Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மும்பை: இந்தியாவின் முன்னணி டெலிக்காம் நிறுவனமான பார்தி ஏர்டெல் உலகெங்கும் தனது தொலைதொடர்பு சேவையை அளித்துவருகிறது. மேலும் ஆப்பிரிக்காவில் தன்னுடைய டெலிகாம் டவர் வணிகத்தை 1.8 பில்லியன் டாலருக்கு விற்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சிஎன்பிசி-டிவி18 தெரிவித்தது. இந்த ஒப்பந்தம் மூலம், இந்த நிறுவனத்தின் 9.69 பில்லியன் டாலர் அளவு கடன் தொகையை குறைக்க உதவும் என அந்நிறுவனத்தின் முத்த அதிகாரி தெரிவித்தார். முன்னதாக, இந்த நிறுவனம் அதன் ஆப்பிரக்கா டவர் வர்த்தகத்தை இந்திய டவர் பிரிவுக்கு மாற்ற பரிசீலிப்பதாக அறிவிக்கப்பட்டது. பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு சொந்தமாக ஆப்பிரிக்காவில் 15,000 டவர்கள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஹீலியோஸ், ஏடிசி, ஈட்டன் மற்றும் …

  2. சிரியா போரில் பதினோராயிரத்துக்கும் அதிகமான சிறார்கள் கொல்லப்பட்டதாக புதிதாக வெளியான ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகின்றது. இதில் குறைந்தது ஆயிரம் பேராவது சினைப்பர்களினால் வேண்டுமென்றே இலக்கு வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள், (அவர்களில் பலர் ஒரு வயதுக்கு குறைவானவர்கள்) சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பிபிசிக்கு வழங்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் ஆய்வுக்குழுவின் அறிக்கை கூறுகின்றது. ஆயினும் இப்படியாக இறந்தவர்களில் பெரும்பாலானோர் தமது இருப்பிடங்களில் ஆர்ட்டிலறி குண்டுகள் விழுந்து வெடித்ததால் உயிரிழந்திருக்கிறார்கள். சிரியாவில் சிறார்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறு அனைத்துத் தரப்பையும் கோ…

  3. உலகின் மிகப்பெரிய சக்தியாக அமெரிக்கா தன்னை கருதிக் கொண்டாலும் அது மிகப் பெரிய அடி வாங்கியது வியத்நாமில் . செஞ்சேனையை அதனால் சமாளிக்க முடியவில்லை. வியட்நாமில் இருந்து தொடர்ந்து வந்த சவப்பெட்டிகள் அமெரிக்காவில் கொந்தளிப்பை உருவாக்கியது. கொரில்லா தாக்குதலில் அமெரிக்க படையை வியட்நாமிய வீரர்கள் எப்படி சமாளித்தார்கள், அவர்கள் கண்ணில் மண்ணை தூவினார்கள் என்பதற்கு கீழே உள்ள படங்களே சாட்சி. சமீபத்தில் வியட்நாம் சென்ற இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் சி.பி.கிருஷ்ணன் அங்கே எடுத்த புகைப்படங்களை முக நூலில் பகிர்ந்து கொண்டிருந்தார். வியட்நாமியர் பயன்படுத்திய பதுங்கு குழிகளை பாருங்கள். அது என்னை பரவசப்படுத்தியது. ht…

  4. கிறிஸ்தவர்கள் இல்லாத மத்தியக் கிழக்குப் பகுதி ஒன்று உருவாகும் நிலையை வத்திக்கான் ஒப்புக்கொள்ளாது என்று இராக், சிரியா, லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து வந்த கத்தோலிக்க தலைவர்களிடையே பேசிய போப் பிரான்ஸிஸ் குறிப்பிட்டார். ரோம் நகரில் மத்தியக் கிழக்கு பகுதியிலிருந்து வந்த பேராயர்களை சந்தித்த போப், இந்தப் பகுதியில் குறைந்துவரும் கிறித்தவ சமூகங்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைப் பற்றி அவர்களுடன் விவாதித்தார். இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அரபு வசந்தம் ஏற்பட்டதிலிருந்து அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக பல லட்சக்கணக்கான கிறித்தவர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறிவிட்டனர். திங்களன்று போப் பிரான்ஸிஸ் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டினை சந்திப்பார…

  5. இடித்ததழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பு பகுதியை தமிழக அரசு அமைத்துக் கொடுக்க வலியுறுத்தியும் உலத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் உள்ளிட்ட 82 மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை மீளப் பெறக்கோரியும், சேலம் சிறையில் தேசியப்பாதுகாப்பு சட்டதத்pன் கீழ் தடுத்துவைக்கப்ட்டுள்ள தமிழின உணர்வாளர் கொளத்தூர் மணி உள்ளிட்டவர்களை விடுதலைசெய்யக் கோரியும் இன்று காலை 11 மணியளவில் சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் நடத்திய போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். அண்ணா மேம்பாலத்தை சுற்றி வளைத்து சுமார் இருபத நிமிடங்கள் வரை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

  6. எரிமலைக் குழம்பு படிந்து ஜப்பானில் புதிய தீவு உருவானது! எரிமலைகள் தொடர்ந்து வெளியேற்றும் குழம்புகள் படிந்து டோக்கியோவின் தென்கிழக்கே புதிய தீவுத்திட்டு ஒன்று தோன்றியுள்ளதாக ஜப்பானியக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. மனிதர்கள் நடமாட்டம் அற்ற போனின் தீவுகள் என்று அழைக்கப்படும் ஒகசவாரா தீவுத்தொடரின் அருகில் நிஷிநோஷிமா கடற்கரையை ஒட்டியுள்ள கடற்பரப்பில் இந்த தீவு அமைந்துள்ளது.ஜப்பானின் கடலோரக் காவல்படை மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் ஆலோசகர்கள் இந்தப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். இந்தத் தீவு சுமார் 200 மீ விட்டம் கொண்டதாக அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையும் சேர்த்து டோக்கியோவிற்கு தெற்கில் உள்ள சுமார் 30 தீவுகளுடன் ஜப்பானும் எரிமலைகள் அதிக சீ…

  7. தமிழர்களின் அன்னையின் ஆலயம் முள்ளிவாய்க்கால் இடித்த தமிழக காட்டுமிரான்டி அரசை கண்டித்து கோவையில் 20-11-2013 அன்று மாலை அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பெரும்திரளானோர் கலந்துகொண்டனர். http://www.pathivu.com/news/28226/57//d,article_full.aspx

  8. சிங்கப்பூர்: மனித உரிமை மீறல் குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும் என்றும், அந்த சதிகாரர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். சிங்கப்பூரில் தெற்காசியா புலம்பெயர்ந்தோர் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.மூன்றாவது நாளான இன்று மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம், மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதி ஒருவர், ‘‘சிறுபான்மை தமிழ்மக்கள் இன்னலுற்று வருகிற இலங்கையில் முதலீடுகள் செய்ய ஏன் அனுமதிக்க வேண்டும்?’’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய ப.சிதம்பரம்,"தனது சொந்த நாட்டு மக்களுக்கும், உலகமெங்கும் உள்ள மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்க…

  9. புதுடெல்லி: தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக 8 சிமி இயக்கத்தைச் சேர்ந்த 8 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் மோடியை கொல்ல இந்திய முஜாகிதீன் மற்றும் சிமி தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனையடுத்து மோடிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோடி சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்யவரும்போது பிரசார மேடை பகுதியில் அவரை கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஒருவாரம…

  10. உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் உட்பட 85 பேருக்கு பிணை வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. பெரும் சர்ச்சைக்கிடையே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட இந்த நினைவு முற்றம் கடந்த 8ஆம் திகதி திறக்கப்பட்டது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து நினைவு முற்றம் கட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு அதன் சுவர் இடிக்கப்பட்டது. அதேவேளையில், விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அங்கு ஒலிப்பெருக்கி பயன்படுத்தியதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 85பேர் மீது க…

  11. பெங்களூரு: ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரியை ஒருவன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஜோதி உதய் (37) தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 7.10 மணி அளவில் இவர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்ற மர்ம நபர், ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை கீழே இறக்கி பூட்டினார். அவரை பார்த்ததும் ஜோதி பயந்துபோய் வெளியே செல்ல முயன்றார். அவரை …

  12. ஜெய்ப்பூர்: பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 8, 10 ம் வகுப்பு வரலாற்று பாடங்களை அக்கட்சித் தலைவருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கிண்டலடிக்கும் அளவுக்கு மோடி அவ்வப்போது பொதுக்கூட்டங்களில் தப்பும் தவறுமாக பேசி வரும் நிலையில், ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தியின் இயற்பெயரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மோகன்லால் கரம்சந்த் காந்தி என்று கூறியதை பார்த்து அவரது கட்சியினரே நெளிந்தனர். மோடியின் வரலாற்று அறிவை கிண்டலடித்து, இளைஞர் காங்கிரஸ் சார்பில் அவருக்கு ஏற்கனவே நடுத்தர வகுப்புகளுக்கான வரலாற்று பாடப்புத்தகங்கள் தீபாவளி அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. இப்புத்தகங்களை படித்து மோடி தனது வரலாற்று அறிவை பெருக்கிக்கொள்…

  13. இந்திய சீன எல்லை --- புதிய ராணுவப் பிரிவு உருவாக்க இந்தியா உத்தரவு இந்தியா ,சீனாவுடனான தனது எல்லை நெடுகே புதிய ராணுவப் பிரிவொன்றை உருவாக்கி நிலை நிறுத்தும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதன் மூலம் 50,000 கூடுதல் படையினர் இந்த எல்லையில் நிறுத்தப்படுவார்கள். இந்தப் புதிய பிரிவு மேற்கு வங்க மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். கடந்த ஆண்டில், சீனத்துருப்புக்கள், இந்திய நிலப்பரப்புக்குள் பல முறை ஊடுருவிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சீனாவும் இந்த எல்லை நெடுகே துருப்புக்களை குவித்திருக்கிறது. இமாயலப் பகுதிகளில் பல இடங்களில், எல்லைப் பிரச்சினை கொண்டிருக்கும் இந்த இரு நாடுகளும், 1962ல் ஒரு சுருக்கமான போரில் ஈடுபட்டன. http://www.bbc.co.uk/tami…

  14. ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கலுக்கு, இந்திரா காந்தி அமைதி விருது. டெல்லி: 2013-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதிக்கான விருது ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கலுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி அறக்கட்டளை ஆண்டுதோறும் அமைதி, முன்னேற்றம், உலக ஒற்றுமைக்காக பாடுபடுவோரை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. நடப்பாண்டிற்கான விருதுக்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கல் (வயது 59) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதமர் மன்மேகன் சிங் தலைமையிலான சர்வதேச குழு இவரைத் தேரந்தெடுத்துள்ளது. ஐரோப்பா மற்றும் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது ஜெர்மனை பொருளாதார வளர்ச்சியடைய செய்தமைக்காக ஏஞ்செலா மெர்க்கலுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இதற்…

  15. ராஜபக்சவுடன் மன்மோகன்சிங்கும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என விக்கிரவாண்டி ஏ.ஆர்.எஸ்.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் நிதி அளிப்பு விழாவில் மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். அங்கு உரையாற்றிய அவர் - வரும் பாராளுமன்ற தேர்தல் எங்களது இலக்கல்ல. ஆனால் இந்த தேர்தலில் நாங்கள் வகுக்கும் வியூகம் நாடாளுமன்றத்தையடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது முழு பலத்தை பயன்படுத்தி அதற்கான இலக்கை அடைவோம். அண்ணாவின் பெயரையும், பெரியாரின் பெயரையும் உச்சரிக்க தகுதி உள்ள ஒரே கட்சி நமது இயக்கம் மட்டும்தான். அ.தி.மு.க.–தி.மு.க. கட்சிகளுடன் என்றும் உறவு கிடையாது. சுயமரியாதையை விட்டுகொடுக்காமல் தேர்தலை சந்திப்போம்.மாற்று கட்சி பிரமுகர்கள் நமது கட்சிக்கு …

  16. பெய்ரூட்டில் ஈரானிய தூதுவராலயத்தை இலக்குவைத்து தாக்குதல் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள ஈரான் தூதுவராலய பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் தூதுவராலய வளாகத்தில் இருந்த கட்டிடங்கள் சிலவற்றுக்கும் சேதமேற்பட்டுள்ளது. இரட்டைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டமையே வெடிப்புக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தூதுவராலயத்தை இலக்குவைத்து ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் தூதுவராலய அதிகாரிகள் எவரும் உயிரிழந்துள்ளனரா என்பது தொடர்பில் இதுவரை செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. http://www.virakesari.lk/?q=node/359267 …

  17. இந்தியர்களில் 53 சதவீதத்தினர் அதாவது சுமார் 60 கோடி இந்தியர்கள் கழிப்பறை வசதியில்லாமல் திறந்த வெளியில் மலசலம் கழிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. ஐ.நாவின் உலக கழிப்பறை தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை விடுத்த அறிக்கையொன்றிலேயே உலக வங்கி இப்புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது. உலகளளவில் 250 கோடி மக்கள் போதியளவு கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் இருப்பதாகவும் இவர்களில் 10 கோடி பேர் திறந்தவெளியில் மலசலம் கழிப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. ஐ.நா.வினால் அனுஷ்டிக்கப்படும் முதன் முதலாவது உலக கழிப்பறை தினம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=3030#sthash.Y46mxcvU.dpuf

  18. மூணாறு: தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் குடியிருப்புகளை காலி செய்துவிட்டு ஊரைவிட்டு வெளியேற நிர்பந்தித்து வருவதாக கேரளா மாநில அரசு மீது தமிழக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். ஆதிவாசிகளின் நிலம் என்று பொய்யான சாயம் பூசி விரப்படுவதாக அச்சம் தெரிவித்துள்ளனர் அட்டப்பாடியில் வசிக்கும் தமிழர்கள். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்டது அட்டப்பாடி மலைப்பகுதி. மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்படாததற்கு முன்பு இருந்தே, அட்டப் பாடி பகுதியில் தமிழர்கள் அதிகளவில் குடியேறினர். அட்டப்பாடியில் இப்போது 15 ஆயிரம் தமிழர்கள் வசிக்கின்றனர். 200-க்கும் அதிகமான ஆதிவாசி மலைக் கிராமங்களை உள்ளடக்கிய அட்டப்பாடியில் ஆதிவாசிகளின் இடங்களை விலைக்கு வாங்கி, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தென்னை, வாழை,…

  19. புதுடெல்லி:டெல்லி தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் அதிகளவில் வராததால், ராகுல் காந்தி அதிருப்தி அடைந்தார். 7 நிமிடத்தில் பேச்சை முடித்து கொண்டு கிளம்பினார். டெல்லி, சட்டீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. டெல்லியில் டிசம்பர் 4ம் தேதி வாக்கு பதிவு நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ. தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் காங்கிரசின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக தக்ஷின்புரி கருதப்படுகிறது. இங்கு நேற்று தேர்தல் பிரசார கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. இதில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று, முதல்வர் ஷீலா தீட்சித் அரசின் சாதனைகள் குறித்து பேசினார். ஆனால், அவரது பேச்சை கேட்க மக்கள் கூட்…

  20. சமீபத்தில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட, விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யாவை, நேட்டோ உளவு பார்த்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் விக்ரமாதித்யா கப்பல் கட்டப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு முன், அக்கப்பல் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அப்போது, நோர்வேயில் இருந்து வந்த ஒரு நேட்டோ படைக்கு சொந்தமான விமானம், விக்ரமாதித்யாவின் செயல்பாடுகளை உளவு பார்த்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தில், இக்காட்சி தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவை நேட்டோ விமானம் உளவு பார்த்துள்ளதாக வெளியான தகவல், இந்திய ராணுவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. http://www.seithy.com/bre…

  21. இன்றைய உலகம் பலதைக் கூறினாலும் விடுதலைப் புலிகள் உரிமைப் போராட்ட வீரர்கள். அவர்கள் இருந்த நாட்களில் இன்றைய காலம் போல் தமிழர்கள் அழிக்கப்படவில்லை. அவர்கள் தமிழருக்கு அரண். எமது ஆட்சியில் ஈழத்தின் விடிவு நிச்சயம் என பா.ஜ.க அகில இந்திய தேசியச் செயலாளர் டொக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். தமிழ் மக்கள் முழு உரிமையுடனும் கூடிய அதிகாரத்தை அனுபவித்து சுதந்திரமாக வாழ வேண்டும். அவ்வாறான சூழ்நிலை தாமதமானால் எமது ஆட்சியில் நிச்சயம் என பாரதிய ஜனதாக் கட்சியின் அகில இந்திய தேசியச் செயலாளர் டொக்டர். திருமதி. தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=97119&category=TamilNews&language=tamil

  22. துடெல்லி: 10 கோடி ரூபாய் இழப்பு கேட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய பிரதேச சட்டசபைக்கு வரும் 25 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த வாரம் அங்கு சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதற்காக நாளிதழ்களில் முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் முதல்வர் சவுகான் வீட்டில் பணம் எண்ணும் எந்திரம் இருப்பது போலவும், காண்டிராக்ட் பணிகளுக்கு அவரும், அவர் மனைவி சத்னாவும் பணம் வாங்கி குவிப்பது போலவும் எழுதப்பட்டிருந்தது. சோனியா காந்தியும் அந்த கூட்டத்தில் பேசும் போது,அந்த விளம்பரத்தில் இருப்பது போன்றே பேசினார். இந்நிலையில், இதற்கு கடும் …

  23. "நெல்சன் மண்டேலாவால் பேச இயலவில்லை' தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவினால் பேச இயலவில்லை என்று அவருடைய முன்னாள் மனைவி வின்னி மண்டேலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா, சிகிச்சைக்குப்பின் குணமடைந்துள்ளார். எனினும், மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், வீட்டிலேயே அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை, 22 மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரால் இப்போது பேச இயலவில்லை. நுரையீரலை சுத்திகரிக்க, அவருடைய வாயில் டியூப்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவருக்கு ஏதேனும் தேவையெனில், சைகை…

  24. ரஷ்யாவில் போயிங் விமானமொன்று விழுந்து நொறுங்கியதில் இதுவரைக்கும் 52 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் மத்தியில் கஸான் விமான நிலையத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை தரை இறங்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் 50 பயணிகளும் ஆறு சேவையாளர்களும் இருந்ததாக ஒரு தகவலும் மொத்தமாகவே 52 பேர் மட்டுமே இருந்ததாக இன்னுமொரு தகவலும் தெரிவிக்கின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/89846--52-.html

  25. ஐதராபாத்:ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீ அணைப்பு வீரர்களும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு சொந்தமான சதீஷ் தவான் விண்வெளி மையம் உள்ளது. இங்கிருந்துதான் விண்வெளிக்கு ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள்களும், விண்வெளி ஆய்வு கலங்களும் அனுப்பப்பட்டு வருகிறது. கடைசியாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கல்யான் விண்கலம் அனுப்பப்பட்டது. அது தற்போது பூமியை சுமார் 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் சு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.