உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26666 topics in this forum
-
கனடாவின் மிகப்பெரிய விமானநிலையமான டொரண்டோவில் உள்ள பியர்சன் விமானநிலையத்தில் கம்ப்யூட்டர் பழுது காரணமாக பல விமானங்கள் காலதாமதாக வந்து போயின. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கம்ப்யூட்டர் டெக்னீஷியன்களின் தீவிர முயற்சியால், பழுது சரிபார்க்கப்பட்டதாக விமானநிலைய செய்தித்தொடர்பாளர் Ron Singer இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். Ron Singer மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கம்ப்யூட்டர் பழுது காரணமாக விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும், காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாலை 5.30 மணியளவில் பழுதுநீக்கப்பட்டு, மீண்டும் இயல்புநிலை திரும்பியது என்றும் அந்த இரண்டு மணி நேரங்களில் ஏற்பட்ட அசெளகரிகத்திற்கு நிர்வாகம் வருத்தப்…
-
- 0 replies
- 310 views
-
-
அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடாவின் Hallandale Beach அருகேயுள்ள உள்ள ஒரு பூட்டிய வீட்டில் கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குளிர்காலத்தை Hallandale Beach தட்பவெப்பத்தை ரசிக்க வந்த கனடியன் தம்பதி, அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். அவர்கள் தினசரி பக்கத்து வீட்டு நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது வழக்கம். சென்ற வியாழக்கிழமை பக்கத்து வீட்டுகாரர் போன் செய்து சாப்பிட அழைத்தபோது, எவ்வித பதிலும் வராததால், சந்தேகம் அடைந்து, விட்டை திறந்து பார்த்தபோது தம்பதிகள் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே ஃபுளோரிடா காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து, முதல்கட்ட விசாரணை செய்தனர். உறவினர்கள…
-
- 0 replies
- 399 views
-
-
கலிபோர்னியா: கலிபோர்னியாவில் பள்ளியில் சொல்லித் தரும் யோகா வகுப்புகளில் இந்துத்துவத்தை சேர்த்து கற்பிப்பதாகக் குற்றம்சாட்டி சிலர் பெற்றோர்கள் அந்த வகுப்புகளை நீக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளுக்கு யோகா கற்றுத் தருகின்றனர். கலிபோர்னியாவில் உள்ள ஆலிவ்ஹெய்ன் பயனியர் துவக்கப்பள்ளியிலும் மாணவர்களுக்கு யோகா கற்றுத் தருகின்றனர். இதற்கு இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களில் சிலர் ஆதரவும், மேலும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். யோகா வகுப்புகளில் சூர்ய பகவானுக்கு நன்றி சொல்லுமாறு கூறுகின்றனர். இதைப் பார்த்தால் யோகா வகுப்பு போன்று இல்லை ஏதோ மத போதனை வகுப்பு போன்று உள்ளது என்று ஒரு மாணவனின் தாய் மேரி ஈடி தெரிவித…
-
- 0 replies
- 347 views
-
-
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கூடுதல் ராணுவத்தினரை பாகிஸ்தான் குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே தமது நாட்டு ராணுவ வீரர்களின் விடுமுறையை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கடந்த ஒருவார காலமாக பாகிஸ்தான் அட்டூழியம் செய்து வருகிறது. ஜனவரி 6-ந் தேதி இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது பாகிஸ்தான். இதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் அந்நாட்டைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 8-ந் தேதியன்று பூஞ்ச் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இரண்டு இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றதுடன் அவர்களது தல…
-
- 1 reply
- 391 views
-
-
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தில் இளம் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள சலம்பர் என்னும் இஸ்லாமிய கிராம பஞ்சாயத்திலேயே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,"இந்த ஊர் பெண்கள் பெற்றோர் விருப்பப்படியே நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் பையனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.அதை மீறினால் ரூ.51 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். செல்போன்கள்தான் இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்து விடுகின்றன. எனவே பெண்கள் செல்போனில் பேச தடை விதிப்பதற்கு எல்லாரும் சேர்ந்து ஏகமனதாக முடிவு செய்துள்ளோம்.இதை எல…
-
- 1 reply
- 369 views
-
-
மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் பிறந்த நாளன்று மும்பை பெண்களுக்கு கத்தி வழங்க அக்கட்சி தொண்டர்கள் தீர்மானித்துள்ளனர். மறைந்த சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேயின் பிறந்த நாள் இம்மாதம் 23ஆம் தேதி வருகிறது. பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ள அக்கட்சியினர், விழாவின்போது பெண்களுக்கு கத்தி வழங்க தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து சிவசேனா தலைவர்களில் ஒருவரான அஜய் சவுத்திரி கூறுகையில், பெண்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறியதால் எங்கள் கட்சியினர் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள உதவும் கத்தியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாங்கள் பெண்களுக்கு வழங்கவிருக்கும் கத்தி சீனாவில் தயாரிக்கப்பட்டது. இரண்டாக மடிக்ககூடிய இந்த சிறிய வகை கத்தியை பெண்கள் சு…
-
- 0 replies
- 574 views
-
-
ரிசர்வ் போலிஸை சுட்டு அவரது வயிற்றில், ஒன்றரை கிலோ வெடிகுண்டுகளை நிரப்பி போலிஸின் உடலை அனுப்பியுள்ளனர். மருத்துவர்கள் உரிய நேரத்தில் கண்டறிந்ததால் பெரிய நாசம் தவிற்கப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் கடந்த 7 ஆம் தேதி மாவோயிஸ்டுகளுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸுக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், மத்திய ரிசர்வ் போலீஸ் 9 பேர் உட்பட 13 பேரை மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொன்றனர். இறந்தவர்களின் உடல்களை அதிரடிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப் பட்ட காவல் படையைச் சேர்ந்த பாபுலால் படேல் என்பவரின் வயிற்றுப் பகுதி வெட்டி தைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சந்தேகத்தில் உடலை ஸ்கேன் செய்து பார்த்ததபோது, வயிற்றுப் பகுதியில் …
-
- 0 replies
- 299 views
-
-
ஸ்ரீவில்லிபுத்தூர்: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும் என்றும், கருணாநிதிக்கு இருந்த பெருந்தன்மை ஜெயலலிதாவுக்கு இல்லை என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வழிபட்ட விஜயகாந்த், அக்கோவில் தங்க விமான திருப்பணிக்காக 105 கிராம் தங்க நாணயங்களை கோவிலுக்கு வழங்கினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்திடம் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜயகாந்த்,"நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு இப்போது என்ன அவசரம் ?. நேரம் வரும்போது முடிவு செய்வோம்" என்றார். "எங்க அம்மா ஆண்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
திருவாரூர்: என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான காவல்துறை டி.எஸ்.பி. வெள்ளத்துரை மற்றும் 4 பேர்களுக்கு எதிராக திருவாரூர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. ‘மாட்டு’ ரவி என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்த நான், தினமும் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வந்தேன். அப்போது வெள்ளைத்துரை தலைமையில் வந்த போலீஸ் குழு ஒன்று, என்னைத் தூக்கிச் சென்று என்கவுன்டரில் கொல்ல முயன்றது. இந்தத் தகவல் அறிந்த எனது வழக்கறிஞர் ஊடகங்களுக்கு தகவல் சொன்னதோடு, காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் தந்தி மூலம் தகவல் அனுப்பினார். அதனை அடுத்து என்கவுன்டர் திட்டத்தைக் கைவிட்டனர்.…
-
- 0 replies
- 614 views
-
-
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தம்பதியான ரால்ப் தாரான்ட்–பில்லிஸ் ஆகியோர் 100 ஆண்டுகளை தாண்டி வாழ்ந்த தம்பதி என்ற பெருமை பெற்றவர்கள். இவர்களில் பில்லிஸ் தனது 102–வது வயதில் மறைந்தார். ஆனால் கணவரான ரால்பி 109 வயது 185 நாட்கள் வரை ஆரோக்கியம் குன்றாமல் வாழ்ந்து சமீபத்தில் மரணத்தை தழுவினார். இவர்கள் 2 உலகப்போரையும், 24 பிரதமர்களையும் கண்டவர்கள். தனது 100 ஆண்டுகள் வாழ்க்கை ரகசியம் என்ன? என்பது பற்றி ரால்பி உயிரோடு இருந்த போது தனது பேரக்குழந்தைகளிடம் கூறியிருக்கிறார். ‘எந்த காரியத்தையும் முனைப்போடும், அறிவுத்திறனுடனும் செய்ய வேண்டும். நல்லது, கெட்டது இரண்டையும் அனுபவி. 70 வயது வரை புகைபிடித்தேன். சாகும் வரையில் மது குடிப்பதை நிறுத்தவில்லை. ஆகவே வாழ்க்கையை பற்றி அதிக கவலைப்பட கூ…
-
- 0 replies
- 372 views
-
-
http://www.cnn.com/video/?hpt=hp_c3#/video/us/2013/01/10/tsr-pkg-moos-lion-dog.cnn http://www.cbsnews.com/8301-201_162-57563295/lion-dog-gives-virginia-residents-a-scare/#ooid=c0Y2g5ODqBTLyEp0YVt_qDXYq0P8heSi
-
- 1 reply
- 608 views
-
-
அடுத்த கொடூரம்... சீக்கியரைக் கடத்தி தலையைத் துண்டித்துக் கொன்ற பாக். தீவிரவாதிகள். இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தால், 2 இந்திய வீரர்கள் கொலை செய்யப்பட்டதும், ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியில் வசித்து வந்த ஒரு சீக்கியரைக் கடத்திச் சென்ற தீவிரவாதிகள் அவரைத் தலையைத் துண்டித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். அவரது பெயர் மொஹீந்தர் சிங். 40 வயதான இவர் மருந்து வியாபாரி ஆவார். கைபர் பழங்குடியினப் பகுதியில்உள்ள தப்பாய் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். இவரை நவம்பர் 20ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதக் கும்பல் கடத்திச் சென்றது. பின்னர் அவரைத் தலையைத் துண்டித்துக் கொலை செய்து உடலையும், தலையை…
-
- 9 replies
- 1.1k views
-
-
உலக அளவில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில், பாதியளவுக்கு விரயமாகிறது என்று பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டுள்ள ஒரு பொறியியல் அமைப்பு கூறியுள்ளது. வறிய நாடுகளில் உணவுப் பொருட்களின் உற்பத்திகள் திறம்பட இல்லாததும், செல்வந்த நாடுகளில் இருக்கும் நுகர்வோர்கள் அதீதமான அளவில் பொருட்கள் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுமே இதற்கு முக்கிய காரணங்கள் என்று பிரிட்டனிலுள்ள இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் மெக்கானிக்கல் இஞ்ஜினியர்ஸ் எனும் அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்படியாக உணவு தானியங்கள் விரயமாவதை மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் சரிசெய்ய இயலும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. உலகளவில் படிப்படியாக விவசாய நிலங்களும் நீராதரங்களும் குறைந்து வரும் நிலையில் உணவு …
-
- 0 replies
- 385 views
-
-
பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தை: இந்தியா - பாக்.கிற்கு ஐ.நா. ஆலோசனை ஐ.நா.:இந்திய வீரர்கள் 2 பேர் படுகொலை செய்யப்ப்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐ.நா. அறிவுறுத்தி உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி வந்து 2 இந்திய வீரர்களை படுகொலை செய்ததைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 6 ஆம் தேதி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்திய ராணுவத்தினர் வந்ததாகவும், எல்லைச் சாவடியை சோதனை செய்ததாகவும் இந்தியா மீது பாகிஸ்தான் பழிசுமத்தியது.இதை இந்தியா மறுத்தது. இந்நிலையில் இதுபற்றி ஐக்கிய நாடுகள் சபையின்…
-
- 2 replies
- 326 views
-
-
By J.Stephan 2013-01-10 22:34:26 சர்வதேச நாடுகளினதும் ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையினதும் கவனத்தை ஈர்த்துள்ளதான நோர்வேயின் சிறுவர் காப்பக விவகாரம் அங்கு வதிகின்ற வெளிநாட்டுப் பெற்றோரை வெகுவாகப் பாதித்துள்ளது. தமது பிள்ளை பலவந்தமாக தம்மிடத்திலிருந்து பிரிக்கப்பட்டிருப்பதாகவும் தம்மை மனதளவில் பாதிப்படையச் செய்யும் மறைமுக சதியில் நோர்வே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அந்த பெற்றோர் குமுறுகின்றனர். இது இவ்வாறிருக்க இன்னும் சில தினங்களில் நோர்வே சிறுவர் காப்பகங்கள், நோர்வே அரசாங்கம் ஆசிய தரப்புக்கள் எதிர்பாராத சில விடயங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படப் போவதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவிக்கின்றனர். எனினும் எத்தகைய அதிர்ச்சிகளை …
-
- 0 replies
- 488 views
-
-
Jan 10 2013 08:27:16 ஆப்பிரிக்க நாடான மாலியில் இஸ்லாமிய தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக கனடிய ராணுவம் அனுப்பப்பட மாட்டது என்று கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்திருக்கிறார். ஆப்பிரிக்காவில் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான மாலியில் தீவிரவாத இயக்கமான அல்குவைதாவுடன் தொடர்புக் கொண்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் நாட்டின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மாலியின் வடப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இதனால் அங்கு தீவிரவாதம் பரவும் அபாயம் உண்டாகியுள்ளது. கடந்த மாதம் கூடிய ஐநா பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் ஆப்பிரிக்கர் தலைமையில் ஒரு கூட்டு ராணுவத்தை அமைத்து தீவிரவாதிகளை ஒடுக்குவதென்று முடிவு செய்தது. இதற்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளிக்க…
-
- 0 replies
- 311 views
-
-
'சித்தூர்: 'எனக்கு எய்ட்ஸ்...விட்டுருங்கடா!'என்று கூறியதால், இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பினார். ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜா ரெட்டியும், அதே ஊரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு,பைக்கிலேயே திருப்பதி சென்று விட்டு, இரவு வேளையில், பாகராபேட்டை எனும் வனப்பகுதி வழியே வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் வழியில் மரத்தடியில் நின்று பேசியபோது,இரண்டு பைக்குகளில் நான்கு மர்ம ஆசாமிகள் அங்கே வந்தனர். காதல் ஜோடியைப் பார்த்ததும் பைக்கை நிறுத்தினார்கள்.ராஜாரெட்டியை சரமாரியாகத் தாக்கினார்கள்.பிறகு அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்கள். இதனையடுத்து பதறி…
-
- 1 reply
- 608 views
-
-
கனடாவில் கடந்த 2011ஆம் ஆண்டில் குடிபோதையில் டிரைவிங் செய்த குற்றத்திற்காக 90,000 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2010ஆம் ஆண்டின் எண்ணிக்கையைவிட 3000 கூடுதலாகும் என கனடாவின் ஒரு புள்ளிவிபரம் கூறுவதாக காவல்துறை இன்று அறிவித்துள்ளது. ஒவ்வொரு 100,000 மக்களுக்கு 262 பேர் குடிபோதையில் டிரைவிங் செய்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இது கடந்த 2010ஆம் ஆண்டைவிட இரண்டு சதவிகிதம் அதிகம் எனவும் ஏஜென்ஸி செய்தி தெரிவிக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த சதவிகிதம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக உயர்ந்து கொண்டே இருப்பது கவலையளிக்கக்கூடியதாக உள்ளது என கனடிய காவல்துறை தெரிவித்துள்ளது. குடிபோதையில் டிரைவிங் செய்ததால் ஏற்பட்ட விபத்துகளில் 121 விபத்துகளில் உயிரிழப்ப…
-
- 0 replies
- 415 views
-
-
கனடாவில் போர்ட்டர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று அதிகாலை 12.01 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால், விமானப்பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும், சிறப்பாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இருக்காது என்றும் அறிவித்துள்ளது. போர்ட்டர் ஏர்லைன்ஸின் 22 ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நிர்வாகத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென Canadian Office and Professional Employees Union மூலம் இன்று அதிகாலை 12.01க்கு அறிவித்தனர். யூனியனிற்கும், நிர்வாகத்திற்கு நடந்த பேச்சுவார்த்தையில் திடீரென முட்டுக்கட்டை ஏற்பட்டதால், இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்றும் ஊழியர்கள…
-
- 0 replies
- 405 views
-
-
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த கடலை வியாபாரியான தொழிலதிபர் ராமலிங்கத்திடம் கைப்பற்றப்பட்ட ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பத்திரங்கள் போலியானவை என வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. ஆனால், ராமலிங்கமோ, அனைத்து பத்திரங்களும் ஒரிஜினல் என்றும் வருமான வரித்துறை தன்னை சிக்க வைக்க சூழ்ச்சி செய்வதாகவும் குற்றம்சாற்றியுள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் வீட்டில் கடந்த 31ஆம் தேதி சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், 28ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க நிதிப் பரிமாற்ற பத்திரங்களை கைப்பற்றினர். இது தொடர்பான விசாரணையின்போது, பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் பத்திரங்களை வாங்…
-
- 0 replies
- 4.2k views
-
-
சென்னை: தர்மபுரி கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 7.32 கோடி இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உததரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் 7 ஆம் தேதி, தர்மபுரி மாவட்டத்தில் நத்தம் காலனி, நாயக்கன்கொட்டாய் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள் எரிக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் இரு வேறு சமூகத்தை சேர்ந்த இருவர் காதல் திருமணம் செய்துக்கொண்ட நிலையில், அம்மாவட்டத்திலுள்ள நத்தம் காலனி, நாயக்கன்கொட்டாய் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள் கடந்த நவம்பர் 7 ஆம் தேதியன்று தீ வைத்துக்கொளுத்தப்பட்டன. இந்நிலையில் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க கோரி செங்கொடி என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வ…
-
- 0 replies
- 596 views
-
-
தற்போது விஸ்வரூபம் படத்திற்காக கமல் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடி நிலையை திரையுலக ரசிகர்கள் அனைவரும் மிகவும் கூர்ந்து நோக்கி கொண்டிருக்கின்றனர். 92 கோடி ரூபாய் தன்னுடைய சொந்த பணத்தை செலவழித்து எடுத்த படத்தை அவருடைய விருப்பப்படி திரையிட விடாமல திரைமறைவு வேலைகள், குழிதோண்டும் வேலைகள் முதலிய நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவில் எந்த ஒரு நடிகர் இருந்தாலும், உண்மையிலேயே நொந்து நூலாகி போயிருப்பார். ஆனால் எதற்கும் அஞ்சாமல், யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று தைரியமாக கூறும் கமலின் வீரம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. கமல் திரையுலகிற்கு செய்த உதவிகள் ஏராளம். ஆனாலும் இன்று அவருடன் நடித்த நடிகர்கள், நண்பர்கள் அனைவருமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் வர…
-
- 1 reply
- 872 views
-
-
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில், இந்த இரு அண்டை நாடுகளும் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிக்க இணைந்து பணியாற்றும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.இது குறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனின் ஊடகச் செயலாளர் ஜார்ஜ் லிட்டில், செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்ட காலமாக பதற்றம் நிலவி வருவது அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியோன் பனேட்டாவுக்குத் தெரியும். இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிக்க இரு நாடுகளும் பாடுபடும் என்று நம்புகிறோம். இதை இந்த நாடுகளில் பயணம் மேற்கொண்டபோது லியோன் பனேட்டா உறுதிப்படுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 412 views
-
-
உலகம் முழுவதும் பிரபலம் ஆகிக்கொண்டிருக்கும் பிக் ஷோ நிகழ்ச்ச்க்கு எதிர்ப்பு தெரிவித்து Femen என்ற அமைப்பில் உள்ள மூன்று பெண்கள் பிரேசில் நாட்டில் திடீரென அரைநிர்வாண உடையோடு போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிக் ஷோ என்ற நிகழ்ச்சியில் உலகில் உள்ள பிரபலங்கள் ஒரு மிகப்பெரிய மால் கட்டிடத்தில் உள்ள கண்ணாடி அறைக்குள் இருந்து கொண்டு போட்டியிட்டுக் கொண்டு வருகின்றனர். பார்வையாளர்கள் அவர்களில் ஒருவரை வெற்றி பெற்றவர்களாக தேர்ந்தெடுப்பர். இந்த போட்டியை கண்ணாடி அறையில் அடைத்து வைத்து நடத்துவதால், பெண்களுக்கு சுதந்திரம் பாதிக்கப்படுகிறது, பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தி Femen என்ற பெண்கள் அமைப்பினர் போராடி வருகின்றனர்., இந்த அமைப…
-
- 3 replies
- 672 views
-
-
நியுயேர்சியில் இருந்து புறப்பட்ட பயணிகள் படகு மன்கட்டானில் இன்னொரு படகுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. இச் சம்பவமானது இன்று காலை 8.30 அளவில் நடந்தேறியுள்ளது. இவ்விபத்தில் 50 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் இருவரின் நிலை கவலைக்கிடமாகவிருப்பதாகவும் உறிதிப்படுத்தப்பட்ட தகவல்தெரிவிக்கின்றது. சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பல வகையாக விபரிக்கின்றார்கள். படகுடன் மோதியபோது பெரும் சத்தம் கேட்டதாகவும், இறங்குவதற்குத் தயாராக எழுந்து நின்றவர்கள் டெக்கிற்கு தூக்கி எறியப்பட்டார்கள் எனவும் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். இப்படகில் 340 ற்கு மேற்பட்ட பயணிகள் பயணித்திருக்கின்றார்கள். தீயணைக்கும் படையினர் வந்து மக்களை அப்புறப்படுத்துவதிலும், காயமடைந்த மக்களுக்கு முதலுதவி வழங்குவதிலும்…
-
- 1 reply
- 258 views
-