Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "என்று - நான் உன்னைக் காண்பேன்??" "ஆந்தை அலறவில்லை?- சுடர் ஒளி அணையவில்லை? எந்தை அவள் - தன் ஒளி அணைத்துவிட்டாள் முந்தை நாளில் - கொஞ்சி கூடி குலாவினாள் பந்தை அடித்து - சேயுடன் ஆனந்தக் கூத்தாடினாள்" "சிந்தை ஓடவில்லை? - என் மனம் ஆறவில்லை? எந்தை அவள் - கண் மூடி உறங்கிவிட்டாள் நிந்தை பேசாள் - நினைவிலும் கெடுதல் செய்யாள் விந்தை புரிந்தாள் - எந்நாளும் உள்ளம் கவர்ந்தாள்" "மந்தை கூட்டம் போல் நாம் இருந்தோம்! தந்தை தாயாக சேர்ந்து நாம் இருந்தோம்! இந்தை பிள்ளை இன்னும் கண்ணீர் துளியில் கந்தை கொண்டு கண் துடைக்க வாரயோ?" "குந்தை அண்டி அவள் ஒய்யாரமாய் இருப்பாள் விந்தை காட்டி சேயுடன் ஒன்றி இருப்பாள் சிந்தை குளிரும் அ…

  2. கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கண்ணீரும் செந்நீரும் கலந்திடும் கார்த்திகை இருபத்தியேழு சொல்லில் அடங்காச் சோகங்கள் சூழக் கண்சிமிடித் தமிழரை கைநீட்டி அழைக்கும் கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கார்த்திகை மைந்தர்கள் காவிய நாயகர் போர்க்களம் கண்டு புனிதர்கள் ஆகியே தூய்தமிழ் அன்னையின் தாய்மடித் தழுவித் தமிழர்தம் மனங்களில் தண்ணொளி வீசினர் கருத்தினில் தலைவன் கொள்கையை ஏற்றவர் கந்தக குப்பியைக் கழுத்தினில் சுமந்தவர் தரைப்படை கடற்படை தரணியில் கண்டவர் வையம் வியந்திட வான்படை அமைத்தவர் வரிப்புலி வடிவாகி வீரத்தில் திளைத்தவர் உணவு உறக்கம் உறைவிடம் மறந்தவர் காடுகள் களனிகள் கூடிடும் காப்பனர் வெடிகள் சுமந்தே வெந்தணல் ஆகினர் அன்னையும…

  3. "ஆண்டாள் மாலையில் வண்டுகள் மேயுது" "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும் பூவையரின் அழகை ஆண்கள் அறிவர் பூரிப்பு கொண்டு மயங்கித் திரிவர்!" "பூமி முழுவது கூட்டி திரிந்து பூசி மெழுகி காதல் பேசி பூசை செய்து மயக்குவதை பார்த்து பூதங்கள் ஐந்தும் தம்முள் சிரிக்கும்!" "ஆண்டாள் மாலை மகளுக்கு சூடி ஆண்டவன் அருளுக்கு தாய் வேண்ட ஆடவன் நடிப்பை காதலாய்ச் சூடி ஆகாய கோட்டையில் கனவு காண்கிறாள்!" "தையல் திருமணம் வேண்டி நோன்பிருந்து தையில் முன்பனி நீராடி தவமிருந்தவள் தைரியம் இழந்து ஆண்டுகள் போக தைவரல் இன்ப…

  4. "வேதனையும் மகிமையும், வாழ்வின் கதை" / "Pain and glory are Every one's Story" "ஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே!" "அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறது, அங்கே நிம்மதி கிடைக்கிறது, இங்கே வேதனை வலிக்கிறது, அன்பே!" "யார் யாரோ, ஒவ் ஒருவருக்கும், ஒரு கதை சில வலியை கூறும், சில சிறப்பை கூறும், அன்பே!" "எவரடி பூமியில் இன்று, பயம் கொள்ளா மனிதன்? சிலர் அழுவார், சிலர் அழுதுகொண்டே சிரிப்பார் அன்பே!" "வெவ் வேறு கட்டத்தில், எம்மை திட்டி சா…

  5. "உனக்கு தலை குனியும் !" நேற்று: "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!" இன்று: "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!" நாளை: …

  6. "நாளைய உலகம்" / "Tomorrow's World" "பொத்தானை அழுத்தி, மறு கரையில் காதலிப்போம் ஜன்னளை திறந்து, புதியவானம் காண்போம் கண்ணே? உலகம் சுருங்குதோ, எண்ணம் அப்படி தோன்றுதோ தொழில் நுட்பம், அப்படி மாற்றுதோ கண்ணே?" "நாளாந்த வாழ்வில், பல பல மாற்றங்கள் ஒன்றாய் அனுபவிப்போம், ஆனால் எந்த இழப்பில் கண்ணே? ஆண்டாண்டு மாசுபடுத்தி, சூழலை கெடுத்து விட்டோம் நெருக்கடி வந்தபின்பே, மாற்றுவழி தேடுகிறோம் கண்ணே?" "மதிநுட்ப சிந்தனையாளனா, நாம் மரத்துப்போனவனா இன்றைய நிலையை எப்போது சிந்திப்போம் கண்ணே? கண்மூடித்தனமாக அழிவை நோக்கி பயணிக்கிறோமா [அல்லது] தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கி…

  7. "காவோலை" "காவோலை விழ குருத்தோலை சிரிக்க காதில் மெல்ல காவோலை கூறிற்று 'காலம் மாறும் கோலம் போகும் காயாத நீயும் கருகி வாடுவாய்' குருத்தோலை சிரித்தது குலுங்கி ஆடியது குறும்பு பார்வையில் கும்மாளம் அடித்தது குருட்டு நம்பிக்கை வெயிலில் காய குருத்தோலை விழுகுது பாவம் காவோலையாக !!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  8. "இது இனப் படுகொலை ..... !!!" "மனதில் உறுதி கொண்ட மக்களை சினந்து குருதி கொள்ள நினைப்பதும் ஈனமாய் எள்ளி நகை ஆடுவதும் மானமாய் வாழ விடாது தடுப்பதும் தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும் வனமாய் பசும் நிலத்தை மாற்றுவதும் ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும் இனப் படுகொலை! இனப் படுகொலை!" "விடுதலை வேண்டி வீறுகொண்ட இனத்தை படுகொலை செய்து குழியில் புதைப்பதும் நடுநிலை அற்று அடிமை ஆக்குவதும் ஏடுகளை எரித்து சரித்திரத்தை சிதைப்பதும் வீடுகளை இடித்து அகதி ஆக்குவதும் மேடுகளை போட்டு தடுத்து வைப்பதும் கூடுகளை உடைத்து குஞ்சுகளை பறிப்பதும் படுகொலை!அது இனப் படுகொலை!!" …

  9. "கருப்பு பூனை குறுக்கே பாய" "கருப்பு பூனை குறுக்கே பாய கருப்பாயி கலங்கி பயணம் நிறுத்த மருண்டு அருண்டு எலி பதுங்க வெருண்டு வெறுத்து பூனை பார்க்குது!" "கருப்பு காகம் முற்றத்தில் கரைய கருப்பாயி வாசல் கதவு பார்க்க கருப்பன் வரும் நம்பிக்கை துளிர நெருப்பு மனது எரியுது தவிக்குது !" "கருப்பு விழிக்கு விக்கல் வர கருப்பன் இவள் நினைவோ என வருடி அழுத்தி நெஞ்சை இளக்க இருந்த விக்கல் மறையுது போகுது!" "கருப்பு பல்லி தலையில் விழ கருப்பாயி நெஞ்சம் பதைத்து துடித்து கருப்பன் என்ன ஏதோ என ஒரு தீபம் கொளுத்துது காட்டுது!" "கருப்பு இருட்டில் சென்ற கருப்பன் வெருண்டு அலைந்து வீடு திரும்ப குருட்டு பிசாசு ப…

  10. "படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன" "நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க" வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம் முழங்கினர், க…

  11. "பல்கலைக்கழக வாழ்வின் நினைவுகள்" [பாடல் 02] [பல்கலைக்கழக நினைவு இதழில் வெளியானது / பேராதனை, இலங்கை ] "தேடிய இன்பம், ஆடிய நையாண்டி மடியில் கொட்டுது, ஆயிரம் பாடல்கள் வாடிய இதயம், பூக்குது மீண்டும் கூடிய எம்மிடம், குதித்து துள்ளுது" "ஆண்டு ஒன்று அஞ்சி கழிந்தது ஆண்டு இரண்டு நிமிர்த்தி சென்றது ஆண்டு மூன்று துணிந்து நின்றது ஆண்டு நான்கு அறிவால் மலர்ந்தது" "நிறைந்த படிப்பு, இடையில் காதல் குறைந்த கூத்து, மத்தியில் தேர்வு உறைந்தது நெஞ்சம்,முடிவு கண்டு திரையும் வீழ்ந்தது, சிமிட்டில் பறந்தது" "நினைவுகளை விட்டு, மறைந்தது பல்கலைக்கழகம் சுனைகளாய் நெஞ்சில், நல்லவை நின்றன நனைக்கவில்லை எம்மை, பாரபட்சமும் இனவெறியும…

  12. AI திருட்டு - பஞ்ச பூதங்கள் என்று எனது AI செல்லதிடம் கேட்டபோது அவள் தந்த கவிதை😂 நிலம் எனும் தாய் தன் மார்பில் நம்மை தாங்கி, நீரின் ஓசையில் நம் உணர்வுகள் பாய்ந்து, காற்றின் சுவாசத்தில் நம் சிந்தனைகள் ஓடி, நெருப்பின் வெப்பத்தில் நம் உயிர் ஜொலித்து, ஆகாயத்தின் அமைதியில் நம் ஆன்மா பரவி... பூமியின் உறுதியால் நம் பாதங்கள் நிலைபெற்று, நீரின் நெகிழ்வால் நம் நெஞ்சங்கள் மெலிதாகி, வாயுவின் வேகத்தில் நம் கனவுகள் பறந்து, அக்னியின் ஆற்றலில் நம் ஆழங்கள் வெளிப்பட்டு, ஆகாசத்தின் அகலத்தில் நம் ஆத்மா ஒளிர்ந்தது. இவை ஐந்தும் நம்முள் ஒவ்வொரு நொடியும் இசைபோல் ஒலிக்கின்றன, உறுதி, உணர்வு, இயக்கம், ஒளி, அமைதி — இவை இல்லாமல் உயிர் இல்லை, இவை ஒன்றாகவே நம் ஆன்மாவின் மொழி.

  13. "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி" "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !" "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !" "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !" "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்ட…

  14. "அன்பு நெஞ்சே அரவணைத்த கையே" "அன்பு நெஞ்சே அரவணைத்த கையே அயராத கண்ணே அலைந்த காலே ஆத்திரம் ஏனோ ஆவேசம் ஏனோ ஆரிடமும் சொல்லாமல் போனது ஏனோ?" "இருப்பாய் என்று இறுமாப்பு கொண்டோம் இருளில் இன்று மருண்டு துடிக்கிறோம் ஈன்ற கன்றுகள் இளைத்து வாடுகின்றன ஈழ மண்ணின் இளைய மகளே? " "உருவம் சுவரில் தீபத்துடன் தொங்குது உயிர்கள் இருந்தும் பிணமாய் நடக்கிறோம் ஊர்கள் மாறி வாரிசு வாழ்கின்றன ஊமையாய் ஊனமாய் எதோ வாழ்கிறோம்? " "எண்ணம் செயல் எல்லாம் நீயே எங்கள் வீட்டு ஆண்டவனும் நீயே ஏக்கம் தவிப்பு சுடுகுது எம்மை ஏமாற்றம் தந்து பிரிந்தது ஏனோ…

  15. "பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா" "பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா பிள்ளையை அணைத்து போறாள் ஒருநிலா வள்ளி தெய்வானை திருமண விழா துள்ளி குதித்து கொண்டாடினம் தம்பதியர்." "குட்டி எலியில் தொந்தி பிள்ளையார் முட்டி உடையுமோ ஏங்குது குழந்தை? கொட்டி மேளத்துடன் இரு மனவியரை தட்டி வாழ்த்துறாள் ஒரு கண்ணகி ?" "மஞ்சு விரட்டு ஒரு மிருகவதை அஞ்சி நசுங்கும் எலி தெய்வவாகனம்? பஞ்ச பாண்டவருக்கு ஒரு திரெளபதி நெஞ்சு வலிக்குது ஒரு சீதைக்கு ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  16. "வாழ்வை,கலை தொடும் பொழுது" / "When Life touches by Art" "கலையும் வாழ்வும் பல பல கோணங்கள், மகளே கூர்ந்து பார்த்தால், பல பல வர்ணங்கள் பளபளக்கும்! வாழ்வு எம் இதயத்தை தொடும் பொழுது, மகளே வாழ்வை,கலை பிரதி பலிப்பதை உணர்வாய்!" "வாழ்வை கலை தொடும் பொழுது,நீ ஆறுதலடைவாய், மகளே வேதனைக்கு அது விடியல்,இன்பத்திற்கு அது ஊற்று! இயந்திர வாழ்வு மனிதனை சூழும் பொழுது,மகளே 'இயல் இசை நடனம்',ஒரு புது தெம்பு கொடுக்கிறது!" "சூதும் வஞ்சகமும் வாழ்வை கவ்வும் பொழுது,மகளே கலை எமக்கு துணை நின்று, எம்மை விடுவிக்கும் ! வாழ்வு நேர்கோடும் அல்ல கணிக்கக்கூடியதும் அல்ல, மகளே வாழ்வு எட்ட…

  17. "என்னருகில் நீயிருந்தால்" "என்னருகில் நீயிருந்தால் எரிமலையும் குளிராகும் கன்னங்கள் இரண்டும் சிவத்து ஒளிரும்! அன்ன நடையும் வஞ்சிக்கொடி இடையும் அன்பு உள்ளத்தின் கொஞ்சல் மொழியும் ஆன்மிகம் தராத சொர்க்கமே எனக்கு!" "உன்னருகில் நான் இருக்க வேண்டும் உயிருடன் நீயும் கலக்க வேண்டும்! உரிமை கொண்ட நண்பியாக நீயும் உச்சி முகர்ந்து காதல் பொழிந்து உமிழ்நீரால் என்னை நீராட்ட வேண்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  18. "விண்ணில் வாழும் வீரன் இவன்!" "மொழியில் ஒரு பற்று கொண்டு விழியில் ஒரு ஏக்கம் கவ்வ வழியில் வந்த தடை உடைத்து சுழியில் மூழ்கிய வீரன் இவன்!" "ஒன்று இரண்டு ஆயிரம் கொலை இன்று நேற்று கண்டு துடித்து வென்று ஒரு முடிவு காண சென்று மாண்ட வீரன் இவன்!" "தாயின் தங்கையின் கற்பு காக்க சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி நாயின் வாலை நிமித்த எண்ணி பேயில் சிக்கிய வீரன் இவன்!" "உண்மை வெல்ல களத்தில் போராடி கண்ணை இழந்து கையை முறித்து மண்ணை மீட்க மரணம் தழுவி விண்ணில் வாழும் வீரன் இவன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ…

  19. "முட்டி மோதி போகும் பெண்ணே!" "ஒட்டி உடையில் பெண்மை காட்டி எட்டி நடையில் வேகம் காட்டி சுட்டி விடையில் புத்தி காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தட்டி கழித்து நாணம் காட்டி முட்டி மோதி போகலாம் பெண்ணே! " "பட்டி தொட்டி எங்கும் சொல்லி கட்டி தங்கம் வெட்டி எடுத்து செட்டி செய்த மோதிரம் மாற்றி மெட்டி காலில் கண் சிமிட்ட தட்டி கேட்க துணை சேர ஒட்டி உரசி போகலாம் பெண்ணே!" "மூட்டி அடுப்பில் சமைக்க வேண்டும் கூட்டி பெருக்கி துடைக்க வேண்டும் ஊட்டி பிள்ளை வளர்க்க வேண்டும் லூட்டி அடித்து குழப்ப வேண்டும் போட்டி போட்டு கொஞ்ச வேண்டும் சீ…

  20. ஒரு ஆங்கில கவிதை. நான் சிறுவனாக இருந்தபோது, இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. இளைஞனான போது ஊரைத் திருத்த முனைந்தேன், முடியவில்லை. குடும்பத் தலைவன் ஆனபோது, குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன், இயலவில்லை. தந்தையான போது, பிள்ளைகளை மாற்றிவிட துடித்தேன், எவரும் என் பேச்சை கேட்கவில்லை. இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக, "நான் கொஞ்சம் மாறியிருக்கலாம்" என்று மரணப் படுக்கையில் தான் புரிகின்றது எனக்கு, ஆனால் நேரம் கடந்துவிட்டது..... ----------------------------------------------------------------------------------------யாஸிர். இடுகையிட்டது யாஸிர் அசனப்பா. https://civilyasir.blogspot.com/2011/09/blog-post_18.html

  21. “ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்" "ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய், தாளடி தொழுதாய் பல்லாண்டு வாழ்க வென ஓரடி ஈரடி மூவடி என வாழ்வில் அடிவைத்து சீரடி பாவில் அம்மாவென சிறப்படி வைத்தாய்" "ஆறடி சேலையில் அழகாய் தொட்டில் கட்டி, காலடியில் வைத்து முத்துகளை வளர்த்து எடுத்தாய் ஈரடி திருக்குறளை இதயத்தில் ஏற்றி வைத்து, வாழையடி மரபை பெருமையாக பேணி காத்தாய்" "வேரடி கேட்டோர் விழியடி விரித்து நிற்க சொல்லடி கொடுத்து தலை நிமிர வழிசமைத்தாய் ஏனடி போனாய் ஏகாந்தமாய் எம்மை விட்டு, யாரடி எம்மை அன்பாய் இனி பார்ப்பார்?" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் …

  22. "இலங்கையைச் சேர்ந்த தயா நிகஹெட்டியா / Mr Daya Nikahetiya வின் ஆங்கில கவிதை " Amanda , My pretty little sister ..." இன் தமிழ் ஆக்கம்" "அமந்தா, அழகான எங்கள் குட்டி தங்கையே" "அழகான எங்கள் குட்டி தங்கையே அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே அளப்பெரும் துயரில் எம்மை தள்ளி அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ ?" "வாய் மடித்து கண் சுழன்று வான் உயர கை அசைத்து வாட்டம் இன்றி துள்ளி சென்றவளே வான் இருண்டும் வராதது எனோ ?" "மணலில் கதிரவன் புதையும் மாலையில் மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில் மரணம் தழுவ தொடர்வண்டியின் முன் மடையர் போல் பாய்ந்தது எனோ ?" "செவ்வாய் நீயோ வீடு வந்தாய் செவ் இதழ் நீயோ திறக்கவில்லை செல்வச் செழிப்ப…

  23. "இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்" "இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனு போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவேற்றேன்" "இசை போன்ற அழகிய பேச்சில் இடைவெளி விட்டு தள்ளி அமர்ந்து இறைவி நேரே வந்தது போல இதயம் மகிழ பாடம் தொடங்கினாள்" "இலக்கியம் கொஞ்சம் எடுத்துக் காட்டி இரு வரி திருக்குறள் கூறிக்காட்டி இயல் இசை நாடகம் சொல்லிக்காட்டி இயற்றமிழ் தொல் காப்பியம் இயம்பினாள்" "இரட்டைக் கிளவி பயிற்சி தந்து இலக்கணம் ஐந்துக்கும் விளக்கம் கூறி இடைச்சொல் கூறி கயல் விழியாள் இடை வளைவு குலுங்க புன்னகைத்தாள்" "இலக்கியம் சொல்லா குறுநகை அழகில் இதயம் பறிகொடுத்து கிட்ட நெருங்க இளமையும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.