போது மொத்தமான 652 வாக்குகளில் 360 வாக்குகளை டின் ஜோவ் பெற்றார். http://www.bbc.com/tamil/global/2016/03/160315_burmapresident ஆசியாவில் ஒரு மகிழ்வான விடயம்.
-
- 0 replies
- 507 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூர முகத்தை ரகசியமாய் படம் பிடித்த பெண்கள் (வீடியோ) சிரியாவில் ஐ.எஸ். ஆதிக்கத்தில் இருக்கும் ரக்கா நகரம் சிதைந்து வருவதை அங்குள்ள பெண்கள் இருவர் படம் பிடித்துள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களின் வாழ்க்கை முறை எப்படி மாறியுள்ளது என்பதை அந்த பெண்கள் படம் பிடித்துள்ளனர். கிளர்ச்சி வெடிக்கும் முன்னர் பரபரப்பாகவும் மிகவும் சுதந்திரமாகவும் இருந்த ரக்கா நகரத்தில் தற்போது கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும், பெரும்பாலும் வெளிநாட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் மட்டுமே வீதியில் நடமாடி வருவதாகவும் அந்த பெண்கள் குறிப்பிடுகின்றனர். ஐ.எஸ். ஆதிக்கத்தினால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் அவர்கள், …
-
- 0 replies
- 536 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஞாயிறன்று முப்பத்தியேழு பேர் பலியான கார் குண்டுத்தாக்குதலுக்கு துருக்கிய அரசு, குர்து தீவிரவாதிகளை குற்றஞ்சாட்டுகிறது. - மெக்ஸிகோவில் ஆட்கள் கடத்தப்படுவது வேகமாக அதிகரித்துள்ளது. பிபிசியின் சிறப்புத் தகவல். - ஐரோப்பாவும், ரஷ்யாவும் இணைந்து செவ்வாய்க்கு அனுப்பும் முதல் விண்கலம்.
-
- 0 replies
- 455 views
-
-
பாங்காக்கில் தீயணைப்பு வாயுக் கசிவால் 7 பேர் பலி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், வங்கி ஒன்றின் தீயணைப்பு வாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். திடிரென ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் அங்கிருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது தாய்லாந்தின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான சியாம் வர்த்தக வங்கியின் தலைமையகத்தில் தீயணைப்பு கட்டமைப்பில் திருத்த வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது, விபத்தொன்று ஏற்பட்டுவிட்டதாக அந்த வங்கி கூறியுள்ளது. இந்த வாயுவில் நச்சுத் தன்மை ஏதும் இல்லை என்று கூறப்படுகின்றது. ஆனால், குறிப்பிட்ட பகுதியில் திடிரென ஆக்ஸிஜன் ப…
-
- 0 replies
- 318 views
-