உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26637 topics in this forum
-
ஐ எஸ் அமைப்பின் மீது சீனா கடும் சீற்றம் தமது நாட்டு பிரஜை ஒருவர் கொலைக்கு பொறுப்பான ஐ எஸ் அமைப்பின் பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த சீன சூளுரைத்துள்ளது. ஐ எஸ் அமைப்பால் கொல்லப்பட்ட நார்வேஜிய மற்றும் சீனப் பிரஜைகள் அவரின் மரணம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. நார்வே அரசும் ஐ எஸ் அமைப்பே தமது பிரஜை ஒருவரை கொலை செய்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனக் கூறியுள்ளது. முன்னதாக இந்த இருவரின் சடலங்கள் எனக் கூறி அந்த ஜிகாதிக் குழு புகைப்படங்களை வெளியிடிருந்தது. எனினும் எங்கே அல்லது எப்போது அந்தக் கொலை நடைபெற்றன என்பது பற்றி ஐ எஸ் எவ்விதத் தகவலும் வெளியிடவில்லை http://www.bbc.com/tam…
-
- 0 replies
- 232 views
-
-
கொரோனா வைரஸ் ஹூபேயில் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளது – சீன அதிபர் கொரோனா வைரஸ் (கொவைட்-19) தோன்றிய சீனாவின் ஹூபே மாகாணத்தில், அந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் ஹூபே மாகாணத் தலைநகர் வுஹானுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) முதன் முறையாக சென்ற அவர், கொரோனா விசேட வைத்தியசாலையையும் பார்வையிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் பேசுகையில், ‘ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை கணிசமான அளவில் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். வுஹானிலும் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரப் போக்கைக் குறைத்து, நிலைமையை மாற்றியமைப்பதில் முதல்கட்ட வெற்றியை அடைந்துள்ளோம்’ என்றார். சீன அதிபரின் வருகைக்கு…
-
- 0 replies
- 232 views
-
-
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், போலீஸ் சீருடையில் சென்று, சிறைக் காவலர்களுடன் சண்டையிட்டு டிரான்ஸ்பார்மர்களைத் தகர்த்து சிறையில் இருந்த 300 கைதிகளை அதிரடியாக விடுவித்துள்ளனர் தாலிபன் தீவிரவாதிகள். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற பகுதி பாகிஸ்தானின் பழங்குடியினர் வாழும் தெற்கு வரிசிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்குள்ள சிறைச்சாலை ஒன்றில் சுமார் 5000 கைதிகள் உள்ளனர். அவர்களுள் 250 பேர் கொடூரமான தீவிரவாதிகள். நேற்று மாலை அச்சிறைக்கு போலீஸ் சீருடையில் வந்த 150க்கும் மேற்பட்ட தாலிபன் தீவிரவதிகள் உள்ளே வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். அவர்களின் அதிரடித் தாக்குதலால் சிறையின் வெளிப்புறத் தடுப்புச் சுவர் சுக்கு நூறானது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக…
-
- 0 replies
- 232 views
-
-
கௌரவ டாக்டர் பட்டத்தினை பெற பிரதமர் மோடி மறுப்பு! [Friday 2016-02-19 07:00] உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வருகிற 22-ந் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த விழாவில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதுபற்றி மோடிக்கு தகவல் தெரிவித்து, அவரது ஒப்புதலையும் கேட்டது. ஆனால் கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்ள பிரதமர் மோடி மறுத்துவிட்டார். கவுரவ டாக்டர் பட்டம் பெறுவது இல்லை என்பதை தான் ஒரு கொள்கையாக வைத்து இருப்பதாக கூறி அவர் மறுத்துவிட்டதாக டெல்லியில் நேற்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த காலங்களிலும் இதேபோல் சில பல்கலைக்கழகங்கள், தனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங…
-
- 0 replies
- 232 views
-
-
உக்ரைன் ஜனாதிபதி – டிரம்ப் விசேட தொலைபேசி உரையாடல்! ரஷ்ய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய திறனை வலுப்படுத்த உதவியமைக்கு அமெரிக்காவுக்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதுடன், இதில், குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலை முன்னிட்டு, பல்வேறு வெளிநாட்டு தலைவர்களிடம் டிரம்ப் ஆதரவு கோரி பேசி வரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் தொலைபேசி வழியே பேசி கொண்டுள்ளனர். அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்காக, எ…
-
- 0 replies
- 232 views
-
-
சிரியா துயரம்: போரின் வலியை உலகுக்கு உணர்த்த 'போகிமான் கோ' விளையாட்டை நாடிய கலைஞர்கள்! சிரியாவின் அவல நிலையை 'போகிமான் கோ' விளையாட்டு மூலம் உலகுக்கு உணர்த்தும் காட்சி. உலக முழுவதும் உள்ள இளைஞர்கள் 'போகிமான் கோ' என்ற வீடியோ கேமில் வரும் பிக்காச்சூ (pikachu) கதாபத்திரத்தைப் பிடிக்க உயிரை பணயம் வைத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சிரியாவை சேர்ந்த இருவர் 'போகிமான் கோ' புகழ் பிக்காச்சூவின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் நிலையை பிற உலக நாடுகள் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். சிரியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், கலைஞருமான காலித் அகில் 'போகிமான் கோ' வைப் பற்றி கேள்வியுற்று அவ்விளையாட்டை, போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் வீதிக…
-
- 0 replies
- 231 views
-
-
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர். இது தாலிபன்களுக்கு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பெரும் வீழ்ச்சியாக கருதப்படுகிறது. ஏற்கனவே ஹேரட், காசினி போன்ற நகரங்களை தாலிபன் கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது கந்தஹார் நகரையும் கைப்பற்றியுள்ளது. இது அனைத்துமே ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள். தாலிபன்கள் இதே வேகத்தில் நாட்டின் தலைநகர் காபூலையும் கைப்பற்றக் கூடும் என்ற அச்சமும் இதனால் எழுந்துள்ளது. பொதுமக்கள் பலரும் வன்முறைக்கு பயந்து காபூல் நகரில் தஞ்சமடைந்துள்ளதால் அங்கு தாக்குதல் நடந்தால் அது பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். …
-
- 0 replies
- 231 views
-
-
புதிய இணையதளம் ஆரம்பித்து மக்களிடம் ஆலோசனைகளை எதிர்பார்த்துள்ளார் மோடி! [Monday 2014-07-28 10:00] நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 2014 ஜூலை 26 அன்றுடன் 60 நாட்கள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடும் விதமாக 'mygov.nic.in' என்ற புதிய இணையதளத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான ஆலோசனைகளைப் பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து 2014 மே மாதம் 26ஆம் தேதி அன்று நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றது. இந்த இணையத்தளத்தை துவக…
-
- 0 replies
- 231 views
-
-
பிரித்தானிய பிரதமரை கொல்ல சதி திட்டம்? இருவர் கைது… பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 28-ம் திகதி தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஸகாரியா ரஹ்மான், அகியூப் இம்ரான் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் தெரேசா மே வசித்துவரும் லண்டன் நகரில் உள்ள 10 டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தில் வசித்து வருகின்ற நிலையில், அவர்கள் இருவரும் தெரேசா மேயை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் அவர்களை முன்னிலைப்படுத்திய பின்னர்இதனை தெரிவித்துள்ள காவல்துறையினர் சக்தி வாய்ந்த குண்டுகள் தயாரித்து பிரதமரின் வீட்டை …
-
- 0 replies
- 231 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் பேச அனுமதி கேட்டு தலிபான் கடிதம் September 22, 2021 ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தலிபான்கள், ஐநா சபையில் தமக்கும் பேச அனுமதி அளிக்குமாறு, ஐநாவிடம் முறையாக அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். இது தொடர்பாக தலிபான் குழுவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தை,குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், முத்தாகியின் கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கடிதத்தை ஐநாவின் குழு ஒன்று பரிசீலனை செய்து அனுமதிப்பது குறித்து தீர்மானிப்பார்கள் என்று கூறப்படுகின்றது. இந்த குழுவில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உட்பட ஒன்பது உறுப்பினர்கள் இருக்க…
-
- 0 replies
- 231 views
-
-
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி தனது ஜிகாதி அமைப்பினர் பின்பற்ற வேண்டிய பிரத்தியோகமான வழிமுறைகளை முதலாவதாக வெளியிட்டுள்ளார். இந்த வழிக்காட்டுதலில் ஜிகாதி அமைப்புகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளதாவது: மற்ற முஸ்லிம் அமைப்பினர் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் மீது தாக்குதலை கட்டுப்படுத்தவும். மேலும் பிரச்சினைகள் நடந்து வரும் நாடுகளில் நமது ஜிகாதி அமைப்பினர் தங்கள் செயல்திறனை மேம்படுத்த பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்து கொள்ளவும். அமெரிக்காவின் பொருளாதாரத்தை உருக்குலைக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்த வலியுறுத்துகிறேன். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, ஏமன், சோமாலியா ஆகிய நாடுகளில் போர் புரிவது தவிர்க்க முடியாதது. முஸ்லிம் நாடுகளில் உள்ள இந்து, கிறுஸ்டியன…
-
- 1 reply
- 231 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் - உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். சக்திவாய்ந்த ராக்கெட் ஏவப்பட்டது படத்தின் காப்புரிமைEPA புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து, 'ஃபால்கோன் ஹெவி' என்ற உலகின் மிக…
-
- 0 replies
- 231 views
-
-
பெய்ரூட் வைத்தியசாலையின் கீழ் ஹெஸ்புல்லாவின் மில்லியன் கணக்கான பணம், தங்கம்! இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் திங்களன்று (21) ஹெஸ்புல்லா பயங்கரவாதக் குழுவின் நிதி மையம் தொடர்பான உளவுத்துறை தகவலை வெளிப்படுத்தியது. அதில், பெய்ரூட்டில் உள்ள ஒரு வைத்தியசாலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பதுங்கு குழியில் ஹெஸ்புல்லா நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் மற்றும் தங்கத்தை பதுக்கி வைத்துள்ளமை கண்டறியப்பட்டதாக கூறியது. ஹெஸ்புல்லாவின் நிதி சொத்துக்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த இலக்கு மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. ஒரு தொலைக்காட்சி அறிக்கையில், இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர்…
-
- 0 replies
- 231 views
-
-
பாகிஸ்தானில் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு. வீடில்லா ஏழைகளை பெய்ஜிங்கிலிருந்து அப்புறத்தும் சீனா. ராணுவ பகுதியில் தஞ்சமடைந்து சின்னாபின்னமான நைஜீரிய குடும்பத்தின் சோகக்கதை உள்ளிட்ட செய்திகளை காணலாம்.
-
- 0 replies
- 231 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் போருக்குள் "சென்று" வரும்போது, "இளைஞர்கள் சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்" என்று ஓர்பன் கூறுகிறார். Oleh Pavliuk, STANISLAV POHORILOV — 3 அக்டோபர், 17:55 விக்டர் ஓர்பன். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 4861 - ஐரோப்பிய ஒன்றியம் "போரில் மூழ்கி வருகிறது" என்ற தனது கருத்தை அதிகரித்து வரும் நாடுகள் பகிர்ந்து கொள்வதாக ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் கூறியுள்ளார். ஆபத்து அதிகரித்து வருவதாகவும், ஹங்கேரியர்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் கூறுகிறார். மூலம்: ஹங்கேரிய வானொலி நிலையமான கொசுத் வானொலியில் ஓர்பன், ஐரோப்பிய பிராவ்தாவால் அறிவிக்கப்பட்டது. விவரங்கள்: போரிடும் கட்சிகளுக்கு இடையே போர் நிறுத்தம், அமைதி மற்றும் தொடர்ச்சியான இராஜதந்திர பேச்சுவார்…
-
- 1 reply
- 231 views
-
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்! – ஈரான் அறிவிப்பு. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சயீது அப்பாஸ் அராச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ”இந்தியாவும், பாகிஸ்தானும…
-
- 0 replies
- 231 views
-
-
சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டியுள்ளது. 10 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக உள்ளனர். கோப்பு படம் பிஜிங்: சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 1,634 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 14,687ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. உலகம் முழுவதும் 3 லட்சத்து 38 ஆயிர…
-
- 0 replies
- 231 views
-
-
உலகப் பார்வை: ஊழல் குற்றச்சாட்டு; சரணடைய மறுக்கும் முன்னாள் அதிபர் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைGETTY / EPA/ AFP முன்னாள் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு ஊழல் குற்றச்சாட்டு ஒன்றில் பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அவர் போலீஸிடம் சரண் அடையவும் கால அவகாசமும் அளிக்கப்பட்டு இருந்தது. படத்தின் காப்புரிமைEPA ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய மறுத்துவிட்டார். அவரது வழக்கறிஞர்கள் போலீஸிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அரசியல் உ…
-
- 0 replies
- 231 views
-
-
சீன பொருளாதார உளவாளிக்கு அமெரிக்காவில் 20 வருட சிறைத் தண்டனை By DIGITAL DESK 3 17 NOV, 2022 | 02:38 PM உளவு பார்த்த குற்றச்சாட்டில் சீன புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. ஹு யான்ஜுன் என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் பிரெஞ்சு வான்-விண்வெளி நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பங்களை திருடியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சை சேர்ந்த மேற்படி புலனாய்வு அதிகாரி 2018 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருதார். ஹு யான்ஜுன் உட்பட 11 சீனப் பிரஜைகள் மீது 2018 ஒக்டோப…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக கடற்படையில் முதல் கறுப்பின பெண் விமானி அமெரிக்க கடற்படை விமான பயிற்சிப் பாடசாலையில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் விமானியாக வரலாற்றில் முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேட்லைன் ஸ்வெகிள் என்ற அந்தபெண் இந்தமாத இறுதியில் “தங்கத்தின் சிறகுகள்“ என்று அழைக்கப்படும் விமான அதிகாரி அடையாளத்தை பெறுவார் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. வேர்ஜீனியா மாகாணம் பர்க் நகரைச் சேர்ந்த மேட்லைன் ஸ்வெகிள் கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை அகாடமியில் பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து 3 ஆண்டு கால தீவிர பயிற்சிக்குப் பிறகு தற்போது அவர் போர் விமானத்தின் வி…
-
- 0 replies
- 231 views
-
-
தென்கொரிய இராணுவத்தின் போர் பயிற்சியை குழப்பும் நோக்கில் வடகொரியா ஏவுகணை தாக்குதல்! அமெரிக்கவுடன் இணைந்து தென்கொரிய இராணுவம் நேற்று ஆரம்பித்த போர் பயிற்சியை குழப்பும் நோக்கில் வடகொரியா கடலுக்கு அடியில் பல பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரிய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. தென்கொரிய அரசாங்கம் நேற்று பயிற்சியை ஆரம்பித்த சில மணிநேரங்களின் பின்னர் வடகொரியா இவ்வாறு ஏவுகளைகளை ஏவி தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் வருடாந்த கூட்டு ராணுவ பயிற்சியை நேற்று ஆரம்பமானது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தவுள்ளன. எனினும…
-
- 0 replies
- 231 views
-
-
இவ்வாண்டு டிசம்பர் 31 ஆம் திகதியில் ஒரு விநாடி கூட்டப்படுகிறது inShare இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட விநாடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கிடும் வகையில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது. அதனை ஒருநாள் என்கிறோம். ஒரு நாள் என கணக்கிடப்படும் 24 மணிநேரம், நிமிடம், விநாடி என பகுக்கப்படுகிறது. பூமி…
-
- 0 replies
- 231 views
-
-
அமெரிக்காவில் பெய்த கன மழையால் 9 பேர் உயிரிழப்பு! தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியதால், வார இறுதியில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர். கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தனது மாநிலத்தில் எட்டு பேர் இறந்துவிட்டதாகக் ஞாயிற்றுக்கிழமை கூறியதுடன், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரித்தார். வெள்ள நீரில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்கள், பலர் தங்கள் வாகனங்களில் சிக்கிக் கொண்டனர். கென்டக்கி, ஜார்ஜியா, அலபாமா, மிசிசிப்பி, டென்னசி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா மற்றும் வட கரோலினா ஆகியவை இந்த வார இறுதியில் புயல் தொடர்பான எச்சரிக்கையில் உள்ளன. ஏறக்குறைய அந்த மாநிலங்கள் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் ஹெலீன் …
-
- 0 replies
- 231 views
-
-
தென்கொரியா- அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்! உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது தென்கொரியா மற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகின்றது. இதன்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இதில் இதில் 11பேர் வொஷிங்டனை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தொற்று இலக்கானவர்களின் எண்ணிக்கை 225ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, சீனாவிற்கு வெளியே மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவரும் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், 518பேர் புதிததாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக தென…
-
- 0 replies
- 231 views
-
-
30 APR, 2025 | 10:35 AM நியூசிலாந்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. https://www.virakesari.lk/article/213309
-
- 0 replies
- 231 views
- 1 follower
-