உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி ஆலய வளாகத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 9 குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் இரண்டு பிக்குகள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். வீரியம் குறைந்த குண்டு என்பதால் கோயிலுக்கு எதுவும் சேதம் இல்லை என முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடலத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் விரைந்துள்ளனர். புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயில் அருகே முதல் குண்டுவெடிப்பு அதிகாலை 5:15 மணிக்கு நடந்தது. அதன் பின்னர் காயில் வளாகத்தில் அடுத்தடுத்து 9 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. ஒரு வெடிகுண்டு கோயிலில் வெடித்தது. கோயிலின் அருகே வெடிக்காத குண்டு கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வாறு குண்டு வெடிப்பு நிகழக்கூடும் என்று புலனாய்…
-
- 2 replies
- 474 views
-
-
சிரியா:வெறும் உள்நாட்டு விவகாரம் அல்ல சந்திர. பிரவீண் குமார் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது பொது விதி. ஆனால் எல்லா நேரங்களிலும் அந்த விதி அப்படியே நடந்துவிடுவதில்லை. கடுமையான போராட்டத்திற்குப் பிறகே சிறிய மாற்றம்கூட சாத்தியமாகிறது. அப்படி ஒரு நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதுதான் சோகம். கடந்த இருபதாம் நூற்றாண்டில் பெரும்பாலான உலக நாடுகள், பல நூற்றாண்டுகளாக நீடித்த மன்னராட்சி முறையையும், அதன் தொடர்ச்சியான காலனி ஆட்சிகளையும் உடைத்து ஜனநாயகப் பாதைக்குத் திரும்பின. 'எல்லோரும் இந்நாட்டின் மன்னர்' என்ற கொள்கையை நிறுவிய ஜனநாயக அமைப்பையும் பதவி சுகத்தை அனுபவிக்கும் பெருச்சாளிகள் விட்டுவிடுவதில்லை. அதிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி ஆண்டுக்கணக்கில் ஆட்சி செய்வதும் நடக்கிறது. இவர்களை …
-
- 0 replies
- 503 views
-
-
இஸ்லாமிய மதத் தலைவர் அபு குவாட்டா நாடு கடத்தப்பட்டார் 07 ஜூலை 2013 இஸ்லாமிய மதத் தலைவர் அபு குவாட்டா பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளுக்காக குவாட்டா ஜோர்தானுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அடிப்படைவாத இஸ்லாமிய மதத் தலைவராக அபு குவாட்டா கருதப்படுகின்றார். கடந்த 20 ஆண்டுகளாக அபு குவாட்டா தனது சொந்த நாடான ஜோர்தானுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையை பிரித்தானிய மக்கள் வரவேற்பார்கள் என உள்துறை செயலாளர் திரேஸியா மே தெரிவித்துள்ளார். குறித்த மதத் தலைவர் மிகவும் ஆபத்தானவர் எனவும், சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டமை ஓர் வெற்றியாகவே கருதப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அபு குவாட…
-
- 0 replies
- 405 views
-
-
ஸ்னோடனுக்கு ரஷ்ய முன்னாள் பெண் உளவாளியிடம் இருந்து வந்த கல்யாண ஆஃபர்! அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்டு தற்போது பரபரப்பு செய்திகளில் அடிபட்டுக் கொண்டுள்ள எட்வார்ட் ஸ்னோடன் மட்டும் சந்திரமுகி படம் பார்த்திருந்தால், “என்ன கொடுமை இது சரவணா” என்று சொல்லியிருப்பார். அப்படியுள்ளது இந்த செய்தி. தற்போது, மாஸ்கோ விமான நிலையத்தில் முடங்கிப் போயுள்ள அவருக்கு, “என்னை கல்யாணம் பண்ணிக்கிறிங்களா?” என்று ட்வீட் பண்ணியிருக்கிறார், ரஷ்யாவின் முன்னாள் பெண் உளவாளி. ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான அனா சேப்மன், தற்போது மாடல் அழகியாக கலக்கி வருகிறார். இவருக்கு உள்ள செல்வாக்கை பயன்படத்திக் கொள்ளும் பிரபல ரஷ்ய வங்கி ஒன்று, தமது பிரான்ட் அம்பாசடராக ஒப்பந்தம் செய்துள்ளது. இன்றைய தேதியில் ர…
-
- 1 reply
- 454 views
-
-
போபால்: வீட்டு வேலைக்காரரை ஓரின சேர்க்கைக்கு உட்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, மத்திய பிரதேச நிதி அமைச்சர் ராகவ்ஜி பதவி விலகினார். ராகவ்ஜி வீட்டில் வீட்டு வேலையை கவனித்து வந்தவர்களில் ஒருவர், தனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தன்னை ஓரின சேர்க்கைக்கு உட்படுத்தியதாக காவல் துறையில் அளித்துள்ள புகாரில் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் ராகவ்ஜி மட்டுமல்லாது, அவரது நண்பர்கள் இருவரும் தன்னை அதே காரியத்திற்கு உட்படுத்தியதாக கூறியுள்ளதாக குற்றம் சாட்டி உள்ள அந்த வீட்டு வேலைக்காரர், இதற்கு ஆதாரமாக சி.டி. ஒன்றையும் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், அது தொடர்பாக இது வரை வழக்கு பதிவு செய்யவோ அல்லது செய்ததற்கான ரசீதை கொடுக்கவோ இல்…
-
- 2 replies
- 924 views
-
-
கோலாலம்பூர்: ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை அரசு அரங்கேற்றிய இனப்படுகொலை குறித்த சேனல் 4-ன் ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட அதன் இயக்குநர் கலேம் மெக்ரே உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். வட இலங்கையில் ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் சிங்கள ராணுவத்தால் லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், விடுதலைப் புலிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். மனித இனத்துக்கு எதிரான கொடுமையான ரசாயண ஆயுதங்களை பிரயோகித்து இந்த இனப்படுகொலையை அரங்கேற்றினர். சாட்சியில்லா இனப்படுகொலை என நினைத்துக் கொண்டிருந்த இலங்கை அரசுக்கு பெரும் பீதியைக் கொடுத்தது சேனல் 4-ன் இந்த ஆவணப்படும். இரண்டு பகுதிகளாக வெளியான இந்த ஆவணப்படம்தான், ஈழத்தில் மனித உரிமைக்கு எதிராக நடந்தேறிய அத்தனைக் கொடுமைகளையும் உலகுக்க…
-
- 1 reply
- 1.8k views
-
-
சிரியாவில் ஆசாத்தின் ஆட்சிக்கெதிராக போராடும் போராளிகளுக்கு அமெரிக்கா உற்பட பல மேற்கு நாடுகள் ஆதரவளித்து வருவது தெரிந்ததே. கடந்த இரு வருடங்களாக நடைபெற்றுவரும் இந்தப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இரு தரப்பினராலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிரிய ராணுவத்தால் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள், சிரிய ராணுவம் இரசாயன ஆயுதங்களைப் பாவிக்கிறது, போர்க்குற்றங்களில் ஈடுபடுகிறதென்று கூறிக்கொண்டு அமெரிக்கா பெரிய அளவில் போராளிகளுக்கு பணமும் ஆயுதங்களும் வழங்கிவருகிறது. ஆனால் தற்போது வெளியாகிவரும் செய்திகளின்படி, அமெரிக்க உதவிவரும் போராளி அமைப்புக்களும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை…
-
- 4 replies
- 684 views
-
-
எகிப்தில் ஜனாதிபதி மொஹமட் முர்சியின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையிலன மோதல் உக்கிரமடைந்துள்ளது. மேலும் முர்சி இன்றைக்குள் தானாக முன் வந்து பதவி விலகுவார் அல்லது இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து தூக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தலைநகர் கெய்ரோவில் முர்சியின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையிலான மோதலில் சிக்கி 23 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முர்சி பதவி விலகவேண்டும் எனக்கோரி இராணுவம் வழங்கிய 48 மணி நேர கெடுவையடுத்து அங்கு மோதல்கள் உக்கிரமடைந்தன. முர்சிக்கு எதிராக வயது வேறுபாடின்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட…
-
- 3 replies
- 543 views
-
-
காபுலில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேட்டோ நேசப் படையினருக்கு தேவையான பொருட்களை வழங்கும் நிறுவனத்தின் மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் குறைந்த்து 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தாலிபான் பொறுப்பேற்றுள்ளது.இந்த வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த 4 பேரும், ஆப்கானிய ஒட்டுனர்கள் 2 பேரும், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரும் இதே தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். காபுலில் முக்கிய இடங்கள் மீது சமீப காலங்களில் பல தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ஆப்கானிய அதிபரின் அரண்மனை அருகே கூட கடந்த வாரம் குண்டுத் தாக்குதல் நடைபெற்றது. இந்தியா ஆப்கானிஸ்தானு…
-
- 0 replies
- 428 views
-
-
தூங்கிக் கொண்டிருந்த கணவரின் 'மர்மத்தை' நறுக்கிய பெண்ணுக்கு ஆயுள்! கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவரின் மர்ம உறுப்பை நறுக்கி தனியாக துண்டித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது. மர்ம உறுப்பை நறுக்கி அதைக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார் அந்தப் பெண்மணி. அப்பெண்ணின் பெயர் காத்தரின் கியூ. 50 வயதான இவர் 7 வருடத்திற்குப் பிறகுதான் பரோலிலேயே வெளியே வர முடியும். முன்னதாக கியூ தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிடுகையில், கியூவுக்கு மன நலப் பிரச்சினை இருந்தது. சிறு வயது முதலே அவர் வீட்டு வன்முறைக்கு இலக்கானவர். தனது கணவராலும் கொடுமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில்தான் இச்சம்பவம் நடந்து விட்டது என்றார். ஆனால் கியூவின…
-
- 11 replies
- 1.8k views
-
-
இந்து நாளிதழ் ஆசிரியருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஸ்வரூபம் பட விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சொக்கலிங்கம் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும் வெளியீட்டாளருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=86529&category=IndianNews&language=tamil
-
- 2 replies
- 666 views
-
-
மும்பையிலிருந்து, ரயில் மூலம், குஜராத்துக்கு கடத்தப்படவிருந்த, கோடிக்கணக்கான ரூபாயையும், நகைகள் மற்றும் விலை மதிப்புமிக்க கற்களையும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், வருமான வரித்துறையினரும் பறிமுதல் செய்தனர். பைகளில் வைக்கப்பட்டிருந்த, ரூபாய் நோட்டுக்கள் மற்றும் தங்க நகைகளின் மதிப்பு, 250 கோடி ரூபாய் இருக்கலாம் என, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இவை யாருக்கு சொந்தமானவை என்ற மர்மம் விலகவில்லை. வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவினரும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, நேற்று முன் தினம் இரவு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், ரயில் நிலையத்திற்கு வெளியே நிறு…
-
- 0 replies
- 436 views
-
-
கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம் இன்று முதல் சுவிட்சர்லாந்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு ஆகக்குறைந்தது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சுவிட்சர்லாந்தின் சமஷ்டி அரசு அறிவித்துள்ளது. கட்டாய திருமணத்தை செய்து வைப்பதில் சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பெரும்பாலும் ஈடுபடுவதாக சுவிசர்லாந்தின் பிரபல பத்திரிகையான சொண்டாக் பிளிக் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் சராசரி 400 கட்டாய திருமணங்கள் நடப்பதாகவும் இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளை சேர்ந்த பெற்றோரே தமது பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணங்களை செய்து வைக்கின்றனர் என்றும் சு…
-
- 1 reply
- 734 views
-
-
அமெரிக்க அதிபருக்கு உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்த ஆலோசனை வழங்கும் முக்கிய பதவிக்கு சூசன் ரைசை ஒபாமா கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி தேர்ந்தெடுத்தார். இன்று சூசன் ரைஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுக் கொண்டார். ‘கடந்த 4.5 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதராக இருந்து அதிபருக்கு சேவை செய்தது பெருமையாக உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக வெள்ளை மாளிகையில் பணியை தொடங்கப் போவதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்‘, என்று ரைஸ் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார். இவர் அமெரிக்கா, இந்தியாவுடன் உறுதியான உறவை ஏற்படுத்திக்கொள்ள பெரும் பங்காற்றினார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த போது, இந்தியாவின் தேசிய பாதுக…
-
- 0 replies
- 428 views
-
-
பீஜிங்: பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் சீனாவில் அமலுக்கு வந்துள்ளது. சீனாவில் ஒரு குழந்தை திட்டம் 1970ம் ஆண்டுகளில் அமலுக்கு வந்தது. இதனால், பெரும்பாலான குடும்பங்களில் ஒரேயொரு வாரிசு மட்டுமே உள்ளார்கள். அவர்களும் இப்போது வேலைவாய்ப்பு தேடி வேறு நகரங்களுக்கு சென்று விடுகின்றனர். இளையவர்கள் இல்லாத காரணத்தால் பெரும்பாலான வீடுகளில் வயதான பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 100ல் 14 பெற்றோர்கள் இதுபோன்று கவனிப்பாரின்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம் உள்ளனர். 2050ம் ஆண்டு மூன்றில் ஒருவர் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் …
-
- 0 replies
- 291 views
-
-
சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு இறப்பது தொடர் நிகழ்வாகிப் போய்விட்டது. இதற்கு விசாரணை செய்வது குறித்து காவல்துறையினருக்கு போதிய பயிற்சி தராததும் ஒரு காரணம் என்று மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். வழக்கறிஞர் மன்றத்தின் குற்றவியல் சட்டப் பிரிவின் துணைத் தலைவரான வி.சிதம்பரம் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நடந்த குகன் வழக்கை மேற்கோள் காட்டிக் கருத்துரைக்கையில், “நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்கப்படுவதில்லை.” “காரணம் அதன் மேல் பல புகார்கள் எழுந்தன மற்றும் விசாரணையில் வழக்கறிஞர்கள் அது குறித்து கேள்வி கேட்கும் போது அந்த வாக்குமூலங்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் காரணமாக நீதிமன்றம் அது …
-
- 0 replies
- 578 views
-
-
ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடமாடிய சீனாவைச் சேர்ந்த 3 பேரை ராணுவத்தினர் கைது செய்தனர். இந்தியப் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய சுல்தான்கு என்ற பகுதிக்கு அருகில் ஜூன் 12ஆம் தேதி 3 நபர்கள் சுற்றித் திரிந்தனர். அவர்களை ராணுவ வீரர்கள் கைது செய்து விசாரணை நடத்தினர். சீனாவைச் சேர்ந்த அவர்களுக்கு ராணுவத்தினர் கேட்ட கேள்விகள் புரியவில்லை. அவர்களின் பெயர்களை அறிந்து கொள்ளவே 10 தினங்களானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்களின் பெயர் அடில், சலாமோ மற்றும் அப்துல் காலிக் என்றும், அவர்கள் சீனாவைச் சேர்ந்த சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. அராபிய மொழியில் அச்சடிக்கப்பட்ட அரசியல் வரைபடங்களையும் அவர்கள் வை…
-
- 2 replies
- 473 views
-
-
அமெரிக்கக் காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பலி தொடர்ந்தும் 200 தீயணைப்புப் படைவீரர்கள் தீயை அணைக்க போராடிவருகின்றனர் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 19 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர். அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் பரவிய இந்தத் தீ, அருகே யார்னெல் நகரை அண்டாமல் தீயணைப்புப் படைவீரர்கள் போராடினார்கள். கடந்த வெள்ளியன்று மின்னல் தாக்குதலினால் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ, கடுமையான காற்று, காற்றில் குறைந்தளவு ஈரலிப்பு மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வேகமாக பரவத் தொடங்கியது.செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், ஒரே சம்பவத்தில் அதிகளவில் தீயணைப்பு…
-
- 0 replies
- 490 views
-
-
மணிப்பூர் மாநிலம் மற்றும் மியான்மர் நாட்டிற்கும் இடையேயான எல்லைப் பிரச்னையில், தமிழர்களின் கோவிலை, மியான்மருக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என, மணிப்பூர் அரசு உறுதியாக தெரிவித்துஉள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூருக்கும், அதன் எல்லையில் உள்ள, மியான்மர் நாட்டிற்கும் இடையே, நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நிலவுகிறது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து, 100 கி.மீ., தொலைவில் உள்ள மோரே என்ற இடத்தில், தமிழர்களுக்கு சொந்தமான கோவில் உள்ளது. மணிப்பூர் மாநிலத்திற்குள் அமைந்துள்ள அந்த கோவிலைச் சுற்றி, 17 ஆயிரம் தமிழர்களும் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை, மியான்மர் அரசு, தன் பகுதி எனக் கோரி வருகிறது. அதை மணிப்பூர் அரசு மறுத்து வருகிறது.""மோரே பகுதி, மணிப்பூர…
-
- 0 replies
- 584 views
-
-
நான் தான் நெல்சன் மண்டேலாவின் காதலிக்கு பிறந்த மகள் என உரிமை கோரியுள்ளார் 65 வயது பெண் ஒருவர். தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8ம் திகதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது மண்டேலாவுக்கு செயற்கை முறையில் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அவருக்கு எந்த நேரத்திலும் உயிர் பிரியலாம் என்பதால், அவருடைய உறவினர்கள் அனைவரும் பிரிட்டோரியாவில் குவிந்துள்ளனர். இந்நிலையில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. மண்டேலாவுக்கு மூன்று மனைவிகள், முதல் மனைவி இறந்துவிட்டார். இரண்டாவது மனைவி வின்னி, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதால், அவரை மண்டேலா விவாகரத்து செய்து விட்டார். மூன்றாவது மனைவி கிரேகா மிச்சேல், இவர் மொசாம்பிக் நாட்டு மு…
-
- 1 reply
- 494 views
-
-
ஆந்திராவில் தனி தெலுக்கானா கோரி போராட்டம் நடந்து வருகிறது. இதேபோல் ஆந்திராவை பிரிக்க கூடாது. ஒன்றுபட்ட ஐக்கிய ஆந்திராவாக இருக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் வலிறுயுத்தி வருகிறார்கள். இரு தரப்பை சேர்ந்த காங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் திக்விஜய்சிங் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல் முறையாக விசாகபட்டினம் வந்தார். விமான நிலையத்தில் அவரை ஐக்கிய ஆந்திராவை ஆதரிக்கும் 4 மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் ஆந்திராவை பிரிக்ககூடாது ஐக்கிய அந்திராவாகதான் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். மனுவை பெற்று கொண்…
-
- 0 replies
- 308 views
-
-
மழையை கண்ட ஆனந்தத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் போல 'தந்தான தந்தான தந்தான தனனே..' என்று துள்ளி ஆடிய சகோதரிகளை பாகிஸ்தான் பழமைவாதிகள் சுட்டுக்கொன்ற வெறிச்செயல், பெண்ணியக்க வாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மெலிதான தூரல் மழைக்கு இடையில் பாகிஸ்தானின் சிலாஸ் பகுதியை சேர்ந்த நூர் ஷேசா(16), நூர் பஸ்ரா(15) ஆகிய சகோதரிகள் சில சிறுவர் - சிறுமிகளுடன் துள்ளி நடனமாடும் காட்சி சமீபத்தில் இணையதளங்களில் உலா வந்தன. உலகெங்கிலும் வாழும் ஆயிரக்கணக்கானோர் இந்த படப்பதிவை கண்டு மகிழ்ந்தனர். இந்நிலையில், இவர்களின் வீட்டுக்கு வந்த 5 பேர் காட்டு மிராண்டித் தனமாக அந்த பெண்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். அவர்களின் தாயார் நோஷரா என்பவரையும் ஈவிரக்கமற்ற அந்த பழமைவாத கும்பல் சுட்டுக்கொன்றது. …
-
- 0 replies
- 475 views
-
-
ஆஸ்பத்திரியில் மண்டேலா... புதைக்கும் இடம் குறித்த சண்டையில், கோர்ட் சென்ற குடும்பத்தினர். ஜோகன்ஸ்பர்க்: மருத்துவமனையில் இருக்கும் மண்டேலா நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என உலக மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அதே வேளையில், மண்டேலா குடும்பத்தினர் மண்டேலா இறந்த பிறகு எங்கே புதைப்பது என்ற சச்சரவில் கோர்ட் படியேறியுள்ளனர். கறுப்பர் இன விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறையிலேயே தன் வாழ்க்கையைக் கழித்த ,தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக பிரேடோரிகாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதான மண்டேலா, கடந்த 25 நாட்களாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மண்டேலா மிகவும் கவலைக்க…
-
- 0 replies
- 401 views
-
-
அவுஸ்ரேலியாவில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தொழிலாளர் கட்சியின் வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் கெவின் ரூட்டும் , ஜீலியா கிலாட்டும் போட்டியிட்டனர் , வாக்கெடுப்பின் முடிவில் கெவின் ரூட் கட்சியின் தலைமைப்பதவியையும் , பிரதமர் பதவியையும் பெற்றுக் கொண்டார் , அத்துடன் தனது உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்தும் அவர் வெளியேறியுள்ளார் , மேலும் ஜீலியா கிலாட் , மகிந்த இராஜபக்ஸ தலைமையிலான இலங்கை அரசுடன் நெருங்கிய உறவைப் பேணியவர் என்பது குறிப்பிடத்தக்கது... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=7730:2013-06-26-10-28-15&catid=1:latest-news&Itemid=18
-
- 34 replies
- 1.9k views
-
-
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உடல் நலக்குறைவு காரணமாக பிரேடோரிகாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 நாட்களாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார். ஆனால் மரணம் அடைந்ததும் அவரது உடலை எங்கு புதைப்பது என்பதில் அவரது குடும்பத்தினர் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மண்டேலா மரணம் அடைந்ததும் அவரது இறுதி சடங்கை நடத்திவிட்டு உடலை மவெஷா என்ற இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது பேரன் மாண்ட்லா தெரிவித்துள்ளார். அங்குதான் மண்டேலாவின் 3 குழந்தைகள் உடல் அடக்கம் நடந்தள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு மண்டேலாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரது மகள்கள் ம…
-
- 4 replies
- 366 views
-