உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26870 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில் * இத்தாலியின் மத்திய பகுதியை பெரும் பூகம்பம் ஒன்று தாக்கியுள்ளது. குறைந்தது 73 பேராவது கொல்லப்பட்டனர். மீட்பு நடவடிக்கை தொடர்கிறது. * மியான்மரிலும் இன்னுமொரு பூகம்பம் தாக்கியுள்ளது. * ஹார்மோன் மாற்றீட்டு சிகிச்சை பெறும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. * சுபீட்சமான எதிர்காலத்துக்கான ஒரு அகழ்வு. மொரிட்டீனியாவில் பெரும் தங்கவேட்டை, ஆனால் எல்லோருக்கும் பலன் கிடைக்கவில்லை.
-
- 0 replies
- 328 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஜெர்மனியில் உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்த சிரிய நாட்டு ஆண் பலி; பதினைந்து பேர் காயம்; பல்கேரியாவுக்கு திருப்பியனுப்பப்பட இருந்தவர் அவர் என்று ஜெர்மனி அறிவிப்பு. * ஒற்றுமையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்தான்புல் தெருக்களில் பேரணி; ஆனால் தொடரும் கைதுகளின் அடுத்த கட்டமாக நாற்பத்தி இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. * தன் தாயார் இளவரசி டயானா மரணம் குறித்து முன்பே பேசியிருக்க வேண்டும் என்று நினைப்பதாக இளவரசர் ஹாரி உருக்கம்; உளவியல் நலனில் கூடுதல் கவனம் தேவையென்று வலியுறுத்தல்.
-
- 0 replies
- 241 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * இத்தாலிய பூகம்பத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, உயிர்பிழைத்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன. * தீவிரவாதக் குழுக்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவதை தடுக்க சமூக வலைத்தள நிறுவனங்கள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரிட்டிஷ் எம்பிக்கள் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. * மாலத்தீவுகளில் போராட்டங்களும் பதற்றமும் அதிகரிக்க, அந்த நாடு அரசியல் நெருக்கடியின் எல்லையில் உள்ளது.
-
- 0 replies
- 383 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * அரசாங்கத்துக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து நான்கு வருடங்களாக முற்றுகையில் இருந்த சிரியாவின் டராயா நகரில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். * பிலிப்பைன்ஸில் போதை மருந்துக்கு எதிரான போர். புதிய அதிபரின் நடவடிக்கையில் ஏழு வாரங்களில் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர். * மாயத்தோற்றத்தை தரும் உடல் ஓவியங்கள். ஓவியரின் கருத்துக்கள்.
-
- 0 replies
- 370 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கொலம்பியாவில் சமாதானத்துக்கான புதிய நம்பிக்கை; ஐம்பதாண்டுகால ஆயுதமோதலை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. * ஹிலரி கிளிண்டன், டொனால்ட் ட்ரம்புக்கு இடையிலான முதல் நேரடி விவாதத்துக்கு தயாராகிறது அமெரிக்கா; அதிபர் தேர்தலுக்கான நேரடி விவாதங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது எது?—ஆராய்கிறது பிபிசி. * விவசாய நெருக்கடிக்கு புதுவகை தொழில்நுட்பத்தீர்வு; கென்யாவின் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் செல்பேசி விவசாயம்.
-
- 0 replies
- 395 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * சிரியாவுக்கு பயணித்த ரஷ்ய இராணுவ விமானம் கருங்கடலில் வீழ்ந்ததில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ரஷ்யாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு. * சிரியப் போரில் பெரும் தீக்காயமடைந்த பாத்திமாவின் கதை இது. ஜெர்மனிய அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் அந்த குழந்தைக்கு மறுவாழ்வளிக்க முயல்கின்றனர். * மடகாஸ்கருக்கே உரிய லீமர்ஸ் விலங்கினம் அழியும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.அவற்றை காப்பாற்ற பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள் அறிமுகம்.
-
- 0 replies
- 385 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதால் பங்குச்சந்தைகளில் நிலவும் பயத்தைப் போக்க பிரிட்டன் நிதியமைச்சர் முயற்சி; பிரிட்டன் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக வலியுறுத்தல். * கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுக்குப் பின் பிரிட்டனில் வெறுப்புக்குற்றங்கள் நடந்திருப்பதாக புகார்; புலனாய்கிறது பிரிட்டிஷ் காவல்துறை. * ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய ராஜ்ஜியம் விலகுவதைத் தனது அரசாங்கம் தடுக்கப்போவதாக ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் எச்சரிக்கை; அது சட்டப்படி சாத்தியமா என்பதை ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 449 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * பிரான்ஸ் தேவாலயத்தில் மதகுரு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் மதத்தலைவர்கள் அதிபர் ஹொல்லாந்தோடு சந்திப்பு; வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்தக் கோரிக்கை. * அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக ஹிலரி கிளிண்டனை அறிவித்தது ஜனநாயககட்சியின் மாநாடு; கசப்புகள் நிறைந்த போட்டியின் இறுதியில் ஓங்கி ஒலித்தது ஒற்றுமைக்குரல். * மீர்கட் தொலைநோக்கியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா
-
- 0 replies
- 284 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * சூடுபிடிக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல் களம்; ஹிலரி கிளிண்டனுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையிலான முதலாவது நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் காரசார மோதல். * சீனாவின் சிறு முதலீட்டாளர்கள் போராட்டம்; நிதி நிறுவன மோசடியில் பல மில்லியன் இழப்புக்கு அரசு நடவடிக்கை தேவையென கோரிக்கை. * உலகுக்கு வெளியிலும் உயிர்கள் இருக்கிறதா? வியாழனின் நிலவில் நீரிருப்பதை கண்டறிந்தது நாசா நிறுவனம்
-
- 0 replies
- 356 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * உற்சாகம், கேலிச்சிரிப்பு, கண்ணீர் கசிந்த கண்கள்--பிரிட்டன் விலகும் முடிவுக்குப்பின் கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் உணர்ச்சிமயம். * அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தின் கருக்கலைப்புத்தடைச் சட்ட்த்தை நிராகரித்தது உச்சநீதிமன்றம்; அமெரிக்காவின் மற்ற மாநிலங்களில் நிலைமை மாறுமா? * வித்தியாசமான ஆடைஅணிவகுப்பு; அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை பாதுகாக்கும் குண்டுதுளைக்காத கண்கவர் ஆடைகள் தயார்.
-
- 0 replies
- 462 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * துருக்கியில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறதா? தோல்வியில் முடிந்த இராணுவ சதியைத்தொடர்ந்து நூற்றி முப்பத்தியோரு ஊடகங்களை அதிகாரிகள் மூடியதால் அதிகரிக்கும் அச்சம். * "அமெரிக்க அதிபராக வருவதற்கு அதிகபட்ச தகுதியுடையவர் ஹிலரி கிளிண்டன்"; அங்கீகரித்து, ஆதரவளித்து பாராட்டினார் அதிபர் ஒபாமா. * ரியோ ஒலிம்பிக் போட்டிகளையொட்டி அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள்; பயங்கரவாத தாக்குதலே தனது மிகப்பெரிய கவலை என்கிறார் பாதுகாப்புப்படையின் தலைவர்.
-
- 0 replies
- 582 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * இஸ்தான்புல்லை உலுக்கிய பயங்கரவாதம்; பிரதான விமானநிலையத்தில் நடந்த மோசமான தாக்குதலில் 41 பேர் பலி; 239 பேர் காயம். * மெக்சிகோ நாட்டவர் விசா இல்லாமல் கேனடா வர அனுமதி; வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்த கூட்டத்துக்கு முன்பாக கேனடா பிரதமர் அறிவிப்பு. * யானைத் தந்த வர்த்தகத்தை முற்றாக தடுக்கப்போவதாக ஹாங்காங் அறிவிப்பு; சட்டவிரோத யானைத் தந்த வர்த்தகத்தை தடுக்கப்போவதாக உறுதி.
-
- 0 replies
- 292 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், *அமெரிக்காவை அனைத்து அமெரிக்கர்களுக்குமானதாக மாற்றப்போவதாக ஹிலரி கிளிண்டன் உறுதிமொழி! *துருக்கி அரசின் அதிரடிக்கைதுகள் தொடர்கின்றன!இராணுவ சதிப்புரட்சிக்கு பின் இருந்ததாக அரசு கூறும் அமைப்பின் பின்னணி என்ன? *சிரியாவிலிருந்து உயிர் தப்ப அகதியாய் கடலில் நீந்தியவர் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்கிறார்! பதக்கம் வெல்லும் கனவு கைகூடுமா?
-
- 0 replies
- 443 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * லிபியாவின் சியர்த் நகரை மீட்க அரச படைகள் கடும் போராட்டம்; இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் அமைப்புடனான மோதல் முன்னரங்கிலிருந்து பிபிசி செய்தியாளர் தரும் பிரத்யேகத் தகவல்கள். * நைஜீரியாவின் வடநகரான பாமாவின் இன்றைய நிலவரம் குறித்த பிபிசியின் நேரடித்தகவல்; போகோ ஹராம் பிடியில் இருந்து தப்பிய நகரம் இன்று கொடும் பஞ்சத்தின் பிடியில். * செவ்வாய் கிரக வாழ்க்கை எப்படி இருக்கும்? செவ்வாய் கிரகத்தின் நிலைமையை பிரதிபலிக்கும் ஹவாய் எரிமலைக்கருகே ஓராண்டு வாழ்ந்து பரிசோதித்த விஞ்ஞானிகளின் அனுபவப் பகிர்வு.
-
- 0 replies
- 524 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அதிபர் ஒபாமாவின் வெட்டு அதிகாரத்தை நிராகரித்தது அமெரிக்க நாடாளுமன்றம்; செப்டம்பர் பதினோறு தாக்குதலுக்காக சவுதி அரேபியா மீது வழக்கு தொடுக்க அமெரிக்க பிரஜைகளுக்கு அனுமதி. * சடலங்களாக வீடு திரும்பும் அகதிகளின் அவலம்; ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழையமுயன்று ஆழ்கடலில் மரணித்தவர்களின் குடும்பங்களை சந்தித்தது பிபிசி. * இனஅடையாளத்தை மறைக்க ஒருவர் எந்த எல்லைக்கு செல்லக்கூடும்? அறுவை சிகிச்சை மூலம் அடையாளத்தை மாற்ற முயன்றவரின் பிரத்யேக பேட்டி.
-
- 0 replies
- 453 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * கடலில் காப்பாற்றப்பட்ட குடியேறிகள்; திங்களன்று மட்டும் 6500 பேர் மத்திய தரைக்கடலில் இருந்து மீட்கப்பட்டனர். * அதிகம் அறியப்படாத சுகாதார நெருக்கடியில் தென் ஆப்ரிக்கா; கர்ப்பகாலத்தில் பெண்களின் மது அருந்தும் பழக்கம் கருவின் சிசுவை மோசமாக பாதிப்பதாக எச்சரிக்கை. * நகரங்களை நோக்கி நகரும் சீனாவின் கிராமத்துப் பெண்கள்; காதலுக்கு ஏங்கும் ஆண்கள் நிறைந்த சீன கிராமம் ஒன்றுக்கு சென்ற பிபிசி, அங்குள்ள ஆண்கள் நிலவரம் குறித்து சேகரித்த செய்தித்தொகுப்பு.
-
- 0 replies
- 670 views
-
-
-
- 0 replies
- 378 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஐ எஸ் அமைப்பின் முக்கிய போராளி சிரியாவில் கொல்லப்பட்டார்; அவரை தாங்கள் குறிவைத்ததாக அமெரிக்காவும் ரஷ்யாவும் அறிவிப்பு. * சிங்கப்பூரில் ஸிகாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நூறாக அதிகரிப்பு; அதன் பரவலைத்தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது அரசாங்கம். * பறவையின் பறக்கும் திறனை புரிதுகொள்வதில் விஞ்ஞானிகள் வெற்றி; பறக்கும் ரோபோக்களை உருவாக்க இது உதவும் என்று நம்பிக்கை.
-
- 0 replies
- 249 views
-
-
லண்டனில் சனிக்கிழமை ஏழு பேர் கொல்லப்பட்டமை சுதந்திர உலகின் மீதான ஒரு தாக்குதல் என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர்; • மத்திய கிழக்கில் ஒரு இராஜதந்திரப் போர் ஆரம்பம், கட்டார் நாட்டுடனான உறவை ஆறு நாடுகள் துண்டித்தன. • கரு முட்டையக புற்றுநோய்க்கட்டிகளை கரைக்கும் புது மருந்துக்கான ஆரம்பகட்ட பரிசோதனை முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக கூறும் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் ஆகியவை இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 244 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. * அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இன்று சவுதி அரேபியா செல்கிறார். * பெரும் ஊழல் ஒன்றின் சாட்சிகளுக்கு லஞ்சம் கொடுக்க அனுமதி வழங்கியதாக பிரேஸில் அதிபருக்கு எதிராக அழுத்தம் அதிகரித்து வருகின்றது. * காசாவில் மின்வெட்டின் பின்னால் இருக்கும் அரசியல் மோதல்கள். அங்குள்ள மக்களின் நிலை என்ன என்பதை நேரில் ஆராய்ந்தது பிபிசி ஆகியவை இடம்பெறுகின்றன..
-
- 0 replies
- 315 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஆப்பிரிக்காவிலும் மத்தியகிழக்கிலும் பஞ்சத்தை எதிர்நோக்கும் இரண்டு கோடி பேர்; சோமாலிய வறட்சியின் பாதிப்பை மோசமாக்கியுள்ளன போரும், ஊழலும். * பாகிஸ்தானில் தானமாக அளிக்கப்படும் சிறுநீரக தட்டுப்பாட்டால் அதிகரிக்கும் சிறுநீரகத்திருட்டு; பாதிக்கப்பட்ட ஏழைகளிடம் பேசியது பிபிசி * சிறுவர்களை அடிக்கலாமா கூடாதா? மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ள ஜிம்பாப்வே நீதிமன்ற தீர்ப்பு.
-
- 0 replies
- 251 views
-
-
பனோரமா ஆவணப்பட சர்ச்சை: பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா! 10 Nov, 2025 | 11:20 AM பனோரமா ஆவணப்படம் டொனால்ட் டிரம்பின் உரையைத் தவறாகத் திருத்தியதாக எழுந்த கடும் விமர்சனத்தையடுத்து, பிபிசியின் பணிப்பாளர் நாயகம் டிம் டேவி மற்றும் செய்தி பொறுப்பாசிரியர் டெபோரா டர்னஸ் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர். ஐந்து ஆண்டுகளாக பதவி வகித்த டேவி, பொது ஒளிபரப்பாளரைச் சூழ்ந்த தொடர்ச்சியான சர்ச்சைகள் மற்றும் சார்பு குற்றச்சாட்டுகளால் அதிக அழுத்தத்துக்கு உட்பட்டிருந்தார். தி டெலிகிராப் திங்களன்று வெளிவந்த பிபிசி உள்குறிப்பின் விபரங்களை வெளியிட்டது. அதில் பனோரமா நிகழ்ச்சி டொனால்ட் டிரம்பின் உரையின் இரண்டு தனித்தனி பகுதிகளை ஒன்றாக சேர்த்து திருத்தியதாக கூறப்பட…
-
- 3 replies
- 362 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, மும்பையில் செயல்படும் ஏவியோ ஃபார்மா எனும் மருந்து உற்பத்தி நிறுவனம், பல்வேறு வணிக பெயர்களில் மாத்திரைகளை தயாரித்து, சட்டபூர்வமான மருந்துகள் போல் தோற்றமளிக்கும் வகையில் அவற்றை உற்பத்தி செய்கின்றன கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி ஐ விசாரணைகள் பதவி, பிபிசி உலக சேவை 9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய மருந்து நிறுவனம் ஒன்று, உரிமம் பெறாத, தீவிர போதை பழக்கத்துக்கு உள்ளாக்கும் ஓபியாய்டுகளை (ஓபியம் செடியிலிருந்து தயாரிக்கப்படும் வலி நிவாரண மற்றும் சட்ட விரோத மருந்துகள்) தயாரித்து, அவற்றை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்து, அங்கு பெரும் பொது சுகாதார நெருக்கடியை உண்டாக்குகிறது என்று பிபிசி ஐ (BBC Eye) நடத்திய புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது. மும…
-
-
- 2 replies
- 501 views
- 1 follower
-
-
பிபிசி-க்கு எங்கிருந்து பணம் வருகிறது? பட மூலாதாரம்,SOPA IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில நாட்களாக பிபிசியின் நிதி ஆதாரங்கள் பேசுபொருளாக இருந்து வருவதுடன், ஊடகங்களில் பல தவறான செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. பல வகையான வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. பிபிசி சீனாவிடம் இருந்து நிதியுதவி பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பிபிசியின் பணிகள் மற்றும் நிதியாதாரம் பற்றிய அனைத்து தகவல்களும் பொதுவெளியில் கிடைக்கின்றன. உங்கள் வசதிக்காக, பிபிசியின் கட்டமைப்பு மற்றும் நிதியாதாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் நாங்களே தொகுத்து வழங்குகிறோம். பிபிசி அலுவலகங்களி…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
[size=4]பிபிசியின் புதிய தலைமை இயக்குனராக டோனி ஹால் நியமிக்கப்பட்டுள்ளார். டோனி ஹால் தற்போது லண்டனின் ராயல் ஒபரா அரங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.[/size] [size=4]அதற்கு முன்பாக டோனி ஹால் பிபிசியில் 28 ஆண்டுகாலம் பணிபுரிந்துள்ளார். 2001ஆம் ஆண்டு வரை அவர் பிபிசி நீயுஸின் தலைவராக இருந்தார்.[/size] [size=4]இதற்கு முன் பிபிசியின் தலைவராக இருந்த ஜார்ஜ் என்ட்விசில் இம்மாதத் துவக்கத்தில் பதவி விலகினார். இவர் வெறும் எட்டு வாரங்கள் மட்டுமே தலைவராக இருந்தார்.[/size] [size=4]சிறார் துஷ்பிரயோகம் செய்ததாக மூத்த அரசியல் தலைவர் ஒருவரை பிபிசியின் தொலைக்காட்சியின் நீயூஸ்நைட் நிகழ்ச்சி தவறாக குற்றம்சாட்டியதை அடுத்து அவர் பதவி விலக நேரிட்டது.[/size] [size=4]பிபிச…
-
- 0 replies
- 395 views
-