உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கசகஸ்தானில் தொடரும் வன்முறையால் பலர் உயிரிழப்பு! அரசாங்க கட்டிடங்கள் மீதான தாக்குதல்களின்போது கசகஸ்தானில் டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது ஒரு டஜன் பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு பொலிஸ் அதிகாரி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். நாட்டின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் ஒரே இரவில் கட்டிடங்களைத் தாக்கும் முயற்சிகள் நடந்தன, மேலும் தாக்குதல் நடத்திய டஜன் கணக்கானவர்கள் பொலிஸாரினால் அடித்து கலைக்கப்பட்டனர். புதனன்று நகரத்தில் பரவலான அமைதியின்மைக்குப் பிறகு கட்டிடங்களைத் தாக்கும் முயற்சிகள் அரங்கேறியு…
-
- 1 reply
- 241 views
-
-
05 Aug, 2025 | 10:31 AM காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்களஞ்சியத்தை சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரில் தேசிய நூலக சபை கட்டிடத்தில் உள்ள டிராமா சென்டரில் சனிக்கிழமை (02) நடைபெற்ற விழாவில், 'சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டுள்ளார். 200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என சிங்கப்பூர் தமிழ் மக்களின் வாழ்வியல் களம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் தமிழர்க் கலைக் களஞ்சியம் எடுத்துரைக்கும் பல தகவல்களில் தமிழ்ச் சமூகம் கண்டுவந்த சமூகச் சீர்திருத்தங்கள…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
நாளிதழ்களில் இன்று: பொறியியல் கல்லூரிகளில் குறைந்த மாணவர் சேர்க்கை முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். பெரும்பாலும் அனைத்து நாளிதழ்களிலும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம், ரஜினியின் இணையதளம், டிரம்பின் ட்வீட் குறித்த செய்திகளே பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. தினத் தந்தி: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மசோதாவை எதிர்த்து இந்தியா முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்யும் செய்தி முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது. "தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்தியா மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆணைய…
-
- 0 replies
- 241 views
-
-
மரியுபோலில்.... இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதா? பிரித்தானியா விசாரணை! உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரத்தில், ரஷ்ய இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளைத் தொடர்ந்து, விபரங்களைச் சரிபார்க்க பிரித்தானியா அவசரமாகச் செயற்பட்டு வருகிறது என்று வெளியுறவுச் செயலாளர் லிஸ் டிரஸ் கூறியுள்ளார். மரியுபோலில் எந்த உறுதிப்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது போரின் கடுமையான விரிவாக்கம் என்று லிஸ் டிரஸ் கூறினார். உக்ரைனின் ஜனாதிபதியான வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, தனது இரவு நேர காணொளி உரையைப் பயன்படுத்தி ரஷ்யா அத்தகைய சட்டவிரோத ஆயுதங்களை நிலைநிறுத்தலாம் என்று எச்சரித்தார். ஆனால் அவர்கள் ஏற்கனவே அவ்வாறு செய்ததாக அவர் கூறவில்…
-
- 0 replies
- 241 views
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மேட் வில்சன் 8 மணி நேரங்களுக்கு முன்னர் 1945ஆம் ஆண்டு ஒரு மர சிற்பத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ஒட்டு கேட்கும் கருவி, ஏழு ஆண்டுகள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பால் கண்டறியப்படாமல் இருந்தது. உளவு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கலைப் படைப்பு இது ஒன்று மட்டும் அல்ல. எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போரின் இறுதி வாரங்களில், மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்பாசோ ஹவுஸில், ரஷ்ய சிறுவர் சாரணர் படையினர் (Boy Scouts) அமெரிக்க தூதருக்கு கையால் செதுக்கப்பட்ட அமெரிக்காவின் பெரிய முத்திரை பதித்த மரச் சிற்பத்தை பரிசாக அளித்தனர். இந்த பரிசு, போரின்போது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை குறிக்கும…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
பெருநகர ரொறென்ரோவில்... கொவிட் தடுப்பூசி செலுத்தும், மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்! பெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. ஒன்றாரியோவில் தடுப்பூசி வழங்கல் பற்றாக்குறையால் நோர்த் யோர்க், ஸ்கார்பாரோ, ரொறென்ரோ மற்றும் யோர்க்கில் உள்ள மருந்தகங்கள் பொதுத் தடுப்பூசித் தளங்களை மூடுகின்றன. பதிவை இரத்து செய்கின்றன அல்லது நியமனங்களை ஒத்திவைக்கின்றன. ஸ்கார்பாரோவில் சுமார் 10,000 நியமனங்கள் இரத்து செய்யப்படும். ஏப்ரல் 14ஆம் திகதி இரண்டு மருத்துவமனை மருந்தகங்கள் வழங்கல் சிக்கல்களால் மூடப்படுகின்றன. அவை எப்போது திறக்கப்படும் என்பதற்கான காலக்கெடு தெரியவில்லை.. இதே காரணத்திற்காக நோர்த் யோர்க் பொது மருத்துவமனை ஏப்ரல் 1…
-
- 0 replies
- 241 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எகிப்து: அதிபரின் முக்கிய போட்டியாளர் விலகல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஎகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி இந்த வருடம் நடக்க உள்ள எகிப்து அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்ல…
-
- 0 replies
- 241 views
-
-
ஹாங்காங் சிறப்பு அதிகார மண்டலத்தில் இன்று மாவட்டம்தோறும் உள்ள கவுன்சில்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து காவல்துறை ஆணையர் கிறிஸ் டாங் தொலைக்காட்சி மூலம் பேட்டியளித்தார். ஹாங்காங்கில் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக போராட்டங்கள் வெடித்துள்ளன. வேலைவாய்ப்பின்மை, ஊழலுக்கு எதிராக தலைவிரித்தாடும் வன்முறைப் போராட்டங்களை ஒடுக்க சீனா தனது படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. இந்நிலையில் தேர்தல்கள் நடத்தப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வாக்காளர்கள் சுமார் 41 லட்சம் பேர் 452 கவுன்சில்களுக்கு வாக்களிக்க உள்ளனர். https://www.polimernews.com/dnews/89989/ஹாங்காங்கி…
-
- 0 replies
- 241 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * வடகொரிய தலைவரின் தந்தையின் மறுதார மகனான கிம் ஜாங் நாமின் மரணம் தொடர்பில் ஒரு பெண்ணை மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். * அட்லாண்டிக் நாடுகளுக்கான ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா ஒப்புதல்; நேட்டோ நாடுகளின் இராணுவ செலவை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தல். * லார்ஸ் மைதானத்தின் மெரில்போர்ன் கிரிக்கெட் கழகம் தனது மின்சாரத்தேவைக்கு நூறு சதவீதம் புதிப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியை பயன்படுத்தவுள்ளது.
-
- 0 replies
- 241 views
-
-
பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY படக்குறிப்பு, ரஷ்யாவின் அணு ஆயுத தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிஸ்டிக் ஏவுகணை எழுதியவர், வில் வெர்னோன் பதவி, பிபிசி செய்திகள் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா முழுமையான தாக்குதலை ஆரம்பித்த போதே, அதன் அணு ஆயுத தளம் ராணுவ நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டதாக கூறுகிறார் ரஷ்யாவின் அணு ஆயுத தளம் ஒன்றில் பணியாற்றிய ஆண்டன். "அதற்கு முன்பு நாங்கள் பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டிருந்தோம். ஆனால் போர் ஆரம்பித்த நாளில் ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன," என்று கூறுகிறார் அந்த முன்னாள் ராணுவ வீரர். "கடல் மற்றும் வான்வழியாக (அணு ஆயுத) தாக்குதல் நடத்…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று ஏபிபி நியூஸ் நீல்சன் மூட் ஆப் தி நேஷன் சர்வே தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு மொத்தம் உள்ள 70 இடங்களில் 32 இடங்கள் கிடைக்கும் என்றும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்கள் கிடைக்கலாம் என்றும் இது கணித்துள்ளது. ஆகஸ்ட்14 முதல் 20 வரை இந்த சர்வே எடுக்கப்பட்டது. மொத்தம் 7084 பேரிடம் கருத்து கேட்டு பெற்றனர். 1998 முதல் டெல்லியை காங்கிரஸ் ஆண்டு வரும் நிலையில் கருத்துக்கணிப்பு மூலம் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன.டெல்லி சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டையும் பாதிக்கும் என்றும் கணிப்பு கூறுகிறது. இந்தக் கட்சிக்கு…
-
- 0 replies
- 241 views
-
-
பட மூலாதாரம்,RILEY FORTIER படக்குறிப்பு, 'ஷனாய்-டிம்பிஷ்கா' அல்லது 'லா பாம்பா' என்றும் அழைக்கப்படும் கொதிக்கும் ஆறு கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் பரானியுக் பதவி, பிபிசி ஃபியூச்சர் கொதிக்கும் நதி வழக்கமாகவே 86 டிகிரி செல்சியஸை அடைகிறது. இது சுற்றியுள்ள மழைக்காடுகளுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பெருவின் கொதிக்கும் ஆற்றை நோக்கி, சமதளம் நிறைந்த, நான்கு மணி நேரம் பயணம் செய்து, மழைக்காடு வழியாகச் சென்று, நிலப்பரப்பில் உள்ள முகடுகளைத் தாண்டிய பிறகுதான், அதை உங்களால் பார்க்க முடியும் என்று, சுவிஸ் ஃபெடரல் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் லொசேனில் (EPFL) தாவர சூழலியல் முதுகலை ஆராய்ச்சியாளராக இருக்கும் அலிசா குல்பெ…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
மகளை உலகுக்குக் காட்டிய வடகொரிய அதிபர் கிம் - புகைப்படங்களால் எழும் புதிய கேள்விகள் பட மூலாதாரம்,KCNA VIA REUTERS படக்குறிப்பு, வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் மற்றும் அவருடைய மகள் கிம் சூ-ஏ 59 நிமிடங்களுக்கு முன்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தனது இளம் மகளுடன் முதன்முறையாக பொதுவெளிக்கு வந்ததன் மூலம், அவருடைய மகளின் இருப்பு குறித்து நிலவி வந்த வதந்தி உறுதியாகியுள்ளது. அவர் பெயர் கிம் சூ-ஏ என நம்பப்படுகிறது. கடந்த வெள்ளியன்று நாட்டின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை ஆய்வு செய்த போது கிம் ஜாங்-உன்னுடன் அவர் இருந்தார். அப்போது இருவரும் கைகோர்த்து நின்றனர். உ…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட் நியமனம் - அதிபர் ஒபாமா அறிவிப்பு ! வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்புக்கு தமிழர் ஸ்ரீநிவாசன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெரிக் கார்லண்ட் என்பவரை அதிபர் ஒபாமா பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அந்தோணின் ஸ்காலியா கடந்த பிப்ரவரி 13ம் தேதி மரணமடைந்தார். அவரது பணியிடத்தை நிரப்ப, நீதிபதிகள் தேர்வு குழு ஆயத்தங்கள் செய்து வந்தன. கீழ்மை நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள், சீனிவாசன், மெரிக் கார்லண்ட் மற்றும் பவுல் வாட்ஃபோர்ட் ஆகிய மூவர் நடுவே இப்பதவிக்கான போட்டி நிலவி வந்தன. அதிபர் பராக் ஒபாமாவின் சாய்ஸ் 49 வயதாகும் சீனிவாசன் அல்லது 63…
-
- 0 replies
- 241 views
-
-
உக்ரைன் ஜனாதிபதி – டிரம்ப் விசேட தொலைபேசி உரையாடல்! ரஷ்ய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய திறனை வலுப்படுத்த உதவியமைக்கு அமெரிக்காவுக்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதுடன், இதில், குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலை முன்னிட்டு, பல்வேறு வெளிநாட்டு தலைவர்களிடம் டிரம்ப் ஆதரவு கோரி பேசி வரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் தொலைபேசி வழியே பேசி கொண்டுள்ளனர். அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்காக, எ…
-
- 0 replies
- 241 views
-
-
பட மூலாதாரம்,NASA 6 மார்ச் 2025, 12:24 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், பூமிக்கு திரும்புவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் போயிங் தயாரித்த ஸ்டார்லைனர் பரிசோதனை விண்கலத்தில் கடந்த ஜூன் மாதம் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் எட்டு நாட்கள் தங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். ஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இரு விண்வெளி வ…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய எதிர்ப்பு காணொளிகளை, தமது டிவிட்டர் பக்கத்தில் அதிபர் டிரம்ப் மறுபகிர்வு செய்ததால், அமெரிக்கா - பிரிட்டன் எதிர்கால உறவு குறித்து கவலைகள் போர்க்குற்ற தண்டனை உறுதி செய்யப்பட்டதும் போஸ்னிய குரேஷிய தளபதி தற்கொலை செய்தது எப்படி? சர்வதேச நீதிமன்றத்தில் நிகழ்ந்த பரபரப்புக் காட்சிகள். டச்சு - பிரிட்டிஷ் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நில பேரத்தை, திருவிழா நடத்திக் கொண்டாடும் இந்தோனீஷியாவின் ரூன் தீவு மக்கள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 240 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் லெபனான் பிரதமரின் நிலை என்ன ஆனது? படத்தின் காப்புரிமைREUTERS செளதி தலைநகர் ரியாத்தில் பதவி விலகலை அறிவித்த தங்கள் நாட்டுப் பிரதமர் சாத் ஹரிரியின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தும…
-
- 0 replies
- 240 views
-
-
04 FEB, 2025 | 11:10 AM அமெரிக்க இறக்குமதி பொருட்களிற்கு புதிய வரிகளை விதிப்பதாக சீனா சற்று முன்னர் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கு அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ள வரிகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையிலேயே சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/205763
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
ஸ்னோடனை அமெரிக்காவுக்கு அழைத்துவருகிறது, தொழில்நுட்பம்! [Thursday, 2014-03-06 12:49:28] அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோடன் அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைக்க முடியாது (வைக்கலாம், கைது செய்யப்படுவார்) என்ற நிலையில், அவரை அமெரிக்காவுக்கு அழைத்துவருகிறது, தொழில்நுட்பம்! அமெரிக்காவில் பிரைவசி, மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடைய மாநாடு ஒன்றின் இந்த ஆண்டு பேச்சாளர்கள் பட்டியலில், எட்வார்ட் ஸ்னோடனின் பெயர் உள்ளது. அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் நடைபெறவுள்ள Southwest Interactive Festival-ல், இந்த பிரைவசி, மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடைய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஸ்னோடன் இங்கு உரையாற்றுவார் எனவ…
-
- 0 replies
- 240 views
-
-
நிலத்தடியில் வாகனம் நிறுத்துமிடத்தில் வெள்ளத்தில் மூழ்கி 7 பேர் பலி By T. SARANYA 07 SEP, 2022 | 12:28 PM தென் கொரியாவில் 'ஹின்னம்னார்' என்ற சக்தி வாய்ந்த சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிலத்தடியில் வாகனம் நிறுத்துமிடத்தில் வெள்ளத்தில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளார்கள். போஹாங் நகரத்திலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் இருந்த ஒன்பது பேரின் காரை வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து அகற்றுமாறு குடியிருப்பு நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய தங்கள் வாகனங்களை அகற்ற சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளார்கள். இந்நிலையில், 2 பேர் மீட்கப்பட்டுள்ளதோடு…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
அரசியல்வாதிகளே... வெட்கமாக இல்லையா..?: அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் மாணவி ஆவேசம் அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் பேசிய மாணவி எம்மா கோன்ஸலஸ் . அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கிறது ஸ்டோன்மேன் டக்ளஸ் பள்ளி. இந்தப் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 15 வயது முன்னாள் மாணவன் நிக்கோலஸ் க்ரூஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக நடந்த இரங்கல் கூட்டத்தில் எம்மா கோன்ஸலஸ் என்ற 18 வயது மாணவி பேசிய பேச்சு, உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது. மிகவும் உணர்ச்சிகரமாகவும் ஆவேசமாகவும்…
-
- 0 replies
- 240 views
-
-
ரஷ்யாவுடன் இணையும் உக்ரைன் பிராந்தியங்கள் ரஷ்ய ஆதரவு பெற்றுள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள், அந்நாட்டுடன் இணைய உள்ளன. இதற்காக மக்களிடம் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பு விரைவில் துவங்க உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், போரை தீவிரப்படுத்தும் வகையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ரஷ்யா திட்டமிட்டுள்ளது. டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியா ஆகிய இந்த நான…
-
- 0 replies
- 240 views
-
-
பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் தீவிபத்து: தீயை அணைக்கும் முயற்சிகளில் படையினர் தீவிரம்! லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில், மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் ஒரு பெரிய வெடிப்பு, துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. துறைமுகத்தின் பணியாளர்கள் இல்லாத மண்டலத்தில் எண்ணெய் மற்றும் டயர்கள் சேமிக்கப்படும் ஒரு கிடங்கில் தீப்பிடித்ததாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது. தீயை அணைக்கும் முயற்சிகளில், தீயணைப்பு படையினர் மற்றும் …
-
- 0 replies
- 240 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிரிட்டன் அரசு நியமித்த சிறார்மீதான துஷ்பிரயோகங்கள் குறித்த சுயாதீன விசாரணை ஆரம்பம்; இரண்டாம் உலகப்போரின்போது வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் குழந்தைகள் சந்தித்த கொடுமைகள் குறித்து முதற்கட்ட விசாரணை. * போரால் இடம்பெயர்ந்து பஞ்சாத்தால் அடிபட்ட மக்கள்; பல்லாயிரக்கணக்கான தெற்கு சூடான் மக்களுக்கு உணவு உதவி செல்லத்துவங்கியது. * கடைசி ஜார் மன்னனின் காதல் கதை பற்றிய திரைப்படத்தை தடை செய்யக்கோரும் பழமைவாத கிறிஸ்தவர்கள்; புனிதரின் கடந்தகால காதலைப்பேசும் திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்துவதாக புகார்.
-
- 0 replies
- 240 views
-