உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26706 topics in this forum
-
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி; 9 பேர் காயம் மருத்துவமனையை வளாகத்தில் பாதுகாப்பு அதிகாரி | படம்: ஏ.பி. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 3 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர். கொலராடாவில் உள்ளது ஸ்ப்ரிங்ஸ் பெண்களுக்கான பிரத்யேக மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் குடும்பக் கட்டுபாடு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், இந்த மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் பலியாகினர். 5 போலீஸ் உட்பட 9 பேர் காயமடைந்தனர். 5 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்…
-
- 0 replies
- 781 views
-
-
பொதுநலவாய அமைப்பின் முதல் பெண் செயலாளராக ஸ்கொட்லாந்தின் பரோனஸ் பெட்ரீஷியா நியமணம்:- 28 நவம்பர் 2015 மொல்டாவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பொது நலவாய அமைப்பிற்கான புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்கொட்லாந்தின் பரோனஸ் பெட்ரீஷியா என்பவரே புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்ட்டுள்ளர். கடந்த நான்கு வருட காலமாக அந்தப்பதவியில் இருந்த கமலேஷ் சர்மாமாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்தே பரோனஸ் பெட்ரீஷியா செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுநலவாய அமைப்பின் செயலாளராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126371/language/t…
-
- 0 replies
- 593 views
-
-
சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்ற திட்டம்- அம்னெஸ்டி சௌதி அரேபியா பல டஜன் கணக்கானோருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு அச்சம் தெரிவித்திருக்கிறது. I சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டம் - அம்னெஸ்டி 55 பேர் "பயங்கரவாதக் குற்றங்களுக்காக" மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்று ஒக்காஸ் என்ற பத்திரிகை கூறியது. ஆனால் அல் ரியாத் பத்திரிகையில் வெளியாகி, தற்போது நீக்கப்பட்ட செய்தி ஒன்றில், 52 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக்க் கூறப்பட்டிருந்த்து. இதில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட ஷியா முஸ்லீம் பிரிவினரும் …
-
- 1 reply
- 846 views
-
-
- இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாரிஸ் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக பிரான்ஸில் அஞ்சலி - இதனிடையே, ஐரோப்பாவில் இன்றளவில் அதிகம் தேடப்படும் நபரான சலா அப்தஸ்லாமின் நண்பர் பிபிசியிடம் பேசியுள்ளார் ! - குப்பையை சென்றடையும் உணவுப் பொருட்கள் புவி வெப்பமடைவதற்கு காரணமாகி விடுகின்றனவா? ஆராய்கிறது பிபிசி ! - ஊடகங்களில் ஆண்களை விட, குறைவாகத் தெரியும் பெண்கள் - புள்ளிவிபரங்களுடன் பிபிசியின் சிறப்புக் குறிப்பு !
-
- 0 replies
- 859 views
-
-
குண்டூஸ் தாக்குதல்: பொய் சொல்லும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரிலுள்ள எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் (எம்.எஸ்.எப்) வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல், மனித, தொழிநுட்பத் தவறால் ஏற்பட்டது என, ஐக்கிய அமெரிக்காவின் படைகளின் தளபதி ஏற்றுக் கொண்டுள்ளார். இந்தத் தாக்குதல், அருகிலுள்ள தலிபான்களால் கட்டுப்படுத்தப்படும் பகுதியொன்றின் மீது மேற்கொள்ளப்படவே எண்ணப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஒக்டோபர் 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில், வைத்தியர்கள், வைத்திய ஊழியர்கள் உட்பட 30 பொதுமக்கள், உயிரிழந்திருந்தனர். குறித்த விமானத் தாக்குதல், 29 நிமிடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஐக்கிய அ…
-
- 0 replies
- 980 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் குடியேற இனி அகதிகளுக்கு இடமில்லை என பிரான்ஸ் நாட்டு பிரதமரான மேனுவல் வால்ஸ் அறிவித்துள்ளார். ஜேர்மனியில் வெளியாகும் Sueddeutsche Zeitung என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரான்ஸ் பிரதமர், ‘அகதிகளுக்கு புகலிடம் கொடுப்பது தொடர்பாக ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அதிக அளவிலான பிரச்சனைகளை ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வருகின்றன. இனிமேலும் இதனை அனுமதிக்க முடியாது. ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே அவற்றின் தலைவிதியை தீர்மானிக்கும். ஜேர்மனி சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல் பிரான்ஸ் அதிபரை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு…
-
- 1 reply
- 903 views
-
-
மால்டா காமன்வெல்த் உச்சி மாநாடு துவங்கியது பிரிட்டிஷ் மகாராணி எலிஸபெத் தலைமையில் 53 நாடுகளின் அரச தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர் 24-வது காமன்வெல்த் உச்சி மாநாடு மால்டாவில் துவங்கியுள்ளது. பிரிட்டிஷ் மகாராணி எலிஸபெத் தலைமையில் 53 நாடுகளின் அரச தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். கடும்போக்கு தீவிரவாதத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உள்ளிட்ட விடயங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளன. பருவநிலை மாற்றம் தொடர்பான விடயங்களும் இம்முறை மாநாட்டில் பேசப்படவுள்ளன. உலகின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் காமன்வெல்த் உறுப்பு நாடுகளில் வாழ்கின்றனர். காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடு அல்லாத பிரான்ஸின் அதிப…
-
- 0 replies
- 560 views
-
-
துருக்கி விமானத்தை தகர்க்க ரஷ்யா வியூகம்: சிரியாவில் அதிநவீன போர்க்கப்பல் ரோந்து ரஷ்யாவின் அதிநவீன எஸ்-400 ஏவுகணை. (கோப்புப்படம்) ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பழிக்குப் பழியாக துருக்கு போர் விமானத்தை தகர்க்க ரஷ்யா வியூகம் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்ய விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய போர் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ளது. ‘ரஷ்யாவின் முதுகில் துருக்கி குத்திவிட்டது, இதனை மன்னிக்க முடியாது: என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்க…
-
- 0 replies
- 749 views
-
-
ஐஎஸ்ஐஎஸ்-ன் இணையதளத்தை காலி செய்த வயாகரா..! தொடர் தீவிரவாத தாக்குதல்களால் உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், சின்ன வயாகரா விளம்பரம் ஒன்றை பார்த்து கலங்கிப் போயிருக்கிறது. எதிர்பாராத வகையில் அடுக்கடுக்காக தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவது, பிரபல நிறுவனங்களின் இணையப் பக்கங்களை முடக்குவது, அப்பாவி பிணைக் கைதிகளின் கழுத்தை அறுத்து அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றுவது என ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் செய்யும் ஒவ்வொரு செயலும் கொஞ்சம் கூட யாராலும் சகிக்கவும், கணிக்கவும் முடியாதது. ஆனால் இந்த முறை அந்த இயக்கத்தாலேயே கணிக்க முடியாத விஷயம் ஒன்று அதனுடைய இணையதளப் பக்கத்திற்கு நடந்தேறியிருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் மிகவும் பழமைவாத கொள்கைகளை பின்…
-
- 0 replies
- 658 views
-
-
புர்கா அணிந்தால் 13 லட்சம் ரூபா அபராதம்; சுவிஸ் பிராந்தியமொன்றில் புதிய சட்டம் சுவிட்ஸர்லாந்தின் பிராந்தியமொன்றில் புர்கா, நிகாப் அணிபவர்களுக்கு சுமார் 13 லட்சம் ரூபா அபராதம் விதிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்தின் தென்பிராந்தியத்திலுள்ள “டிசினோ” எனும் பிராந்திய நாடாளுமன்றமே இச்சட்டமூலத்தை கடந்த திங்கட்கிழமை நிறைவேற்றியுள்ளது. இதன்படி டிசினோ பிராந்தியத்தில் கடைகள், உணவகங்கள், பொதுக் கட்டடங்கள் உட்பட பொது இடங்களில், முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவது குற்றமாகும். இத்தடையை மீறி புர்கா, நிகாப் ஆடைக…
-
- 0 replies
- 786 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 61வது பிறந்த நாள் சென்னையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலர் வைகோ இனிப்பு வழங்கி பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடினார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நவ.26. அந்த இயக்கத்தின் உயிர் நீத்த போராளிகளை நினைவுகூறும் மாவீரர் நாள் நவ. 27. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்துக்கு முன்னர்வரை விடுதலைப் புலிகள் ஆட்சி செய்த பகுதிகளில் இந்நிகழ்வுகள் ஒரு வாரகாலம் கடைபிடிக்கப்படும். நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம். 2009-க்குப் பின்னரும் தமிழகம் மற்றும் ஈழத் தமிழர் வாழும் நாடுகளில் பிரபாகரன் பிறந்த நாளும் மாவீ…
-
- 1 reply
- 737 views
-
-
ஜப்பானியத் தமிழறிஞர் நொபோரு கரஷிமா காலமானார் I ஜப்பானிய தமிழறிஞர் நொபுரு கரஷிமாவுடன் , இக்கட்டுரையின் ஆசிரியர் , சிகாகோ பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் டாக்டர் ஈ.அண்ணாமலை நொபோரு கரஷிமா ஒரு வரலற்று அறிஞர். தமிழக வரலாற்றை வித்தியாசமான கோணத்தில் பார்த்து எழுதிய அறிஞர். சமூகம் எப்படி இயங்கியது, எப்படி மாறியது என்பது தெரியாமல் அரசியல் வரலாற்றை – ஆட்சி வரலாற்றை- புரிந்துகொள்ள முடியாது என்னும் கொள்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். தமிழகத்தின் மன்னர் ஆட்சிகளைப் பேரரசுகளின் ஆட்சிகளாகப் பார்த்து வரலாறு எழுதிய பழைய தலைமுறை வரலாற்று ஆய்வாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தமிழக வரலாற்றைப் பார்த்தவர். இன்றைய தமிழ்த் தேசியத்துக்கு உரம் போடும் செய்திச் சுரங்கமாக …
-
- 0 replies
- 1k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… -ஆப்கானிஸ்தானில் முப்பது பேர் பலியான, மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு 'மனிதத் தவறே' காரணம் என்று அமெரிக்க இராணுவம் ஒப்புக்கொண்டது - மீண்டும் சுயாதீன விசாரணை கோருகிறது எம் எஸ் எஃப். -சிறார் திருமண வழக்கத்தை ஒழிக்க ஆப்பிரிக்க ஒன்றியம் முயலும் நிலையில், யுகாண்டாவில் பதினாலு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்ட சகோதரிகள் இருவரைச் சந்தித்தது பிபிசி! உலகில் பெண்கள் முன்னிருந்து செய்யும் அத்தியாவசிய பணி! -மருத்துவ செவிலியர் வேலையில் பெண்களின் பங்கு பற்றிய சில சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள்! கம்ப்யூட்டர் அனிமேஷனில்...
-
- 0 replies
- 688 views
-
-
75% கல்லீரல் செயலிழந்த நிலையில் அமிதாப்பச்சன்: அதிர்ச்சி தகவல்! தனக்கு 75% கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக அமிதாப்பச்சன் தெரிவித்துள்ள தகவலால் பாலிவுட் உலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ஹெபடைடிஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் அமிதாப்பச்சன். அதில் பேசிய அவர், "கூலி என்ற திரைப்படத்தில் நடித்தேன். அப்போது மோசமான விபத்து ஒன்று நேர்ந்தது. சுமார் 200 பேரிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டு, 60 பாட்டில்களுக்கும் அதிகமாக எனது உடலில் ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் நான் உயிர் பிழைத்தேன். 2004ல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது ஹெபடைடிஸ்-பி வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. எப்படி என மருத்துவர்கள் ஆராய்ந்தபோது, எனக்கு ஏற்…
-
- 0 replies
- 820 views
-
-
விமானத்தில் பிரசவம் பார்த்த முன்னாள் பிரஞ்சு அமைச்சர் விமானத்தில் பிரசவம் பார்த்த பிரெஞ்சு முன்னாள் அமைச்சர் பிலிப் தூஸ்த் ப்ளேசி முன்னாள் பிரெஞ்சு கேபினட் அமைச்சர் ஒருவர், அவர் இயல்பாகச் செய்யும் அரசியல் வேலைகளைத் தாண்டி, 9,000 மீட்டர் உயரத்தில் மற்றொரு உதவியையும் செய்யவேண்டிக் கோரப்பட்டார். ஆம், பிலிப் தூஸ்த் பிளேசி என்ற அந்த முன்னாள் சுகாதார அமைச்சர், விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, பயணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட, அவர் தனது பழைய தொழிலான மருத்துவர் தொழிலுக்கு மாறி ,பிரசவம் பார்த்தார். பிரான்சிலிருந்து சாட் நாட்டுக்கு இந்த ஏர் பிரான்ஸ் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட, விமானப் பணியாளர்கள் விமானத்தில் யாரேனும…
-
- 0 replies
- 613 views
-
-
ரஷ்ய போர் விமானத்துக்கு ரேடியோ வழியாக எச்சரிக்கை விடுத்த துருக்கி ( ஆடியோ) துருக்கி வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு முன், அந்த விமானத்துக்கு ரேடியோ வழியாக பல முறை எச்சரிக்கை விடுத்ததாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான ஆடியேவையும் துருக்கி அரசு வெளியிட்டுள்ளது. அதில், '' நீங்கள் துருக்கி வான் எல்லைக்குள் நுழைந்துள்ளீர்கள். உடனடியாக தெற்கு நோக்கி பயணத்தை மாற்றுங்கள்என்று ஆங்கிலத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது, இது போல் 10 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரே, அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தற்போது துருக்கி அரசு தெரிவித்துள்ளது. வீழ்த்தப்பட்ட விமானம் ரஷ்யாவின் சுகோய்- …
-
- 4 replies
- 777 views
-
-
சமூக ஊடகங்களில் பூனை படத்தை வெளியிட்டு ஐஎஸ் தீவிரவாதிகளை குழப்பிய பெல்ஜியம் மக்கள் பெல்ஜியம் மக்கள் ‘ட்விட்டரில்’ ஐஎஸ் தீவிரவாதிகளை பூனைகளாக சித்தரித்து பதிவேற்றிய பல்வேறு வகையான படங்கள். பெல்ஜியத்தில் தீவிரவாதிகளை தேடும் பணிக்காக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் அச்சம் அடையாமல் சமூக ஊடகங்களில் பூனைப் படங்களை பதிவேற்றி ஐஎஸ் தீவிரவாதிகளை குழப்பியி ருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13-ம் தேதி இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 …
-
- 0 replies
- 729 views
-
-
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது. தற்போது இவரை போலவே தன்னை நவீன நாஸ்டர்டாம்சாக கருத்தி கொள்ளும் பாஸ்டர் ரிக்கார்டோ சல்சா வயிற்றில் புளியை கரைக்கும் பல தகவல்களை கூறி உள்ளார். இதற்கு முன்னர் இவர் கூறி உள்ளது ஏதாவது…
-
- 1 reply
- 762 views
-
-
கனடா பல்கலை.,யில் இலவசமாக நடத்தப்பட்டு வந்த வாராந்திர யோகா பயிற்சி வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யோகா, கலாச்சார மாறுபடுகளை ஏற்படுத்துவதாகவும், கலாச்சாரம் குறித்த பல்வேறு சர்ச்சைகளை கிளப்பும் வகையில் இருப்பதாலும் யோகாவிற்கு தடை விதித்திருப்பதாக ஒட்டோவா பல்கலை., மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=145639&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 649 views
-
-
சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட பிரசுரங்களின் எண்ணிக்கை குறைப்பு சிங்கப்பூர் அரசு அந்நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கும் 250க்கும் மேற்பட்ட பிரசுரங்களின் எண்ணிக்கையை 17ஆகக் குறைத்திருக்கிறது. இப்போது தடை விலக்கப்பட்ட புத்தகங்களில் , 1748ம் ஆண்டில் முதலில் பிரசுரிக்கப்பட்ட ஆங்கில சிருங்கார நாவலான "ஃபேனி ஹில்"லும் அடங்கும். "தெ லாங் மார்ச்" என்ற கம்யூனிச புத்தகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கப்பட்டிருக்கிறது. ஆனால், செக்ஸ் சஞ்சிகைகளான, 'பிளேபாய்' மற்றும் 'ஹஸ்லர்' போன்றவை மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. அதே போல "ஜெஹோவாவின் சாட்சிகள்" கிறித்தவ மதப் பிரிவின் பிரசுரங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையும் நீட…
-
- 0 replies
- 326 views
-
-
துருக்கி எல்லைக்கு ஏவுகணைகளை அனுப்பியது ரஷ்யா: மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்! மாஸ்கோ:ரஷ்யாவின் போர் விமானத்தை துருக்கி நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஏவுகணைகளை துருக்கி-சிரியா எல்லைக்கு ரஷ்யா அனுப்பியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் போர் விமானம் ஒன்று நேற்று துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. அப்போது அந்த விமானத்தை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. தங்களது வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால்தான் ரஷ்யாவில் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக துருக்கி தெரிவித்தது. ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற…
-
- 4 replies
- 2.2k views
-
-
http://www.bbc.com/tamil/global/2015/11/151125_raqqavt
-
- 0 replies
- 765 views
-
-
அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கியுடன் இணைந்து ஐ.எஸ்.ஸுக்கு எதிராக போரிடத் தயார்: ரஷ்யா நவ.20-ம் தேதி வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் சிரியாவில் ஆல்-ஆசாத்துக்கு எதிரான புரட்சிக் குழுக்கள் மீது ரஷ்யா தாக்குதல். படம்: ஏ.பி. அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபடத் தயார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய போர் விமானத்தை துருக்கி ராணுவம் செவ்வாய்க்கிழமை சுட்டு வீழ்த்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் ஓர்லோவ் பாரீஸில் கூறும்போது, “ஐஎஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் மீது தாக்க…
-
- 0 replies
- 585 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - 'திட்டமிட்டு ஆத்திரமூட்டும் செயல்'- தங்களின் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி மீது ரஷ்யா காட்டம்! அதேநேரம், தங்களின் விமானி ஒருவர் மீட்கப்பட்டதாக ரஷ்யா உறுதி! - பிபிசியின் நூறு பெண்கள் தொடர் வரிசையில், ஐ எஸ் ஆயுததாரிகளின் தலைநகரமான ரக்காவிலிருந்து தப்பித்த ஒரு பெண்ணின் சோகக் கதை! - பிரசிலில் அண்மையில் அணையொன்று உடைய, நீராதாரமாகவும் வாழ்வாதாரகவும் விளங்கிய நதியை பறிகொடுத்து நிற்கும் பழங்குடியின மக்கள்!
-
- 0 replies
- 973 views
-
-
ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி அடித்துக்கொலை ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிரியா- ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல்வேறு நாடுகளில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷ்யாவும் சிரியாவுக்கு ஆதரவாக விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உலக நாடுகளின் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு…
-
- 0 replies
- 586 views
-