கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
நீ என்றும் என் காதலி' அதிகாலை ஓர் அழைப்பு மணி அவசரமாய் சென்று யாரது...? பதில்.. நான் தான் உன் தேவதை...! கதவை திறக்கிறேன் யார் தேவதையா...? ஆம்..! அங்கே ஓர் அதிசயம்....! அனைத்தையும் அடித்துவிடும் அழகான ஓர் முகம்... ஆனாலும் கண்களிலே கண்ணீர்... கலைந்த கூந்தல்.... மாற்றான் கைபட்டு கசங்கிய மேலாடை... மான மறைப்புகளில் ஆங்காங்கே இரத்தத் துளி..... கலைந்த கூந்தலையும் அலங்கரித்த கார்த்திகைப் பூ என் கண்முன்னே கதறுகிறாள் ஏன் என்னை கைவிட்டாய்..? நான் கேட்டென்...? எப்போ உனை கைவிட்டேன்...? நான் உன்னைப் பார்த்ததில்லை...! அட பாதகனே.. எனை பிரிய மனமின்றி அன்று ஏங்கி அழுது நின்றாய்... எனை விட்டு பிரிய முதல் …
-
- 2 replies
- 1.1k views
-
-
அரோகரா அரோகரா நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா வண்ணமயில் ஏறிவரும் வடிவேலனுக்கு அரோகரா முருகா! என்னப்பா இது? இனம் மொழி தாண்டி உன்ர வாசலிலை நிறையுது பக்தர்கள் வெள்ளம் கடையில விக்கிற பிள்ளையார் சிலையில மேடின் சைனா இருக்கு கடைக்குட்டிக்கு வாங்கிற அம்மம்மா குழலை வடக்கத்தையான் விற்கிறான் ஐப்பான் காரன் வந்து “சோ” றூம் போடுறான் பாகிஸ்தான் காரன் வந்து பாய் வி(ரி)க்கிறான் கண்ணுக்கு தெரியிற இடமெல்லாம் துரோகிகள் கூட்டம் கண்கட்டி வித்தை காட்டுது சிங்கள தேசம் வெள்ளை வேட்டி கட்டி சுது மாத்தையாக்கள் வெறும் மேலோட களு பண்டாக்கள் போதாக்குறைக்கு விமானச் சீட்டுக்கு விலைக்குறைப்பு ஊ…
-
- 3 replies
- 1k views
-
-
முகம் தெரியாத நண்பனும் நாங்களும் “வணக்கம்” அங்கிருந்தொருவன் அருகிருப்பதுபோல் பேசுவான் தொலை தூர வாழ்வில் அதிகாலைப்பொழுதில் தினந்தோறும் வருவான். தாய்நாட்டு வாசனை தன் குரலாலே தெளிப்பான். முன்னைய நாட்களில்.. தனித்தேசக் கனவை தன்மான உணர்வை செயல் திறன் ஆற்றலை எங்களுக்குள் இன்னும் அதிகமாக்கியவன் இறுதி நாட்களில்.. முள்ளி வாய்க்கால் இப்போது என்ன சொல்லுதென்று வரி விடாமல் சொல்லுவான் நீர்க்குமிழி வாழ்வுக்குள்ளிருந்தபடி நிமிர்ந்து வந்து குரல் தருவான். எங்களைப்போல் முகம் தெரியா நண்பர்கள் அவனுக்கு அதிகம். அத்தனை பேரும் தேடுகின்றோம் அவனை. இப்போது நீண்ட நாட்களாய் காணவில்லை. அவனை? அவன் குரலை? இ…
-
- 8 replies
- 2.1k views
-
-
உள்ளிருந்து ஒரு குரல் 'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியை கேட்ட இங்கே அழுத்துங்கள் 'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியைத் தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள் (உள்ளிருந்து ஒரு குரல் என்ற கவிதையை நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். காலத்தை பிரதிபலிக்கும் இக் கவிதையை ஒலிவடிவில் தருகிறோம். எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாமையால் கவிதைக்கு உரியவரின் பெயர் சேர்க்கப்படவில்லை. எழுதியவரின் பெயர் அறிந்தால் அஞ்சலிடுங்கள் சேர்த்துக் கொள்வோம்)
-
- 1 reply
- 720 views
-
-
கல் நெஞ்சும் கசிந்துருக, இன்று கையேந்தும் நிலை வந்தும் சொல் பொறுக்காச் சோர்விலராய் கைகட்டி நிற்காத ஏர் பிடித்த நல் மனிதர் வல் வினையால் வாழ்விழந்து வாழாவெட்டி ஆகி நின்று நெல் மணிக்கும் வரிசை கட்டி கையேந்தும் நிலை கொடிது. பார் போற்ற வாழ்ந்திருந்து பசி விலக்கி வாழ்ந்தவர்கள் ஏர் பிடித்த கையாலே அள்ளி அள்ளிக் கொடுத்தவர்கள்- வந்தாரை வரவேற்று ஊர் மெச்ச உபசரித்தோர் நாதியற்று நடுத் தெருவில் அகதியாய் அலைகிறாரே போர் ஓய்ந்த பின்னாலும் ஊர் ஏக முடியாத கொடுமையினை யாருணர்வார்
-
- 6 replies
- 1.4k views
-
-
பாலைவன ரோஜா...... கவிதை - இளங்கவி நம் வாழ்விழந்த சோகத்தில் வாயடைத்து நின்றேன்...... அழியும் நம் இனத்துக்காய் நடு வீதிக்கு சென்றேன்..... அந்த தருணங்கள் என் வாழ்வின் ரணங்களாய்..... எப்போதும் சுட்டெரிக்கும் பாலை வனங்களாய்........ அந்தப் பாலைவனத்தினிலே சோககீதம் பாடும் ஓர் சோலைக் குயிலாக..... திசையேதும் தெரியாமல் திசைமாறிப் பறக்கின்றேன்.... அந்த நெருப்பு மண்தரையில் பட்டுவண்ண ரோஜாவொன்று..... நட்பெனும் நிழல் தேடி நான் பறக்கும் திசை நோக்கி நட்புடன் சிரிக்கிறது.... சுட்டெரிக்கும் சூரியன் விட்டெறியும் கதிர்களினால்.... தொட்டாலே தீப்பற்றும் சுட்டெரிக்கும் மண் தரையில்...... வேரூன்றித் தவிக்கும் அந்த அழகான பூச்செடிக்கு..…
-
- 6 replies
- 3.8k views
-
-
போதிமரத் தேவதை..... இளங்கவி - கவிதை..... என் பக்கத்தில் என் கண்மனி நடந்துவர..... கவலையான முகத்திற்காய் காரணம் கேட்கிறேன்...... சொல்லாமல் தொடர்கிறாள்..... காற்றின் வேகத்தில் அவளின் கண்களுக்குள் ஏதோ சென்றுவிட...... முடியாமல் கண்ணை மூடுகிறாள்..... நான் பதை பதைத்து அவளின் பக்கத்திலே சென்று என்ன என்று கேட்டு அவள் கண்ணை ஊதுகிறேன்..... விடு என்னை என்று வெறுப்பாக விலகுகிறாள்..... கண்ணில் தூசி விழுந்ததற்கே இப்படித் துள்ளுகிறாய்....! தாய் மண்ணில்.... குழந்தைகளின் மண்டையில் கொத்துக் குண்டல்லா போட்டான்.... நீ என்ன செய்தாய்....? மூன்று லட்சம் மக்கள் முகாமில் ஒரு நேர உணவின்றி முடங்கிக் கிடைக்கையிலே நீ என்ன செய்கிறாய…
-
- 14 replies
- 1.3k views
-
-
எத்தனை ஆயிரம் கனவுகளைச் சுமந்து எந்தவித எதிர்பார்ப்புக்களுமே இன்றி... எமக்காக வீரகாவியமான வேங்கைகளே_உங்களுக்காய் என்னால் எதையுமே செய்யமுடியவில்லை_அதனால்... என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே! மரணத்திற்கு நாள்க் குறித்து மரணத்தையே முத்தமிட்ட... மாவீரர் பிறந்த மண்ணில் பிறந்தேன் என்று பெருமை கொள்ளும் என் மனது.. மாண்ட உங்களின் கனவான_தாய் மண் விடுதலைக்காய் உழைக்காது... வெற்றுவீரம் பேசும் சுயநலவாதிநான்_அதனால் என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே! ஆயிரமாயிரம் ஆசைகள் கொண்ட சராசரி மனிதர்கள் தான் நீர் ஆயினும் அன்னை மண் தனைக் காத்திட ... அத்தனை ஆசைகளையும் துறந்த அதிசய பிறவிகள் நீர் தாயகக் கனவுக்காய் ஆயிரமாயிரம் உயிர்களை... …
-
- 12 replies
- 2.6k views
-
-
ஞாபகம் வந்த நாள்முதலாய் உன்னை எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது ஏனென்றும் எதகேன்றும் தெரியவில்லை எங்கள் நெஞ்சில் இந்தவலி எங்களின் வலி ஈழத்திற்கும் தெரியாது இவர்களின் காதலுக்கு எல்லையில்லை உன்கரம் புடிக்க இழந்தவை பல தரையில் தரைப்புலியாயை கடலில் கடற்புலியாயை வானில் வான்புலியாயை வருணிக்க வார்த்தையில்லை கரும்புலியாயை மண்ட மாவீரரும் மரணித்த மக்களும் போதும் போதும் ஈழமே எத்தனை எத்தனை வலிகள் எமக்குள் நாம் நேசித்த ஈழமே எம்மை நேசிக்க மறந்தாயோ
-
- 0 replies
- 810 views
-
-
சிங்களர் அறியாப் பூ சகிப்பு சோனியா பறித்த பூ வெறுப்பு மகிந்த கொண்ட பூ கொழுப்பு பொன்சேகா வளர்த்த பூ கடுப்பு இராணுவம் செய்த பூ இனஅழிப்பு அரசாங்கம் காத்த பூ மூடிமறைப்பு ஈழத்தில் மலர்ந்த பூ தவிப்பு வீணாய் போன பூ எம் உழைப்பு மருத்துவர் பெற்ற பூ தடுப்பு பத்திரிகை கண்ட பூ மறுப்பு ஐநா மறந்த பூ பொறுப்பு அமெரிக்கா வாங்கிய பூ செருப்பு வெளிநாடு பார்த்த பூ விடுப்பு கலைஞர் தந்த பூ சலிப்பு எம்வாழ்வில் பூத்த பூ கசப்பு எம்வயிற்றில் எரியும் பூ நெருப்பு http://gkanthan.wordpress.com/index/pookkal/
-
- 10 replies
- 1.3k views
-
-
திங்கட்கிழமை தீ மூட்டிக் கொன்றார்கள் செவ்வாய்க்கிழமை செல் அடித்துக் கொன்றார்கள் புதன்கிழமை புகை விட்டுக் கொன்றார்கள் வியாழக்கிழமை விண்ணில் வந்து கொன்றார்கள் வெள்ளிகிழமை வெடி வைத்துக் கொன்றார்கள் சனிக்கிழமை சத்தம் இன்றிக் கொன்றார்கள் ஞாயிற்றுகிழமை நஞ்சு விட்டுக் கொன்றார்கள் ஏழு நாளும் இரக்கமின்றிக் கொன்றார்கள் விடிகாலையிலே வீடு வந்து கொன்றார்கள் மதியவேளையிலே மோட்டார் அடித்துக் கொன்றார்கள் பின்னேரத்திலே பிடித்துச் சென்று கொன்றார்கள் இராப்போழுதினிலே ராக்கெட் விட்டுக் கொன்றார்கள் அமாவாசையில் அடித்து அடித்துக் கொன்றார்கள் பௌர்ணமியில் பட்டினி இட்டுக் கொன்றார்கள் கரிகாலத்திலே கற்பழித்துக் கொன்றார்கள் சுபயோகத்திலே சிரமறுத்துக…
-
- 2 replies
- 1.6k views
-
-
-
மழை...... கவிதை - இளங்கவி மனதைத் தாலாட்டும் இயற்கையின் இன்பம் நீ...... மகிழ்வான சிறுவயதின் என்னை மகிழ்வித்த சொர்க்கம் நீ..... சிறுவனாய் நான்..... விளையாடி வரும்போது வெப்பமாகும் என் தேகம்..... மேலிருந்து நீ வந்து வந்து குளிரவைப்பாய் என் தேகம்.... என் சூடான சுவாசமும் சில்லென்று குளிர்ந்துவிடும்.... அதை இன்றும் நினைத்தாலும் ஜில்லென்று சுகம் தரும்.... இளைஞனாய் நான்...... தெருவோரம் அமர்ந்து தேடுவேன் என் பேரழகை.... திடீரென்று நீ வருவாய் சினத்தையும் நீ தருவாய்..... அந்த நேரம் என் அழகுச்சிலை வருவாள்... நீ துளிகளாய் அவள் முகத்தினிலே தொட்டதுமே ஒட்டிடுவாய்.... ஒட்டிய துளியொன்று அவள் மூக்குவளி இறங்கிவந்து அவள் …
-
- 14 replies
- 2k views
-
-
அன்பே ஆருயிரே_என் ஆன்மாவின் ஆத்ம ஜீவனே.. கண்ணே மணியே_என் கண்ணுக்கு கண்ணாயிருக்கும் கார்குழலே.. முத்தே என் முத்தழகே மூன்றாம்பிறை பெண்ணழகே.. விண்ணே மண்ணே விண்ணில் தோன்றும் நிலவே இப்படி எத்தனை பூச்சுத்தல்கள்... கழுதையின் குரலைக் கூட குயிலின் குரல் போல் என்பர்.. கண்டது நிண்டதெற்கெல்லாம் காதலி புராணம் பாடுவர்.. காமத்துப் பாலில் வருவதை விட காதலி உடலை வர்ணிப்பர்.. கவிஞர்கள் கூட தோற்றுவிடுவர் காதலர்களின் கவி வர்ணனையில்.. காதல் ஹோர்மோன்களின் கலகமே காதல் கடவுளுமல்ல புனிதமுமல்ல.. நீயின்றி நானில்லை_உன் நிழலைக்கூட நேசிப்பேன்.. நீயில்லாத உலகில் நின்மதியில்லை நீ தான் என் வாழ்வும் சாவும்.. எல்லாம் ஏமா(ற்)றும் வரைக்கும் தான் ம…
-
- 7 replies
- 1.1k views
-
-
நிறைகுடம்தான் நான் விரக்திகளால் மட்டும் தான் ... நிறைகுடம்தான் நான் விரக்திகளால் மட்டும் தான் நிறைந்திருக்கிறேன் . ஒளிர்விடும் சுடர்நான் காலடி எங்கும் தனிமை இருளை சுமந்திருக்கிறேன் . நடுவூரில் பழுத்த நல்ல மரம் நான் வேர்கள் இன்னும் எனை தேடிக்கொண்டு .... மாவிலை தோரணங்கள் சூடி சந்தன வாசம் பூசி பூரனப்பட்டவனாய் நிற்க முயலவில்லை நான் உங்களைப்போல் . கண்ணாடிகள் அலங்கரிக்கப்படுவதால் _முக கறைகள்என்றும் மறைவதில்லை . நிழல்களை எடைபோட்டு நிரப்பிக்கொள்ளவும் கனவுகளை கருவாய் சுமந்து திரியவும் ஏக்கதொப்பைகளை ஏற்றிக்கொண்டு நிற்கவும் சம்மதித்ததில்லை _என் மனசாம்ராட்சியம் உங்களை போல் . அரிதாரம் பூசி முகத்தை மறைத்தாலும் முகவரி…
-
- 3 replies
- 925 views
-
-
நாமொன்று நினைக்க தெய்வம் தானொன்று நினைக்கிறது !! எமக்கும், தமிழ் இனத்துக்கும் தலைவனாக தாயாக நண்பனாக சிறந்த வழிகாட்டியாக இருந்த உத்தமனே உலகத்தமிழரின் சூரியப்புதல்வனே எமை விட்டு எங்கு சென்றாய் ? உனக்கு நிகர் இவ்வுலகில் யாருமே இல்லார் என்று எண்ணியோ உலகமே திரண்டு உன்னை கொன்றோளித்ததொவோ ! மாவீரர் அழிவதில்லை, அவர்கள் காலத்தால் அழியாதவர்கள் என்று எமக்கு கற்று தந்தவன் நீ வருடந்தோறும் நவம்பர் 27 இல் அவர்களுக்கு நீ சுடர் ஏற்றிய பின்பே நாமும் எமது அக வணக்கத்தை செலுத்தினோம் இன்று எமை விட்டு பெரும் பயணம் ஏன் தொடர்ந்தாய்? நீ இன்னமும் எம்முடன் வாழ்வதனாலோ நீ சாகா வரம் பெற்றவன் ஆம் நீ ஒவ்வொருவரினதும் உள்ளத்திலும் அவரவர் இல்லத்தி…
-
- 4 replies
- 1.1k views
-
-
பூத்திருந்த பாவையரும் காத்திருந்த காளையரும் கடிமணம் கொண்ட காலம் என்னவோ கம்பன் காலம் தான்_இன்று இருமனங்கள் இணைவதல்ல இருபணங்கள் இணைவதே திருமணம் அம்மிமிதித்து அருந்ததி பார்க்கும் திருமணத்தின் அரங்கேற்றம் என்னவோ அஞ்சாறு மில்லியனில் தான் மண்டபம் எடுத்து மணவறை கட்டி மாப்பிள்ளைக்கு பட்டுவேட்டி கொடுத்து மாற்று மோதிரம் கொடுத்து முப்பதுபவுண் தாலி கூறையுடன் மூக்குமின்னிவரை பெண்பெற்றவர் கொடுத்து முடிந்தால் மோட்டார் வண்டியும் கொடுத்து மாலையிட வேண்டும் மங்கைக்கு இத்தனையும் செய்திட பெற்றவர்கள் சிந்துவது வியர்வையல்ல ரத்தமே எத்தனை ஆண்களுக்கு தெரியும் திருமணச் சந்தையில் விலைபோகும் கடாக்கள் தான் நாம் என்று... அதிகம் படித்தால் அதிகம் சீ…
-
- 11 replies
- 1.7k views
-
-
அன்பால் உறவுகள் அதிகாரம் பண்ண அரசியல்வாதி பதவியால் அதிகாரம் பண்ண அகிம்சையால் அகிம்சாவாதி அதிகாரம் பண்ண ஆயுதத்தால் ஆயுததாரி அதிகாரம் பண்ண ஆலயத்தில் பக்தியால் பூசாரி அதிகாரகம் பண்ண ஆத்மீகத்தால் மகான்கள் அதிகாரம் பண்ண ஆசிரியர் அறிவால் அதிகாரம் பண்ண ஆண்டியானேன் அதிகாரமற்ற வாழ்வுக்காக அங்கும் பசி என்னை அதிகாரம் பண்ணிட்டே அடியே பசி என்னை அதிகாரம் பண்ணிட்டே அதிகாரம்
-
- 8 replies
- 3.2k views
-
-
வணக்கம் நண்பர்களே, ஊடக உறவுகளே, ஈழத்தமிழனின் வலிகளை சுமந்து நாம் எல்லோரும் ஒற்றுமையோடு பணி செய்யவேண்டும் என்ற ஆசை உங்கள் எல்லோருக்கும் இருக்கும் என்பதை நான் அறிவேன். இந்த வருடம் ஈழத்தமிழினம் இதுவரை காலமும் அனுபவித்திராத மிகப்பெரிய " மனிதப்பேரவலத்தினை" அனுபவித்துவிட்டது. இன்னும் முட்கம்பிகளுக்குள் அனுபவித்தும் கொண்டிருக்கிறது. இவற்றையும் ஆவணப்படுத்த "எங்கள் தேசம் எங்களை நம்பி இருக்கிறது" என்ற பாடலில் என்னுடைய கருத்துகளை சொல்லி இருக்கிறேன். முதலில் பாடலைக் கேளுங்கள், தொடர்ந்து எங்கள் பாடல் தொடர்பான ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களை அறியத்தாருங்கள். இந்தப் பாடலை எந்த அரங்கத்திலும் நீங்கள் பாடலாம். இசை கோர்ப்பு தேவைப்படின் மின்னச்சல் அனுப்புங்கள். மிக்க…
-
- 3 replies
- 818 views
-
-
உள்ளிருந்து ஒரு குரல் நில்லுங்கள் மனிதர்களே! வண்ணங்கள் கொண்டு எங்கள் வாழ்க்கையை வனைய வேண்டாம் நிறையப் புனைகதை புனைந்து எங்களுக்கு அனுதாபம் தேடித்தரவும் வேண்டாம் நாங்கள் தொலைத்ததில் கொஞ்சத்தையும் சுமப்பதில் கொஞ்சத்தையும் அங்கங்கே எழுத்துப்பிழைகளோடாவது எழுதினால் போதும் நாங்கள் மீண்டும் உயிர்பெறுவோம். நம்புங்கள் மனிதர்களே! முள்ளுக்கம்பிகளுக்குள் முளைத்து நிற்பவை எங்கள் கனவுகளின் சமாதிகளே மீட்பின் பெயரால் நடந்துகொண்டிருப்பது அழிப்பின் அதி உச்சமே இங்கு வசந்தம் என்பது வாடகைக்கு கூட இல்லை மறுவாழ்வு என்பது மருந்துக்கும் இல்லை ஒரு இரவுக்கும் பகலுக்கும் இடையில் பல …
-
- 4 replies
- 1.1k views
-
-
நாங்கள் தூக்கத்தில் விழித்து கொண்டு இருப்பவர்கள் நாங்கள் வாழ்வோடு செத்துகொண்டிருப்பவர்கள் நாங்கள் கந்தககாற்றில் கருகி போனவர்கள் நாங்கள் மருத்துவத்துக்காய் மயங்கி விழ்தவர்கள் நாங்கள் ஈழதாகம் கொண்டு தண்ணீர்தாகம் உற்றவர்கள் நாங்கள் ஈழம் எனும் கனவு கண்டவர்கள் நாங்கள் முள்ளிவாய்க்காலில் முடங்கி முட்கம்பி முடிச்சுக்குள் நாங்கள் எங்கள் மண்ணில் அகதியானவர்கள் நாங்கள் நாங்கள் வேறு யாருமல்ல நாங்கள் ஈழத்தமிழர்கள்
-
- 6 replies
- 1.2k views
-
-
நேசிக்கிறேனா? புரியவில்லையே.... உன்னுடன் போட்ட சண்டையும் உன்னைத் திட்டிய பேச்சுக்களும் உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ஏற்பட்ட கோபங்களும் இப்போது காதலாய் மாறிவிட்டதா???? நம்ப முடியவில்லையே........ அடிக்கடி கண்கள் உன்னைத் தேடுகிறது! நீ என்னையே பார்ப்பதாய் இதயம் நினைத்துக் கொள்கிறது! நீ எதிரினில் வரும் போதெல்லாம் இறக்கை முழைத்த உணர்வு! ஏனடா? ஏனடா இப்படி மாறிப் போனேன்??? புரியாத உணர்வுகள் கொடுக்கிறாய்! என்ன முயன்றும் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை!!! இந்த உணர்விற்கு என்ன பெயர் சூட்டுவது என்றும் தெரியவில்லை!.... இன்னும் ஈரெட்டு நாட்கள் தான்! அதன் பின் உன்னை நான் பார்ப்பேனா என்று கூடத் தெரியாது! இப்போது எதற்காக இந்…
-
- 0 replies
- 589 views
-
-
எங்கோ மின்சார முள்வேலிக்குள் யாரோ முகமற்றவர்கள் வதைபடட்டும். அதி புத்திசாலிகளின் முன்னெடுப்பில் ஆடல், பாடல், கொண்டாட்டங்களை, மண்ணுக்காய் மடிந்தவர்களின் வணக்க அரங்கின் பெயரால் வகைப்படுத்திக் கொள்வோம். தெருவெளிகளில் நின்று சிறுகச் சிறுகச் சொல்லிக் கதறிய இனத்தின் வேதனையை ஆழக்குழி தோண்டிப் புதைப்போம். மீள மீள வசதிக்கேற்ப வரலாற்றுப் பிழைகளை நியாயப்படுத்திக் கொள்வோம். வாதையில் உறவுகள் வருந்திக் கிடந்தாலும் வரும் வசந்த விழாக்களுக்கு நாமே வழிகாட்டிகள் ஆவோம். நாங்கள் புலம்பெயரிகள். புண்ணாக்குத் தின்றாலும் விண்ணாணம் பார்ப்போம். விளக்கங்கள் கொடுப்போம்.
-
- 12 replies
- 1.8k views
-
-
சாக்கடையில் சந்தன மலர்கள்........ கவிதை - இளங்கவி....... வேலிப் பூவரசு வெண்மஞ்சல் பூப்பூத்து வாசலில் போவோரை வா வாவென்று வரவளைக்கும்..... முன்வைத்த காலை பின் வைய் என்று சொல்லி எங்கள் மொட்டைவால் நாய்க்குட்டி முன் வந்து குரைத்து நிற்கும்..... மொத்த அரசியலை ஒரு பத்திரிகையில் உள்வாங்கி எங்கள் பொக்குவாய் தாத்தா பொழுதுகள் போக்கிடுவார்.... ஆட்டிறைச்சிக் குழம்புவைக்க அயலட்டம் எல்லாம் மணக்க அந்த வாசக் குழம்புடனே வயிறாறச் சாப்பிட்ட நம் சந்தன மலர்களெல்லாம் இன்று சாக்கடைச் சகதிக்குள்....! அன்று திருவிழாக் காலத்திலே சிறிதாக வலம் வந்தோம்...... இன்றோ திண்ட மலம் கழிப்பதற்கும் நீண்டதாய் வரிசை நிற்போம்.... என்னையா கொடுமைகள்…
-
- 6 replies
- 1.1k views
-