Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லக்னோ உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் ’தரம் ஜக்ரன் சமிதி’ என்ற இந்து அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட கடிதம் உத்தரப்பிரதேச மாநிலத் தின் பல இடங்களில் வினியோகிக்கப்பட்டது. அதில் இந்துவாக மாறும் கிறிஸ்தவருக்கு ரூ.2 லட்சமும், முஸ்லீம்க்கு ரூ. 5 லட்சமும் அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் தேதி இல்லை. இந்து அமைப்பின் நிர்வாகி ராஜேஸ்வர் சிங் பெயரும், செல்போன் எண்ணும் இருந் தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது அது செயல்படாமல் ’சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந் தது. இந்துக்களாக இருந்து பிற மதத்திற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் சொந்த மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி அலிகாரில் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதில் மாநிலத…

  2. புதுடெல்லி, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயை தேச பக்தர் என பாரதீய ஜனதா எம்.பி. புகழ்ந்து பேசிய சர்ச்சையால், டெல்லி மேல்–சபையில் அமளி ஏற்பட்டது. கோட்சேவுக்கு புகழாரம் மராட்டிய மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாரதீய ஜனதா எம்.பி., சாக்ஷி மகாராஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர், ‘‘கோட்சே வேதனைக்குள்ளான ஒரு மனிதர். அவர் தவறுதலாக சில காரியங்களை செய்திருக்கலாம். ஆனால் அவர் தேச விரோதி அல்ல. அவர் ஒரு தேசபக்தர்’’ என கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்தப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. உடனே அவர், ‘‘கோட்சேயை நான் தேசபக்தராக பார்க்கவில்லை. நான் ஏதாவது தவறாக கூறி இருக்கலாம்’’ என …

  3. எஸ்பல்காம்ப்: ஜெர்மனியில் உள்ள எஸ்பல்காம்ப் என்ற நகரில் உள்ள சூதாட்ட விடுதியில் சிவபெருமான் பெயரால் சூதாட்டம் நடத்தப்பட்டது. இதை அறிந்து அப்பகுதியில் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்துக்களின் இந்த எதிர்ப்புக்கு கிறிஸ்தவர்களும் யூதர்களும் புத்த மதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, நவேதாவில் உள்ள ஐக்கிய கிறிஸ்தவ சர்ச்சின் பாஸ்டர் மறைதிரு. ரிச்சர்டு எல்.ஸ்மித் இது குறித்து கூறுகையில், சூதாட்ட இயந்திரங்களில் சிவபெருமான் படம் பொறிக்கப்பட்டது தங்கள் மத உணர்வை பாதிப்பதாக உள்ளதென இந்துக்கள் தெரிவித்துள்ள எதிர்ப்புக்கு நான் ஆதரவளிக்கிறேன். இவ்வாறு இந்து கடவுளின் பெயரையோ படத்தையோ சூதாட்டத்தில் பயன்படுத்துவது பொருத்தமற்ற செயல். எனவே, இந்த சூதாட்ட விடுதியின…

  4. சீனாவின் வடபகுதியில், ஹெபேய் என்னும் மாகாணத்தில் சீனர்களை திருமணம் செய்த வியட்நாமிய பெண்கள் நூற்றுக்கும் அதிகமானோரை காணவில்லை. கிராமப்புறங்களில் உள்ள வறிய சீன ஆண்களை திருமணம் செய்த இந்தப் பெண்களை சீனப் போலிஸார் தற்போது தேடி வருகின்றனர். இந்த பெண்களை சீனர்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவியை பெண் கல்யாணத் தரகரையும் காணவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த திருமண ஏற்பாடுகளுக்காக இந்த தரகர் ஒவ்வொரு பெண்ணுக்கும் 16,000 டாலர்கள் வரை தரகுப் பணம் பெற்றிருக்கிறார். இந்தப் பெண்கள் ஒட்டுமொத்தமாக காணாமல் போனது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று உள்ளூர் மாகாண அதிகாரி ஒருவர் செய்தி ஊடகங்களுக்கு கூறியுள்ளார். சீன ஆண்கள், சீனப் பெண்களை திருமணம் செய்வதாயின் அவர்களுக்க…

  5. பிபிசி 2014 ஆம் ஆண்டிற்கான மிகவும் வியப்பளிக்கக்கூடிய விமானப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பிபிசி ஆண்டுதோறும் மிகவும் வியப்பளிக்கக்கூடிய விமானப் புகைப்படங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அந்த ஆண்டிற்கான சிறந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்தியா, நயகரா வீழ்ச்சி உள்ளிட்ட புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பிரஞ்சு பொலினீசியாவில் உள்ள பவளத் தோட்டம்... ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரம்... இந்தியாவின் பதேக்பூரில் உள்ள சிக்ரி கோவில்... பாக்கிஸ்தானின் காரகோரத்தில் உள்ள பால்டோரோ பனியாறு இங்கிலாந்தின் பிரைட்டனில் ஒரு சூரிய அஸ்தமனத்தின் போது... கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் சிறுவர்கள் விளையாட தயா…

  6. அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றும் போது, யோகாவின் பயன்கள் குறித்து விரிவாக விளக்கினார். இதை தொடர்ந்து, வரும் ஆண்டு முதல் ஜூன் 21&ம் தேதி சர்வதேச யோகாதினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மன அழுத் தங்களை போக்குவதற்கு உடல், மனம் மற்றும் ஆன்மிக பயிற்சியாக யோகா சனம் பயன்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு மனிதனின் மன அழுத்தங்கள் அகல்வதுடன், பல்வேறு உடல் உபாதைகளும் நீங்குகின்றன. அத்துடன், அவர்கள் நாள்தோறும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது. இந்தியாவில் பின்பற்றப்படும் இத்தகைய யோகாசன சிறப்புகள்குறித்து கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் இந்த…

  7. பிரியாங்காவின் படத்திற்கு கீழ் இருந்த வாசகத்தை படிக்கவே பெரிதுபடுத்தினேன் என்று பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. பிரபு சவுகான் விளக்கம் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபையில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் ஆக்ரோஷமான விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.வான பிரபு சவுகான் தனது செல்போனில் இருந்த புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா காந்தியின் புகைப்படமும் பிரபு சவுகானின் செல்போனில் இருந்தது. அந்த புகைப்படத்தை அவர் பெரிதுபடுத்தியும் பார்த்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது பிரியங்கா காந்தியின் புகைப்படத்தை பா.ஜனதா எம்.எல்.ஏ. தனது செல்போனில் பெரிதுபடுத்தி பார்த்த சம்ப…

  8. புதுடெல்லி, ரஷியா அதிபர் விளாடிமீர் புதின் இந்திய வருகை இருநாடுகள் இடையிலான நட்புறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா - ரஷியா நாட்டு தலைவர்களுக்கு இடையேயான 15–வது உச்சி மாநாடு டெல்லியில் நடக்கிறது. இதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உயர்மட்டக்குழுவினருடன் நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு முதலில் தனிப்பட்ட முறையிலும், பின்னர் உயர்மட்டக்குழு மட்டத்திலும் நடைபெறுகிறது. பின்னர் அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து பேசுகிறார். ரஷியா அதிபர் புதினை இன்…

  9. வைகைப் புயல் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனின் திருமணத்தின்போது மணமகளின் வயது குறித்து யாரோ சில விஷமிகள் தேவையில்லாமல் புகார் கொடுக்கப் போய், அதுகுறித்து விசாரிக்க போலீஸாரும், சமூக நலத்துறை அதிகாரிகளும் திருமண மண்டபத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஆனந்தவள்ளி விளக்கம் அளித்துள்ளார். உள்நோக்கத்துடன் யாரோ புகார் கொடுத்துள்ளனர் என்றும் அவர் கூறயுள்ளார். வடிவேலுவின் ஒரே மகன் சுப்பிரமணியனின் திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதையும் மிகவும் எளிமையாக, அமைதியாக, சத்தமின்றி நடத்தினார் வடிவேலு. மணப்பெண் புவனேஸ்வரி மதுரை அருகே உள்ள திருப்புவனத்தைச் சேர்ந்தவர். வடிவேலு மனைவி வழியில் சொந்தம். திருமணத்திற்கு இரு வீட்டார…

  10. சுந்தரவனப் பகுதியில் ஆற்றில் மூழ்கிய கப்பல் உலகின் மிகப் பெரிய சுரபுன்னைக் காடுகளான சுந்தரவனக் காடுகளினூடாகப் பாயும் ஆறு ஒன்றில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்று மூழ்கியதை அடுத்து அப்பகுதியில் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து அச்சங்கள் ஏற்பட்டிருப்பதாக பங்களாதேஷ் அதிகாரிகள் கூறுகிறார்கள். கப்பல் பணியாளர்களில் ஒருவர் காணவில்லை; அவர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சுமார் 3,50,000 லிட்டர்கள் எண்ணெயைத் தாங்கிவந்த இந்த கலம் மூழ்கியிருப்பது அப்பகுதிய்ல் இருக்கும் ஆற்று டால்பின்கள் , மீன் மற்றும் பிற நீர் வாழ் உயிரினங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக வனத் துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். சுந்தரவனக்காடுகள் இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே பரவிக்கிட…

  11. வாஷிங்டன்: விசாரணைக்காக கைது செய்யப்பட்ட ஆப்கன் கைதிகளை அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ, பயங்கரமான கொடூரங்களுக்கு உட்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செனட் புலனாய்வு குழு குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பின்னர் அல் கய்தா பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக சிஐஏ மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை செனட் புலனாய்வு குழு வெளியிட்டுள்ளது. அதில், விசாரணைக்காக கொடுமையான வழிமுறைகள் கையாளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது உலகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. விசாரிக்கப்பட்ட நபர்களிடம் பெறப்பட்ட தகவல்களுக்கும், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் வெற்றி என்று கூறப்படுவதற்கும் எந்தவிதமான தொடர்பும…

  12. ஓஸ்லோ: பாகிஸ்தானுக்கு பிரதமர் ஆகி நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம் என நோபல் பரிசு பெற்ற மலாலா கூறியுள்ளார். இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக போராடி வருபவர் கைலாஷ் சத்யார்த்தி. அதேபோல், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஏற்கனவே தெர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா இன்று நார்வேயின் ஓஸ்லோவில் நடைபெற்றது. இதில், இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பெண் கல்விக்காக குரல் கொடுத்ததால் மலாலா, தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார் என்பது குறிப்பிட…

  13. புதுடெல்லி, 1990-ல் இருந்து ஜம்மு காஷ்மீரில் 21,562 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதிலில், ஜனவரி 1990 முதல் டிசம்பர் 2013 ஆம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீரில் 21,562 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், 16,757 பொதுமக்களும் 1425 பாதுகாப்பு படையினரும் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் அரசின் தகவலின் படி தீவிரவாத தொடர்பு சம்பவங்களால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண விதிமுறைகளின் படி கருணைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.அவ்வப்போது விதிமுறைகளில் சட்டதிருத்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். http://www.dailythanthi.com/New…

  14. திருமலையில் இன்று சுப்ரபாதத்துடன் திருப்பள்ளி எழுந்துகொள்ள வேண்டிய வெங்கடாசலபதி பெருமாள், தமிழ் பத்திரிகையாளர்களின் கூக்குரலை கேட்டுதான் எட்டிப்பார்த்திருப்பார். பிரசாத லட்டு தரும் திருப்பதியில், இன்று போலீசாரின் லத்தி அடிதான் தமிழ் பத்திரிகையாளர்களுக்கு கிடைத்தது. அமைதி வேண்டி பக்தர்கள் படையெடுக்கும்திருப்பதி இன்று, அதிகாலையிலேயே அல்லோகலப்பட்டது. இத்தனைக்கும் அடிப்படை காரணம் திருவாளர்., ராஜபக்சேவின் திருப்பதி வருகைதான். இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்த பாவத்தை கழுவவோ என்னவோ, அதிபரான பிறகு இன்றுடன் நான்காவது முறையாக திருமலை வந்து பெருமாளை தரிசனம் செய்துள்ளார் ராஜபக்சே. விவிஐபி அந்தஸ்துடன் அவரை கவனித்துக் கொண்டன மத்திய, மாநில அரசுகள். ஆனா…

  15. மும்பை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் பேஸ்புக்கில் வேலை! 17:42:08 Tuesday 2014-12-09 மும்பை: மும்பை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் பேஸ்புக்கில் வேலை கிடைத்துள்ளது. பேஸ்புக்கே வேலையாக பலர் இருக்கும் போது, அதே பேஸ்புக்கில் ரூ. 2 கோடி சம்பளத்துடன் மும்பையைச் சேர்ந்த ஆஸ்தா அகர்வாலுக்கு (20) வேலை கிடைத்துள்ளது. தற்போது இவர் மும்பை ஐஐடியில் கம்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் ஆஸ்தாவுக்கு பேஸ்புக்கில் ஆண்டுக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது குறிப்…

  16. வாசகர்களின் ஆதரவைப் பெற்றாலும் மோடியை நிராகரித்த 'டைம்ஸ்' எடிட்டர்கள்! நியூயார்க்: டைம் பத்திரிகையின் ஆண்டின் சிறந்த மனிதர் போட்டியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியேற்றப்பட்டுள்ளார். வாசகர்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற, மோடியால் பத்திரிகையின் ஆசிரியர்களின் மனதை கவர முடியவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த டைம் பத்திரிக்கை ஆண்டுதோறும் ஆண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்ய வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவை அறிவிக்கும். இந்த ஆண்டும் டைம் பத்திரிக்கை வாசகர்களிடையே வாக்கெடுப்பு நடத்தியது. வாசகர்கள் 50 உலக தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் சிஇஓக்களில் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு வாக்களித்தனர். வாக்கெடுப்பு. நவம்பர் 19ம் தேதி துவங்கிய வாசகர்கள் வாக்கெடுப்…

  17. பெங்களூரு: இந்தியாவை இந்த 5 முக்கியத் தீவிரவாதிகளும் உலுக்கி வருகிறார்கள். சிறையிலிருந்து தப்பி 3 முக்கிய கொள்ளைச் சம்பவங்கள், சென்னையில் ரயிலுக்குக் குண்டு வைத்தது, பிஜ்னூரில் நடந்த குண்டுவெடிப்பு என அடுத்தடுத்து நாச வேலைகளில் ஈடுபட்டு வரும் சிமி அமைப்பைச் சேர்ந்த இந்த ஐந்து பேரும் அடுத்து தென் மாநிலங்களில் மிகப் பெரிய நாச வேலையில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நாடு முழுவதும் காவல் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் இவர்களைப் பிடிக்க தீவிரமாக முயன்று வருகின்றனர். இவர்களைப் பிடிக்க நேற்று நாடு தழுவிய உஷார் எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. ஆனால் இவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறி வருகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் கந…

  18. வெல்லிங்டன், நியூசிலாந்து: நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு சொகுசுக் கப்பலில் 200 பயணிகளுக்கு நோரோ வைரஸ் அதாவது காலரா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தி டான் பிரின்சஸ் என்ற அந்த சொகுசுக் கப்பலில் 1500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்டோருக்கு இந்த வயிற்றுப் போக்கு பரவியுள்ளதாம். ADVERTISEMENT இந்தக் கப்பல் நேற்று ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுவதாக இருந்தது. கடந்த 13 நாட்களாக இது கடலில் பயணித்து வந்தது. இந்த நிலையில்தான் தற்போது வயிற்றுப் போக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மியாமியைச் சேர்ந்த பிரின்சஸ் க்ரூய்ஸஸ் என்ற கப்பல் நிறுவனம்தான் இந்த கப்பலின் உரிமையாளர் ஆகும். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் அலிஸ்டர் ஹம்ப்ரி கூற…

  19. அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சிஐஏ கைகொண்ட சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளை, கொடுமையானது என்றும் திறனற்றது என்றும் வர்ணித்துள்ள அமெரிக்க செனட் அவை அறிக்கை, இம்முறைகளைக் கையாண்டதற்காக சி ஐ ஏ வை கடுமையாக விமர்சித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் சி ஐ ஏ வின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டுள்ளன தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் சி ஐ ஏ வின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டுள்ளன சில நேரங்களில் தடுத்து வைக்கப்பட்டோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை முறையானது சித்ரவதையை ஒத்திருந்ததாக செனட் அவையின் புலனாய்வுக் குழுவின் தலைவர் டையான் பெயின்ஸ்டைன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்…

  20. இஸ்ரேல் போர்க் குற்றங்களை புரிந்துள்ளது என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி குற்றஞ்சாட்டியுள்ளது. காசா மீது நடத்தப்பட்டத் தாக்குதல் இந்த ஆண்டின் கோடைக்காலத்தில் காசாப் பகுதியில் இருந்த, நன்கு அறியப்பட்ட நான்கு முக்கியமானக் கட்டிடங்களை அழித்ததன் மூலம் இந்தக் குற்றத்தை இஸ்ரேல் புரிந்துள்ளது என்று அம்னெஸ்டி அமைப்பு கூறியுள்ளது. பொதுமக்கள் குடியிருந்த அந்தக் கட்டிடங்கள் தாக்கி தரைமட்டமாக்கப்பட்டது கூட்டுத் தண்டனை அளிக்கப்படக் கூடியக் குற்றம் எனவும் அம்னெஸ்டி கூறுகிறது. காசாப் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புகள் அந்தக் கட்டிடங்களின் சில பகுதிகளை பாலஸ்தீன பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தினார்கள் என்று இஸ்ரேல் நம்பியது என்பதை ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலு…

  21. அமெ­ரிக்காவின் தேசிய புலனாய்வு முகவரத்தின் புல­னாய்வு நட­வ­டிக்­கை­களை அம்­ப­லப்­ப­டுத்தி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய அமெ­ரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.ஏ) முன்னாள் ஊழி­ய­ரான எட்வர்ட் ஸ்னோடனை தனது கவர்ச்­சியால் மயக்­கு­மாறு முன்னாள் உள­வா­ளி­யான அனா சொப்­ம­னுக்கு ரஷ்­யாவின் புல­னா­னய்வுப் பிரிவுத் தலை­வர்கள் உத்­த­ர­விட்­டி­ருந்­தனர் என ரஷ்­யாவின் முன்னாள் புல­னாய்வு முகவர் ஒருவர் தெரி­வித்­துள்­ளா­ரென பிரித்­தா­னிய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து தப்பிச் சென்ற 31 வய­தான எட்வர்ட் ஸ்னோடனை தனது நாட்­டுக்கு மீண்டும் கொண்­டு­வ­ரு­வ­தற்கு அமெ­ரிக்கா தீவி­ர­மாக முயற்­சித்து வரு­கி­றது. அவர் தற்­போது ரஷ்­யாவில் அடைக்­கலம் பெற்­றுள்­ளமை குற…

  22. ரேணிகுண்டா: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி வந்தடைந்தார். இலங்கை அதிபர் ராஜபக்சே தனி விமானம் மூலம் இன்று மாலை 5 மணியளவில் தனது குடும்பத்தினருடன் ரேணிகுண்டா வந்தடைந்தார். அவருக்கு ஆந்திர காவல்துறையினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அலப்ரி சென்ற ராஜபக்சே, அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு சென்றார். இன்று இரவு திருமலை பத்மாவதி நகரில் உள்ள விடுதியில் தங்கி இருக்கும் ராஜபக்சே நாளை (10ஆம் தேதி) அதிகாலை 2.45 மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் நடக்கும் சுப்பரபாத சேவையின்போது, ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் போராட்…

  23. ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்களை மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் மதுநகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 57 குடும்பங்களைச் சேர்ந்த 200 முஸ்லிம்கள் மீண்டும் இந்து மதத்துக்கு மாறியுள்ளனர். இந்து மதத்துக்கு மாறியவர்களின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ளதாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தர்மா ஜாக்ரான் சம்னவா விபாக் என்ற முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜேஸ்வர் சிங் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு மாதமும் ஆயிரம் குடும்பங்களை இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரூ50 லட்சம் செலவு செய்யப்பட்டு வருகிறது. உத்தரப்…

  24. நியூசிலாந்தைப் பொறுத்தவரை ‘அட அப்படியா’ தகவல்கள் நிறைய உண்டு. நமக்குத் தெரிந்த சில விஷயங்களைக்கூட நாம் சட்டென்று நியூசிலாந்துடன் தொடர்புபடுத்திப் பார்க்காமல் இருந்திருப்போம். எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்த இருவரில் ஒருவரான எட்மண்ட் ஹில்லாரி நியூசிலாந்தைச் சேர்ந்தவர்.மற்ற எந்த நாடுகளையும்விட அதிக அளவில் பென்குவின்களைக் கொண்டது நியூசிலாந்து. நியூசிலாந்தின் மிகப் பிரபல நகரமான ஆக்லாந்து வசிப்பதற்கு மிகவும் ஏற்ற நகரம். அதாவது குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கை வாழ முடியும். அங்குள்ள மூன்று குடும்பங்களில் ஒன்று என்கிற அளவில் படகுகள் உள்ளன. தன்பாலின திருமணத்தை நியூசிலாந்து சட்டபூர்வமாக ஏற்றிருக்கிறது. சுமார் 26,000 வருடங்களுக்குமுன் ஒரு மிகப் பெரிய எரிமலை நியூசிலாந்து பகுதிய…

  25. பக்ராய்ச் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய உத்திரபிரதேச மந்திரி ஆசம்கான்,கடந்த நவமபர் மாதம் 13-ந்தேதி பேசும் போது தாஜ் மகாலை உ.பி.மாநில வக்பு வாரியத்தின் சொத்தாக அறிவிக்க வேண்டும். தாஜ்மகாலின் நிர்வாகி யாக என்னை நியமிக்க வேண்டும் என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உத்திரப் பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது தாஜ்மகால் இருக்கும் இடத்தில் முன்பு தேஜோ மகாலய கோவில் இருந்தது. அந்த கோவில் நிலத்தை ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து முகாலய பேரரசர் ஷாஜகான் விலைக்கு வாங்கினார். இதற்கான ஆவணங்கள் உள்ளன. இந்த இடத்தில் தான் தாஜ்மகால் கட்டப்பட்டுள்ளது. அதில் கோவிலின் ஒரு பகுதியும் அடங்கும். சமாஜ்வாடி க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.