உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27014 topics in this forum
-
கனி விடுதலையில் பிசியாக இருந்த திமுக- லோக்சபாவில் அதிமுக மும்முரம்- பெரியாறுக்காக குரல் கொடுக்க யாரு? டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தையே கலக்கி விட்டனர் கேரளாவைச் சேர்ந்த அத்தனை எம்.பிக்கள். ஆனால் அவர்களின் தர்ணா போராட்டத்திற்கு கவுண்டர் தரும் வகையில் ஒரு தமிழக எம்.பியைக் கூட காண முடியவில்லை. திமுக எம்.பிக்கள் கனிமொழியின் ஜாமீனுக்காக ஓடிக் கொண்டிருந்தனர். அதிமுக எம்.பிக்களோ லோக்சபாவில் நடந்த அமளி துமளியில் சீரியஸாக மூழ்கியிருந்தனர். முல்லைப் பெரியாறு அணைக்காக குரல் கொடுக்க நேற்று ஒரு தமிழக எம்.பி. கூட இல்லாதது தமிழக மக்களை விரக்தியில் தள்ளியது. முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்ட வேண்டும் என்று தீர…
-
- 0 replies
- 661 views
-
-
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துச் செய்வதைத் தமிழக அரசு எதிர்க்கவில்லையென தமிழக அரசு அறிவித்தது முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டiனையை ரத்துச் செய்வதைத் தமிழக அரசு எதிர்க்கவில்லையென சென்னை மேல் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்தது. அந்த மூன்று பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு எதிராக சென்னை மேல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில், வழக்கறிஞர் நாயகம் நவநீதகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார். இந்த வழக்கில் மாநில அரசு சமர்ப்பித்த பதில் மனுவை ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விளக்கமளித்தமையால், அதனை விளக்கும் வகையில் உள்துறை செயலாளர் மேலதிகமாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறி…
-
- 0 replies
- 576 views
-
-
நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய், தகப்பனுக்குப் பிறக்காதவர்கள்- சீமான் சர்ச்சைப் பேச்சு கடலூர்: இந்த தமிழ்நாட்டில் தமிழர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் யாரும் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன் அல்ல என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடுமையாக பேசியுள்ளார். அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நாம் தமிழர் என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து அதைக் கட்சியாக தற்போது மாற்றி செயல்பட்டு வருகிறார் இயக்குநர் சீமான். தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இந்த இயக்கத்திற்கு நல்ல பெயரும், நல்ல ஆதரவும் காணப்படுகிறது. ஆனால் அதற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கடலூரில் நடந்த மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ…
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழக மக்களுக்கு ஆத்திரமூட்டுவதுதான் கேரளத்தினரின் திட்டம்: வைகோ சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசு, தமிழகத்தின் உரிமையையும் நீதியையும் நிலைநாட்ட முனையாமல், ஓர வஞ்சகமாக, கேரளம் செய்யும் அக்கிரமமான நடவடிக்கைகள் அனைத்துக்கும் பச்சைக்கொடி காட்டுகின்ற விதத்திலேயே செயல்பட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழ்நாட்டு மக்களுக்குப் பாசன நீரும், குடிநீரும் வழங்குகின்ற, பென்னி குக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே தீருவது என்று, கேரள அரசு கங்கணம் கட்டிக்கொண்டு, அதற்கான ஆயத்த வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய அணை கட்டுவது என்ற பெயரா…
-
- 4 replies
- 753 views
-
-
பாகிஸ்தான் படைத்தரப்பினர் மீது நேட்டோ படையினர் தாக்குதல்! -26 பாகிஸ்தான் படையினர் உயிரிழப்பு!! பாகிஸ்தான் படைத்தரப்பினர் மீது நேட்டோ படையினர் இன்று மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 26 பாகிஸ்தான் படையினர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் படையதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் பாகிஸ்தான் படைத்தரப்பைச் சேர்ந்த இரு உயரதிகாரிகளும் அடங்குவதாகவும், இச்சம்பவத்தில் மேலும் ஏழு பாகிஸ்தான் படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மொஹ்மான்ட் பிராந்தியத்தில் இருந்த பாகிஸ்தான் காவலரண் ஒன்றின் மீது நேட்டோவின் உலங்கு வானூர்திகள் தாக்குதலை மேற்கொண்டதாக பாகிஸ்தான் படையதிகாரிகள் கூறியு…
-
- 3 replies
- 985 views
-
-
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. சுமார் ஆறு மாத கால சிறைவாசத்தின் பின்னர் டில்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ள கனிமொழி இன்று இரவு அல்லது நாளை காலை திஹார் சிறையில் இருந்து வெளிவருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவர் இன்று இரவு வெளிவந்தாலும் டில்லியில் தங்கியிருந்து விட்டு நாளை சென்னை கிளம்புவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் கலைஞரின் குடும்பத்தினர் கனிமொழியை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதில் ஸ்டாலின் குடும்பத்தினர் பங்கேற்கிறார்கள். அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் சென்னைக்கு விரைந்து வருவதாகவும் நாளை சென்னை வரும் கனிமொழியை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர்கள் நேரில் சென்று வரவேற்பார்கள் என்று தெ…
-
- 0 replies
- 711 views
-
-
முல்லைப் பெரியாறில் புதிய அணை கோரி கேரளாவில் முழு அடைப்பு- ஜெ. கொடும்பாவி எரிப்பு திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் படு தீவிரமாக செயல்படுகிறது கேரள அரசு. கேரளத்தின் பல பகுதிகளிலும் இன்று தமிழகத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளன. நான்கு மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் மாநில அரசின் ஆதரவோடு நடந்தது. அப்போது இடுக்கி மாவட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்தனர். முல்லைப் பெரியாறு அணை தென் தமிழகத்தின் உயிர் நாடியாக விளங்குகிறது. இந்த அணை நீரை நம்பித்தான் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாநில விவசாயிகள் உள்ளனர். ஆனால் இந்த அணை பழையதாகி விட்டது. இடிந்து விடும், இடிந்தால் பல லட்சம் பேர் சாவார்கள் என்ற…
-
- 0 replies
- 1k views
-
-
ஜாமின் கனிந்தது ; 6 மாத சிறைவாசம் முடிந்தது : எதிர்பார்த்து - ஏமாந்த கனிமொழிக்கு நிம்மதி பல முறை கிடைக்குமா, ஜாமின் கனியுமா என்ற பலத்த எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் நிலவி வந்த தருணத்தில் 4 முறைகள் கனிமொழியின் ஜாமின் மனு தள்ளுபடியாகி வந்த போது இன்று அவருக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. இருப்பினும் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. யாருக்கும் ஜாமின் கிடைக்காமல் 7 மாதம் கடந்தது: இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்கும் கடந்த 7 மாதம் ஜாமின் கிடைக்காமல் இருந்து வந்தது. குறிப்பாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமின் கோரலாம் என்ற சுப்ரீம்கோர்ட் கருத்துப்படி கூட கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கவில்லை. பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூட ஜாமின்…
-
- 1 reply
- 767 views
-
-
கேரளத்தின் சதியை முறியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்: பழ. நெடுமாறன் சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தின் சதியை முறியடிக்க தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கொண்ட குழு உடனடியாக டெல்லி சென்று பிரதமரையும் மற்ற கட்சித் தலைவர்களையும் சந்தித்து தமிழகத்தின் நியாயங்களையும் உரிமைகளையும் விளக்கிக் கூற வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அணையில் வெடிப்புகள் ஏற்பட்டுவிட்டதாகவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் பிரதமர்…
-
- 0 replies
- 605 views
-
-
முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, இடுக்கியே தமிழகத்துக்கு தான் சொந்தம்!-தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சென்னை: முல்லைப் பெரியாறு அணை மட்டுமின்றி இடுக்கி மாவட்டம் முழுவதும் தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாகும். மொழி வழி மாநில சீரமைப்பு நடக்கும்போது தவறாக இடுக்கி மாவட்டம் கேரளத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கூறியுள்ளது. அதன் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக அடிப்படையற்ற அச்சத்தை கேரள மக்களிடம் பரப்பி அந்த அணையை சட்டவிரோதமாக இடிப்பதற்கு கேரள அரசு முனைகிறது. தன்னுடைய தமிழர் பகை நோக்கத்திற்கு கேரள மக்களை திரட்டிக் கொள்வதற்காக அவ்வணை இடிந்து விழும் என்ற பரப்புரையை …
-
- 0 replies
- 654 views
-
-
அரபு லீக்கிலிருந்து சிரியா நீக்கப்பட்டது அரபு லீக் அமைப்பு சிரியாவை தனது அமைப்பிலிருந்து நீக்கியுள்ளது. மேலும், சிரியா மீது உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதிக்குமாறும் அது அழைப்பு விடுத்துள்ளது. அரபு ஒப்பந்தத்தை அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத் அமலாக்கும் வரை சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என்றும் அரபு லீக் அறிவித்துள்ளது. மேலும் போராட்டம் நடத்துவோரை ராணுவத்தைக் கொண்டு அடக்குவதையும், ஒடுக்குவதையும் சிரியா கைவிட வேண்டும் என்றும் அரபு லீக் கூறியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சிரிய தூதர் யூசப் அகமது கூறியுள்ளார். அரபு லீக்குடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்கனவே சிரியா அமல்படுத்தியுள்ளது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையின் பின்னால் அமெரிக்க அரசு உள்ளது என்று அவர் க…
-
- 5 replies
- 1.4k views
-
-
எங்களுடைய வாக்கை வாங்கி ஆட்சி அமைத்து, எங்களையே முடக்குவது என்பது எவ்வளவு கொடுமை: சீமான் 19 11 2011 முதல் இனம் காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை போற்றும் வகையில் தமிழர் எழுச்சி வார நிகழ்வை ஒரு வாரத்திருக்கு நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்து இருந்தது, இதன் முதற்கட்டமாக 19 11 2011 அன்று வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த பொது கூட்ட அனுமதியை திடீரென ரத்து செய்தது தமிழக காவல்துறை. அது மட்டுமல்லாமல் டிசம்பர் 6ம் தேதி வரை நாம் தமிழர் நடத்தும் எந்த கூட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை, தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பிரச்சாரம் செய்வது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் என காவல்துறை காரணம் கூறியும் பல்வேறு காரணங்களை கூறியும் நாம் தமிழர் எழுச்சி வார நி…
-
- 3 replies
- 1.1k views
-
-
பல்பொருள் சில்லறை வர்த்தகம்: நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு சில்லறை வர்த்தகத்தில், பல்வேறு நிறுவனத் தயாரிப்புக்களை விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டில் 51 சதத்தை அனுமதிக்க இந்திய அமைச்சரவை இன்றிரவு முடிவு செய்திருப்பதாக, அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது. அதன் மூலம், வால்மார்ட், டெஸ்கோ, கேர்ஃபோர் உள்ளிட்ட பன்னாட்டு வணிக நிறுவனங்கள் இந்தியாவின் பெரும் நுகர்வோர் சந்தையில் நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை மட்டும் விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 51 சதமாக உள்ளது. அது இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் 100 சதமாக உயர்த்த ஒப்புதல் வ…
-
- 3 replies
- 1.3k views
-
-
இந்திய கடலோர காவல்படை சிங்கள அரசின் கூலிப் படையாக செயல்படுகிறது: வைகோ இந்திய கடலோர காவல்படை, சிங்கள அரசின் கூலிப் படையாக செயல்படுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதுவரை தமிழக மீனவர்கள் 600 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் இப்படி கொல்லப்பட்டதற்கு தமிழகத்திலே இருந்து பலத்த கண்டனம் எழுந்தும், இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசு கிஞ்சிற்றும் அதனை பொருட்படுத்தவில்லை. இப்போது குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்பதுபோல, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்தியாவின் கடலோரக் காவல்படை ஒரு பிரமாண வாக…
-
- 3 replies
- 831 views
-
-
இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ தேவலை: விஜயகாந்த் தாக்கு. சென்னை: கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை தாக்கல் செய்துள்ள பதில் மனுவைப் பார்க்கையில் இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை பதில் மனு தாக்கல் செய்…
-
- 0 replies
- 511 views
-
-
தமிழர்களுக்கு எதிரான அப்துல் கலாமை எதிர்ப்போம் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வரும் ஜனவரி மாதம் இளநகை பயணம் மேற்கொள்வதாக கூறப்படுகின்றது.மேலும் அவர் கொழும்புவில் நடவிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார் என்று கூறப்படுகின்றது. கொழும்புவில் நிகழ்ச்சி ஒன்றில் இந்தத் தகவலை வெள்ளிக்கிழமை வெளியிட்ட இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், “இலங்கை குடிமக்கள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.இது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்று, எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் தொடங்கவுள்ளது.இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை வரவுள்ளார்,” என்றார் பீரீஸ். தமிழர்கள் லட்சக் கணக்கில் செத்த பொழுதும் …
-
- 0 replies
- 642 views
-
-
நான் வாயைத் திறந்தால் பலர் ஜெயிலுக்குப் போக வேண்டி வரும் - ஆ ராசா பகிரங்க பதில் Sat, 26 Nov 2011 14:20:05 IST டெல்லி: நான் வாயைத் திறந்தால் பலர் உள்ளே போக வேண்டி வரும். எனவே இப்போதைக்கு நான் ஜாமீன் கேட்கப் போவதில்லை. முதலில் கனிமொழி வெளியில் வரட்டும். பிறகு நான் ஜாமீன் பற்றி யோசிக்கிறேன், என்று ஆ ராசா தெரிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் தொலைத் தொடர்பு துறையின் அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார். ஓராண்டாக அவர் திகார் ஜெயிலில் உள்ளார். இந்நிலையில் ஆ.ராசா நீதிமன்ற அறையில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அவர் கூறுகையில்: திகார் ஜெயில் வாழ்க்கை, தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வகையில…
-
- 0 replies
- 1.2k views
-
-
நியூயார்க் : உடற்பருமன் கொண்ட தன்னை, அமெரிக்க விமான நிலையம் தொடர்ந்து 7 மணிநேரம் நிற்க வைத்தே பயணம் செய்ய வைத்துவிட்டதாக தொழிலதிபர் கூறிய புகார், அமெரிக்காவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, தன்னை அவமானப்படுத்துவதாக உள்ளதாக அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரான ஆர்தர் பெர்கோவிட்ஜ், சமீபத்தில் ஆன்கரேஜ் நகரிலிருந்து பிலடெல்பியா நகருக்கு வருவதற்காக யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனத்தை நாடியுள்ளார். பெர்கோவிட்ஜ், 181 கிலோ உடற்எடை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிளைட் 901 விமானத்தில் ஏறிய அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த இருக்கை அவருக்கு போதுமானதாக இல்லை. எனவே, அவரை விமான ஊழியர்கள், கடைசியில் உள்ள இருக்கைக்கு சென்…
-
- 0 replies
- 767 views
-
-
இது தமிழ்நாடா அல்லது சுடுகாடா? கோஸ் ரூ.30 கேரட் ரூ.25 பீட்ரூட் ரூ.20 சவ்சவ் ரூ.18 நூக்கோல் ரூ.23 முள்ளங்கி ரூ.28 பீன்ஸ் ரூ.32 கத்திரிக்காய் ரூ.37 அவரைக்காய் ரூ.28 புடலங்காய் ரூ.17 வெண்டைக்காய் ரூ.40 மிளகாய் ரூ.09 குடை மிளகாய் ரூ.12 முருங்கைகாய் ரூ.150 இஞ்சி ரூ.40 தேங்காய் (ஒன்று) ரூ.10 சேனைக் கிழங்கு ரூ.23 சேம்பு ரூ.10 உருளைக்கிழங்கு ரூ.24 கோவக்காய் ரூ.27 சுரக்காய் ரூ.18 நாட்டு தக்காளி ரூ.40 பெங்களூரு தக்காளி ரூ.36 பூசணி ரூ.20 பெரிய வெங்காயம் ரூ.55 சாம்பார் வெங்காயம் ரூ.50 பட்டாணி ரூ.37 பாகற்காய் ரூ.28 காலிபிளவர் (ஒ…
-
- 14 replies
- 3.4k views
-
-
2வது புரட்சிக்கு தயாராகிறது எகிப்து எகிப்தில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 22பேர் பலியானார்கள். இந்நிலையில் அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக 2 வது புரட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ராணுவ ஆட்சியாளர்கள் அதிகாரத்தை விரைவில் மக்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே சனிக்கிழமை முதல் நடைபெற்றுவரும் மோதல்களால் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக எகிப்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மோதல் சம்பவங்களில் 1750 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 இறுதியில் அல்லது 2013 துவக்கத்தில் ஆட்சியை ஒப்படைப்போம் என ராணுவத்தினர்…
-
- 2 replies
- 988 views
-
-
பதவி விலகும் ஒப்பந்தத்தில் யேமன் ஜனாதிபதி கையெழுத்திட்டார் மத்திய கிழக்கு நாடான யேமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ் தனது 33 வருடகால ஆட்சியிலிருந்து விலகுவதற்கான ஒப்பந்தத்தில் நேற்று புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார். சவூதி அரேபிய தலைநகர் றியாத்தில், சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் மாளிகையில் வைத்து யேமன் ஜனாதிபதி சலேஹ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இத்திட்டத்தின்படி விரைவான தேர்தல் நடைபெறும் வரை அவர் தனது அதிகாரங்களை உப ஜனாதிபதி அப்ட்றபா மொஹமட் ஹாடியிடம் கையளிப்பார். எனினும் 90 தினங்களுக்கு கௌரவ ஜனாதிபதியாக சலேஹ் பதவி வகிப்பார். இதற்கு பதிலாக ஜனாதிபதி சலேஹ் மீதான குற்றச்சாட்டுகளுக்காக வழக்குத் தொடரப்படுவதிலிருந்து விடுவிக்கப்படுவார். 69 வயத…
-
- 1 reply
- 718 views
-
-
விசாரணைக்கு கூட வெளியில் வர முடியாதா ? திகார் ஜெயிலில் விசாரணை; நீதிபதி அதிரடி நாட்டை உலுக்கிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை இனி திகார் ஜெயிலுக்குள்ளேயே நடக்கும் என வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி ஓ.பி.,சைனி அறிவித்துள்ளார். கைதிகள் கோர்ட்டுக்கு அழைத்து வரும் சிரமம் இனி போலீசாருக்கு இருக்காது என்றாலும் விசாரணை என்ற நேரத்தில் திகார் ஜெயிலில் இருந்து பாட்டியாலா சிறப்பு கோர்ட்டுக்கு வந்து செல்லும் வாய்ப்பு பறிபோனது. இந்த நேரத்திலாவது வெளி உலகை பார்க்கும் நிலை இழக்க வேண்டியிருப்பதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜா மற்றும் கனிமொழி உள்பட கைதிகள் கோர்ட்டுக்கு வரும்போது உறவினர்கள் பலரும் கூடுவதாலும், …
-
- 1 reply
- 972 views
-
-
கரையோரத்தில் உள்ள சாலை ஒன்று கடலுக்குள் விழும் காட்சி [ Wednesday, 23 November 2011, 05:22.44 AM. ] லொஸ் ஏஞ்சல்சில் ஏற்பட்ட அதிகமான மழையினால் சான் பெட்ரோ பகுதியிலுள்ள பாரிய சாலையொன்று சரிந்து பசுபிக் கடலுக்குள் விழுந்துள்ளது. இந்த பாதை இருந்த இடம் தற்போது பாரிய குழியாக உள்ளது. வீழ்ந்த 800 அடிப் பகுதியானது பல மாதங்களாகவே போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியால் பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கைப் பலகைகளும் போடப்பட்டிருந்தன. இந்த சாலையை மீண்டும் சரிசெய்வது சாத்தியமில்லை என்றும் புதிய பாதை வேறு இடத்தில் கட்டப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வின் போது எவரும் காயமடையவில்லை. எனினும் இதனைக் காண்பதற்கு மக்கள் கூ…
-
- 0 replies
- 836 views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 11/23/2011 3:16:09 PM ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றொரு பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக சர்வதேச அணுசக்தி கழகம் சந்தேகிக்கின்றது. இதன் காரணமாக, அந்நாட்டின் மீது, பல நாடுகள் ஏற்கனவே பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இந்நிலையில், மேலும், அந்நாட்டின் மீதான அழுத்தத்தினை அதிகரிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய …
-
- 0 replies
- 679 views
-
-
கூடங்குளம் தென் தமிழகத்தின் அடிவயிற்றில் பதித்திருக்கும் அணுகுண்டு! - அரிமாவளவன் கண்டனம் இடிந்தகரை கடலோரக் கிராமம் இடிந்தகரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்துத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடுவில் உரையாற்றிய தமிழர்களப் பொதுச்செயலாளர் அரிமாவளவன் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கடுமையாகக் கண்டித்து உரையாற்றினார். “இன்று காலை இந்தப் போராட்டத்திற்குப் பல்லாயிரம் மக்களோடு மக்களாக பங்கேற்க நான் வந்து கொண்டிருந்தபோது, இந்த மக்கள் எழுச்சியை எப்படியாவது முறியடிக்கவேண்டும் என்ற முனைப்போடு அரசும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் குறுக்கு வழிகளை நாடுகின்றனர் என அறிய வந்தேன். இராதபுரம் வட்டாட்சியர்…
-
- 1 reply
- 858 views
-