உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26603 topics in this forum
-
பிரித்தானிய பொது தேர்தலுக்கான காலம் அறிவிப்பு பிரித்தானியாவில் அடுத்த பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ம் திகதி நடைபெற இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை திடீரென வெளியிட்டுள்ளார். இதனிடையே, ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விடவும் வெற்றி வாய்ப்பு லேபர் கட்சிக்கு இருப்பதாகவே கூறப்படுகிறது. இதுவரையான கருத்துக்கணிப்பில் லேபர் கட்சி 44 சதவிகிதத்துடனும் கன்சர்வேடிவ் கட்சி 23 சதவிகிதத்துடனும் உள்ளது. மக்கள் ஆதரவு இந்த நிலையில் விலைவாசி உயர்வு பெருமளவு சரிவை சந்தித்துள்ள நிலையிலேயே தேர்தல் அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் மார்ச் மாதம் 3.2 சதவிகிதமாக இர…
-
- 0 replies
- 285 views
-
-
சில அயோவா சமூகங்கள் புதனன்று விழித்தெழுந்து, இப்போது அடையாளம் காண முடியாத வீடுகளின் இடிபாடுகளைப் பிரித்தெடுக்கின்றன மற்றும் மத்திய மேற்கு செவ்வாய்கிழமை வழியாக கிழித்தெறிந்து, இப்போது அமெரிக்காவின் மிகப் பரந்த பகுதியை அச்சுறுத்தும் சூறாவளி-முளைக்கும் புயல்களால் கொல்லப்பட்ட அண்டை வீட்டாரின் மரணங்களுக்கு இரங்கல் தெரிவிக்கின்றன. . அயோவாவின் சிறிய நகரமான கிரீன்ஃபீல்டில் பல உயிரிழப்புகள் மற்றும் சில காயங்கள் பதிவாகியுள்ளன - டெஸ் மொயினுக்கு தென்மேற்கே 50 மைல் தொலைவில் - செவ்வாய்க்கிழமை மாலை ஒரு சூறாவளி சமூகத்தின் வழியாக பேரழிவு தரும் பாதையை செதுக்கிய பின்னர், அயோவா மாநில ரோந்து செய்தித் தொடர்பாளர் சார்ஜென்ட். அலெக்ஸ் டிங்க்லா சிஎன்என் நிறுவனத்திடம் கூறினார். இறந்தவர்களின் …
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது - இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கனடா ஏற்கனவே தடைகளை விதித்துள்ளது - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தியில் கனடா பிரதமர் Published By: RAJEEBAN 19 MAY, 2024 | 07:49 AM சர்வதேச அளவில் மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள…
-
- 1 reply
- 362 views
- 1 follower
-
-
ஜூன் 28இல் ஈரான் ஜனாதிபதி தேர்தல் May 22, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்ட நிலையில் ஈரானில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் ஜூன் 28 ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் இறுதித் தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் பெற்ற உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமனெய், ஜனாதிபதியின் மரணத்திற்கு ஐந்து நாள் துக்க தினத்தை அறிவித்திருப்பதோடு, துணை ஜனாதிபதியான 68 வயது மொஹமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் நீதித் துறை, அரசு மற்றும் பாராளுமன்ற தலைவர்களின் கூட்டத்தில் தேர்தல் திகதிக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. பாதுகாவல் சபையினால் எடுக்கப்ப…
-
- 0 replies
- 262 views
-
-
“காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல”-ஜோ பைடன். காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல என்றும், ஹமாஸ் படையினர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத – அமெரிக்க பாரம்பரிய மாத நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜோ பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”காசாவில் ஹமாஸ் படையினருக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலியப் படைகள் இனப்படுகொலை செய்யவில்லை. காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல. இனப்படுகொலை நடப்பதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். ஹமாஸால் பாதிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். ஒக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக…
-
-
- 4 replies
- 591 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் பார்ட்ரிட்ஜ் பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுக்கான 61 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான இராணுவ நிதியுதவியை அமெரிக்க அளிக்கவுள்ளது. இதன் மூலம் யுக்ரேன் எந்த மாதிரியான ஆயுதங்களை பெறப் போகிறது? ரஷ்ய ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் யுக்ரேன் முயற்சிக்கு இது எப்படி கைகொடுக்கும்? வான் பாதுகாப்பு அமைப்புகள், நடுத்தர முதல் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் ஆகியவை யுக்ரேனுக்குத் தேவையான மிக முக்கியமான ஆயுதங்கள் ஆகும். இந்த மூன்று ஆயுதங்களையும் வாங்கவே அமெரிக்காவின் நிதியுதவி பயன…
-
-
- 15 replies
- 1.3k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 21 MAY, 2024 | 11:08 AM காசாவில் செயற்படும் ஒரேயொரு மருத்துவமனைக்குள் சிக்குண்டுள்ள அவுஸ்திரேலிய மருத்துவர், அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கிருந்து தன்னையும் தனது குழுவினரையும் வெளியேற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் மருத்துவமனைக்கு மருந்துபொருட்களை அனுப்பவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல் ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் கான் யூனிசில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்குள் சிட்னியை சேர்ந்த மருத்துவர் மோதர் அல்பெருட்டி உட்பட 16 மருத்துவர்களும் மருத்துவசுகாதார பணியாளர்களும் சிக்குண்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலில் அவுஸ்திரேலிய மனிதாபிமான பணியாளர் கொல்லப்பட்டது ப…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது) மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட். கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி போவன் பதவி, சர்வதேச ஆசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தாம் கைது வாரண்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற செய்திக்கு, ஒரு காணொளி மூலமாக தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. “இது வரலாறு காணாத தார்மீக மீறல்" என்று கூறிய அவர், “இரண்டாம் உலகப்போர் காலத்து யூத இனஅழிப்பிற்கு பிறகு யூத மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை அரங்கேற்றிய, இனப் படுகொலைகளை ச…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 55 நிமிடங்களுக்கு முன்னர் இரான் அதிபரின் வாகனத் தொகுதியில் இடம் பெற்றிருந்த 3 ஹெலிகாப்டர்களில் ஒன்று விபத்தில் சிக்கிவிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தரையில் மோதியதாக இரான் அரசு ஊடகம் கூறும் அந்த ஹெலிகாப்டரில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்தாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. மீட்புக்குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்திருப்பதாகவும், மோசமான வானிலை காரணமாக அந்த இடத்தை அடைவதில் சிரமம் இருப்பதாகவும் இரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார். கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர்…
-
-
- 44 replies
- 2.4k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 20 MAY, 2024 | 12:18 PM ஈரானின் துணை ஜனாதிபதி முகமட் மொக்பெர் ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகின்றன. ஈரானின் சட்டவிதிமுறைகளின் படி ஜனாதிபதியொருவர் உயிரிழந்து 50 நாட்களிற்குள் ஜனாதிபதி தேர்தல்இடம்பெறவேண்டும் . 1955ம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி பிறந்த மொக்பெர் ஈரானின் மததலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு மிகவும் நெருக்கமானவர். ஈரான் குறித்த அனைத்து இறுதி முடிவையும் எடுப்பவர் ஆயத்துல்லா அலி கமேனி என்பது குறிப்பிடத்தக்கது. 2021 இல் ரைசி தெரிவு செய்யப்பட்டவேளை மொக்பெர் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். கடந்த ஒக்டோபரில் மொஸ்கோவி…
-
- 1 reply
- 451 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது) மற்றும் அமைச்சர் பென்னி காண்ட்ஸ் (வலது) கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டி கூனே பதவி, பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா பகுதியில் போருக்குப் பிந்தைய திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வகுக்காவிட்டால் பதவி விலகுவதாக இஸ்ரேலிய போர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பென்னி காண்ட்ஸ் மிரட்டல் விடுத்துள்ளார். ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆறு இலக்குகளை முன்வைத்த பென்னி காண்ட்ஸ், அவற்றை அடைவதற்கான காலக்கெடுவை ஜூன் 8 வரை நிர்ணயித்தார். காஸாவில் ஹமாஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருதல், அங்கு ஒரு பன்னாட…
-
-
- 2 replies
- 481 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 19 MAY, 2024 | 10:28 AM இனப்படுகொலையை நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேச தலையீடுகளில் ஈடுபடுவதுடன் திட்டமிட்டு பிழையான தகவல்களை வெளியிடுதல் பரப்புதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது என கனடா பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை தினம் என குறிப்பிடப்படும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 வருடத்தை இன்றைய தினம் குறிக்கின்றது என பட்ரிக் பிரவுண் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு ஆயுதமோதலின் இறுதி தருணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்ற இனப்படுகொலையில் ப…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 18 MAY, 2024 | 08:35 AM ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தினை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் மற்றும் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என அங்கீகரிக்கவேண்டும் என கோரும் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதனை வரவேற்றுள்ளனர். தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு உரைகள் ஆற்றப்பட்ட பின்னர் அமெரிக்க காங்கிரஸ்; உறுப்பினர்கள் காங்கிரஸ் நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர் . இந்த நிகழ்வில்…
-
-
- 6 replies
- 509 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், கோர்டன் கோரேரா பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனா மீது கவனம் செலுத்த வேண்டும் என்று மேற்குலகத்தைச் சேர்ந்த நாடுகள் நீண்ட காலமாகவே பேசி வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம், பிரிட்டனின் அரசாங்க தகவல் தொடர்பு தலைமையக(GCHQ) உளவு முகமையின் தலைவர், “இது ஒரு சகாப்தத்தின் சவால்” என்று விவரித்துள்ளார். மேற்குலக நாடுகளில் சீனாவுக்கு ஆதரவாக உளவு பார்த்தல் மற்றும் ஹேக்கிங் செய்வதாக பலரும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஹாங்காங் உளவு முகமைகளுக்கு உதவி வருவதாக பிரிட்டனில் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமையன்று சீன தூதரு…
-
- 1 reply
- 456 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 17 MAY, 2024 | 12:41 PM ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிடவேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. தென்னாபிரிக்க சட்டத்தரணிகள் எழுத்துமூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏழு மாத காசா யுத்தம் 35000 பேரை கொலை செய்துள்ளதுடன் காசாவை தரைமட்டமாக்கியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். துயரம் என்பது மிகமோசமானதாக காணப்படுவதால் உணவு மருந்து போன்றவற்றை காசாவிற்குள் கொண்டு செல்வதற்கு யுத்தநிறுத்தம் அ…
-
- 1 reply
- 300 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 18 MAY, 2024 | 05:45 PM ஆயுதமோதலின் இறுதிநாட்களில் தமிழர்களிற்கு எதிராக இடம்பெற்ற படுகொலைகளிற்கு நீதியும் பொறுப்புக்கூறலும் அவசியம் என பிரிட்டனின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கம் டெபனயர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதிதருணங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களையும் இடம்பெற்ற பரந்துபட்ட மனித உரிமை மீறல்களையும் நாங்கள் இன்று நினைவுகூருகின்றோம் என என டிஜிட்டல் கலாச்சாரம் ஊடகம் விளையாட்டு நிழல் அமைச்சர் தங்கம் டெபனெயர் தெரிவித்துள்ளார். இன்று எனது சிந்தனைகள் தாங்கள் எதிர்கொண்ட அநீதிகள் காரணமாக தொடர்ந்தும் வேதனையுடன் வாழும் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் அவர்களி…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
பிரித்தானிய (British) நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து (Sri Lanka) ஏதிலியாக சென்ற தமிழர் பதவியேற்றுள்ளார். தொழில் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் (Elango Elavalakan) என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். "நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று இளவழகன் கூறியுள்ளார். வேட்புமனு இவருக்கான வேட்புமனுவை சபையின் தலைவர் நீல் மெக்டொனால்ட் (Neil MacDonald) முன்மொழிந்துள்ளார். "போர் மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடிய ஒரு ஏதிலியின் இந்த அறிவிப்பு, ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கி இங்குள்ள…
-
- 3 replies
- 508 views
-
-
பிரித்தானியாவில் ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை இனி வெளியாகாது! பிரித்தானியாவில் 86 ஆண்டுகளாக வெளியாகிய ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை, இனி வெளியாகாது என அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் (Eva Mackevic) தெரிவித்துள்ளார். நிதிநெருக்கடி காரணமாக ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) பதிப்பினை இத்துடன் முடித்துக் கொள்வதாக, இவா மெக்கெவிக் (Eva Mackevic) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது பதிவில், துரதிர்ஷ்டவசமாக நிதிசார்ந்த பிரச்னைகளை நிறுவனத்தால் தாங்க முடியவில்லை என்பதால் பதிப்பினை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. தனது சக ஊழியர்களுக்கும், பத்திரிகையின் எழுத்தாளர்களுக்கும், பல ஆண்டுகளாக ஒத்துழைத்த பிரதிநிதிகள…
-
- 0 replies
- 338 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, பிபிசி சீனா செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சீனாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்கிறார். புதின் ஐந்தாவது முறை ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றபின்னர் இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். யுக்ரேன் மீது அவர் படையெடுப்பினைத் துவங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சீனா ரஷ்யாவுக்கு முக்கிய நட்பு நாடாக இருந்துவருகிறது. சீனா யுக்ரேன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போரைக் கண்டிக்க மறுத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபத்திற்கு ஆளான ரஷ்யாவுடன் தொடர்ந்து வர…
-
-
- 2 replies
- 426 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கடெரினா கின்குலோவா பதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜார்ஜியா நாட்டில், 'ரஷ்யா சட்டம்' என்று அழைக்கப்படும் 'வெளிநாட்டுச் செல்வாக்கு' பற்றிய புதிய சட்டத்திற்கு எதிராக வெகுஜன மக்களின் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மற்றொருபுறம் ரஷ்யாவில் இருந்து விலகி ஐரோப்பாவை நோக்கி நகரும் முயற்சிகள், தற்போது யுக்ரேனுக்கு நேர்ந்திருக்கும் போர் மற்றும் ஆக்கிரமிப்பை ஜார்ஜியாவிலும் ஏற்படுத்தும் என்ற கவலைகளும் அந்நாட்டில் அதிகரித்து வருகின்றன. கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையிலுள்ள பகுதியான தெற்கு காகசஸ் பகுதியில் அமைந்துள்ள நாடு ஜார்ஜியா. இதன…
-
- 2 replies
- 323 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டெஸ்ஸா வாங் பதவி, பிபிசி செய்தியாளர், சிங்கப்பூரிலிருந்து 19 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் (Lee Hsien Loong) பதவியிலிருந்து வலகுகிறார். அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் (Lawrence Wong) இன்று இரவு (புதன்கிழமை, மே 15) லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைப்பார். இது சிங்கப்பூரின் வரலாற்றில் 59 ஆண்டுகள் நீடித்த ஓர் அரசியல் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. 1965-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து, சிங்கப்பூருக்கு மூன்று பிரதமர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் …
-
-
- 2 replies
- 442 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 15 MAY, 2024 | 01:00 PM நாங்கள் இரண்டாவது நக்பாவை எதிர்நோக்கியுள்ளோம் என தெரிவிக்கும் பாலஸ்தீனியர்கள் எனினும் இம்முறை தனித்து விடப்பட்டுள்ளதாகவும் தனியாக அதனை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பாலஸ்தீனியர்கள் 1948 ம்ஆண்டு பலவந்தமாக இடம்பெயரச்செய்ப்பட்டு இன்றுடன் 76 ஆண்டுகள்பூர்த்தியாகியுள்ளன. எனினும் அன்று இஸ்ரேலிற்கு எதிராக அராபிய நாடுகள் ஒரணியில்காணப்பட்டன. எனினும் காசாவில் இடம்பெறும் யுத்தங்களும் மேற்குகரையில் இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பும் இரண்டாவது நக்பா அரங்கேறுகின்றது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் என தெரிவித்துள்ள பாலஸ்தீன மக்கள் ஆனால் இம்முறை நாங்கள் அதனை தனியாக எதிர்…
-
- 2 replies
- 334 views
- 1 follower
-
-
26 மார்ச் 2024, 08:27 GMT புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலம், கன்டெய்னர் கப்பல் மோதியதில், படாப்ஸ்கோ ஆற்றில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. ஏழு பேர், பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பாலம் முழுவதுமாக தண்ணீரில் இறங்குவதை சமூக ஊடகங்களில் காணொளிகளில் காண முடிகிறது. மோதிய கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது. 300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. போலீஸ் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பலமுறை சுற்றிவருவதை விமா…
-
-
- 32 replies
- 4.4k views
- 1 follower
-
-
பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது. வெள்ளப் பெருக்கில் 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் 754 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் தமது இருப்பிடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரேசிலில் தற்போது கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/301346
-
- 2 replies
- 317 views
- 1 follower
-
-
இந்த படுகொலை முயற்சி அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் சந்தேக நபர் ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அதைச் செய்ய முடிவெடுத்தார், ”என்று உள்துறை அமைச்சர் Matúš Šutaj Eštok, Banská Bystrica மருத்துவமனைக்கு வெளியே ஒரு செய்தி மாநாட்டில் கூறினார், அங்கு பிரதமர் சிகிச்சை பெற்றார். https://www.cnn.com/europe/live-news/robert-fico-slovakia-prime-minister-shooting-05-15-24/index.html
-
-
- 7 replies
- 650 views
- 2 followers
-