உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
வாஷிங்டன்: உளவு பார்த்த அதிருப்தியால் அமெரிக்காவுக்கான தமது பயணத்தை திடீர் என ரத்து செய்திருக்கிறார் பிரேசில் அதிபர் டில்மா ரூசெப். அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்கிறது பிரேசில். ஆனால் நட்பு நாட்டையும் கூட விட்டு வைக்காமல் அமெரிக்கா எப்படி உளவு பார்த்தது என்று ஸ்னோடென் அம்பலப்படுத்தினார். இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 23-ந் தேதியன்று அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்ததை பிரேசில் அதிபர் நேற்று ரத்து செய்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக பிரேசில் அதிபருடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் பேசினார். அப்போது ஒபாமா, பிரேசில் அதிபரின் உணர்வுகளை புரிந்து கொள்வதாக கூறியிருக்கிறார். அதிபரின் பயண ரத்து தொடர்பா…
-
- 0 replies
- 362 views
-
-
வியன்னா ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் புதிய உத்தரவு அமலாகியுள்ளது. அதாவது பஸ், ரயில்களில் வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, சீன உணவுகளை சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும் வகையில் இந்த உத்தரவை அந்த நாட்டு போக்குவரத்துத்துறை அமல்படுத்தியுள்ளதாம். பொது இடங்களில், பொதுப் போக்குவரத்துகளில் இனிமேல் இப்படி நடந்தால் அது அநாகரீகமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுமாம். ரயில்கள், பேருந்துகளில் ஜோடிகளாகப் போவோர் மிகவும் நாகரீகமாக நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தம்பதிகள் நெருக்கமாக அமருவது, வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வியன்னாவில் பொதுப் போக்குவரத்தை வி…
-
- 0 replies
- 1.2k views
-
-
வாஷிங்டன்: 2013ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டு அதிக பட்ச அளவில் 259 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது சாதனையாக கருதப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் புரட்சி சிறுமி மலாலா உள்ளிட்ட 10 பேரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வருகிற அக்டோபர் 11-ந்தேதி அறிவிக்கப்படுகிறது. அதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. http://tamil.oneindia.in/news/international/nominations-the-2013-nobel-peace-prize-183672.html
-
- 0 replies
- 523 views
-
-
வாஷிங்டன்: இன்டர்நெட்டுக்கு அடிமையாவது, தனிமை பறிபோதவது மற்றும் நரம்பு பிரச்சனையால் பலர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது நிறுத்தி வருகின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பலர் அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் இன்டர்நெட்டே கதி என்று இருக்கின்றனர். மேலும் ஃபேஸ்புக், ட்விட்டர் இருப்பது அவர்களுக்கு மேலும் வசதியாக உள்ளது. நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நிமிடத்திற்கு நிமிடம் சமூக வலைதளங்களில் அப்டேட்ட செய்யும் ஆட்கள் உள்ளனர். இந்நிலையில் வியன்னா பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் சமூக வலைதளங்கள் பயன்பாடு குறித்து ஒரு ஆய்வை நடத்தினர். விக்கிலீக்ஸ். தேசிய பாதுகாப்பு ஏஜென்சி ஆகியவை பல ரகசியங்களை அம்பலப்படுத்தியதையடுத்து சமூக வலைதளங்களை பயன்படுத்…
-
- 0 replies
- 470 views
-
-
அகமதாபாத்: வெளி மாநிலங்களில் பிரசாரம் செய்ய செல்லும் போது குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் அம்மாநில அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை குஜராத் அரசு அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த குஜராத் மாநில கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே. நந்தா, வெளி மாநிலங்களில் மோடியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருக்கிறோம். தற்போது குஜராத் மாநிலத்தில் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வெளி மாநில பிரசாரத்துக்கு செல்லும் போது போதுமானதாக இருக்காது. அதனால் கூடுதல் பாதுகாப்பு கேட்டிருக்கிறோம் என்றார். தற்போத…
-
- 1 reply
- 458 views
-
-
டெல்லி:இந்திய விஞ்ஞானியான வீரபத்திரன் ராமநாதனுக்கு ஐ.நா.வின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருது வழங்கப்பட உள்ளது. மதுரையில் பிறந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்துவிட்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் முதுகலைப்பட்டம் பெற்றுவிட்டு முனைவர் பட்டம் பெற அமெரிக்கா சென்றவர் வீரபத்திரன் ராமநாதன். அங்கு அவர் சுற்றுச்சூழல் குறித்து பல ஆய்வுகளை செய்துள்ளார். இந்நிலையில் ஐ.நா.வின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருது அரசு தலைவர்கள், தனியார் நிறுவனத்தார் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உதவுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அவர் தற்போது கலிபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் …
-
- 0 replies
- 450 views
-
-
டெல்லி: நாட்டில் விலைவாசி உயர்வு வரைமுறை இல்லாமல், கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் போய்விட்டது! மொத்தவிலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்ந்துவிட, உணவுப் பணவீக்கம் 18.18 சதவீதமாகிவிட்டது! குறிப்பாக உணவுப் பொருள்களின் விலையில் அசாதாரண உயர்வு காணப்படுகிறது. வெங்காயத்தின் விலை கடந்த ஒரு ஆண்டில் 245 சதவீதம் அதிகரித்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையில் 77.81 சதவீத உயர்வு காணப்படுகிறது. அரிசி, தானியங்கள், முட்டை, இறைஞ்சி, பால் பொருட்கள் மற்றும் மீன் போன்றவற்றின் விலையிலும் அசாதாரண ஏற்றம் காணப்படுகிறது. உருளைக் கிழங்கு விலை மட்டும் 15 சதவீதம் குறைந்துள்ளது, கடந்த ஆண்டு இதே மாதத்தோடு ஒப்பிடுகையில். பருப்பு வகைகளின் விலைகளும் 14 சதவீதம் குறைந்துள்ளது. …
-
- 0 replies
- 480 views
-
-
சிரியாவுக்குச் சென்ற ரஷ்ய துணை அமைச்சர் சிரியாவில் நடந்த இரசாயனத்தாக்குதல் குறித்து விசாரித்த ஐநாமன்ற விசாரணை அதிகாரிகள், பக்கசார்பான ஒருதலைப் பட்சமான அறிக்கையை தயாரித்திருப்பதாக ரஷ்யா குற்றம் சுமத்தியிருக்கிறது. இந்த இரசாயனத் தாக்குதல்களை சிரிய அரசு நடத்தவில்லை என்றும், அரச எதிர்ப்பாளர்களே இதை நடத்தினார்கள் என்பதற்கு தம்மிடம் புதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு சிரியாவுக்கு சென்று திரும்பிய ரஷ்யாவின் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் செர்கி யப்கோவ், இந்த இரசாயனத்தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்களை சிரிய அரசு தம்மிடம் அளித்திருப்பதாகவும், அவற்றை தாம் ரஷ்ய நிபுணர்களிடம் கையளிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். தொடர்புடைய வி…
-
- 1 reply
- 390 views
-
-
பெங்களூர்: ப்ரூஹத் பெங்களூர் மகாநகர பாலிகே(பிபிஎம்பி) ரஜினிகாந்தை தனது பிராண்ட் அம்பாசிடராக்க திட்டமிட்டுள்ளது. கார்டன் சிட்டி எனப்படும் பெங்களூர் குப்பை நகரமாக உள்ளது. இந்நிலையில் குப்பையை உலர்ந்த மற்றும் ஈரப்பதம் உள்ள குப்பைகள் என இரண்டாக பிரித்து மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களிடம் வழங்குமாறு பெங்களூர் மாநகராட்சி அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் பெங்களூர் மாநகராட்சியான ப்ரூஹத் பெங்களூர் மகாநகர பாலிகே(பிபிஎம்பி)வின் பிராண்ட் அம்பாசிடராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்க திட்டமிட்டுள்ளனர். அவர் குப்பையை இரண்டு வகையாக பிரித்து வழங்குவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது. பிபிஎம்பியின் புதிய மேயரான பிஎஸ் சத்யநாராயணா ரஜினியின் பள்ளித்…
-
- 0 replies
- 437 views
-
-
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி தனது ஜிகாதி அமைப்பினர் பின்பற்ற வேண்டிய பிரத்தியோகமான வழிமுறைகளை முதலாவதாக வெளியிட்டுள்ளார். இந்த வழிக்காட்டுதலில் ஜிகாதி அமைப்புகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளதாவது: மற்ற முஸ்லிம் அமைப்பினர் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் மீது தாக்குதலை கட்டுப்படுத்தவும். மேலும் பிரச்சினைகள் நடந்து வரும் நாடுகளில் நமது ஜிகாதி அமைப்பினர் தங்கள் செயல்திறனை மேம்படுத்த பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்து கொள்ளவும். அமெரிக்காவின் பொருளாதாரத்தை உருக்குலைக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்த வலியுறுத்துகிறேன். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, ஏமன், சோமாலியா ஆகிய நாடுகளில் போர் புரிவது தவிர்க்க முடியாதது. முஸ்லிம் நாடுகளில் உள்ள இந்து, கிறுஸ்டியன…
-
- 1 reply
- 232 views
-
-
அப்துல் குவாதர் மொல்லா வங்கதேசத்தில் போர்க் குற்றங்கள் புரிந்ததற்காக இஸ்லாமிய அரசியல்வாதிக்கு உச்சநீதிமன்றம் மரணதண்டனை விதித்ததை எதிர்த்து எதிர்கட்சியான ஜமாதி இ இஸ்லாமி கட்சி நடத்தும் நாடுதழுவிய பந்த் காரணமாக பரவலான வன்முறைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. நாடுதழுவிய அளவில் பல்வேறு நகரங்களில் தொடர்ச்சியான வன்முறைகள் இடம்பெற்றுவருகின்றன. இந்த வன்முறைகளில் இதுவரை ஒருவர் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. வங்கதேசத்தின் தெற்குப்பிராந்தியத்தில் ஆர்பாட்டக்காரர்கள் வீசிய கல் ஒன்று தலையில் பட்டதில் இவர் உயிரிழந்திருக்கிறார். வேறொரு இடத்தில் நூற்றுக்கணக்கான ஜமாதி கட்சியைச் சேர்ந்த ஆர்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி வாகனங்களை எரித்து வன்முறையில் ஈடுபட்டபோது அவர்களை…
-
- 0 replies
- 334 views
-
-
இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் . அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத…
-
- 3 replies
- 1.3k views
-
-
டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 19-ம் தேதி அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது. இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் இந்நிலையில், அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார். கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் மறைந்த வி.என்.சொக்கலிங்கம் - வைரம் தம்பதியினரின் மகனாக 4.10.1951 நாகப்பன் பிறந்தார். கரூரில் பள்…
-
- 0 replies
- 423 views
-
-
இந்தியா, அகர்தலா அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த அக்னி 5 ஏவுகணையை இன்று 2வது முறையாக வெற்றிகரமாக ஏவி பரிசோதித்துள்ளது. முற்றிலும் இந்தியத் தொலைநுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணை இது. இந்த ஏவுகணையானது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையும் கூட. கிட்டத்தட்ட 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாகக் கூடிய வல்லமை படைத்தது. அதாவது சீனாவின் பெரும் பகுதியை இந்த ஏவுகணைத் தாக்கக் கூடிய திறன் கொண்டது. இந்த ஏவுகணை ஏற்கனவே ஒரு முறை ஏவிப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 2வது முறையாக ஏவப்பட்டது. ஒடிஷாவின் வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 3 நிலைகளைக் கொண்ட இந்த ஏவுகணையானது, இன்று காலை 8.50 மணிக்கு ஏவிப் பரிசோதிக்கப்பட்டத…
-
- 16 replies
- 1.3k views
-
-
சேதுக்கால்வாய் உருவாக்கப்படும் கடற்பகுதி சேதுக்கால்வாய் திட்டத்தை தற்போது நிறைவேற்றிவரும் வழியிலேயே நிறைவேற்ற விரும்புவதாக இந்திய நடுவணரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளிக்க சுப்பிரமணியசுவாமிக்கும் தமிழக அரசுக்கும் நவம்பர் வரை அவசகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் உருவாக்கப்படும் சேதுக்கால்வாய் திட்டம், ஆதம் பாலம் என்று அறிவியலாளர்களாலும், ராமர் பாலம் என்று சில இந்து மத அமைப்புக்களாலும் அழைக்கப்படும் மணல்திட்டுக்களை குறுக்குவெட்டாக கடந்து செல்கிறது. இப்படி சேதுக்கால்வாய் செல்லும் வழியில் தடையாக இருக்கும் மணல் திட்டுக்களை அகற்றுவது, ராமர் பாலத்தை அகற்றி அழிப்பதாகவும், இது இந்துக்களின் மத உணர்வுகளை புண…
-
- 0 replies
- 612 views
-
-
சீனாவுக்கு எதிரான அடுத்த ஆயுதத்தை அமெரிக்கா தயார்படுத்தியுள்ளது சீனாவுடன் நாம் நட்புடனே உள்ளோம் என அமெரிக்க அதிகாரிகள் அடிக்கடி தெரிவித்துவரும் போதும், சீனாவின் படைத்துறை வளர்ச்சியை ஈடுகட்டும் அடுத்தகட்ட நகர்வுகளில் அமெரிக்கா வெற்றியடைந்துள்ளது. சீனாவின் எல்லைகளின் இருந்து 900 மைல் தூரத்திற்கு அப்பால் அமெரிக்க கடற்படைக் கப்பல்களை விரட்டும் டிஎஃப் 21டி (DF21D) எனப்படும் நீண்டதூர ஏவுகணைகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கான முயற்சிகளின் ஓரு அங்கமாக கடல் நடவடிக்கைகளை தளமாகக் கொண்ட ஆளில்லாத தாக்குதல் மற்றும் வேவு விமானங்களை (Drones) தயாரிக்கும் பணிகளை அமெரிக்காவின் கடற்படை கடந்த சில வருடங்களில் முடுக்கிவிட்டிருந்தது. தரையை தளமாகக் கொண்டியங்கும் ஆளில்லாத தாக்குதல் மற்ற…
-
- 0 replies
- 679 views
-
-
பங்களாதேஷ், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற 1971ல் நடத்திய போரின் போது , ஒட்டுமொத்தமாகப் பலரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இஸ்லாமிய அரசியல்வாதி ஒருவர் செய்த மேல் முறையீட்டில், பங்களாதேஷ் உச்ச நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. பிப்ரவரியில், சிறப்பு போர்க்குற்ற நீதிமன்றம் ஒன்று, அப்துல் குவாதர் மொல்லா என்ற இந்த ஜமாத் இ இஸ்லாமி கட்சித் தலைவருக்கு, ஆயுள் தண்டனை விதித்திருந்தது. ஆயுள்தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டது ஒருவருக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மேல்முறையீட்டில், மரண தண்டனையாக உயர்த்தப்படுவது இதுவே முதன் முறை என்று அவருக்காக வாதிட்ட வழக்குரைஞர் தாஜுல் இஸ்லாம் கூறினார். இந்தத் தீர்ப்பு அ…
-
- 0 replies
- 417 views
-
-
இலங்கையர்கள் தொடர்பில் கனடா புதிய சட்டங்களை அமுல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் பிரஜைகள் தொடாபில் பயோமெற்றிக் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, கனடா வீசா கோரும் குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைவிரல் அடையாளங்களையும் புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் வீசா அல்லது ஏனைய வீசாக்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி முதல் இலங்கையர்கள் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் வீசா விண்ணப்பிக்கும் போது கைவிரல் அடையாளங்களையும் விண்ணப்பித்தில் உள்ளடக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/article…
-
- 0 replies
- 380 views
-
-
கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில், 200 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மீதான புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விசாரணையை துவக்கி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை துரிதப்படுத்தவும், புகாரில் முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யவும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், பி.ரமேஷ் பாபு, தாக்கல் செய்த மனு: கோவையில் 2010 ஜூன், 23ம் தேதி செம்மொழி மாநாடு நடந்தது.இந்த மாநாட்டை, உலக தமிழ் அமைப்பு அங்கீகரிக்கவில்லை. மாநாட்டுக்காக, முன்னாள் முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது; 386 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்…
-
- 2 replies
- 1.8k views
-
-
பிரான்சில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் பிரான்சில் செப்டெம்பேர் 13,14,15 ஆகிய நாட்களில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் அமைப்புகள், மக்கள் போராட்டத்தை பிரதிபடுத்தி, 600,000 மக்கள் கலந்து கொண்ட "Fete de la Humanité" நிகழ்வில் தமிழ் ஈழத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை கலந்து கொண்டு தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தை வலியுறுத்தி தமது செயல்பாடுகளை ஏனைய போராட்ட அமைப்புகளுடன் கலந்து கொண்டு ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் சுயநிர்ணய உரிமைகளை வலியுறுத்தி போராடும் போர்ராட்ட அமைப்புகளின் இன்றைய போராட்ட சூழல் பற்றி நடந்த கலந்துரையாடல், மக்களிடையே ஆனா விவாதத்த்தில் சஹாரவி ஓரியென்டல், தமிழீழம், குர்திஸ்தான்,பாலஸ்தீன மக்கள் பி…
-
- 0 replies
- 432 views
-
-
டெல்லி: பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் நரேந்திர மோடியும், அத்வானியும் ராம் ஜெத்மலானி வீட்டில் நேற்று சந்தித்துக் கொண்டனர். ஆனால் மோடியிடம் அதிகம் பேசாமல் இறுகிய முகத்துடன் காணப்பட்டார் அத்வானி. ராம்ஜேத்மலானியின் 90வது பிறந்த நாளையொட்டி அவரது வீட்டுக்கு அத்வானி வாழ்த்துச் சொல்ல வந்திருந்தார். அதேபோல மோடியும் வந்திருந்தார். அத்வானியைப் பார்த்த மோடி, அவரது காலைத் தொட்டு வணங்க குணிந்தார். ஆனால் அத்வானி அமைதியாக நின்றிருந்தார். பின்னர் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மோடி சிரித்த முகத்துடன் காணப்பட்டார். ஆனால் அத்வானி இறுகிய முகத்துடன் கம்மென்றிருந்தார். மோடியிடம் அவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மேலும் மோடிக்கு அருகிலும் அமரவில்லை. பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில்…
-
- 0 replies
- 421 views
-
-
லண்டன்: இங்கிலாந்து இளவரசி டயானாவை அரச குடும்பத்தில் உள்ள முக்கியப்புள்ளிகள் தான் திட்டமிட்டு கொன்றதாக இங்கிலாந்து ராணுவ வீரர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் உள்ள சில முக்கியப்புள்ளிகள் தான் இளவரசி டயானாவை திட்டம் போட்டு கொன்றுவிட்டதாக இங்கிலாந்து விமானப்படை வீரர் ஒருவர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து பெற்றுவிட்டனர். இது குறித்து அந்த பெண் கூறுகையில், என் முன்னாள் கணவர் கடந்த 2008ம் ஆண்டில் இளவரசர் வில்லியமுக்கு விமானப் படையில் சில பயிற்சி அளித்தார். அப்போது வில்லியம் கார்களில் சில பயிற்சி பெற்றார். என் முன்னாள் கணவரும் சில கார் ஸ்டண்ட்டுகள் செய்தார். ஜன்னல் வழியாக சுடுவது உள்ளிட்டவற்றை வில்லியமு…
-
- 0 replies
- 677 views
-
-
லண்டனில் நீதிமன்ற வழக்கு ஒன்றை எதிர்கொள்ளும் ஒரு முஸ்லிம் பெண்மணி, வழக்கு விசாரணைகளின் போது தனது முகத்திரையை நீக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் முழுமையாக முகம் தெரிய வேண்டும் என்று உத்தரவு அச்சுறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இருபத்து இரண்டு வயதான அந்தப் பெண்மணி தன் மீது தவறில்லை என்று வாதிடுவதற்காக நீதிமன்றம் வந்தபோது, முகத்தை மறைக்கும் நிக்காபை அணிந்து வந்திருந்தார். ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் சமயத்தில், சாட்சியமளிக்கும் போது அவர் முகத்திரையை நீக்கினால்தான் அவரது பிரதிபலிப்புகளை கவனிக்க முடியும் என்று நீதிபதி முடிவு செய்து உத்தரவிட்டார்.முகத்திரையை நீக்கச் சொல்வது அவரது மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்று அவரது…
-
- 0 replies
- 391 views
-
-
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் கடற்படையின் தலைமையகம் அமைந்துள்ளது. இன்று அங்கு மர்ம நபர்கள் 3 பேர் தீடீரென நுழைந்தனர். துப்பாக்கியுடன் உட்புகுந்த அவர்கள் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கியுடன் நுழைந்துள்ள 3 பேரையும் பிடிக்க அந்நாட்டு போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர். அவர்கள் யார் என்பதையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கி சூட்டை அடுத்து வாஷிங்டனில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், ரீகன் சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலைநகரில் இந்த துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதால் இதுகுறித…
-
- 1 reply
- 310 views
-
-
முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் மூத்த பத்திரிகையாளர் சோ நேற்று சந்தித்துப் பேசினார். காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் வரை நீடித்தது. பாஜகவில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை மூத்த பத்திரிகையாளர் சோ சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்ற விழாவில் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.இதேபோன்று, குஜராத் முதல்வராக மோடி மீண்டும் பதவியேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றார். பாஜக பிரசார குழுத் தலைவராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டபோது, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் ஜெயலல…
-
- 1 reply
- 662 views
-