Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆஸ்ரேலியாவில் முஸ்லிம்களுக்காக புதிய கட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கட்சிக்கு "ஆஸ்திரேலிய முஸ்லிம் கட்சி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேற்கு சிட்னியில் நடைபெற்ற கட்சித் தொடக்க விழாவில், கட்சி நிறுவனர் தியா முகமது கூறியதாவது:நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்யும் நோக்கில் ஆஸ்திரேலிய முஸ்லிம் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.அடுத்த பொதுத் தேர்தலில் அனைத்து மாகாணங்களிலும் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். ஆஸ்திரேலியாவில் நான்கைந்து கட்சிகள் முஸ்லிம் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்களின் கு…

  2. பெண்கள் பலரை 30 வருடங்களாக பாலியல் அடிமைகளாக தடுத்துவைத்ததாக பிரிட்டனில் வசிக்கும் தோழர் பாலாவுக்கு எதிராக வழக்கு பிரிட்­டனில் வசிக்கும் இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த நபர் ஒருவர் பெண்கள் பலரை அடி­மை­க­ளாக வைத்­தி­ருந்­த­தா­கவும் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். அர­விந்தன் பால­கி­ருஷ்ணன் எனும் இந்­நபர் தனது சொந்த மக­ளையே 30 வரு­டங்­க­ளாக வீட்டில் அடைத்­து­ வைத்தி­ருந்­ததாக பிரித்­தா­னிய வழக்குத் தொடு­நர்கள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். 75 வய­தான பால­கி­ருஷ்­ணனுக்கு எதி­ரான வழக்கு பிரித்­தா­னிய நீதி­மன்­றத்தில் தற்­போது நடை­பெற்று வரு­கி­றது. …

  3. ஐ.எஸ்.தீவிரவாதிகள் "கொலைவெறி மனநோய்" கொண்டவர்களா? பாரிஸில் வெள்ளிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி,இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) தீவிரவாதிகளை, "கொலைவெறி மனநோய் பிடித்த அரக்கர்கள்" ( psychopathic monsters) என்று வர்ணித்திருந்தார். ஆனால் "கொலைவெறி மனநோய் பிடித்தவர்" (psychopath) என்பதன் பொருள் என்ன ? லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியின் டெவெலப்மெண்டல் சைக்கோபெத்தாலஜி துறைப் பேராசிரியரான, எஸ்ஸி வைடிங் அவர்கள் பிபிசியிடம் இது குறித்து பேசினார். "கொலைவெறி மனநோய்" பிடித்த ஐ.எஸ்-- ஜான் கெர்ரி வெள்ளிக்கிழமை , தீவிரவாதிகள் பாரிஸில் குறைந்தது 129 பேரைக் கொன்று, மேலும் நூற்றுக்கணக்கானோரைக்…

  4. பாரீசில் மீண்டும் துப்பாக்கிச் சூடு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 13–ம் திகதி இரவு தீவிரவாதிகள் ஹோட்டல், கேளிக்கை விடுதி உள்ளிட்ட 6 இடங்களில் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டனர். அதில், 129 பேர் பலியாகியதோடு, 352 பேர் காயம் அடைந்தனர். இந்த தொடர் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஈவு இரக்க மற்ற இத் தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன. தாக்குதலின் போது தீவிரவாதிகளுடன் பிரான்ஸ் பொலிசார் தாக்குதல் நடத்தி அதில், ஈடுபட்ட 8 பேரை சுட்டுக் கொன்றனர். அவர்கள் குறித்த அடையாளம் தெரிந்தது. இவர்கள் அகதிகள் போர்வையில் கிரீஸ் வழியாக பிரான்சுக்க…

  5. மேகி நூடுல்ஸூக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான நிறுவனம், பதஞ்சலி நூடுல்ஸை அறிமுகம் செய்துள்ளது.நெஸ்லே இந்தியா நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்சில் காரீயமும், ரசாயன உப்பும் அதிகம் கலக்கப்பட்டுள்ளதாக கூறி அதன் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்திருந்தது. இந்த தடையை மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்ததை அடுத்து 5 மாதங்களுக்கு பிறகு மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.இந்த நிலையில், மேகிக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம் நூடுல்ஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகளையும் தயாரித்து வருகிறது. …

  6. அமெரிக்காவிலும் கனடாவிலும் அவசரமாக தரையிறக்கப்பட்டது பிரான்ஸ் விமானங்கள் அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நோக்கிச் சென்ற இரண்டு பயணிகள் விமானங்கள் அச்சுறுத்தல் காரணமாக திசைதிருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து பாரிஸ் நோக்கிச் சென்ற ஒரு விமானம் கனடா நாட்டில் உள்ள ஹலிபாக்ஸ் நகருக்கும், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து பாரிஸ் நோக்கிச் சென்ற மற்றொரு விமானம் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சால்ட் லேக் நகரத்துக்கும் திசைதிருப்பி அனுப்பப்பட்டுள்ளன. பாரிஸ் தாக்குதலையடுத்து உலகம் முழுவதும் பதற்றத்துடன் இருக்கும் நிலையில் இந்த சம்பவம் இடம்இபற்றுள்ளது. இந்த இரண்டு விமானங்களுக்கும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் வி…

  7. மருத்துவரின் அலட்சியம்: பிரசவத்தின்போது தனியாக பிய்ந்து வந்த குழந்தையின் தலை! உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கடந்த 15-ம் தேதி, 32 வயதுடைய நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அன்று மாலை அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவே, மருத்துவரும் சில நர்சுகளும் பிரசவம் பார்த்து உள்ளனர். அப்போது, அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வர சிரமப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மருத்துவர் அந்த குழந்தையை தாயின் வயிற்றில் இருந்து பலமாக இழுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த குழந்தையின் தலை மட்டும் பிய்ந்து தனியாக வந்திருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவரும், நர்சுகளும், பதறிப்போய் கு…

  8. பிரான்ஸ் தாக்குதல் நெஞ்சை உருக்கும் வீடியோ! பிரான்சில் கடந்த வாரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 132 பேர் கொல்லப்பட்டனர். ªªªªªªªªª இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பிரான்சின் 'லே பெடிட் ' பத்திரிகை குழந்தைகளிடம் கருத்து கேட்டது. அதற்கு ஒரு குழந்தை அளிக்கும் பதில் மனதை உருக்கும் விதத்தில் இருக்கிறது. அந்த வீடியோ காட்சிதான் மேலே நீங்கள் காண்பது... http://www.vikatan.com/news/article.php?aid=55213

  9. ஐஎஸ் அமைப்பின் மீது ரஷ்யாவின் கவனம் திரும்ப வேண்டும்: ஒபாமா வலியுறுத்தல் ஒபாமா. | படம்: ராய்ட்டர்ஸ். பாரீஸ் தாக்குதல்களுக்குப் பிறகே ரஷ்யா தனது கவனத்தை ஐஎஸ் பயங்கரவாதம் குறித்து திருப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். மனிலாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஒபாமா, இது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் விவாதிக்கவுள்ளதாக தெரிவித்தார். சிரியா அகதிகளை அமெரிக்கா வரவேற்பது பற்றி, இடர்ப்பாடு குறித்த அதீதமான மற்றும் ஆவேசமான, பீதியும் வெறியும் நிறைந்த எதிர்ப்புகள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து வெளிவருவதை ஒபாமா கண்டித்தார். "இவ்வகையான எதிர்வினைகள் நிறுத்தப்பட வேண்டும், உலகம் நம்ம…

  10. விமானத்தை அழித்தவர்கள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துத் தண்டிப்போம்: ரஷ்ய அதிபர் ஆவேசம்! மாஸ்கோ: ரஷ்ய விமானத்தைத் தாக்கி அழித்த தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துத் தண்டிப்போம் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் கடந்த 31 ம் தேதி புறப்பட்ட ஏர்பஸ் ஏ–321 ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான பகுதி, ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதியாகும். அந்த விமானத…

  11. பயங்கரவாத எதிர்ப்பு பயணப்பட வேண்டிய பாதை! தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல், ‘இஸ்லாமிய அரசு’ (ஐஎஸ்) அமைப்புக்கு எதிராக இணைந்து செயல்பட்டாக வேண்டிய அவசியத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஐஎஸ் பயங்கரவாதிகள் இதுவரை நிகழ்த்தியுள்ள தாக்குதல்களின் எண்ணிக்கையையும் தீவிரத்தையும் கணக்கில்கொண்டு எல்லா வல்லரசுகளும் இணைந்தும் விரைவாகவும் நடவடிக்கை எடுத்தாக வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில், துருக்கியின் அன்டால்யா நகரில் கூடிய ஜி-20 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பானது இதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் கூடிய கூட்டத்தில் இப்பிரச்சினை உடனடியாக அவர்களுடைய கவனத்தை ஈர்த்திருப்பதும்…

  12. கிரீஸ் நாட்டில் கடும் நிலநடுக்கம் கிரீஸ் நாட்டின் மேற்கு தீவான லெஃப்கடாவில் நேற்று 6.1 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 2 பெண் கள் உயிரிழந்தனர். ஏதென்ஸ் நகரில் இருந்து மேற்கே சுமார் 300 கி.மீ. தொலை வில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.10 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு கிரீஸ் முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. லெஃப்கடா மற்றும் அதை யொட்டிய கெஃபலோனியா தீவுகளில் கட்டிடங்கள் குலுங்கிய தால் மக்கள் பீதியடைந்து, அவற் றில் இருந்து அவசர அவசர மாக வெளியேறினர். நிலநடுக்கத் தில் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் மேற்கு கிரீஸில் இருந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்துள் ளனர். போன்டி வாஸ்லிகி பகுதியில் …

  13. குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல்:ஜெர்மனியில் கால்பந்து போட்டி ரத்து ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடைபெறவிருந்த சர்வதேச கால்பந்து போட்டி குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Image caption ஹானோவர் கால்பந்து விளையாட்டு அரங்கத்தில் ஜெர்மனிய பொலிசார் அந்தப் போட்டி ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு இடையே நடைபெறவிருந்தது. ஹானோவர் நகர் முழுவதற்கும் ஆபத்து இருப்பதாக திடமாக உணரப்பட்டது என நகரின் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். அந்த கால்பந்து போட்டி நடைபெறுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னர், அரங்கிலிருந்த ரசிகர்கள் அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறையினர் உத்தரவிட்…

  14. பெய்ருட்டின் 'ஹீரோ" பிரான்ஸ் தலைநகர் பரிஸிலும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும் இடம்பெற்ற மோசமான தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்நகரங்கள் மீதும் ஆயுதக் குழுக்கள் மீதும் உலகின் கவனம் திரும்பியுள்ள நிலையில், பெய்ரூட்டைச் சேர்ந்த ஒருவர், கதாநாயகனாகப் போற்றப்படுகிறார். 32 வயதான அடேல் டேர்மொஸ், தனது வாழ்க்கையைப் பணயம் வைத்து, தற்கொலைக் குண்டுதாரியிடமிருந்து ஏனையோரைப் பாதுகாத்தமைக்காகவே கதாநாயகனாகப் போற்றப்படுகிறார். அடேல் டேர்மொஸ், தனது பெண் குழந்தையுடன் தென் லெபனானிலுள்ள ஷியா பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட போது, வெளியே ஏற்பட்ட சத்தத்தைத் தொடந்து, அது என்னவெனப் பார்க்க வெளியே வந்துள்ளார். அதன்போது, தற்கொலை அங்கியணிந்த குண்டுதாரியொ…

  15. 'அகதியின் அடையாளத்தில்' வந்த பாரிஸ் குண்டுதாரி <iframe width="400" height="500" frameborder="0" src="http://www.bbc.com/tamil/global/2015/11/151117_leros_bomber/embed"></iframe> பாரிஸில் தற்கொலை தாக்குதலை நடத்தியிருந்தவர்களில் ஒருவர் அஹ்மெட் அல் மொஹமட் என்று பிரான்ஸ் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இவர் சிரியாவிலிருந்து வந்தவர் என்று கிரேக்கத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர். லெரோஸ் தீவு வழியாக மஸிடோனியாவை கடந்து, சேர்பியாவுக்கு போயிருக்கிறார். பின்னர் அங்கிருந்து குரோயேஷியா வழியாக ஹங்கேரிக்கு சென்றிருக்கிறார். பின்னர், ஆஸ்திரியாவுக்கு போனதாக நம்பப்பட்ட அவர், கடைசியில் பிரான்ஸின் பாரிஸ் நகரி…

  16. ஐ எஸ் அமைப்பு மீது ரஷ்யா கூடுதல் தாக்குதல் இஸ்லாமிய அரசு என்று தம்மை கூறிக் கொள்ளும் அமைப்பின் மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையாக கூடுதல் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக ரஷ்யா கூறுகிறது. ஐ எஸ் அமைப்பினர் மீது அதிகரித்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன அவர்களுக்கு எதிராக நீண்டதூர ஏவுகணைகளையும் குண்டு வீச்சுக்களையும் நடத்தியுள்ளது என பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளியான தகவல்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கோ உறுதிப்படுத்தியுள்ளார். ஐ எஸ் அமைப்பினர் பலமாக இருக்கும் ரக்கா மற்றும் டியர் எஸ் ஸார் பகுதிகளிலுள்ள அவர்களின் இராணுவ நிலைகள் மீது தமது விமானங்கள் ஏவுகணைகளை வீசின என்றும் வடக்குப் பகுதியில் குண்டு வீச்சுக்கள் நடைபெற்ற…

  17. எங்கிருந்து வருகிறது ஐ.எஸ் அமைப்புக்குப் பணம் ? Image caption அபு பக்கர் அல் பாக்தாதி - இஸ்லாமிய அரசு அமைப்பின் தலைவர் பாரிஸில் தங்கள் அமைப்புதான் 129 பேர் கொல்லப்பட்ட தாக்குதல்களை நடத்தியது என்று இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாத அமைப்பு கூறியிருக்கிறது. இந்த ஐ.எஸ் அமைப்புக்கு எங்கிருந்து பணம் வருகிறது? வெள்ளிக்கிழமை நடந்த பாரிஸ் தாக்குதல்களை அடுத்து மீண்டும் ஒருமுறை உலகின் கவனம் இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் மேல் வந்திருக்கிறது. இந்த அமைப்பின் தீவிரவாதிகள் பாரிஸ் தாக்குதல்களைத் தாங்கள்தாம் செய்தோம் என்று கூறியிருக்கிறார்கள். உலகின் மிகப் பணக்கார தீவிரவாதக்குழுவாக இஸ்லாமிய அரசு குழு கருதப்படுகிறது. இது இர…

  18. பாரிஸ் படுகொலைகள்:இசை அரங்கில் நடந்தது என்ன? Reuters உயிர் பிழைத்த ஒருவர்-ரத்த வெள்ளத்தில் bbc AFP முதல் பலிகள் வெளியே இருந்த மதுபானக் கடையில் இடம்பெற்றன. EPA தாக்குதலில் தப்பித்த சிலர் Reuters நூலிழையில் உயிர் பிழைத்தவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் காவல்துறையினர் AFP பலரின் உயிரை காப்பாற்…

  19. ஐ.எஸ் அமைப்புக்கு பிரான்ஸ் பதிலடி சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 14-ம் திகதி நள்ளிரவு பாரிஸில் உள்ள கலையரங்கம், உணவு விடுதி, கால்பந்து மைதானத்தை ஒட்டிய பகுதி என ஆறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்நிலையில் பாரிஸில் நடத்தபப்ட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://tamil.adaderana.lk/ne…

  20. ரஷிய விமானம் மீதான தாக்குதல்: தகவல் வழங்கினால் பெருந்தொகை சன்மானம் எகிப்தின் சினாய் தீபகற்பகத்தில் 224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் வெடித்து சிதறி விழுவதற்கு காரணமான தீவிரவாதிகள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 5 கோடி அமெரிக்க டொலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என ரஷியா அறிவித்துள்ளது. எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் கடந்த 31–ம் திகதி புறப்பட்ட ஏர்பஸ் ஏ–321 ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான பகுதி, ஐ.எஸ். தீவிர…

  21. ஜி-20 மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக துருக்கி நாட்­டுக்கு வந்­துள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மாவும் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டினும் திடீ­ரென சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்­ளார்கள். கடந்த மாதம் சிரி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக ரஷ்யா தாக்­குதல் நடத்த தொடங்­கி­யது முதல் அமெ­ரிக்­க­ாவிற்கும் ரஷ்யாவிற்குமான உறவில் விரிசல் ஏற்பட தொட ங்கியது. உலகின் இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் அச்சம் நிலவிவந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஜி-20 நாடுகளின் மாநாட்டின் போது ஒபாமாவும் புட்டினும் திடீரென சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தி யுள்ளனர். இதில் சிரியா பிரச் சினை பற்றி அதிகம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. http://www.vir…

  22. ஐஎஸ் இன் அடுத்த இலக்கு வொஷிங்டன்; வீடியோ வௌியீடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடர் தாக்குதல் நடத்தியது போன்று வாஷிங்டனிலும் தாக்குதல் நடத்தப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். ஐ..எஸ்.ஐ.எஸ். இயக்கம் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு பிரான்ஸுக்கு ஏற்பட்ட நிலை தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பைவிட வலிமை பெற்றுள்ளதால் தங்களின் வருகையை யாராலும் தடுக்க முடியாது என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டல் வீடியோ ஈராக்கில் பாக்தாத் வடக்கு பகுதியில் உள்ள சலாசுதீன் மாகாணத்தில் இருந்து வெளியிடப்பட்…

  23. விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் காலமானார்! புதுடெல்லி: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்தவர் அசோக் சிங்கால் (89). கடந்த ஒரு வாரத்திற்கு முன் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (14-ம் தேதி) அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 2.24 மணிக்கு அவர் காலமானார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு போ…

  24. '40 நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி!' மாஸ்கோ: உலகில் உள்ள நாடுகளில் 40 நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு நிதியுதவி வழங்குகின்றன என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஞாயிறன்று பாரீஸ் நகரில் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை அழித்துவிட உலக நாடுகள் தீவிரமாகியுள்ளன. இதனையடுத்து ஃபிரான்ஸ் நாட்டு வான்படை, சிரியாவில் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த வியூகங்களை தொடர்ந்து வகுத்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் சுமார் 40 நாடுகள் …

  25. ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை: ஆவணங்களை வெளியிட்டு சுப்பிரமணியன் சுவாமி 'திடுக்' குற்றச்சாட்டு! புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்று பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பாக சில ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இந்த குற்றச்சாட்டைக் கூறிய பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, பிரிட்டனை சேர்ந்த Backops Limited என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு ஆண்டறிக்கையில் ராகுல் காந்தி தன்னை ஒரு பிரிட்டிஷ் பிரஜை எனக் குறிப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.