வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
திரை விமர்சனம்: மருது சிறு வயதில் பெற்றோரை இழந்து விடும் விஷால், பாட்டியின் நிழலில் வளர்ந்து ஆளாகிறார். பாட்டி கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டார். பாட்டி பக்கத்து ஊர் பெண்ணான திவ்யாவைக் காட்டி அவளைக் காதலித்து கல்யாணம் செய்துகொள்ளத் தூண்டுகிறார். உள்ளூர் அரசியலில் தவறான வழியில் வளர்ந்துவரும் ரவுடி ஆர்.கே.சுரேஷ், திவ்யாவின் குடும்பத்தை அழிக்கத் துடிக்கிறார். ஏன் அப்படித் துடிக்கிறார், திவ்யாவின் குடும்பத்தை விஷால் எப்படிக் காப்பாற்றுகிறார், இதில் பாட்டியின் பங்கு என்ன என்பதற்கெல்லாம் விறுவிறுப் பாகப் பதில் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் முத்தையா. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முந்தைய கதை. திரைக்கத…
-
- 0 replies
- 621 views
-
-
தாதா சினிமாக்களுக்கான ஆகி வந்த களமான சென்னையின் நெருக்கடியான பகுதிதான் கதைக்களம். அங்கே மாமூல் வசூல் செய்யும் குட்டி தாதா மாரி (தனுஷ்). ரவுடியிசம் தவிர புறா பந்தயத்தில் அவருக்கு ஆர்வம் உண்டு. அந்தப் பகுதியில் நடக்கும் புறா பந்தயங் களை நடத்துவதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மாரியின் இடத் துக்கு வரவேண்டும் என்று காய்களை நகர்த்துகிறார் மற்றொரு ரவுடியான பறவை ரவி (மைம் கோபி). அந்தப் பகுதியின் காவல்நிலையத்துக்குப் புதிய இன்ஸ்பெக்டராக வரும் அர்ஜுன் (விஜய் யேசுதாஸ்) ஒரு கெட்ட போலீஸ் என்பதை அறிந்து அவருடன் கூட்டணி அமைக்கிறார். அர்ஜுன் திட்டமிட்டு மாரியை ஜெயி லுக்கு அனுப்புகிறார். மாரி இல்லாத வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவரது மாமூல் வசூல், புறாப் பந்தயம் இரண்டையும…
-
- 0 replies
- 459 views
-
-
திரை விமர்சனம்: மாவீரன் கிட்டு இயக்குநர் சுசீந்திரனும், விஷ்ணு விஷாலும் இணைந்திருக்கும் 3-வது திரைப்படம் இது. கிரிக்கெட் விளை யாட்டில் இருக்கும் சாதி அரசியலை ‘ஜீவா’ திரைப்படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருந்த சுசீந்திரன், இத்திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தைப் பற்றி பேசியிருக்கிறார். புதூர் என்ற கிராமத்தில் 1980-களில் நடக்கும் சாதியப் பாகுபாடுகளைப் பின்னணி யாக வைத்து இந்தப் படம் பயணிக்கிறது. ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் தெருவின் வழியே ஒடுக்கப்பட்ட மக்களில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் இருக்கும் அவலத்தைக் காட்டும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. தொடர்ந்து சாதிப் பிரச்சினை…
-
- 1 reply
- 482 views
-
-
திரை விமர்சனம்: மீண்டும் ஒரு காதல் கதை பேய்ப் படங்களின் பிடியில் இருக்கும் கோடம் பாக்கத்தில் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையைச் சொல்ல முனைகிறது இயக்குநர் மித்ரன் ஜவஹரின் ‘மீண்டும் ஒரு காதல் கதை’. துடுக்குத்தனமும் சேட்டைகளு மாக உலா வரும் நாயகன் வால்டர் பிலிப்ஸ் (வினோத்), கல்லூரியில் படிக்கிறார். நண்பரின் திருமணத்தில் நாயகி இஷா தல்வாரைப் (ஆயிஷா) பார்த்ததும் அவர் அழகில் மயங்கிக் காதலில் விழுகிறார். ஆயிஷாவின் குடும்பம் மிகவும் கட்டுப்பாடான இஸ்லாமியக் குடும்பம். கட்டுப்பாடுகளை மீறி வினோத்தும் ஆயிஷாவும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் ‘மீண்டும் ஒரு காதல் கதை’. தலைப்புக்கு ஏற்றபடி பல முறை பார்த்த கதையையே மீண்ட…
-
- 0 replies
- 310 views
-
-
திரை விமர்சனம்: மீன் குழம்பும் மண் பானையும் மகனைப் பிரசவித்துவிட்டு இறந்துபோகிறார் அண்ணாமலையின் (பிரபு) மனைவி. கைக்குழந்தையுடன் மலேசியாவுக்குப் புலம்பெயரும் அவர், அங்கே மீன் குழம்பும் மண் பானையும் என்ற பாரம்பரிய உணவகம் நடத்திப் பணக்காரர் ஆகிறார். மகனை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக் கும் அவரின் தியாகத்தை அறியாதவர் அவரது மகன் கார்த்திக் (அறிமுகம் காளிதாஸ்). கல்லூரியில் பயிலும் இவருக்கு சக மாணவி பவித்ரா (ஆஷ்னா சாவேரி) மீது காதல். காதலில் ஏற்படும் சிக்க லால் அப்பாவுக்கும் மகனுக் கும் இடையே பிரச்சினை. ஒரு வரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் அவர் களுக்கு வழிகாட்டுகிறார் வெள் ளுடை மகான் (கமல்). அவர் களுடைய ஆத்…
-
- 0 replies
- 303 views
-
-
திரை விமர்சனம்: முப்பரிமாணம் சாதி, மதம், அந்தஸ்து போன்ற வற்றால் காதல் தோல்வி யைச் சந்திப்பது உண்டு. இந்தப் படத்தில் அந்தக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒரு பரிமாணம் என்று சொல்லும் இயக்குநர், அந்தப் பரிமாணத்தையே ‘முப்பரிமாண’த்தின் ஆதாரமாக்கியிருக்கிறார். கல்யாண மண்டபத்தில் மணப் பெண்ணைக் கடத்துவதில் இருந்து தொடங்கும் படம், கடத்தலின் பின்னணியைச் சொல்ல, பழைய நிகழ்வுகளை அசைபோடத் தொடங்கு கிறது. கதிரும் அனுஷாவும் அக்கம்பக் கத்து வீட்டுச் சிறார்கள். பிள்ளைக் காதலுடன் பிரிந்துபோகும் இவர்கள், பெரியவர்கள் ஆனதும் (சாந்தனு - சிருஷ்டி) மீண்டும் சந்திக்கிறார்கள். அப்போதும் அவர்களது…
-
- 0 replies
- 245 views
-
-
திரை விமர்சனம்: மோ முன்னாள் எம்எல்ஏ செந்தில்நாதனுக்கும் (மைம் கோபி), ரியல் எஸ்டேட் அதிபர் வெற்றிவேலுக்கும் தொழில் போட்டி. செந்தில்நாதன் எந்த சொத்தையும் வாங்குவதற்கு முன்பு அங்கு காத்து, கறுப்பு, பேய், பிசாசு இருக்கிறதா என்று மந்திரவாதியை வைத்துப் பார்த்துவிட்டுத்தான் வாங்குவார். பாழடைந்து கிடக்கும் பள்ளிக்கூடம் ஒன்று விலைக்கு வருகிறது. அதையும் வாங்க விரும்புகிறார் செந்தில்நாதன். அங்கு பேய் இருப்பதாக அவரை நம்பவைக்க வேண்டும் என்று வெற்றிவேல் திட்டமிடுகிறார். அந்தப் பொறுப்பை 5 பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கிறார். பேய் ஓட்டுதல் உள்ளிட்ட பல பித்தலாட்ட வேலைகளுக்குப் பேர் போன அவர்கள் பேய் நாட கத்தை அர…
-
- 0 replies
- 520 views
-
-
திரை விமர்சனம்: யானும் தீயவன் திரைப்படம் யானும் தீயவன் நடிகர்கள் அஸ்வின் ஜெரோம், வர்ஷா, ராஜு சுந்தரம், பொன் வண்ணன், சந்தான பாரதி, விடிவி கணேஷ், மதுமிதா இசை அச்சு ஒளிப்பதிவு; இயக்கம்: பிரசாந்த் ஜி சேகர். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா;பிரசாந்த் ஜி சேகர். புதிய இயக்குனர், அறிமுக நாயகன், புதிய தயாரிப்பாளர் என்றவுடன் பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் சென்றால்கூட சற்று ஏமாற்றத்தைத் தரும் படம். …
-
- 1 reply
- 766 views
-
-
திரை விமர்சனம்: ரூபாய் நாயகன் சந்திரனும், நண்பன் கிஷோர் ரவிச்சந்திரனும் டெம்போ வேனில் லோடு அடிப்பவர்கள். தேனியில் காய்கறி லோடு ஏற்றி சென்னை கோயம்பேடில் இறக்குகிறார்கள். அதற்கான கூலியை வைத்து டெம்போ வேனின் கடன் தவணையான ரூ.18 ஆயிரத்தை அடைக்க திட்டமிடுகிறார்கள். பணம் போதாததால், சென்னைக்குள் ஒருமுறை சவாரி அடிக்கிறார்கள். இந்தச் சூழலில், கடன் தொல்லை காரணமாக வீட்டை மாற்றும் சின்னி ஜெயந்த் மற்றும் அவரது மகள் ஆனந்தியின் அறிமுகம் கிடைக்கிறது. அவர்களிடம் வாடகை பேசி, வேனில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வீடு தேடுகிறார்கள். ஆனந்தியைப் பார்த்ததும் சந்திரனுக்கு காதல் தொற்றிக்கொள்கிறது. இதற்கிடையே, தனியார் நிதி நிறுவனத்தில் பெ…
-
- 0 replies
- 331 views
-
-
திரை விமர்சனம்: ரெமோ ஒரு இளைஞன், ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிக்கவைக்கும் அதே கதைதான். நாயகனின் பெண் வேடமும் காதலுக்கு உதவுகிறது என்பது ‘ரெமோ’ காட்டும் வித்தியாசம். நாயகன் சிவா (சிவகார்த்திகேயன்), பெரிய நடிகனாகும் கனவுகளுடன் இருக்கும் வெட்டி ஆபீஸர். காவ்யா (கீர்த்தி சுரேஷ்) தனியார் மருத்துவமனையில் டாக்டர். சிவாவுக்கு கீர்த்தியைப் பார்த்ததும் (வழக்கம்போல) காதல் பற்றிக்கொள்கிறது. ஆனால், அவருக்கு நிச்சயம் ஆகிவிட்டது தெரிந்ததும் நொந்துபோகிறார். நடிப்புக்கான தேர்வுக்காக சிவா பெண் வேடமிட வேண்டியிருக்கிறது. நர்ஸாக வேடமிட்டிருக்கையில் தற்செயலாகச் சந்திக்கும் கீர்த்தியுடன் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பைப் பயன…
-
- 0 replies
- 342 views
-
-
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக் (ஜெயம் ரவி) ஜிம் பயிற்சியாளர். பணக்காரனைக் காதலித்து வசதியாக வாழவேண்டும் என்று நினைக்கும் விமானப் பணிப்பெண் ஐஸ்வர்யா (ஹன்சிகா). பணக்காரர் என்று நினைத்து கார்த்திக்கை காதலிக்கிறார். உண்மை தெரியும்போது பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி, காதலை முறித்துக்கொள்கிறார். உண்மையாகக் காதலித்த கார்த்திக்கால் அதுபோல உதறித் தள்ள முடியவில்லை. ஐஸ்வர்யா எதிர்பார்த்ததுபோல பணக்காரத் தொழிலதிபர் அர்ஜுனுடன் (வம்சி கிருஷ்ணா) அவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. தன் காதலை இழக்க விரும்பாத கார்த்திக், காதலியை மீட்க வித்தியாசமான உத்தியைக் கையாள்கிறார். அது அவருக்கு கைகொடுத்ததா, இல்லையா என்பது படத்தின் கதை. காதலை முடிவு செய்வதில் பணம், அந்தஸ்துக்கு பங்கிருக்கிற…
-
- 4 replies
- 681 views
-
-
திரை விமர்சனம்: றெக்க மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் சேதுபதி, முதல் முறையாக மசாலா தூக்கலாக உள்ள ஒரு கதையைத் தேர்ந்தெடுத் திருக்கிறார். மசாலா படங்களுக்கெனவே ஆகி வந்த 2 வில்லன்களின் பகையோடு கதை தொடங்குகிறது. டேவிட் (ஹரிஷ் உத்தமன்) - செழியன் (கபீர் சிங்) இடையே தொழில் பகை. காதலர்களைச் சேர்த்துவைக்கும் சிவா (விஜய் சேதுபதி) இவர்களுக்கு இடையில் வருகிறார். எதிர்பாராத சூழ்நிலையில் டேவிட்டிடம் சிக்கிக் கொள்ளும் சிவா, அதிலிருந்து மீள, அவனுக்காக அமைச்சரின் மகள் அஞ்சலியை (லட்சுமி மேனன்) கடத்திக் கொண்டு வர ஒப்புக்கொள்கிறார். அவரால் கடத்தி வரமுடிந்ததா, காதலர்களைச் சேர்த்துவைக்க அவர் காட்டும் ஆர்வத்தின் பின்னணி என…
-
- 0 replies
- 443 views
-
-
கணினித் திரை முன்பு அமர்ந்திருக்கும் அந்த இளைஞன் ஆடை எதையும் அணிந்திருக்கவில்லை. மறுமுனையில் அவனோடு ‘அரட்டை’அடிக்கும் பெண்ணும் அதேபோலவே திரையில் தோன்றும் கணத்துக்காகக் காத்திருக்கிறான். அதிரவைக்கும் இந்தத் தொடக்கமே புதுமுக இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணனின் ‘லென்ஸ்’ படத்தின் தீவிரத் தன்மையை உணர்த்திவிடுகிறது. மெய்நிகர் உலகில் நிலவும் வக்கிரங்களையும் அவற்றின் விபரீதமான விளைவுகளையும் பொட்டில் அறைந்ததுபோலச் சொல்கிறது ‘லென்ஸ்’. இளமையும் அழகும் கொண்ட மனை வியை அலட்சியப்படுத்திவிட்டு, இணையத் தில் தன் வக்கிரங்களுக்கு வடிகால் தேடும் அரவிந்த் (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்), ஒருநாள் அதேபோன்ற ஒரு அனுபவத்துக் காகக் காத்திருக்கும்போது, புதிய பெண்ணின் நட்பு கிடைக்கி…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஆண்களின் நட்பு திருமணத்துக்குப் பிறகும் தொடர்வது சாத்தியமா? நட்புக்கும் திருமண / காதல் வாழ்க் கைக்கும் இருக்கும் முரண்களைத் தீர்க்கவே முடியாதா? இந்தக் கேள்விக் கான பதில்தான் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. வாசுவும் (சந்தானம்) சரவணனும் (ஆர்யா) பால்யம் முதலே நண்பர்கள். இருவரில் வாசுவுக்குக் கல்யாணம் நடக்கிறது. சரவணன் செய்யும் முட்டாள் தனமான குறும்புகளால் வாசுவின் மனைவி செல்லம்மா (பானு) எரிச்சல் அடைகிறாள். சரவணனுடனான நட்பை வெட்டிவிட்டு வந்தால்தான் தாம்பத்திய வாழ்க்கை என்கிறாள் செல்லம்மா. சரவணனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பது வாசுவின் கணக்கு. சரவணன் ஐஸ்வர்யாவைக் (தமன்னா) கண்டதுமே காதலில் விழுகிறான். ஆனால் ஐஸ்வர்யா, சரவணனைப் பிடிக்…
-
- 0 replies
- 1.4k views
-
-
திரை விமர்சனம்: விசாரணை ஆந்திரப்பிரதேசம், குண்டூரில் சில் லறை வேலைகள் செய்து பிழைக் கிறார்கள் தமிழ் இளைஞர்களான பாண்டியும் (தினேஷ்) அவனது மூன்று நண்பர்களும். வாடகை வீடு எடுத்துத் தங்கும் அளவுக்கு வருமானம் இல்லாத அவர்கள், ஊரின் பொதுப் பூங்காவில் தங்கியிருக்கிறார்கள். அவர்களைக் கைதுசெய்து லாக்அப்பில் அடைக்கும் உள்ளூர் போலீஸ், அவர்கள் செய்யாத குற்றத்தைச் சுமத்தி அதை ஏற்றுக்கொள்ளச் சித்திரவதைகள் மூலம் நிர்ப்பந்திக்கிறது. இறுதியாக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படும் அவர்களுக்குத் தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதே நீதிமன்றத் தில் சரணடைய வரும் பிரபல அரசியல் தரகரான கே.கே-வை (கிஷோர்) கைது செய்ய வரும் தமிழகக் காவல் அதிகாரியான முத்…
-
- 0 replies
- 432 views
-
-
திரை விமர்சனம்: வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் காவல் துறை வேலையை லட்சியமாகக் கொண்ட நிக்கி கல்ரானி, காத லிக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் பணத் தைத் தொலைத்துவிட்டு அல்லா டும் விஷ்ணு விஷால், இரு வருக்கும் இடையில் ஏற்படும் காதல், உள்ளூர் எம்.எல்.ஏ. நடத்தும் இலவசத் திருமண நிகழ்ச்சியில் ஒரு ஜோடி குறைந்ததால் நடிப்புத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ளும் சூரிக்கு ஏற்படும் அவஸ்தைகள்... இவை ஒரு புறம். நெடு நாட்கள் கோமாவில் இருந்து இறந்துபோகும் ஒரு அமைச்சர் சேர்த்துவைத்திருக்கும் 500 கோடி ரூபாய் குறித்த ரகசியம் எம்.எல்.ஏ. ‘ஜாக்கெட்’ ஜானகிராமனுக்கு (ரோபோ சங்கர்) மட்டும்தான் தெரியும். அவரோ விபத்தில் சிக்கிப் பத்து…
-
- 1 reply
- 440 views
-
-
திரை விமர்சனம்: வைகை எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து மதுரைக் குச் செல்லும் வைகை எக்ஸ்பிரஸின் ஏ.சி. வகுப் புப் பெட்டியில் அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொல் லப்படுகிறார்கள். இன்னொரு இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது. கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ரயில்வே புலன் விசாரணை அதி காரியான ஆர்.கே.விடம் ஒப் படைக்கப்படுகிறது. கொலைகள் நடந்த பெட்டியில் பயணம் செய்த தீவிரவாதியைக் (ஆர்.கே. செல்வ மணி) கைதுசெய்து விசாரணை யைத் தொடங்கும் ஆர்.கே.வால் தனது குழுவின் உதவியுடன் குற்ற வாளியை நெருங்க முடிந்ததா, இல்லையா என்பதுதான் கதை. கொலை செய்யப்பட்ட பெண்களின் குடும்பப் பின்னணி, அவர்களைச் சுற்றி நிகழும் …
-
- 0 replies
- 428 views
-
-
திரை விமர்சனம்: ஹலோ நான் பேய் பேசுறேன் நூதனமான முறைகளில் திருட்டுத் தொழில் செய்துவரும் அமுதன் (வைபவ்) கவிதாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) காதலிக்கிறார். ஐஸ்வர்யாவின் அண்ணன் விடிவி கணேஷ், குப்பத்தில் சாவுக் குத்து நடனம் கற்றுத்தருகிறார். குத்து நடனத்தில் தான் வைக்கும் சோதனையில் வென்றால்தான் தன் தங்கையை வைபவுக்குக் கல்யாணம் செய்து தருவேன் என்கிறார். சோதனையில் வென்று காதலுக்கு அனுமதி பெற்ற சந்தோஷத்தில் வளைய வரும் வைபவ், சாலையில் விழுந்து கிடக் கும் ஒரு செல்போனைத் திருடிக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். அந்த செல்போனில் இருந்து பேய் (ஓவியா) கிளம்புகிறது. வைபவ், கணேஷ், ஐஸ்வர்யா ஆகியோர் பேயிடம் மாட்டிக்கொண்டு அல்லாடு கிறார்கள். பேய் ஐஸ்வர்…
-
- 0 replies
- 395 views
-
-
திரை வெளிச்சம்: கதாநாயகனிடம் தப்பித்து... ‘கா’ படத்தில் ஆண்ட்ரியா கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! ஆண்களின் கைப்பாவையாக இருக்கும் தமிழ் சினிமாவில் அங்கொங்கொன்றும் இங்கொன்றுமாக முகம் காட்டி வந்த பெண் மையப் படங்கள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. முதல் பெண் கதாசிரியர், முதல் பெண் இயக்குநர், முதல் பாடலாசிரியர், முதல் ஒளிப்பதிவாளர் என்று கோடம்பாக்கத்தின் சினிமா வரலாற்றில் விரல்விட்டு சுட்டிக்காட்டப்படும் அளவிலேயே சுருக்கப்பட்ட பெண்கள், நடிப்பு என்று வருகிறபோது கதாநாயக பிம்பத்தைக் காப்பாற்றும் கறிவேப்பிலைக் கதாபாத்திரங்களில் மட்டுமே அதிகமும் எடுத்தாளப்பட்டிருக்கிறார்கள். கதாநாயகனுக்காக ஏங்கி அவனைக் காதலிப்பது, மணந்துகொண்டு …
-
- 0 replies
- 337 views
-
-
திரை வெளிச்சம்: பலே… பலே… ‘பஃபே’ விருந்துகள்! ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜியிலிருந்து.... திரையரங்குகளுக்கெனத் தயாரானத் திரைப்படங்கள் பலவும், கரோனா காரணமாக ஓ.டி.டி தளங்களில் வெளியாகிவருகின்றன. இவைதவிர ஓ.டி.டி. தளங்களுக்குப் பிரத்யேகமாகத் தயாரான ஆந்தாலஜி திரைப்படங்களும் அவ்வப்போது வெளியாகின்றன. தமிழ்ச் சூழலில், பிரபல இயக்குநர்கள், கலைஞர்களின் கூட்டணியில் உருவாகி அமேசானில் வெளியான ‘புத்தம் புது காலை’, நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கும் ‘பாவக் கதைகள்’ போன்ற ஆந்தாலஜி முயற்சிகள், தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட நகர்வுபோல் சினிமா ரசிகர்களைப் பரவலாக ஈர்த்துவருகின்றன. வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய பொதுவான ஒரு கருத்தாக்கம், காலகட்டம் அல்லது இலக்கிய வடிவத்தைக் கொண்ட க…
-
- 0 replies
- 513 views
-
-
நியூயார்க், இரண்டு முறை அகாடமி விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரைக்கதை மற்றும் படத்தயாரிப்பில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள பிரபல மியூசியத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பயணம் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக அவர் நேற்று முன்தினம் நியூயார்க் நகருக்கு சென்றிருந்தார். அப்போது அவர் கூறியதாவது:- இசையமைப்பதை தவிர வேறு ஒரு புதிய பரிமாணத்தில் சாதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே எனக்குள் ஒரு ஆர்வம் இருக்கிறது. திரைக்கதை மற்றும் படத்தயாரிப்பில் களமிறங்கவும் திட்டமிட்டுள்ளேன். என்னுடைய முதல் படத்திற்கான பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டேன். பிரிட்டிஷ் மியூசிக்கலின் 'பாம்பே ட்ரீம்ஸ்'-ல் இப்போது வே…
-
- 0 replies
- 313 views
-
-
நான் திரைத்துறையை சாராமல் வெளியே இருந்து திரைக்கதைக்கு தமிழில் உள்ள இடமென்ன என்று பார்க்கையில் பெரும்பாலான படங்கள் தோல்வியடையவோ பார்வையாளர்களின் மனதைத் தொடாமல் போக காரணம் திரைக்கதையில் உள்ள அடிப்படையான பிழையே என்று தோன்றுகிறது. இதையே வேறு சில நண்பர்களும் கூறி இருக்கிறார்கள். ஆனால் நானும் வெகு சிலருமே இப்படி நம்புகிறோம் என நினைக்கிறேன். ஏனென்றால் வெகுஜன ஊடகங்களில் பலரும் அப்படி நினைப்பதில்லை. அண்மையில் ராஜூ முருகனின் “லாலாகுண்டா பொம்மைகள்” பார்த்தேன். அது தழுவி உருவாக்கப்பட்ட கதைதான் என்றாலும், தேய்வழக்கான கதையே என்றாலும் அதில் ஒரு நேர்த்தி இருந்தது - கதைக்குள் ஒரு வளர்ச்சி இருந்தது, பாத்திரங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட இயல்பு, உடல்மொழி, ஒரு துவக்கம் முடிவு இருந்தது, கதை…
-
- 0 replies
- 591 views
- 1 follower
-
-
திரைக்கலைஞர் சித்ரா மாரடைப்பால் காலமானார் தமிழ், மலையாளத் திரையுலகில் 80களின் பிற்பகுதியிலும் 90களிலும் பிரபலமாக விளங்கிய சித்ரா மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 56. தமிழ்த் திரைப்பட உலகில் 1980களின் பிற்பகுதியிலும் 90களிலும் பிரபல நடிகையாக விளங்கியவர் சித்ரா. அவள் அப்படித்தான் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சின்னப்பூவே மெல்லப்பேசு, மனதில் உறுதி வேண்டும், ஊர்க்காவலன், என் தங்கச்சி படிச்சவ திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபலாக அறியப்பட்டவர் சித்ரா. 1991ல் வெளியான சேரன் பாண்டியன் திரைப்படமும் அதற்கு அடுத்த ஆண்டே வெளியான பொண்டாட்டி ராஜ்ஜியம் திரைப்படமும் அவருக்கு பெரும் புகழைத் தேடித…
-
- 26 replies
- 1.7k views
- 1 follower
-
-
தலையை மொட்டையடித்து சந்நியாசினியாய் போன கவர்ச்சி நடிகை தனுஸ்ரீ! சனிக்கிழமை, ஜூலை 14, 2012, 18:27 [iST] தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற தமிழ்ப் படத்திலும், எக்கச்சக்க இந்திப் படங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா, திடீரென சந்நியாசினியாக மாறிவிட்டார். 10 ஆண்டுகளுக்கும் மேல் பாலிவுட்டில் நடித்து வந்த தனுஸ்ரீ பல கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து திடீரென்று நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டார். ஒரு சந்நியாசினியாக மாறி பல்வேறு திருத்தலங்கள், ஆசிரமங்கள் என சுற்றிக் கொண்டிருக்கிறார். தனது முடிவு குறித்து அவர் கூறுகையில், "என்னுடைய 16வது வயதில் நடிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஓய்வின்றி நடித்தேன். ஆனால் அங்கு எனக்கு நேர்ந்த அனுப…
-
- 3 replies
- 2k views
-
-
திரைக்குப் பின்னால்: இளையராஜாவின் இசை நிழல்! ராஜாவுடன் புரு ஆர்.சி.ஜெயந்தன் சரியாக 44 ஆண்டுகளுக்கு முன் ஓர் இசையமைப்பாளராகப் பிரவாகித்த இளையராஜா, தன் அறிமுகப்படத்தைக்கொண்டே, ‘அன்னக்கிளி’க்கு முன், ‘அன்னக்கிளி’க்கு பின் எனத் தமிழ்த் திரையிசையை இரு கூறாகப் பிரிக்கவேண்டிய கட்டாயத்தை உருவாக்கினார். புதிய இசைவடிவம், புதிய இசைக்கருவிகளின் அறிமுகம், புதிய ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் என மெல்லிசை மன்னருக்குப் பின்னர், பெருந்தேடல் கொண்டிருந்தார். தனது தேடலுக்கு ஏற்ற ரசனை மிகுந்த ஒரு கலைஞனைத் தன் அருகில் வைத்துக்கொள்ள நினைத்தார். அப்போது நவீனத்தின் மொத்த உருவமாக அவருக்குக் கிடைத்தவர்தான் ‘புரு’ என்று இளையராஜாவால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட ஆர். புருஷோத்தமன். …
-
- 0 replies
- 591 views
-