உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
சீனாவில் கார் ஒன்று மோதியதால் அதை ஓட்டிவந்த பெண் ஒருவர் காரின் முன் கண்ணாடியில் மோதி, தலை மட்டும் கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே நின்ற சம்பவம் அப்பகுதியை மிகவும் பரபரப்பாக்கியது. உடனடியாக மீட்புப்படையினர் வந்து, கார் கண்ணாடியை உடைத்து, அந்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தெற்கு சீனாவில் உள்ள ஒரு பெண் காரில் தன்னுடைய டிரைவருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவருமே கார் பெல்ட் அணிந்திருக்கவில்லை. கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னாள் சென்ற ஒரு வாகனத்துடன் மோதியதால் நிலை தடுமாறிய பெண், கண்ணாடியில் மோதினார் மோதிய வேகத்தில் கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு அவருடைய தலை மட்டும் வெளியே தொங்கியது. உடனடியாக ஆம்புலன்ஸ் மற்று…
-
- 0 replies
- 469 views
-
-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து முஸ்லீம் பயங்கரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸின் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அங்கி அணிவதற்கு உள்ள தடையை எதிர்த்து நடந்துவரும் போராட்டங்களிலேயே இந்தக் கலவரங்கள் நடந்துள்ளன. வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களுக்கும் பேருந்து தரிப்பிடங்களுக்கும் முஸ்லீம் வன்முறையாளர்கள் தீவைத்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டு வருபவர்களை காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடிப் பிரயோகம் நடத்தி கலைத்துவருகின்றனர். கடந்த வியாழக்கிழமை, முகத்தை முழுமையாக மூடி புர்கா அணிந்திருந்த பெண்ணொருவரை காவல்துறையினர் எச்சரித்தபோது, அந்தப் பெண்ணின் கணவன் காவல்துறையினரை தாக்கியுள்ளார். அவரை காவல்துறையினர் கை…
-
- 3 replies
- 370 views
-
-
நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட விமான நிலைய பாதுகாப்பு துறையினர் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய உளவுப்பிரிவுக்கு ( ஐ.பி) கிடைத்த தகவலில் தெரிய வந்துள்ள விவரம் வருமாறு: நாட்டில் விமான நிலையங்களில் திடீர் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்கான தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். புதுடில்லி, மும்பை, பெங்களூரூ, சென்னை, ஆமதாபாத், ஐதராபாத் , கவுகாத்தி ஆகிய 7 விமான நிலையங்கள் பயங்கரவாதிகளின் சதி திட்ட பட்டியலி…
-
- 0 replies
- 253 views
-
-
வாஷிங்டன்: பாகிஸ்தானில் நடைபெறும் பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு இந்து பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் உலகளாவிய அளவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த அறிக்கையின் முடிவு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. ஷியா-சன்னி பிரிவினருக்கு இடையில் நடைபெற்ற 203 இன மோதல் சம்பவங்களில் 717 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 635 பேர் ஷியா பிரிவினர் என்பது தெரிய வந்துள்ளது. பலியாகும் இந்துப் பெண்கள் பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்களை குறிவைத்து கடந்த 18 மாதங்களில் 16 தாக்குதல் நடைபெற்றுள்ளன. இந்த தாக்குதல்களில் 3 இந்துக்கள் பலியாகியுள்ளனர். 4 பேர் படுகாயமடை…
-
- 1 reply
- 325 views
-
-
மேலைநாடுகளில் உடலில் ஓவியம் தீட்டிக்கொள்வது புதிய நாகரீகம் ஆகும். அதிலும் இத்தாலி நாட்டை சேர்ந்த Johannes Stoetter என்பவர் இக்கலையில் சாம்பியனாக விளங்குகிறார். பல மாதங்கள் தீவிர முயற்சிக்கு பிறகு அவர் கண்களை ஈர்க்கும் விதமான ஒரு புதுமையான ஓவியம் கண்டுபிடித்துள்ளார். அதாவது 5 பேரின் உடலில் ஓவியம் தீட்டி, அவர்களை ஒன்றாக குவியச்செய்து பச்சை நிற பெரிய தவளை போன்ற தோற்றத்தை உருவாக்கினார். இவர்கள் ஒரே நேரத்தில் உடல்களை அசைத்தது அசல் தவளை நகருவது போன்று காட்சி தந்தது. மேலும் இவர் பழவகைகள், விலங்குகள் மற்றும் மரங்களின் ஓவியங்களை டாட்டூவாக மனிதர்களின் உடல்களில் வரைந்து சாதனை புரிந்துள்ளார். இவர் ஒவ்வொரு ஓவியம் வரைவதற்கு சுமார் 8 மணி நேரங்கள் எடுத்துக்கொள்கிறார். இதுபற்றி …
-
- 1 reply
- 632 views
-
-
கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போனதாக வந்த புகாரை அடுத்து இளம்பெண் ஒருவரை டொரண்டோ போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர். டொரண்டோவை சேர்ந்த Sundas Javed என்ற 23 வயது இளம்பெண், கடந்த புதன்கிழமை கடைசியாக Kipling Avenue and Rexdale Boulevard அருகே காணப்பட்டதாகவும் அதன்பிறகு அவரைப்பற்றிய எந்த தகவலும் இல்லை என்று போலீஸாருக்கு வந்த புகாரை அடுத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். Sundas Javed பிரெளன் நிறத்தை உடையவர் என்றும், பிரெளன் நிற கண்களுடன் நிளமான முடியை உடையவர், ஐந்தடி 3 அங்குல உயரமும் 80 முதல் 90 பவுண்டு வரையிலான எடையும் உடையவர் என அடையாளம் கொடுக்கபப்ட்டுள்ளது. காணாமல் போன அன்று Sundas Javed, சிகப்பு நிறத்தில் நீல நிற கோடுகள் உள்ள டி-சர்ட்டும், பிங்க் நி…
-
- 0 replies
- 351 views
-
-
பிரான்ஸ் நாளை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மிகக் கடுமையான வெப்பத்தைப் எதிர்நோக்கவுள்ளது. பிரான்சிலுள்ள பல்வேறு நகரங்களின் வெப்ப நிலை 30 பாகை சென்ரிகிரேட்டிலிருந்து 35 பாகை சென்ரிகிறேட்டை தாண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் இருந்து வரும் வெப்பக்காற்று பிரான்ஸைக் கடப்பதாலேயேயும் பிரித்தானிய தீவுகளில் இருந்து வரும் அன்ரி சைக்களோன் எனப்படும் எதிர்ச்சூறாவளியினாலும் (யவெiஉலஉடழநெ) இந்த வெப்நிலை உயர்வு ஏற்பட உள்ளதாக பிரான்சின் காலநிலை அவதான நிலையமான மெத்தியோ பிரான்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக .பிரான்சின் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் (உயniஉரடயசைந) தாக்க உள்ளது. தென்பகுதியில் 35° சென்ரிகிரேட்டை தாண்டிய…
-
- 3 replies
- 565 views
-
-
நாட்டின் பொருளாதார வளர்ச்சி கவலை அளிக்கிறது : பிரதமர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் இருப்பது கவலை அளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தொழில் அதிபர்களுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் இருப்பது கவலை அளிக்கிறது. தேக்க நிலை, நிதி பற்றாக்குறையை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்புக் கணக்கு பாற்றாக்குறைக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த தங்கத்தின் மீதான முதலீட்டை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளார். http://dinamani.com/latest_news/2013/07/19…
-
- 5 replies
- 572 views
-
-
பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நோர்வே பெண்ணுக்கு டுபாயில் தண்டனை? 20 ஜூலை 2013 பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நோர்வே நாட்டுப் பெண் ஒருவருக்கு டுபாய் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பில் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்ததாகவும், தற்போது தமக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வேயைச் சேர்ந்த மார்டே டெபோரா டெலிவ் தெரிவித்துள்ளார். டெபோராவிற்கு டுபாய் நீதிமன்றம் பதினாறு மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தகாத உறவு பேணியதாகவும், மது அருந்தியதாகவும் தெரிவித்து டெபோராவிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனைக்கு நோர்வே மனித உரிமை அமைப்புக்கள் கடும் எ…
-
- 1 reply
- 421 views
-
-
இங்கிலாந்தில் தற்போது கோடை காலமாகும். எனவே, அங்கு இந்த ஆண்டு கடும் வெப்பம் நிலவுகிறது. கடந்த ஆறு நாட்களாக 30 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் காணப்படுகிறது. நேற்று 32 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பம் பதிவானது. இது வழக்கமான வெப்பத்தை விட 4 டிகிரி செல்சியஸ் கூடுதலாகும். வெப்பம் கடுமையாக இருக்கும் பட்சத்தில் அனல் காற்றும் வீசுகிறது. இதை தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். பெரும்பாலான மக்கள் கடல், ஏரிகள் மற்றும் நீச்சல் குளங்களிலேயே தவம் கிடக்கின்றனர். குளிர்ந்த நீரில் குளித்து வெப்பத்தில் இருந்து தப்பிக்கின்றனர். லண்டன் உள்ளிட்ட நகரங்களில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் குளிர் சாதன (ஏ.சி.) அறைகளில் முடங்கி கிடக்கின்றனர். இதனால் ரோடுகளில் வாகன போ…
-
- 3 replies
- 395 views
-
-
மெட்ராஸ் கபே என்ற இந்திப் படத்தை தமிழகத்தில் தடை செய்யக் கோரி இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் நாம் தமிழர் கட்சி சார்பாகவும், தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பாகவும், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாகவும் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் அமைப்புகள் காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு பெரும்திரளாக நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெளியாகவிருக்கும் மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி, தமிழர் பண்பாட்டு நடுவம் உள்ளிட்ட தமிழ் அமைப்பினர் முன்னரே பார்க்க வலியுறுத்தியும் அப்படத்தை தடை செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு கீழ்கண்ட மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், "தமிழகம் உள்…
-
- 3 replies
- 626 views
-
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த 10 வயது சிறுவன் கியரான் வில்லியம்சன். இவன் அங்குள்ள ஒரு தொடக்க பள்ளியில் படிக்கிறான். இவன் ஓவியம் வரைவதில் திறமை பெற்றவன். தனது 5 வயதில் இருந்து ஓவியம் வரைந்து வருகிறான். இந்த நிலையில் அவன் வரைந்த ஒரு ஓவியம் இ–மெயில் மூலம் ரூ.12 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஓவிய ஏலத் தொகை ரூ.2 கோடி என நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் அது ரூ.12 கோடிக்கு ஏலம் போனது. கடந்த வாரம் இவன் வரைந்த 23 ஓவியங்கள் ஏலத்தில் விடப்பட்டன. அவை அனைத்தும் 20 நிமிட நேரத்தில் ரூ.2 கோடிக்கு விற்று தீர்ந்தன. அவன் வரைந்த ஓவியத்திலேயே தற்போது விற்பனை யான ஓவியம் தான் கூடுதல் விலைக்கு விற்பனை ஆகி உள்ளது. ஆனால் ஒரு ஓவியம் மட்டுமே ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கு மிக குறைந்த அளவு ஏலம…
-
- 1 reply
- 583 views
-
-
பிகாரில் சமூக நலத்துறை அமைச்சர் பர்வீண் அமானுல்லா தாக்கப்பட்டார்.பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாகவே இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இது குறித்த விவரம்: அமைச்சர் அமானுல்லா, பாட்னாவில் இருந்து முஸாபர்பூருக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். ஹாஜிபூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சரின் காரை வழி மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பாட்னா திரும்பினார். ஒரு கும்பல் எனது காரை வழி மறித்தது, கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் போலீஸார் வந்து என்னை மீட்டு அழைத்துச் சென்றனர் என்று அமைச்சர் அமானுல்லா கூறினார். ப…
-
- 0 replies
- 265 views
-
-
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சதாசிவம் இன்று பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அல்டமாஸ் கபீரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து 40-வது தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் இன்று பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று பதவியேற்றுள்ள சதாசிவம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26-ந் தேதி வரை பதவியில் நீடிப்பார். தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி கடந்த 1951-54 ஆம் ஆண்டு காலத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். அவருக்குப் பின் தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2வது தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நீதிப…
-
- 1 reply
- 597 views
-
-
உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரின் பிறந்தநாளை கனடிய மக்களும் வெகு உற்சாகமான நேற்று வியாழக்கிழமை கொண்டாடினார்கள். நெல்சன் மண்டேலா சென்ற மாதம் 8ஆம் தேதி முதல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கட்ந்த நான்கு நாட்களுக்கு முன் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவர், தற்போது தேறி வருவதாக அவருடைய மகள் Zindzi Mandela கூறியதை அடுத்து, அவருடைய 95வது பிறந்தநாளை கனடிய மக்களும், குறிப்பாக டொரண்டோ மக்களும் வெகுவிமரிசையாக உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். Toronto's Honouring Mandela Committee, என்ற அமைப்பின் துணை தலைவர் Lloyd McKell, அவர்கள் கூறும்போது, இம்முறை மண்டேலாவின் பிறந்தநாளை பள்ளிக்குழந்தைகளுடன…
-
- 0 replies
- 408 views
-
-
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - இளவரசி கேத் மிடில்டனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு 'விக்டோரியா' அல்லது 'ஜேம்ஸ்' என்று பெயர் சூட்டக்கோரி பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவரது மனைவி இளவரசி கேத்மிடில்டன். இளவரசி கேத் மிடில்டன் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். அவருக்கு வரும் சனிக்கிழமை குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து விமானப்படையில் பணியாற்றி வரும் இளவரசர் வில்லியம், மனைவி கேத்மிடில்டனுக்கு 'டெலிவரி' தேதி நெருங்கியுள்ளதால் விமானப்படை பணியில் இருந்து விடுமுறை பெற்று குழந்தை பெற்றுக்கொள்ளப் போகும் மனைவி அருகில் இருந்து கவ…
-
- 12 replies
- 1.1k views
-
-
எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மிகக் கடுமையான வெப்பத்தைப் பிரான்ஸ் சந்திக்க உள்ளது. பிரான்சின் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் (caniculaire) தாக்க உள்ளன. நிழலிலேயே 30° வெப்பமும் தென்பகுதியில் 35° யைத் தாண்டியும் ய வெப்பநிலையும் அமைய உள்ளது. இவ் வெப்பமானது எதிர்வரும் வாரம் முழுவதும் நீடிக்க உள்ளது என வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன. இந்த வெப்பத்தின் முடிவில் கடுமையான புயல் மழை ஏற்படும் என்றும் அஞ்சப்படுகின்றது. தென்கிழக்குப் பகுதியில் இருந்து வரும் வெப்பக்காற்று பிரான்ஸைக் கடப்பதாலேயேயும் பிரித்தானியாவின் தீவுகளில் இருந்து வரும் எதிர்ச்சூறாவளியினாலும் (anticyclone) இந்த வெப்நிலை உயர்வு ஏற்பட உள்ளது. குறைவான வெப்பநிலையாக 2…
-
- 0 replies
- 408 views
-
-
இந்தியாவின் பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக்குழந்தைகள் 22 பேரின் மரணத்திற்கு, பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பீகார் மாநிலம் சாப்ரா அருகில் உள்ள தரம்சதி கிராமத்தில் உள்ள அரச பாடசாலையில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களில் இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். காலாவதியான உணவைச் சாப்பிட்டதால் குழந்தைகள் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் அர்கானோபாஸ்பேட் என்ற அரிசி மற்றும் கோதுமை பயிர்கள் மீது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தே கார…
-
- 4 replies
- 537 views
-
-
புன்னகை மன்னன் ,கன்னத்தில் முத்தமிட்டாள்,தெனாலி போல இதையும் விட்டு விட கூடாது தோழர்களே!! படத்தின் திரை தோல்வியே தமிழர் எழுச்சியின் மறுவடிவமாக மாறும்,இனி இப்படி ஈழவிடுதலை குறித்து தவறாக பேசும் படங்களின் வரவை ஒழிக்கும்!இப்படம் திரை இடப்பட்டால் திரை அரங்கத்தில் உள்ள திரை சீலையை கிழிப்பது உறுதி!இனி திரையிலும் தரையிலும் அடி தான்! இனம் வாழ நாம் செய்யும் செயல் இருந்தால்!அது தரம் தாழ்ந்து போவது போல் இருந்தாலும் தவறு இல்லை என்பது கருத்து!!!! ## இத்திரைப்படம் தமிழகத்தில் திரை இடப்பட்டால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டால் கேட்டால் நாங்கள் பொறுப்பு அல்ல !அது எங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வுளாய் அமையும்!## -- மானம் உள்ள தமிழ் மாணவர்கள்-- மெட்ராஸ் கஃபே படத்துக்க…
-
- 0 replies
- 507 views
-
-
ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்முக் காஷ்மீர்ப் பகுதியில் ஆர்ப்பாட்டாக்காரர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஆறுபேரைக் கொன்றுள்ளதோடு இன்னும் பலரைக் காயப்படுத்தியிருக்கிறது. அப்பகுதியில் இருந்த பள்ளிவாசல் ஒன்றினுள் அத்துமீறிப் பிரவேசித்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக முகாமின் முன்னால் கூடிய பொதுமக்கள் மீது எல்லைப் பாதுகாப்புப் படையினரும், பொலிஸாரும் கண்மூடித்தனமாகத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் 6 பேர் கொல்லப்பட பலர் காயமடைந்திருக்கிறார்கள். இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்திய ஆக்கிரமிப்பிற்குற்பட்ட காஷ்மீர் பகுதியெங்கும் பரவலான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற…
-
- 0 replies
- 452 views
-
-
இந்திய வான்வெளியில் 2 சீன ஹெலிகாப்டர்கள் ஊடுருவியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக்கில் உள்ள சுமர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஊடுருவிய சீன ஹெலிகாப்டர்கள் சிறிது நேரம் பறந்து விட்டு, பின்னர் திரும்பிச் சென்று விட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை ராணுவம் மறுத்துள்ளது. ஹெலிகாப்டர்கள் மக்கள் விடுதலை ராணுவ அமைப்புக்குச் சொந்தமானது. அந்த ஹெலிகாப்டர்கள் இந்திய வான்வெளிப் பகுதிக்கு அருகில்தான் பறந்ததாகவும், இந்திய எல்லைக்குள் வரவில்லை என்றும் ராணுவம் கூறியுள்ளது. இந்தியாவும், சீனாவும் நேரடியாக தொடர்பு கொள்வது சமர் பகுதியில் தான். அதனால், இப்பகுதியில் சீன ராணுவத்தினர் பலமுறை அத்துமீறியுள்ளனர். ச…
-
- 5 replies
- 412 views
-
-
தொலைத் தொடர்பு துறை, பாதுகாப்பு துறை, இன்சூரன்ஸ் துறை ஆகியவற்றில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இந்தியாவையே விற்றுவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துடிப்பதாக மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நாடியா மாவட்டத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:- காங்கிரஸ் கட்சியில் இருப்பதற்காக அவமானப்பட்டுதான் நாங்கள் திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினோம். காங்கிரஸ் காரர்களை பார்ப்பது கூட எனக்கு அவமானமாக உள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பல காங்கிரஸ் காரர்கள் எங்கள் கட்சி தயவால் தான் மத்திய மந்திரிகளாக இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. சில்லரை வர்த்தகத்தில்…
-
- 0 replies
- 523 views
-
-
வரலாற்றில் அமெரிக்காவை இதைவிட வேறு யாராலும் அவமானப்படுத்த முடியாது என்ற நிலையில், அந்த அரசுக்கு எதிராக ஸ்னோடென் கைவசம் அவ்வளவு தகவல்கள் உள்ளதாக, ஸ்னோடெனின் ரகசியங்களை அம்பலப்படுத்திவரும் The Guardian பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் அதிகாரி ஸ்னோடென், ''இணைய தளங்களில் ஊடுருவி அமெரிக்கா உளவு வேலை பார்க்கிறது'' என்று அமெரிக்காவிற்கு எதிராக பகிரங்கமாக தகவலை வெளியிட்டார். இதனை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு அவர் மாஸ்கோ விமானநிலையத்தில் பதுங்கியுள்ளார். உலக நாடுகள் அவருக்கு தஞ்சம் அளிக்க கூடாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தபின்னும் அவருக்கு க்யூபா, நிகராகுவே, வெனிசுலா போன்ற அழைப்பு விடுத்தன. இந்த நிலையில் ஸ்னோடென் பிர…
-
- 2 replies
- 572 views
-
-
கனேடிய அரசியலில் முதல் ஏழு பேரின் பட்டியலில் ராதிகா சிற்சபைசன். [Monday, 2013-07-15 16:15:58] கனேடிய அரசியலில் முதல் ஏழு பேரின் பட்டியலில் ராதிகா சிற்சபைசன் தமிழினத்துக்கு புதிய கௌரவம் கனேடிய அரசியலில் முதலிடம் பிடிக்கும் ஏழு பேர் குறித்த விடயங்களை ஆங்கில இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ் சமூகத்தில் இருந்து முதலாவதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ராதிகா சிற்சபைசனின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் தமிழினத்துக்கு புதிய கௌரவம் ஒன்று கிடைத்துள்ளது.இதில் முதல் பிரதமர், 50 ஆண்டுகளாக கனடிய நாடாளுமன்றினை அலங்கரித்த முதல் உறுப்பினர் உள்ளிட்ட முதலிடம் பிடிக்கும் எழுவர் குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன. www.seithy.com
-
- 21 replies
- 1.4k views
-
-
ஜெய்ப்பூர்: ஓராண்டுக்கு யாரும் தங்கம் வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்தினால் இந்தியா ரூபாயின் மதிப்பு உயரும் என்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று (16ஆம் தேதி) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்தினால் சுமார் 5000 கோடி டாலர் அளவுக்கு அன்னியச் செலாவணி மிஞ்சும் என்றார். தங்கம் வாங்காமல் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறைத்துவிடலாம் என்றும் அவர் தெரிவித்தார். அன்னியச் செலாவணி ஈட்டுவது அதனைச் செலவழிப்பதைப் பொறுத்தே ரூபாயின் மதிப்பு உயருவதும், சரிவதும் அமையும் என்று சிதம்பரம் கூறினார். ரயில் கட்டணங்களை நிர்ணயிக்க த…
-
- 0 replies
- 529 views
-