Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. யேமன் பள்ளிக்கூடங்களை தெரிந்தே தாக்குகிறது சௌதி: அம்னெஸ்டி குற்றச்சாட்டு சௌதி அரேபியாவும் அதன் கூட்டணியும் யேமனில் வேண்டுமென்றே பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமை பிரச்சார அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றஞ்சாட்டியுள்ளது. சௌதி தலைமையிலான கூட்டணி யேமனில் கடந்த மார்ச்சில் விமானத் தாக்குதல்களை ஆரம்பித்தது முதல் அந்நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகூடங்கள் இயங்கவில்லை என்றும், அவற்றில் கால்வாசி அளவானவை முற்றிலுமாக அழிந்துபோயுள்ளன என்றும் அவ்வமைப்பு கூறுகிறது. சௌதி அரேபியா யேமனில் சர்வதேச விதி மீறல்களைச் செய்யப்பயன்படுத்துவதால், அந்நாட்டுக்கு ஆயுதங்கள் விற்பதை அமெரிக்காவும் பிரிட்டனும் நிறுத்த வேண்டும் என அம்னெஸ…

  2. பாகிஸ்தான்: மும்பையை இலக்கு வைக்கும் அணுஆயுத ஏவுகணை சோதனை வெற்றி! சுமார் 2 ஆயிரத்து 750 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணுஆயுதங்களை தாங்கி சென்று தாக்கும் ஷாகீன்-3 ரக ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டால் மும்பை வரை தாக்கப்படும் அபாயமிருக்கிறது. ஆனால் இந்த ஏவுகணை எந்த இடத்தில் பரிசோதித்து பார்க்கப்பட்டது என்ற விபரங்களை பாகிஸ்தான் ராணுவம் அறிவிக்கவில்லை. தரையில் இருந்து ஏவப்படும் ஷாகீன் 3 ரக ஏவுகணை இதுவாகும். ஷாகீன் 3 ரக ஏவுகணை திட்டத்தின் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் மசார் ஜமில் இது குறித்து கூறுகையில், '' பாகிஸ்தான் ராணுவத்தின் பலத்தை உலகுக்கு பறைசாற்றும் விதத்தில், இந்த ஏவுகண…

  3. பாரீஸ் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: ஐரோப்பாவில் பரிதவிக்கும் அகதிகள் ஹங்கேரியின் பிஸ்கி நகர் ரயில் நிலையத்தில் ஜெர்மனி செல்ல ரயிலுக்காக காத்திருந்த குடும்பத்தினரை விரட்டிப் பிடித்த போலீஸார். படம்: ராய்ட்டர்ஸ் பாரீஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் கடுமையான போக்கை கடைப்பிடிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான அகதிகள் குளிர், மழையில் பரிதவித்து வருகின்றனர். கடந்த நவம்பர் 13-ம் தேதி பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தி 132 பேரை கொலை செய்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அகதிகள் போர்வையில் பாரீஸுக் குள் ஊடுருவி இருப்பது தெரிய வந்தது. இதனால் அகதிகள் விவகாரத்தில் ஐ…

  4. 2015- ல் ஒபாமாவை மிகவும் கவர்ந்த பாடல் அமெரிக்க அதிபர் ஒபாமா, 2015-ம் ஆண்டில் தனக்கு மிகவும் பிடித்த பாடல், நூல், திரைப்படம் பற்றி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வெளிவந்த பீப்பிள் இதழில் ஒபாமாவின் பேட்டி வெளியாகியுள்ளது. இதில், ராப் பாடகர் கென்ட்ரிக் லாமர் பாடிய ‘ஹவ் மச் எ டாலர் காஸ்ட்’ என்ற பாடலை இந்த ஆண்டில் தனக்கு மிகவும் பிடித்த பாடலாக ஒபாமா கூறியுள்ளார். திருமணம் பற்றி லாரன் கிராஃப் எழுதிய ‘Fates and Furies’ நாவலை தனக்கு மிகவும் பிடித்த நாவலாகவும் மேட் டேமன் நடித்த ‘தி மார்ஷியன்’ திரைப்படத்தை தனக்கு மிகவும் பிடித்த படமாகவும் ஒபாமா கூறியுள்ளார். இதுபோல் மிஷேல் ஒபாமாவும் தனது விருப…

  5. டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு ! நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் ஆண்டுதோறும் உலகில் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கலை டைம் இதழின் ஆசிரியர் குழு தேர்வு செய்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் சிரியாவில் இருந்து வெளியேறும் அகதிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்தல் உள்ளிட்ட பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்ட மெர்கலின் த…

  6. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் முக்கிய தூண்களில் ஒருவர் பலி ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் முக்கிய நபர்களில் ஒருவரான அபு சாலே, கூட்டுப்படைகளின் வான்படைத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வியக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் அவர் நிதிப்பிரிவின் தலைவர் என தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் மற்றுமின்றி மேலும் இரண்டு முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் இன் நிதிக்கட்டமைப்பை அழிக்கும் நோக்குடன் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது…

  7. சிரி­யாவில் வான் தாக்­கு­தல்கள் மூலம் ரஷ்யா இனத்துடைப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­கி­றது ரஷ்­யா­வா­னது வட சிரி­யாவில் தனது வான் தாக்­கு­தல்கள் மூலம் இனத்துடைப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ள­தாக துருக்­கிய பிர­தமர் அஹ்மெட் டவு­டோக்லு குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். லதா­கியா பிராந்­தியத்தைச் சூழ்ந்­துள்ள பிர­தே­சங்­களில் வசிக்கும் துருக்­கிய இனத்­த­வர்­க­ளையும் சன்னி சமூ­கத்­தி­ன­ரையும் இலக்கு வைத்தே ரஷ்யா தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தாக அவர் கூறினார். ரஷ்­யா­வா­னது சிரி­யா­வி­லான தனது தாக்­கு­தல்கள் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களை இலக்­காகக் கொண்­டுள்­ளன என வலி­யு­றுத்தி வரு­கி­றது. இந்­நி­லையில் டவு­டோக்லு விப­ரிக்­கையில், சிரி­யாவில் ரஷ…

  8. கொல்கத்தா பாலியல் வல்லுறவு சம்பவத்தில் மூவர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு பலரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிய ஒரு கல்கத்தா பெண், தனது பெயர் மற்றும் விவரங்களை வெளியிட அனுமதித்த ஒரு முன்னோடி வழக்கில், மூன்று பேர் குற்றவாளிகள் என்று கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பாலியல் வல்லுறவுக்காளான சூஸெத் ஜோர்டன் இது போன்ற பாலியல் வல்லுறவு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து பேசவேண்டும் என்று ஊக்கமளிக்கும் வகையில் தனது பெயரை வெளியிட , இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், சூஸெத் ஜோர்டான் அனுமதித்ததை அடுத்து இந்த வழக்கு விவரங்கள் வெளிவந்தன. 2012ம் ஆண்டில், சூஸெத் ஜோர்டான் என்ற இந்த, இரு பெண்குழந்தைகளின் தாய், ஒரு இரவு விடுதியில் இ…

  9. சீனாவில் கடைப்பிடிக்கப்படும் சித்ரவதைகளுக்கு ஐநா குழு கண்டனம் சீன சிறைகளில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சித்திரவதை முறைகள் கைவிடப்பட வேண்டும் என்று ஐநாவின் சித்திரவதை கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது சீனாவின் சிறைகளில் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சித்ரவதை முறைகளும், வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு எதிரான பரந்துபட்ட நடவடிக்கைகளும் கைவிடப்பட வேண்டும் என்று ஐநாவின் சித்ரவதை கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது. சீனா தனது ரகசிய சிறைகளை மூட வேண்டும் என்றும் அந்தக் குழு கோரியுள்ளது. காவலில் வைக்கப்பட்டவர்களின் இறப்புகள் தொடர்பிலும் இந்த குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு பெரிய சீனப் பிரதிநிதிகள் குழு ஒன்றிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள…

  10. ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் | படம்: ஏஎப்பி மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் தேர்தல் வேட்பாளருமான டோனால்டு டிரம்ப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "முஸ்லிம்களுக்கு ஆதரவான எனது நிலைப…

  11. மும்பை தாக்குதல் வழக்கில் பொதுமன்னிப்பு அளித்தால் அப்ரூவராக மாறத் தயார்: டேவிட் ஹெட்லி ஒப்புதல் டேவிட் ஹெட்லி | கோப்புப் படம் மும்பை நீதிமன்றம் மன்னிப்பு வழங்குவதாக இருந்தால், மும்பை தாக்குதல் வழக்கில் அப்ரூவராக மாறத் தயார் என அமெரிக்க தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிறந்த டேவிட் ஹெட்லி, கடந்த 2006, 2007, 2008-ம் ஆண்டுகளில் மும்பையில் சுற்றுப்பயணம் செய்து, முக்கிய இடங்களை வீடியோவில் பதிவு செய்து, அவற்றை பாகிஸ்தானிலுள்ள லஷ்கர் தீவிரவாதிகளிடம் ஒப்படைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ஹெட்லிக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித…

  12. கந்தகார் விமாமன நிலையத் தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 70ஆக அதிகரித்தது ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியிலுள்ள கந்தகார் விமான நிலையத்தின் பாதுகாப்புப் பகுதி மீது தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 70ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 என ஆரம்பத்திலும், 37 என பின்னரும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பமைச்சால் தெரிவிக்கப்பட்டது. எனினும், தாக்குதல் களத்திலுள்ள அதிகாரிகளின் தகவலின்படி, குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தாக்குதல், முடிந்துவிட்டதாகக் கருதப்பட்டபோதும், அது தொடர்ந்தும் இடம்பெற்றவாறே காணப்படுகிறது. புதன்கிழமை இரவு…

  13. குடியேறிகளுக்கு எதிரான அதிரடியான கருத்துகளை சொல்லிவருபவர் டிரம்ப்.முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதிலிருந்து தடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக வர முயற்சிக்கும் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து, பல தரப்பிலிருந்தும் கண்டனங்களை ஈர்த்துள்ளது.அமெரிக்கா மீதான ஒரு வெறுப்புணர்வை பல முஸ்லிம்கள் பேணுவதாகவும், இந்த அச்சுறுத்தலுக்கான காரணத்தை அதிகாரிகள் கண்டறியும்வரை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்துக்கள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கும் விழுமியங்களுக்கும் முரணானது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இவரது போட்டியாளரான குடியரசு கட்சியின் ஜெஃப் புஷ், இவர…

  14. பாரீஸ், எனக்கு தெரிந்து இருந்தால் ‘நானே கொன்று இருப்பேன்,’ என்று பாரீஸ் தாக்குதலில் அடையாளம் காணப்பட்ட 3-வது தீவிரவாதியின் தந்தை கூறிஉள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 13-ம் தேதி இரவு ஐ.எஸ். தீவிரவாதிகள் கால்பந்து மைதானம், இன்னிசை அரங்கம், உணவு–மதுபான விடுதிகள் என 6 முக்கிய இடங்களில் நடத்திய அதிபயங்கர தாக்குதலில் 129 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 352 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் 7 பேர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பலியாயினர். ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனிடையே பாரீஸ் நகரில் கோரத் தா…

  15. அகதிகள் படகு மூழ்கியதில் 6 குழந்தைகள் உட்பட பலர் பலி துருக்கி கடற்பரப்பில் அகதிகள் படகு ஒன்று மூழ்கியதில் 6 சிறுவர்கள் உட்பட பலர் பலியாகியுள்ளனர். நேற்று முன்தினம் கிரீஸ் நோக்கி புறப்பட்ட அகதிகள் படகு ஒன்றே இவ்வாறு மூழ்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து 18 சிறுவர்கள் உள்பட 65 பேர் ரப்பர் படகு ஒன்றில் கிரீஸ் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் படகு திடீரென கடலில் மூழ்கியுள்ளது. தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த துருக்கி கடற்படையினர் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 45 பேரை மீட்டுள்ளனர். எனினும் 6 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், அவர்களது உடல்களை கடற்படையினர் மீட்டனர். மற்றவர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. கடந்…

  16. இஸ்லாத்தில் பாரிய பிரச்சினையுண்டு சீர்திருத்த வேண்டும்: அபொட் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபொட், இஸ்லாம் மீதான விமர்சனங்களை முன்வைத்துள்ளதோடு, அம்மதத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள டொனி அபொட், முஸ்லிம்களைச் சிறுமைப்படுத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். எனினும், இஸ்லாத்தில் காணப்படும் பாரிய பிரச்சினைகள் குறித்து மேற்கு, தொடர்ந்தும் மறுப்பில் காணப்படக்கூடாது எனத் தெரிவித்தார். பெரும்பாலான முஸ்லிம்கள், பயங்கரவாதத்தை முழுமையாக நிராகரிக்கும் நிலையில், சிலர், மதத்துக்கு எதிரானவர்களின் மரணத்தை நியாயப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்த…

  17. மும்பையில் ரூ. 4 கோடிக்கு ஏலம்போன தாவூத் இப்ராஹிம் ஓட்டல்! மும்பை: இந்திய அரசால் தீவிரமாக தேடப்பட்டு வரும் பிரபல நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான மும்பை ஓட்டல் ஒன்று 4 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. தெற்கு மும்பையில் உள்ள பெண்டிபஜார் என்ற இடத்தில் 'ரவுனாக் அஃப்ரோஷ்' என்ற பெயரில் ரெஸ்ட்ரான்ட் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஓட்டல்தான் இன்று ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் பலரும் கலந்துகொண்ட நிலையில், முன்னாள் பத்திரிகையாளரான எஸ். பாலகிருஷ்ணன் என்பவர் 4.28 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டு, அந்த ஓட்டலை தன்வசமாக்கிக்கொண்டார். பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தான் ஏலம் எடுத்துள்ள இந்த ஓட்டலில் ஏழைகளுக்காக கல்வி மையம் ஒன்றை ஏற்படுத்த இ…

  18. ஆப்கான் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: 19 பேர் பலி ஆப்கானிஸ்தான் விமான நிலையம் ஒன்றில் தலிபான் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்துக்குள் தான் இந்த தாக்குதல் நடைபெற்றது. விமான நிலையத்திற்கு நுழந்த தலிபான்கள், ஆப்கான் இராணுவ அதிகாரிகள், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை சேர்ந்த இராணுவ வீரர்கள் தங்கக் கூடிய குடியிருப்பு பகுதிகள் மீது நேற்றிரவு தாக்குதலில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற தலிபான் பயங்கரவாதிகளை விமான நிலையத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களை மீறி விமான ந…

  19. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவின் ஹோம்ஸ் நகரை விட்டு வெளியேறுகின்றனர் கிளர்ச்சிக்காரர்கள்! சமாதான ஒப்பந்தத்தின் கீழ் அரசாங்க கட்டுப்பாட்டுக்குத் திரும்புகிறது ஹோம்ஸ்! - பாரிஸ் தாக்குதலின் சூத்திரதாரி பத்து மாதங்களுக்கு முன்பே பிடிபட்டிருக்க வேண்டியவர்! அதென்ஸில் நடந்த அதிரடி சோதனையில் இருந்து அவர் தப்பித்தது பற்றிய பிபிசியின் பிரத்யேகத் தகவல்! - அத்துடன்.... பார்வையில்லாமலே லாவகமாக ஊசியில் நூல் கோர்க்கும் தான்சானியத் தையல்காரர்!

  20. மலேஷிய விமான நிலையத்தில் உள்ள 3 விமானங்களின் உரிமையாளர்கள் யார்? 'விமானங்கள் 14 நாட்களுக்குள் உரிமையாளர்களால் எடுத்துச் செல்லப்படாவிட்டால், அவற்றை விற்றுவிடுவதற்கு அல்லது அழித்துவிடுவதற்கு அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது' மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாட்டின் பெரிய விமானநிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்ற சொந்தம் கோரப்படாதுள்ள 3 விமானங்களின் உரிமையாளர்கள் அல்லது உரிமையாளரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடந்துவருகின்றது. இந்த போயிங் 747 ரக விமானங்கள் 14 நாட்களுக்குள் உரிமையாளர்களால் எடுத்துச் செல்லப்படாவிட்டால், அவற்றை விற்றுவிடுவதற்கு அல்லது அழித்துவிடுவதற்கு அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது என்று கூறி அந்நாட்டின் தேசிய நாளிதழில் விளம்பரம…

    • 5 replies
    • 969 views
  21. டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த ‘பத்து முத்துக்கள்' அமெரிக்க அதிபராக விரும்பும் டொனால்ட் ட்ரம்ப் முஸ்லீம்களை அமெரிக்காவுக்குள் விடமாட்டேன் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் இதுவரை தெரிவித்திருக்கும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பத்து முக்கிய கருத்துக்கள் மற்றும் அவரது நம்பிக்கைகள்: 1. அமெரிக்க மசூதிகள் கண்காணிக்கப்படவேண்டும். தீவிரவாத…

  22. இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் [ புதன்கிழமை, 09 டிசெம்பர் 2015, 12:07.46 PM GMT ] இந்தோனேஷியாவில் 6.9 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்தோனேஷியாவின் கிழக்கேஉள்ள அம்போன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அம்போன் தீவில் இருந்து தென் கிழக்கே 174 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கமானது பூமிக்கடியில் 75 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்களும் வெளியாவில்லை. http://www.tamilwin.com/show-RUmtzCTdSWlp0H.html

  23. பாரிஸ் தாக்குதல்: 3-வது தற்கொலை தாக்குதலாளியின் அடையாளம் தெரிந்தது பாரிஸ் தாக்குதல்களில் பலியான 130 பேரில் அனேகமானவர்கள் பட்டாக்லான் இசையரங்கில் நடந்த கொலைகளில் தான் உயிரிழந்தனர் பாரிஸில் கடந்த மாதம் பட்டாக்லான் இசையரங்கில் தாக்குதல் நடத்தியிருந்த மூன்றாவது தற்கொலை தாக்குதலாளியையும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். வட-கிழக்கு பிரான்ஸில் உள்ள ஸ்த்ராஸ்போக் நகரைச் சேர்ந்த பெளத் மொஹமட் அக்காட் என்ற 23-வயது இளைஞனே அவர் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 2013-ம் ஆண்டில் தனது சகோதரனுடன் சிரியாவில் போரிடுவதற்காக அவர் சென்றிருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால், அவர் எப்போது பிரான்ஸுக்கு திரும்பினார் என்று தெரியவில்லை. மற்ற மூன்று தா…

  24. கலிபோர்னியாவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பெண் தீவிரவாதி இந்தியாவை நோட்டமிட்டார்: அமெரிக்க நாளிதழ் தகவல் தஸ்பீன் மாலிக் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 14 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் பெண் தீவிரவாதி தஸ்பீன் மாலிக் இந்தியாவுக்கும் சென்றுள்ளார் என்று அந்த நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் பெர்னார்டினோ நகரில் பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் ஓர் ஆணும் பெண்ணும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயமடைந்தனர். காரில் தப்பிச் சென்ற அந்த தம்பதியரை எப்பிஐ போலீஸார் சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றனர். போலீஸ் வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.