உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
தஞ்சம் கோருபவர்கள் ஆஸ்திரேலியாவை அடைவதை தடுக்கும் விதமாக புதிய சட்டம் அமல்? தஞ்சம் கோருபவர்கள் படகு மூலம் பயணம் செய்து ஆஸ்திரேலியாவை அடைவதை தடுக்கும் விதமாக அந்நாட்டு அரசு ஒரு கடுமையான புதிய சட்டத்தினை முன்மொழிந்துள்ளது. நருவில் உள்ள தடுப்பு மையம் ( கோப்புப் படம்) இதன் மூலம் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் வருகை புரியவோ அல்லது குடியேறுவதற்கு அனுமதிப்பதை தடுக்கவோ வழிவகையுள்ளது. ஆஸ்திரேலியாவில் நுழையும் முயற்சிகள் இறுதியில் வீணாகி விடும் என்று ஆள் கடத்தல் செய்யப்படுவார்களால் அனுப்பப்படுபவர்கள் தெரிந்து கொண்டதால், ஆள் கடத்தல் செய்யும் குற்றவியல் வர்த்தகத்தை இந்த புதிய சட்டம் தடுத்து நிறுத்தும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் …
-
- 0 replies
- 246 views
-
-
கடந்த 18 மாதங்களாக சிரியா மற்றும் ஈராக்கில் டேஷ் ரக்ஃபிரி தீவிரவாதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அமெரிக்கா தலைமையிலான வான் தாக்குதல்களில், இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியுள்ளதாக வான் தாக்குதல்களை கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது.நேற்று பிரித்தானியைவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எயார்வாஸ் வான் தாக்குதல் கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்க கூட்டுப் படையினரால் ஈராக் மற்றும் சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட 352 வான் தாக்குதல்களிலேயே ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், நம்பத் தகுந்த பொது அறிக்கைகள் மற்றும் அதிகாரிகளின் உறுதிப்படுத்தல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட புள்ளிவிபரத்தின் அடிப்ப…
-
- 0 replies
- 246 views
-
-
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் பூடானுக்குத்தான். சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள எட்டு நாடுகளின் தலைவர்களைத் தன்னுடைய பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருந்த மோடி, சுற்றுப்பயணத்துக்குத் தனது முன்னுரிமை நாடாக பூடானைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சுதந்திர நாடான பூடானின் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பேற்ற இந்தியா, அதன் வெளியுறவுக் கொள்கைத் தேவைகளையும் பூர்த்திசெய்துவந்தது. 2007-ல் செய்துகொண்ட நட்புறவு ஒப்பந்தப்படி அந்த நாடு, தன்னுடைய தேவைகளுக்கேற்ப எந்த நாட்டுடனும் உறவுகொள்ளத் தடையில்லை என்று கூறப்பட்டது. ஆனால், 2012-ல் வெளிநாட்டில் நடந்த சந்திப்பில் சீனப் பிரதமர் வென் ஜியாபோவை பூடான் பிரதமர் ஜிக்மே தின்லே தனி…
-
- 0 replies
- 246 views
-
-
வங்கதேசத்தில் அடைக்கலம் தேடி வந்த ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா அகதிகள் புதிய நோயால் பாதிப்பு, இரண்டாயிரத்து பதினேழில் கடந்த ஆட்சி மாற்றத்தையும் பதவியை தக்க வைத்துக் கொண்ட உலகின் முக்கிய தலைவர்கள், மூங்கிலால் வடிவமைத்த சைக்கிள் மூலம் உலகை வலம் வரும் ஜெர்மன் இளைஞர் உள்ளிட்ட செய்திகளை விரிவாக காணலாம்.
-
- 0 replies
- 246 views
-
-
தமிழ்நாட்டில் 2014ல் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்ற உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம், அது தொடர்பாக, தமிழக அரசு பதிவு செய்த சீராய்வு மனுவை இன்று தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக 2017ல் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து குழப்பமான சூழல் நிலவுகிறது. விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014ல் தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கடந்த ஜனவரி 8-ந் தேதி அனுமதி வழங்கி, விளையாட்டை நடத்துவதில் சில விதிமுறைகளை கொண்டுவந்தது. ஆனால், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தன…
-
- 0 replies
- 246 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சான் பிரான்சிஸ்கோவில் தாக்குதல் நடத்ததிட்டமிட்ட முன்னாள் கடற்படை வீரர் கைது சான் பிரான்சிஸ்கோவின் மிக பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கிறிஸ் 39 இல் கிறிஸ்துமஸ் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக ஒருவரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னாள் அமெரிக்க வீரரான எவரிட் ஆரோன் ஜேம்சன், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு பொருள் ஆதாரங்களை வழங்குவதற்கு முயன்றதாக குற்றஞ்சாட்டடப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP தேச ஒற்றுமையை குலைப்பவர்களுக்கு ஆதரவில்லை: ஸ்பெயி…
-
- 0 replies
- 246 views
-
-
பிரான்ஸில் துவங்கவுள்ள யூரோ 2016 போட்டிகள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் வரும் வெள்ளிக்கிழமையன்று துவங்கவுள்ள ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக, பிரான்ஸில் உள்ள லியோன் நகரத்தில், தீவிரவாத எதிர்ப்பு சோதனை பயிற்சியொன்றை அந்நாட்டு பாதுகாப்பு படைகள் கடந்த இரவில் மேற்கொண்டன. பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்) ஒரு தற்கொலைப் படை குண்டுதாரி மற்றும் பல துப்பாக்கித் தாக்குதல்கள் ஆகியவை உள்ளடக்கிய ஒரு உருவகப்படுத்தப்பட்ட தீவிரவாத சம்பவத்தை சமாளிக்க நூற்றுக்கணக்கான போலீசார், அவசர உதவி சேவைகள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆகியோர் பாதுகாப்பு சோதனை ஒத்திகை மேற்கொண்டனர். 51 போட்டிகளைக் கொண்…
-
- 0 replies
- 246 views
-
-
மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கோரிக்கை மகாராஷ்டிராவில் பள்ளி புத்தகப் பையின் சுமை அதிகரிப்பால் வெகுண்டெழுந்த 7-ம் வகுப்பு மாணவர்கள் இருவர், பத்திரிகை யாளர்களுக்கு பேட்டியளித் திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சந்திர பூரில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர்கள் இருவர், அங்குள்ள உள்ளூர் பத்திரிகையாளர்கள் மன் றத்துக்குச் சென்றனர். அங்கிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்து தினசரி 5 கிலோ சுமை கொண்ட பாடப்புத்தக பைகளைச் சுமந்து செல்வதால் தாங்க முடியாத வேதனையை சந்தித்து வருவதாக வும், இது தொடர்பாக விவரமாக பேட்டியளிக்க விரும்புவதாகவும் இரு மாணவர்களும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர் கள…
-
- 0 replies
- 245 views
-
-
முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு... இந்தியன் கொவிட், மாறுபாடு கடுமையான இடையூறு: பிரதமர் பொரிஸ் இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்தியன் கொவிட் மாறுபாடு கடுமையான இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்தியன் கொவிட் மாறுபாடு கணிசமாக அதிக அளவில் பரவக்கூடியதாகக் கண்டறியப்பட்டால் சில கடினமான தேர்வுகள் இருக்கக்கூடும் எனவும் எச்சரித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு இடையிலான காத்திருப்பு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 12 வாரங்களிலிருந்து எட்டு ஆக குறைக்கப்படும்’ என கூறினார். இந்தியன் கொவிட் மாறுபாட்டின் தொற்றுகள் கடந்த வாரத்தி…
-
- 0 replies
- 245 views
-
-
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடற்கரை கழிமுகத்தில் ஓர் அழகான வீடு அமைந்திருக்கிறது. மரங்களை வைத்து நீரின் மேல் வீடு கட்டியிருக்கிறார்கள். அனைத்து வசதிகளும் கொண்ட பெரிய வீடு, பசுமைக்குடில்கள், கலங்கரை விளக்கம், விளையாட்டுத் திடல் எல்லாம் இங்கே இருக்கிறது. சூரிய சக்தியைக் கொண்டு தேவையான மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்கிறார்கள். மழை நாட்களில் தண்ணீரைச் சேமித்துக்கொள்கிறார்கள். பசுமைக்குடில்கள் மூலம் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்களை விளைவித்துக்கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர்கள் கிங், ஆடம்ஸ் இருவரும் நகர நெருக்கடி பிடிக்காமல், 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து குடியேறிவிட்டனர். குழந்தைகளுடன் சேர்த்து நால்வர் மட்டுமே இந்தப் பெரிய வீட்டில் வசிக்…
-
- 0 replies
- 245 views
-
-
ரஷ்ய படைகள்... கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காக, தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக... தகவல் ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காக தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தரவிற்கமைய ரஷ்யப் படையினர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி உக்ரைனில் இராணுவத் தாக்குதலைத் தொடங்கினர். உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து ரஷ்யாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போர், கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உக்ரைனில், ரஷ்யப் படையினர் அந்த நாட்டுப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, பொதுமக்களைக் கொன்றுகுவிப்பது என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி, …
-
- 2 replies
- 245 views
-
-
பீகாரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு! பீகார் மாநிலம் அர்வாலில் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ராவை அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டனர். புகழ்பெற்ற இந்தி செய்தித் தாளான ராஷ்ட்ரிய சஹாரா பத்திரிகையில் பணியாற்றிவரும் பங்கஜ் மிஸ்ரா, அர்வால் பகுதியில் உள்ள வங்கி ஒன்றிலிருந்து வெளியில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டனர். வங்கியிலிருந்து அவர் எடுத்துவந்த ஒரு லட்ச ரூபாயைக் கொள்ளையடிக்கும் நோக்கிலேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் சுட்டதில் இரண்டு குண்டுகள் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா மீது பாய்ந…
-
- 0 replies
- 245 views
-
-
அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்? ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் நிலவும் போட்டி நீதி அமைச்சர் மைக்கேல் கோவ் மற்றும் உள்துறை அமைச்சர் தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்புக்குப் பிறகு, பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் ஏற்பட்டுள்ள ஒரு ஆச்சரியமான திருப்பத்தில், நீதி அமைச்சர் மைக்கேல் கோவ், கன்செர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவி மற்றும் பிரதமர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். கோவ் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுடன் சேர்ந்து நடத்தியவர். மேலும் அவர் ஜான்சனின் வேட்புமனுவிற்கு ஆதரவு தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பி பி சியின் அர…
-
- 0 replies
- 245 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் 94 வயதில் போட்டியிடப்போகும் ஆபிரிக்க தலைவர் (லோகேஸ்வரன்) சிம்பாபேவின் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும் கட்சியின் ஒருமித்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் 94 வயது பூர்த்தியை அடையும் இவர் 2018 ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் 2013ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் திருத்தத்தில் அவர் மேலும் ஒருமுறைதான் தலைவராக இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆபிரிக்க பிராந்தியத்தில் சுதந்திரமடைந்த காலம் தொட்டு ஒரு நாட்டை தொடர்ச்சியாக ஆண்டு வரும் ஜனாதிபதி இவராவார் …
-
- 0 replies
- 245 views
-
-
ஒட்டாவா : கனடாவில் ஊழியர்களுக்கு புதிய ஊதிய மானியம் வழங்குவதற்கான நடவடிக்கையில் கனடா அரசு ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் பில் மோரியோ நேற்று தெரிவித்தார். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல பகுதிகளிலும் நோய் தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கொரோனாவால் எந்த ஒரு தொழில் நிறுவனமும், பணியாளர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்கு ஊதியத்திற்கான, மானியத்தை…
-
- 0 replies
- 245 views
-
-
உலக தூக்க தினம்: மொபைல் எந்த அளவுக்கு தூக்கத்தை கெடுக்கிறது - மீள்வது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் உலக தூக்க தினம் மார்ச் 17ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி இந்த கட்டுரையை வழங்குகிறோம். ஒரு நாள் முழுவதற்குமான அலுவலக பணிகளுக்கு பின் வீட்டுக்கு செல்லும் உங்களின் முக்கிய தேவை என்னவாக இருக்கும்? சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இதற்கான பதில் தூக்கமாகவே இருக்கும். முந்தைய நாளின் களைப்பில் இருந்து விடுபடவும், இன்றைய நாளை புத்துணர்ச்சியோடு தொடங்கவும் நல…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
பர்லோ திட்டம், நிறைவுக்கு வருகின்றது: சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோரிக்கை! பிரித்தானியாவின் ஃபர்லோ திட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகின்ற நிலையில், மோசமாக பாதிக்கப்பட்ட சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோருகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபர்லோ திட்டம், கொவிட் தொற்றினால் பெரும்பகுதிகளை மூட அரசாங்கம் கட்டாயப்படுத்திய பின்னர் 11.6 மில்லியன் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கி உதவியது. ஜூலை மாத இறுதியில் அது இன்னும் 1.6 மில்லியன் தொழிலாளர்களின் வருமானத்தை ஆதரித்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் திறைசேரியின் தலைவர், 70 பில்லியன் யூரோ திட்டத்திற்கு பெருமை படுவதாகவும் ஆனால் இப்போது அதை மூடுவதற்கு சரியான…
-
- 0 replies
- 245 views
-
-
சூடான்: இனக் குழுக்கள் மோதலில் 380 போ் பலி வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் இரு இனக் குழுவினருக்கு இடையே அண்மைக் காலமாக நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 380 போ் உயிரிழந்ததாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் டாா்பா் பகுதியில் அரபு பழங்குடியினருக்கும் அரபு அல்லாத பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஜனவரி முதல் ஒகஸ்ட் வரை 224 மோதல் சம்பவங்கள் நடைபெற்ாகவும், இதில் 430-க்கு மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சூடானில் நீண்ட காலமாக நீடித்து வரும் இன மோதல்கள், கடந்த ஆண்டு ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்து இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப…
-
- 0 replies
- 245 views
-
-
கடும் போக்கு நிலைப்பாடுகளில் இருந்து டொனால்ட் டிரம்ப் மாறிவிட்டாரா? ஜனநாயக கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் மீது வழக்கு தொடுக்கப் போவதாக முன்னர் அளித்த தனது வாக்குறுதியை கைவிடவுள்ள டொனால்ட் டிரம்ப், பருவநிலை மாற்றம் குறித்த விவாதங்களில் இனி தான் திறந்த மனதுடன் செயல்படப்போவதாக தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் இது தனது அதிபர் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் வெளிப்பட்ட கடும்போக்கு நிலைப்பாடுகளில் இருந்து அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் சற்றே தணிந்துள்ளது விட்டது போல் தோன்றுகிறது. பல்வேறு அம்சங்கள் குறித்தும் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், கிளிண்டன் குடும்பத்தாரை தான் காயப்படுத்த …
-
- 1 reply
- 245 views
-
-
உலகளவில்... குரங்கு அம்மை நோயினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை... 780ஆக அதிகரிப்பு! உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான 257 தொற்றுகளை விட தோராயமாக மூன்று மடங்கு அதிகமாகும். தொற்று பொதுவாக லேசானது, ஆனால் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவிற்கு வெளியே பரவலாக பரவுவது இதுவே முதல் முறை. ஏற்கனவே குரங்கு அம்மை நோய் 27 நாடுகளில் பரவுகின்றது. இந்த புதிய தொற்றுகளில் பெரும்பாலானவை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலும், மெக்சிகோ, அர்ஜென்டினா, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களிலும் சிறிய எண்ணிக்கையில் உள்ளன. பிரித்தானியாவில்…
-
- 0 replies
- 245 views
-
-
ஃபிரான்ஸ் அதிபருக்கான முதன்மை தேர்தலில் மத்திய வலதுசாரி வேட்பாளராக ஃபியோங் தேர்வு ஃபிரான்ஸில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான மத்திய வலதுசாரி கட்சியின் வேட்பாளராக விவாதத்திற்கு இடமின்றி ஃபிரான்ஸ்வா ஃபியோங் வெற்றிப் பெற்றுள்ளார். மகிழ்ச்சி ஆராவாரங்களை எழுப்பிய ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஃபியோங் முதன்மை தேர்தலில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் மற்றொரு முன்னாள் பிரதமரான அலேன் சூபேவை, ஃபியோங் தோற்கடித்துள்ளார். அடுத்த வருடத் தேர்தலில் இன்னும் நியமிக்கப்படாத சோசியலிஸ்ட் கட்சி வேட்பாளர் மற்றும் தீவிர வலது சாரிக் கட்சி வேட்பாளர் மரீன் ல பென் ஆகியோரை எதிர்கொள்ளவுள்ளார் ஃபியோங். மகிழ்ச்சி ஆராவாரங…
-
- 0 replies
- 245 views
-
-
புதிய பாப்பாண்டவரை தெரிவு செய்வதற்கான பணிகள் 7 ஆம் திகதி ஆரம்பம்! போப் பிரான்சிஸ்ஸின் மறைவைத் தொடர்ந்து புதிய போப்பைத் தெரிவு செய்வதற்கான பணிகள் எதிர் வரும் மே மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், உடல் நலக்குறைவால் தனது 88 ஆவது வயதில் கடந்த 21 ஆம் திகதி மரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் கடந்த 26ஆம் திகதி ரோமில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 88 வயதான போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு விடை காணும் முயற்சியில் வத்திக்கான் ஈடுபட்டு வருகின்றது. அதன்படி கார்டினல் எனப்படும் கர்தினால்கள் நேற்று கூடி இது குறித்து ஆலோசனை நடத்தினர்…
-
- 0 replies
- 245 views
-
-
பல சர்ச்சைகளுக்கு பின்னர் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கை சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள 'தி இன்டெர்வுயூ' திரைப்படத்தை சோனி நிறுவனம் நாளை வெளியிடுகிறது. சோனி நிறுவனத்தின் இந்த முடிவை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நமது நாட்டில் கருத்துரிமைக்கு இடம் உள்ளது. சோனி பிக்சர்ஸின் முடிவு வரவேற்கத்தக்கது. திரைப்படத்தை பார்ப்பதும் பார்க்காமல் தவிர்ப்பதும் பார்வையாளர்களின் உரிமை. தயாரான படத்தை உரிய நேரத்தில் வெளியிடுவதே நிறுவனதின் மேன்மை" என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஹாலிவுட் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் 'தி இன்டெர்வியூ'. அமெரிக்க புலனாய்வு மையத்தின் உத்தரவோடு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன…
-
- 0 replies
- 245 views
-
-
ஐ.எஸ். குழுவால் பலத்த சேதங்களை சந்தித்த இராக்கில், புதிய ஆட்சியாளருக்கு காத்திருக்கும் சவால்களை அலசும் சிறப்புச் செய்தி, பிரதமர் மோதியின் வருகைக்கு நேபாளத்தில் ஆதரவு குறைந்தது ஏன்? உள்ளிட்ட செய்திகளை இங்கே பார்க்கலாம்
-
- 0 replies
- 245 views
-
-
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்தது - ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 25 லட்சத்தை கடந்து, அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பதிவு: ஜூன் 28, 2020 06:37 AM வாஷிங்டன், வல்லரசு நாடான அமெரிக்கா, கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் திணறிக்கொண்டிருக்கிறது. சீனாவில் தொடங்கி இன்றைக்கு உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அலை கடுமையாக வீசிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. …
-
- 0 replies
- 245 views
-