வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
திரை விமர்சனம்: ஏமாலி மெ ன்பொருள் துறையில் வேலை செய்யும் மாலி என்கிற மாலீஸ்வரனும் (சாம் ஜோன்ஸ்) ரீத்து வும் (அதுல்யா ரவி) காதலர்கள். இவர்கள் காதலில் ஒரு செல்ஃபி சிக்கலை ஏற்படுத்த, காதலைச் சட்டென்று முறித்துக்கொள்கிறார் ரீத்து. இதைப் பொறுக்கமுடியாமல் தன் நண்பர்களுக்கு பிரேக்-அப் பார்ட்டி கொடுக்கிறார் மாலி. பார்ட்டிக்கு வரும் மாலியின் நண்பர்கள் அரவிந்த் (சமுத்திரக்கனி) மற்றும் ராதா கிருஷ்ணன் (பாலசரவணன்) ஆகியோரிடம் புலம்பித் தள்ளும் மாலி, தற்போது வேறு ஒருவனுடன் தனது காதலி பழக ஆரம்பித்துவிட்டதைக் கூறி அவளைக் கொலை செய்யப் போவதாகக் கூறுகிறார். மன அழுத்தத்தால் தவிக்கும் மாலியை மடை மாற்ற, “கொலை செய்வது பெரிய விஷயமில்லை. போலீஸில…
-
- 0 replies
- 563 views
-
-
திரை விமர்சனம்: ஒரு நாள் இரவில் சத்யராஜ் ஒரு குடும்பத் தலை வர். சக கல்லூரி மாணவ னுடன் சகஜமாக பைக்கில் செல்லும் மகளை தவறாகப் புரிந்து கொள்கிறார். மகளின் படிப்பை நிறுத்திவிட்டு திருமணத்துக்கு நாள் குறிக்கிறார். மகள் மீதிருக் கும் கோபத்தில் அன்று இரவு நண்பர்களுடன் மது அருந்துகிறார். எப்போதும் தன்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆட்டோ டிரை வரை அழைத்துக்கொண்டு நகரை வலம் வருகிறார். பேருந்து நிறுத் தத்தில் நின்றுகொண்டிருக்கும் பாலியல் தொழிலாளியை (அனுமோள்) கண்டதும் சபலம் ஏற்படுகிறது. காலியாக இருக்கும் தனது கடைக்கு அவரை அழைத்துவரு கிறார். அது அவரது வீட்டின் காம் பவுண்டை ஒட்டி வரிசையாகக் கட்டப்பட்ட கடைகளில் ஒன்று. அதில் சத்யராஜையும் அன…
-
- 0 replies
- 756 views
-
-
திரை விமர்சனம்: ஒரு நாள் கூத்து மூன்று பெண்களின் திருமண வாழ்க்கை தொடங்குவதற்கு முன் நடக்கும் கூத்துதான் ‘ஒரு நாள் கூத்து’. மென்பொருள் துறையில் வேலை செய்யும் உயர்தட்டு வர்க்கத்துப் பெண் (நிவேதா பெதுராஜ்), பண்பலை வானொலித் தொகுப்பாளராக இருக்கும் நடுத்தர வர்க்கத்துப் பெண் (ரித்விகா), அப்பா, அம்மாவுக்குக் கீழ்ப்படிந்து பொறுமை காக்கும் கிரா மத்துப் பெண் (மியா ஜார்ஜ்) ஆகியோர் தங்கள் திரு மணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மூவ ருக்கும் மூன்று விதமான பிரச்சினைகள். அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்பதுதான் படம். திருமணத்துக்கு முந்தைய பரபரப்புகள், நடை முறைச் சிக்கல்கள…
-
- 1 reply
- 768 views
-
-
இன்றைய வாழ்வு தரும் பார்வை, சுதந்திர உணர்வு ஆகியவற்றால் உறவின் வரையறைகளை மாற்றத் துடிக்கிறது இளைஞர்களின் மனம். இதைப் பற்றிப் பேசும் படமான ‘ஓ காதல் கண்மணி’ கல்யாணம் என்னும் கால்கட்டு இல்லாமலேயே காதல் வளர்ந்து நிலைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆதி (துல்கர் சல்மான்), தாரா (நித்யா மேனன்) இருவரும் தனித்தன்மையை யும் சுதந்திர உணர்வையும் இழக்க விரும்பாத காதலர்கள். முதிய ஜோடியான கணபதி (பிரகாஷ் ராஜ்), பவானி (லீலா சாம்சன்) வீட்டில் தங்கியிருக்கும் துல்கர், அங்கேயே நித்யாவையும் கூட்டிவந்துவிடுகிறார். மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள லீலாவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார் பிரகாஷ் ராஜ். இளம் ஜோடியின் வாழ்வில் ஏற்படும் சலனங்களில் இவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். …
-
- 4 replies
- 2k views
-
-
திரை விமர்சனம்: கடுகு உரிய தருணம் வரும்போது விஸ்வரூபம் எடுக்கும் வாமனனின் கதைதான் ‘கடுகு’. புலி வேஷக் கலைஞரான ராஜ குமாரன், அக்கலை அழிந்துவரு வதால் வறுமையில் வாடுகிறார். தரங்கம்பாடியில் காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்கும் வெங்கடேஷுக்கு உதவியாளராக அவருடன் செல்கிறார். அந்த ஊரில் தன்னால் முடிந்த அளவில் பிற ருக்கு நன்மைகள் செய்து வருகிறார். பரத் அந்த ஊரில் வளரும் அரசியல்வாதி. இளைஞர்களிடை யில் செல்வாக்கு பெற்ற குத்துச் சண்டை வீரர். அந்த ஊருக்கு வரும் அமைச்சர் தவறான நட வடிக்கையில் ஈடுபடுகிறார். அந்தத் தவறின் விளைவுகள் என்ன, அதில் பரத்தின் பங்கு என்ன, ராஜகுமா ரனுக்கும் இதற்கும் என்ன தொ…
-
- 0 replies
- 257 views
-
-
விளைநிலங்களை வேட்டையாடு வது மற்றும் விவசாயத்துக்கு எதிராக நடக்கும் அநீதிகளைப் பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம் ‘கத்துக்குட்டி’ நண்பன் ஜிஞ்சருடன் (சூரி) சேர்ந்து ஊர் வம்பு, அடிதடி என்று சுற்றிவரும் இளைஞன் அறிவழகன் (நரேன்). அம்மாவுக்கு செல்லப் பிள்ளையான, அப்பாவுக்கு அடங்காத பிள்ளையான அவர், தன் பகுதியில் விவசாயம் அழிந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். நாயகி ஸ்ருஷ்டி டாங்கே, பறவைகளை நேசிப் பது, செடிகொடிகள் வளர்ப்பது என்று இயற்கையை நேசிக்கும் கிராமத்து பெண்ணாக வருகிறார். ஒரு மோதலில் ஆரம்பிக்கும் நரேன் - ஸ்ருஷ்டி டாங்கேவின் சந்திப்பு, காலப்போக்கில் காதலாக மாறுகிறது. இந்நிலையில் மீத்தேன் எரிவாயு திட்டத்துக்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை கு…
-
- 0 replies
- 316 views
-
-
திரை விமர்சனம்: களம் ஒரு பழைய ஜமீன் வீட்டை அபகரிக்கும் ரியல் எஸ்டேட் தாதா (மதுசூதன் ராவ்), அமெரிக்கா விலிருந்து திரும்பும் தனது மகனுக்கு (அம்ஜத் கான்) அதைப் பரிசாக அளிக்கிறார். அம்ஜத், தன் மனைவி (லட்சுமி ப்ரியா), பத்து வயது மகள் ஆகியோருடன் அந்த வீட்டில் வசிக்கத் தொடங்குகிறார். அங்கே அமானுஷ்ய சக்திகள் இருப்பதை லட்சுமிப்ரியா உணர்கிறார். முதலில் அதை நம்ப மறுக்கும் அம்ஜத், பிறகு கண்கூடாகக் கண்ட பிறகு அந்த வீட்டிலிருந்து வெளியேற முடிவு செய்கிறார்கள். மந்திர வாதி சீனிவாசனும் கலை யரங்கத்தின் பொறுப்பாளர் பூஜாவும் அவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள். அந்த அமானுஷ்ய சக்திகள் யார்? அம்ஜத் குடும்பத்தால் வெளியேற முடிந்ததா? படத்தின் தி…
-
- 0 replies
- 317 views
-
-
திரை விமர்சனம்: களவாடிய பொழுதுகள் கோவையில் டாக்ஸி ஓட்டும் பிரபுதேவா, விபத்தில் சிக்கும் பிரகாஷ்ராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். மனிதாபிமானத்துடன் தன் உயிரைக் காப்பாற்றியவரைப் பார்க்க விரும்புகிறார் விபத்தில் இருந்து மீண்ட பிரகாஷ்ராஜ். இதற்காக தன் மனைவி பூமிகாவை, பிரபுதேவாவின் குடும்பத்துக்கு உதவிகளைச் செய்துவருமாறு அனுப்புகிறார். ஆனால், பூமிகாவை பார்க்க மறுத்ததோடு, அவர் கொடுத்துவிட்டுச் சென்ற பணத்தையும் திருப்பி அனுப்புகிறார் பிரபுதேவா. அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார்? அவருக்கும், பிரகாஷ்ராஜ் குடும்பத்துக்குமான உறவு என்ன? இவர்கள் மூவரும் நேரில் சந்தித்தார்களா, இல்லையா? ஆகிய கேள்விகளுக்கு உ…
-
- 9 replies
- 1.3k views
-
-
திரை விமர்சனம்: கவண் ஊடக அறத்தையும் உண்மையையும் முக் கியமாக நினைக்கும் இளைஞனுக்கும் தரக்குறைவான சித்து விளையாட்டுகளால் ஊடக நிறுவனத்தை வளர்க்க விரும்பும் முதலாளிக்கும் நடக்கும் மோதல் தான் ‘கவண்’. முன்னணித் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் திலக் (விஜய் சேதுபதி) ஊடக அறத்தோடு செய்திகளை வழங்குகிறார். ஆனால், முதலாளி கல்யாண் (அகாஷ்தீப் சைகல்) அந்தச் செய்திகளைப் பல வாறாகத் திரித்துப் பயன் படுத்திக்கொள்கிறார். அரசியல் வாதி தீரன் மணியரசுவின் (போஸ் வெங்கட்) தொழிற்சாலைக் கழி வால் ஏற்படும் மோசமான பாதிப்பு களுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தையும் தொலைக் காட்சி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.…
-
- 1 reply
- 662 views
-
-
திரை விமர்சனம்: கவலை வேண்டாம் காதல் திருமணம் செய்து கொள்ளும் ஜீவா - காஜல் அகர்வால் ஜோடி, திருமணத்தன்றே பிரிந்து விடுகிறார்கள். சில வருடங்கள் கழித்து பாபி சிம்ஹாவைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிடுகிறார் காஜல். இதற் கிடையில் சுனைனா, ஜீவா வைக் காதலிக்கிறார். இவர்களது வாழ்க்கை என்ன ஆயிற்று என்பதே ‘கவலை வேண்டாம்'. திரைக்கதையைப் பற்றிக் கவலையே வேண்டாம் என்று இயக்குநர் டீகே முடிவுசெய்து விட்டார். மலினமான காமெ டியை அடுத்தடுத்து அரங்கேற்றி னால் போதும் என்ற முடி வுக்கு வந்துவிட்டார். திரைக் கதை, ரசிக்கும்படியான காட்சி கள், கொஞ்சமாவது ஏற்றுக் கொள்ளக்கூடிய திருப்பங்கள், பாத்திர வார்ப…
-
- 0 replies
- 474 views
-
-
சென்னையின் குப்பம் ஒன்றில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தின் இளைய பிள்ளை ‘சின்ன காக்கா முட்டை’ (ரமேஷ்), மூத்த பிள்ளை ‘பெரிய காக்கா முட்டை’ (விக்னேஷ்). அப்பா ஏதோ குற்றத்துக்காகச் சிறை யில் இருக்கிறார். அவரை மீட்டு வரப் போராடுகிறார் அவர்களுடைய அம்மா (ஐஸ்வர்யா). ஒத்தாசையாக இருக்கிறார் பாட்டி (சாந்திமணி). சிறு வர்கள் இருவரும் தண்டவாளங்களின் ஓரங்களில் தவறி விழும் நிலக்கரியைப் பொறுக்கி விற்று ஐந்தோ பத்தோ சம்பாதிக்கிறார்கள். இவர்களது குப் பத்துக்கு அருகே புதிதாக பீட்சா ஹட் ஒன்று உதயமாகிறது. டிவி விளம் பரம் வாயிலாக பீட்சா சாப்பிட ஆசைப் படுகிறார்கள். 300 ரூபாய் பெறுமான பீட்சாவை அவர்கள் வாங்கவோ, சாப்பிடவோ முடிந்ததா என்பதை சுவாரஸ்யமான திரைப்படமாகத் தந்திருக்கிறார் புது இயக்குநர் மணிகண்ட…
-
- 9 replies
- 2.4k views
-
-
திரை விமர்சனம்: காதலும் கடந்து போகும் ‘சூது கவ்வும்’ படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந் திருக்கும் படம், ‘பிரேமம்’ புகழ் மடோனாவின் அறிமுகம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக் கிறது ‘காதலும் கடந்து போகும்’. 2010-ல் வெளியான கொரிய திரைப்படம் ‘மை டியர் டெஸ்பிராடோ’வை அதிகாரபூர்வ மாகத் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் நலன் குமரசாமி. ஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் யாழினி (மடோனா செபாஸ்டியன்). அவர் வேலை பார்க்கும் நிறுவனம் எதிர்பாராத விதமாக இழுத்து மூடப்படுகிறது. தோல்வியுடன் ஊருக்குத் திரும்பிச் செல்லப் பிடிக்கா மல், தன் ஹாஸ்டலை காலிசெய்துவிட்டு, ஒரு சாத…
-
- 0 replies
- 387 views
-
-
சிவதாச சுவாமிகள் (நாசர்) குருவாக இருக்கும் நாடக சபாவில் சிறுவர் களாகச் சேருகிறார்கள் காளியும் (சித்தார்த்) கோமதியும் (ப்ரித்விராஜ்). பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் தமிழ்ப் புராண நாடகங்களை மனப்பாடம் செய்து, கதாபாத்திரங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். பின்னாளில் இவர்கள் காளியப்ப பாகவதராகவும் கோமதி நாயகம் பிள்ளையாகவும் நாடக மேடையில் அடையாளம் காணப்படுகிறார்கள். இந்தக் குழுவில் பாட்டிலும் நடனத்திலும் சிறந்து விளங்கும் வடிவு (வேதிகா) வந்து சேர்கிறார். கோமதி இவள்பால் கவரப்படுகிறார். சித்தார்த் தனது நடிப்பில் பாரம்பரிய வழியைப் புதுமையாக வெளிப்படுத்துகிறார். இதனால் நாசருக்கு சித்தார்த்தை மிகவும் பிடித்துப்போகிறது. பாரம்பரிய முறையை மீறாத ப்ரித்விராஜ், நாசர் தன்னைத் திட்டமிட்டு…
-
- 1 reply
- 925 views
-
-
திரை விமர்சனம்: காஸி நான்கு போர்களைச் சந்தித்துள்ள இந்தியாவில் போர் குறித்த படங்கள் மிகவும் குறைவு. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது சங்கல்ப் ரெட்டி இயக்கியுள்ள ‘காஸி’ முக்கியத்துவம் பெறுகிறது. 1971-ம் ஆண்டு நடந்த போருக்கு முந்தைய காலகட்டம். கிழக்கு பாகிஸ் தானில் நடக்கும் மக்கள் போராட்டத்தின் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான ஒடுக்குதலை நிகழ்த்துகிறது. எந்த நேரமும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல். இந்தச் சமயத்தில் இந்தியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் பாகிஸ்தான் அதிரடித் தாக்குதல் நடத்தவிருக்கிறது என்னும் செய்தி கடலோரக் காவல் படைக்குக் கிடைக்கிறது. பாகிஸ்தானின் திட்டத்தைக் கண்டறிந்து அதை …
-
- 0 replies
- 302 views
-
-
திரை விமர்சனம்: கிடாரி துரோகம் ஒருவனது ரத்தத்தில் கலந்து ஓடினால் அதன் விளைவு என்னவாக மாறும்? அதுதான் இந்த ‘கிடாரி’. கவுரவத்துக்காகப் பஞ்சாயத்து, மிரட்டல் என்று திரிகிறார் பெரியவர் கொம்பையா பாண்டியன் (வேல.ராமமூர்த்தி). அவருக்கு வலது கையாக, கிட்டத்தட்ட ஒரு மகனாகவும் இருக்கிறார் கிடாரி (சசிகுமார்). ஆட்டுச் சந்தை, ரைஸ் மில் என்று தன் கவுரவத்துக்காகப் பஞ்சாயத்து, அடிதடியில் இறங்கி ரத்தம் பார்த்து ஊரில் பெரும் பகையைச் சேர்த்து வைத்திருக்கிறார் கொம்பையா பாண்டியன். இந்நிலையில், வேல.ராமமூர்த் தியை, அடையாளம் தெரியாதவர்கள் கழுத்தில் வெட்டிவிடுகிறார்கள். ஊரில் பதற்றம் பீறிட, அவரை வெட்டியது யார் என்பதை ந…
-
- 0 replies
- 348 views
-
-
காவல் துறையின் பச்சோந்தித் தனத்தைத் தோலுரித்துக் காடும் படம் கிருமி. கதிர் (‘மதயானைக் கூட்டம்’ கதிர்) வேலை யில்லாத, ஆனால் மணமாகிக் குழந்தை யுள்ள இளைஞன். வீட்டுக்கு எப்போதா வது வரும் அவன் நண்பர்களுடன் அறையில் தங்கிப் பொழுதைப் போக்குகிறான். குடி, சீட்டாட்டம் என நகர்கிறது அவன் வாழ்க்கை. போலீஸ் இன்ஃபார்மர் பிரபாகரன் (சார்லி) கதிர் மீது பிரியம் கொண்டவர். கதிரும் பிரபாகரன் உதவியுடன் போலீஸ் இன்ஃபார்மராக மாறுகிறான். இது பொருளாதார ரீதியாக அவனை உயர்த்துகிறது. ஆனால் முன்னெச் சரிக்கையின்றி அவன் செய்யும் சில காரியங்கள் அவனைச் சிக்கலில் மாட்டி விடுகின்றன. காவல் துறை ஆய்வாளர் கள் இருவருக்கு நடுவே நடக்கும் பனிப் போரிலும் அவன் மாட்டிக்கொள் கிறான். இந்தச் சிக்கல்களிலிருந்து அவன் தப்பித்தா…
-
- 1 reply
- 513 views
- 1 follower
-
-
திரை விமர்சனம்: குற்றமே தண்டனை விதார்த்துக்கு கண்ணில் பிரச்சினை. அவரது பார்வை வீச்சின் சுற்றளவு மிகவும் குறைவு. குழாய் வழியாகப் பார்ப்பதைப்போலதான் (Tunnel Vision) அவரால் பார்க்க முடியும். பக்கவாட்டுக் காட்சிகள் தெரியாது. படிப்படியாக அந்தப் பார்வைத் திறனும் மறைந்துவிடும், கண் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது மட்டுமே தீர்வாக இருக்கும் என்கிறார் மருத்துவர். இதற்கு அவரது வருமானத்துக்கு மீறிய பெரும் தொகை தேவைப்படுகிறது. விதார்த் வசிக்கும் வீட்டின் கீழ்தளத்தில் வசிக்கிறார் ஐஸ்வர்யா. அவரது வீட்டுக்கு ரஹ்மானும் மற்றொரு இளைஞரும் அவ்வப் போது வந்து போகின்றனர். திடீரென ஒரு நாள் ஐஸ்வர்யா கொலை செய்யப்படுகிறார். அதன் பின்பு என்ன…
-
- 0 replies
- 365 views
-
-
திரை விமர்சனம்: குற்றம் 23 செயற்கைக் கருத்தரிப்புக்குப் பின் னால் நடக்கும் முறைகேடுகளை மையமாகக் கொண்ட கிரைம் த்ரில்லர்தான் குற்றம் 23. பாவ மன்னிப்பு அளிக்கும் பாதிரியார் மர்மமான முறையில் தேவாலயத்தில் இறக்கிறார். அதே நேரத்தில் பாவ மன்னிப்பு கேட்டு அங்கே வரும் ஒரு பெண் காணாமல் போகிறார். இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்ற நோக்கில் உதவி ஆணையர் வெற்றிமாறன் (அருண் விஜய்) விசாரணையில் இறங்குகிறார். சம்பவம் நடக்கும்போது தேவாலயத்துக்குச் சென்ற தென்றல் (மஹிமா) முதலான சிலர் கூறும் தக வல்களை வைத்துக்கொண்டு விசார ணையை முன்னெடுக்கிறார். கருவுற்ற பெண்கள் சிலர…
-
- 5 replies
- 518 views
-
-
எந்தக் கதாபாத்திரத்தையும் மையப் படுத்தாமல் ஒரு சம்பவத்தை அல்லது பிரச்சினையை மையப் படுத்தும் படங்களின் வகையைச் சேர்ந்தது பிரம்மாவின் இயக்கத்தில் வந்துள்ள ‘குற்றம் கடிதல்’. யதார்த்தத்தைச் சமரசம் செய்துகொள்ளாமல் விறுவிறுப்பாக இதைக் கையாண்டுள்ள பிரம்மாவின் முயற்சி பாராட்டத்தக்கது. லாரியில் பயணம் செய்யும் அந்த இளம் ஜோடியின் முகத்தில் பெரும் கலவரம். குறிப்பாக அந்தப் பெண்ணின் முகத்தில். அதற்கான காரணத்தைச் சொல்வதாக விரிகிறது படம். தனியார் பள்ளியொன்றில் ஆசிரியை யாகப் பணியாற்றுபவர் மெர்லின் (ராதிகா பிரசித்தா). திருமண விடுப்பு முடிந்து பள்ளிக்குச் செல்கிறார். சக ஆசிரியையின் வேண்டுகோளை ஏற்று அவரது வகுப்பை கவனித்துக்கொள்ளச் செல்கிறார். அங்கே மெர்லின் செய்யும் ஒரு சிறு தவறு ஒரு பையனை…
-
- 2 replies
- 601 views
-
-
திரை விமர்சனம்: கோடை மழை பாரம்பரியமான திருட்டுத் தொழில் மிச்சமிருக்கும் கிராமம் ஒன்றின் முகத் தைக் குறைவான ஒப்பனையுடன் நமக்குக் காட்ட முயற்சிக்கிறார் அறிமுக இயக்குநர் கதிரவன் பல தலைமுறைகளைப் பின் தொடர்ந்த திருட்டுத் தொழிலில் ஒரு சிலர் மட்டும் ஆர்வம் காட்டிவரும் கிராமம் அது. அங்கே நேர்மையாகவும் கவுரவமாகவும் வாழ்கின்றன பல குடும்பங்கள். அந்த ஊரின் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார் உள்ளூர்வாசியான களஞ்சியம். அவரது தங்கையான ஸ்ரீப்ரியங் காவைக் கண்டதும் காதலிக்கிறார் ராணுவ வீரரான கண்ணன். விடுமுறையில் ஊருக்கு வந் தால் நண்பன் பொடுங்குதான் அவரது உலகம். பொடுங்குவோ கண்ணனுக்குத் தெரியாமல் திருட்டுத் தொழிலைச் செய்து வருகிறான…
-
- 0 replies
- 282 views
-
-
இரண்டு ஊர்களுக்கிடையே இருக்கும் பகை, ஒரு சிலரின் சுயநலத்தால் குடிநீருக்கு வரும் சோதனை ஆகியவற்றோடு, ஒரு காதல் கதையை இணைத்துச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சற்குணம். தஞ்சை மாவட்டத்தில் அருகருகே உள்ள இரண்டு கிராமங்கள்தான் கதைக் களம். சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் பொறுப் பில்லாத இளைஞர் அதர்வா, இங்கேயும் அப்படியே இருக்கிறார். பிழைக்கும் வழி யைப் பார்ப்பதைவிட, அந்த ஊரில் ரைஸ் மில் நடத்தும் லாலின் மகள் ஆனந்தியைக் காதலிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆனந்தியும் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டுகிறார். இந்த நேரத் தில்தான் பக்கத்து ஊர் மக்களின் குடிநீர் பிரச்சினை எந்தளவுக்கு அவர்களை பாதித்து இருக்கிறது என்பதையும், அதற்கு முக்கியக் காரணம் தன் காதலியின் தந்தை லால் கொண்டிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
திரை விமர்சனம்: சதுரம் 2 சதுர வடிவிலான ஓர் அறை. அதில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட 2 பேர். இருவரில் ஒருவர் ஒளிப்படக்காரர் (ரியாஸ்). உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் அந்தரங்கப் பக்கங்களை மறைமுகமாகப் படம் எடுத்துக்கொடுத்து பணம் பார்க்கும் இளைஞர். இரண்டா வது நபர் குடும்பத்தின் மீது பாசம் கொண்ட மருத்துவர் (யோக் ஜபீ). ஆனால் தனது சபலத்தால் சக ஊழியரிடம் சிக்கிக் கொண்டிருப்பவர். இவர்களுக்கு மத்தியில் ஒரு பிணம். இந்த இருவரையும் அடைத்து வைத்தது யார்? பிணமாகிக் கிடக்கும் மனிதர் யார்? இவர்கள் இருவரும் தப்பித்துச் செல்ல முடிந்ததா? ‘SAW’ என்ற ஆங்கில ஹாரர் படத்தின் பாதிப்பில் உருவான படம் என்பதை நேர்மையாகச் சொல்லிவிட்டே படத்தைத் தொடங்கு…
-
- 0 replies
- 304 views
-
-
நேற்று இந்த திரைப்படத்தை பார்த்தேன். மிக நல்ல படம். உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் கண்களில் கண்ணீரை சில கட்டங்கள் வரவழைக்காமல் விடாது. சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை தினம்தோறும் வரும் செய்திகளாக மாறிவிட்ட காலத்தில் இப்படியான காத்திரமான படங்கள் வருவது நல்ல விடயம். வாய்ப்புக் கிடைத்தால், பிள்ளைகளுடன் சேர்ந்து பாருங்கள் ------------------------------------- திரை விமர்சனம்: சித்தா பழநியில் துப்புரவு ஆய்வாளராக இருக்கும் ஈஸ்வரன் (சித்தார்த்), அண்ணி (அஞ்சலி நாயர்), அண்ணன் மகள் சுந்தரி (சஹஸ்ர ஸ்ரீ) ஆகியோருடன் வாழ்கிறார். சுந்தரி மீது உயிரையே வைத்திருக்கிறார். காவல்துறையில் பணியாற்றும் தன் நண்பன் வடிவேலுவின் அக்கா மகளும் சுந்தரிய…
-
- 18 replies
- 1.8k views
-
-
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் கட்டுமானக் களம் அது. ஒரு அசம்பாவிதத்தால் பலர் வேலையை விட்டு போய்விட, புதிதாக ஆட்களைத் தேட வேண்டிய நெருக்கடி அதன் பொறுப்பாளர் கோனாருக்கு (ராஜ்கிரண்) ஏற்படுகிறது. இலங்கை அகதிகள் முகாமில் இருந்து ஆஸ்தி ரேலியா தப்பிச் செல்ல முனையும் ஈழத் தமிழர் கள் அவரது கண்ணில்படுகின்றனர். ஆஸ்தி ரேலியாவுக்குப் பத்திரமாக அனுப்பிவைப்பதாக உறுதியளித்து அவர்களை வைத்து வேலை யைத் தொடர்கிறார். பணியிடத்தில், இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக் கும் தமிழக கட்டுமானத் தொழிலாளிக்கும் காதல் ஏற்படுகிறது. தேர்தல் நெருங்குவதன் காரணமாக ஏற்படும் அரசியல் நெருக்கடிகளால் அகதிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் என்ன ஆனார்கள், காதல் கைகூடியதா என்பதே சத்யசிவா இயக்கத்தில் வந்துள்ள…
-
- 0 replies
- 247 views
-
-
திரை விமர்சனம்: சுல்தான் சல்மான் கானும், அனுஷ்கா ஷர்மாவும் மல்யுத்த வீரர்களாக நடிக்கிறார்கள் என்பதாலேயே ரசிகர்களிடம் ‘சுல்தான்’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. அத்துடன், ‘ரேப்’என்ற புண்படுத்தும் ஒப்பீட்டை வைத்து சல்மான் கான் வெளியிட்ட குறித்த சல்மானின் மோசமான கருத்துகளும் படத்துக்கு சர்ச்சைக்குரிய விளம்பரமாக அமைந்திருந்தன. ‘மேரி பிரதர் கி துல்ஹன்’, ‘குண்டே’ போன்ற படங்களைக் கொடுத்த இயக்குநர் அலி அப்பாஸ் ஜஃபர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஆகாஷ் ஓபராய் (அமித் சத்) ‘புரோ டேக் டவுன்’ என்ற மிக்ஸ்டு மார்ஷியல் லீகை இந்தியாவில் பிரபலப்படுத்தும் கனவில் இருக்கும் இளம் விளம்பரதாரர். ஆனால், பல்வேறு காரணங்களால்…
-
- 0 replies
- 250 views
-