உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
திராவிடம் V/S தமிழ் தேசியம் சுதந்திரம் கிடைத்த பிறகு தேசிய அரசியலில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இந்திய தேசத்தை காங்கிரஸ்தான் வழிநடத்தி வருகிறது. நாட்டை அது வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்குப்பதில் கடந்த பத்தாண்டுகளில் கடுமையான வீழ்ச்சியை நோக்கி நகர்த்திவிட்டிருக்கிறது. அதிலும் சோனியாவின் வழிநடத்தலில் மன்மோகன், சிதம்பரம் எனும் பெரிய பொருளாதார மேதைகள் சர்க்கஸ் கோமாளிகளாக மாறிவிட்டனர். ஆனால் தமிகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள் ஓரளவுக்கு வளர்ச்சியாகவே இருக்கிறது. இதற்கு காரனம் இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள், இயக்கங்கள் போன்றவைதான். ஒப்பு நோக்கலில் தெலங்கானா தவிர்த்த ராயல சீமா, ஆந்திரா பகுதிகள் செழிப்பானவைகவே இருக்கின்றன. தமிழகத்தை பொருத்தவரை காமராஜருக்கு பின்னால் …
-
- 0 replies
- 671 views
-
-
ஈழத்தில் இருந்து ஒரு குரல் இலங்கையர் மூவரையும் நாடுகடத்தக்கூடாது - வைகோ கோரிக்கை! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஈழ நேரு, செந்தூரன், இத்தாலியராஜன் (எ) சுந்தரராஜன் ஆகிய மூன்று இலங்கைத்தமிழர்களை திரும்ப அவர்கள் நாட்டிற்கு அனுப்பக்கூடாது என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இவர்களில் சுந்தரராஜன் சில இலங்கைத் தமிழ் அகதிகளை பயண ஆவணங்களின்றி ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பமுயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் அவர் மேல் முறையீடு செய்திருக்கிறார். ஈழநேரு தற்போது திருச்சி சிறையில் இருக்கிறார். அவர் ஒருவரை ஒரு இலட்சம் ரூபாய் அளவு ஏமாற்றியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. செங்கல்…
-
- 1 reply
- 344 views
-
-
லிங்கேஸ்வரன் விஸ்வா ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது: முதலமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடாத்திவரும் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டிற்கு வந்த அகதிகளாக தஞ்சம் அடைந்தோரை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இலங்கையில் போர் முடிந்துவிட்டது, அங்கே அமைதி திரும்பிவிட்டது என்கிற காரணங்களைக் கூறி, இங்கு அகதிகள் முகாம்களில் வாழ்ந்துவரும் தமிழர்களை திருப்பு அனுப்பும் முயற்சி கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்தே நடந்த வருகிறது. இங்குள்ள காவல் துறை அதிகாரிகள், ஐ.நா.வின் அகதிகள் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் …
-
- 0 replies
- 316 views
-
-
சமீப காலமாக காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியப்படையினர் போராளிகளால் மட்டுமின்றி, அங்கு வாழும் முஸ்லிம் இளைஞர்களாலும் தாக்கப்படுகின்றனர். இதைவைத்து பார்க்கும்பொழுது இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் போராளிகளின் பிடிக்குள் செல்வதையே காட்டுகிறது. இங்குள்ள நிலையற்ற தன்மையினை சில அரசியல்வாதிகள் தங்களின் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அடுத்த வருடம் அயல்நாட்டுப் படைகள் வெளியேறும்போது போராளிகளின் கவனம் இந்தியா மீது திரும்பக்கூடும் என்ற அச்சமும் தற்போது எழுந்துள்ளது. கடந்த மூன்று, நான்கு வருடங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை குற்றவாளிகளாக்குவதும…
-
- 0 replies
- 354 views
-
-
அமெரிக்க டொலருக்கு இணையான ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டு வரும் சரிவு திங்கள்கிழமையும் தொடர்ந்தது. அன்னிய செலாவணி வர்த்தகத்தில் ஒரு அமெரிக்க டொலருக்கு 63.30 ரூபாய் தர வேண்டியிருந்தது.காலையில் செலாவணி சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது, டொலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு முந்தைய நாள் இறுதியில் இருந்த 61.65 என்ற நிலையைவிட குறைந்து, ரூ. 62.30 அளிக்க வேண்டியிருந்தது.ஒரு கட்டத்தில் வரலாறு காணாத அளவில், ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ. 63.30 அளிக்க வேண்டிய நிலைக்கு இந்திய கரன்சி மதிப்பு தாழ்வுற்றது. ஒரே நாளில் 148 காசுகள் மதிப்பு குறைவதென்பது கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய வீழ்ச்சியாகும். வர்த்தக இறுதியில் ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்து, ஒரு டொலருக்கு ரூ. 63.13 என்ற அளவில் இர…
-
- 8 replies
- 990 views
-
-
கோலாலம்பூர்: மலேசிய அரசு சாரா தமிழ் இயக்கங்களின் முடிவின்படி "மெட்ராஸ் கஃபே" படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் நேற்று மலேசிய உள்துறை அமைச்சகம், மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியம் ஆகியவற்றுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் தொலைநகலிலும் அக்கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மலேசியா தமிழர்களின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, மெட்ராஸ் கஃபே படத்தை அமைதிப் பூங்காவாக இருக்கும் மலேசியாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது. ராஜபக்சே உதவியுடன் வெளிவரும் இப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், உடமைகளையும் உரிமைகளையும் இழந்து வாழும் ஈழத் தமிழர்களை களங்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. ஆகவே …
-
- 0 replies
- 371 views
-
-
பாட்னா: பீகார் மாநிலம், சாகர்சா அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சிவபக்தர்கள் 37 பேர் விரைவு ரயில் மோதி பலியானார்கள். ஆத்திரம் அடைந்த பயணிகள், ரயிலுக்கு தீ வைத்தனர். பீகார் மாநிலம், சாகர்சா அருகே உள்ள தமாரா ரயில் நிலையத்தில் இன்று காலை உள்ளூர் ரயிலி்ல் இருந்து இறங்கிய சிவபக்தர்கள் குழு ஒன்று, தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, பாட்னாவில் இருந்து வந்த ராஜ்ய ராணி விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் சிவபக்தர்கள் 37 பேர் பலியானார்கள். இதில் பெரும்பான்மையானோர் சம்பவ இடத்திலும், சிலர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். 40 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள், ராஜ்ய ராணி ரயிலுக்கு தீ வைத்தனர். இதில் இரண்டு பெட்டிகள் எரிந்து நாசம…
-
- 4 replies
- 798 views
-
-
நியூயார்க்: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹேக்கர் ஹேக் செய்துள்ளார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் கலீல் ஷ்ரியாதே. அவர் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு புகார் கூறினார். அதாவது ஃபேஸ்புக்கில் யாருடைய கணக்கின் பக்கத்திலும்(wall) யார் வேண்டுமானாலும் எழுதும் வகையில் உள்ளது. இது பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஃபேஸ்புக் குழு கண்டுகொள்ளவில்லை. வழக்கமாக ஃபேஸ்புக் பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை(bug) இருப்பதை கண்டுபிடித்து தெரிவித்தால் பரிசு அளிப்பார்கள். ஆனால் அவர்கள் கலீலிடம் இப்படி ஒரு பிரச்சனையே இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இதனால் கடுப்பான கலீல் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்ப…
-
- 0 replies
- 458 views
-
-
டார்ஜிலிங்: கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங் மலை பிரதேசத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. அடுத்த 15 நாட்களுக்கான போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 400 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனித் தெலுங்கானா உருவாக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து டார்ஜிலிங் மலைபிரதேசத்தை பிரித்து கூர்க்காலாந்து தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி போராட்டங்கள் வெடித்தன. ஆனால் ஒருபோதும் தனி மாநில கோரிக்கையை ஏற்க முடியாது என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்து போராட்டத்தைக் கைவிட கெடுவும் நிர்ணயித்தார். இருப்பினும் மமதாவின் கெடுவை மீறி போராட்டம் தொடர்ந்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 444 views
-
-
மும்பை: மும்பையின் வெர்சோவா பகுதிக்குப் போனால்.. அங்குள்ள ஜேபி சாலைக்கு மறக்காமல் போங்கள்.. அங்கு ஒரு பெண் சாலையோரம் உள்ள குருத்வாரா அருகே பரிதாப நிலையில் அமர்ந்திருப்பார்.. அவர் வேறு யாருமல்ல, ஒரு காலத்தில் கோடீஸ்வரியாக வலம் வந்த ஒரு பிரபலமான பத்திரிக்கையாளர் சுனிதா நாயக்.. 65 வயதாகும் சுனிதா நாயக்.. இன்று எல்லாவற்றையும் இழந்து கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மிகப் பரிதாபமான சோகக் கதை. எத்தனையோ பிச்சைக்காரர்களைப் பார்த்து விட்ட மும்பை மக்களுக்கு இவர் இன்னொரு பிச்சைக்காரர்... ஆனால் இவரது கதை மிகப் பரிதாபமாகரமானது, சோகமயமானது. நிரம்பப் படித்தவர் சுனிதா நாயக். பெரும் பணக்காரர். அருமையான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தவர். பை நிறையப் பணத்துடன் வாழ்ந்த அவர்…
-
- 7 replies
- 2.2k views
-
-
டெல்லி: நரேந்திர மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக ஆதரித்து எந்த மாநிலத்திலும் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர்களுக்கு அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். நேற்று டெல்லியில் நரேந்திர மோடியுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த உத்தரவை ராஜ்நாத் சிங் பிறப்பித்தார். நேற்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை பாஜக உயர் மட்டக் குழு எடுத்து அறிவித்துள்ளது. அதில் ஒன்றாகும் இது. http://tamil.oneindia.in/news/2013/08/19/india-don-t-pass-resolutions-on-narendra-modi-for-pm-181489.html
-
- 3 replies
- 442 views
-
-
ஹைதராபாத்: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-14 ஐ எடுத்துக் கொண்டு ஜிஎஸ்எல்வி- டி5 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து இன்று மாலை 4.50 மணிக்கு விண்ணில் ஏவப்படவிருந்தது. இதற்கான கவுண்ட் டவுனும் நேற்று காலை 11.50 மணிக்கு துவங்கியது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட்டை விண்ணில் ஏவ ஒரு மணிநேரம் 14 நிமிடங்கள் இருக்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் 49.13 அடி உயரம் கொண்டது. அதன் எடை 414.75 டன்னாகும். இந்த ராக்கெட் மூலம் ஏவப்பட இருந…
-
- 0 replies
- 364 views
-
-
நியூசிலாந்தில் ஒருபால் திருமண கொண்டாட்டங்கள் களை கட்டுகின்றன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முதல்நாடாகவும் உலகில் 14வது நாடாகவும் நியூசிலாந்து ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து 1000 ஜோடிகள் நியூசிலாந்து செல்லத் திட்டம் நாட்டின் 1955 ஆண்டு திருமணச் சட்டத்துக்கு திருத்தம் கொண்டுவந்துள்ளதன் மூலம் கடந்த ஏப்ரலில் நியூசிலாந்து ஒருபால் திருமணத்தை சட்டப்படி அங்கீகரித்தது.இன்று திங்கட்கிழமை 31 ஒருபால் ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்துகொள்வதாக அரச உள்துறை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்த சட்டத்துக்கு கிறிஸ்தவ செயற்பாட்டாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது. ஆனால், ஆண்டாண்டு காலமாக இருந்துவந்த அநீதிக்கு இந்த சட்டம் முடிவ…
-
- 6 replies
- 419 views
-
-
இந்திய மாநிலமான பீஹாரில், தொலைதூர ரயில் நிலயம் ஒன்றில் விரைவு ரயில் ஒன்று மோதியதில், ரயில் கடவையைக் கடக்க முயன்ற 37 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமரா ஹட் ரயில் நிலையத்தில் ஒரு ரயிலில் இருந்து இறங்கி, சஹர்சா மாவட்ட ஆலயம் ஒன்றுக்கு செலவிருந்த பெரும்பாலும் இந்து யாத்திரிகர்களே இதில் கொல்லப்பட்டவர்களாவர். இந்திய ரயில் ஒன்று இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கூடம் ஒன்று ரயில் ஓட்டுனரைத் தாக்கியதுடன் இரு ரயில் பெட்டிகளையும் எரித்துள்ளது. மீட்பு நடவடிக்கைகள் நடப்பதுடன், பொலிஸாரும் அங்கு விரைந்துள்ளனர். பல உடல்கள் சேதமடைந்திருக்கும் நிலையில் மொத்தமாக எத்தனை பேர் இறந்தார்கள் என்று தற்போதைக்கு உறுதியாகக் கூறமுடியவில்லை என்று மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்த்…
-
- 1 reply
- 381 views
-
-
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் குப்வாரா பிரிவில் மீண்டும் ஊடுறுவல் மற்றும் தாக்குதல் முயற்சியில் பாகிஸ்தானியப் படைகள் இறங்கின. ஆனால் ராணுவம் அதை வெற்றிகரமாக முறியடித்தது. கேரன் பகுதியில் இந்த சில்மிஷத்தில் பாகிஸ்தானியப் படைகள் இன்று அதிகாலையில் ஈடுபட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானியத் தரப்பிலிருந்து திடீர் நடமாட்டம் அதிகரித்ததால், இந்தியப் படையினர் சுதாரிப்புடன் செயல்பட்டு முறியடித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் பாகிஸ்தான் தரப்பி்ல நடந்துள்ள 19வது ஊடுறுவல் முயற்சி மற்றும் போர் நிறுத்த மீறலாகும் இது. ஆகஸ்ட்6ம் தேதி ஐந்து இந்தியப் படை வீரர்களை பாகிஸ்தானியப் படைகள் தாக்குதல் நடத்திக் கொலை செய்தன. அதன் பிறகு தொடர்ந்த…
-
- 10 replies
- 694 views
-
-
மும்பை: மும்பை கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரக்சக் நீர்மூழிகிக் கப்பலில் நடந்தது தீ விபத்தா அல்லது வெடி விபத்தா அல்லது சதிச் செயலா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நீர்மூழ்கியின் பேட்டரிகள் வைக்கும் பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து ஏவுகணைகள் இருந்த பகுதியிலும் வெடி விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் ஏவுகணைகள் வெடித்துச் சிதறியதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், இதை கடற்படை உறுதி செய்யவில்லை. இந்த நீர்மூழ்கியில் இருந்த 3 அதிகாரிகள் உள்ளிட்ட 18 வீரர்களில் 5 பேரின் உடல்கள் மட்டுமே இன்று காலை வரை மீட்கப்பட்டுள்ளன. இதனால் மற்ற 13 பேரும் கூட உயிரிழந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து நீர…
-
- 0 replies
- 338 views
-
-
Dr. Stephen Carr Leon – எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது. ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த திறன் தற்செய…
-
- 6 replies
- 9.2k views
-
-
நியுஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் (கார்ட்போர்ட்) காகித அட்டைகளால் செய்யப்பட்ட தேவாலயம் ஒன்று வைபவரீதியாக திறக்கப்பட்டுள்ளது இந்த ஊரில் நின்றிருந்த 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலிக்கன் தேவாலயம் நிலநடுக்கத்தால் சேதமடைய அதற்கான தற்காலிக மாற்றாக இந்த அட்டை தேவாலயம் உருவாக்கப்பட்டது. கிறைஸ்ட்சர்ச்சில் 2011 பிப்ரவரியில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 185 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஜப்பானிய கட்டிடக் கலைஞர் ஷிகெரு பான் இந்த தேவாலயத்தை வடிவமைத்துள்ளார். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இடங்களை மீளக் கட்டியெழுப்பும் பணிக்கு பெயர் பெற்றவர் இவர். http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2013/08/130816_cardboardchurchpix.shtml
-
- 0 replies
- 344 views
-
-
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஆயுதக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டிருந்த எண்பதுக்கும் அதிகமான பிள்ளைகளை காப்பாற்றியுள்ளதாக ஐநா சபையினால் அனுப்பப்பட்டிருந்த மீட்புக் குழு ஒன்று கூறுகிறது. எட்டு வயதுச் சிறார்களும் மீட்கப்பட்டுள்ள பிள்ளைகளில் அடங்குவர். இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டவர்களில் 13 பேர் சிறுமிகள் ஆவர்.அந்நாட்டின் தென்கிழக்கிலுள்ள கடங்கா மாகாணத்தில் செயல்பட்டுவருகின்ற மாய் மாய் என்ற ஆயுதக் குழுவினால் கடந்த ஆறு மாதங்களில் இப்பிள்ளைகள் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். கொங்கோவின் கடங்கா மாகாணத்தில் ஏழைப் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுவில் சேர்க்கப்பட்டனர். காப்பாற்றப்பட்ட பிள்ளைகளில் நாற்பது பேர் தத்தமது குடும்பத்தாரிடம் சேர்க்கப்பட்டுவிட்டார்க…
-
- 0 replies
- 408 views
-
-
எகிப்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆதரவாளர்களை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை நடந்த தொழுகையின்போது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சு இவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளது. படையினருக்கும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினருக்கும் இடையிலான மோதல்களின்போது கத்திக் கூக்குரலிடும் பெண்ணொருவர் அதேவேளை, போராட்டக்காரர்களையும் அமைதி காக்குமாறும் பழிவாங்கல் நோக்கோடு செயற்பட வேண்டாம் என்றும் நவி பிள்ளை கேட்டுக் கொண்டுள்ளார்.போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது நிஜ துப்பாக்கி ரவைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை கூறியுள்ளார். அல் ஃபட்டா பள்ளிவாசலை படையினர் சூழ்ந்துள்ளனர் கெய…
-
- 0 replies
- 392 views
-
-
ஏர்-இந்தியா நிறுவன ஒப்பந்தத்தைப் பெற, அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் முன்னாள் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் பிரபுல் படேல் ஆகியோருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கனடாவைச் சேர்ந்த இந்தியர் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கனடா வாழ் இந்தியரான நஸிர் கரிகார் (65) என்பவரை, கனடா போலீஸார் 2010, மே மாதம் கைதுசெய்தனர். லாபம் தரக்கூடிய ஒப்பந்தத்தைப் பெற, ஏர்- இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு 2005 முதல் 2007 வரை, ஆயிரக்கணக்கான அமெரிக்க டொலர்களை லஞ்சமாக கொடுக்க முயன்றார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஒட்டாவாவில் உள்ள விசாரணை நீதிமன்றம், நஸிர் கரிகார் குற்றவாளி எனவெள்ளிக்கிழமை அறிவித்தது. இதற்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக…
-
- 1 reply
- 350 views
-
-
ஸ்ரீநகர்: தேசிய நீரோட்டத்தில் இருந்து காஷ்மீர் மக்கள் மட்டும் ஏன் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி அரங்கில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பலத்த பாதுகாப்புக்கு இடையே நடந்த இந்த விழாவில் உமர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் என்ன பேசினார் என்பதன் விவரத்தை பார்ப்போம். மக்களுக்கு சல்யூட் மாநிலத்தில் அமைதியைக் கெடுக்க முயன்ற சக்திகளை தோற்கடித்த மக்களுக்கு தலை வணங்குகிறேன் என்றார் உமர். நம்மை மட்டும் ஏன் இப்படி? தேசிய நீரோட்டத்தில் இருந்து நீங்கள் மட்டும் தனியாக உள்ளது போல் ஏன் இந்த காஷ்மீர் மக்கள் உணர…
-
- 0 replies
- 280 views
-
-
டெல்லி: லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 122 இடங்களை இழக்க நேரிடும் என்றும் பாஜக அல்லாத இதர கட்சிகள் கடந்த முறையை விட கூடுதலாக 126 இடங்களை பெறக் கூடும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.தற்போதைய ஆகஸ்ட் மாதமே லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தின. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 137 தொகுதிகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 155 தொகுதிகள் கிடைக்குமாம். இந்த இரு கூட்டணிகள் அல்லாத இதர கட்சிகளுக்கு கிடைக்கும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 251 ஆக இருக…
-
- 0 replies
- 276 views
-
-
ஈரோட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கிய காந்திய மக்கள் இயக்க மாவட்டத் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசுகிறார் காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமிழருவிமணியன். உடன் (இடமிருந்து) மாவட்டத் தலைவர் இரா.சிவராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் துரை.செல்வக்குமார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வோம் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன் கூறினார். ஈரோடு மாவட்ட காந்திய மக்கள் இயக்கத்தின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா சூரம்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அலுவலகத்தை காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசியலில் நல்ல மாற்றத்தை உரு…
-
- 1 reply
- 422 views
-
-
ஆஸ்திரேலியாவில் கடுமையான புதிய குடிவரவுக் கொள்கைகளை கண்சர்வேடிவ் கட்சித் தலைவரான டோனி அப்பாட் பிரேரித்துள்ளார். அந்நாட்டில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். டோனி அப்பாட் ஆஸ்திரேலியாவில் தற்போது தஞ்சக் கோரிக்கை நிலுவையில் உள்ளவர்களுக்கு வேலை பார்க்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதமான தற்காலிக வதிவிட உரிமை மட்டுமே வழங்குவது என்றும், நிரந்தர வதிவிட உரிமை வழங்குவதில்லை என்றுமான மாற்றத்தை இத்தேர்தலில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏற்படுத்தும் என அப்பாட் கூறினார். தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்களுக்கு அம்முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருந்துவரும் உரிமை ரத்து செய்யப்படும் எனவ…
-
- 1 reply
- 291 views
-