உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
ஈரான் நாட்டு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரு படகுகளை ஈரான் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.குவைத்-பஹ்ரைன் நாடுகளுக்கு இடையில் சென்றுகொண்டிருந்த அந்தப் படகுகள் திடீரென பழுதாகி, திசைமாறி ஈரான் கடற்பகுதிக்குள் நுழைந்ததாகவும், அதில் இருந்த பத்து அமெரிக்க கடற்படையினருடன் அந்த இரு படகுகளையும் ஈரான் கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஷரிப் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=149169&category=WorldNews&language=tamil
-
- 1 reply
- 535 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - அதிபர் ஒபாமா தனது வருடாந்த உரையில் அமெரிக்காவின் பன்முகத்தன்மையை புகழ்ந்ததுடன், தனது ஆட்சியின் சாதனைகளையும் நியாயப்படுத்தினார். - ஜெர்மனியைத் தாண்டி சுவீடனிலும் பெரும்பாலும் குடியேறிகளால் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக புகார்கள் கிளம்பியுள்ளன. - முற்றிலும் தானாக, ஓட்டுனர் இன்றி இயங்கும் கார்களை தெருக்களில் பார்க்கும் காலம் நெருங்கிவிட்டது என்கிறார் உலக பாட்டரி கார் பெருமுதலாளி.
-
- 0 replies
- 693 views
-
-
உலகம் மீண்டும் ஒரு நிதி நெருக்கடியை நோக்கிச் செல்லக் கூடும் என முன்னணி முதலீட்டு வல்லுநர் ஒருவர் எச்சரித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்னாட்டு நிதி நெருக்கடி போல இந்த நெருக்கடியும் இருக்கக் கூடும் என சொசையிட்டி ஜெனரால் எனும் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் எட்வர்ட்ஸ் கூறுகிறார். பன்னாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படும் பல வளர்ச்சிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தை பின்னடைவை நோக்கி தள்ளும் என அவர் எதிர்வு கூறுகிறார். சந்தையில் பணப்புழக்கம் குறைவது, பொருட்களின் விலைகள் இறங்குவது, நுகர்வோர் பெரிய அளவில் பணத்தை செலவு செய்து பொருட்களை வாங்குவதை தாமதப்படுத்துவது, நிறுவனங்கள் முதலீட்டை நிறுத்தி வைத்தல் போன்ற பிரச்சினைகள் அலைபோல மேற்குலக நாடுகளை…
-
- 0 replies
- 324 views
-
-
பதான்கோட் தாக்குதல்:பாகிஸ்தானில் பலர் கைது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள விமானப் படைத் தளம் ஒன்று தாக்கப்பட்டது தொடர்பில், தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழுவொன்றின் பல உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது. பதான்கோட் படை முகாம் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-மொஹமத் எனும் அந்த அமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிட்டு சோதனைகளை நடத்தியுள்ள அதிகாரிகள், அவற்றை இழுத்து மூடியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு காரணமாவர்கள் எனத் தாங்கள் நம்பும் அமைப்பின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டு என இந்தியா பாகிஸ்தானை வலியுறுத்தியதை அடுத்து, இந்தக் கைதுகள் இடம்பெ…
-
- 0 replies
- 470 views
-
-
ஸ்வீடன் இசை நிகழ்ச்சியில் பெண்கள் மீது பாலியல் தாக்குதல் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் சில காலம் முன்பாக நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில், பெரும்பாலும் குடியேறி இளைஞர்களால் பெண்கள் மீது பரவலான பாலியல் தாக்குதல் நடந்ததாகத் தெரியவருகிறது. அந்நேரம் வந்த புகார்கள் பற்றி வெளியில் சொல்லத் தவறியதற்காக ஸ்வீடன் பொலிசாருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. http://www.bbc.com/tamil/global/2016/01/160113_sweden
-
- 0 replies
- 509 views
-
-
துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்: ஒபாமா வாஷிங்டன்: துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டியது நமது கடமை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில், தனது நிறைவு உரையை அதிபர் ஒபாமா நிகழ்த்தினார். அப்போது, ''கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம். உலகின் மிகவும் வலிமையான பொருளாதார நிலையில் அமெரிக்கா உள்ளது. சமமான வேலைக்கு சமமான ஊதியம், குறைந்தபட் ஊதியத்தை அதிகரிப்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். மேலும், துப்பாக்கியால் நிகழும் வன்முறைகளில் இருந்து நம் குழந்தைகளை காக்க வேண்டும். துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து குழந்தைக…
-
- 1 reply
- 404 views
-
-
வடகொரியா குண்டு சோதனை எதிரொலி: நவீன அணுகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா! வாஷிங்டன்: வடகொரியா ஹைட்ரஜன் குண்டை சோதனை செய்ததையடுத்து, சிறிய ரக நவீன அணுகுண்டுகளை அமெரிக்கா தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் பொருளாதார தடை விதிக்கவும் கோரிக்கை விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், சிறிய ரக நவீன அணுகுண்டுகளை அமெரிக்கா தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த வகை அணுகுண்டுகள் இலக்கை துல்லியமாக தாக்க கூடியது எனவும், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இந்த குண்டுகள் விரைவில் சோதனை செய்யப்பட உள்ள…
-
- 1 reply
- 604 views
-
-
லண்டன், சிரியா, ஈராக் நாடுகளின் ஒரு பகுதியை கைபற்றி அவற்றை இணைத்து இஸ்லாமிய அரசாக ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்து உள்ளனர்.ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா உள்பட சில நாடுகள் விமானம் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. தற்போது ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களது அடையாளம் கண்டுபிடிப்பதை தவிர்க்க 58 பக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தங்கள் வசம் இருக்கும் செக்ஸ் அடிமைகளை எப்படி நடத்த வேண்டும் என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு 15 அறிவுரைகள் அடங்கிய கையேடு ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிட தக்கது ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இளை ஞர்கள் பெருமளவில் இணைகின்றனர். அவர்க ளுக்குபயிற்சி அளித்து த…
-
- 1 reply
- 1.1k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - துருக்கியின் இஸ்தான்புல் நகரத்து வரலாற்று வட்டகையை உலுக்கியது மாபெரும் குண்டுவெடிப்பு! பத்து பேர் பலி! பலர் காயம்! - சிரியாவில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் மதாயா நகரிலிருந்து, பலரை வெளியேற்றி சிகிச்சை அளித்தால்தான் அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்! ஐநா வேண்டுகோள்! - பெண்களுக்கு இணையான சம்பளம் வேண்டும்! ஊதியத்தில் பாலின சமத்துவத்துக்கு குரல் கொடுக்கும் பிரிட்டனின் ஆண் மாடல்கள்!
-
- 0 replies
- 432 views
-
-
மும்பையில் பல இடங்களில் செல்ஃபீ எடுக்கத் தடை இந்தியாவின் மும்பை நகரப் போலிசார் நகரின் பல பிரபல சுற்றுலா இடங்களில் "செல்ஃபீ" (திறன் பேசிகளை வைத்து தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் படங்கள்) எடுத்துக்கொள்வதைத் தடை செய்திருக்கின்றனர். சனிக்கிழமை ஒரு பதின்பருவப் பெண் ஒருத்தி, பண்ட்ரா கோட்டைக்கருகே இரண்டு நண்பர்களுடன் தங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது, கடலுக்குள் அலைகளால் அடித்துத் தள்ளப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை வருகிறது. அவரைக் காப்பாற்றப் போன மற்றொரு ஆணும் கடலில் மூழ்கி இறந்தார். செல்ஃபீ எடுக்கத் தடை விதிக்கப்பட்ட இடங்களில் நகரின் பிரபலமான , மரைன் ட்ரைவ் நடைபாதை, மற்றும் கிர்கோம் சௌபாத்தி கடற்கரை ஆகி…
-
- 0 replies
- 569 views
-
-
இரட்டைஅடுக்கு பஸ்கள் மூன்று ஒன்றுடனொன்று மோதி விபத்து : லண்டனில் சம்பவம் இரட்டைஅடுக்கு பஸ்கள் மூன்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் லண்டன் பாராளுமன்ற சதுர்க்கத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, எவருக்கும் பாரிய உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/1955
-
- 1 reply
- 632 views
-
-
ஒபாமா சிந்தியது வெங்காய கண்ணீர்: பிரபல சேனல் விமர்சனம் நியூடவுன் ஹால் உரையில் கண்ணீர் சிந்தி அழுத ஒபாமா. | படம்: ஏபி. துப்பாக்கி கட்டுப்பாடு குறித்து கடந்த வாரம் உரை நிகழ்த்திய ஒபாமா, யதார்த்தமாக அழவில்லை. கண்களில் வெங்காயத்தை தேய்த்து கொண்டு தான் அழுதார் என்று ஃபாக்ஸ் நியூஸ் சேனல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பெரும் பிரச்சினையாக அச்சுறுத்திவரும் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார் அந்நாட்டு அதிபர் ஒபாமா. அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் துப்பாக்கிச்சூட்டினால் ஒரு லட்சம் பேர் இறந்துள்ளதையும் 2012-ல் சாண்டி ஹூக் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்…
-
- 0 replies
- 725 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளின் கருவூலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பணம் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கருவூலத்தை அமெரிக்க போர் விமானங்கள் தாக்கி அழித்ததாகவும் இந்த தாக்குதலில் கோடிக்கணக்கான பணம் தீக்கிரையானதாகவும் தெரியவந்துள்ளது. ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் அவர்கள் பணத்தை சேகரித்து வைத்துள்ள பாதுகாப்பு நிறைந்த கருவூலம் ஒன்றும் இயங்கி வருகின்றது. உலகம் முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் கைக்கூலிகள் மற்றும் ஐ.எஸ். படையில் சேரும் வெளிநாட்டினர்களுக்கு இங்கிருந்துதான் பணபட்டுவாடா நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த கருவூலத்தின்மீது தாக்குதல் நடத்தி அழித்…
-
- 0 replies
- 522 views
-
-
டுபாயில் கொள்ளை: இலங்கையர் ஐவர் கைது தனித்துள்ள கிராமப்புற பங்களாக்களில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை களவெடுத்ததாகக் கூறப்பட்ட 5 பேர் கொண்ட இலங்கை கோஷ்டியை டுபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். நாட்டை விட்டு வெளியேற முன்னரே, அக்குழுவினர் தங்களுடைய கைவரிசையை டுபாய், அல் பாஷா பகுதியில் உள்ள பங்களாக்களில் காண்பித்துள்ளனர். தனது வேலையை முடித்துவிட்டு வீட்டு உரிமையாளர் இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டுக்கதவு உடைக்கப்படு 25,000 திர்ஹாம் பெறுமதியான கைக்கடிகாரங்களும் 100,000திர்ஹாம் பணமும் காணாமல் போயிருந்தது. இவை தொடர்பில் வீட்டு உரிமையாளர் டுபாய் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்,…
-
- 0 replies
- 408 views
-
-
யூதர்களின் எதிர்ப்பை மீறி பரபரப்பாக விற்பனையாகும் ஹிட்லரின் சுயசரிதை! பெர்லின்: ஹிட்லரின் சுயசரிதையான "மெயின் காம்ப்' (எனது போராட்டம்) இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதல்முறையாக பிரசுரமாகி உள்ளது. இந்த நூல், யூதர்களின் எதிர்ப்புக்களுக்கு இடையே பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. 1923-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு சிறையில் இருந்தபோது, ஹிட்லர் எழுதிய சுயசரிதை "மெயின் காம்ப்'. யூதர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் எதிரான தனது தேசிய இனவாதத் கொள்கையை அந்த நூலில் ஹிட்லர் வெளிப்படுத்தி உள்ளார். இனவெறி நாஜிக்களின் வேதமாகத் திகழ்ந்த அந்த நூல், இரண்டாம் உலகப் போரில் அவர்களது தோல்விக்குப் பின் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டது. போரின் முடிவில் …
-
- 0 replies
- 643 views
-
-
பாரிஸ் தாக்குதல் சந்தேகநபர் சலாஅப்தெஸ்லாம் காணப்படும் CCTV வீடியோ பிரான்ஸ் அதிகாரிகளின் கையில் பாரிஸ் தாக்குதல் சந்தேகநபர் சலாஅப்தெஸ்லாம் காணப்படும் CCTV வீடியோ பிரான்ஸ் அதிகாரிகளின் கையில்: தலைமறைவாக உள்ள பாரிஸ் தாக்குதல் சந்தேகநபர் சலாஅப்தெஸ்லாம் காணப்படும் சிசிடிவி கமரா வீடியோ பிரான்ஸ் அதிகாரிகளின் கையில் சிக்கியுள்ளது. பாரிஸ் தாக்குதல் இடம்பெற்ற மறுநாள் பெட்ரோல்நிரப்பும் நிலையமொன்றில் குறிப்பிட்ட சந்தேகநபர் தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவது அங்கு காணப்பட்ட சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.அந்த வீடியோவில் அப்தெஸ்லாம் பதட்டமில்லாதவராக காணப்படுகின்றார். தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகளிற்கான விநியோகங்களை மேற்கொண்டவர் இவர் என ப…
-
- 0 replies
- 427 views
-
-
கொலோன் குற்றச் சம்பவங்கள்: புகார்கள் 500 ஐ தாண்டியுள்ளன தாக்குதல்களை காவல்துறை கையாளும் விதம் குறித்து விமர்சனங்கள் உள்ளன ஜெர்மனியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் அசம்பாவிதங்கள் தொடர்பில் பதிவாகியுள்ள புகார்களின் எண்ணிக்கை 516 ஆக உயர்வடைந்துள்ளதாக ஜெர்மன் காவல்துறை தெரிவித்துள்ளது. இவற்றில் 40 வீதமானவை பாலியல் ரீதியான தாக்குதல்கள் தொடர்பானவை. இதனிடையே, நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கு ஜெர்மனியில் பாகிஸ்தானியர்கள் 6 பேரும் சிரிய நாட்டவர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டவர்களில் இரண்டு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்னொரு சம்பவத்தில் 5 பேர் கொண்ட குழு ஒன்று சிரிய நாட்டவர் ஒருவரை தாக்கியு…
-
- 2 replies
- 401 views
-
-
ஜேர்மனியில் பாலியல் தாக்குதல்களுக்கு எதிராக சுவிஸ் பெண் கலைஞரின் நிர்வாண ஆர்ப்பாட்டம் ஜேர்மனியின் கொலோன் நகரில் இடம்பெற்ற பாலியல் ரீதியான தாக்குதலுக்கு எதிராக சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நிர்வாணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொலோன் நகரின் புத்தாண்டுப் பிறப்பு கொண்டாட்டங்களின்போது பெண்கள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் மேலும் சிலர் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகினர். ஜேர்மனிக்கு அகதிகளாக வந்த அரபுக்கள் மற்றும் வட ஆபிரிக்க நாட்டவர்களால் இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத…
-
- 5 replies
- 779 views
-
-
பிரபல பிரித்தானிய பாடகர் டேவிட் போவி காலமானார் [ Monday,11 January 2016, 13:46:15 ] பிரித்தானியாவின் புகழ்பெற்ற பாடகரான டேவிட் போவி புற்றுநோய் காரணமாக தனது 69ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார். அறுபதுகளின் பிற்பகுதியிலும் எழுபதுகளின் ஆரம்பத்திலும் இசையில் உலக அளவில் கோலோச்சியிருந்தார். தமது தந்தை உயிரிழந்துள்ளதை அவரது மகனும் திரைப்பட இயக்குநருமான டங்கன் ஜோன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 18 மாதங்களாக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், குடும்பத்தினர் சூழ்ந்திருக்க அமைதியாக போவீயின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஸ்பேஸ் ஆடிட்டி', 'ஸ்டார்மேன்' போன்ற பாரிய வெற்றி பெற்ற பாடல்கள் டேவிட் போவிக்கு உலக…
-
- 0 replies
- 409 views
-
-
ஈராக் வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி! பாக்தாத்: ஈராக்கில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈராக் தலைநகர், பாக்தாத்தில் ஜவஹாரா வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்திற்குள் நேற்று (11-ம் தேதி) திடீரென நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும், 22-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், 75-க்கும் மேற்பட்டவர்களை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. என…
-
- 0 replies
- 360 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… முற்றுகையிடப்பட்ட சிரியாவின் மதாயாவுக்கு சென்றுள்ளது அவசர உணவு உதவி! பட்டினியால் வாடும் மக்களின் அவலத்தைப் போக்க ஐநா நடவடிக்கை! வான வீதியில், படை விமான ஊர்வலம்! வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு பரிசோதனைக்கு பதிலடியாக அமெரிக்கா உதவியுடன் தென்கொரியா காட்டும் புஜபலம்! கீழ்த்தட்டு மக்களின் கலை வெளிப்பாடா? கலாச்சார சீரழிவா? அரபு உலகை ஆட்டம்போடவைக்கும் பேட்டை ரேப்- மஹ்ரகன்ஸ்!
-
- 0 replies
- 517 views
-
-
ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க கப்பல்: இந்தியர்கள் உள்பட 35 பேருக்கு 5 ஆண்டு சிறை! ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் பிடிபட்ட வழக்கில், 35 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி, தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘‘சீமேன் கார்டு ஓகியோ’’ என்ற கப்பல் பிடிபட்டது. இந்த கப்பலில் இருந்த 10 மாலுமிகள் உள்பட 35 பேரை, கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் இந்தியாவை சேர்ந்த 12 பேர், உக்ரைனை சேர்ந்த 3 பேர், எஸ்டோனியாவை சேர்ந்த 14 பேர், இங்கிலாந்தை சேர்ந்த 6 பேர் ஆவர். மேலும்…
-
- 0 replies
- 697 views
-
-
இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து! புதுடெல்லி: பாகிஸ்தானுடன் வரும் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ''பாகிஸ்தானுடன் வரும் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், பதன்கோட் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை கிடையாது. பதன்கோட் சம்பவத்தில், பாகிஸ்தானின் நடவடிக்கை திருப்தி அளித்தால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று அவர்…
-
- 0 replies
- 403 views
-
-
சவுதி அரேபியாவிற்கு பாதுகாப்பு வழங்க பாகிஸ்தான் தீர்மானம் [ Monday,11 January 2016, 05:19:54 ] சவுதி அரேபியாவுக்கு ஆபத்து ஏற்பட்டால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது. சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சரும், துணைப் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இவர் பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் ரகீல் ஷரீவ்வை (Raheel Sharif ) நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை குறித்து பாகிஸ்தான் அக்கறை தெரிவித்ததுடன் சர்ச்சைக்குத் தீர்வுகாண, இ…
-
- 0 replies
- 522 views
-
-
குற்றச் செயலில் ஈடுபடும் குடியேறிகளுக்கு இடமில்லை:ஜெர்மனி அறிவிப்பு ஜெர்மனியில் குடியேறும் நோக்கில் வருபவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என, ஜெர்மனியின் ஆட்சித் தலைவி ஏங்கலா மெர்க்கல் அம்மையார் தெரிவித்துள்ளார். குற்றச் செயலில் ஈடுபடும் குடியேறிகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர். அந்த நடைமுறையை இலகுவாக மேற்கொள்வதற்கான செயல்திட்டங்களையும் அவர் முன்வைத்துள்ளார். கொலோன் நகரில் இடம்பெற்ற புத்தாண்டு தினத்தை ஒட்டிய நள்ளிரவு கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற களவு மற்றும் பாலியல் தாக்குதல்களில் குடியேறிகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதி…
-
- 6 replies
- 579 views
-