Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடெல்லி, நான் இந்திரா காந்தியின் மருமகள், யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார். நேஷனல் ஹெரால்டு செய்தி நிறுவனம் தொடர்பான வழக்கில் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் விசாரணை கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இப்பிரச்சனையை பாராளுமன்றத்தில் எழுப்புவதாகவும் கூறியது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் நேஷனல் ஹெரால்டு வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே கோர்ட்டில் ஆஜராக கால அவகாசம் கோரி காங்கிரஸ் தலைவர் …

  2. சிரியன் அரசாங்க எதிர்ப்புக் குழுக்கள் சௌதியில் கூட்டம் சிரியன் கிளர்ச்சிக்காரர்களில் பல்வேறு தரப்புகளும் இதற்கு முன்னால் ஒன்றுகூடி பேசியதில்லை. சிரியாவில் மோதல்கள் ஆரம்பித்த நாலரை ஆண்டுகளில் முதல் தடவையாக அந்நாட்டின் அரசாங்க எதிர்ப்பு குழுக்கள் சௌதி அரேபியாவில் கூடுகின்றனர். அதிபர் அஸ்ஸத்தை பதவி அகற்றும் நோக்கில் சண்டையிட்டுவரும் பல்வேறு தரப்புகள் இதில் கலந்துகொள்கின்றனர். சிரியாவில் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கும் பட்சத்தில், ஒன்றுசேர்ந்து பேரம் பேசுவதற்கான கூட்டணி ஒன்றை அமைப்பது ரியாத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். ஃப்ரீ சிரியன் ஆர்மி குழுவில் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற உட்பிரிவுகளுக்கு…

  3. கொடூர கொலைகளும் முறையான நிர்வாகமும்: அம்பலமான ஐஎஸ் அமைப்பின் செயல்முறைகள் படம்: ராய்ட்டர்ஸ். அமெரிக்க அமைச்சர் ஜான் கெரி ஐஎஸ் அமைப்பை பைத்தியம் பிடித்த கொடூர அமைப்பு என்றும், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே காட்டுமிராண்டிகள் என்றும், பிரிட்டன் பிரதமர் கொலையை வழிபாடு செய்யும் அமைப்பு என்றும் வர்ணித்துள்ளனர். ஆனால் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு இவற்றையெல்லாம் தாண்டியது என்பதே தற்போது வெளிவந்துள்ள செய்தியாகும். இது குறித்து 'தி கார்டியன்' ஊடகத்துக்கு கிடைத்துள்ள ஆவணங்களின் படி, ஐஎஸ் அமைப்பில் ஆட்சி அதிகாரிகள், சிவில் ஊழியர்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் இவர்களே மீன்பிடி தொழில் முதல் ஆடை ஒழுங்கு முறைகள் வரை அனைத்தையும் பற்றி விதிமு…

  4. சென்னை, மீண்டும் மழை வெள்ளம் நீடிக்க வாய்ப்பு இருப்பதால் சென்னை நகருக்கு பயணம் செய்வதை தள்ளி வைக்கும்படி தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அரசுகள் வேண்டுகோள் விடுத்து உள்ளன. தள்ளி வையுங்கள் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெள்ள நிலைமை காரணமாக தங்கள் நாட்டு மக்கள் சென்னைக்கு பயணம் மேற்கொள்வதை தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டு உள்ளது. இது பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் பாதுகாப்பு தூதரக பிரிவு விடுத்துள்ள பயண அறிவுறுத்தல் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மிகவும் கண்கூடாக தெரிகிறது. இதில் ஏராளமானோர் பலியாகியும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நகரில் உள்ள அடையாறு ஆறு, நிரம்ப…

  5. கிறிஸ்தவ நாடு என்ற அந்தஸ்தை இங்கிலாந்து இழக்கும் - ஆய்வு இங்கிலாந்து நாடு விரைவில் கிறிஸ்தவ நாடு என்ற அந்தஸ்தை இழக்குமென்று ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. உலகில் இத்தாலிக்கு அடுத்தபடியாக மக்கள் சதவீதத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் வசிப்பது இங்கிலாந்து நாட்டில்தான். தற்போது இந்த நாட்டில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் இன்னும் பல சமயங்களை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். இது குறித்து இங்கிலாந்து கிறிஸ்தவ ஆலயங்களின் தலைமை அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த 150 பக்க அறிக்கையில், பல்வேறு காரணங்களால் இங்கிலாந்தில் பிற சமய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், அவர்கள் பொருளாதாரத்திலும் கல்வியிலும் கூட…

  6. பிரான்ஸ் தேர்தலில் இனவாத கட்சி முன்னிலை பிரான்ஸ் மாகாண தேர்தலில் இனவாத கட்சியான தேசிய முன்னணி முன்னிலை பெற்றுள்ளது. பிரான்ஸில் 13 மாகாண சபை களின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக் கும் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் தற்போதைய ஆளும் கட்சியான சோஷலிச கட்சியும் எதிர்க்கட்சியான யு.எம்.பி. ஆகியவை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இனவாத கட்சி என்று சித்தரிக் கப்படும் தேசிய முன்னணி முன்னிலை பெற்றுள்ளது. இப்போதைய நிலவரப்படி 6 மாகாணங்களை அந்த கட்சி கைப்பற்றியுள்ளது. அடுத்த கட்டத் தேர்தல் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. அந்தத் தேர்தலிலும் தேசிய முன்ன ணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக …

  7. 2016 ஆம் ஆண்டு மனிதாபிமான உதவிகளுக்கு 20 பில்லியன் தேவை; ஐ.நா [ Tuesday,8 December 2015, 04:31:16 ] எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள மனிதாபிமான உதவி செயற்பாடுகளுக்காக 20 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியை ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது. இவற்றில் ஐந்தில் இரண்டு பங்கு நிதி சிரியாவில் தொடரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் 87 மில்லியன் மக்களுக்கு உடனடியான உதவிகள் தேவைப்படுவதாக மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகளின் தலைமை அதிகாரி ஸ்ரீபன் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான மக்கள் சொந்…

  8. கடந்த 11 மாதங்களில் ஒன்பதரை இலட்சம் அகதிகள் ஜேர்மனில் பதிவு [ Tuesday,8 December 2015, 04:27:24 ] ஜேர்மனியில் இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் ஒன்பது இலட்சத்து 60 ஆயிரத்திற்கு அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை ஒரு மில்லியனை விட அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குளிருடன் கூடிய காலநிலைக்கு மத்தியிலும் ஜேர்மனியை நோக்கிவரும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை என கூறப்படுகின்றது. இவ்வாண்டில் சுமார் 8 இலட்சம் புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக ஜேர்…

  9. குண்டுப்புரளி, ஜேர்மன் விமானம் அவசர தரையிறக்கம் Ca.Thamil Cathamil December 07, 2015 Canada விமானத்தில் குண்டு வைத்திருப்பதாகக் கிடைத்த தொலைபேசி மிரட்டல் ஒன்றின் அடிப்படையில் பெர்லினிருந்து எகிப்து நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஜேர்மனி, கொன்டோர் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் அவசரமாக தரையிறங்கிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. எனினும், விமானத்தை சோதனை செய்த ஹங்கேரி பொலிசார் குண்டு எதுவும் இல்லையென பின்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.canadamirror.com/canada/53653.html#sthash.iCf6wGWb.dpuf

  10. ஆறாய் ஓடிய யூரோ நோட்டுக்கள் நதியில் ஓடி காவல் நிலையத்தில் உலரும் யூரோ நோட்டுக்கள் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருக்கும் தனூப் நதியில் ஒரு லட்சம் யூரோக்களுக்கும் அதிகமான கரன்ஸி நோட்டுகள் மிதந்து வந்தது குறித்து அந்நாட்டுக் காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த கரன்ஸி நோட்டுக்கள் மிதந்துவந்ததைக் கண்ட ஒருவர் அதை எடுப்பதற்காக நதிக்குள் குதித்தார். காவல் நிலையத்தில் காயவைக்கப்பட்ட கரன்ஸி நோட்டுக்கள் இதுகுறித்து வியன்னா நகர காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் யூரோ நோட்டுக்கள் காயவைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இருக்கின்றன. ஆனால் இந்த கரன்ஸி நோட்டுக்கள் எங்கிருந்து வந…

  11. 300 ஆண்டு மர்மம் விலகியது : 35 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்கம் கண்டுப்பிடிப்பு 300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருக்கும் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கொலம்பியா கண்டுபிடித்ததுள்ளது. கடந்த 1708ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்ற போது ஸ்பெயின் கான்ஜோஸ் என்ற கப்பலில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாப்பு கொண்டுச் செல்லப்பட்டது. ஆனால் அக்கப்பலை கைப்பற்றி தன் வசமாக்க இங்கிலாந்து போரிட்டது. இதில் ஸ்பெயின் கப்பல் கொலம்பியாவில் உள்ள சரூபியன் கடலில் குண்டு வீசி மூழ்கடிக்கப்பட்டது. அக்கப்பலை கண்டு பிடிப்பதில் கொலம்பியா தீவிரமாக ஈடுபட்டது. 198…

  12. ஐ.எஸ். இயக்கத்தை அமெரிக்கா அழிப்பது உறுதி: ஒபாமா பேச்சு ஒபாமா. | படம்: ராய்ட்டர்ஸ். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை அமெரிக்கா வேரோடு அழிக்கும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2-ம் தேதி பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் ஒரு தம்பதியினர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்தபடி தொலைக்காட்சி வாயிலாக அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று உரையாற்றினார். அப்போது அவர், " கலிபோர்னியாவில் நடைபெற்ற கொடூரச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அந்த தாக்…

  13. தஜிகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்: டெல்லி, காஷ்மீரிலும் தாக்கம் படம்: யு.எஸ்.ஜி.எஸ். மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது, இதன் தாக்கத்தினால் தலைநகர் புதுடெல்லியில் கட்டிடங்கள் குலுங்கின. காஷ்மீரிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. திங்கள் மதியம் இந்திய நேரம் 1.20-க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.2 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 28கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முர்கோப் நகருக்கு மேற்கே 109 கிமீ தொலைவில் இதன் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக தலைநகர் …

  14. அமெரிக்கா சான் பெர்னான்டினோ சூடு: கொலையாளிகள் எம்மைப் பின்பற்றுவோரே: ஐ.எஸ் அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள சான் பெர்னான்டினோவில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் தம்பதிகள், தங்கள் இயக்கத்தைப் பின்பற்றுவோரே என, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற இச்சூட்டுச்சம்பவத்தில், குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதோடு, 21 பேர் காயமடைந்தனர். விடுமுறை நாள் கொண்டாட்டமொன்றின்மீதே, இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில், வெள்ளையினத்தவரொருவரே இத்தாக்குதலை மேற்கொண்டாரெனத் தகவல்கள் வெளியான போதிலும், பின்னர், சையட் றிஸ்வான் பாரூக் என்பவரது பெயர் வெளியாகியிருந்தது. அமெரிக்காவில் பி…

  15. சிரியாவின் ரக்கா நகர் மீது கடும் வான் தாக்குதல்கள் சிரியாவில் ஐ எஸ் அமைப்பு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதிகளின் கோட்டை எனக் கருதப்படும் ரக்கா நகர் மீது கடுமையான வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ரக்கா மீது கடும் வான் தாக்குதல்கள் இந்தத் தாக்குதல்களுக்கு ரஷ்ய விமானங்களே பொறுப்பு என ரக்காவிலிருக்கும் செயல்பாட்டாளர்களின் வலையமைப்பு கூறுகிறது. இத்தாக்குதலில் கணிசமான அளவுக்கு பெண்களும், சிறார்களும் கொல்லப்பட்டுள்ளனர். ரக்கா நகரில் ஐ எஸ் அமைப்பினர் பலமாக உள்ளனர் எனக் கூறப்படுகிறது ஆனால், பிரிட்டனை தளமாகக் கொண்டு இயங்கும் சிரியன் அப்சர்வேட்டரி குரூப் எனும் மனித உரிமைகள் அமைப்போ, ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த 30க்கும் அதிகம…

  16. தலீபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூர் உயிருடன் உள்ளதாக ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. ஆப்கான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தவன் முல்லா அக்தர் மன்சூர். முல்லா உமர் மரணத்தை தொடர்ந்து இவர் பதவிக்கு வந்தபின்னர் தலீபான் இயக்கத்தில் குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகர் அருகே குச்லாக் என்ற இடத்தில் ஆப்கான் தலீபான் தளபதிகள் கூட்டம், கடந்த 2-ந் தேதி நடந்தபோது மோதல் வெடித்து, துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் முல்லா அக்தர் மன்சூர் படுகாயம் அடைந்தான் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அவன் மரணம் அடைந்து விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகின்றன. தலீபான் இயக்கத்தின் தற்காலிக தலைவனாக அக்குன…

  17. பிரிட்டனின் வான் தாக்குதல்கள் சட்டவிரோதமானவை:சிரிய அதிபர் அஸத் இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்பின் தீவிரவாதிகள் மீது பிரிட்டன் நடத்திய வான் தாக்குதல்கள் சட்டவிரோதமானவை என அதிபர் பஷார் அல் அஸத் தெரிவித்துள்ளார். சிரியாவின் அதிபர் பஷார் அல் அஸ்த் பிரிட்டனிலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில், இப்படியான வான் தாக்குதல்கள் 'பயங்கரவாதப் புற்றுநோய்' மேலும் அதிகரிக்கவே வழி செய்யும் எனக் கூறியுள்ளார். பிரிட்டிஷ் அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை, ரஷ்யா எடுத்துள்ள நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுள்ள அவர் இரண்டிலும் உள்ள மாறுதல்களையும் அப்பேட்டியில் சுட்டிக்காட்டினார். ஐ எஸ் அமைப்பின் மீ…

  18. சென்னையில் பெய்த கனமழையால், சுமார் ஒரு லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு வட கிழக்கு பருவழை சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் விட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில், வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் முழுவதும் நிரம்பியதால், அதிலிருந்து பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் கூவம் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது. அதனால் கூவம் ஆற்றை ஒட்டிய குட…

  19. லண்டன் ரயில் நிலையத்தில் கத்திக்குத்து: 'தீவிரவாதச் செயல்' லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தை ஒரு தீவிரவாத சம்பவமாகக் கருதி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாக்குதல் நடைபெற்ற ரயில் நிலையம் கிழக்கு லண்டனில் பெருமளவுக்கு ஆட்கள் வந்து செல்லும் லேட்டன்ஸ்டோன் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மாலை இச்சமவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை நடத்திய நபர் "இது சிரியாவுக்காக" எனக் கத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர் இத்தாக்குதலை நடத்திய நபரை செயலிழக்கச் செய்யும் வகையில் குறைந்த சக்தி மின்சாரத்தை துப்பாக்கி மூலம் செலுத்தி, அவரை கைது செய்தனர்…

  20. சென்னை ஒரு படிப்பினை: அமெரிக்க நிபுணர்கள் கருத்து 'கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது, சரியான நகர திட்டமிடல் இல்லாததே இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம், எதிர்கால நகர திட்ட மிடலுக்கு சென்னை ஒரு படிப்பினை’ என்று அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க வாழ் இந்தியரான கட்டடவியல் நிபுணர் நம்பி அப்பாதுரை கூறியபோது, பருவநிலை மாறுபாட்டில் சென்னையில் 17 நாட்களுக்கு இடைவிடாது மழை பெய்கிறது. இந்த மழை, மூலம் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அமெரிக்காவின் மிக்ஸிகன் பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்வின் கூறியபோது, சென்னை மழை வெள்ளத்துக்கு சரியான நகர திட்டமிடல் இல்லாததே முக்கிய காரணம், இது ஒரு படிப்பினை. இயற்கை பேரழிவுக…

  21. ஆப்ரிக்காவில் தற்கொலை குண்டுத் தாக்குதல்! - 27 பேர் பலி [Sunday 2015-12-06 08:00] ஆப்ரிக்கவிலுள்ள மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான சாட் ஏரியில் இருக்கும் தீவு ஒனறில், மூன்று பேர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.நைஜிரியாவை ஒட்டிய நாடுகளில் போக்கோ ஹராமின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர்.லூலூ ஃபௌ எனும் அந்தத் தீவில் நடைபெறும் வாராந்திரச் சந்தையை இலக்கு வைத்தே இந்தத் தக்குதலகள் நடத்தப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். பன்னாட்டுப் படைகள் போக்கோ ஹராமை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராமால் கடந்த மாதம் அந்தப் பிராந்தியத்தில் தொட…

  22. 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டு அங்குள்ள புகுஷிமா அணுசக்தி நிலையத்துக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் அந்த அணுசக்தி நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த அணுக்கழிவுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது இந்த அணுக்கழிவுகள் மெல்ல மெல்ல நகர்ந்து ஜப்பானில் இருந்து 2,574 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அமெரிக்காவின் சென்பிரான்சிஸ்கோ நகர கடற்கரையோர பகுதிக்கு சென்று உள்ளது. இதனால் அமெரிக்கா மிகவும் கவலை அடைந்துள்ளது. ஏனெனில் இந்த அணுக்கழிவு பொருட்களில் சிறிதளவு கதிரியக்கத் தன்மை இன்னும் இருப்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இது அமெரிக்க கடற்பரப்புடன் கலப்பதால் கடல் நீர் மாசுபடுவத…

  23. அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரம்:ஒபாமா கவலை அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாராம் குறித்து அதிபர் ஒபாமா ஆழமான கவலையை வெளியிட்டுளார். நாட்டு மக்களுக்கான தனது வாராந்திர உரையில் இது தொடர்பில் அவர் பேசினார். அமெரிக்க அதிபர் ஒபாமா நாட்டில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்து கவலை வெளியிட்டுள்ளார் சில தினங்களுக்கு முன்னர் கலிஃபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில், படையினர் பயன்படுத்தும் வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, அமெரிக்காவில் ஆபத்தானவர்களின் கைகளில் துப்பாக்கிகள் கிடைப்பது மிகவும் சுலபமானது என்ற துக்ககரமான விஷயத்தை நினைவுபடுத்துவதாக, அதிபர் ஒபாமா தெரிவித்தார். கலிஃபோர்னியா படுகொலைகளை நடத்திய தம்பதிய…

  24. விமான நிலையத்தில் மின்சார கேபிள்கள் இருந்த கட்டுப்பாட்டு அறையில் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விமான சேவை தொடங்குவதில் சிக்கல் நீடித்து வருவதாக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரலாறு காணாத வடக்கிழக்கு பருவமழையின் காரணமாக வெள்ளத்தால் அண்மையில் சென்னை விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் 6 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என்றும் அதுவரை அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளம் தற்காலிக பயணிகள் விமாண நிலையமாக செயல்படும் என்று இந்திய விமான ஆணையம் அறிவித்தது. விமான நிலையத்தில் மின்சார கேபிள்கள் இருந்த கட்டுப்பாட்டு அறையில் புகுந்த மழை நீரை வெளிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.