உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26681 topics in this forum
-
சென்னை: திமுகவால் ஈழத் தமிழர்களையோ மீனவர்களையோ காப்பாற்ற முடியாது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி சாடியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. உள்பட சில கட்சிகள் மத்திய அரசை கண்டித்து போராட்டம், மறியல் நடத்துகின்றனர். அவர்களால் இலங்கை தமிழர்களையோ, தமிழக மீனவர்களையோ ஒரு போதும் காப்பாற்ற முடியாது. அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனமும் தெரிவித்துள்ளது என்றார். http://tamil.oneindia.in/news/2013/08/09/tamilnadu-minister-narayanaswamy-slams-dmk-180919.html
-
- 5 replies
- 509 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=SThv6UV6Ggw
-
- 7 replies
- 858 views
-
-
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாம் போரின் போது காணாமல் போன ஒரு தந்தையும் அவரது மகனும், அங்கு ஒரு காட்டுப் பிரதேசத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது 82 வயதாகும் ஹோ வான் தான் மற்றும் அவரது மகன் ஹோ வான் லாங் (41), ஆகிய இருவரும் வியட்நாம் போரின் போது ஒரு குண்டுத் தாக்குதலில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டதை அடுத்து தாங்கள் வசித்து வந்த கிராமத்தை விட்டு வெளியே தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. வியட்நாமின் மத்திய பகுதியில் இருக்கும் குவாங் இங்காய் மாகாணத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அப்பகுதிவாசிகள் சுள்ளி சேகரிக்கச் சென்றிருந்தபோது, இவர்கள் இருவரையும் கண்டனர். பழம் மற்றும் கிழங்குகளை சாப்பிட்டு இந்த இருவரும் உயிருடன் …
-
- 4 replies
- 814 views
-
-
இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் 1947-ம் ஆண்டு பிரிந்தது முதல் இன்று வரை இரு நாடுகளும் எதிரி நாடுகளாகவே இருக்கின்றன. காஷ்மீருக்காக அடித்துக்கொண்டபோது, ஐ.நா. தலையிட்டதால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்பின்னர் வங்கதேச சுதந்திரத்தின்போது இரு நாடுகளுக்கிடையே போர் நடந்தது. இந்த போரில் பாகிஸ்தான் ராணுவம் சரண் அடைய, வங்கதேசம் சுதந்திரம் பெற்றது. பின்னர் 1972ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் மட்டும்தான் ஏற்பட்டதே தவிர இரு நாடுகளுக்கிடையிலும் சுமுகமான சூழ்நிலைக்கு வழியில்லாமல் போனது. காஷ்மீர் பிரச்சினை, எல்லைத் தகராறு, தீவிரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் இரு தரப்பும் முறுக்கிக்கொண்டு நிற்பது தொடர்கிறது…
-
- 1 reply
- 382 views
-
-
தெலுகானா பிரிப்பு ஈழத்தின் கிழக்கு மாகானப் பிரிப்புக்கு நிகரானது. ஆந்திர அரசில் தெலுங்கானா சுயாட்சிப் பிரதேசமாக உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். கிழக்கு ஈழத்தின் மாகாணத்துக்கும் இது பொருந்தும். மொழிவாரி மாநிலங்களைப் பிரிப்பது மைய ஆதிக்க சக்திகளின் நெடுநாலைய விருப்பமாகும். . இந்தி பரப்புக்கு வெளியே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவது ஆபத்தான ஒரு முன்நிகழ்வு.வட தமிழகத்திலும் இத்தகைய ஒரு கோரிக்கை முக்கியமான வடதமிழக சாதி/சமூக கட்ச்சி ஒன்றால் முன்வைக்கப்பட்டது இங்கு நினைவு கூரத்தக்கது. இந்திய ஜனநாயகத்துன் சிறப்பம்சம் மொழிவாரி மாநிலங்கள்தான்.1848 தேசிய இன அரசுப் புரட்சின்போதே (nation state revolution) மொழிவாரி தேசங்கள் வரலாற்று இயங்கியலின் வளற்ச்சி நிலை. என்பது உணரப்பட…
-
- 36 replies
- 3.1k views
-
-
100க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜூலை மாதம் 30ம் திகதி வரையில் 114 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் 14 இந்திய மீனவர்களும், 4 படகுகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மீனவர்களின் நலன்புரி குறித்து அரசாங்கம் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கான ராஜதந்திர முனைப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews…
-
- 0 replies
- 425 views
-
-
பிபிசி ஊடகவியல் கல்லூரியும் மற்றும் பிபிசி உலகசேவையும், ஏழு ஆசிய மொழிகளில் சிறப்பு மொழி வழிகாட்டிகளைக் கொண்டுவருவதில் பெருமையடைகின்றன. தமிழ், சிங்களம், ஹிந்தி, வங்காளி, பர்மிய, நேபாளி மற்றும் வியட்நாமிய மொழிகளில் இந்த வழிகாட்டிகள் தொடங்கப்படுகின்றன. இந்தப் புதிய வெளியீடுகள் ஏற்கனவே அரபிய, பிரெஞ்சு, சீன, பஷ்டூ, ருஷ்ய, உருது போன்ற 19 மொழிகளில் பிபிசி உருவாக்கிய வழிகாட்டிகள் பட்டியலில் இணைகின்றன. இந்த வழிகாட்டி பிபிசி செய்தியாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி சேர்த்த திறன் மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. இந்த அறிவை, உலகெங்கும் உள்ள செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த வழிகாட்டிகள் ஊடகவியல் என்பது எப்படி ஒட்டுமொத்தத்தில் பார்த…
-
- 0 replies
- 353 views
-
-
பாகிஸ்தானில், தென்மேற்கே குவேட்டா நகரில் ஆயுததாரிகள் இன்று வெள்ளிக்கிழமையும் பெரிய தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். தாக்குதலில் குறைந்தது 9 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.தாக்குதல் பள்ளிவாசலுக்கு வெளியே, அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். உள்ளூர் அரசியல்வாதி அலி மதாத் ஜட்டாக்கை இலக்கு வைத்தே ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக காவல்துறை கூறுகின்றது. ரமழான் மாத நிறைவில் இன்று ஈத் திருநாள் தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலில் இருந்து வெளியே வரும்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித பாதிப்புமின்றி அவர் தப்பிவிட்டார். நேற்று வியாழக்கிழமையும் குவேட்டா நகரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில்…
-
- 0 replies
- 330 views
-
-
தமிழர் அனைவரும் இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிப்போம். இந்திய சுதந்திர தினத்தை புறக்கணித்து இந்திய தமிழக அரசின் அடக்குமுறைக்கு உட்படுத்தப் படும் கூடங்குளம் அணு உலை போராளிகளுக்கு துணை நிற்போம். ஈழத்தில் போரை நடத்தி பல ஆயிரம் தமிழ் மக்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்த இந்திய நாட்டின் சுதந்திர தினத்தை தமிழர்கள் நாம் புறக்கணிப்போம். போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இலங்கைக்கு ஆயுதம் கொடுக்க தெரிந்த இந்தியாவால் ஒரு தீர்வை பெற்றுத் தர முடியவில்லை. விடுதலை புலிகளை தீவிரவாதிகளாக காட்டி , தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழர்களை முகாமில் அடைத்து கொடுமைப் படுத்தும் இந்திய சுதந்திர தினத்தை நாம் புறக்கணிப்போம். சிங்கள கடற்படைக்கு பயிற்சி கொடுத்தும் தமிழர்களை நடுகட…
-
- 1 reply
- 601 views
-
-
பயங்கரவாத அமைப்பான அல்-காய்தா தோல்விப் பாதையை நோக்கிச் சென்று கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆனாலும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக சண்டையிடுவது அவசியம் என்றும் அவர் கூறினார். கலிபோர்னியாவில் பென்டெல்டன் முகாமில் 3 ஆயிரம் கடற்படை வீரர்கள் மத்தியில் பேசிய ஒபாமா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:அல்-காய்தா இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அழிக்கப்பட்டனர். ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அல்-காய்தா இயக்கம் தோல்விப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆப்கனில் அமெரிக்க படையினர் பாதுகாப்பில் ஈடுபட்ட பின், அங்கு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை பெற்றுள்ளனர். மார்க்கெ…
-
- 0 replies
- 254 views
-
-
பின் லாடனின் கொலையில் முக்கிய பங்கு வகித்தவரும் சிஐஏயின் முன்னாள் அதிபரும் முன்னாள் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா 2011 ஜுலையில் "We are within reach of strategically defeating AL-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்துவிட்டோம்" எனப் பாக்கிஸ்த்தானில் வைத்துக் கூறினார். 2011 மே மாதம் அல் கெய்தாவின் தலைவர் பின் லாடன் கொல்லப்பட்டார் ஆப்கானிஸ்த்தானிலும் யேமனிலும் பல அல் கெய்தாவின் முன்னணித் தலைவர்கள் அமெரிக்காவின் சிஐஏயின் ஆளில்லா விமானங்களால் கொல்லப்பட்டனர். அத்துடன் அல் கெய்தாவினரின் தொடர்பாடல்கள் மிகவும் தடைப்பட்டிருந்தது. அவர்களின் தொடர்பாடல் கருவிகளை வைத்து அவர்களின் இருப்பிடங்களை அறிந்து அமெரிக்கா அவர…
-
- 12 replies
- 1k views
-
-
டொரண்டோவில் சென்ற ஜூலை மாதம் 24ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்து ஒன்றில் சென்ற பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பேருந்தில் இருந்த கேமரா மூலம் கண்டுபிடித்த போலீஸார், அவருடைய படத்தை வெளியிட்டு அவரை பிடிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை கேட்டுக்கொண்டுள்ளனர். ஜூலை மாதம் 24ஆம் தேதி Birchmount Road என்ற பகுதியில் இருந்து Lawrence Ave East area வரை சென்ற பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். உடனடியாக அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார் பேருந்தில் இருந்த கேமரா மூலம் குற்றவாளியினை கண்டறிந்தனர். இன்று காலை குற்றவாளியின் புகைப்படத்தை பத்திரிகை மற்றும் இணையதளங்களில் வெளியிட்ட போலீஸார், கு…
-
- 4 replies
- 445 views
-
-
'இரவுப் பணிக்கு சிவப்பு விளக்கு சிறந்தது'-ஆய்வு இரவு ஷிப்ட் பணியாளர்கள் சிவப்பு விளக்குகளுக்கடியில் வேலை செய்வது அவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஹேம்ஸ்டர்கள் எனப்படும் எலியினங்கள் ( மூஞ்சுறு போன்றவை) இரவு நேரத்தில் நீல நிற அல்லது வெள்ளை நிற விளக்குகளுக்கடியில் இருந்தால் அவை உணர்வு ரீதியாக சோர்வடைகின்றன என்றும் அவை இருளிலோ அல்லது சிவப்பு நிற விளக்குகளுக்கடியிலோ இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பதாக நரம்பியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று கூறுகிறது. இது மனிதர்களுக்கும் பொருந்தும் என்று கூறும் இந்தக் கட்டுரை, இந்த ஆய்வு முடிவுகள் இரவு நேரப்பணியாளர்களுக்கு மேலும் சிறப்பான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று …
-
- 4 replies
- 1k views
-
-
பாகூர்: ஜார்க்கண்டில் 2 சிறுமிகள் 4 பேரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பாகூர் மாவட்டத்தில் உள்ளது கட்சோரா கிராமம். அந்த கிரமாத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் 4 பேரால் நேற்று இரவு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இன்று காலை அந்த கிராமத்திற்கு சென்ற சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சிறுமிகளை அதே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் கற்பழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக கடந்த மாதம் 14ம் தேதி இதே பாகூர் மாவட்டத்தில் உள்ள வேறொரு கிராமத்தில் இருக்கும் விடுதியில் இருந்து 4 பழங்குடியின சிற…
-
- 0 replies
- 327 views
-
-
காலக்கோட்டுப் படங்கள் நாமெல்லாம் கோழைகளா ?? இல்லை நம் நாடு கோழை நாடா?? 6 வருட பாஜக ஆட்சியில் நாடு எப்படி இருந்தது? நான்கு மற்றும் ஆறு வழி சாலை, அணுகுண்டு சோதணை 4 இந்திய ராணுவ வீரர்களை கொன்றதற்கு கார்கில் போர்..... போரில் வெற்றி.... பாகிஸ்தான் பயந்தது....சீனா வாயே பேச வில்லை... அணுகுண்டு சோதணை நடந்த போது அமெரிக்கா நம் மீது பொருளாதர தடை விதித்தது... பின் அமெரிக்காவே அந்த தடையை விலக்கியது....ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து... மற்ற எல்லா நாடுகளும் நம்முடன் நெருங்கி வந்தது... ஜ.நா சபையில் இந்தியாவை உறுப்பினராக்க வேண்டும் என்று எல்லா வல்லரசு நாடுகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தன... உலகமே இந்தியாவை கண்டு பயந்தன.... இவையெல்லாம் யாரால் நடந்தது... ஒரு தேச பக்தி மி…
-
- 9 replies
- 1.4k views
-
-
நேதாஜி பற்றிய ஆச்சரிய தகவல் நேதாஜியின் மரணம் குறித்த விஷயங்களை சேகரித்து வைத்திருப்பவரும், அகில இந்தியப் பார்வார்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளருமான தேவப்பிரதா பிஸ்வாஸ் சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்தார். அவருடன், மாநிலங்களவை உறுப்பினரான பரூண் முகர்ஜியும் இருந்தார். பிஸ்வாஸும் முகர்ஜியும் நேதாஜி பற்றிய மர்மங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். ''நேதாஜியின் மரணம் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?'' ''ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால், நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண …
-
- 7 replies
- 7.1k views
-
-
கடந்த 4 ஆண்டுகளில் பாராளுமன்ற மக்களவை கூட்டம் மொத்தம் 314 நாட்கள் நடைபெற்றன. அவற்றில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் ஏறத்தாழ பாதி நாட்கள் நடைபெற்ற கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று இருக்கிறார்கள். சோனியா காந்தி 48 சதவீதமும், ராகுல் 43 சதவீத கூட்டங்களிலும் கலந்து கொண்டனர். கட்சித்தலைவர்களில் முலாயம்சிங் யாதவ் (சமாஜ்வாடி) அதிக நாட்கள், அதாவது 86 சதவீத கூட்டங்களுக்கு வந்து இருக்கிறார். அவருக்கு அடுத்து பா.ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி 82 சதவீதமும், ராஜ்நாத்சிங் 80 சதவீத நாட்களும் சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், 83 சதவீத நாட்களும், ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் 70 சதவீத நாட்களும் சபை…
-
- 1 reply
- 368 views
-
-
பாக். தாக்குதல்- மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க சோனியா, ராகுல் வலியுறுத்தல். டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் அருகே எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 இந்திய வீரர்கள் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற அப்பட்டமான துரோகத்திற்கு இந்திய தேசம் ஒரு போதும் அடி பணியாது. இது தொட…
-
- 5 replies
- 537 views
-
-
மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய பறவைக்காய்ச்சலின் வகையொன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் தடவையாக இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது என பிரித்தானியாவின் மருத்துவ சஞ்சிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது. 32 வயதான பெண்ணொருவருக்கு அவரது தந்தையிடமிருந்து இந்தப் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இவர்கள் இருவரும் பின்னர் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும், H7N1 வைரஸ், மனிதர்களுக்குப் பரவும் அளவுக்கு விருத்தி பெற்றுள்ளதா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள 133 சம்பவங்கள் பதிவானதுடன், 43 பேர் உயிரிழந்துள்ளன…
-
- 0 replies
- 227 views
-
-
இந்திய ஜம்மு காஷ்மீர் எல்லையில் இன்று அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது. இதில் 2 பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்ள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டைக் கோட்டை கடந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை ஊரி செக்டார் பகுதியில் கமல்கோட் என்ற இடத்தில் இரு ராணுவத்தினரிடையேயும் கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் இம்மோதல் நீடித்திருக்கிறது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாடு உறுதி செய்துள்ளது…
-
- 3 replies
- 445 views
-
-
டெல்லி: தமிழக மீனவர்கள் 90 பேரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் விவகாரம் தொடர்பாக இலங்கை தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவித்தது. தமிழக மீனவர்கள் கடந்த ஒரு சில வாரங்களில் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவது தொடர் கதையாகிவிட்டது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இலங்கை அரசின் தூதரை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து இன்று மத்திய அரசு, இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரும் இந்த விவகாரம் தொடர்பாக…
-
- 1 reply
- 388 views
-
-
கடும் அமளி: ராஜ்யசபா நேற்று காலை கூடியதும், ஜம்மு - காஷ்மீரில், ராணுவ வீரர்கள் ஐந்து பேர், பாக்., ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பெரிய அளவில் வெடித்தது. "இந்தப் பிரச்னை குறித்து, உடனே விவாதம் நடத்த வேண்டும்' என, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் பலவும் கோரிக்கை விடுத்தன; அத்துடன், அமளியிலும் ஈடுபட்டன. இந்த அமளிக்கு இடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி பேசியதாவது: ஐந்து ராணுவ வீரர்களை, இந்தியா பறிகொடுத்திருக்கிறது. இதை, சாதாரண உயிரிழப்பு என, எடுத்துக் கொள்ள முடியாது. ராணுவ வீரர்கள், சுட்டுக் கொல்லப்பட்ட விஷயத்தை, மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக ஊடுருவல் சம்பவங்களையும், இதுபோன்ற உயிர்பலி சம்பவங்…
-
- 4 replies
- 680 views
-
-
பிரேசில் சிறையில் கைதிகளுக்கிடையே மூண்ட கலவரத்தை அடக்கும் முயற்சியில் போலீசாரால் கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 25 போலீசாருக்கு 624 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ளது சாவோ பவுலோஸ் என்ற ஜெயில். இங்கு 1992-ம் ஆண்டு கைதிகள் இடையே பயங்கர கலவரம் உண்டானது. கலவரத்தை அடக்க போலீசார் கடும் முயற்சிகள் மேற்கொண்டனர். இந்தக் கலவரத்தில் சுமார் 111 கைதிகள் பரிதாபமாக பலியானார்கள். அவர்களில் 52 கைதிகள் போலீசாரின் குண்டடியில் பலியானவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. எனவே, போலீசார் மிகவும் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டதாக, அவர்கள் மீது வழக்கு தொடரப் பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலே நடைபெற்ற வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. க…
-
- 1 reply
- 365 views
-
-
காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில்.. பாகிஸ்தான் elite commandos இந்திய எல்லைக்குள் ஊடுருவி நடத்திய பதுங்கித் தாக்குதலில் வீதி உலா வந்த 5 இந்தியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் இப்படி இந்தியப் படைகளை அடிக்கடி வேட்டையாடி வரும் நிலையிலும் கையாலாகாத இந்தியா எதையாவது சாக்குப் போக்குச் சொல்லி தப்பித்துக் கொள்கிறது..! இவர்களின் வீரமெல்லாம்.. அப்பாவி.. ஈழத்தமிழர்களை சிங்களவனோடு சேர்ந்து நின்று கொல்வதில் தான். பிரதான செய்தி இங்கு: Kashmir: Five Indian soldiers 'killed in shooting' Five Indian soldiers have been shot dead in Indian-administered Jammu and Kashmir, the chief minister of the disputed region says. http://www.bbc.co.uk/news/world-asia-ind…
-
- 10 replies
- 664 views
-
-
இந்தியாவிலிருந்து தனது மகளுடன் துபாய்க்கு வந்திருந்த 67 வயது முதியவரை மெட்ரோ ரயிலில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர் துபாய் போலீஸார். அவர் வேட்டியுடன் வந்திருந்ததே இதற்குக் காரணம். இதனால் அந்த முதியவரும், மகளும் ரயிலில் பயணிக்க முடியாமல் தவித்துப் போய் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து முதியவரின் மகளான மதுமது கூறுகையில், நானும் எனது தந்தையும் எடிசலாட் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றோம். மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்காக அங்கு சென்றோம். ஆனால் எனது தந்தை வேட்டியுடன் இருந்ததால் அவரை அனுமதிக்க மறுத்து நிறுத்தி விட்டார் ஒரு போலீஸ்காரர். நான் அந்த போலீஸ்காரரிடம் பலமுறை கெஞ்சியும், வேட்டி பாரம்பரிய உடை என்று கூறியும் அவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அனுமதிக்க மு…
-
- 7 replies
- 560 views
-