வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
டெல்லி பெல்லி என்ற பெயரில் ஆமிர் கான் தயாரிப்பில் ஹிந்தியில் வந்து பெரும் வெற்றி பெற்ற படத்தை சேட்டை என தமிழில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறது யூடிவி நிறுவனம். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து கடந்த மூன்று மாத காலமாய் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தற்போது படம் கிட்டதட்ட ரெடியாகிவிட்ட நிலையில், எடிட் செய்யப்பட்ட பகுதிகளைப் பார்த்து ரொம்ப திரிப்தியாக இருப்பதாய் ஆர்யாவும், யூடிவி தனஞ்செயனும் தெரிவித்துள்ளனர். அத்துடன் படத்தின் ரிலீஸ் தேதியை இன்றிலுருந்து 90வது நாளில் கன்பர்ம் செய்துள்ளனர். ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி என்ற மூன்று பேரும் மூன்று நன்பர்கள் பாத்திரத்தில் நடக்க, ஹன்சிகா, அஞ்சலி, நாசர் மற்றும் பல நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியிருக்கும் இந்தப்படம் ஒரு முழுமையா ஜாலி ரைடாக …
-
- 0 replies
- 435 views
-
-
கண்ணா லட்டு திண்ண ஆசையா கதை பஞ்சாயத்து பாகம் 2 அந்த அஸிஸ்டென்ட் டைரக்டரை விடுங்க..இது ஆக்சுவலா ஒரு பழைய தமிழ் படத்தை தழுவி எடுக்கப்பட்ட கதைன்னு தயாரிப்பாளர் இராம.நாரயணன் தரப்பிலிருந்து தகவல் வந்திருக்கிறது. ஏற்கனவே நேற்று மாலையில் கிளம்பிய டைரக்டர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இன்று போய் நாளை வா படத்தை தழுவி, இந்த காலகட்டத்திற்கேற்ப மாற்றி, மேலும் குறிப்பாய் பவர்ஸ்டாரை வைத்து கலாய்ப்பதையே பெரும் பகுதியாய் கொண்டு படத்தினை உருவாக்கியிருப்பதாகவும், இதற்கான முறைப்படி அனுமதியை பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்திலிருந்து வாங்கியிருப்பதாகவும், படத்தின் டைட்டிலில் புஷ்பா கந்தசாமிக்கு(கவிதாலயா) தாங்க்ஸ் கார்டெல்லாம் போட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த அ…
-
- 0 replies
- 530 views
-
-
இன்று போய் நாளை வா படக்கதையை தான் கண்ணா லட்டு திண்ண ஆசையா என எடுக்கிறார்கள் என்ற செய்தியே எனக்கு இப்போது தான் தெரியும். என்னிடம் கேட்காமல் எப்படி அதன் ரைட்ஸை வாங்கினார்கள் என கடுங்கோபத்தில் இருக்கிறார் பாக்யராஜ். நேற்றிலிருந்து கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் கதையைப் பற்றிய பிரச்சினை சூடு பிடிக்கத்துவங்கி விட்டது. நேற்று ஒரு உதவி இயக்குனர் இது என்னுடைய கதை, நான் சந்தானத்திடம் சொன்ன கதையை என்னிடம் சொல்லாமல் எடுத்துவிட்டார்கள் என புகார் குடுத்தார். அதற்கு பதிலளித்த படத்தின் தயாரிப்பாளரான இராம.நாராயணன் இது பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இன்று போய் நாளை வா படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்றும், அதற்கான அனுமதியை கவிதாயலயா நிறுவனத்திடன் முறையாக வாங்கியிருக்கிறோம் என்றார். இந…
-
- 0 replies
- 293 views
-
-
என்னதால் வெளிஉலகத்துக்கு ரெண்டு பேரும் பஞ்ச் டயலாக் பேசியே சண்டை போட்டுக்கிற மாதிரி தெரிஞ்சாலும் ராத்திரியானா சிம்புவும், தனுஷும் ஒண்ணா சரக்கடிச்சு ஒண்ணா வாந்தியெடுப்பாங்கன்னு சத்தியம் பண்ணுவாரு போல இந்த நியூஸ் கெளப்பி விட்ட புண்ணியவான். அந்த ரேஞ்சுல தான் இருக்கு நேத்து கோடம்பாக்கத்துல புதுசா கெளம்பியிருக்குற செய்தி. சிம்புவும், தனுஷும் புதிதாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்பது தான் கோலிவுட் வாலாக்கள் நேற்று வாய் பிளந்து பேசும் அதிசய செய்தியாக உள்ளது. ஆமாம், இரண்டு பேரும் பேரும் சேர்ந்து ரஜினி, கமல் இணைந்து நடித்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படம் ரீமேக்கில் ஹீரோக்களாக நடிக்கிறார்களாம். 1978-ல் இந்தப்படத்தில் ரஜினி,கமலுக்கு ஜோடியாக ஸ்ரீபிரியாவும், ஜெயசித்ரா…
-
- 0 replies
- 3.2k views
-
-
விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.ஹெச் தொழில்நுட்பத்தில் ஒளிபரப்ப தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள், விமர்சனங்கள் என பல்வேறு இடையூறுகளை சந்தித்துவருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில் வரும் 11 ஆம் தேதி ரிலீஸ் பண்ணுகிற வேலையில் தியேட்டர்களை புக் பண்ணிக்கொண்டிருக்கிறது விஸ்வரூபம் படக்குழு. எதிர்ப்பு ஒருபுறம் இருந்தாலும் பல தியேட்டர்கள் திரையிட முன்வந்துள்ளன. கமல்ஹாசனுக்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் முக்கியமாக பொதுமக்கள் என பெருமளவிலான ஆதரவுகளும் குவிந்து வருகின்றன. இன்றைய விளம்பரங்களில் கூட தியேட்டர்களின் பெயர்கள் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று திடீரென டிஜிபி அலுவலகம் வந்தார் கமல்ஹாசன். அங்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ட…
-
- 0 replies
- 327 views
-
-
சச்சின், ஒருநாள் போட்டிகளிலிருந்து, ஒய்வு பெற்றுவிட்டார். இந்த, தகவல் கிரிக்கெட் ரசிகர்களை, எவ்வளவு கலங்க செய்திருக்கும்? அதே, அளவுக்கு, ஜாக்கிசானின் ஆக்சன் பட ரிடையர்மென்ட்டும், என்னைப்போன்ற எக்கச்சக்க ஜாக்கி ரசிகர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சிதான். குட்டிப்பையனாக, எத்தனை, ஜாக்கிசான் படங்கள் பார்த்திருப்போம். அப்போதெல்லாம், தமிழ் டப்பிங் இருக்காது. ஆங்கிலம்தான். படத்தின் பெயர்கள் கூட குத்துமதிப்பாகத்தான் தெரிந்திருக்கும். மொழி புரியவில்லையென்றாலும் வெறும் காட்சிகளாலேயே நம்மை விலா நோக சிரிக்க வைத்தவர் ஜாக்கி. எவ்வளவு கடினமான ஆக்சன் காட்சிகளையும் சிரித்த முகத்தோடு ரத்தம் சிந்தி நடித்தவர். மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களில் புரூஸ்லீ கமலஹாசன் என்றால் ஜாக்கிதான் ரஜினி. ஜாக்க…
-
- 0 replies
- 493 views
-
-
கமல் விஸ்வரூபம் படத்தை ஆரம்பித்தது முதல் பலவித சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கின்றார். தற்போது அவர் ஒரு புதுவிதமான எதிர்ப்பில் இருக்கிறார். அதற்காக அவர் இன்று சென்னையில் டிஜிபி அலுவலகம் சென்று புகாரும் கொடுத்துள்ளார். அதாவது விஷயம் இதுதான். விஸ்வரூபம் டி.டி.எச் என்ற தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பு செய்யும் நேரத்தில் உள்ளூர் மின்வாரிய அதிகாரிகளை கைக்குள் போட்டு அந்த நேரத்தில் மின்சாரத்தை கட் செய்யப்போவதாக திடீரென ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. இது எதற்குமே கலங்காத கமல்ஹாசனை அதிர வைத்துள்ளது. அந்த நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் இல்லாமல் செய்துவிட்டால், அவருடைய திட்டம் தவிடுபொடியாகிவிடும்., மீண்டும் ஒரு காட்சி போடுவதற்குள் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகிவிடும். பணம் கொ…
-
- 0 replies
- 452 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=o_uHS6Kb_6I[/xml] [xml]http://www.youtube.com/watch?feature=player_embedded&v=AdE6yYVkMX0 http://www.youtube.com/watch?feature=player_embedded&v=y6YJxxiBFmI[/xml] [xml]http://www.youtube.com/watch?feature=player_embedded&v=0nwupqcRK_A
-
- 0 replies
- 286 views
-
-
ஜெயம்ரவி ஹீரோவாக நடித்து வரும் பூலோகம் படத்தில் ட்ராய் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்த நாதன் ஜோன்ஸ் வில்லனாக நடிக்கிறார். 'சம்திங் சம்திங்' படத்துக்குப் பிறகு ஜெயம்’ ரவி, த்ரிஷா இணைந்து நடித்து வரும் படம்தான் ‘பூலோகம்’. இப்படத்தை ‘இயற்கை’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை டைரக்ட் செய்த ஜனநாதனின் உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். வடசென்னையில் வசிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதையாக தயாராகி வருகிறது இந்தப் படம். ஏற்கெனவே அவர் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்திலும் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அதேபோல இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவி ஒரு குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் வில்லனாக முன்னாள் குத்துச்சண்டை வீரரும், பிரபல ஹாலிவுட் நடிகர…
-
- 2 replies
- 728 views
-
-
ரஜினியும், விஜய்யும் மட்டுமே சினிமா உலகத்தை காப்பாற்றுபவர்களும் போலவும், கமல்ஹாசனை சினிமாவுக்கே எதிரி போலவும் சித்தரித்து ,தியேட்டர் உரிமையாளர்கள் வில்லங்கமான அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்கள்.விஜய் நடித்த சுறா,வேட்டைக்காரன்,வில்லு, அழகிய தமிழ்மகன் போன்ற படங்களின் வசூலை தியேட்டர் அதிபர்கள் மறந்துவிட்டார்களா? என தெரியவில்லை. இதே தியேட்டர் அதிபர்கள்தான் குசேலன் படம் பிளாப் ஆனதும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து பணத்தை திருப்பி தரவேண்டும் என போராட்டம் செய்தார்கள். கமல்ஹாசனின் தசவதாரம்,வேட்டையாடு விளையாடு, போன்ற படங்களின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டிய தியேட்டர் அதிபர்கள் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, இப்போது அவர் ஏதோ சினிமாவுக்கே எதிரி போல சித்தரித்து அறிக்கை வெளியிட்ட…
-
- 0 replies
- 600 views
-
-
விட்டா டைட்டில் வைக்காமலேயே படத்தை ரிலீஸ் பண்ணிடுவாறோன்னு நடிகர் விஜய்யே சந்தேகப்படுற அளவுக்கு இன்னும் டைட்டிலை யோசித்துக் கொண்டிருக்கிறார் டைரக்டர் விஜய். துப்பாக்கி படத்தின் ஹிட்டுக்குப்பிறகு டைரக்டர் விஜய் டைரக்ஷனில் புதிய படத்தில் உடனே நடிக்கக் கிளம்பினார் நடிகர் விஜய். படத்தை ஆரம்பித்தபோது ஒரு டைட்டில், ஃப்ர்ஸ்ட் செட்யூல் ஷுட்டிங் போய்விட்டு வந்தவுடன் ஒரு டைட்டில், அடுத்த செட்யூல் கிளம்பும் முன் ஒரு டைட்டில் என்று எல்லாமே ஏற்கனவே வெளியான ரஜினி படங்களின் டைட்டிகளையே யோசித்து ‘தளபதி’க்கு சொல்லிக் கொண்டிருந்தார் டைரக்டர் விஜய். ஏப்பா..? தயவுபண்ணி இனி பழைய படங்களோட டைட்டிலே வேணாம், வெச்சிட்டு அப்புறம் படம் ரிலீஸாகிற டைம்ல அந்த கம்பெனிக்காரங்க வந்து ஓவரா கொடைச்சல் க…
-
- 3 replies
- 673 views
-
-
கமலும் ஸ்ருதியும் புதுப்படம் மொன்றில் இணைந்து நடிக்கின்றனர். ஏர்கனவே ஸ்ருதி ’7ஆம் அறிவு’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார். தனுஷ் ஜோடியாக ’3′ படத்தில் நடித்தார். தற்போது ‘பலுடி’, ‘ஏவடு’ என்ற இரு தெலுங்கு படங்களிலும் இரண்டு இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து தந்தை கமல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை கமல் ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார் அவர் கூறியதாவது:- எனது மகள் ஸ்ருதியும் நானும் புதுப் பட மொன்றில் இணைந்து நடிக்கப் போகிறோம். அதற்கான கதை தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகும். ஸ்ருதி தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமாகிவிட்டார். ஆனால் இந்தியில் பெயர் வாங்க வில்லை. அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்ததும் …
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழ் நாட்டில் அரசியல் மாற்றத்தினால் சில மாதங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு திரும்ப ரீஎன்ட்ரி கொடுக்க போகிறார். அதாவது, சிம்புதேவன் டைரக்ஷன்ல “இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2′-க்கான கதை டிஸ்கஷன் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் சாலிகிராமத்தில் வடிவேலுவின் ஆபிஸில் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கான, வேலைகள் நடந்து முடிந்துள்ளது. ஃபர்ஸ்ட் பார்ட்டை விட, இந்த செகண்ட் பார்ட்டில், காமெடி கொஞ்சம் தூக்கலாக, இருக்கணும் என சொல்லி அதன்படி கதையை, எழுத வைத்திருக்கிறாராம் வடிவேலு. ஆரம்ப காலத்திலிருந்து தனக்கு காமெடி டிராக் எழுதிய, சிலரை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம் வடிவேலு. சில அரசியல் மாற்றங்கள் காரணமாக, கடந்த 2012ம் ஆண்டு முழுவதுமே வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த வடிவேலுக்கு இத…
-
- 1 reply
- 1.2k views
-
-
சென்னை: ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் புதிய படத்துக்கு கதிர்வேலின் காதலி என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் உதயநிதி ஜோடியாக நடிப்பவர் நயன்தாரா. சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். உதயநிதியின் பேவரைட் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவை கவனிக்கிறார். உதயநிதிக்கு கிட்டத்தட்ட இணையான வேடங்களில் பரோட்டா சூரியும் சந்தானமும் நடிக்கிறார்கள். அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி தயாரிக்கும் படம் இது. சென்னை: ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் புதிய படத்துக்கு கதிர்வேலின் காதலி என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 533 views
-
-
பொங்கலுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாலாவின் பரதேசி பிப்ரவரி 22 ந் தேதிக்கு தள்ளிப் போய்விட்டது. 'விஸ்வரூபம்' படத்தின் டிடிஎச் விவகாரத்தின் முடிவுக்காக அநேக முன்னணி பட முதலாளிகள் இரை தேடும் கொக்கு போல காத்திருக்கிறார்கள். முடிவு கமலுக்கு சாதகமாக அமைந்துவிட்டால் அத்தனை வழிகளும் டிடிஎச்-ல் வந்துதான் முடியும் போலிருக்கிறது. பாலாவும் அதை முன்னிட்டுதான் தனது ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தாராம். இதே தேதியில்தான் அமீரின் ஆதிபகவனும் திரைக்கு வரப்போகிறது. இதற்கிடையில் கார்த்திக்கின் அலெக்ஸ் பாண்டியன் படத்தை சன் டிடிஎச் சுக்காக கேட்டார்களாம். கமல் கெடு விதித்திருக்கும் 11 ந் தேதி வரைக்கும் வெயிட் பண்ணுங்க. கலெக்ஷன் நல்லாயிருந்தா அன்னைக்கு நைட்டே அக்ரிமென்ட் போட்டுரல…
-
- 0 replies
- 506 views
-
-
நயன்தாரா மீண்டும் தமிழ்த் திரையுலகில் என்ட்ரி ஆனதில் த்ரிஷா, காஜல் அகர்வால் போன்றவர்கள் கலக்கத்தில் உள்ளனர் என்று தமிழ்த் திரையுலகினர் கிசுகிசுக்கிறார்கள். தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போகிறேன் என்று சொல்லிவந்த திரிஷா கூட, தற்போது இன்னும் 10 வருடங்கள் நடிக்கப் போகிறேன் என்று அறிவித்து இருக்கிறார். நடிகர் விஜய், சூர்யா, கார்த்தி என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்ட காஜல் அகர்வாலோ, 'வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் இந்தி படங்களில் எல்லாம் நடிக்கவில்லை என்று அறிவித்திருக்கிறார். அதோடு, இயக்குனரின் நடிகையாக இருக்கவே எனக்கு ஆசை என்றும், கதாபாத்திரங்களுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்றும் தனது உதவியாளர்களிடம் சொல்லி, இயக்…
-
- 0 replies
- 481 views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாக நடத்திய சென்னை மாவட்ட தலைமை மன்ற நிர்வாகிகளையும், தனது தீவிர ரசிகர்களையும், புத்தாண்டையொட்டி திங்கள் கிழமை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்துப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த மாதம் 12-ந்தேதி தனது பிறந்த நாளையொட்டி, ரசிகர்களை ரஜினி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், பங்கேற்று பேசும்போது: புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால். தனது உடல் நலம் பாதித்தது என்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள ரசிகர்கள். அதனை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டனர்…
-
- 0 replies
- 331 views
-
-
தமிழ் சினிமாவின் அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்கள் மத்திய அரசு திரைவுலகினருக்கு சேவை வரி விதிப்பதை கண்டித்து வருகிற 7-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இதில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். நட்சத்திரங்கள், கலைஞர்களென சினிமாவை நம்பி பிழைப்பு நடத்தும் எல்லா தரப்பினருக்கும் 12.3 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதற்கு திரைப்பட துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த வரி விதிப்பால், சாதாரண மக்களின் பொழுது போக்காக, கருதப்படும் திரைப் படம், தொலைக்காட்சி தொழிலில், ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினரும், பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். அன்றைய தினம், ஷூட்டிங், ரத்து செய்யப்பட்டு உள்ளது. உண்…
-
- 0 replies
- 470 views
-
-
சுந்தரபாண்டியன், கும்கி என ஹிட் படங்களில் நடித்தவர் லட்சுமிமேனன். பெரும்பாலான, கேரளத்து நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் அமைவதைப்போன்று, இவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே வெற்றி பெற்று தமிழில் முன்னனி ஹீரோயின் பெயரை கொடுத்திருக்கிறது. இந்த இரண்டு படங்களிலும் லட்சுமிமேனனின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. அதனால், இப்போது குட்டிப்புலி, மஞ்சப்பை என்ற படங்களில் கமிட்டாகியிருக்கிறார் லட்சுமிமேனன். ஆனால் இந்த படங்களில் சசிகுமார், விமல் போன்ற நடிகர்களுடன்தான் நடிக்கிறார். மேலும், இந்த படங்களிலும முந்தைய படங்களைப்போன்று வில்லேஜ் கெட்டப்பில்தான் ஆக்ட் பண்றாங்களாம். இதுபற்றி லட்சுமிமேனன் பேசியதாவது: சினிமாவில் நல்ல நடிகையாக, வேண்டும் என்றுதான் வந்தேன். வந்தவேகத்தில் …
-
- 0 replies
- 769 views
-
-
தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிக்ஸ்பேக் வைச்ச நடிகரானவர் விஷால்தான். தற்போது, டைரக்டர் சுந்தர்.C இயக்கத்தில் மரகத ராஜா படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்து வரும் ஆக்டர் விஷால், ஒரு கெட்டப்பில் நடக்கும் ஃபைட் சீனுக்காக எய்ட் பேக்குக்கு உடல் கட்டை மாற்றியிருக்கிறாம். ஒரு ஜிம் மாஸ்டரை வச்சு முறையாக உடல்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்று ரெண்டு மாதத்திற்கு பிறகு எய்ட் பேக்காகி உள்ளாராம். சிக்ஸ்பேக் கலாச்சாரம் தமிழ்சினிமாவில் அதிகமாகிகொண்டே வருகிறது. பல மாதங்களாக கடினமான உடற்பயிற்சி செய்து தனது உடல்கட்டை அவர் மாற்றியதைப்பார்த்து, அதன்பிறகு மேலும் சில ஆக்டர்களும் சிக்ஸ்பேக்குக்கு மாறினார்கள். ஆனால், அப்படி மாறிய சிலரது, முகமும் இளைத்துப்போய் சீக்கு வந்த கோழிகளாட்டம் காட்சி …
-
- 0 replies
- 851 views
-
-
விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க கேட்டு ரீஜெயிண்ட் சாய் மீரா எண்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் நடிகர் கமலஹாசன், ராஜ்கமல் பட நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வினோத் கே.சர்மா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ராஜ்கமல் படநிறுவன பங்குதாரர் சந்திரஹாசன் பதில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், விஸ்வரூபம் படம் ரூ.90 கோடி செலவில் தமிழ், இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ரூ.3 1/2 கோடி வங்கி உத்தரவாதம் கொடுத்து உள்ளோம். இப்போது பட நிறுவனத்தின் பெயரை மாற்றி ஒரே பிரச்சினைக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது கோ…
-
- 0 replies
- 1k views
-
-
நாலைந்து தெலுங்கு மசாலாக்களை மிக்சியில் அடித்தது போலிருக்கிறது அலெக்ஸ் பாண்டியனின் ட்ரெய்லர். அப்படியிருந்தும் படத்துக்கு யு சான்றிதழ் தந்து வரி விலக்குக்கான வாசலை அகல திறந்திருக்கிறது சென்சார். சிறுத்தை படத்தை போலதான் இருக்கிறது அலெக்ஸ் பாண்டியனின் அங்க அடையாளங்கள். தனியாளாக சூறாவளி பேக்ராப்பில் இவர் அடியாட்களை அடித்து துவசம் செய்வதைப் பார்த்தால் நமக்கு கை கால் வலிக்கும். தமிழ்ப்பட ஹீரோக்கள் மனுசனா இல்லை புல்டோசரா என்று கேட்கிற அளவில் இருக்கிறது சண்டைக் காட்சிகள். சுராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு சென்சார் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான். அனுஷ்கா கார்த்தியின் ஜோடியாக நடிக்க சுராஜ் படத்தை இயக்கியிருக்கிறார். ஞான…
-
- 0 replies
- 443 views
-
-
ஹைதராபாத்: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துவிட்டது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நடிகை ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி வெறும் உற்சவர் போல வலம் வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா மேலும் கூறியதாவது: டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு உள்ளார். இதேபோல் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்த கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீ…
-
- 0 replies
- 498 views
-
-
பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு சினிமா காரணம் என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதற்கு பதில் அளித்து நடிகை குஷ்பு கூறியதாவது:- மக்கள் எல்லா மீடியாக்களையும் பார்க்கின்றனர். இதில் சினிமாவை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும்? சினிமா என்பது பொழுது போக்கு துறையின் ஒரு பகுதி. நூறு ஆண்டுகள் சினிமா இருக்கிறது. குற்றங்கள் நடக்கும்போது அதன்மேல் பழிபோடக் கூடாது. இளைஞர்கள் வீட்டில் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்பதை வைத்துதான் பெண்கள் மீதான அவர்களின் பார்வைகள் தீர்மானிக்கப்படுகிறது. திரைப்படங்கள் காலத்திற்கேற்ப மாறக்கூடியது. ஒரு காலத்தில் முத்தக் காட்சிக்கு இரண்டு பூக்கள் முத்தமிடுவதுபோல் சினிமாவில் காட்டினார்கள். இப்போது நேரடியாகவே உதட்டோடு உதடு முத்தமிட்டு நடிக்கின்றனர். சினிமா …
-
- 0 replies
- 496 views
-
-
சிம்புவுடன் ‘போடாபோடி’ படத்திற்கு பிறகு விஷாலுடன் ‘மதகஜராஜா’ என்ற ஒரேஒரு தமிழ்ப்படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. தொடர்ந்து வேறு புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் அவர் இனி தெலுங்கு படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் முதல் தெலுங்கு படமாக தமிழில் ரிலீஸாகி அவரேஜ் லிஸ்ட்டில் வந்த ‘மனம்கொத்திப் பறவை’ என்ற படத்தின் தெலுங்கு ரிமேக்கில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை இப்போது மறுத்திருக்கிறார் வரலட்சுமி. இது கூறித்து தனது ட்விட்டரில் எழுதியிருக்கும் அவர், நான் ‘மனம் கொத்திப்பறவை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஆனால் அந்தச் செய்தி ஒரு தவறான வதந்…
-
- 0 replies
- 415 views
-