Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உளவுபார்க்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாரையொன்று எகிப்தில் பிடிபட்டுள்ளது. குறித்த பறவையை நபரொருவர் பிடித்துள்ளதுடன் கெயிரோவிற்கு தென்கிழக்கில் சுமார் 280 மைல்கள் தொலைவில் உள்ள கீனா என்ற பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் ஒப்படைத்துள்ளார். நாரையின் உடலின் மேற்பகுதியில் இலத்திரனியல் உபகரணமொன்று பொருத்தப்பட்டுள்ளமையால் இது உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை பரிசோதித்த அதிகாரிகள் நாரையின் உடலில் பொருத்தப்பட்டுள்ள கருவி வெடிக்கக்கூடியதோ அல்லது உளவுபார்க்கும் கருவியோ அல்லவென தெரிவித்துள்ளனர். இது பறவைகளின் நடவடிக்கை தொடர்பில் அவதானிக்கும் 'டி…

  2. UK நாடாளுமன்றில் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக 272 வாக்குகளும் எதிராக 285 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சிரியாவில் கடந்த வாரம் நடந்த ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியா மீதான ராணுவ நடவடிக்கையை தனியாகவே கூட எடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதை குறிப்புணர்த்தும் விதமாக மற்ற நாடுகளின் அயலுறவுக்கொள்கைக்கு அமெரிக்கா பொறுப்பாக முடியாது என்று அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கூறியிருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போது இவர் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரும் பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் வியாழனன்று இரவு தோற்றுப்போன பின்னணியில், சிரியாவுக்கு எதிரான ராணுவ ந…

    • 10 replies
    • 767 views
  3. டமாஸ்கஸ்; ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழு சிரியாவை விட்டு வெளியேறிவிட்டது. இதனால் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான ஏதுவான சூழல் உருவாகியுள்ளது. பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை சிரியா ராணுவம் வீசித் தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புகார் கூறின. இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் குழு, ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய சிரியா வந்தது. இந்த நிலையில் சிரியா மீது சிறிய அளவிலாவது ராணுவ தாக்குதலை நடத்திவிடுவது என்ற முடிவில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அனேகமாக அடுத்த ஓரிரு நாட்களில் இத்தாக்குதல் நடைபெறக் கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும் ஐ.…

  4. ஒரு நாட்டின் பிரதமரை திருடன் என்று கூறுவது எந்த நாட்டிலாவது நடப்பதுண்டா? என பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை அடைந்து வரும் நிலையில், இது தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்ற மேல்சபையில் இன்று விளக்கம் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு பல்வேறு உள்நாட்டுக் காரணிகளும் காரணங்களாக உள்ளன. சர்வதேச பொருளாதார வீழ்ச்சியும்,ரூபாயின் மதிப்பு சரிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. சிரியாவில் தற்ப…

  5. எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு சிரியா சமாதியாக மாறிவிடும் என சிரியா பிரதமர் வயெல் அல்-ஹல்கி கூறியுள்ளார். சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற போர் மேகம் சூழ்ந்துள்ள வேளையில் பேட்டியளித்த சிரியா பிரதமர் வயெல் அல்-ஹல்கி, அமெரிக்காவில் தொடங்கி அனைத்து மேற்கத்திய நாடுகளும் சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு தங்களுக்கு ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா? என்று தேடி வருகின்றனர். அவர்களுக்கு வசதியாக சில காட்சியமைப்புகளை உருவாக்கவும் சிலர் துடிக்கின்றனர். எங்கள் மீது தாக்குதல் நடத்த நினைத்தால் 1973ல் யோம் கிப்பூர் போரின் போது கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை இப்போதும் அளித்து எங்களை தாக்க நினைப்பவர்களின் சுடுகாடாக சிரியாவை மாற்று…

    • 20 replies
    • 1k views
  6. வணக்கம் உறவுகளே, இந்த தலைப்பில் உலகில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் மற்றும் முக்கிய அரசியல் விடையங்களை மிகவும் சுருக்கமாக நீங்கள் படித்தவற்றை உங்கள் நாட்டு மொழிகளில் நீங்கள் வாசிதவைகளை உங்கள் தமிழில் பகிர்ந்து கொள்ளுங்கள் புதிய அரசியல் மாற்றங்களோடு தம்மை இணைத்து புதிய நேச சக்திகளையும் புதிய உலகநாடுகளை நண்பர்களாக மாற்றுவதற்கும் தமிழர் தரப்பு பல்வேறு உலக நாடுகளின் அரசியல் தந்திரோபாயங்களையும், அரசியல் பேரம் பேசல்களையும், அரசியல் சானக்கியங்களையும் அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும்....... அந்த வகையில் நான் இன்று படித்து ஆச்சரியம் அடைந்த ஒரு விடையம்.......... இன்றைய உலகு பணமும் பொருளாதார நலன்களும் சார்ந்து தங்கள் நாட்டு கொள்கைகளை மாற்றி அமைத்து கொள்கின்றன என்பதற்கு இத…

    • 23 replies
    • 2.1k views
  7. சுவிசர்லாந்தின் மிக நீளமான சுரங்கப்பாதையாக கருதப்படும் கோத்தாட் தொடரூந்து சுரங்கப்பாதையில் முதலாவது தொடரூந்தின் வெள்ளோட்டம் இடம்பெற்றது. ஊரி மாநிலத்திலிருந்து திச்சினோ மாநிலம் வரையான 57கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை உலகில் நீளமான சுரங்கப்பாதை என கருதப்படுகிறது. 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பமான சுரங்கப்பாதை நிர்மாணிப்பு பணிகள் 1000 நாட்களில் நிறைவு பெற்றிருப்பதாக தொடருந்து பாதை நிர்மாண பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சூரிச் நகரிலிருந்து இத்தாலி மிலான் நகருக்கான அதிவேக தொடருந்தின் நேரம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.thinakkathir.com/?p=51943#sthash.mtcWhMFU.dpuf

  8. மாஸ்கோ: சிரியா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எந்த நேரத்திலும் கூட்டாக தாக்குதல் நடத்தக் கூடும் என்ற நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைகின்றன. ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்களை சிரியா படுகொலை செய்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவுக்கு எதிராக யுத்தம் நடத்த முனைப்பு காட்டுகின்றன. இது தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் சிரியா மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று ரஷ்யாவும் ஈரானும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் மத்திய தரைக்கடலை சுற்றிய பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய போர்க் கப்பல்களை …

  9. எங்கள் தேசிய #மொழி #தெலுங்கு. இந்திய பாராளுமன்றத்தில் எங்கள் மொழியில் பேச எங்களுக்கு உரிமை இல்லையா? - ஹரி கிருஷ்ணா தெலுங்கு தேச எம்.பி சாடல். சில நாட்களுக்கு முன்பு தெலுங்கான விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் ஹரி கிருஷ்ணா பேசும் போது அவருடைய தாய் மொழியில் தான் பேசுவேன் என்று கூறினார் . பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தாய் மொழியில் பேசலாம் என்ற விதி உள்ளது . அமைச்சர்கள் மட்டும் தான் தங்கள் #தாய் மொழியில் பேச உரிமை இல்லை. இருந்தும் பாராளுமன்ற நாயகர் மலையாளி குரியன் அதற்கு அனுமதி மறுத்தார். தனக்கு தெலுங்கு மொழி தெரியாது அதனால் ஹிந்தியிலோ ஆங்கிலத்திலோ ஹரிகிருஷ்ணா பேசுமாறு கூறினார் . அதற்கு ஹரி கிருஷ்ணா கூறிய பதில்கள்.. #ஆந்திரா எங்கள் நாடு. தெலுங்கு எங்கள் தேசிய மொழி.…

  10. இஸ்லாமாபாத்: துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களின் பிரதிநிதிகள் இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் 5 இந்திய ராணுவ வீரர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் நியூயார்க் நகரில் இந்திய-பாகிஸ்தான் பிரதமர்கள் சந்தித்து பேசுவர் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் பிரதமருடன் எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்தக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இருநாட்டு பிரதமர்களின் பிரதிநிதிகளாக பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுச் செயலர் செர்யார் கான், இந்தியாவின் முன்னாள் தூதர் லம்பா ஆகியோர் நேற்று அதிகாரப்பூர்வம…

  11. ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ராணுவத்தினர் நடத்திய என்கவுண்டரில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கந்தர்பால் மாவட்டம் பிராங் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நள்ளிரவில் அப்பகுதியில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தீவிரவாதிகள் சிந்து நதியை கடக்க முயற்சித்தபோது ராணுவத்தினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த அசுதுல்லா என்ற தீவிரவாதியும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. http://tamil.oneindia.in/news/2013/08/30/india-j-k-security-forces-kill-five-terrorists-in-an-encounter-182400.html

  12. இந்தியா இராணுவத் தேவைகளுக்கான தனது முதல் செயற்கைக் கோளை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஜி சாட் 7 என்ற பெயரிடப்பட்ட இந்தச் செயற்கைக்கோள் பிரன்ச் கயானாவில் இருந்து ஏரியான் ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை மாலை விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுப் பாதையில் அடுத்தவாரம் நிலைநிறுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தச் செயற்கைக் கோள் இந்தியக் கடற்படையின் தகவல் பரிமாற்றத்தையும், உளவறியும் திறமையையும் மேம்படுத்தும். ஏரியான் ராக்கெட் ஏற்கனவே இருக்கம் செயற்கைக் கோள்களை இராணுவத் தேவைக்காக பயன்படுத்த முடியும் என்றாலும், இந்தச் செயற்கைக்கோள் இராணுவத்தினரின் பிரத்யேக தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். இந்தியா பல தொலைத் தொ…

  13. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. நாடாளுமன்றத்தில் பிரதமர் இன்று விளக்கம்! டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்க இருக்கிறார். ராஜ்யசபாவில் நேற்று ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்தும் பொருளாதார நெருக்கடி குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அப்போது சபையில் இருந்த பிரதமர் மன்மோகன்சிங், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதுபோன்ற …

  14. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் மருத்துவமனையுடன் கூடிய ராணுவ முகாம் உள்ளது. அங்குள்ள மருத்துவ கூடத்தில், கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 5ந் தேதி ராணுவ மேஜர் நிடால் ஹாசன்(42) என்பவர் திடீரென்று வெறிபிடித்தவராக துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். அதில் ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 31 பேர் படுகாயம் அடைந்தார்கள். இதையொட்டி ஹாசன் கைது செய்யப்பட்டு கன்சாஸ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை 13 அதிகாரிகளை நீதிபதியாக கொண்ட ராணுவ கோர்ட்டு விசாரித்து நிடால் ஹாசனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இஸ்லாமியரான அவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். அமெரிக்க ராணுவ கோர்ட்டு சுமார் 52 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் மரணதண்டனை விதித்…

  15. சிரியாவில் அரசுப்படைகள் இரசாயனக் குண்டுகளை வீசி ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களைக் கொன்றுள்ள நிலையில், அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் ஒன்று மத்தியத்தரைக்கடல் விரைகிறது. ஏற்கனவே அப்பிராந்தியத்தில் மூன்று அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் மூலம் அதன் எண்ணிக்கை நான்காக உயர்கிறது. இருந்தும் சிரியாவிற்கு எதிராக எந்த தாக்குதலையும் தொடுக்க ஆயுத்தமாக இருக்கும்படி எங்களுக்கு உத்தரவும் வரவில்லை என்று அங்குள்ள அமெரிக்க கப்பற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா சிரியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த தீர்மானித்துக் …

  16. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சிரியா குறித்த காரசாரமான விவாதம் ஆரம்பித்துள்ளது. சிரியாவில் இராணுவ தலையீட்டுக்கான அடிப்படைகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஆதரவைக் கோருகிறது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் தன்னால் தாக்கல் செய்யப்படும் தீர்மானமானது சிரியா விடயத்தில் ஒரு பக்கசார்பு நிலைப்பாட்டை எடுப்பதோ அல்லது சிரியாவில் ஆட்சிமாற்றத்துக்காக அங்கு ஆக்கிரமிப்பதோ அல்ல என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமர் டேவிட் கமெரன் கூறினார். அது அங்கு நடந்த பெரும் எடுப்பிலான இரசாயன தாக்குதல் குறித்தது என்றும், போர்க்குற்றம் ஒன்றுக்கான பிரிட்டனின் பதில் நடவடிக்கை குறித்தது என்றும் அவர் கூறினார். டமாஸ்கஸில் கடந்த வாரம் ஒரு இரசாயன ஆயுதத் தாக்குதல் …

  17. டெல்லி: சிரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் இந்திய பொருளாதாரம் மிகப் பெரும் வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடல் நாடான சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ரசாயன குண்டுகளை சிரியா அரசு பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்றது என்று புகார் சொல்கிறது அமெரிக்கா. இந்த புகார் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர் சிரியாவுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.தற்போது ஐ.நா. குழு ஆய்வு நடத்தி வந்தாலும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்து நட்பு நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது. ஆன…

  18. டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் மாயமானது தொடர்பாக காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ கோரும் ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சிபிஐ கோரிய ஆவணங்கள் பலவும் காணாமல் போய்விட்டது என்று கைவிரித்தது மத்திய அரசு. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . மத்திய அரசு ஆவணங்களைக் காணவில்லை என்று கூறியதையும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஒரு சிறு …

  19. டெல்லி: நாடு இப்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதை தாம் மறுக்கவில்லை என்றும் இது குறித்து நாளை நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறேன் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார நிலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. அருண் ஜேட்லி கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பு சரிவடைவது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் தேவை என்றும் பொருளாதார நிலை குறித்து நாளை சபையில் விளக்கம் அளிப்பதாகவும் பிரதமர் கூறினார். மேலும், இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதை தாம் மறுக்கவில்லை. உள்நாட்டு விவகாரங்களும், சர்வதேச சூழ்நிலைகளும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவத…

  20. பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞரான பவானிசிங் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார். 1991-96ஆம் ஆண்டு முதல் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பல முட்டுக்கட்டைகளைத் தாண்டி பெங்களூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக இந்த வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ள அனுமதி கோரியது. பெங்களூர் நீதிமன்றமும் இதற்கு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை பதவியில…

  21. ஐநா கண்காணிப்பாளர்கள் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் நடந்த இரசாயன தாக்குதலுக்கு சிரியாவின் அரசாங்கமே பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியும், அங்கு மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை என்று கோரியும் பிரிட்டன், ஐநா பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவருகிறது. இதற்கு பதிலளித்துள்ள சிரியாவின் கூட்டாளியான ரஷ்யா, ஐநாவின் எந்தவொரு தீர்மானத்தையும் கொண்டுவருவதற்கு முன்னதாக, சிரியாவில் உள்ள ஐநா இரசாயன ஆயுத பரிசோதகர்கள் அவர்களது பணியை முடித்தாக வேண்டும் என்று கூறியுள்ளது. பாதுகாப்பு குறித்த கரிசனைகளால் தமது நடவடிக்கைகள் தாமதமடைந்ததை அடுத்து முன்னதாக டமாஸ்கஸில் பரிசோதகர்கள், தமது பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். அவர்கள் தமது புலனாய்வை முடிப்பதற்கு 4 நாட்களாவது ஆக…

    • 3 replies
    • 656 views
  22. பேஸ் புக் எனப்படும் முகநூல் பயன்பாட்டாளர்கள் குறித்த தகவல்களை தரும்படி கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. முகநூல் நிறுவனம் தனது செயற்பாடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை அறிக்கையில் இதை தெரிவித்திருக்கிறது. முகநூல் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உலக அளவில் அதிகபட்சமாக முகநூலர்களின் தகவல்களைக் கோரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, கேனடா ஆகிய இருநாடுகளும் இணைந்து முதல் இடத்தில் இருக்கின்றன. அடுத்த இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2013 ஆம் ஆண்டின் முதல் ஆறுமாத காலத்தில் மட்டும் இந்தியா 3245 வேண்டுகோள்களை முகநூல் நிறுவனத்த…

  23. ஒரு ஆண்டு நீடித்த விசாரணைகளுக்குப் பிறகு படகு மூலம் ஆட் கடத்தல் செய்யும் 5 ஆண்களை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர். அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றி வந்த 132 படகுப் பயணங்களை இவர்கள் ஏற்பாடு செய்தவர்கள் அல்லது அது தொடர்பில் முக்கிய பங்காற்றியவர்கள் என்று ஆஸ்திரேலிய போலீசார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் ஆப்கானியர்கள். ஒருவர் இரானியர். ஐந்தாவது நபர் பாகிஸ்தானியர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து அகதித் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் வெகுவாக உயர்ந்தது. இதையடுத்து அகதிப் படகுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை அறிவித்த ஆஸ்திரேலிய அரசு, படகுகளில் வருபவர்கள் நாட்டினுள் அனுமதிக்கப்பட ம…

  24. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவரை கைது செய்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இந்த அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் தலைவர் யாசின் பட்கால் இந்திய நேபாள எல்லைக்கு அருகே புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாகவும் அவர் தற்போது பிகார் மாநிலத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். யாசின் பட்கால் சமீப ஆண்டுகளில் புனா, பெங்களூர், ஐதிராபாத் போன்ற ஆண்டுகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு இந்த அமைப்பின் மீது பழி போடப்பட்டுள்ளது. இத்தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். யாசின் பட்கால் உடனிரு…

  25. பெய்ஜிங்: பிளாக் நடத்துவதாக கூறி அதன் மூலம் விபச்சாரத்தை நடத்தி வந்த சீன அமெரிக்கர் உள்பட 27 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த நபரின் பெயர் ஸூ சார்லஸ் பி சுவான். 60 வயதாகிறது இவருக்கு. பிரபலமான நபர். இவரது பிளாக்குக்கு 1.2 கோடி பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பெய்ஜிங் மாவட்டம் சாயோங் என்ற இடத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். குரூப் செக்ஸ் விருந்துகளுக்கு இவர் ஏற்பாடு செய்து விபச்சாரத் தொழிலை நடத்தி வந்ததாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இவருடன் சேர்த்துக் கைதானவர்களில் 18 பேர் பெண்கள் ஆவர். http://tamil.oneindia.in/news/2013/08/29/world-ace-microblogger-held-prostitution-in-china-182305.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.